அத்தியாயம் 24
காந்த கண்கள் குளம் கட்டி நிற்க, இதழ்கள் விரிந்து சிரிக்க, அந்த கருப்பு வெள்ளை மானிட்டரையே விழி அசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வாகீஷன்.
தன் உயிரானவளின் மணி வயிற்றில், தன் உயிரணுவில் உருவான, குட்டி உயிர். பூந்தென்றல் தழுவி பூ மலர்வதைப் போல் அவன் மழலை அசைய, ஆறடி ஆண் மகன் நெஞ்சிலும் தாய்மை உற்றாக பொங்கியது.
உணர்ச்சி பிளம்பாக உருகி நிற்கும் தன்னவனை தான் ரசனையாக பார்த்திருந்தாள் நிராளினி. இன்று ஏழாம் மாதத்திற்கான மாதாந்திர பரிசோதனை என்றதும் வாகீஷனை அழைத்து வந்துவிட்டாள்.
முதல் முறை தன் மகவை பார்த்தவன் பரவசத்தை வார்த்தையால் விவரிக்க முடியாது. அதிலும் குழந்தையின் இதயத்துடிப்பை கேட்டவன் கண்களில் இருந்து துட், துட் என்ற ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒவ்வொரு துளி கண்ணீர் கன்னம் தாண்டியது.
மருத்துவரிடம் முதல் குழந்தையின் தந்தைக்கான எதிர்பார்ப்புகளுடன் தனக்கு இருக்கும் சந்தேகங்கள் எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொண்டான்.
மருத்துவமனையை விட்டு வெளியேறி நிராளியை வீட்டில் விட்டு விட்டு, தன் அறைக்கு வந்தும் கூட பரவச நிலை குறைந்த பாடில்லை.
அதையும் தாண்டி ஸ்கேன் பண்ணும் போது பார்த்த அவன் தங்கத்தாரகையின் பவளம் போல் மினுமினுத்த மேடிட்ட வயிறு கண்ணுக்குளேயே இருந்தது.
ஒரு தடவை சரி தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆசை பேயாய் போட்டு ஆட்டியது.
எப்போதும் போல் நிராளினியிடம் ஃபோனில் உரையாடினாலும், அழைப்பை துண்டிக்கும் நேரம் அமைதியாக இருப்பான். ஏக்கமா தொண்டையில் சிக்கிய வார்த்தைகளை சொல்ல முடியாமல் தவிப்பான்.
அவளுக்கும் அவன் தவிப்பு புரிந்தது. ஆனால் என்னவென்று தெரியவில்லை.
அப்படித்தான் இப்போதும் வெகு நேரம் இருவரும் பேசிவிட்டு வைக்கும் நேரம் அவனிடம் அமைதி.
அவனுக்கு இருக்கும் ஏக்கம் போல அவளுள்ளும் ஒரு குட்டி ஆசை ஒழிந்து இருக்க, தயக்கமாக கேட்க ஆரம்பித்தாள்.
"நீங்க எப்ப ஊருக்கு போவீங்க?..."
"ஏன் இங்கேயே இருந்து உன்ன கரைசல் பண்றேனா..."
"ஐயோ அப்டி இல்ல.. மாமி மச்சாள பாக்க போகலயான்னு கேட்டேன்..." என்று அவள் சொல்ல
"ஊருக்கு போனா அம்மாவும் கூட வரணும்னு சொல்லுவாங்க.. நீ புள்ளதாச்சி என்டதுல இருந்து பாக்கணும்னு ஒரே கரைசல்..."
"ஓ.. ஊரிலேயே இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் இல்ல.. இது ஏழாம் மாசம் புள்ள கொழுக்கட்ட மாமி மச்சாள் தான் செஞ்சி தரணும்..." என்று நிராளினி தன் ஏக்கத்தை சொல்ல
'ஏன் அத்தான் செஞ்சு தந்தா ஆகாதா...' என்று மனதில் நினைத்தவன்
"ம்ம்..." என்றானே ஒழிய வேறு எதுவும் பேசவில்லை.
