அத்தியாயம்: 19
ரவிகிருஷ்ணாமூர்த்தியின் இல்லம். வெண்மதி கோயிலுக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரம். இரும்பு கேட்டைத் திறந்துவிட்ட ஓட்டுனர், மகிழுந்தைச் சாலைக்கு இறக்கிக்கொண்டிருந்தார்.
பட்டாடை சரசரக்க, பூஜை கூடையுடன் வெளியே வந்த வெண்மதியின் முகத்தை அறைந்தது அந்த வெளிச்சம்.
அது இரு சக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு. தங்கள் காலணியில் யார் இன்னேரம்? என்று காரில் ஏறாது உற்று நோக்க, அவர் முன் வந்துநின்றது ஒரு பைக்.
யார் எனப் புருவம் சுருங்கப் பார்த்தவர், ஓட்டி வந்தவன் தலைகவசத்தைக் கலட்டியதும், அதிர்ச்சியில் விழி விரித்தார்.
"அருளு...." என்ற கூவலுடன்,
"இத்தன வர்ஷம் கழிச்சி இப்பவாது அம்மாவ பாக்கணும்னு தோணுச்சே. ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா... முடி வெட்டிட்ட போலயே!… உடம்புதான் எலும்பா இளைச்சிருக்கு!" என்று கண்களில் நீர் வடிய மகனை உச்சி முகர்ந்தார் வெண்மதி.
"நான் நல்லாத்தான் இருக்கேன். நீங்கதான் ரெண்டு வேளையும் சாப்பாட்ட குடுத்து விட்டுறீங்களே! அப்பறம் எங்க இருந்து இளைக்குறதாம்!" என்றவன் அவரின் கையில் இருந்த பூஜைக் கூடையைப் பார்த்தவிட்டு,
"கோயிலுக்கா?"
"ஆமாம்ப்பா... நீயும் வாரியா? பைக்க இங்க வச்சிட்டு வா. கார்ல போகலாம்." என்க,
"பெருமாள் கார்ல வந்தாத் தான் ஆசிர்வாதம் பண்ணுவாரா! பைக்ல வந்தா மாட்டாரா!" என நக்கலாக கேட்டான்.
"உங்கூட பைக்ல வந்தா, என்னைக் கோயில்லயே இறக்கி விட்டுட்டு நீ வேலைக்கு போய்டுவ. பைக்க இங்க வச்சிட்டு வந்தா. நீ அதை எடுக்குற சாக்குல மறுபடியும் வீட்டுக்கு வருவா!" என்றார் சிறு பிள்ளைபோல்.
தாயின் ஏக்கம் அது. அவரின் கால்களைக் கட்டிக் கொண்டு முந்தானையைப் பிடித்துபடி சுற்றிய மகன் மொத்தமாக ஒதுக்கி வைத்தால் எப்படி? ஏக்கமும் பாசமும் போட்டி போட்டுக்கொண்டு வந்தது. அவரின் ஆசையைப் புரிந்துகொண்டவன்.
"சரி கார்லயே வர்றேன். இந்த ஆகாஷ் பயலுக்கு நாளக் கழிச்சி கல்யாணம். பொண்டாட்டிகூட அந்த வீட்டுலதான் குடும்பம் நடத்தப்போறான். அதுனால அவங்கூட இனி தங்க முடியாது. உங்ககூட இருக்கலாம்னு நினைச்சி வந்தேன்." என்றபடி இறங்கி பைக்கைத் தோட்டத்தில் நிறுத்தினான்.
"அருளு... நீ… நிஜமாவா சொல்ற?" என்றார் அவனின் கரத்தைப் பற்றிக்கொண்டு.
"நிஜம் ம்மா. அந்த வீட்டுல இருந்த திங்ஸ் எல்லாத்தையும் மூட்டை கட்டிடேன். ட்ரக் இப்ப வந்திடும். உங்களுக்கு ஆட்சேபனைனா சொல்லுங்க. வேற வீடா பாத்து தங்கிக்கிறேன்." என்றவனைக் கையோடு இழுத்துக்கொண்டு வந்தார் வீட்டிற்கு.
"ம்மா, பெருமாள்… அவரு காத்திட்டு இருக்கப்போறாரு!"
