அத்தியாயம்: 13
"ஹே சுஜி! யார் இந்த ப்யூட்டி?" என்றான் சுஜித்ராவின் தோழன்.
அவளோ, "அதெப்படிடா எங்க வீட்டு வேலைக்காரிலாம் உனக்கு ப்யூட்டியா தெரியுறா!." என்றதும் அத்தனை நேரம் கவிழ்த்தி வைத்திருந்த தன் தலையை நிமிர்த்தி முறைத்தாள் வானதி.
"Housemaid?" என்று ஏற இறங்க பார்த்தான் வர்மா. அத்தனை நேரம் அவளிடம் பேசிய இலகுவான குரலுக்கும் இப்போது கேட்ட குரலுக்கும் அநேக மாறுபாடு இருந்ததை உணரத்தான் செய்தாள் வானதி.
"அவ போட்டிருக்குறது உன்னோட ட்ரெஸ் தான?"
"ம்..."
வர்மா, "அதான் கதவைத் திறந்ததும் நீயோன்னு ஒரு செக் தோணுச்சு?”
“Housemaid-ன்னு சொல்ற. சின்ன பொண்ணா இருக்கா?"
சுஜித்ரா, "இவளா சின்னப் பொண்ணு. எட்டூற வித்திட்டு வர்ற அளவுக்கு வாயாடி. இவளுக்கு அப்பா அம்மா கிடையாது. செத்துட்டானுங்க. அநாதையா இருக்குற இவள போனாப் போகுதுன்னு கூட்டிட்டு வந்து வச்சிருக்கோம். சும்மா தங்க வைக்க முடியாதே! அதான் வீட்டுல இருக்குற சின்னச் சின்ன எடுபிடி வேலையப் பாக்குறா! சம்பளமில்லாம..." என்க, கதவுவரைச் சென்றிருந்த வானதி, சுஜித்ராவின் வார்த்தைகளைக் கேட்டதும் நின்று முறைக்க,
"என்ன பாக்குற! உன்னை என் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி வரக்கூடாதுன்னு ஏற்கனவே சொல்லிருக்கேன்ல... இடத்தக் காலி பண்ணு சீக்கிரமா." என்றதும் எவ்வித ராசாபாசமும் செய்யாது நடந்து னசென்று விடுவாள் என்று நினைத்ததற்கு மாறாக, நிதானமாக திரும்பிவந்து, தான் மேஜையில் வைத்த தட்டை எடுத்துக்கொண்டு நடந்தாள் வானதி.
அவளின் செயலைக் கண்ட சுஜித்ரா, "ஏய்! அதை எதுக்கு டி எடுக்குற? வைச்சிட்டு போடி." எனக் கத்த,
"நான் ஒண்டும் வேலைக்காரி இல்ல. நீ ஏவிய வேலைக்கு வேறாளைத் தேடு." என்றவள் கண்ணாடி டம்ளரில் இருந்த பானத்தைக் கீழே ஊற்றி விட்டுச்சென்றாள்.
"How dare you? ****." என விடாது சில நிமிடங்கள் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்தாள் சுஜித்ரா.
'என்ன பொண்ணு இது?. திமிரு பிடிச்சவளா இருப்பா போல. வந்தோமா! வச்சோமா! கிளம்பினோ! ன்னு இல்லாம, ஏன் இவ்வளோ சீன் போடுது! சுஜி, இல்லாததையா சொல்லிட்டா!" என்று நினைத்தவனுக்கு வானதியைப் பற்றி நல்லவிதமாக எண்ணத் தோன்றவில்லை.
அதைச் சுஜித்ராவின் பேச்சு நெய்விட்டு வளர்ந்தது. ஏற்கனவே ஈஸ்வரி சகோதரிகளின் உபதேசத்தால் ஆண்டாளிடம் அவ்வளவாக பேசுவது இல்லை. கரிகாலனுடனான அவனின் நட்பு, எதிர் எதிர் திசைகளைப்போல் சேர்க்கவே முடியாதது. என்ன செய்தாலும் கரிகாலனின் பக்கம் நிற்கும் சகாயத்தையும், செந்தூரத்தையும் எட்ட நிறுத்தி வைத்திருந்தான். ஆதலால் தாய் வீட்டுச் சொந்தம் என்று அவன் நினைப்பது அந்த ஈஸ்வரி சகோதரிகள், சிவ தாண்டவம் மற்றும் அவர்களின் புதல்வன் புதல்விகளை மட்டும் தான். மற்ற யாரையும் அவன் கவனத்தில் கொண்டதில்லை.