அவளும், தான் தானே அவனையும் அவன் உணர்வுகளையும், உறவுகளையும் கட்டி போட்டு வைத்திருக்கிறோம் என்று நினைத்து அழைப்பை துண்டித்தாள்.
*****
அடுத்த நாள் காலை 10 மணி இருக்கும். ஜெயந்தியின் நம்பருக்கு வாகீஷன் எண்ணில் இருந்து அழைப்பு வர, 'என்ன பகல்ல எடுக்காரு...' என்று நினைத்த ஜெயந்தி
நல்லவேளை அவர் அக்கா இன்று வரவில்லை என்று நிம்மதியாக மகளிடம் கொண்டு சென்று ஃபோனை கொடுக்க,
அவளும் யோசனையாக அழைப்பை ஏற்க "வெளிய வா!..." என்று தான் எடுத்ததும் சொன்னான்.
"என்ன?..." என்று அவள் கேட்க
"வெளியே வாடா!..." என்றான் அழுத்தி, அவளும் வெளியே வர, காரில் சாய்ந்து நின்றிருந்தான்.
அவளுக்கு பிடித்த கருப்பு சிகப்பு கட்டம் போட்ட சட்டையில், அசரடிக்கும் ஆண்மையும், எப்போதும் அவன் உதட்டில் இருக்கும் மாந்தகாஷ புன்னகையுடன், கையில் ஹாட் பாக்ஸ் இருந்தது.
"உள்ள போய் திறந்து பார்..." என்றவன், காரில் இருந்து ஒரு பையன் எடுத்து கொடுக்க குதூகலமாக வாங்கிக் கொண்டாள்.
"இதுல இருக்கிற எல்லாத்தையும் ஒன்னா வச்சுட்டு எனக்கு கோல் எடு..." என்று சொன்னவன் காரில் ஏறிச் செல்ல
அவளும் வீட்டினுள் வந்தாள், முதலில் ஹாட் பாக்ஸை திறந்து பார்த்தவள் கண்கள் பூவாக மலர்ந்தது. அவள் ஆசையாக கேட்ட கொழுக்கட்டை கும்மென்று இருந்தது.
ஜெயந்தியும் அதை பார்த்தவர் "என்னடி புள்ள கொழுக்கட்டய உன்ட புருஷனனே கொண்டு வந்துட்டாரா?..." என்று கேட்டவர் ஒரு பெரிய தட்டு எடுத்து வர
அதில் கொழுக்கட்டையை நடுவில் எடுத்து வைத்தவள், பையை திறந்து பார்க்க அதில் ரவா லட்டு, தேன்குழல், பூந்தி, கற்கண்டு, பேரிச்சம்பழம், மாதுளம் பழம், மஸ்கட், பூசணிக்காய் அல்வா, எல்லாமும் இருக்க, கொழுக்கட்டையை சுற்றி அதை வைத்தவள் தன் மன்னவனுக்கு அழைத்தாள்.
அவள் அழைப்பிக்காக காத்திருந்தவன், அதை ஏற்று காதில் வைத்து "இப்போ சந்தோஷமா?.. சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லு எப்டி இருக்கு என்டு..." என்று சொல்ல
அவன் அன்பை நினைத்து நெஞ்சம் நெகிழ, அந்த கொழுக்கட்டையை விளிம்போடு பிரிக்க, உள்ளே குட்டி கொழுக்கட்டையும் இனிப்பும் இருந்தது. அதை பார்த்து முத்து சிந்தியதைப் போல் சிரித்தவள், கொஞ்சமாக எடுத்து ரசித்து ருசித்து சாப்பிட்டாள்.