"இருக்கட்டும். நீ போய் முதல்ல குளிச்சிட்டு வா. நான் உனக்கு கிச்சடி செஞ்சி வைக்கிறேன். சாப்டுட்டு சாவகாசமா சாமிய பாப்போம். எத்தன வர்ஷம் கழிச்சி எம்பையன் எங்கூட பேசுறான். இங்கயே இருக்கப் போறேன்னு வேற சொல்றான். அதைக் கொண்டாட பாயாசம் செய்யப்போறேன்." எனப் பரபரத்தார்.
"பாசி பருப்பு பாயசம்?"
"ஹாங்... அதே தான். கன்னிம்மா... கன்னிம்மா எங்க இருக்க. உடனே சமயக்கட்டுக்கு வா. நிறைய வேலை இருக்கு." என்று வேலையாளை அழைத்தபடி சமையலறைக்குள் புகுந்துகொண்டார்.
காலை வேளை நடைபயிற்சி முடித்து வந்த ரவிகிருஷ்ணா, மகனை ஒரு பார்வை பார்த்து விட்டுச்சென்றார்.
இவரின் தயவை நாடி வந்திருப்பது போன்ற ஏளனம் இருந்தது. அவரைப் பற்றித்தெரிந்தவன், கண்டு கொள்ளாது தன் அறைக்குள் சென்றான்.
மூன்றரை ஆண்டுகளுக்கு முன் எப்படி விட்டுச்சென்றானோ அப்படியே பாதுகாத்து வைத்திருந்தார் வெண்மதி.
அரை மணிக்கும் குறைவான நேரத்தில் உணவு மேஜையை நிரம்பிவிட்டார் வெண்மதி.
"கன்னிம்மா, காரச் சட்னிய இங்க வைச்சிட்டு பில்டர்ல காபிய போடு. ஸ்ராங்கா இருக்கணும்." என்று உற்சாகமாக சொல்லிக்கொண்டிருந்தவர்,
"என்ன அத்தை? இன்னைக்கி இவ்ளோ பதார்த்தம் செஞ்சி வச்சிருக்கீங்க? எதுவும் விசேஷமாக?" என்று கிச்சடியே எடுத்து வாயில்போட்டு சுவைத்த சுஜித்ராவை முறைத்தார்.
அவரின் பதிலைக்கூட எதிர் பாராது தட்டில் வேண்டியதை போட்டுக்கொண்டு உக்கார்ந்துவிட்டாள்.
அவளைப் பார்க்க பார்க்க பற்றிக்கொண்டு வந்தது வெண்மதிக்கு. அவர்தான் அண்ணன் மகள், உறவு விட்டுவிட கூடாது என்று சுஜித்ராவைத் தன் மூத்த மகனுக்குக் கேட்டது. சிவ தாண்டவமும் நாகேஸ்வரியும் பேரானந்தத்துடன் மகளைத் தாரை வார்த்துக்கொடுத்தனர். ஸ்ரீஜா படிப்பு முடியவும் வர்மாவிற்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என்று பேசிகூட வைத்திருந்தார்.
ஏன்தான் அவளை மருமகளாக்க கேட்டோம்? என்று வருந்தும் நிலைக்கு திருமணம் முடிந்த இரண்டாம் மாதமே வந்துவிட்டார். டிஜிட்டல் அடிமையான நவநாகரீக மங்கை அவள் என்பதையும், சுயநலத்தின் முழு உருவம் என்பதையும் புரிந்தும் பல்லைக் கடித்துக்கொண்டு அமைதியாக இருக்கிறார்.
ஏனெனில் மணிமாறன் அவளுடன் சந்தோஷமாக உள்ளான். ஆனந்தமாக குடும்பம் நடந்துகின்றனர்.
வெண்மதி எதாவது சொல்லப் போய், சுஜித்ரா, 'என்னைக் கொடுமைப்படுத்துறாங்க. என்னோட சுதந்திரத்தைப் பறிக்கிறாங்க.' என்று கண்ணைக் கசக்கியபடி தாய் வீட்டிற்குச் சென்றால், நாகேஸ்வரியின் விஷத்திற்கு பணிய வேண்டிவரும்.
வழக்கறிங்கராக இருக்கும் சிவ தாண்டவம் தான் ரவிகிருஷ்ணாவின் ஆஸ்தான சட்டஆலோசகர். நிதி நிறுவனம் நடத்தும் அவரின் மீது தொடுக்கப்படும் வழக்குகளை லாவகமாக வாதாடி வெற்றி வாங்கித்தருபவர்.