சுஜித்ரா, வர்மாவின் கல்லூரியிலேயே சேர, தினமும் அவன்தான் தன் பைக்கில் அவளை அழைத்துச்சென்றான். ஆதலால் காலை மாலை என இரு வேளையும் கூடம்வரை வந்துசெல்வான்.
அப்பொழுதெல்லாம் துறுதுறுவென குறுக்கும் நெடுக்கும் வளம்வரும் வானதி அவன் கண்ணில் படாமல் இல்லை. கருத்தில் பதிந்து அவளைக் கூர்ந்து நோக்கும் அளவிற்கு வானதி அவனை ஈர்க்கவில்லை.
எந்த வகையிலான உறவு என்று சுஜித்ரா தெரியப் படுத்தாததால், வானதியை அவன் வேவையாள் என்று மட்டுமே நினைத்தான்.
இல்லை என்றது அந்த விருந்து. அதான் சுஜித்ரா தாக்கப்பட்டாரா! என்ற தலைப்புச்செய்தி அரங்கேறிய நாள்.
அன்று தான் வானதி ஆண்டாளின் தங்கை மகள் என்று தெரியவந்தது. இல்லை தெரிந்து கொண்டான்.
பார்த்திபனை ஏளனம் பேசிய போது அவனும் சுஜித்ரா உடன் தான் இருந்தான். தன் மாமன் மகள் அடிவாங்கியது அவன் கண் எதிரில் தான். இருந்தும் அவனின் மனம் அவனின் மாமன் மகளைக் குறையாகச் சொல்லவில்லை.
"ஒரு வேலைக்காரி உன்னோட தங்கச்சிய அடிச்சிருக்கா! நீ சுஜிக்கு சப்போட் பண்ணாம யாரையோ சமாதானம் செஞ்சிட்டு இருக்க." என்று கரிகாலனுடன் சண்டைக்குச் சென்றான் வர்மா.
கரிகாலனுக்கா பேசச் னசொல்லித் தரவேண்டும். "வானதி என்னோட தங்கச்சி. பார்த்திபன் என்னோட தம்பி. சித்தி பசங்க. நியாயமா பாத்தா என் தம்பிய அவ பேசுன பேச்சுக்கு நாந்தான் அவளோட மண்டைய பிளந்திருக்கணும். வானு முந்திட்டா. சொல்லி வை உன்னோட மாமன் மகள்ட்ட. மறுபடியும் இது நடந்துச்சி…" என்று விரல் நீட்டி வர்மாவை எச்சரிக்கை செய்ததோடு மட்டுமல்ல சுஜித்ராவையும் மிரட்டி வைத்தான். அதன்பின் சுஜித்ரா, வானதி இருக்கும் திசைபக்கம் கூட திரும்புவதில்லை.
அத்தோடு சிறியவர்கள் சண்டை முடிந்து, பெரியவர்கள் பிரச்சினை செய்யத் தொடங்கினர்.
"சித்தப்பா குடும்பம், அந்த வேலைக்காரிய சட்டப்படி தத்தெடுக்க போதாம். எங்கயோ பிறந்து, வளந்து, அநாதையா புறம்பாட வேண்டியவ, இனி உரிமையா எங்க வீட்டுக்குள்ள நடமாடப் போறா! நானும் அவளும் ஒன்னா! அவ எனக்கு சிஸ்டர் முறை... ச்சீ... கேக்கவே அறுவறுப்ப இருக்கு. " என்று அழுது, என்னோரமும் கரிகாலனையும் வானதியையும் கரித்துக் கொட்டிக் கொண்டே இருந்தாள் சுஜித்ரா. அவன்தான் சமாதானம் செய்வான்.
தவசிராஜன் இறந்தது, சொத்து பிரிக்கப்பட்டது, சகாயம் வீட்டைக் காலி செய்தது எல்லாம் வானதியால் தான் என்ற எண்ணத்தை விதைத்தாள்.
