• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

துணை - 10

STN - 95

New member
மருத்துவமனையில் தேவாவுடன் காத்திருந்த சம்யுக்தா பொழுது போக திறன்பேசியில் பார்வையை செலுத்தியப்படி இருக்க, அவனோ சம்யுக்தாவை தான் பார்த்திருந்தான்.

அதை உணர்ந்து பார்வையை அவன் பக்கம் திருப்பி “என்ன” என்று கேட்டிருந்தாள்.

“நான் லவ் சொன்னதும் என்ன உதாசினப்படுத்தின இப்போ எனக்காக இவ்வளவு மெனக்கிடுற.. அப்போ என்மேல ஜஸ்ட் ஈர்ப்பு கூடயில்லாமலா பண்ற” என்றதை கேட்டு நகைச்சுவை கூறியது போல் சிரித்த

சம்யுக்தா “ஓ உனக்காக வீட்டுல ஷாப்பிங் தள்ளி வைக்க நினைச்சி பேசுனதுக்கு சொல்லுறியா.. கொஞ்சம் திங்க் பண்ணி பாரேன் எனக்காக நீ வந்த இடத்தில காயத்த வாங்கிக்கிட்ட.. நீ ஷாப்பிங் பண்றேன் இன்னும் அத இழுத்து வச்சுக்கிட்டா.. எனக்கு தானே கில்ட் ஃபீல்லாகும்.. சோ அந்த எண்ணத்துல தான் சொன்னேன்.. நீ என் அப்பாக்கிட்ட பேசின எந்த கற்பனை குதிரையும் இல்ல.. ஆனாலும் உன் நம்பிக்கை தறிக்கெட்டு வளரருது கொஞ்சம் குறைச்சிக்க”

“சோ நான் பேசினத நீ கேட்டுருக்க”

“ஆமா.. எப்படியும் நீ இந்த பீட்டர் விடுவேன் தெரிஞ்சா தான் கேட்டேன்.. அண்ட் எனக்காக நீ காயத்த வாங்கிட்டது அதுக்கு காரணம் எல்லாரும் முன்னாடி சொல்லிருந்தா வீட்டுல விஷயம் தெரிஞ்சிரும் தான் அமைதியா நீ பேசட்டும்ன்னு தடுக்கல” என்றதுக்கு ஆடவன் சிரித்து வைக்க,

“எதுக்கு சிரிக்கிற”

“இல்ல இந்த காரணம்லாம் என்னோட மனச மாத்த சொல்லுறியா.. இல்ல நீயே இத சொல்லி உன் மனச தேத்திக்கிறியா யுக்தா” என்றதும் ஆடவனை பெண்ணவள் சலனமற்று வெறிக்க,

அதற்குள் மருத்துவரை காண அழைப்பு வந்ததில் அமைதியாக எழுந்து அவன் கையை பற்றி அழைத்து சென்றாள்.

பின் காலில் புதிதாக கட்டிட்டு ஊசியையும் உடலில் செலுத்துவிட்டு மருந்து மாத்திரை வாங்கிவிட்டே வெளியே வந்தவர்கள் குடும்பம் இருக்கும் இடத்தை நோக்கி அமைதியுடன் வந்து சேர்ந்தனர்.
***
ஜவுளிக்கடையில் புடவை எடுக்கிறேன் என்று பெண்கள் அவ்விடத்தையே ரெண்டாக்கிருக்க, ஆனா விசேஷகாரியான ஶ்ரீநிதி தான் வெறுமையான நிலையை கடமைக்கென புடவையை பார்த்திருந்தாள்.

ஏனோ பிரசன்னா பேச்சில் உடைந்த காயம் கொண்ட மனதிற்கோ அவன் மேலுள்ள தன் காதல் சரி வராது என்று மூளைக்கு உரைக்கவே செய்ய,

மனம் தான் அதை ஏற்க மறுத்து, அவன் பின்னே குதிரை போல் ஓடுகிறது, இருப்பினும் நிதர்சனம் உணர்ந்த பாவை ‘ஶ்ரீ உனக்கும் ரனா மாமாக்கும் சரி வராது காரணம் கூட உனக்கே தெரியும்.. அவர கட்டிட்டாலும் உன்னால அவரோட நிம்மதியா வாழ முடியாது.. பின்ன எதுக்கு என்னையும் வருத்தி குடும்பத்தயும் மூட் அவுட் பண்ணனும்.. என்ன வேணா நடந்துட்டு போகுது டேக் இட் ஈஸி பாலிசி’ என்று தனக்கு தானே ஆறுதல் கூறியவளின் முகம் முன்னே விட சற்று தெளிந்திருந்தது.

அதோடு ‘நல்லவேலை ரனா மாமாக்கு என்மேல காதல் இல்ல’ என்று ஒருபக்கம் மனம் நிம்மதியடைந்தாலும்,

‘எதுனால என்மேல அவருக்கு காதல் வரல’ என்ற கேள்வியும் அவளின் மூளையை குடைந்தெடுக்க, அதனை கடக்க எண்ணி பெருமூச்சு விட்டவள் புடவை பார்க்கலானாள்.

பின் ஒரு புடவை கையில் எடுத்து பெண்ணவள் பார்த்து கொண்டிருக்க, அவளையே சற்று தள்ளி நின்று பார்த்து கொண்டிருந்த பிரசன்னாவிற்கு பெண்ணவள் கையில் வைத்திருந்த புடவை அவளுக்கு கிஞ்சிதத்திற்கு கூட பொருந்தாதை கண்டு,

எங்கே அதை எடுத்து விடுவாளோ என்றவண்ணம் வேகமாக, அவள் அருகேயிருந்த இருக்கையில் அமர்ந்தவன் “நிதி இந்த சேரியா செலக்ட் பண்ணிருக்க” என்று அவளிடமிருந்து அதனை பறித்தவன் “இது செட்டாகுது உனக்கு.. வேற பாக்கலாம் நிதிமா” என்க,

ஏற்கனவே காதல் உணர்வுகளில் போராடி கொண்டிருந்தவளை சோதிக்கும் விதமாக ஆடவனின் உரிமை பேச்சு வேறு எரிச்சலை கொடுக்க “உங்க வேலை எதுவோ அத மட்டும் பாருங்க.. எனக்கு எப்படி புடவை எடுக்கணும் தெரியும்” என்றவளின் வார்த்தை வெறுப்பாகவே வந்திருக்க,

எப்போதும் ஒருமையில் உரிமையாக மாமா என்று அழைப்பவளின் அழைப்பு துண்டிக்கப்பட்டது ஆடவனுக்கு வலியை கொடுக்க, அவளுக்கும் அப்படி தானே வலித்திருக்கும் என்று உணர்ந்தவன் “நீ என்மேல கோவமா இருக்கன்னு எனக்கு தெரியும் நிதிமா.. ஆனா சின்ன வயசுலயே உன் அக்காவ எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் உன் அப்பா ஆசை..

என்னோட அம்மா ஆசையும் கூட அதான்.. ஒருவேளை அவங்க ஆசைய நிறைவேத்தினா என் அம்மா என்கிட்ட வந்துடுவாங்கன்னு நம்புறேன்.. அண்ட் இது தான் நிதர்சனம் நிதிமா நீ தேவையில்லாம.. உன் மனசுல ஆசை வளத்துக்கிட்டு இப்போ என்கிட்ட ஒதுக்கம் காட்டுறேன் நீ மரியாதையா பேசுறது எனக்கு வலிக்குதுடி.. என் நிதிமா பழையப்படி என்கிட்ட பேசணும்டா”

“என்ன பினாதிட்டு இருக்கீங்க.. நான் என்னக்காவது உங்ககிட்ட லவ் பண்றேன் சொல்லிருக்கேனா இல்ல என்ன கல்யாணம் பண்ணிக்கங்கன்னு தான் கேட்டுருக்கேனா.. இல்ல தான” என்று நிறுத்தி தொடர்ந்தவள்

“ம் ஒத்துக்குறேன் உங்கள எனக்கு புடிச்சிது தான் ஆனா அது ஜஸ்ட் அட்ராக்ஷன்.. அதோட நீங்க என் அக்காக்கு வருங்கால புருஷனாக நினைக்கிறீங்க.. சோ உங்ககிட்ட வா போன்னு ஒருமைல பேசுறது மரியாதையா இருக்காது..”