அவருடன் இருக்கும் நல்லுறவை முறிக்கப்பார்க்கிறாயா? என்று கணவனிடம் பேச்சு வாங்க வேண்டிவரும்.
அடுத்ததாக, பொண்டாட்டி தான் உலகம் என்று மதி மயங்கிச் சுற்றும் மகனை எதிரியாக்கும் நிலை வரும் என்பதால் பொறுமையாக இருக்கிறார்.
"காலங்காத்தால எழுந்து குளிக்க கூட வேண்டாம். பல்லையாது விளக்கிட்டு ரூம விட்டு வெளில வந்திருக்கலாம்!" என்று முணுமுணுத்தவர்,
"ச்சீ... என்ன பொண்ணோ!" என்று முறைத்தபடி சென்றார்.
அவரால் அவ்வளவுதான் செய்யமுடிந்தது. அவர் சண்டை போடும் ரகமல்ல. குரல் உயர்த்தும் ரகமல்ல. இதழ்களுக்குள் வார்த்தைகளை மென்று முழுங்கி விட்டு முறைப்பை மட்டுமே காட்டும் குணம்.
மனைவி கேட்ட அதே கேள்வியைக் கேட்டபடி, கோர்ட் சூட்டுடன் தயாராகி வந்திருந்தான் மணிமாறன்.
அவனுக்குப் பதில் சொல்லும் முன் படிகளில் வர்மா இறங்கி வரும் சத்தம் கேட்டது. அலுவலகம் செல்ல ஏதுவாய்த் தயாராகி வந்திருந்தான். கனகச்சிதமாக இருந்தது அவன் அணிந்த உடை.
மாறன் நிமிர்ந்து ஒரு வெற்றுப் பார்வை பார்த்து விட்டு தட்டில் கவனமானான்.
"மச்சீ...." என்று கூவிக் கொண்டு சுஜித்ரா வர்மாவைக் கட்டியணைக்கச் செல்ல, தன் ஒற்றைப் பார்வையில் அவளை நடுங்க வைத்திருந்தான் வர்மா. அவன் முறைக்கவும் அடங்கிவிட்டாள்.
நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவன் தன் அண்ணனிடம், “எப்படி இருக்க மாறா?” என்க, அவன் எதுவும் சொல்லாது எழுந்துசென்று விட்டான்.
வர்மாவின் இளமை காலத்து செலவுகளுக்கு மாறன் தான் பொறுப்பு. ரவிக்குத் தெரியாது நிறைய செய்வான் தம்பிக்காக. அண்ணன் என்ற மரியாதை வர்மாவிற்கு எப்பொழுதும் உண்டு. செல்லும் அவனின் முதுகை வெறித்தவனுக்குள் அமர்த்தலான புன்னகை மட்டுமே இருந்தது.
"இது யாரு?" என்றது ஒரு பிஞ்சு. அது சுஜித்ராவின் மூன்று வயது மகள். அச்சு அசலாக மணிமாறன் சாடையில் இருந்தவளைத் தூக்கி மேஜையில் வைத்து கன்னம் கிள்ளி முத்தமிட்டவன்,
"நான் உன்னோட சித்தா... பேரு அருள்மொழிவர்மன். உன்னோட பேரு என்ன?" என்றதும் களுக்கெனச் சிரித்தாள் சுஜித்ரா.
"கலி காலம் பாத்தீங்களாத்தை! எம்மகளுக்குச் சித்தப்பான்னு ஒருத்தன் இருக்குறதே இப்பத்தான் தெரியுது. மூணு வயசுக்கு அப்றம் வந்து பேரு என்னன்னு கேட்டு தெரிஞ்சுக்கிறான். சிரிப்பா இல்ல." எனச் சிரிக்க, உடன் யாரும் புன்னகைக்கவில்லை.
வினியா பிறந்த போது எவ்வளவோ முறை அழைத்தும் வர்மா வந்து பார்க்க மறுத்துவிட்டான். அதைக் குத்திக்காட்டி பேசினாள். வினியாவுடன் பேசியபடி உண்ட வர்மாவும், பேத்திக்கு ஊட்டி விட்ட வெண்மதியும் கண்டுகொள்ளாதது அவளுக்கு அவமானம் இருக்க வேண்டும். முகத்தைச் சுருக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
"இன்னைக்கு ஆஃபிஸ் போகணுமா அருளு?" என்று ஏக்கத்துடன் வெண்மதி கேட்க,
"ஆகாஷ் லீவுல இருக்கான். அவன் பாக்க வேண்டியதை, சேத்து செய்யணும் ம்மா. அதுனால கொஞ்சம் வேலை அதிகமா இருக்கும்."
