• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தழலை அணைக்கும் அமுதகமே - 16

STN - 77

New member
அத்தியாயம் 16

ஆத்யா தனது உடைகளை அடுக்கி விட்டு உடைப்படியுடன் அறையை விட்டு வெளியே வந்தாள். அங்கு தான் அனைவரும் நின்று இருக்க, ஒரு கணம் அனைவரையும் பார்த்து அதிர்ந்து விட்டாள்…

அனைவரும் அங்கு தான் நின்றிருந்தனர், அவள் அறைக்குள் இருந்த நேரத்தில் சரத்தும், சரணும் சேர்த்து பிறந்த நாளுக்கான அலங்காரங்களை செய்தவர்கள். மேசையில் கேக்கை வைத்து விட்டு, அவள் வெளியே வரும் வரை தான் காத்துக் கொண்டிருந்தனர்…

அவளுக்கு இன்ப அதிர்ச்சி தான் இது. தன் தாய் தந்தை இருக்கும்போது சிறிய வயதில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நினைவு இருக்கின்றது. அதற்கு பிறகு அவள் பெரிதாக இப்படி பிறந்தநாள் எல்லாம் கொண்டாடியதே கிடையாது…

அவள் தன் சித்தி வீட்டிற்கு வந்த பிறகு அவளின் பிறந்தநாள் அன்று வீட்டில் உள்ள அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து கூறுவார்கள், அவளின் சித்தப்பா ராஜேந்திரன் அவளுக்கு ஏதாவது உண்பதற்காக வாங்கி கொடுப்பார், சித்தி அவர்களை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்று வருவார், இதுதான் அவளின் இதனை வருட பிறந்தநாள் வழக்கம், அதுவே அவளுக்கு நிறைவாக இருக்கும்…

ஆனால் இங்கோ அவள் வரும்வரை ஒரு குடும்பமே அவளுக்காக காத்திருக்க, அதை பார்த்தவளுக்கோ சந்தோஷத்தில் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது…

அவள் உறைந்து போய் அறைவாசலில் நிற்பதை பார்த்த மகாலட்சுமியோ நேராக அவளிடம் வந்தவர், அவளின் அணைத்து “பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதிமா…” என கூறியப்படி அவளின் நெற்றியில் முத்தம் ஒன்றை பதித்திருந்தார்…

அதைத் தொடர்ந்து விஷ்வநாதன், விஷ்வேஸ்வரன், சரத் என அனைவரும் அவளுக்கு வாழ்த்துக்கள் கூற, ஆத்யாவோ சந்தோஷமாக சிரித்தபடியே அனைத்து வாழ்த்துக்களையும் பெற்று கொண்டவள், நன்றி கூறினாள்…

அவள் அனைவரையும் பார்த்து சிரித்தப்படி இருந்தாலும் மிகுதியான சந்தோஷத்தில் அவளின் கண்களோ கலங்கி தான் காணப்பட்டது…

அனைவரின் பிறந்தநாள் வாழ்த்து பாடல்களுக்கும் இடையில் கேக்கை வெட்டியவளோ, அங்கிருந்த அனைவருக்கும் ஊட்டிவிட்டாள்…

இது அனைத்தையும் வெறும் பார்வையாளனாக அங்கிருந்து தூணில் சாய்ந்த படி பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வ சாஹரன்…

“என்னடா நீ அங்கே நிற்குற? அவளுக்கு வாழ்த்தும் சொல்லல, ஒரு பரிசும் கொடுக்கல…” என அவனை பார்த்து கடுப்பாக திட்டினார் மகாலட்சுமி…

ஆனால் அவன் அப்போதும் கூட ஆசையாது அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான், ஆத்யாவோ அனைவருக்கும் கேக்கை ஊட்டி முடித்தவள், கையில் ஒரு சிறிய துண்டு கேக்கை வைத்துக் கொண்டே என்ன செய்வது என ஒரு கணம் யோசித்தவள், பெருமூச்சு விட்டு தன்னை ஆசுவாசப்படுக் கொண்டவள்…

இப்போது திரும்பி நேராக விஷ்வ சாஹரனை நோக்கித்தான் நடந்து வந்தாள், தன்னை நோக்கி வருபவளை அவனும் அழுத்தமாக பார்த்தபடி நின்று இருக்க, தன்னவனின் அருகில் வந்தவளோ தன் கையில் இருந்த கேக்கை அவனிடம் நீட்டி இருந்தாள்…

