அத்தியாயம் 13
திருவனந்தபுரம் செல்ல இரண்டு மணி நேரம் ஆகும்.
அனன்யா ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டே வர.
“அனன்யா பேபிக்கு இன்னைக்கு தூக்கம் வரலையா?” என்றான் அஸ்வின்.
“இல்லை.” என்றாள் அனன்யா.
“இன்னும் என்னோட பேபிக்கு கோபம் போகலை போல.”
“...” அவளிடம் பதில் இல்லை.
“நீ எதிர்ப்பார்த்தது கிடைக்கலைனு கோபமா?”
அவனை திரும்பி பார்வையாலே எரித்தாள் அனன்யா.
“நீ ஓகேனு ஒரு வார்த்தை சொல்லு. இப்போ கூட தர நான் ரெடி.” என்றான்.
“இடியட்… என்கிட்ட இப்படி பேசாதே.”
“பேபி… உன்கிட்ட மட்டும் தான் என்னால் இப்படி பேச முடியும். நீ இன்னும் பேபியாவே இருக்க, உன்னை வைத்துக் கொண்டு நான் என்னென்ன கஷ்டப்பட போறேனோ.”
“அதை நினைத்து நீங்க கவலை பட வேண்டாம். அந்த கஷ்டம் உங்களுக்கு இல்லை.”
“நான் தான உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேன். அப்போ நான் தான் கவலை படணும்.”
“அஸ்வின்… உன் கிட்ட பேச எனக்கு விருப்பம் இல்லை. நான் தூங்க போறேன்.
“எனக்கும் அது தான் வேணும். வா வந்து என் தோளில் சாய்ந்து, தூங்கு.” என்றான்.
“நோ” என்றவள் ஜன்னலில் சாய்ந்து கொள்ள.
பத்து நிமிடங்கள் கழித்து, அவள் தூங்கி விட்டாள் என்று நினைத்து அவளின் தலையை தன் தோளில் சாய்த்துக் கொண்டான் அஸ்வின்.
அனன்யா தூங்கவில்லை, எங்கு எழுந்துக் கொண்டால், பேசியே சாகடிப்பான் என்று நினைத்து, தூங்குவது போலே நடித்தாள்.
அஸ்வினும் வாய் உள்ளே சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தான். பின் அவள் கஷ்டப்படுவதை உணர்ந்தவன், “அனன்யா… ஒரு ஃப்ரெண்ட் தோளில் சாய்ந்து தூங்குறதா நினைத்துக் கொள்.” என்றான்.
அவள் இயல்பாகி, அப்படியே தூங்கி போனாள்.
“அனன்யா… திருவனந்தபுரம் வந்துட்டோம். இனி எங்க போறதுனு டிரைவர் கேட்கிறார்.” என்று அஸ்வின் அவளை எழுப்பினான்.
தூக்கம் கலைந்து எழுந்தவள், கொஞ்சம் தெளிந்த பின், “நேப்பியர் அருங்காட்சியகம் (Napier Museum) பக்கத்தில் இருக்க ஹோட்டலுக்கு போங்க. அண்ணா.” என்றாள்.
ஹோட்டலில் சாப்பிட்டு முடித்தவர்கள், பக்கத்தில் இருந்த நேப்பியர் அருங்காட்சியகம் சென்றனர்.
இந்த அருங்காட்சியகம் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
கேரளாவின் பழமையான வெண்கலச் சிலைகள், தந்தக் கலைப்பொருட்கள், கோவில் தேர் மாதிரிகள், பழங்கால ஆயுதங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
அங்கு சுற்றிப் பார்த்த பின் இவர்கள், அருங்காட்சியகம் அருகில் இருந்த ஸ்ரீ சித்ரா கலைக்கூடம் (Sree Chitra Art Gallery) சென்றனர்.
அங்கு புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மா அவர்களின் ஓவியங்கள் இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், முகலாய, ராஜ்புத் மற்றும் கேரள பாரம்பரிய ஓவியங்களையும் காணலாம்.
சீனா, ஜப்பான், திபெத் போன்ற நாடுகளின் ஓவியத் தொகுப்புகளும் இருந்தது.
அந்த இடத்தையும் பார்த்துவிட்டு, இவர்கள் வேனில் ஏறினர்.
“பிரண்ட்ஸ்… ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுக்கலாமா? இல்லைனா இந்தியாவிலே மிகப்பெரிய மாலான லூலூ மால் போகலாமா?” என்று கேட்டாள் அனன்யா.
பெண்கள் அனைவரும் சத்தமாக, “லூலூ மால் போகலாம்” என்று கத்தினர்.
வேன் லூலூ மால் சென்றது. “என்ன இவ்வளவு பெருசா இருக்கு. இதை சுற்றி பார்க்கவே ஒரு நாள் போதாது போலவே.” என்றான் ஹரிஷ்.
“சரி வாங்க சீக்கிரமா போகலாம் டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்.” என்றாள் சுவாதி.