சுஜித்ரா, "ஆகாஷ்ஷா!! இன்னுமா நீ அந்த லோக்ளாஸ் கூட சுத்திட்டு இருக்க. முதல்ல இந்த மிடில் க்ளாஸ் நட்ப வெட்டி விடு. உங்க அண்ணன மாதிரி ஹைக் கிளாஸ் ஆளுங்க கூட பழகு. அப்பத்தான் நீ முன்னோருவ. தகுதி தராதரம் இல்லாதங்க கூட பழகி பழகி நீயும் அந்த லோக்ளாஸ் மாதிரி நடந்துக்கிற. உன்னைப் பாத்தாலே பரிதாமா இருக்கு. டப்பா பைக். பாடாவதியான ட்ரேஸ். காசு ஏதுவும் வேணும்னா கூச்சப்படாம கேளு மச்சி. மாசா மாசம் உங்கைல சேர்ற மாதிரி என்னால ஏற்பாடு பண்றேன்.” என்று பெருந்தன்மையோடு சொல்ல,
"உன்னோட கருணை நன்றி. ஆனால் எனக்குத் தேவைப்படாது. நான் வளமா என் தேவைக்கு சம்பாதிக்கிறேன். அதுபோது எனக்கு. உனக்கு என்ன மாதிரி லோக்ளாஸ் கூட உக்காந்து சாப்பிட பிடிக்கலன்னா ரூம்க்குள்ளயே இரு. இல்லை வீட்டு விட்டு வெளிய போய்டு.” என்று அழுத்தமாகச் சொல்ல,
"வெளியவா! அதைச் சொல்ல உனக்கு உரிமை இல்லை." என்று கோபமாகச் சொன்னாள்.
"அதே தான். என்னோட லைஃப்லயும் உனக்கு எந்த உரிமையும் கிடையாது." என்றதும்,
"ஒன்னுமில்லாத பயலுக்கு வாய் ரொம்பத்தான்." என்றுவிட்டு எழுந்து சென்றுவிட்டாள்.
"இவால்லாம் மாறவே மாட்டா! எப்படித்தான் இதுகூட உயிர் வாழ்றியோம்மா?"
"அதெல்லாம் பழகிடுச்சி." என்றவாறே, வினியாவை இறக்கிவிட்டு விளையாடும்படி பணித்தவர், அவனுக்கு அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு,
"யாரு டா அந்தப் பொண்ணு?" என்க, புரையேறியது வர்மாவிற்கு.
"ம்மா..."
"லவ்வுடா" என்றபடி தலையில் தட்டியவர், தண்ணீரை எடுத்து நீட்டினார்.
"...."
"சிங்கிள் சைடா? டபுள் சைடுமா?" என்க, வியந்துதான் போனான்.
"எப்படிம்மா லவ்வுன்னு அசால்ட்டா சொல்ற?"
"இத்தன வர்ஷம் தலை காட்டாதவன் இப்ப தலை காட்டுறன்னா, உன்னோட மனசுல இருந்த காயம் ஆறிடுச்சின்னு தான அர்த்தம். ஒரு காதல் தந்த வலிய இன்னொரு காதல் தான் போக்கும். என்ன! உன் அம்மாவோட கால்குலேசன் சரியா?"
"ரொம்பச் சரி."
"அப்ப சொல்லு! யாரு அந்தப் பொண்ணு?"
"எல்லாம் உனக்கு வேண்டிய பொண்ணுதான். சொந்தம்." என்று எழுந்துசென்று கைக்கழுவி விட்டுவந்தான்.
'சொந்தமா! யாரா இருக்கும்?' என்ற யோசனையுடனேயே, அவனுக்குப் பாயாசத்தைச் சிறிய கிண்ணத்தில் ஊற்றிக் கொடுத்தார்.
"கண்டு பிடிச்சிட்டீங்களா?"
"இல்ல டா. யாருன்னு பிடிபடல."
"உன் தாய் வீட்டு சொந்தம்."
"ஒருத்திக்கு கல்யாணமாகிடுச்சி. இன்னொருத்திக்கு ஆகப்போது."
