அத்தியாயம்: 10
"எப்ப ரிட்டன்?"
"நாளைக்கு ஈவ்னிங் ஆகும் எண்டு மமதி சொன்னா."
"உன்னோட ஃப்ரெண்ட்ஸ் இன்னேரம் வந்திருப்பாங்களா?"
"ஓம்... மெசேஜ் வந்திட்டு. சித்ரா ஆன் தி வே. மிரு ஓபீஸ் ரீச் ஆகிட்டா." என்க, தலையசைத்த கரிகாலனுக்கு எதுவோ போல் இருந்தது.
"வானு..."
"ஓம் அண்ணா."
"டேக் கேர்."
"ம்..."
"எல்லாரும் நியூயர் நைட்னு ஆட்டம் போடுவாங்க. நீ..."
"கண்டிப்பா கவனமா இருப்பன்." என்றதும் சிரிப்பு வந்தது அவளுக்கு.
கல்லூரி காலத்தில் தான் வானதி முதல்முதலில் சுற்றுல்லாவிற்கெனத் தனியாகச்சென்றாள். செந்தூர் தான் அனுப்பி வைத்தார், இரண்டு நாள்கள், பெங்களூர். அதன்பின் எங்கும் சென்றதில்லை. செல்லும் மனநிலையிலும் இல்லை. இப்பொழுது பிறக்கவிருக்கும் புது ஆண்டைக் கொண்டாட அலுவலகம் ஏற்பாடுசெய்திருந்தனர்.
பாண்டிச்சேரி ரெசாட்டில் இரு பகல், ஓர் இரவு தங்க உள்ளனர்.
நியூயர் என்றாலே விடிய விடிய ஆட்டம் போடுவர். இதில் பாண்டிச்சேரி என்றால் கேட்கவா வேண்டும்.
மது இல்லாது எதுவும் நடக்காது அங்கு. பார்ட்டி என்ற பெயரில் குறைவில்லாது குவளைகள் நிரப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். எதைச் சாதித்து விட்டோம் என்று தெரியாது, கொட்டாரம் அடிக்கும் அந்தக் கூட்டத்தில் தன் தங்கையும் சேர்ந்த ஆடப்போகிறாளா!
அதுபோன்ற டூர் தேவையா? என்ற கரிகாலன், செல்ல வேண்டாம் என்றான். வானதிக்கும் அதில் விரும்பமில்லை தான்.
ஆனால் சித்ராவும், மிருதுளாவும், வானதியைச் சரிக்கட்டி, "அண்ணா ப்ளீஸ் அண்ணா..." என்று கெஞ்சி கூட்டிச்செல்கின்றனர்.
அவனுக்கு வானதியின் பாதுகாப்பையும் தாண்டி எதுவோ நெருடியது. அதனால் பத்திரங்கள் பல சொல்லி அழைத்துச் செல்கிறான்.
அலுவலக வேன் அங்கு காத்திருக்க, மிருதுளா கையசைத்து வரவேற்றாள்.
"வாரன் காலாண்ணா..." என்று ஓடவிருந்தவளிடம், சில ஐநூறு ரூபாய்த் தாள்களைத் தினித்தான்.
"இவ்வளவும் எனக்கா!" என்று விழி விரித்தவளிடம்,
"ம்... உனக்குத் தான். வீட்டுக்கு வந்ததும் செலவு செஞ்ச பணத்துக்கு கணக்கு குடுக்கணும். மீதி காசையும் தான். எது வாங்குனாலும் பில் போட்டு வாங்கு." என்றவனை முறைத்தபடி சென்றாள்.
நிர்வாகம், வருடத்திற்கு ஒரு முறை இதுபோன்ற டூருக்கு அழைத்துச்செல்லுமாம். ஆதலால் பலர் பயபக்தியுடன் வேன்னின் படிக்கட்டைத் தொட்டுக் கும்பிட்டு ஏறிஅமர்ந்தனர்.
"வானு..." என்று அழைத்த மிருதுளா, மூவர் அமர ஏதுவாய் இடத்தைப் பிடித்துவைத்திருந்தாள்.