அது வளர்ந்து வானதியின் மீது முழு வெறுப்பைக் கொட்டும் முன், இவனுக்கு வாய்த்த காதல் தோல்வி அனைத்தையும் உதறி விட்டு, 'என்னைத் தனியாக விட்டு விடுங்கள்.' என்று சொல்லவைத்தது.
வானதி கல்லூரியில் நடந்த நேர்காணலுக்கு, நிறுவனத்தின் சார்பில் அனுப்பி வைத்த குழுவில் வர்மாவும் இருந்தான். அவன் தான் நேர்காணல் செய்து அவளைத் தேர்ந்தெடுத்தது. தன்னைக் கண்டு விரைத்து நின்றவளின் கோலமும், கேட்கும் கேள்விக்கு, மற்றவர்களுக்குத் தேன் குரலிலும், அவனுக்கு மட்டும் காட்டமானத் தேள் குரலிலும் அவள் பதில்தந்த விதமும் இப்பொழுது ஞாபகம் வந்தது. கூடவே சிரிப்பும் வந்தது. அப்பொழுதிருந்தே அவள் தன்னை வெறுத்திருக்கிறாள். அவளது பாசையில் hate செய்திருக்கிறாள்.
அவளின் பேச்சு காரணமாக, காத்திருப்பு பட்டியலில் மற்றவர்கள் வைக்க, அவன்தான் வானதிக்காகப் பேசியது.
அப்பொழுதும் அவள் யார் என்று அவன் ஆராயவில்லை. அவனையே அவன் மறந்து புதிய மனிதனாக சலவை செய்து வந்திருக்கும்போது கருத்திலே இல்லாத அவளை எப்படி நினைவு வைத்திருப்பான். வேலைக்குச் சேர்ந்து பயிற்சி காலம் முடிந்த பின்னரும் இல்லை.
அன்று ஆகாஷ், கரிகாலனின் தங்கை என்றதும், 'உன்னை உன் முறைப் பொண்ணு முறைக்கிறா.' என்றதும் தான் அடையாளம் காட்டியது வானதியை.
அவளின் முறைப்பிற்கும் செயல்களுக்கும் காரணம் புரிய, மென்நகையுடன் வானத்தைப் பார்த்தான் வர்மா.
"அங்க என்ன டா பண்ற? உள்ள வா. பனி விழ ஆரம்பிச்சிடுச்சி. அப்றம் உடம்புக்கு ஒத்துக்காம போய்டும். நல்லா இருக்குற உடம்ப வச்சுக்கிட்டே, ஆஃபிஸ் ஒரு வாரமா லீவ் போட்டவன் நீ. காய்ச்சல் கீச்சல் வந்தது அவ்ளோதான்." என்று சாப்பாட்டு மேஜையில் இருந்து குரல்கொடுத்தான் ஆகாஷ்.
அவனின் குரல் காதில் விழுந்ததாலும், தன் நெஞ்சில் புதைந்துபோன வானதி பற்றிய நினைவுகளைத் தோண்டி எடுக்கும் சுரங்க வேலையில் இருந்தவன், எழுந்துசெல்லவில்லை.
hate செய்கிறேன் என்று அவள் சொன்னபோதே, அவனுக்குள் உண்டாக்கியிருந்த குறுகுறுப்பு இன்னும் அடங்காத நிலையில், முத்தமிட்டதும், 'love செய்தேன்' என்றதும் இதயத்தை அவள் வசம் ஒப்படைத்ததுபோல் இருந்தது.
எத்தனை வெறுப்புடன் அவள் செய்த காதலைக் கூறுகிறாள் என்று மனம் சொல்ல,
"லவ் பண்ணினாளா? என்னையா? எப்ப? எப்படி? நாங்க பேசி பழகல! பார்வ கூட கிடையாது. எப்படி? எந்தப் புள்ளில அவளுக்குக் காதல் வந்திருக்கும்? எந்தப் புள்ளில அது வெறுப்பா மாறிருக்கும்?" என்பதை அறியும் ஆவல் பிறந்து, புது இரத்தம் பாயும் உணர்வைத் தந்தது. உடலெங்கும் ஒருவித பரபரப்பு.
ஒரு பெண்ணை ஈர்த்திருக்கிறோம் என்பது ஆணுக்குக் கர்வத்தைத்தான் தரும். அதிலும் காதல் என்று கற்பனைவரை அவளுடன் சென்றிருக்கிறோம் என்பதும், தான் காதலிக்கப் பட்டிருக்கிறேன் என்பதும் சாரலாகும் மழைக்கான மேகங்கள் திரட்டி, இதமான வென் புகையாய் ஸ்ப்ரே செய்ததுபோல் இருந்தது.