நீட்டி அவள் கையில் இருந்த கேக்கை ஒரு கணம் அழுத்தமாக பார்த்தவன் அதை தன் கை கொண்டு வாங்காது, சற்று குனிந்து அவள் கையில் இருந்த கேக்கில் சிறிய துண்டு ஒன்றை கடித்து மென்றப்படியே அவளை ஒரு கணம் பார்த்தவன், நிமிர்ந்து நின்று விட்டான்…

அவன் இவ்வாறு செய்வான் என எதிர்பார்க்காத பெண்ணவளின் விழிகள் சட்டென விரிந்து கொண்டன, எச்சிலைக்கூட்டி விழுங்கிக் கொண்டவளோ அதற்கு மேல் அவன் முன் நிற்க முடியாது, அங்கிருந்து விறுவிறுவென மற்றவர்களின் அருகில் வந்து நின்று கொண்டாள்…

பிறகு ஆத்யாவோ அனைவரிடமும் விடை பெற்றவள், கிளம்புவதற்கு தயாராக அவளை கொண்டு விட்டு வருவதாக சரண் தான் கூறி இருந்தான்…

“டைம் ஆச்சு கிளம்பலாமா ஆதி?” என கேட்டபடி சரண் அங்கு வர, அவளும் “ஆஹ் கிளம்பலாம்…” என கூறியபடி அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை சொல்லிவிட்டு தன் உடைப்பெட்டியுடன் நடக்க ஆரம்பித்து விட்டாள்…

இருவரும் கார் இருக்கும் இடத்தை அடைந்திருக்க, அவர்களை வழியனுப்பதற்காக மற்றவர்களும் கூட வீட்டின் வாசலில் தான் வந்து நின்றிருந்தனர்… அச்சமயம் அங்கு வந்த விஷ்வ சாஹரனோ சரணின் கையில் இருந்த கார் கீயை வெடிக்கென பிடுங்கி எடுத்திருந்தான்…

சரணோ தன் அண்ணனை கேள்வியாக நோக்க, இங்கு அத்யா ஷாலினியோ அவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்…

சாஹரனோ கூலாக நீ போக தேவல நானே கொண்டு அவள வீட்ல விட்டுட்டு வரேன்…” என கூறியபடி அடுத்து எதுவும் பேசாது நேராக காரில் ஏறி அமர்ந்து விட்டான்…

இப்போது என்ன செய்வது என தெரியாமல் தடுமாறி போனது என்னவோ பெண்ணவள் தான்…

“என்ன யோசிச்சிட்டு இருக்க ஆதி, லேட்டாகுது அது தான் அண்ணா உன்னை விடுறேனு சொல்றாருல அப்றம் என்ன அண்ணா கூடவே போ…” என கையை வளே பேச கூட விடாது பெண்ணவளின் கையை பிடித்த முன் சீட்டில் அமர வைத்திருந்தான்…

அவன் வேண்டுமென்றே தான் செய்கிறான் என அறிந்து தன் நண்பனை முறைத்து பார்த்தாள், ஆனால் சரணோ அதை கண்டு கொள்ளாமல் கையை ஆட்டி அவளுக்கு வழிய அனுப்பி வைத்திருக்க, சாஹரனும் காரை உயிர்ப்பித்து அங்கிருந்து வண்டியை கிளப்பி இருந்தான்…

அத்யாவோ எதுவும் பேசாது வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள். அது அந்திசாயும் நேரம் என்பதால் பறவைகள் அனைத்தும் வானில் கத்திய படி பறந்து செல்ல, அதை பார்க்கவே அவ்வளவு ரம்யமாக இருந்தது…

அவள் அதை ரசனையாக பார்த்தபடியே அமர்ந்திருந்தவள், அவன் செல்லும் வழியை கவனித்திருக்கவில்லை…

அவனோ அவள் வீட்டிற்கு செல்லும் வழியை தவிர்த்து வேறு எங்கோ காரை செலுத்திக் கொண்டிருந்தான். சில நிமிடங்கள் கழித்து தான் அவன் வேறு வழியில் செல்வதை அவதானித்தவள் அவனைக் கேள்வியாக திரும்பி பார்த்தாள்…