"மமதி மேம், ஆகாஷ் அண்ணா எங்க மிரு? ஏன் வண்டி காத்தாடுது? இன்னும் நிறைய ஆக்கள் வரணுமோ?" என்றபடி கொண்டுவந்த பையைத் தூக்கி மேலே வைத்தாள்.
"கிட்டத்தட்ட எல்லாரும் வந்திட்டாங்க. ஆபிஸ்க்குள்ள இருக்காங்க. மமதி மேமும் ஆகாஷ் சாரும் நேரா ரெசாட்டுக்கே வந்திடுவாங்களாம். அவங்களுக்கு மேரேஜ் ஆகப்போகுதுல. அதுனால இது ப்ரீ ஹனிமூன் ட்ரிப் அவங்களுக்கு." என்று கண்சிமிட்ட, சோர்ந்துபோய் இருக்கையில் அமர்ந்தாள் வானதி.
"ஆகாஷ் அண்ணா இருந்தார் எண்டா பகிடியாக் கதைச்சி நம்மட முகத்தில சிரிப்பைக் காட்டுவார். ஜெய் சாரையும் காணேல்ல. மத்தாள்கள் சைலண்ட் பேர்வழி. கதைக்க காசு கேக்கும் கூட்டம். இல்லையெண்டால் வழிஞ்சல் கேஸ்." என்று புலம்பியவளுக்கு அருள்மொழியும் வாராதிருப்பது கவலையைத் தந்தது.
தூரமாக இருந்தாலும் அவனின் உச்சுக்கொட்டும் இதழ்களையும், அலட்சியமாய் உருண்டோடும் விழிகளையும், அவளை மயக்கும் அவனின் ஆண்மை ததும்பும் குரலையும் நித்தமும் பருகியபடி இருப்பவளுக்கு, அந்த வாய்ப்பு புது ஆண்டின் தொடக்க நாளில் கிடைக்காது போய்விட்டது என்பது மனச்சோர்வைத் தந்தது.
ஆனால், அதற்கு நான் அனுமதியேன் என்பதுபோல் சித்ரா வந்துசேர, பயணம் கலகலக்கத் தொடங்கியது.
அது கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள விடுதி. அழகிய கட்டடம், வசீகரிக்கும் சுற்றம், நீச்சல்குளம், உணவகம், விளையாட்டுப் பூங்கா, மதுபானபார் உள்ளிட்ட சகல வசதிகளும் இருந்தன.
பல அலுவலகங்கள் தங்களின் பணியாளர்களை அழைத்து வந்திருந்தது போலும். கூட்டம் அதிகம் தான். எல்லா மொழி பேசும் மக்களையும் அந்த இடத்தில் பார்க்க முடிந்தது.
அவர்களின் நிறுவனம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தங்கிக்கொள்ள சில அறைகளை ஏற்பாடு செய்திருந்தது.
"கேர்ள்ஸ், பக்கத்துல நல்ல நல்ல வியூவ் பாய்ண்ட் இருக்கு. டிரைவர் கூட்டீட்டு போவாரு. விருப்பம் இருக்குறவங்க போய்ட்டு வாங்க. எங்க போனாலும் நைட் 8:30 க்கு பார்டி இருக்கு. வந்திடுங்க." என்றாள் ஒருத்தி.
சிலர் அறைக்குள்ளேயே முடங்கிவிட, சிலர் மசாஜ் செய்ய, பீச் பால் விளையாட, செல்வது, கடற்கரையில் கால் நனைக்க எனக் கலைந்துசென்றனர். கொண்டு வந்திருந்த பையை அறைக்குள் போட்டுவிட்டு, மூவரும் ஊரைச் சுற்றிப் பார்க்கச்சென்றனர்.
பிரெஞ்சுக் கலை நயத்தை ஊரின் ஒவ்வொரு இடுக்கிலும் காணமுடிந்தது. இந்தியாவில் இருக்கும் குட்டி France. அதன் அழகு ஒவ்வொன்றையும் தன் அலைபேசி கேமராவில் படமாக்கி, செல்ஃபி எடுத்து, சந்தோஷமாகச் சென்றன பொழுதுகள்.