"ம்ம்ம்... சட்டப்படி இருக்கு..." என்று சிலாகித்து சொல்ல, அவள் மகிழ்ச்சியில் அவன் மனம் நிறைந்தது.
இவர்களின் அன்பை பார்க்கும்போது நிரஞ்சன் சற்று தனித்து வந்தால் என்ன என்று தான் தோன்றியது ஜெயந்திக்கு. ஒற்றை மகள், அவளின் எந்த முக்கிய நிகழ்வுகளையும் நினைத்தது போல் செய்து, ஆசை தீர பார்க்க முடியவில்லை என்ற கவலை அவருக்கு.
ஜெயந்தியை விட அதிகப்படியான கவலைகளையும், மனதாங்கல்களையும் கொண்டிருந்தான் வாகீஷன்.
அவன் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடையாது என்று தெரியும், இருந்தும் தன்னவளின் பெற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டு, மனைவியை கூடவே வைத்துக் கொள்ள மனது துடித்தாலும், நிராளினி சொல்லுக்கு கட்டுப்பட்டு பொறுமை காக்கின்றான்.
அவன் பொறுமை அணையை உடைக்கும் நாள் என்றோ.
ஒரு வாரம் கழிந்து இருக்கும் மணி நள்ளிரவு இரண்டு, நிராளினியிடம் இருந்து வாகீஷனுக்கு அழைப்பு வர, தூக்கத்தில் இருந்தவன் பதறி அடித்துக் கொண்டு அழைப்பை ஏற்று "நிரா!.. என்னடா.. என்னாச்சு?.. உனக்கு ஒன்டும் இல்லையே...?" என்று பதற்றமாக கேட்க
நேரம் கெட்ட நேரம் அழைத்து கணவனை கலவரப்படுத்தி விட்டோமே என்று தன்னையே கடிந்து கொண்டவள் "அத்தான் பதறாதீங்க.. நான் நல்லா இருக்கேன்.. நித்திர வரல அதான் கோல் எடுத்தேன்..." என்று சொல்ல
தன் மலரானவள் நன்றாக இருப்பதில் நிம்மதி என்றால், அவள் அத்தான் என்றதில் ஆனந்த திகைப்பு மன்னவனிடம்.
அவள் எப்போதோ மோன மயக்கத்தில் அழைத்தாள். இவன் தான் கிரகிக்க தவறிவிட்டான். இப்போதும் மயக்கத்தில் தான் அழைக்கின்றாள். காதல் மயக்கம், கணவனின் அருகாமையை, அன்பை தேடியது காரிகையின் உள்ளம்.
"ஏன் நித்திர வரல.. என்ன செய்து...?" என்று அவள் எதிர்பார்த்து அன்போடு அவன் கேட்க
"வயித்துக்குள்ள உங்க புள்ள உருண்டுட்டே இருக்கான்.. நித்திர கொள்ள ஏலல..." என்று சொல்ல
வாகீஷன் முகம் பூவாக மலர்ந்து, இதழ் தானாக விரிந்தது. அத்தனை பரவசம் அவன் முகத்தில்.
"புள்ள உதைக்கிறது தெரியுதா?..." என்று ஏக்கமாக... ஆசையாக... தவிப்பாக... கேட்க
அப்போதுதான் நிராளினிக்கு மின்னல் வெட்டியது, குழந்தை அசைய துவங்கியதை அவனிடம் கூறியதிலிருந்து தான், அவன் பார்வை அவளில் ஏக்கமாக படிவதை இப்போது உணர்ந்தாள்.
'ச்சே இந்த சின்ன சந்தோஷத்த கூட அவருக்கு கொடுக்கணும்னு தோணல பாரு...' என்று தன்னையே கடிந்து கொண்டவள்
"ம்ம்.. நல்லாவே தெரியுது அத்தான்..." மீண்டும் ஒரு கோடி பூக்களை தலையில் கொட்டிய சிலிர்ப்பு அவனிடம்.