தன்னவளின் பார்வை அறியாதவனா அவன் “கவலை படாத உன்னை நான் ஒன்னும் கடத்திட்டுலாம் போக மாட்டேன், ஒரு இடத்துக்கு போய் பாத்துட்டு, அப்புறமாக உன் வீட்டில விடுகிறேன்…” என கூறியிருக்க, அதற்கு மேற்பட்ட அவளும் என்ன கூறுவது என தெரியாது பெருமூச்சுடன் அமர்ந்திருந்தாள்…

சரியாக பத்து நிமிடத்தில் அவன் வர வேண்டிய இடத்தை அடைந்திருக்க, அது என்ன இடம் என எட்டிப் பார்த்தவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்து கொண்டது..

அது ஒரு கடற்கரை ஆனால் அந்த கடற்கரையில் மக்கள் நடமாட்டமே இருக்கவில்லை. அங்கு வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களினால் ஆன ரோஜா பூக்களின் அலங்காரங்களுடன் ஒரு குடில் மட்டும் தான் காணப்பட்டது…

இங்கிருந்து பார்க்கும்போது அது அவளின் கண்களுக்கு அவ்வளவு அழகாக தெரிந்தது, யோசனையுடனே தன்னவனை திரும்பிப் பார்த்தாள்…

சாஹரனோ அவளை பார்த்து ‘வா’ என கூறிவிட்டு காரில் இருந்து இறங்க, அவளும் அவனைத் தொடர்ந்து காரை விட்டு இறங்கி இருந்தாள்…

சில்லென வீசிய உப்பு காற்றில் அவள் மேனி கூச, தன் கைகள் இரண்டையும் உரசியப்படியே சுற்று முற்றும் ரசித்து பார்த்தாள்…

அது அந்திசாயும் வேலை என்பதால் கடலிற்குள் சூரியன் தன்னை மறைத்துக் கொள்ள தயாராக, வானங்களில் பறவைகள் கீச் கீச் என சத்தத்துடன் பறந்து கொண்டிருந்தன, நிலாவோ கொஞ்சம் கொஞ்சமாக தோன்ற ஆரம்பித்திருக்க, இந்த நிலையை அவ்விடத்தை பார்ப்பதற்கே அவ்வளவு ரம்யமாகவும் அழகாகவும் இருந்தது…

இயற்கை ரசித்து கொண்டிருந்தவளோ தன்னவனை கவனிக்க தவறி இருக்க, சாஹரோ காரை சுற்றி அவளின் பின்னால் வந்து நின்றவன் சட்டென அவளின் இடையில் கையை கொடுத்து அவளை தன் கைகளில் ஏந்தி கொண்டான்…

இதை சற்றும் எதிர்பாராதவள் கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் ‘அம்மா’ என அலறியபடி அவன் தோள்களை சுற்றி கைகளை போட்டுக் கொண்டவள், “என்.. என்ன பண்.. பண்றீங்க?” என இதழ்கள் தத்தியடிக்க பதட்டமாக அவனை பார்த்து கேட்டிருந்தாள்…

“ஸ்ஸ் எதுவும் பேசாத…” என அவளை தூக்கியப்படி அந்த குடிலை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டான்…

அதன் அருகில் சென்று அவளை மெதுவாக இறக்கி விட்டவன், “ஹேப்பி பேர்த் டே…” என்றப்படி அவளின் முன் இருந்த மேசையில் இருந்த கேக்கை எடுத்து வெட்டி அவளின் வாயி அருகில் நீட்டி இருந்தான்…

ஆத்யா ஷாலினியோ அவனை ஆச்சரியமாக பார்த்தப்படியே அவனி நீட்டிய கேக்கை உண்டவள்…

“நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கலாமா?” என்று தயக்கமாக கேட்டாள்…

அவனோ அவள் என்ன கேட்க போகிறாள் என்று தெரிந்திருந்தாலும் தெரியாதது போல் “என்ன? கேளு…” என கூறினான்…

“உங்களுக்கு என்னை பிடிக்குமா?” என இவ்வளவு நாளாக அவளின் மனதை அறித்துக் கொண்டிருந்த கேள்வியை கேட்டிருந்தாள்…