"ரெண்டே ரெண்டு உடன் பிறப்பு தானா?" என்றதும் மண்டைக்குள் மணி அடிக்க,
"யாரு... அந்த சிலோன்காரியா!" என்று முகத்தை அஷ்டகோணத்திற்கு சுருக்க, உச்சுக் கொட்டியவன்,
"அதென்ன சிலோன்காரினு மட்டமா பேசுறிங்க. முகத்தை ஒழுங்கா வைங்க. நதிய நான் லவ் பண்றேன். அதை மட்டும் மனசுல வைங்க."
"அவ வாயாடி டா... ராங்கி பிடிச்சவ. ஒத்த வார்த்த பேச விடமாட்டா. சாட்டையா விளாசுவா. அன்னைக்கி சுஜித்ரா வாங்குன அடிய பாத்திட்டு, நான் ரெண்டு நாள் தூங்கல. அவ்ளோ கோபம் அவளோட முகத்துல. காளி மாதிரி இருந்தா.” என்று வெண்மதி சொல்லச் சொல்ல, வர்மாவின் முகத்தில் ஒரு மந்தகாசமானப் புன்னகை.
“நீ வேற அவளக் காதலிக்கிறேன்னு சொல்ற. நாளைக்கி உங்களுக்கு கல்யாணமாகி, நான் எதாவது சொல்லப்போய் எம்மண்டைய உடைச்சிட்டான்னா! ஐய்யோ... ஏற்கனவே அண்ணே மகள்னு கூட்டீட்டுவந்து நான் படுற பாடு போதாதுன்னு இன்னொருத்தியையும் கூட்டீட்டு வரப்பாக்குறியா. நீ மட்டும்தான் அம்மாக்கு இருக்குற ஆறுதல். நீயும் உங்கண்ணே மாதிரி பொண்டாட்டி பேச்ச கேட்டுட்டு அவ பின்னாடியே போய்ட்டா நான் என்னடா பண்ணுவேன்." என்று புலம்ப,
"அப்ப வானதிய எனக்குக் கல்யாண பண்ணி வைக்க நீங்க தயாராத்தான் இருக்கீங்க?" என்றவனின் கன்னம் தடவியவர்,
"ஏற்கனவே உன் ஆசைக்குத் தெரியாமத்தான், இத்தனை வர்ஷம் உன்னைவிட்டு பிரிஞ்சு இருந்தேன். இனியும் மாட்டேன். எனக்கு உன்னோட சந்தோஷம்தான் முக்கியம். அது அந்த வானதிகிட்ட இருக்குன்னா அவளக் கொண்டுவந்து உங்கிட்ட கேக்குறதுதான் என்னோட முதல் வேலையே. அதுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்."
"நிஜம்மா?"
"சத்தியம் டா."
"அப்பபோய் உங்கண்ணேகிட்ட பொண்ணு கேளுங்க? என் கல்யாணத்த ரெண்டு பக்கமும், பிரச்சினை வராம நடத்தி வைங்க."
"அதெல்லாம் பிஸ்கோத்து விசயம். கல்யாணம் கண்பார்ம். ஸ்ரீஜா கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னோடத முடிச்சிடுவோம்." என்றவர் முகூர்த்தத்திற்கே நாள் பார்க்க,
"நான் சொன்னத நீங்க சரியா கேக்கலன்னு நினைக்கிறேன். ரெண்டு பக்கமும் சந்தோஷமா மேடைல வந்து நிக்கணும்..."
"உங்கப்பா சம்மதிக்க மாட்டாருன்னு நினைச்சி சொல்றியா? முப்பத்தி நாலு வர்ஷம் அந்த மனுசன சரிக்கட்டி சாமாளிச்சி குடும்பம் நடத்த தெரிஞ்ச எனக்கு, அவர்ட்ட எப்படிப் பேசுனா வழிக்கு வருவாருன்னு நல்லவே தெரியும்."
"உங்க உடன் பிறப்புங்க?"
"செந்தூர் ஆட்டத்துலயே கிடையாது. எது செஞ்சாலும் சந்தோஷம்னு தான்னு சொல்வான். அதுலயும் அந்தப் பிள்ள வானதிக்குன்னா ரொம்ப குசியாகிடுவான். பெரியண்ணேதான் குதிக்கும். ஆனா லவ்வுன்னு சொல்லிட்டா மறுத்து நம்ம முன்னாடி பேசமாட்டாரு. புருஷனும் பொண்டாட்டியுமா! பின்னாடி பேசிட்டு போற பத்தி கவலைப்படவேண்டாம். அப்றம் சகாயம் அண்ணே! நான் போய் கேட்டா அவரு மாட்டேன்னு சொல்லவே மாட்டாரு தெரியுமா!. எம்மேல அவருக்குப் பாசம் ஜாஸ்தி."
