அத்தியாயம்: 11
மொட்டென கிடந்த கருவிழிகள், மெல்ல அசைந்தாடி, பெண்ணவள் தொலைத்த உணர்வுகளை மீட்டுக்கொண்டிருந்தன.
கருந்திரையை விலகி, வெளிச்சக் கீற்றுக்களுக்கு அனுமதி தந்து பார்வையை மலரச்செய்தவள் பார்த்தது, மங்கிய வெளிச்சத்தில் கிடந்த அறையின் உத்திரத்தைத் தான். உடல் சில்லிட்டு கிடக்க, இந்த அறை தங்களுக்கென கொடுக்கப்பட்ட அறையல்ல என்றது மூளை.
மீண்டும் இமை மூடிக்கொண்டவள் மின்னலின் வேகத்தில் நினைவடுக்களுக்குள் பயணம் செய்தாள். அது அடுத்தடுத்து என்ன நடந்தது என்று ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துக்காட்டியது.
நீருக்குள் இருந்து வெளியே எடுத்துவரப்பட்டவளின் மூச்சு சீரற்று இழுக்க, கன்னத்தில் தட்டியதில் வந்துநின்றது நினைவுகள்.
"வானு... வானதி... கண்ணத்திற... நாங்க பேசுறது கேக்குதா! வானதி... வானு..." என்று பதறும் மமதியின் குரல் இப்பொழுதும் காதில் கேட்பதுபோல் இருந்தது.
"ஆகாஷ்! ஹோட்டல் ரிசப்சனுக்கு கால் பண்ணி மெடிக்கல் எமர்ஜென்சின்னு சொல்லு. உடனே டாக்டர அரேஜ் பண்ண முடியுமான்னு கேளு. முடியாதுன்னா உடனே கார எடு." என்ற வர்மாவின் குரலில் இருந்த பதைபதைப்பு இப்போது அவளின் இதழ்களில் புன்னகையை அரும்பச்செய்தது.
'எனக்கு ஒண்டு எண்டா துடிக்கிறான் காட்டான். மூஞ்சூறு காட்டான்.' என முணுமுணுக்கத் தவறவில்லை இதழ்கள்.
ஆகாஷ், "ரூம்க்குக் கூட்டீட்டு போவம் வர்மா. டாக்டர் அங்க வருவாங்க." என்றதும் வர்மா அவளைத் தன் கையில் அள்ளிக்கொண்டான்.
உதவ முன் வந்த ஆகாஷிடம், வானதியை ஒப்படைக்காது அவனே தூக்கிச்சென்றான் தன் அறைக்கு.
அவனின் வலிய கரங்களுக்குள் காற்றாய் சுயநினைவின்றிக் கிடந்தது எல்லாம் இப்பொழுது மனத்தில் சிலிர்ப்பைத் தந்து உடலைப் பூப்பூக்கச்செய்தது.
அறையில், மமதியும் ஆகாஷும் வானதியின் இரு கரங்களையும் தேய்த்து சூடு பரப்பிக்கொண்டிருக்க, வர்மா அவளின் உள்ளங்கால்களை உரசினான்.
உடலில் நடுக்கம் குறைந்திருந்தது. ஆனாலும் சில நொடிகளுக்கு ஒருமுறை பெரூமூச்சுடன் விடைக்கும் நெஞ்சைப் பார்க்கையில், மூவருக்கும் பயப்பந்து உருண்டது.
"நான் இப்பவே கரிகாலனுக்கு கால் பண்றேன்." என்ற ஆகாஷின் ஃபோனை பிடுங்கியவன்,
"அவன் வந்து என்ன பண்ணப் போறான்? அவனா டாக்டர்!" என்றவன்,
"இந்த நேரத்துல கூப்பிட்டா வீட்டுற இருக்குறவங்க என்ன நினைப்பாங்க? பயந்திட மாட்டாங்களா! முதல்ல டாக்டர் வந்துபாக்கட்டும். அப்றமா தகவல் சொல்வோம்." என்று கடிந்தவன்,
"போய் டாக்டர கூட்டீட்டு வா!" என்று அனுப்பிவைத்தான்.