அவனோ அதை கேட்டு அவளை பார்த்து மென்மையாக சிரித்தான், ஆத்யாவோ கண்களை ஆச்சரியமாக விரித்து அவனே பார்த்தால், பின்னே விஷ்வ சாஹரன் சிரிக்கின்றான் அல்லவா…

அவனோ அந்த மேசையின் கீழ் ஒளித்து வைத்திருந்த அவளின் டைரியை அவளின் முன் நீட்டினான்… அதை பார்த்தவளோ அதிர்ச்சியில் கண்களௌ விரித்தவள், “இது என் டைரி, உங்ககிட்ட எப்டி வந்துச்சு, அத குடுங்க…” என பறிக்க முயல, அவனோ அதை அவளுக்கு எட்டாதது போல் உயர்த்தி பிடித்தவன்…

அங்கிருந்த மேசையின் கீழ் இருந்த இன்னொரு டைரியை எடுத்து அவளின் முன் நீட்டி இருந்தான்…

பெண்ணவளோ அதை பார்த்து விட்டு “எனக்கு வேற டைரிலாம் வேணாம், என டைரி தான் வேணும் அத தாங்க..” என கேட்க அவனோ மாட்டேன் என்கிற ரீதியில் தலையை ஆட்டியவன்…

“இனி இந்த டைரி எனக்கு, என்னோட இந்த டைரி உனக்கு…” என கூறி அவளின் கையில் அவனின் அந்த டைரியை திணித்திருந்தான்…

அவளோ புரியாது அவனை நோக்கியவள் “உங்களோட டைரியா?” என யோசனையாக கேட்டாள்…

அவன் அவளின் டைரியை படித்திருப்பான் என புரிந்துக் கொண்டவளுக்கு, இப்போது தன்னவனின் டைரியை படித்து பார்க்க ஆசையாக இருந்தது…

மெதுவாக தன் கையில் இந்த டைரியின் முதல் பக்கத்தை திரும்பி பார்த்திருந்தாள்…

அதில் ‘என் மனதை கொள்ளை கொண்ட என்னுடைய ஷாலினிக்கு’ என எழுதி கீழே விஷ்வ சாஹரன் என அவன் பெயர் எழுதி பக்கத்தில் இதய வடிவம் ஒன்று போட்டு அதற்கு கீழ் ஆத்யா ஷாலினி என அவளின் பெயரையும் எழுதி இருந்தான்…

அதை பார்த்தவளுக்கோ பேர்ரதிச்சி, அவள் தன் டைரியை எப்டி எழுதி இருந்தாளோ அதே போல் தான் விஷ்வ சாஹரனும் அவனின் டைரியை எழுதி இருந்தான்…

இருவரின் காதலிலும் எவ்வளவு ஒற்றுமை என நினைத்தவளுக்கு புல்லரித்தது, ஆம் அவன் எழுதிய அந்த ஒற்றை வரியை வாசித்த கணத்திலேயே புரிந்துக் கொண்டாள் அவனுடைய காதலை…

விஸ்வசாரனோ அவளுக்கு இடைஞ்சலாக இருக்க விரும்பாது, தள்ளி சென்று கரையை வந்து மோதி செல்லும் அலைகளைப் பார்த்தபடி நின்றிருந்தான்…

பெண்ணவளோ ஒரு கணம் நிமிர்ந்து தூரத்தில் மார்பிற்கு குறுக்காக கைகளை கட்டிய படி கடல் அலைகளை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவனை பார்த்தவள், அவள் கையில் இருந்த டைரியை விரித்து படிக்க ஆரம்பித்து இருந்தாள்…

அவள் எவ்வாறு அவனை நினைத்து உருகி உருகி கவிதை எழுதி இருந்தாளோ, அதே போல் ஏன் அதைவிட அதிகமாகவே அவளை நினைத்து உருகி உருகி கவிதைகள் வடித்திருந்தான் விஷ்வ சாஹரன்…

அனைத்தையும் வாசித்து முடித்த ஆத்யா ஷாலினியின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் வடிய ஆரம்பித்திருக்க, அதற்கு மேல் பொறுக்க முடியாது அந்த டைரியை அங்கு வைத்து விட்டு ஓடி சென்று திரும்பி நின்றிருந்த தன்னவனை பின்னால் இருந்தவாறு இறுக்கமாக கட்டி அணைத்திருந்தாள்…


தொடரும்…
 
Top Bottom