"உங்க டீ குடிக்கணும் போல இருக்கு..." என்று நிராளினி சொல்ல
"அஞ்சு நிமிஷத்துல கதவ திற..." என்றவன் பாதி தூரம் வந்திருந்தான். தன் மகனை உணர வேண்டும் என்ற ஆசை அணையை உடைக்க காரை எடுத்துக் கொண்டு வந்து விட்டான்.
அவளும் ஐந்து நிமிடங்களில் கதவை திறக்க, கண் முன் அவள் கந்தர்வன். அவன் பார்வையோ அவள் மேடிட்ட வயிற்றில்.
அது என்னவோ இத்தனை நேரம் உற்சாகமாக இருந்த அவர்கள் மகன் அமைதியாகிவிட்டான்.
மகனை தொட்டுப் பார்க்க தவிப்பாக இருந்தாலும், முதலில் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு "கிச்சன் எங்க?..." என்று வாகீஷன் கேட்க
அவளும் அவனை அழைத்துக் கொண்டு செல்ல "மாமி நித்திரையா?..." என்று கேட்டுக் கொண்டே நிராளினி எடுத்துக் கொடுத்த பொருட்களை வைத்து டீயை தயாரிக்க
"ம்ம் டேப்லெட் போட்டு படுத்தா இனி காலையில தான் எழும்புவாங்க..." என்றவளை அழைத்து வந்து டைனிங் டேபிளில் அமர வைத்தவன், தான் தயாரித்த அவளுக்கு பிடித்த நெஸ்கஃபே டீயை கொடுக்க,
அதன் வாசனையை ஆழ்ந்து சுவாசித்தவள் "கடைசியா நீங்க போட்டு தந்து குடிச்சது தான்.. இன்டைக்கு ஆசையா இருந்துச்சு..." என்று சொல்லி டீயை பருக அவன் அவளை பருகிக் கொண்டிருந்தான்.
பார்வை அவள் வயிற்றில் தான் இருந்தது. அவள் டீ குடித்து முடித்த கப்பைக்கு கீழே வைத்த மறுநொடி "நிரா நான் தொடட்டுமா?..." என்றான் ஆர்வமாக, பார்வை இம்மியும் வயிற்றை விட்டு விலகவில்லை.
அவள்தான் மொட்டையாக எதைக் கேட்கின்றான் என்று முதலில் திணறி, பின் அவன் பார்வையை புரிந்து கொண்டு "கொஞ்சம் இருங்க அத்தான்.. தம்பி உதைக்கிறத நிறுத்திட்டான்.. இப்போ தானே டீ குடிச்சேன் கொஞ்ச நேரத்துல அசைவான்..." என்றவள் அதுவரை தன் கணவனின் ஆர்வம் தாங்காது என்று எண்ணி எழுந்து நடந்தாள்.
அவனும் இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை "இப்ப தொடவா?..."
"அசைஞ்சானா?..." என்று கேட்டுக் கொண்டே இருந்தான்.
சிறிது நேரத்தில் கூடவே சேர்ந்து நடந்து கொண்டிருந்தவனின் கையை பிடித்து தன் வயிற்றில் வைத்தாள்.
அவ்வளவுதான் வெளிப்படையாக ஆடவன் உடலில் ஒரு அதிர்வு. கண்கள் விரித்து, முகம் பிரகாசிக்க, தன் கையை பெண்ணவள் வயிற்றில் அழுத்திப் பதித்து, தன் தங்க மகனின் ஸ்பரிசத்தை உணர்ந்தான்.
ஆழ்ந்து உணர்ந்தான்...
பூரித்து ரசித்தான்... குட்டி கண்ணனும் தகப்பனின் தொடுகையை உணர்ந்தது போல், அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்று உருண்டு விளையாட
மண்டியிட்டு அமர்ந்தவன் இரண்டு கைகளையும் தன்னவள் வயிற்றில் வைத்து, தன் குழந்தைக்கு ஏற்றது போல் கையை நகர்த்தி உணர்ந்து கொண்டிருந்தான்.