“சரி ஓகே உனக்கு எப்படி தோணுதோ அப்படியே பேசு.. என்ன வெறுக்க மட்டும் செய்யாத” என்றதை மதிக்காத ஶ்ரீநிதி அங்கு நின்றிருந்த ஊழியரிடம் “அண்ணா இத கொஞ்சம் விரிச்சி காட்டுங்க” என்று அவன் வேண்டாமென்று கூறிய புடவையை கொடுக்க, இவர்களை விக்கியுடன் புடவை எடுத்து கொண்டிருந்த தேவிபிரியாவும் கவனிக்க தவறவில்லை.

அவளின் கடுப்பான பிரசன்னா “நான் தான் சொல்லுறேன்ல நிதி.. இந்த புடவை உனக்கு நல்லா இருக்காது வேற பாக்கலாம்” என்று வேற புடவை எடுத்து “இது உனக்கு சூட்டாகும்” என்று சொல்லி கொண்டிருக்கும் போது தான், தேவாவை பிடித்தபடி அவ்விடம் வந்து சேர்ந்திருந்தாள் சம்யுக்தா.

அவர்களை கண்டு புன்னகைத்த ஶ்ரீமா ஆடவன் கூறிய புடவை கண்டு கொள்ளாமல் எழுந்து தேவாவின் அருகே சென்றவள் “என்ன அநியாயம் மாமா இது.. நானும் உங்களுக்கு மாமா பொண்ணு தான்.. ஏன் எனக்கு உங்கமேல க்ரஸ் கூட உண்டு.. ஆனா நீங்க என் அக்கா பின்னாடியே சுத்தி ஓரவஞ்சன பாக்குறீங்க.. ஏன் அவ பிடிச்சா தான் உங்க கால் நகருமா.. நாங்களும் பிடிப்போம்” என்றபடி தமக்கை விளக்கிவிட்டு தான் அவனின் கையை பற்றி கொள்ள,

அவளின் செயலில் இருவருக்கு வயிறு பத்தி எறிந்தது.

வேறு யாரு சம்யுக்தா பிரசன்னா தான், என்ன தான் அவனை பிடிக்கவில்லை என்று கூறினாலும் தன்னை காதலித்தவன் தங்கையிடம் பேசுவது கூட கடுப்பாக இருந்தது.

இவளின் நிலை இப்படியென்றால் பிரசன்னாவிற்கு அவள் தன்னை உதாசீனப்படுத்தியது ஒரு வித கடுப்பென்றால் தான் எதிரியாக நினைப்பவனிடம் கொஞ்சி பேசுவது ஒரு லிட்டர் எண்ணெயில் நெருப்பை பற்ற வைத்தது போல் அமர்ந்திருந்தான்.

இதனை நோட்டமிட்ட தேவிபிரியா கமுக்கமாக சிரிப்பை மறைத்தப்படி நிற்க, இருவரின் எரிச்சலுக்கு தீனி போடும் விதமாக தேவாவோ “அச்சோ மாமா அப்படி நினைப்பேனாடா.. பாரு உன் மாமாக்கு போட்டி அதிகம்.. நானும் பாவம் தான ஒருத்தர சமாளிக்கலாம் மூணு பேர ஒத்த ஆளா சமாளிக்க பாடுப்படுறேன்”

“என்ன மாமா சொல்லுறீங்க மூணு பேரா.. நானும் அக்காவும் தான எக்ஸ்டராவா பந்தயதுக்கு யாரு”

“வேற யாரு என் பியூட்டி” என்று தேவிபிரியாவை காண, அவளும் தேவாவை பார்த்து கண்ணடித்தவள், ஓரக்கண்ணில் தன்னை முறைக்கும் விக்கிகையும் கண்டு கொண்டாள்.