"அவரு மாட்டாரு தான். ஆனா அவரு பெத்து வச்சது பேசும்.” என்றவனுக்கு அகாடமியில் கரிகாலன் வானதியின் கரம்பற்றி இழுத்துச் சென்றது நினைவுவந்தது. கூடவே அவனின் உக்கிரப்பார்வையும்.
“உங்கண்ணே மகனுக்கு இருக்குறது நாக்கே கிடையாது. தேள் கொடுக்கு." என்க,
"எதுக்குப் பேசப் போறான். நீங்க ரெண்டும் பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் காதலா இருக்கும்போது கரிகாலன் என்ன செஞ்சிடுவான்? அவன் தங்கச்சி நம்ம பக்கம் டா."
"அப்படின்னு யார் சொன்னா?" என்றவன் அவர் ஆரம்பத்தில் கேட்ட சிங்கிளா? டபுளா? என்றதற்கு இப்போது பதில் சொன்னான்.
"ஒரு தலைக் காதலா?"
"ம்…” என்றதும் வெண்மதி முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே.
“நான் மட்டும்தான் இப்ப அவள லவ் பண்றேன்."
"நீ காதலிக்கிற வியசம் அவளுக்குத் தெரியுமா? இல்ல இதயம் முரளி மாதிரி காதலிக்கிட்ட கூடச்சொல்லாம பொத்தி வச்சிருக்கியா?” என்றபோது அவரின் குரலில் நக்கல் தூள் பறந்தது.
"அதெல்லாம் சொல்லிட்டேன்."
"என்ன சொன்னா?" என்று மகனின் முகம் பார்க்க, அதில் கலவையான உணர்வுகள் ததும்பி இருந்தன.
“உன்னை வேண்டாம்னு சொல்லிட்டாளா!” என்க, அப்படிச் சொல்லியிருந்தால் கூட அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கலாம்.
அவளோ!!!
‘நீங்கள் காதல் செய்ங்கள். நான் வேணாம் என்கல. நானும் செய்கிறேன். மறுக்கல. ஆனால் நாம ரெண்டு பேரும் காதல் செய்யமுடியாது.’ என்றிருந்தாளே!.
"அவளுக்கு எம்மேல காதல் இருக்கும்மா. ஆனா ஏதோ அவளத் தடுக்குது." என்றவன் அனைத்தையும் சொல்லி முடித்து, அயர்வுடன் தலையைப் பிடித்துக்கொள்ள,
"எனக்கு அதுக்கானக் காரணம் தெரியும்.” என்றார் வெண்மதி.
"என்ன?" என அவன் புருவம் சுருக்க,
அவர் வருந்தும் குரலில், “அந்தப் பொண்ண செந்தூர் கூட்டீட்டு வந்ததுல இருந்த அவளோட அம்மா செஞ்ச வேலையக் குத்திக்காட்டி எவ்ளோ பேசிருப்போம். இந்த வீட்டில இருக்க உனக்கு என்ன தகுதி இருக்குன்னு எத்தன பேசினா இந்த சுஜித்ரா. அதெல்லாம் அந்தப் பொண்ணு மனசுல வடுவா இருக்கத்தான செய்யும்.” என்றவர் கூற்று சரியெனப்பட்டது.
அவளே சொன்னாலே தகுதியைப் பற்றி. அந்தத் தகுதியைப் பார்த்ததால் தான் வர்மா, வானதியைத் திரும்பியும் பார்க்காமல் இருந்தது.
தவறு செய்துவிட்ட முகபாவனையுடன் அவன் அமர்ந்திருக்க, “நீ எதுக்கும் வருத்தப்படாத. நான் இருக்கேன். எல்லாத்தையும் நான் எப்படிச் சமாளக்கிறேன்னு மட்டும் பாரு.” என்றார் உற்சாகத்துடன்.
வானதியின் இறந்த காதலையும், மகனின் நடப்பு காதலயும் இணைத்து எதிர்கால இல்லறமாக உருமாற்றும் திட்டத்தில் இறங்கினார் வெண்மதி.

Last edited: