• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தழலை அணைக்கும் அமுதகமே - 19

STN - 77

New member
அத்தியாயம் 19

அன்று அவர்களின் நிச்சயதார்த்த நாள். ஆத்யாவோ தங்கள் வீட்டில் இருந்து அதிகாலையில் நேரத்துடனே கிளம்ப வேண்டி இருந்தது. விஷ்வ சாஹரனின் ஊருக்கு செல்வதற்கே கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் ஆகும், அதனால் அவர்கள் அதிகாலையிலயே அங்கு இருந்து கிளம்பினால் தான், நிச்சயதார்த்தத்திற்கு சஹரனின் வீட்டிற்கு செல்வதற்கு நேரம் சரியாக இருக்கும்…

நிச்சயதார்த்தம் என்னவோ விஷ்வ சாரனின் வீட்டில் தான் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையில் ஐந்து மணிக்கெல்லாம் “ஆத்யா…” என அவளின் சித்தி சித்ரா வந்து எழுப்ப, அவளோ தூக்க கலக்கத்தில் அவரை கணக்கெடுக்காது திரும்பி படுத்திருந்தாள்…

மீணடும் அவர் “ஆதி…” என சத்தமாக அவளை மீண்டும் தட்டி எழுப்ப, அப்போதுதான் தூக்கம் கலைந்தவளோ “என்ன சித்தி..” என கேட்டிருந்தாள், தனக்கு கல்யாணம் என்றோ நிச்சயதார்த்தம் என்ற எதுவுமே நினைவில் இருக்கவில்லை அப்போது அவளுக்கு இருக்கவில்லை. தூக்க கலக்கத்தில் அவரைப் பார்த்து அவள் என்னவென புரியாமல் கேட்டிருக்க, “என்னவா சீக்கிரம் ரெடி ஆகு ஆதி, டைம் ஆச்சு. இப்ப கிளம்பினா தான் அங்க டைமுக்கு போய் சேரலாம், அங்க போய் நீ வெறே ரெடி ஆகணும் அதுக்கே ரொம்ப டைம் ஆகும் சீக்கிரம் எழுந்துரு…” என சித்ரா தெளிவாக கூறிய உடன் தான் பதறி எடுத்துக் கொண்டே எழுந்து அமர்ந்திருந்தாள் ஆத்யா ஷாலினி…

“அய்யய்யோ…” என கூறியபடி அவள் நேரத்தை பார்க்க, அதுவோ அதிகாலை ஐந்து பத்து என காட்டிக்கொண்டிருந்தது. “நல்ல லேட் ஆகிடுச்சி…” என அவசரமாக தனது பூந்துவாலைனை எடுத்துக் கொண்டே குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள் பெண்ணவள்…

குளித்து முடித்து சாதாரண ஒரு சுடிதாரை அணிந்து கொண்டவளோ “சித்தி நான் ரெடி…” என அவளின் உடைப்பட்டிகளை தள்ளிக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்திருந்தாள்…

ஆத்யா ஷாலினியின் குடும்பம் தங்குவதற்கு என அவர்களின் கெஸ்ட் ஹவுஸை விஷ்வ சாஹரனின் குடும்பத்தார் தயார் பண்ணி இருக்க, அங்கு தான் அனைவரும் செல்ல இருக்கின்றனர்…

ஆத்யா ஷாலினிக்கோ இன்று தான் அந்த வீட்டில் கடைசி நாள், அதை யோசித்த அவளுக்கு மனதில் பாரம் ஏற, கண்கள் எல்லாம் குளம் கட்டி விட்டது…

எல்லா பெண்களும் தங்களது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒரு கசப்பான விடயம் தான் இது. தன் பிறந்த வீட்டை விட்டு இன்னொரு வீட்டிற்கு செல்வது என்பது அவ்வளவு எளிதான விடயம் இல்லை. அது எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்…

பெண்ணவளின் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்து அவளின் அருகில் வந்த ராஜேந்திரனோ அவளின் தலையை வருடியப்படியே “என்னாச்சு குட்டிமா, ஏன் கண் கலங்குது?” என கேட்க, அவளோ எதுவும் கூடாது தன் சித்தப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டாள். அவளின் மனநிலையை அவருக்கு புரிந்து கொள்ளக் கூடியதாகவே இருந்தது…

“இங்க பாரு நீ கல்யாணம் பண்ணிட்டு போனாலும் இது எப்பவுமே உன் வீடு தான் அது எப்பவுமே மாறாது, நீ நினைச்சி நேரம் வரலாம், நினைச்ச நேரம் போகலாம்…” என அவளின் தலையை வருடியபடியே கூறியவர், அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டார்…

தங்கள் அறையிலிருந்து வெளியாகி வந்த சான்விக்கா, சாத்விகாவிற்கு கூட அதே கவலை தான். இத்தனை வருடம் தங்களுடன் இருந்த அக்கா, இன்னும் இரண்டு நாளில் அவர்களை பிரிய இருப்பதை நினைத்து பெண்களின் மனதிலோ பாரம் ஏறி போனது…

தன் சித்தப்பாவை விட்டு விலகி நின்றவள், அவளையே பார்த்துக் கொண்டிருந்த தன் சித்தியின் அருகில் சென்று அவரை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்…

அவருக்குமே கண்கள் எல்லாம் கலங்கிவிட இருந்தாலும் தைரியமாக இருப்பது போல் காட்டிக் கொண்டவர், அவளின் முதுகை வருடி கொடுத்தார்…

அடுத்ததாக அவளை நெருங்கி சாண்விக்கவும் சாத்விகாவும் அவளை இரு பக்கமும் அழுதபடி அணைத்துக் கொள்ள, ஆத்யா ஷாலினியும் தன் தங்கைகளை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்…

“சரி சரி டைம் ஆச்சு வாங்க கிளம்பலாம்…” என சித்ரா அனைவரையும் அவசரப்படுத்த, ஆத்யாவும் ஒரு பெருமூச்சுடன் அந்த வீட்டை ஒரு தடவை சுற்றி பார்த்தவள், தான் இத்தனை வருடம் வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள், என்னவாக இருந்தாலும் இனி அவள் அந்த வீட்டிற்கு வேற்று ஆள் தானே…

இரண்டரை மணி நேர பயணத்தின் முடிவில் ஆத்யா ஷாலினி மற்றும் அவளின் குடும்பத்தினர் வர வேண்டிய இடத்தை வந்து அடைந்திருந்தனர். விஷ்வ சாஹரனின் கெஸ்ட் ஹவுஸ் பிரம்மாண்டமாக காட்சியளிக்க, அங்கு பெண் வீட்டாருக்கு உதவுவதற்கெனவே மாப்பிள்ளை வீட்டினர் சிலர் நின்றிருந்தனர்…

காரிலும் வேனிலும் இருந்தே இறங்கிய பெண் வீட்டார்களை அங்கிருந்த மாப்பிள்ளை விட்டார்கள் வரவேற்க, காரில் இருந்து இறங்கி ஆத்யா ஷாலினியை சூழ்ந்து கொண்ட அங்கிருந்த சில இளம் பெண்களோ “நீங்க தான் சாஹரன் அண்ணாவ கல்யாணம் பண்ணிக போறாங்களா? ரொம்ப அழகா இருக்கீங்க…” என அவளிடம் பேசியப்படியே அவளை அறைக்குள் அழைத்துச் சென்றனர்…

ஆத்யா ஷாலினி தயாராகுவதற்கு நேரம் மிகவும் குறைவாகவே இருக்க, அவர்கள் அழைத்துச் சென்ற அறைக்குள் இருந்த குளியலறைக்குள் நுழைந்து குளித்துவிட்டு வந்தவள், புடவையை அங்கிருந்த பெண்களின் உதவியுடன் அணிய ஆரம்பித்து விட்டாள்…

அதற்கிடையில் அவளின் சிகை அலங்காரம் மற்றும் முக அலங்காரமும் செய்யும் பெண்கள் வந்துவிட, அவர்களும் உள்ளே வந்து ஆத்யா ஷாலினியை தயார் படுத்த ஆரம்பித்து விட்டனர்…

மாலை ஆறு மணியை நெருங்க தேவதை போல் தயாராகி வெளியே வந்தாள் பெண்ணவள். அவளைப் பார்த்து ஒரு கணம் அவளின் அழகில் அவளின் சித்தியே பிரமித்து விட்டார்…

அவளின் அருகில் வந்து அவளுக்கு திருஷ்டி சுத்தி போட்டவர் “இன்னைக்கு யாரு கண்ணும் பட கூடாது…” எனக் கூறியபடி அவளை அங்கிருந்த காரில் ஏற்றியவர்கள், விஷ்வ சாஹரனின் வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்தனர்…

அங்கிருந்து பத்து நிமிடத்தில் அவர்கள் விஷ்வ சாஹரன் வீட்டை அடைந்திருக்க, ஏற்கனவே தாமதம் ஆகிவிட்ட காரணத்தினால் சாஹரன் மணமேடையில் தான் நின்று இருந்தான்…

அவனோ ஆத்யா ஷாலினி அணிந்திருந்த பச்சை நிற சேலைக்கு பொருத்தமாக, வெள்ளை நிற வேட்டியும் பச்சை நிற சட்டையும் தான் அறிந்திருந்தான்…

தேவதை போல் தன் வீட்டிற்குள் நுழைந்தவளையே அவன் கண்கள் இமைக்காது பார்த்திருக்க, பெண்மவளை அழைத்து வந்தவர்கள் அவளை மேடையில் ஏற்றிவிட்டு சாஹரனின் அருகில் நிற்க வைத்திருந்தனர்…

தன் அருகில் வந்து நின்றவளை பார்த்து, யாரும் பார்க்காத வண்ணம் சற்று குனிந்து, அவளின் காதுகளில் “ப்பா ஒவ்வொரு டைம் பாக்கும் போதும் ஒவ்வொரு மாதிரி அழகா இருக்க…” என கூறி அவளை வெட்கப்பட வைத்திருந்தான்…

ஐயரும் வந்து நிச்சயதார்த்த பத்திரிகை படிக்க ஆரம்பித்து விட, மாப்பிள்ளை வீட்டார் சார்பாக விஷ்வநாதனும் மகாலட்சுமியும் தட்டை மாற்றிக் கொள்ள, பெண் வீட்டார் சார்பாக சித்ராவும் ராஜேந்திரனும் தட்டை மாத்திக் கொண்டனர்…

அதனைத் தொடர்ந்து மாப்பிள்ளையும் பொண்ணும் மோதிரம் மற்றும் நிகழ்வு, இருவரின் கையிலும் மோதிரங்கள் கொடுக்கப்பட சாஹரன் தான் முதலில் தன்னவளின் கையைப் பிடித்து மெதுவாக அவளின் கைகளில் மோதிரத்தை அணிவித்திருந்தான்…

அடுத்து தன் கையில் இருந்த மோதிரத்தை தூக்கி பார்த்த ஆத்தியாவின் கைகளோ பதட்டத்தில் நடுக்கம் கொள்ள, அதை கவனித்த விஷ்வ சாஹரன் ஒரு கணம் அவளின் கையை அழுத்தமாக இறுக்கி பிடித்தவன் “ரிலாக்ஸ்…” என யாருக்கும் கேட்காத வகையில் கூறியிருந்தான்…

அவளும் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவள் மெதுவாக தன்னவனின் கையை பிடித்து அவனுக்கு மோதிரத்தை அணிவித்து விட்டிருந்தாள்…

நிச்சயதார்த்தமும் இனிதே நிறைவு பெற, இரவு சாப்பாடு அங்கே ஏற்பாடாகி இருக்க, மாப்பிள்ளை பெண்ணை என இருவரைம் அருகில் இருந்தே சாப்பிட்டனர், காலையில் நேரத்துடன் எழுந்த காரணத்தினால் ஆத்யாவிற்கு களைப்பாக இருக்க, அவளுக்கோ தூக்கம் கண்களை சுழற்றியது…

அவளின் முகத்தை வைத்தே அவளின் களைப்பை அறிந்து கொண்ட சாஹரன், பெண்ணவளின் காதை நோக்கி குறித்து “என்ன ரொம்ப டயர்டா இருக்கா?” என அக்கறையாக கேட்டிருந்தான்…

அவளும் “ம்ம் ரொம்ப டயர்டா இருக்கு, காலைல ரொம்ப நேரத்தோடு எழுந்துட்டேன், அப்புறம் ஒழுங்கா சாப்பிடவே இல்ல இடைல, இப்ப நாளைக்கு காலைல வேற இத விட நேரமா எழனும்…” என அயர்ச்சியாக தன்னவனை பார்த்து கூறினாள்…

“சரி ஓகே நீ இப்போ நல்லா சாப்பிட்டு போய், நேரத்தோட தூங்கிடு, அப்ப தான் காலையில கொஞ்சமாவது பிரெஷா இருக்கும்…” என கூறியிருந்தான்…

அவளும் அதைக் கேட்டு தலையை ஆட்டியவள் அவனுடன் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கெஸ்ட் ஹவுஸிற்கு தன் குடும்பத்தாருடன் கிளமபி விட்டாள்…

நாளை காலை ஆறு அரைக்கு முகூர்த்தம் என்பதால், ஆத்யா ஷாலினி மூன்றரை மணிக்கு எழும்பி தயாராக வேண்டிய நிலைதான். அதனால் இரவு ஒன்பது மணிக்கே உடைகளை மாற்றிவிட்டு தூங்கிவிட்டாள்…

கலையில் மூன்று மணிக்கே அவளின் சித்தி அவளை வந்து எழுப்ப, தூக்கம் கண்களை சுழற்றினாலும் வேறு வழி இல்லாது எழுந்து சென்று, அந்த குளிரிலும் சுடுநீர் வைத்து குளித்தவளோ, புடவை உடுத்தி தயாராக ஆரம்பித்து விட்டாள்…

அவளை அலங்காரம் செய்யும் பெண்களும் வந்துவிட, அப்புறம் என்ன ஒரே பரபரப்பு தான். சரியாக ஆறு மணிக்கே மணப்பெண் தயாராகி விட்டிருக்க, ராஜேந்திரனும் சித்ராவும் அவளை பார்ப்பதற்காக அறைக்குள் நுழைந்தனர்…

அவர்களை பார்த்ததும் எழுந்து நின்றவளோ, அவர்களின் காலில் விழுந்தாள் ஆசி பெறுவதற்கு, “நூறு வருஷம் சந்தோஷமா இருப்ப…” என கூறி அவளை வாழ்த்தியிருந்தனர்…

மணமேடையில் ஐயரோ மந்திரங்களை கூற ஆரம்பித்து இருக்க, சிறிது நேரத்திலயே மாப்பிள்ளையை அழைத்து வர கூறியிருந்தார், அதனை தொடர்ந்து விஷ்வ சாஹரனும் வந்து அமர, அவனை சில மந்திரங்கள் சொல்ல கூறியவர் பிறகு மணப்பெண்ணே மணமேடைக்கு அழைத்திருந்தார்…

அவளும் அங்கு வந்து அமர்ந்துஷ அய்யர் கூறிய மந்திரங்களை கூற, சிறிது நேரத்திலேயே அவளுக்கு கூரை புடவை நீட்டப்பட்டது, அதுதான் சாஹரன் அவளுக்காக ஸ்பெஷலா செய்து இருந்த புடவை…

அதை அலங்கார பெண்களின் உதவியுடன் அணிந்து முடித்துவிட்டு, மணமேடையை நோக்கி வந்த ஆத்யா ஷாலினியை தான் அங்கிருந்து அனைவரும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்…

அவளின் சேலையிலோ அவளினதும், சாஹரனினது முகம் அழகாக வரையப்பட்டிருக்க, அதை பார்த்து அனைவரும் ஆச்சரியம் படாமல் இருந்தால் தான் ஆச்சரியம்…

மகாலட்சுமியோ அதை பார்த்தவர் “ஓ இதத் தான் என்கிட்ட காட்டாம மறைச்சானா?” என உள்ளுக்குள் நினைத்து சிரித்துக் கொண்டார்…

ஆத்ய ஷாலினியும் விஸ்வாசகாரனின் பக்கத்தில் அமர வைக்கப்பட, அய்யரோ

"மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபாகே த்வம்
சஞ்சீவ சரத சதம்"

என மந்திரங்களை கூறியவர், அனைவரையும் பார்த்து “கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்றப்படி மாங்கல்யத்தை எடுத்து சாஹரனின் கையில் கொடுக்க, அதை தன் கைகளில் பெற்றுக் கொண்டவன் ஒரு கணம் காதலாக தன்னவளை பார்த்து விட்டு, அடுத்த நொடியே அவளின் கழுத்தில் மங்கள்நானை கட்டி அவளை தன் சரிப்பாதியாக ஏற்றுக் கொண்டிருந்தான்…

அவன் அவளின் கழுத்தில் தாலி கட்டிய அக்கணம் பெண்ணவளின் கண்களில் இருந்து கண்ணீர் உருண்டோடி அவன் கைகளை நனைக்க, அவனோ திரும்பி தன்னவளை ஒரு கணம் பார்த்தவன். அவளின் முகம் தாங்கி அவளின் கணவன் என்ற உரிமையுடன் தன் முதல் அச்சாரத்தை அவள் நெற்றியில் அழுத்தமாக பதித்திருந்தான்…

எது இருவரும் தங்கள் வாழ்வில் நடக்கவே நடக்காது என நினைத்திருந்தார்களோ, அது இப்போது நடந்திருக்க, இருவர் மனதிலும் அவ்வளவு நெகிழ்வு…

காதலை மனதிற்குள் மறைத்து வைத்துக் கொண்டு வாழ்வது எந்த அளவுக்கு கடினம் என்று அவர்களுக்கு தான் தெரியும், இன்று அந்த காதல் கைகூடி விட்ட நிலையில் அவர்கள் இருவரின் முகமும் பூவாக மலர்ந்து தான் இருந்தது…

ஆம் விஷ்வ சாஹரன் கூட புன்னகைத்தபடி தான் அமர்ந்திருந்தான், அவன் புன்னகையை பார்த்து அவன் குடும்பத்தாருக்கே அவ்வளவு ஆச்சரியம்…

பிறகு கணவனின் விரலோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்டே அவனுடன் அக்னியை ஏழு முறை சுற்றி வந்தாள், பிறகு அருந்ததி பார்த்து அவளின் காலில் மெட்டியை அணிவித்து இருந்தான் விஷ்வ சாஹரன்…

அனைத்து சடங்குகளும் முடிய அங்கேயே காலை உணவை உண்டு முடிய, மணமக்கள் அழைத்துக் கொண்டே அனைவரும் சாஹரனின் வீட்டிற்கு கிளம்பி விட்டனர்…


தொடரும்…
 
Top Bottom