தேவாவின் பதில் வாயில் கைவைத்த ஶ்ரீநிதி “சரி தான்.. சண்டைன்னா சட்டை கிழிய தான் செய்யும்.. சோ மூணு பக்கமும் சேம் டைம் எஃபோர்ட் போட்டா தான யாரு.. உங்கள இம்ப்ரஸ் பண்றான்னு தெரியும்” என்றதை கேட்டு இடை புகுந்த தேவிபிரியா “இதுக்கு என்கிட்ட ஒரு வழியிருக்கு..”

“என்னக்கா வழி”

“உன் பங்ஷன்ல பாரு.. அக்கா விளையாட்ட” என்று பொடி வைத்து பேசியவளை முறைத்த ஶ்ரீநிதி “சரி அது போகட்டும்.. இப்போ நீங்க வந்து புடவை செலக்ட் பண்ணி கொடுக்கணும்.. அத தான் பங்ஷன்ல கட்டிப்பேன் வாங்க மாமா” என்று அவனை பிடித்து சென்று அமர வைத்தவள்,

அவன் தேர்ந்தெடுக்கும் அழகை ரசித்து கொண்டிருந்தாள்.

அதாவது பிரசன்னாவை வெறுப்பேற்ற வேண்டுமென்றே தேவாவை ரசிப்பது போல் நடித்து வைத்தாள்.

இதற்கிடையில் அவன் சில நிமிடம் நின்றதின் விளைவால் ஆடவனின் காலில் வலி ஏற்பட்டு உடல் சோர்ந்து விட, அதனை கண்டு கொண்ட சம்யுக்தா அவனுக்காக குளிர்பானம் வாங்கி கொடுத்தோடு அவன் சின்னதாக முகம் சுறுக்கினாலும் “ஆர் யூ ஓகே” என்று பலமுறை கேட்டப்படி விழுந்து விழுந்து கவனித்தாள்.

ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த பிரசன்னாவிற்கு அவளின் கவனிப்பு வேற கூடுதல் எரிச்சல் படுத்த ‘ச்ச எல்லாம் அவன்கிட்ட விழுகுதுங்க.. நல்லாவே மயக்கி வைக்குறான்’ என்று அவனை திட்டியவண்ணமே அமர்ந்திருந்தான்.

இவனோடு அவளின் கவனிப்பை கண்ட விஷ்வநாதன் மற்றும் குருமூர்த்தியின் முகம் தேவாவின் மேலே வெறுப்பை தத்தெடுத்தது.

சிறியவர்களின் சேட்டை மற்றவர்களின் கண்ணில் பட்டாலும் எது நிரந்தரம் என்று தெரியததால் கண்டும் காணாதது போல் வந்த வேலையை பார்த்தார்கள்.

பின் ஒரு புடவையை தேர்ந்தெடுத்த தேவா “இது உனக்கு நல்ல இருக்கும் ஶ்ரீகுட்டி” என்று அவளிடம் கொடுக்க, தன் மேல் வைத்து காட்டியவள் “எப்படிருக்கு மாமா”

“நல்லாருக்கடா” என்க, அதில் புன்னகைத்த ஶ்ரீநிதி அனைவரிடமும் கேட்டு திருப்தியடைந்த பின்னே அதனை எடுத்திருந்தாள்.

இதில் கேலி என்னவென்றால், சில நிமிடத்திற்கு முன் பிரசன்னா தேர்ந்தெடுத்த புடவையை தான் தேவாவும் அவளுக்காக தேர்ந்தெடுத்திருந்தான்.

ஆனால் அப்போது கண்டுகொள்ளாதவள், இப்போது அதை வைத்து பார்த்து முகம் கொள்ளா புன்னகையில் இருப்பதை காண பொறுக்காத பிரசன்னா ‘இத தான நானும் சொன்னேன்டி’ என்று குற்றம் சாட்டும் பார்வையை தான் ஶ்ரீநிதியை பார்த்திருக்க,

அப்புடவையை தெரிந்து எடுத்து கொடுத்தானா இல்லை இயற்கையாக நடந்த நிகழ்வா என்னும் உண்மையை தேவா மட்டுமே அறிவான்.

பின் இரு பெருசுகளின் பார்வையை கண்டு, மேலும் அவர்களை எரிச்சல் படுத்தும் விதமாக சம்யுக்தா “அப்படியே எனக்கு ஒரு புடவை செலக்ட் பண்ணி தருறது” என்றதை கேட்டு தேவிபிரியாவும் “அப்போ எனக்கு மாமா” என்றாள்.

அதில் கடியாகிய விக்கி “உனக்கு தான் நான் செலக்ட் பண்ணி தந்தேன்ல அதுவே போதும்” என்றுவிட்டு “நீ வாழுறடா” என்று சகோதரனின் காதில் பொறாமையில் முனுமுனுத்து வைக்க,

தலைகோதி சிரித்த தேவாவும் அவனை பார்த்து கண்ணடித்துவிட்டு தன்னவளுக்காக அழகான புடவையை தேர்ந்தெடுத்து கொடுத்தான்.

சிறியவர்கள் தங்களுக்கானதை எடுத்து முடித்தும் கூட பெரியவர்கள் முடிக்காததில் ஶ்ரீநிதி “அய்யோ போர் அடிக்குது.. இதுங்க ஒரு கடைய ஒன்னா புரட்டி போட்டாலும் கூட இன்னைக்குள்ள செலக்ட் பண்ண மாட்டாங்க போல” என்க,

அதனை ஏற்று கொண்ட தேவிபிரியா “அது என்னவோ உண்மை தான்.. வாங்களேன் பக்கத்துல பார்க் இருக்கு.. அங்கேயே ஸ்நாக்ஸ் ஐஸ் கிரீம் ஜுஸ்லாம் கிடைக்கும்.. எல்லாரும் போய் அப்படிக்கா விசிட் போடலாம்” என்றவர்களை தடுத்த சம்யுக்தா “ஒன்னும் வேண்டாம்.. அவனுக்கு காலுல அடிப்பட்டிருக்குறது உங்களுக்கு கண்ணுக்கு தெரியலையா”

“அம்மாடி குலவிளக்கே.. அங்க போனதும் உன் மாமன மண்ணுல நடக்க விடாம உக்கார வச்சிடலாம்.. பிளீஸ்டி பங்கு போர் அடிக்குது” என்றதும் தேவா “சரி வாங்க.. எங்களுக்கு வேஷ்டி ஷர்ட் பாத்துட்டு போயிட்டு வரலாம்” என்றவன் இம்முறை ஶ்ரீநிதியின் கையை உரிமையாக பிடித்து கொண்டான்.

அதில் சம்யுக்தா ‘இவளும் நேரம் என்ன ஒட்டி உரசிட்டு.. இப்போ ஆள் கிடைக்கவும் உதாசீனம் படுத்துறான்.. என்கிட்ட வந்து தான் ஆகனும்’ என்று முணுமுணுத்து கொண்டே நடக்க, அதை மற்றவர்கள் கேட்டாலும் கேட்காது போல் நமுட்டு நகையுடன் ஆண்கள் பிரிவிற்கு சென்றனர்.

அவர்கள் மட்டுமில்லை தன் நிதியின் கையை அவன் பற்றியதும், அவர்கள் பின்னயே தான் பிரசன்னாவும் சென்றிருந்தான்.

இதில் அவர்கள் வந்த வேலையை முடித்துவிட்டு அருகேயிருந்த பூங்காவிற்கு செல்ல, அப்போதும் கூட அவர்களை மறைந்தவண்ணம் பிரசன்னா பின் தொடர, அதனை ரெண்டு ஜோடிகள் கண்கள் கண்டுகொண்டு தான் இருந்தது.

பின் தேவிபிரியா மற்றும் ஶ்ரீநிதியும் தீனி வாங்க வேண்டுமென்றதால் அவர்களை விக்கியுடன் அனுப்பி வைத்து தேவாவின் அருகே சற்று இடைவெளிவிட்டு அமர்ந்து கொண்டாள் சம்யுக்தா.

இவ்வேளையில் தான் இருவரையும் சில ரவுடி கும்பல் சுற்று போட்டிருக்க, ஒருவன் கத்தியை முதுகு பின்னே மறைத்தப்படி தேவாவை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

- துயர் தொடரும்..
 
Top Bottom