.
தீஞ்சுவை மலர் -16
இவர்கள் புதிதாக பார்த்த இடம் ஓகே ஆகிவிட ,முதலாளி அங்கே இன்டீரியர் வேலை செய்ய யாராவது கிடைப்பார்களா என்று கேட்டார். அதே நேரம் இவனும் அப்போது உள்ளே நுழைய கதிரிடம் பேச விரும்பாதவள் , "சார் இவர் கூட இன்டீரியர் ஒர்க் பண்ணறதா சொன்னார் "என்று கதிரை கைக் காட்டி விட்டு வெளியில் வந்து விட்டாள்.
'நான் செய்தது சரியா தவறா? அவன் மேல உனக்கு என்ன அக்கறை?' என்ற எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. கதிரிடம் பேசி முடித்து விட்டு முதலாளி தான் வந்து இவளிடம் பேசினார் .
"மலர் அவர் கிட்ட பேசிட்டேன். இருந்தாலும் இடம் ஒரு தடவை பார்க்கணும்னு சொல்லறாரு. நீங்க ஒரே ஒரு தடவை அவரை கூட்டிட்டுப் போய் காட்டிடுங்க."
கட்டளையாக அவர் சொல்லவும் வேறு வழியில்லாமல் சரி என்று ஒத்துக் கொண்டாள் .
அவள் ஆட்டோவில் ஏற வேண்டாம் என்று தடுத்தவன் அவளை தன் வண்டியிலே அழைத்துச் சென்றான்.
கணவனோடு அவன் வண்டியில் உடன் செல்ல வேண்டும் என்ற அவள் கனவு இப்போது நினைவாகியது. ஆனால் அவர்கள் இப்போது கண்னவ் மனைவி இல்லை. விந்தையாகத் தான் இருக்கிறது. இருவருக்கும் நடுவில் இன்னும் ஒருவர் அமர்ந்துக் கொள்ளலாம். அதற்கு பதில் அவள் முதுகு பையை வைத்தாள் .
இடைத்தைக் காட்டியவள் வந்து வெளியே நின்றுக் கொண்டாள் . அவன் அங்கேயே நின்று முதலாளியிடம் எல்லாம் பேசிக் கொண்டான்.
அவனும் வெளியில் வந்து, சார் உங்ககிட்ட பேசணுமாம் என்று போனைக் கொடுத்தான்.
அவர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். ஓகே ஓகே என்று மட்டும் சொன்னவள் நடு நடுவே அவன் முகத்தையும் பார்த்துக் கொண்டாள் .
கதவைப் பூட்ட இவள் உள்ளே செல்லவும் பின்னோடே வந்தவன், அவள் முதுகைக் கட்டிக் கொண்டான்.
"ப்ளீஸ் மலர் எதுவும் பேசாத. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.ஒரே ஒரு நிமிஷம் ப்ளீஸ்.. "சொன்னாலும் ஒரு நிமிடம் எல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை.
உடனேயே அவள் முகத்தைப் பார்த்தவன் "ரொம்ப தேங்க்ஸ் மலர். இது எனக்கு எவ்ளோ பெரிய டீல் தெரியுமா? எல்லாம் உன்னால தான்" சொன்னவன் பூட்டை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து நின்று விட்டான். அதிர்ச்சியில் இருந்து மீளாதவள் பொம்மை போல
அவன் வண்டியில் ஏறிக் கொண்டாள் . நடுவில் இருந்த பையை எடுத்து அவன் முன்னே வைத்துக் கொண்டான். இடைவெளி இருந்தது. அதை குறைக்க அவன் எந்த கஷ்டமும் படவேண்டிய அவசியமில்லை. அந்த குண்டும் குழியுமாக இருந்த சாலையே அவளை இவன் புறம் நகர்த்திக் கொண்டு வந்திருந்தது .
ஒரு இடத்தில தன்னையும் அறியாமல் அவன் தோளைப்பிடித்துக் கொள்ள அவன் வண்டியை சட்டென்று நிறுத்தினான்.
சில வினாடி பிறகு தானே மீண்டும் வண்டியை இயக்கினான். இந்த மாதிரி ஒரு உணர்வு அவன் வாழ்க்கையில் வந்ததே இல்லை. இப்படித்தான் காதலிப்பார்களோ ? அடிக்கடி அவள் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டான். முகத்துக்கு பவுடர் கூட போடாதவள் அத்தனை அழகாக இருந்தாள். இப்படித்தான் சைட் அடிக்க வேண்டும் என்று அவன் கற்றுக் கொண்ட தருணம் இதுதான். அவனுக்கு இப்போது மலரை துரத்தி துரத்தி காதலிக்க ஆசை வந்தது. அதற்கு அடுத்த நிலைப் பற்றி எந்த எண்ணமும் இல்லை. நீதான் என் காதல் என்று உரக்க அவளிடம் சொல்ல வேண்டும். அவள் இவன் கன்னம் கிள்ளி கொஞ்ச வேண்டும். தலை கலைக்க வேண்டும். உதட்டில் இதழ் பதிக்க வேண்டும். இது போல சின்ன சின்ன ஆசைகள்.