வானம் நிறம் மாறி, இருள் கவிழத்தொடங்கியதும் கடற்கரையில் சில கட்டைகளை அடுக்கி தீ மூட்டி கேம்ப் ஃபயர் என்ற பெயரில் சுற்றி நின்று பாட்டுப் பாடியும், இசை வாத்தியங்கள் இசைத்தும் மகிழவென ஒரு கூட்டம் கூடி இருந்தது. இதில் வானதியும் ஒருத்தி. பாட்டுப் பாடி அவர்களின் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டாள்.
தூரத்தே, கடலில் மிதந்துகொண்டிருந்த சொகுசு கப்பலில் இரவு நேர உணவும், நியூயர் பார்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மணி, எட்டைத் தாண்டியதும், உல்லாசப் படகிற்குச் செல்ல சிறிய மோட்டார் படகு தயாராக தகவல் வந்தது. படகில் ஏறிக்கொண்டனர் பலர்.
"நான் வரல்ல. நீங்க வெளிக்கிடுங்க." என்ற வானதியை ஏன் என்று பார்க்க,
"நான் நித்திர கொள்ளப் போறன்."
"தூங்குறதுக்கா வந்த?" என்று சித்ரா இடையில் கைவைத்து மிரட்ட,
"என்ன செய்து வானு? நான் வேணும்னா கூட இருக்கவா?" என்று அக்கறையுடன் மிருதுளாவும் கேட்டாள். காரணம் வானதியின் முகம் பீதியில் இருப்பதுபோல் காணப்பட்டது.
"ஒண்டும் வேணாம். இவ்வளவு நேரம் கூப்பிட்டதில களைப்பா கிடக்கு உடம்பு. குளிச்சிட்டு படுத்தா நல்லம் எண்டு தோணுது."
"அப்ப நீ வர்லியா வானு." என்று சித்ரா சேகமாகக் கேட்க,
"எனக்கு பார்ட்டி ஆகாது எண்டு தெரியும் தானே சித்து. சாராய வாடையும், டம் டம் எண்ட இரைச்சலும்..." என்றாள் முகத்தை அஷ்டகோணலில் வைத்துக்கொண்டு.
"நான் நம்மட அறையில இருக்கன். விடியவும் வெளிக்கிட்டுவோம். இப்ப என்னப் பற்றி நினைக்காம என்ஜாய் செய்யுங்க." என்று சமாதானம் சொல்லி அனுப்பிவைத்தாள். அவளின் பார்வை கடலில் சர் சர் என்று வண்ண விளக்குகளின் அலங்காரத்தில் வேகமெடுத்து மிதந்துகொண்டிருந்த மோட்டார் படகுகளின் மீதுபடர்ந்தது.
எப்படிச் சாலையில் செல்லும் பெரிய லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்களைக் கண்டால் சிலருக்கு விவரிக்க இயலாத அச்சம் பிறக்குமோ! அதுபோல் வானதிக்கும் பயப்பந்து உருண்டது, மோட்டார் படகைக் காண்கையில். தன் அச்சத்தைத் தொண்டைக் குழிக்குள் விழுங்கியபடி நின்றாள். படகுத் துறையில் தோழிகளை வழியனுப்பி வைத்துவிட்டு வந்தவள், எரிந்து கொண்டிருந்த நெருப்பின் முன் அமர்ந்து விட்டாள்.
பார்ட்டி போன்ற கொண்டாட்டங்கள் பிடிக்காத சக ஊழியர்கள் சிலர் அங்கு இருக்க, வானதியும் அவர்களுடன் ஐக்கியமாகிக் கொண்டாள்.
சில் என்ற வாடைக்காற்று உடலை ஊடுறுவ, தணலுக்குப் பக்கத்திலிருப்பது கதகதப்பாய் இருந்தது. நட்சத்திரங்கள் வேறு கரிய வானில் வெள்ளைப் புள்ளி வைத்தார் போல் இருக்க, கால்களைக் கட்டிக்கொண்டு, கன்னத்தை அதில் புதைத்தவள், புள்ளிகளை இணைத்து உள்ளுக்குள் கோலமிட்டுக்கொண்டிருந்தாள்.