அதே கர்வத்துடன் தன் கையில் இருந்த காகிதத்தைப் பார்த்தான்.
“நீ என்ன சொல்ற? மறுபடியும் காதல் செய்யலாமா! வேண்டாமா!” என்று அதனிடம் கேட்க, அதில்,
"Life is you and your shadow.
Even if the shadow fades,
You remain.
Don’t lose the real
For what became a shadow." என்று எழுதி இருந்தது.
"நீயும், நிழலும் சேர்ந்ததே வாழ்க்கை.
நிழல் மறைந்தாலும்,
நீ யார் என்பது மாறாது. நிழலாகிப் போனதற்காக வருந்தி நிஜத்தை இழக்காதே." என்பதே அதன் பொருள்.
வானதியின் காதல் நிஜமாகுமா! நிழலாலாகுமா! என்று புரியாது, தான் காதல் என்று இறங்கலாமா? என்ற யோசனை, புயலில் சிக்கிய தோணியில் நிலைக்கு அவனைத் தள்ளாடிக் கொண்டிருந்தான்.
இதயம் கட்டுபாடின்றி அவளின் பின்னே விடை தேடிச்செல்லச் சொல்லி துடிக்க, அதற்கு கடிவாளம் கட்டும் பணியைச் செய்யும் மூளை விழித்தெழுந்தது.
"என்ன செய்யப் போகிறாய்? அவள் காதல் செய்தேன் என்று இறந்த காலத்தைச் சொல்கிறாள். அதை நிகழ்காலமாக எண்ணி, அவளை நாடி மீண்டும் காதல் என்ற மாயயைச் செய்யப் போகிறாயா?" என்று தொடுத்து நின்ற வினாவிற்கு,
"ஏற்கனவே காதல் என்று பெண்ணால் புதைகுழி பள்ளத்தில் விழுந்து, அடிபட்டு, தட்டித் தடுமாறி மேலே ஏறி வந்திருக்கிறாய். மீண்டும் காதலா? காலம் எந்தக் காயத்தையும் ஆற்றாது. காயம் தந்த வலியோடு எப்படி வாழ்வது என்று தான் கற்றுத் தரும். நீயும், நீ நேசித்தவளை, உன் நேசத்தை மறக்கவில்லை. அதை ஓரமாக வைத்துவிட்டு, வாழும் கட்டுப்பாட்டை இப்பொழுதுதான் கற்றுக்கொண்டிருக்கிறாய். ஆதலால் மறுபடியும் காதல் என்ற போதையைத் தீண்டாதே." என்று எச்சரிக்க, இனி வானதியைப் பற்றி நினைக்ககூடாது என்று முடிவை எடுத்துசென்றான்.
அன்று வானதி, அலுவலக நேரத்திற்கு முன்னரே வந்துவிட்டவள், தோழிகளுடன் சேராது தனித்து வாகனத் தரிப்பிடத்திற்குச் சென்றாள். கண்கள் அவள் தேடும் பைக்கைக் காட்டாததில் பெரும் ஏமாற்றத்துடன், குளம் கட்டி கண்ணீரைத் தேக்கின.
"இண்டைக்கும் காணேல்ல. ஒரு கிழமையா வேலைக்கு வாராம என்ன தான் செய்து கொண்டிருக்கான். உடம்பு நல்லம் எண்டு ஆகாஷ் அண்ணா சொன்னான் தானே. பிறகு ஏன் வரல்ல." என்று வாய்விட்டுப் புலம்பியவளுக்குள்,
"நான் கதைச்சதில் கடும் கோபம் வந்திருக்குமோ?" என்று சந்தேகம் தோன்ற,
"இருக்காது. அவனுக்குக் கோபத்தைக் கட்டுப்படுத்தி பழக்கமெல்லாம் கிடையாது. கொட்டி விடுவான்."
"கண்டிப்பா காதல் கீதல் எண்டு நான் குழப்பி இருக்க வேணும். நீ விசர் வானதி. அவனே குட்டையாய் மாறின மனசை தெளிய வச்சி தானுண்டு தன் அலுவல் உண்டெண்டு சமநிலையில் இருக்கான். நீ கல்லை விட்டெறிஞ்சி திரும்பவும் குழம்பி போட்டு வந்திருக்காய். போதும். அவனை அவனாய் இருக்க விடு. இனி ஒரு காலமும் அவனை நீ உத்து உத்து பாக்கக் கூடாது. அவனை டென்சனாக்க கூடாது." என்று அவளுக்கு அவளே கட்டளைகள் இட்டபடி நடந்துசென்றாள் மின்தூக்கியின் பக்கம்.
சடுதியில் மின்தூக்கி மனிதர்களால் நிரம்பிப் போக, கதவுகள் இரண்டும் பிரிந்திருந்தது போதும் என்று, ஆசையுடன் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ள துடித்த சமயம், ஒரு கரம் ஒற்றலைத் தடுத்து நிறுத்தியது.
அருள்மொழிவர்மன் தான்...
நேற்று இரவு அவன் எடுத்த தீர்மானங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, லிஃப்ட்டிற்குள் இருந்தவளைப் பார்த்ததும் கால்கள் தன்னால் வேகமெடுத்து ஓடத்தொடங்கி இருந்தன.
மூச்சு வாங்க வந்தவனுக்கு, "குட் மார்னிங்...." என வணக்கத்தைப் பலர் வழங்க, அவளுக்கு முதுகு காட்டிவிட்டு நின்றுகொண்டான். அவளின் விழிகள் இரண்டும் கோழிக் குண்டென விரிந்து தன்னை உச்சி முதல் பாதம்வரை ஸ்கேன் செய்வது, மின்தூக்கியின் கண்ணாடிச் சுவர்கள் காட்டிக்கொடுத்தன.
“இவ தான் hate செய்றவ!” என்று நினைத்துக் கொண்டவனுக்குள் அவளின் பார்வை, பனிப் புயலே வீசியும் அமர்த்தலாக முகத்தை வைத்துக்கொண்டான்.
மனத்தில் அவளுக்கான நேசம் பிறந்திருந்தாலும், ஏதோ ஒரு தடை உள்ளது போல் தோன்றி அவளை தவிர்க்கத் தூண்டியது.
வேறு ஒன்றுமல்ல அவளிடம் தடுமாறிச் செல்லும் மனம், அவளைக் காதல் செம் என்றதால் வந்தது.
"ஏன் இவ்வள்ளவு நாள் லீவ்?" என்று அவள் தான் பேச்சை எடுத்தாள். ஆனால் அவளுக்குப் பதில் ஏதும் கூறும் முன், கதவுகள் திறந்து விட, எதிலிருந்தோ விடுபடுவது போல் வேகமாக நடந்து சென்றான்.
"ஓட்டப் போட்டி ஏதாவது நடக்குதா இங்க! கன் சத்தம் கேட்டு திரும்பிப் பாக்காம ஓடுற மாதிரி ஓடுறான்." என்று யோசித்தவள்,
"மூஞ்சூறு... பதில் ஒண்டும் சொல்லாம ஓடிட்டான்." என்று திட்டியபடியே தன் இருக்கைக்குச்சென்றாள்.
வர்மா, தன் கேபினில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி இருந்தான். அவனுக்கு அலுவலகம் உலைக்கலன் போல் இருந்தது. வானதியின் பார்வையும் அதன் வட்டமும் தான் சூட்டைத் தணித்து இதத்தைக் கொடுப்பது போல் இருந்தது.
அவனின் மூளையின் எச்சரிக்கையையும் மீறி அவளை நாடிச் செல்லும் மனத்தை அதன் போக்கில் விடமுடியாது துடித்தவனிடம், "மச்சான், லன்ச் டயம். நம்ம கேண்டின் போகலாமா? பக்கத்து மெஸ் போகலாமா?" என்று கேட்டபடி வந்தான் ஆகாஷ்.
அவனுடன் வெளியேறியவன், வானதி தன் தோழிகளுடன் கேண்டினுக்குச் செல்வதைப் பார்த்து விட்டு,
"நீ போய் மீல் எடுத்திட்டு உக்காரு. நான் வர்றேன்." என்றுவிட்டு அவளின் இருக்கைக்குச்சென்றான்.