"குட்டி அப்பாடா!.. அப்பா கதைக்கிறது கேக்குதா?..." என்று குழந்தையிடம் வாகீஷன் பேச, நிராளினி உள்ளம் நெகிழ்ந்து அவனை பார்த்திருந்தாள்.
"அம்மாவ கரைச்சல் படுத்தாம சமத்து குட்டியா இருக்கணும்.. அப்பாக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்..." என்றவன் விழியுயர்த்தி தன் நிலவானவளையும் பார்க்க, அவளும் அவனை பார்த்திருக்க,
ஊற்றாய் பெருகிய உணர்ச்சி வெள்ளத்தில், உற்றவளுக்குள் இருக்கும் தன் உயிருக்கு முதல் முத்தத்தை வைத்தான்.
அதை சற்றும் எதிர்பார்க்காத நிராளினி உடல் சிலிர்த்து அடங்கியது. ஆடவனும் அதை உணர்ந்தான். வயிற்றில் இருந்த அவன் கை இரண்டும் நகர்ந்து அவள் இடையை பிடித்துக் கொள்ள, மீண்டும் மீண்டும் முத்தமிட்டான்.
இத்தனை நாட்கள் வழங்காத அன்பையும் முத்தங்களையும் ஒரேடியாக கொடுத்து விடும் எண்ணம் போலும், பேழை வயிற்றில் சுற்றி சுற்றி எல்லா இடமும் அழுத்தி முத்தம் வைக்க,
நின்று இருந்த பெண்ணவள் தன்னவன் தலையை பிடித்துக் கொண்டாள். அந்த காதல் கிறுக்கன் தான் முத்தம் வைக்க துவங்கினால் நிறுத்த மாட்டானே "அத்தான் போதும்..." என்று நிராளினி தான் அவனை கட்டுப்படுத்தினாள்.
அவள் கூறியதும் எழுந்து நின்றவன், தன்னையும் அறியாமல் தன் கண்ணில் வழிந்த நீரை தோள்பட்டையால் துடைத்துக் கொள்ள, அப்போதுதான் அவளுக்குமே கணவன் உணர்ச்சியின் படியில் கலங்கியது தெரிந்தது.
தன்னை சற்று நிதானப்படுத்திக் கொண்ட பின்னர் தான் வாகீஷனுக்கு ஒன்று உறுத்தியது. அவளின் அனுமதி கேட்காமல் முத்தம் கொடுத்தது, அது அவன் பிள்ளைக்கு என்றாலும் அவள் மணி வயிறு அல்லவா.
எனவே அவள் முகம் பார்க்காமல் "தேங்க்ஸ் நிரா!.. நீ போய் பாடு.. நான் போறேன்..." என்றவன் கதவை நோக்கி இரண்டு அடி சென்று, பின் வேகமாக திரும்பியவன் தன்னவள் கன்னங்கள் இரண்டையும், தன் இரு கைகளில் தாங்கி, மின்னல் வேகத்தில் அவள் இதழ்களைக் கவ்விக் கொண்டான்.
என்னவென்று உணரும் முன் நடந்த இதழ் முற்றுகையால் முதலில் திகைத்து, பின் உடல் சிலிர்த்து, இதமாக இமைகளை மூடி கொண்டாள் பெண்ணவள்.
அவளும் அதைத்தானே எதிர்பார்த்தாள். அது என்ன அவன் பிள்ளைக்கு மட்டும் முத்தம், எனக்கு இல்லையா என்று ஏங்கி, அவனை அழைக்கும் முன் அவனே அதிரடியாக இதழ்களை அணைத்துக் கொண்டான்.
இருவரின் ஏக்கமாக...
தாபமாக...
தவிப்பாக... நீண்டது இதழ் சங்கமம்.