"வானதி!!" என்றது ஒரு குரல்.
"இங்க ஏன் தனியா உக்காந்திருக்க? நீ பார்ட்டிக்குப் போகலயா?" என்ற கேள்வியுடன் வந்தான் ஆகாஷ்.
தலைதூக்கி பார்த்தவளுக்கு, மமதி ஆகாஷின் கரத்தைக் கட்டிக்கொண்டு நிற்பது தெரிந்தது. அன்யோன்யமாக ஒருவர் இடையில் மற்றொருவர் கரம் கொடுத்து அணைவாய் இருக்க, இருவருக்கும் வாஞ்சையான ஒரு சிரிப்பைச் சிந்தியவள்,
"பார்ட்டி கொண்டாடும் மூடு இல்லண்ணா." என்றாள்.
"என்ஜாய் பண்ணத்தான வந்த வானு!" என்று கேட்டபடி அவளின் முன் மண்டியிட்டாள் மமதி.
"ஓம்..." என்றதும், அவளின் கரம்பற்றி,
"அப்ப வா போகலாம் வானு. நான் உங்கூடவே இருக்கேன்." என்று அவளைத் தங்களுடன் வரும்படி சொல்ல, அவள் மறுத்துக்கொண்டிருந்தாள். அப்பொழுது,
"அதான் வரலன்னு சொல்றாள! ஏன் கட்டாயப்படுத்திட்டு இருக்கிங்க மமதி. விட்டுட்டு வாங்க." என்ற அவசரக்குரல் கொடுத்த அருள்மொழி, வானதியின் முதுகிற்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தான்.
கழுத்தை மட்டும் வளைத்து, முறைப்புடன் வர்மாவை எதிர்கொண்டாள்.
கருப்பில் வெள்ளை கோடு போட்ட டீசர்ட்டில், சாயம் போனது போன்ற கருப்பு ஜீன்ஸ்ஸில் இருந்தவன், இரு கரத்தையும் கட்டிக்கொண்டு நின்றான். வானதிக்கு நிகரான உக்கிரப் பார்வை அவனின் விழிகளையும் ஆக்கிரமிப்பு செய்திருந்தது.
"Come on, Mamathi. Let’s go...” என்று வானதியைப் பார்த்தபடிச் சொல்லியவன், “without wasting time.” என ஆகாஷின் தோளில் கைவைத்து இழுத்துச்சென்றான்.
'நேர விரையாமா நான்!!' என்று பொங்கி எழுந்த வானதியின் ஆத்திரத்தை அறியாத மமதி, அவளையும் அழைத்துக் கொண்டு படகுத் துறைக்கு வந்தாள்.
முதல் ஆளாக வர்மா படகில் ஏறியிருந்தான். வசதியாய்ச் சாய்ந்து அமர்ந்து கொண்டவனின் பார்வை மட்டும் வானதியை வதைத்துக் கொண்டிருந்தது.
யாரும் அவனிடம் இப்படி நடந்துகொண்டதில்லை. அவனிடம் அப்படிப் பேச தைரியமும் இருந்ததில்லை. தைரியமே இருந்தாலும் முகத்திற்கு முன்னால் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார்கள். ஆனால் இவள் சொல்லிவிட்டாள். முதுகிற்குப் பின்னால் பேசுவதை முகத்தில் அறைந்தார்போல் உரைத்து விட்டாள். அந்தக் கோபம் அவனை முழுமையாக வியாபித்திருந்தது.
அன்று...
"உங்களட பேர் தான் அது. நான் வச்சன். மூஞ்சூறு காட்டான் எண்டு." என்று சொல்லிச் சென்றவள், அவனைக் காணும் பொழுதெல்லாம், காலை வணக்கத்துடன் காட்டானையும் சேத்து வைத்தாள் வார்த்தையில்.