திருந்தி வந்தவனுக்கு வாய்ப்புகள் கொடுக்கலாம் தானே! அவனுக்கு இயற்கை உதவியது. வீட்டுக்கு வந்தவள் தன்னை அடக்கிக் கொள்ள பெரும் பாடு பட்டாள் . அவன் தொடுகை பிடிக்குமா பிடிக்காதா? முகம் வியர்வையில் நனைய அவசரமாக முகம் கழுவிக் கொண்டு வந்தாள். ஆரிவ் அழைத்தான்.
"நீ எப்பவருவ ஆரிவ் ?"
"ஏதாவது பிரச்சனையா மலர்?
"இல்ல சும்மாதான்." அவள் எதையும் சொல்லவில்லை என்றாலும் அவன் புரிந்துக் கொண்டு விட்டான். எதையும் காட்டிக் கொள்ளாதவள் ,
"ஏய் லூசு உன்ன ரொம்ப மிஸ் பண்ணற மாதிரி இருந்தது அதான் கேட்டேன் "
அவள் கலகலப்பாக குரலை மாற்றிக் கொண்டாள் .
"என்ன இன்னிக்கு காலேஜ் போகலையா?"என்று அவன் ஆரம்பிக்கவும் பிறகு ஏதேதோ பேச்சுக்கள். பெற்றவர்கள் தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள் என்று சொன்னான். கூடவே யமுனாப் பற்றிய பேச்சு பேச்சும் வந்தது.
"யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே போய் டூயட் பாட வேண்டியது தானே "
"மலர் அப்பா வராங்க. நான் அப்புறம் பேசறேன்"அவசரமாக போனை வைத்து விட்டான்.
அன்றைய இரவில் மழை ஆரம்பித்தது. மழை நேரம் என்றாலே மலருக்கு படபடப்பு வந்து விடும் . ஆரிவ் அந்நேரம் எங்கும் செல்லாமல் அவள் கூடவே இருந்துப் பார்த்துக் கொள்வான். நாட்கள் ஓடினாலும் அந்த இரவு மட்டும் அவளுக்கு மீளாத துயரமாகத் தான் இருந்துக் கொண்டிருக்கிறது. அவன் அடித்ததும் சொன்ன வார்த்தைகளும் அனாதையாக இவள் மழையில் கிடந்ததும் இன்றும் நினைவுகள் ஈட்டியாக நெஞ்சின் காயத்தை அதிகப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறன. இப்போது ஆரிவ் இல்லை. பயந்து போய் ஓரத்தில் நடுங்கி கொண்டு அமர்ந்துக் கொண்டாள் . கண்ணை திறக்க கூட பயமாக இருந்தது. மாத்திரை போடு என்று மூளை சொன்னாலும் உடல் ஒத்துழைக்கவில்லை. யாரோ பெல் அடித்தார்கள். இது அவன் தான் . என்னை கொன்று விடுவான் . என்னை அடித்தே கொன்று விடுவான். கழுத்தை நெரித்துக் கொண்டு விடுவான். உதடு நடுங்கியது. உடல் வெடவெடக்க ஆரம்பித்தது.
அவள் நினைத்தது சரிதான். கதிர் தான் பெல் அடித்துக் கொண்டிருந்தான். அவள் வந்து கதவை திறக்காமல் போகவும் அவன் மனதிற்குள் ஏதோ ஒரு பயம். அவளுக்கு இடி இடித்தா ல் பயம் வரும் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும் . அவர்கள் வீட்டு எமெர்ஜென்சி கீ இவன் வீட்டில் தான் இருந்தது. தாத்தாவிடம் முன்பு கொடுத்ததை இன்னும் வாங்கவில்லை. அவசரமாக அதை திறந்துக் கொண்டு உள்ளே வந்த போது வீடு எங்கிலும் மலரைக் காணவில்லை. இன்னும் விளக்கு எதுவும் போடவில்லை. போன் டார்ச் அடித்து அவள் பெயரை அழைத்து வீடு எங்கிலும் தேடினான். பிறகு தான் படுக்கை அறை யின் மூலையில் நடுங்கி ஒடுங்கிப் போய் உடல் வெட வெடக்க இருந்த மலரைப் பார்த்தான். அந்த நிலையில் அவளை பார்த்தவனுக்கு முதலில் பயமாக இருந்தது .
"மலர்" அவள் அருகில் சென்று அழைத்தான்.
"வராத. கிட்ட வராத. நீ என்னை அடிப்ப "
"மலர் நான் உன்னை அடிக்க மாட்டேன்'
"இல்ல நீ என்னை கொன்னுடுவ. இங்க பாரு இப்படி இப்படி கழுத்தை நெறிச்சு என்னை கொன்னுடுவ " கண்கள் பிதுங்கி தன் கழுத்தை அவளே நெரித்துக் கொண்டாள் .
"மலர் இல்ல மலர். ப்ராமிஸ் நான் உன்னை ஒன்னும் செய்ய மாட்டேன். ப்ளீஸ்" அவன் சொல்லிக் கொண்டிருக்கவும் சட்டென மயங்கி விழுந்தாள் .
இப்போது கதிருக்கு பயமாக இருந்தது. அவசரமாக அவள் போனை எடுத்து பார்த்த போது அதில் எந்த மருந்து எடுக்க வேண்டும் என்று எழுதி வைத்திருந்தாள் . அவசரமாக முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினான். அங்கே அருகிலேயே ஒரு டேபிளில் சில மருந்துகள் இருக்கவும் அங்கே இருந்த அந்த மருந்தை எடுத்து அதில் சொல்லி இருந்த அளவுக்கு புகட்டினான். முகம் எங்கும் இருந்த வியர்வையைத் துடைத்து மின்விசிறி வேகத்தை அதிகப் படுத்தினான். அடுத்த சில நிமிடங்களில் இயல்பானாள் மலர்.
அவனுக்கு அவளிடம் நிறைய பேச வேண்டும். அதற்கான நேரம் இது இல்லை.
"மலர் ஹாஸ்பிடல் போகலாமா ?"
பதில் சொல்லவில்லை. முகத்தை திருப்பி வெளியில் வெறித்தாள் .
"வேண்டாமா. சரி ஏதாவது செய்து தரட்டுமா சாப்பிடறியா "
"மௌனம்."
பிறகு தான் அவளுக்கு இரவு உணவு செய்து கொடுத்து படுக்க வைத்தான். இப்போதும் மழை பெய்துக் கொண்டுதான் இருந்தது. தனக்கு உணவு செய்து கொடுத்தவனை பட்டினியாக அனுப்ப மனம் இல்லாதவள் அவனுக்கும் தோசைகளை செய்துக் கொடுத்தாள் . அவனுக்குத் தான் குற்ற உணர்வில் உணவு உள்ளே இறங்கவில்லை. செய்த தப்புகளை முழுங்க முடியாதவன் கடினப் பட்டு அவள் செய்து கொடுத்த இரண்டு தோசைகளை முழுங்கினான். பிறகு அவளைப் படுக்க வைத்தான். அவளுக்கு ஏதோ ஒரு சொல்ல முடியாத பயம். தன்னுடைய பொம்மையை நெஞ்சொடு இறுக்கிக் கட்டிக் கொண்டு உறங்கிப் போனாள் .
விளக்குகளை அணைத்து விட்டு தன்னுடைய வீட்டிலும் சில செய்ய வேண்டிய வேலைகளை முடித்துக் கொண்டு பூட்டிக் கொண்டு இரவுக்கு இங்கேயே வந்து விட்டான். இன்றைய இரவு அவளுடன்தான் இருக்க வேண்டும். அவளை தனியே விடக் கூடாது.
"என்னங்க ரொம்ப இடி இடிக்கு என்னை கட்டிக்கறீங்களா?"
"சீ லூசு. இதுக்கெல்லாம் பயப்படுவாங்களா ? என்ன தொந்தரவு பண்ணாத. திருமணமான புதிதில் அவளை அதட்டியது நினைவுக்கு வந்தது.
அவள் கட்டிக்க கோடனிருந்த பொம்மையை மெதுவாக பிரித்து எடுத்து விட்டு தன்னை கட்டிக்க கொள்ள வைத்தான். அவள் அவன் சட்டையை பிடித்துக் கொண்டு உறங்கியிருந்தாள் .
"ஒரு வேளை அறிவை இப்படித்தான் காட்டிக் கொண்டிருப்பாளோ எண்ணம் ஒட்டியது. இருந்தாலும் அதையும் கூட தவர்கா எண்ணத் தோன்றவில்லை. மருந்தின் உதவியால் அவள் நன்னடராக உறங்கியிருக்க அவளின் ஸ்பரிசம் பட்டதில் இவனும் நன்றாக உறங்கியிருந்தான் .
மாறு நாள் நன்றாகவே வெளிச்சம் வராத கோடாங்கி விட்டது.
மலேயா காரணம் சொல்லி யாரும் லீவு போடா முடியாது. எழுந்துருங்க எல்லாரையும் கையில் குச்சி வைத்துக் கொண்டு மிரட்ட கதிரவன் வந்து விட்டார்.
கணவனின் கை வளைவில் இருந்து கஷ்டப்பட்டு தன்னைப் பிரித்து எடுத்துக் கொண்டவளுக்கு இந்த அணைப்பும் தொடுகையும் நிச்சயம் பிடிக்கவில்லை. பல் விலக்கிக்கொண்டிருந்தாலும், 'ஆரிவ் ப்ளீஸ் வாடா, சீக்கிரம் வாயேன். நாம வேற எங்கையாவது போலாம்' என்று மனம் கெஞ்சிக் கொண்டிருந்தது.
தொடரும்.....