முதல் இதழ் முத்தத்தை இருவரும் எப்படி உணர்ந்தனர் என்பது நினைவில்லை. இந்த முத்தம் இருவர் இதயத்தையும் ஒற்றை முத்தத்தில் இணைத்து இதத்தை கூட்டியது.
ஆடவனோ இன்னும் இன்னும் என்று இதழ் தேனை இழுத்து உறிஞ்ச, பெண்ணவளும் தன்னவனுக்கு தோதாக தளர்ந்து நின்றாள்.
முத்தமிட்டு இதழை பிரித்தவன், அவள் நெற்றியோடு தன் நெற்றியை முட்டி "சொரிடா!.. எப்பவுமே என்ட அன்பையும் ஆசைகளையும் உன்னுட்ட திணிக்கிறேன்.. நீயினு வந்துட்டா நான் சரியே இல்ல.. சொரி டா, இனி இப்டி நடக்காது..." என்றவன் அவளை விட்டு விலகி விறுவிறுவென வெளியேறி விட்டான்.
"என்னடா குட்டி உன்ட அப்பா கதைச்சுட்டு போறாரு.. என்ட மேல எல்லாத்தையும் திணிக்கிறாரா.. நான் விரும்பி தான் ஏத்துகிறேன்னு அவருக்கு ஏன் புரியல.. ஓஹோ உன்ட அப்பாவுக்கு வாய திறந்து ஐ லவ் யூன்னு சொன்னா தான் புரியும் போல கண்ணா.. அதெல்லாம் வாய திறந்து சொல்ல ஏலாது.. அவராவே புரிஞ்சுக்கட்டும்..." என்று தன் மகனிடம் பேசியவள்
தன் மன்னவனுக்கு தன் மனதை தீர்க்கமாக புரிய வைக்க, ஒரு திட்டத்தை போட்டுக் கொண்டு சென்று படுத்தாள்.
தூக்கம் வரவில்லை, தன் வயிற்றில் அவன் வாரி வழங்கிய முத்தங்கள், அதிலும் அவன் இதழ் முத்தம், அவன் இதழ்கள் இன்னமும் தன் இதழில் ஊர்வது போலவும், அவன் எச்சில் தன் நாவில் இன்னமும் ருசிப்பது போலவும் இருக்க, உதட்டை வருடி பார்த்தவள் அவனுக்கு (அறைக்கு போயிட்டீங்களா?) என்று குறுஞ்செய்தியை அனுப்ப
அவனுமே அறையில் விட்டத்தை பார்த்தபடி, கடந்த இதமான தருணங்களை மீட்டு, ரசித்துக் கொண்டிருந்தாலும் அவள் என்ன நினைக்கின்றாள் என்று புரியாமல் மனம் சற்று குழம்பித் தவிக்க தூங்க முடியாமல் விழித்து கிடந்தான்.
குறுஞ்செய்தி வந்த ஒலியை கேட்டு ஃபோனை எடுத்து பார்த்தவன் (ம்ம் வந்துட்டேன்) என்று பதில் அனுப்ப
(நாளைக்கு கோயிலுக்கு போகணும், வந்து கூட்டிட்டு போங்க) என்று அவள் அனுப்ப
வாகீஷன் (ம்ம் சரி.. நாளைக்கு முழுகிட்டு தலைய நல்லா துடைச்சிக்க) என்று அனுப்ப
பெண்ணவளுள் அத்தனை பெருமிதம் இதோ இது தான் அவளவன் , அவளை... அவளை பற்றிய விஷயங்களை தவிர்த்து அவன் எதையும் சிந்தித்து இல்லை.
ஆத்மார்த்தமான புன்னகையுடன் (சரி குட் நைட்) என்று அனுப்பியவள் தூங்க ஆரம்பித்தாள்.