மின்தூக்கியில் அவள் சொல்லும், "குட் மொர்னிங் காட்டான்." யாருக்கும் கேட்காதபடி, குரல் தணிந்து இருப்பது அவனுக்கு ஆறுதலாக இருந்தது.
இல்லையேல் இத்தனை ஆண்டுகளாக மெய்டன் செய்து வைத்திருந்த கெத்து என்னாவது?
வேலையில் எவ்வித குறையும் வைக்காது கச்சிதமாய்ச் செய்பவள், தன் சிறு சிறு செயல்கள் மூலம் அவனை டென்சனாக்காது இருந்ததில்லை.
அவன் தான் வரிசையாகச்செல்லும் எறும்பின் மனநிலை கொண்டவனாயிற்றே. மீட்டிங்கில் அவன் பேசுகையும் இடையூறு செய்து குழம்பி விட்டு, அவனின் திணறலை வேடிக்கை பார்ப்பாள்.
அனைத்தையும் விளையாட்டாய்ச் செய்கிறாள் என்று எடுத்துக்கொண்டவனுக்கு, அப்படி இல்லை! அவள் வேண்டுமென்றே செய்கிறாள் என்றது ஒரு நாள்.
அவனின் லைசன்ஸ்... பழைய லைசன்ஸ் இல்லை. புதிதாக வாங்கியது. அன்று அவனின் கேபினுக்குள் நுழைந்தவளின் கண்களில் மீண்டும் அவனின் வாலெட் பட, அதை நோண்டிப் பார்த்தவளுக்குப் புது ஓட்டுனர் உரிமம் பளபளத்தது.
"வடிவா இருக்கானே இந்தக் காட்டான்! இன்னும் வடிவாக்குவோம்." என்று அதையும் ஆட்டையைப் போட்டு விட்டுச்சென்றாள். அதைக் காணும் என்று தேடிய வர்மாவின் காட்டுக் கத்தல், தேவகானம் தான் அவளுக்கு.
கார்ட்டூன் கேரக்டராக அவனை மாற்றி வரைந்து வைத்து அழகு பார்த்திருந்தாள். அது அவளின் தோள் பையில் பத்திரமாகத்தான் இருந்தது. ஆனால் பணி முடிந்து கிளம்பும் அவசரத்தில் சிப் போடாது விட்டிருக்க, ஓடிவந்து எறிய மின் தூக்கியில் எகிறும் சமயம் குதித்திருந்தது. அதுவும் அவனின் காலடியில்.
அட்டையைக் கையில் எடுத்துப் பார்த்தவன், நெற்றையைச் சுருக்கி,
"What the hell is this?" என்று பற்களைக் கடிக்கும் போதே,
"என்ர பிழை இல்ல. ரெண்டு முறையும் நீங்க தான் பத்திரப்படுத்தாம விட்டது. நான் எடுத்து வச்சன். என்னிட்ட கண்ணை உருட்டி இங்லீஷ்ல கத்துற வேலையெல்லாம் வேணாம்." என்றாள் தைரியமாக.
"அப்ப இதுக்கு முன்னாடி காணாமப் போன லைசன்ஸ்ஸையும் நீ தான் திருடினியா?" ,
"ரெண்டாவதைத் திருடினன் தான். ஆனால் முதலாவது கிடைச்சது. அதைத் திருட்டு எண்டு சொல்ல ஏலாது."
"உங்கிட்ட கிடைச்சதுன்னு எங்கிட்ட கொடுத்திருக்கலாமே! ஏன் குடுக்கல? இப்படித்தான் இருந்ததா அது." என்று அவள் கலர் கொடுத்திருந்ததைச் சுட்டிக்காட்ட,
"மூஞ்சூறு இப்படித்தான் இருக்கும்." என்றவளை அவன் முறைக்க,
"சரியா வரைஞ்சிருக்கனா எண்டு பார்த்து சொல்லுங்க பாப்பம்!" என்றாள் நக்கலாக.
அவனுக்கு ஆயாசமாக வந்தது.