அவளின் கணினிக்கு உயிர் கொடுத்தான். அன்று போல் இன்றும் அது கடவுச்சொல்லைக் கேட்டது. குறுநகையுடன் விசைப்பலகையில் விரல்களால் தட்டினான், மூஞ்சூறு காட்டான் என்று.
உடனே திறந்துகொண்ட அதன் திரையில் அனைத்து வயதினருக்கும் பிடிக்கும் கார்ட்டூன் கதாப்பாத்திரமான சின்சான், வால்பேப்பராக வைக்கப்பட்டிருந்தது.
குறும்புக்கார சின்சான் அவனின் குறுநகையை மேலும் கூட்டவைத்தான். சுட்டெலிக்குப் பக்கத்தில் ஒரு பேனா இருந்தது. அதன் நுனியில் சின்சானின் உருவ பொம்மை ஒன்றை சொருகி வைத்திருப்பாள்.
சின்சான் வயிற்றில் இருக்கும் பொத்தானை அழுத்தினால் அதன் முகம் சுழன்று, ஒரு கண்ணை மூடி கண்ணடிக்கும் முகம், இதழ் குவித்து முத்தமிடும் முகம், கோபமாக முறைக்கும் முகம் என மூன்று முகத்தில் ஒன்றைக் காட்டும்.
மீட்டிங் ஹாலில் அவன் பேசிக் கொண்டிருந்தால் கவனத்தையும் கண்களையும் அவன் பேச்சிற்கு கொடுத்துவிட்டு, விரல்களால் இந்தப் பொத்தனை அழுத்தி அழுத்தி விளையாடுவாள். அதன் சத்தம் அவனை வெறுப்பேற்றும்.
இப்பொழுது அவள் செய்த வேலையை அவன் செய்ய, சின்சான், அவனுக்கு முத்தமொன்றைக் கொடுக்கும் முகத்தைக் காட்டியது.
அந்த முகம்… எங்கோ பார்த்தபோல் இருந்தது. சந்தேகம் துளிர்விட்டது. அதை உறுதிபடுத்த வேண்டி, பேனாவில் இருந்து அதை உருகி தன் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டான்.
களவாடி பத்திரப்படுத்தி வைப்பது காதலின் ஆரம்பநிலை. அதில் அவனையும் அறியாது ஏறத்தொடங்கிவிட்டான்.
இரு கரத்தையும் கட்டிக் கொண்டு அவளின் இருப்பிடத்தை நோட்டமிட்டான். அனைத்தும் purple நிறத்தில் இருந்தது. அடர்த்தியாக, மெல்லிசாக, அவளின் கைப் பை, அலைபேசியின் உறை, அணியும் செருப்பு என அவளிடம் இருக்கும் அனைத்தும் அதே வண்ணம் தான்.
அன்று நிச்சயதார்த்த விழாவிற்கு அவள் உடுத்திவந்த உடை அதே நிறம் தான் என்றது மூளையும்.
அதனால் தான் அன்று அவளைக் கவனித்தோமோ என்று கூட ஒரு நொடி சிந்தனை வந்தது.
தன் அலைபேசியை நோண்டியபடி நின்றான் வர்மாவிற்கு சந்தேகம் ஊர்ஜிதம் ஆனது. வெகு நேரம் அதன் முன்னேயே நின்று தவம் செய்தவனை,
“என்னவும் வேணுமா சார்?” என்ற வானதியின் குரல் வந்து கலைத்தது.
அவளை ஏற இறங்க பார்த்தவன், ஒரு வித வசீகர சிரிப்புடன் சென்றான்.
அவனின் மனம், வென்று விட்டதென இதழ்கள் மென்னகை சிந்தி கர்வம் கொண்டது.
அன்று ஆகாஷ்ஷிடம், “ உனக்கு ஏதாவது வித்தியாசமா தெரியுதா?” என்று கேட்டதற்கான விடை கிடைத்து விட்டது.
பேண்ட் பாக்கெட்டிற்குள் இரு கைகளையும் சொருகியபடி திரும்பித் திரும்பிபார்த்து சிரித்தவன், இப்பொழுது அவளைக் குழம்பி விட்டிருந்தான்.
“உண்மைலயே விசரனா மாறிட்டானா.. கடல்ல விழுந்த அதிர்ச்சில புத்தி பிசகிட்டு போலயே..” வானதியின் மைண்ட் வாய்ஸ்