சற்று நேரத்திலேயே ஒரு பெண் மருத்துவர் வந்து பரிசோதித்தார்.
அவளின் கீழ் இமையை மெதுவாக இழுத்துப் பார்த்தவர், நாடியைப் பரிசோதித்தார்.
“கவலைப்பட ஒன்னுமில்லை. இது panic attack மாதிரி இருக்கு. உயிருக்கு ஆபத்தில்லை.
நான் சில மெடிசின் எழுதித் தர்றேன். அதை மட்டும் குடுங்க.” என்றவர் மருந்துச் சீட்டை நீட்டினார்.
பிறகு ஊசியில் மருந்தை நிரப்பி, அவளின் கரத்தில் மெதுவாக குத்தினார்.
வர்மா, "எப்ப நார்மலாகும் டாக்டர்?"
"அதத் தெளிவாச் சொல்ல முடியாது. நல்லா தூங்கி எழுந்தா சரியாகிடும்.”
"திரும்பவும் வலிப்பு வந்தா மாதிரி உடம்பு வெட்டுமா டாக்டர்?" என்று பயத்துடன் ஆகாஷ் கேட்க,
"இது வலிப்பு கிடையாது. பயத்துல வர்ற நடுக்கமும் மயக்கமும் தான்.”
“எப்படினாலும் சொல்லிக்கங்க. திரும்ப நடுங்குனா?”
“வராதுன்னு உறுதியாகச் சொல்ல முடியாது. நான் குடுத்த இன்சக்சனுக்குத் தூக்கம் தான் வரும். அதையும் மீறி அவங்க பயந்து எந்திரிச்சா… முதுகுல தட்டிக் குடுக்கங்க. நடுக்கம் மெல்ல அடங்கும்." என்றவர் புறப்படும் நேரம்,
"ஒரு ஹெல்ப் டாக்டர்?" என்றான் வர்மா.
அவர், "எஸ்..." என்றதும் தன் பெட்டியில் இருந்து டிசட்டை எடுத்தான். மமதியிடம், ஸ்கெட் ஒன்றை எடுத்து வரச்சொன்னவன்,
"ட்ரெஸ் ஈரமா இருக்கு. கொஞ்சம் மாத்தி விட ஹெல்ப் பண்ணீங்கன்னா நல்லா இருக்கும். ப்ளீஸ்." என்று உடையை கையில் கொடுத்துவிட்டு வெளியேறினான்.
மமதிக்கு ஒல்லியான தேகம். அவளின் மேலாடை வானதிக்கு பொருந்தாது. அதனால் தான் தன் டிசர்ட்டைத் தந்தான்.
ஆகாஷ், மருந்துக் கடைக்கு செல்ல, இவன் ஹோட்டலில் இருந்து hair dryer-ஐ வாங்கி வந்தான்.
மருத்துவர் சென்றதும், "மமதி, தலை முடிய விரிச்சி விடுங்க." என்றவன் பெண்ணவளின் கூந்தலுக்கு dryer போட்டு உலர்த்திவிட்டான்.
வானதிக்கு அடர்த்தியானக் குழல். அடர்ந்த காடுகள் எப்படிச் சூரிய ஒளியை தரையில் பட அனுமதிக்காதோ அது போல் அவளின் முதுகைக் காட்டாது படர்ந்திருக்கும்.
அந்தக் கருங்காட்டை ரசிக்காமல் உலர்த்த முடியவில்லை வர்மாவால்.
"Really soft.. நீளமாவும் இருக்கு. எப்படி இதை மெயிண்டன் பண்றா?" என்று பட்டை ஒத்த அவளின் கூந்தலுடன் உறவாடிக்கொண்டிருக்க,
"வானதியோட ஃப்ரெண்ட்ஸ்க்கு தகவல் சொல்லிட்டேன். ஆனாலும் பார்ட்டி முடியாம கப்பல் இருந்து போட் எடுக்கமாட்டாங்க." என்றாள் மமதி.