சிறுபிள்ளைத் தனத்துடன் இருக்கிறாள் என்று நினைத்ததற்கு மாறாக அவளின் முகத்தில் இருந்த எதுவோ ஒன்று உறுத்தி ஏன் என்ற காரணத்தைக் கேட்டறிய தூண்டியது.
“What’s wrong with you? ஏன் இப்படியெல்லாம் பண்ற?" எனத் தன்மையைக் கேட்டான். அவளும் தன்மையாகவே பதில் தந்தாள்.
ஆனால் அதை அவனால் ஏற்கத்தான் முடியவில்லை.
என்ன சொன்னாள் என்றால், “Because… I hate you. நான் உங்களை hate செய்றன்.” என்று தணிந்த குரலில் ரகசியமாய்ச் சொன்னப்போது லிஃப்டின் கதவு திறந்தது.
எரிமலை சீற்றத்திற்கு நிகராக ஆத்திரம் வந்தபோதும், வெளிக்காட்டவில்லை.
'இவள் யார் எனக்கு? இவளிடம் ஏன் என் கோபங்களைக் காண்பிக்க வேண்டும். இவள் என்னை hate செய்தாலும் செய்யவில்லை என்றாலும் எனக்கு எதுவும் கிடையாது.' என்ற வர்மா, அலட்சியமாக அப்படி ஒருத்தி இல்லவே இல்லை என்ற ரீதியில் கடந்துசெல்லத் தொடங்கினான்.
அன்றிலிருந்து அவள் மட்டும் முறைத்துக்கொண்டிருப்பது மாறி இவனும் அவளை நிமிர்ந்துபார்த்து முறைத்தான். இருவரும் கோபத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது, அலட்சியமாய்க் கடந்துசொல்வதும் நடந்தேறியது.
கடலில் சில மீட்டர் தூரத்திற்குப் போடப்பட்டிருந்த மரத்தாலானப் பாலம், வானதி எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் தாளம் தட்டிக்கொண்டிருந்தது. அதை ரசித்தானா அல்லது அவளை ரசித்தானா என்று தெரியாது. ஆனால், அவளின் மேல் படரவிட்ட விழிகள் பெண்ணவளை மட்டுமே கொடியாய்ச் சுற்றிக்கொண்டன. பேரழகி என்று உள்ளம் அவனிடம் சொன்ன போதும், அதை புறந்தள்ளி அவள் சொன்ன hate மட்டும் முன்னிருந்து அவளை அவதானிக்கத் தொடங்கியிருந்தான்.
பிரிக்க முடியாது பின்னிக் கிடந்த பார்வை, அவளுக்குள் பதட்டம் உண்டாக்கியுள்ளது என்றது.
அவளின் கருமணிகள் இங்கும் அங்கும் ஓட, மிரட்சியுடன் நடப்பது ஏன் என்று புரியாது பார்த்துக்கொண்டிருந்த நேரம், ஒரு கூட்டம் படகு ஏற வந்திருந்தது.
அவர்களுக்குப் பாதை விட்டு நின்றவள், எப்பொழுது விளிம்பிற்கு வந்தாள் என்று தெரியாது.
மமதியிடம், "நான் போறன்." என்று விட்டு திரும்பிச்சென்றாள்.
சட்டென Water Scooter ஒன்று இயக்கப்பட, அதன் சத்தத்தில் திடுக்கிட்டபடி தண்ணீரில் விழுந்தாள்.
தாமதிக்காது கடலுக்குள் பிரவேசித்த வர்மா அவளைக் காப்பாற்றி, மரப்பாலத்தில் கிடத்த, வானதிக்கு உடல் நடுங்கத்தொடங்கியது. தண்ணீரை அவள் முழுதாக குடிப்பதற்குள் வெளியே எடுத்து விட்டனர். ஆனாலும் மூச்சை இழுத்து இழுத்துவிட்டு, சுவாசிக்கச் சிரமப்பட்டாள். இமை சொருகுவதைக் கண்ட மூவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

Author: நிதனிபிரபு
Article Title: தேன் நாட்டு பைங்கிளி - 10
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.