வாகீஷனுக்கு என்ன யோசனை இருந்தால் என்ன, தன்னவள் ஸ்பரிசமும் தன் பிள்ளையின் ஸ்பரிசமும் கிடைத்த இதத்தை மீட்டு பார்த்துக் கொண்டே தூங்கினான்.
அடுத்த நாள் விடிந்ததும் காரை எடுத்துக் கொண்டு வந்து விட்டான். நிராளினியும் தனக்கு பிடித்த சிகப்பு நிறத்தில் வெள்ளை பொட்டு வைத்தது போன்ற டிசைனில் உள்ள கவுன் அணிந்து தயாராகி வந்தாள்.
எப்போதும் போல் தன் மனம் கொய்தவளை ஆசையாக கண்களால் அள்ளிப் பருகியவன், அவளை அழைத்துக்கொண்டு கோயில் வந்திருந்தான்.
இருவரும் எதுவும் பேசாமல் கடவுளை வணங்கி முடிய, சன்னிதானம் முன்பு நின்ற பெண்ணவள் "உங்க கையில இருக்கிற கயிற கழட்டி தாங்க..." என்று கேட்க
வாகீஷனுக்கு தூக்கி வாரி போட்டது. 'சரிதான்..கோபத்துல இருக்கா போல.. என்ட நினைவு சின்னமாக எதுவும் உன்னுட்ட இருக்க வேணாம்னு நினைச்சு கயிற கழட்ட சொல்றாள் போல.. அத்தான்னு வேற கூப்பிலயே கண்டிப்பாக கோபம் தான்...' என்று நினைத்தவன் மனம் வலித்தது.
அதிலும் கயிற்றை கழட்ட மனமே இல்லை. "நிரா.. அது..." அவன் அவளை சமாதானம் செய்ய எடுக்க
"கழட்ட சொன்னேன்..." என்றாள் காரராக
அவள் சொல்லி கேட்காமல் போவானா, மூச்சை இழுத்து விட்டவன் கனத்த மனதுடன் கயிற்றை கழட்ட, அதை வாங்கியவள் அங்கிருந்த குப்பை கூடையில் போட, விழிகளை மூடி திறந்து தன் உணர்வுகளை மறைத்தான்.
அவனையே பார்த்துக் கொண்டு நெருங்கியவள், அவன் கையைப் பிடித்து, தன் கைக்குள் பொத்தி வைத்திருந்த சிகப்பு நிற கயிற்றை எடுத்து கட்டி விட, விழிகளை விரித்து ஆச்சரியமாக குதூகலத்துடன் அவளை பார்த்திருந்தான் வாகீஷன்.
சந்தோஷமா, பரவசமா, நெகிழ்வா, உற்சாகமா, பூரிப்பா, எது என்று பிரித்தறிய முடியாத பாவனைகள் அவன் முகத்தில், அவன் அவளுக்கு தாலி போடும் போது என்ன உணர்ந்தானோ அதே உணர்வு.
கயிற்றை கட்டி விட்ட நிராளினி தன் கழுத்தில் இருந்த கருப்பு கயிற்றை கழட்டி எடுக்க, அதில் அவன் முதல் காதல் பரிசான மோதிரம்.
விழிகள் மேலும் விரிந்து கொள்ள, "இ..இது.. இது எப்டி?..." என்று ஆனந்த திகைப்புடன் கேட்டான்.
அவளை பிரிந்து பரிதவித்ததைப் போன்று, தொலைந்து போன அந்த மோதிரத்தை தேடி அலைந்து, மீண்டும் போலீஸ் நிலையம் வரை சென்று திட்டு வாங்கி வந்தது அவனுக்கு தானே தெரியும்.
அதற்கு முன்பே அவன் அறியாமல் அவள் கைப்பற்றியது அவனுக்கு தெரியவில்லை.
அந்த கயிற்றில் இருந்த மோதிரத்தை கழட்டி எடுத்தவள் அவனிடம் நீட்டி "ம்ம்.. போட்டு விடுங்க..." என்று சொல்ல, மேலும் மேலும் இன்ப அதிர்ச்சியை தாங்க முடியாமல் கண்கள் இரண்டும் கலங்கும் போல் இருந்தது.
எதைப்பற்றியும் கேட்காமல் இன்பமான இதமான மலநிலையில் காதலாக... ஆசையாக... மகிழ்ச்சியாக... அவள் தளிர் விரலில் அந்த மோதிரத்தை போட்டு விட்டான்.
பெண்ணளுக்குள் அவன் தாலி போட்ட போது வராத புதுவித சிலிர்ப்பு உடல் நெகிழ்ந்து இதயம் உருகியது காதலால்.
அவன் கயிறு கட்டிய கையின் அருகே, தன் மோதிரம் இருந்த கையை வைத்து "இதவிட நம்ம காதல சொல்ல வேற எதுவும் தேவையா அத்தான்.. நீங்க சொன்ன மாதிரி உங்கட காதல என்ட மேல நீங்க திணிக்கல.. நானா விரும்பி ஏத்துக்கிட்டேன்.. திணிக்கப்பட்ட நேசமா இருந்திருந்தா உங்க கூட இருந்திருப்பேன் ஆனா வாழ்ந்து இருக்க மாட்டேன்.. உங்கள உங்கட காதல ஏத்துக்கிட்டதுக்கு அடையாளம் தான் நம்ம மகன்.. நீங்க அன்டைக்கு சொன்னீங்க என்ட உணர்வுகள புரிஞ்சுக்க, என்ட கண்ணுல தெரிஞ்சுக்கனு.. என்ட உணர்வுகள் உங்களுக்கு புரியலையா அத்தான்.. நீங்க என்ட மனசுல ஆழமா முழுசா இருக்கீங்க..." என்று தன் மனதை அழுத்தம் திருத்தமாக பெண்ணவள் சொல்ல
திக்கு முக்காடி போனான் அந்த காதல் அரக்கன். அக்கணமே அவளை அள்ளி அணைக்க கைகள் பரபரத்தாலும், கோயில் என்பதால் அவள் கைகள் இரண்டையும் எடுத்து தன் நெஞ்சில் வைத்துக் கொண்டான்.
"அப்போ முழு மனசா நீ என்ன விரும்புறியாடா?..." என்று கேட்க
"மக்கு அத்தான்!.. ஐ லவ் யூ ன்னு சொன்னா தான் நம்புவீங்களா.. சரி.. லவ் யூ அத்தான்..." என்று தேன் இதழ்கள் அசைத்து கண்ணில் காதலை தேக்கி பெண்ணவள் சொல்ல
கண்ணில் தங்கி இருந்த ஆடவன் கண்ணீர் கன்னம் தொட்டது.
இந்த நொடி இப்படியே உறைந்து விடாதா...
இந்த நொடியே அவளுள் கரைந்து விட மாட்டேனா... என்று ஆர்ப்பரித்தது அவன் காதல் மனது.
தன் பூங்காத்தால் தன்னவன் கண்ணீரை துடைத்து விட்டவள் "இந்த முற எப்டியாவது அண்ணாட்ட கதைச்சிடுவேன்.. அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இருங்க..." என்று சொல்ல
"இல்ல.. உன்ட அண்ணா வந்ததும் எனக்கு சொல்லு நான் வந்து கதைக்கேன்.. அது தான் சரியா வரும்..." என்று சொல்ல
அவளுக்கும் ஒருவேளை வாகீஷன் பேசினால் சரியாக வரலாம் என்று தோன்ற, சரி என்றாள். தன் பிரியமானவள் மனம் தெரிந்த பின்னர் அவளை விட்டு பிரிந்து இருக்க அவன் என்ன பைத்தியமா, தன் மச்சானுக்காக காத்திருந்தான்.