"அப்ப அவங்க வர 2 மணி ஆகலாம். அதுவரை நாம வானதிக்குத் துணையா இருப்போம்." என்றுவிட்டு சோஃபாவில் அயர்வுடன் ஆகாஷ் அமர, மமதியின் முகம் விழுந்துவிட்டது. அதைக் கண்ட வர்மா,
"நான் பாத்துக்கிறேன் ஆகாஷ். நீங்க ரெண்டு பேரும் உங்க ப்ளான எக்ஸ்சிக்யூட் பண்ணுங்க." என்றான்.
புதுமண ஜோடிகளாகப் போகும் இருவரும், இந்த இரவை ஆவலுடன் எதிர்பார்த்து பல திட்டங்களைப் போட்டுவைத்திருந்தனர்.
ஆனால் வானதி இப்படி இருக்கும் போது எப்படி விட்டுச் செல்வது? அவளின் அருகில் யாராவது இருந்தாகவேண்டுமே!
"நாங்க இங்கயே இருக்கோம்." என்று மமதி சொல்ல,
"நான் பாத்துப்பேன் மமதி. Injection போட்டிருக்காங்க. சோ, தூங்கத்தான் செய்வா. இன்னும் கொஞ்ச நேரத்துல அவளோட ஃப்ரெண்ட்ஸ்ஸூம் வந்திடுவாங்க. அதுவரை I’ll take care of it." என்று வர்மா இருவரையும் அனுப்பிவைத்தான்.
கதவை மூடிவிட்டு வந்தவன், அவளின் அருகில் தலை கோதியபடி அமர்ந்ததையும் வானதியில் மூளை பதிவு செய்து வைத்திருந்தது.
கூடவே நடந்ததா! இல்லையா! என்று தெரியாத சிலவற்றையும் அவளுக்குக் காட்ட, பட்டென கண் விழித்தாள். எழப்பார்க்க, அது முடியாது அவளின் இரு கரங்களும் சிக்கிக்கொண்டதைப் போல் இருந்தது.
'கட்டிப்போட்டு வச்சிருக்கானா! நான் அவனைக் கொஞ்சம் ஓவராத்தான் செய்திட்டன். அதுக்கு பழி வாங்கிட்டானா! ஐய்யோ நடந்தது ஒண்டும் சரியா ஞாபகம் வருதில்லயே!' என்றெண்ணியவளுக்குச் சிறு பயம் தலைதூக்க, போர்வையை விலக்கிப்பார்த்தாள் வானதி. அங்கு அவளின் இரு கரத்தையும் கட்டிக்கொண்டு அவளின் தோழிகள் தான் இருந்தனர்.
அவளின் அருகில் அமர்ந்த வாக்கிலேயே உறங்கிக்கொண்டிருக்க, இதழ்கள் வளைந்து அவர்களின் அக்கறையில் புன்னகைத்தன. மெல்ல கையை உறுகப் பார்க்க,
"ஏய் வானு.... எழுந்திட்டயா? உனக்கு என்னமோ ஏதோன்னு நாங்க பயந்திட்டோம்." என்று உறக்கம் கலைந்து மிருதுளா பதறி அணைத்தாள் வானதியை.
"நாங்க அப்பவே கேட்டோம்ல பக்கி. எதுவும் பண்ணுதான்னு. இல்ல இல்லன்னு எங்கள அனுப்பி வச்சிட்டு தண்ணீக்குள்ள டைவ் அடிச்சிருக்க. வர்மா சார் மட்டும் இல்லைன்னா என்ன ஆகிருக்குமோ!" எனச் சித்ரா பொறிந்தாள்.
"ஆர் யூ ஓகே வானதி?" என்றபடி மமதியும் வந்தாள்.
"மிச்ச நாளும் இங்கயே இருக்கீங்களா? இல்ல சென்னை போக ஏற்பாடு பண்ணவா?" என்றான் ஆகாஷ்.
"போதும்... நாம வீட்டுக்கு போவோம்." என்று மிருதுளா சொல்ல, வானதி ஆமோதித்தாள்.
"நான் கார் எடுத்திட்டு வர்றேன். நீங்க ரெடியா இருங்க. ஒரு மணி நேரத்துல ப்ரேக் பாஸ்ட் முடிச்சிட்டு கிளம்பலாம்." என்று விட்டுசென்றான்.
மெத்தையில் இருந்து எழும்போது தான் குனிந்து தன் நிலையைப்பார்த்தாள். உடல் சிலிர்த்துப்போனது. அவனின் டி சர்ட்...
அருள்மொழிவர்மாவின் வாசத்துடன் அணைத்திருந்தது அவளை. கூடவே உதட்டில் ஏதோ குறுகுறுப்பு.
விரல்களால் நடுங்கிக்கொண்டிருக்கும் உதடுகளைத் தடவிவிட்டு, கண் மூடியவளுக்கு வர்மன் வந்து நிற்க, தலையை உலுக்கி ஓரம் தள்ளியவள் எழுந்து குளியலறைக்குள் சென்றாள்.
வீட்டிற்கு வந்தவள் நடந்ததை மறந்துபோனாள்.
ஆனால் அங்கு ஒருவன் எதையும் மறக்கமுடியாது, பின்னந்தலையைத் தன் உள்ளங்கைக்குள் அணைவாய் வைத்து, விட்டத்தை வெறித்தபடி கிடந்தான்.
இரவு எத்தனை அழகானது என்று கொட்டை கொட்டையாகக் கண்களை விரித்து ரசிப்பது அவனுக்குச் சுகமாய் இருந்திருக்கவேண்டும். அது அவன் உறங்காது கழிக்கும் இரண்டாவது இரவு.
இரண்டு இரவுகளிலும் அவளின் நினைவுகள் தான்.
ஆகாஷும் மமதியும் சென்ற பின் சோஃபாவில் படுத்துக்கொண்டு ஃபோனை நோண்டியபடி கிடைந்தவனுக்கு ஆரவாரம் கேட்டது.
விளக்கு அணைக்கப்படாததால் மெத்தையில் எழுந்து அமர்ந்த வானதி, திருவிழா கூட்டத்தில் தொலைந்துபோன சிறுமி போல் மிரட்சியுடன் விழித்தபடி தலையைத் தலையை திரும்பிப்பார்ப்பது தெரிந்தது.
"Hey... you’re okay?" என்றபடி அவளின் அருகில் வந்தவன், பயப்படுகிறான் என்று நினைத்து,
"உன்னோட ஃப்ரெண்ட்ஸ் இப்ப வந்திடுவாங்க. பயப்படாத... உனக்கு ஒன்னுமில்ல" என்று ஆறுதல் சொல்ல, அவனையே பார்த்தபடி, பேசாது ஏதோ பிரம்மை பிடித்தவள்போல் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
வெகுநேரம் அசைவற்று இருந்தவள், இமைகளை மூடித் திறந்து அவனை அருகில் அழைக்க,
“Are you okay? டாக்டர கூப்பிடவா?” என்றபடி அவளின் அருகில் அமர்ந்தான். விழிகளை அசைக்காதிருந்தவளின் கரம் உயர்ந்து அவனின் கன்னத்தை ராவியது. குத்தும் தாடியில் சில்லிட்டிருந்த பெண்ணின் விரல் ஸ்பரிசத்தில் சிலிர்த்துபோனது அருள்மொழிவர்மனின் தேகம். அடுத்தடுத்து அவள் செய்ததில் கண்களை மூடி, கிறங்கித்தான் போனான்.
இரு கைகளுக்குள்ளும் அவனின் முகத்தை அடைத்து, நெற்றி, சிகை, கழுத்து என விரல்களால் மெல்ல மெல்ல அளவெடுத்தவள், அவனின் அகன்ற மார்பில் சாய்ந்துகொண்டாள்.
பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் அவனின் இதயத்தின் ஓசை தெளிவாககேட்க, இதழ்கள் விரிந்து அவளின் நிம்மதிப் புன்னகையைச் சிந்தின. மெல்லத் தலை நிமிர்ந்து அவனின் முகம் பார்க்க முயல, தெரிந்தது அவனின் கழுத்து மட்டும் தான்.
adam’s apple என்று சொல்லப்படும் குரல் வளையில் எக்கி தன் இதழ் பதித்தாள் மென்மையாக.
தொண்டைக்குள் இருக்கும் குரல்வளை ஆண்களுக்கு சற்று மேடிட்டிருக்கும். வர்மாவிற்கு சற்று கூடுதலாகவே அது தூக்கிக்கொண்டிருக்கும். அதுதான் அவனின் கனீரென்ற குரலுக்குக் காரணம்.
அது பெண்ணவளுக்கு அவனிடம் பிடித்தமான ஒன்று. எங்கிருந்தாலும் அவனை அவளிடம் கொண்டுவந்து சேர்த்துவிடும். அதை ரகசியமாக ரசிக்கவும் செய்வாள்.
ஒன்று, இரண்டெனத் தொடர்ந்து அவள் முத்தத்தைப் பதிக்க, உணர்வுகள் தூண்டப்பட்டவன் பட்டென அவளை விட்டு எழுந்துகொண்டான். அவளோ கரம் நீட்டி, “என்னுடையதை என்னிடமே திருப்பிக் கொடுத்து விடு.” என்ற ரீதியில் பரிதாபமாகப்பார்த்தாள்.
“என்னாச்சி இவளுக்கு. மெண்டலி டிஸ்டர்ப் ஆகிட்டாளோ!” என்று மருத்துவருக்கு அழைத்தான்.
அவரோ, "மே பி அவங்க தூக்கத்துல எழுந்து உக்காந்திருக்கலாம். தட்டிக்கொடுங்க." என்றார்.
‘தட்டிக்குடுக்கவா’!
கைக் குழந்தையா என்ன! என்று நினைத்துக்கொண்டவன், பக்கத்தில் போனால், அளவெடுப்பாளோ என்று தயங்கியபடி, அவளின் தோளைத் தொட்டுபடுக்க வைக்க முயன்றான். பாதி சரிந்திருக்கும்போது புது ஆண்டு பிறந்து விட்டது என்று பட்டாசு வெடித்து கொண்டாடும் சத்தம் கேட்டது.
டம் டமார் என்று இரவை இரைச்சல் கிழிக்க, அதுவரை அமைதியாக இருந்தவள், மிரண்டு எழுந்தாள். திடுக்கிட்டு அமர்ந்தவள் உறக்கத்தை மொத்தமாக விரட்டிவிட்டு, தலையை முழங்காலில் ஆவேசம் வந்ததுபோல் முட்டிக்கொண்டே முணுமுணுக்கத் தொடங்கினாள்.
"பிழை செய்திட்டன் நான்... ஆரும் திருத்த ஏலாத பிழையை நான் செய்திட்டன். என்னால் தான்... எல்லாம் என்னால் தான்..." என்று புலம்பிபடி இடிக்க,
‘எதப் பிழைன்னு சொல்றா? இங்க பிழையா எதுவும் நடக்கலயே!’
"ஹே... ஹே... என்ன பண்ற…” என்றவனைக் கவனியாது முட்டிக்கொண்டிருக்க, “Stop this nonsense." என்று அவளின் தோளைப்பற்றி நிறுத்தினான். நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
அவளின் கலங்கிய விழிகளில் இருந்த துக்கம் அவனை உறுத்த, அவளின் பிடறியில் கரம் வைத்து பெண்ணவளின் முகத்தை தன் மார்போடு அணைத்துக்கொண்டான்.
"that’s ok.... that’s ok... Slow down… மூச்ச இழுத்து விடு..." என்று இதமாய் முதுகில் தட்டிக்கொடுக்க, அவளின் அணைப்பு இறுக்கிக்கொண்டே போனது.
மழையில் நனைந்த கோழிக்குஞ்சு தாயின் சிறகில் ஒழிந்துகொண்டு கதகதப்பையும் பாதுகாப்பையும் தேடுவதுபோல் வானதி அவனுடன் ஒன்றினாள்.
அது புரிந்து போனவனுக்கு, பெண்ணவளின் இறுகிய அணைப்பு உடலில் ஒருவித மின்னதிர்வாய்த் தாக்கியது.
அதில் இருந்த மொத்தமும் ஏக்கம். கிடைத்து விடாதா என்று ஏங்கிய ஒன்று, சில நொடிகளுக்கு மட்டும் உனதாகும் எனும்போது போட்டி போட்டுக்கொண்டு வரும் ஆசையையும் ஏக்கத்தையும் அவளின் அணைப்பில் உணர முடிந்தது.
விகல்பம் பார்க்காது கட்டியிருந்தவளின் பிடியைத் தளர்த்தும் வழியறியாது அவனிருக்க, "தேங்க்ஸ்... அண்டு... சாரி..." என்றுவிட்டு விலகினாள்.
என்ன நடக்கிறது? என்று புரியாது சில நொடிகள் நின்றவன்,
"பரவாயில்லை!” என்றுவிட்டு விலகினான்.
“செஞ்ச தப்புக்கு சாரிலாம் கூடச் சொல்ல வருது இவளுக்கு." என்று முணுமுணுக்க, மீண்டும் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டது. திரும்பி வானதியைத்தான் பார்த்தான்.
"பட்டாசு எண்டா பயம் இல்ல.." என்றாள் அவனின் பார்வைக்கு.
"பின்ன எதுக்கு பயம்?"
"அ..து... சத்தம் கேட்டு..." என்றவள் இதழ்களுக்குள் வார்த்தையை விழுங்க,
"உனக்கு நடக்குறதுல எதுவும் பிரச்சினையா? கவனமா நடக்க மாட்டியா? படகெல்லாம் வேற இடத்துல இருந்ததால தப்பிச்ச. இல்லன்னா அடிபட்டிருக்கும்." என்று அவளைக் குற்றம் சொல்ல, கோபம் வரப்பெற்றவள்,
"நான் சரியாகத் தான் நடந்தன். சத்தம் கேட்டது. திடுக்கிட்டு விழுந்திட்டன். மற்றபடி நான் மாடல் மாதிரி பூனை நடை நடப்பன். என்ர தைரியத்துல குறை ஒண்டும் இல்ல."
"இப்பக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பயந்து எழுந்து, முட்டில முட்டி அழுதியே அந்த மாதிரி தைரியமா!" என்க, முறைத்தாள் பாவை.
சின்னச் சிரிப்புடன், "உனக்கு தூக்கம் போயிருச்சின்னா… காபி?" என்றபடி அறையில் இருந்த இன்டர்காமை எடுக்க,
"எனக்கு டீ. ஸ்ராங்கா... டபுள் ஸ்ராங்கா..." என்றதும் புருவம் சுருக்கினான்.
'காபியத்தான் ஸ்ட்ராங் டபுள் ஸ்டராங்குன்னு சொல்வாங்க. இவ என்ன டீக்கு சொல்றா! கரிகாலன் தங்கச்சி தான! லூசு மாதிரித்தான் இருப்பா.' என்றவன் அவள் தந்த முத்தத்தில் குறுகுறுத்த தொண்டையைத் தடவியபடி, அவள் கேட்டதையே ஆர்டர் செய்தான்.
"கடல்னா பயமா?" என்று அவளிடம் பேச்சை வளர்த்தான்.
"ஆரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டிங்க. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கல்லடி. கல்லடி தெரியுமா?. மீன் பாடும் தேன் நாடு எண்டு சொல்வாங்க அதை! அங்க பெரிய கடல் இருக்கு. உங்கட நாடு மாதிரி குப்பையும் கூலமுமாய் இருக்காது. வடிவா சுத்தமான கரை அதுக்கு. ஆறும் கடலும் சங்கமிக்கிற பகுதி அது." என்று வளவளவெனத் தன் ஊரின் பெருமைகளை அடுக்கியவள்,
"அங்க வளர்ந்து கடல்ல விளையாடின எனக்கு, கடல் எண்டால் பயம் வருமா?" என்க,
"அப்ப போட்னா பயம்." என்று சரியாகச் சொல்ல, அமைதியாகிப்போனாள்.
"அமைதியா இருக்குறத பாத்தா உனக்கும் boat-க்கும் bad incident இருக்கும் போலயே!" என்றான் அவளின் முகம் பார்த்து.
"ஓம்... அது incident இல்ல. Disaster... என்ர குடும்பத்துக்கு வந்து பேரழிவு." என்றவளுக்குக் கண்கள் நனைந்து கண்ணீரை வார்த்தோட வைத்தது.
அது அவள் சொர்க்கமாக நினைக்கும் பாலியபருவம்.
மாதம் ஒரு நாள் யோகராசாவுடன் கடலுக்குப் படகில் செல்வாள். அவரின் தங்கையின் கணவனுக்குச் சொந்தமாகப் படகு இருந்தது.
வலை போட்டு அனைவரும் மீன் பிடித்தால், இவள் மட்டும் ஒரு மூங்கில் கம்பைத் தூண்டிலாக மாற்றித் தடுப்பில் அமர்ந்துகொண்டு பிடிப்பாள்.
"அப்பா... என்ர தூண்டில்ல பெரிய மச்சம் மாட்டிருக்கு எண்டு நினைக்கன். பாருங்க." என்றவள் தூண்டிலின் கயிற்றை இழுக்க, தவறி தண்ணீரில் விழுந்தாள்.
மகளைக் காக்கவென யோகராசா குதித்தார். ஆனால் அவர் குதித்த சமயத்தில் ஒரு மோட்டார் படகும் அவ்விடத்தில் சரியாய்வர, முதுகுத் தண்டில் நல்ல அடி. அதுதான் அவரின் உடல் செயலிழந்து போகவும் இறக்கவும் காரணமாக அமைந்தது. தண்ணீருக்குள் இருந்ததால் வானதிக்கு ஏதுமில்லை.
தன்னைக் காப்பாற்ற அன்று அவர் குதிக்கவில்லை என்றால் உயிரோடு இருந்திருப்பார் என்று குற்றஉணர்வு உண்டு அவளுக்கு.
இன்று தண்ணீருக்கடியில் வர்மாவின் முகத்தைப் பார்த்தும் தான் அவளுக்குப் பீதியே உண்டானது.
அன்று குதித்தவர் இறந்து போக, இன்று தனக்காக இவன் குதித்துவிட்டானே! என்றதில் உடல் நடுங்கத் தொடங்கியது.
அவன் பத்திரமாக உள்ளான் என்பதை அவளின் மனம் உணர்ந்தாலும், அவனின் நலத்தை ஆராய்ந்து தன் பார்வையை அவனின் மீது மேயவிட்டாள். அவனும் உந்துதலில் நிமிர்ந்து பார்த்தான். ஆனால் அவள் பார்வையைத் தாழ்த்தவில்லை. நேர் பார்வையில் அவனை விழுங்கிக்கொண்டிருந்தாள்.
அவளின் பார்வை அவனுக்குள்ளும் எதுவோ செய்ய, இவனும் அவளின் கலைந்த முகத்தைத்தான் பார்த்தபடி பேச்சற்று நின்றான். அவர்களின் பார்வைக் கயிற்றை அறுக்கும் வண்ணம் கதவு தட்டப்பட்டது.
விடுதிச் சிப்பந்தியிடமிருந்த கோப்பைகளை வாங்கிவந்து அவளிடம் நீட்டியவன்,
"hate செய்றன்னு சொன்னவ பாக்குற செய்யுற வேலையா இது?" என்று சத்தமாக முணுமுணுத்துக் கொண்டே சோஃபாவில் அமர்ந்தான். அவன் சற்று முன் அவள் முத்தமிட்டதைக் குறிப்பிட்டு சொல்ல, இவளோ அவனைப் பார்ப்பதைத் தான் சொல்கிறான் என்று நினைத்து,
"அதில் என்ன பிழை..." என்றாள் தலை உயர்த்தாது.
"அப்ப hate பண்ற முடிவ மாத்திட்டியா!." என்றான் குறுநகையுடன்.
"நோ... நோ... நான் என்ர முடிவ எப்பவும் மாத்தமாட்டன். இப்பவும் hate செய்றன்.." என்றவள், அடுத்த சொன்ன வார்த்தையில் கையில் இருந்த கோப்பை தவறி விழுந்து உடைந்துபோயிருந்தது.
"எந்த அளவுக்கு உங்கள love பண்ணினனோ அத விடக் கூடுதலா hate செய்றன். I hate you." என்றிருந்தாள் வானதி.