“பார்த்தியா டா மச்சான், இவ க்ளாஸ்ல டீச்சர் கிட்ட தேவையில்லாத கேள்வி கேட்டு ஒரு மணி நேர க்ளாஸ்ஸில் பாடம் சொல்லி தராத மாதிரி பார்த்துப்பா. இங்க மாலுக்குள்ள சீக்கிரம் நுழையணுமா டைம் வேஸ்ட் பண்ண கூடாதுனு சொல்றா. வேடிக்கையா இல்ல” என்றான் ஈஸ்வர்.
“பிரண்ட்ஸ் ஒரு நிமிஷம். இந்த இடத்தை ஒன்னா சுற்றி பார்க்க முடியாது. உங்களுக்கு பிடித்த இடத்துக்கு தனித்தனியா போங்க, நல்லா என்ஜாய் பண்ணுங்க. நைட் நைன் ஓ கிளாக்குள்ள டின்னர் முடிச்சிட்டு, கீழே வேனுக்கு வந்திடணும்.” என்றாள் அனன்யா.
“ஓகே” என்றவர்கள் அனைவரும் குரூப் குருப்பாக ஆளுக்கொரு பக்கம் சென்றுவிட்டனர்.
அனன்யாவிற்கு மால் அவ்வளவாக பிடிக்காது. விலை உயர்ந்த பொருட்களே கிடைக்கக்கூடிய இடம் தான் மால்.
‘அது என்னவோ பிராண்ட் என்பது மக்களை முட்டாளாக்க உருவாக்கப்பட்டதோ என்பதே அவளின் எண்ணம்.
என்ன தான் தரமான மூலப்பொருள் கொண்டு பொருளை உருவாக்கினாலும், அதிக லாபம் வைத்து இங்கு வர்த்தகம் செய்ய பிராண்ட் தான் காரணம்.
பிராண்ட்டை காட்டி தங்கள் செல்வ நிலையை உயர்த்திக் காட்ட மக்கள் அனைவரும் நினைக்கின்றனர். இந்த பிராண்ட் வலையில் சிக்குவது பெரும்பாலும் மிடில் கிளாஸ் மக்கள் தான்.
அம்மாவும் கடைசியா இதுமாதிரி ஒரு பிராண்டடு டிரஸ் கம்பெனியில் தான் வேலை செய்தாங்க. நாம எவ்வளவு தடுத்தும் அங்கு வேலை செய்தாங்க’ என்று நினைத்துக் கொண்டே உள்ளே வந்தாள்.
திருவனந்தபுரம் மற்ற கேரள இடங்களை விட கொஞ்சம் வெப்பமாக தான் இருக்கும். அந்த வெப்பத்தை ஃபுல் ஏசி மால் போக்கியது.
“அப்படி என்ன யோசிட்டே வர?” என்றான் அஸ்வின்.
“ஒன்னும் இல்லையே.”
“நீ ஷாப்பிங் போகலையா? வர்கலால அவ்வளவு வாங்குன. இங்க எதுவும் வாங்கலையா?”
“எனக்கு எங்க பிடிக்குமோ அங்க தான் வாங்குவேன்.” என்றாள் அனன்யா.
“சரி வரியா படமாவது பார்க்கலாம்.” என்றான் அஸ்வின்.
“நீங்க போங்க. எனக்கு வேறு வேலை இருக்கு.”
“என்ன வேலை?”
கடுப்பான அனன்யா, “மாலை கூட்டுற வேலை.”
“சரி வா இரண்டு பேரும் சேர்ந்து செய்யலாம்.”
அவனை பாவமாக பார்த்த அனன்யா, “உனக்கு இப்போ என்ன வேணும்? என்ன தனியாவே இருக்க விட மாட்டியா?”
'இந்த ஹரிஷ் வேற தேவைப்படும் போது எங்காவது போயிடுவான்.’ என்று அனன்யா மனதில் நினைக்க.
“அவன் ஃபன் சோன்ல விளையாட போனான்.”
அவனை கோபமாக பார்த்து பல்லை கடித்த அனன்யா, “அதான் மனசில் நினைக்கிறது தெரியுதுல, கொஞ்சம் என்னை தொந்தரவு செய்யாம போறது.” என்றாள்.
“ஓகே.” என்றவன் சென்றுவிட.
முன்பு தோன்றாத தனிமை உணர்வு, அவளுக்குள் வந்தது, எஸ்கலேட்டர் வழியாக ஒவ்வொரு ப்ளோராக சென்று எந்த கடைக்கும் போகாமல் வெளியே நடந்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அவளின் கண்களில் சிக்கியது ஏ.ஹச் ஃபேஷன் ஹவுஸ், அதன் உள்ளே இவள் செல்ல. அங்கிருந்த சில உடைகள் அஸ்வின் அணிந்திருந்தது மாதிரியே இருந்தது.
'அம்மா ஞாபகமா இந்த கடைக்கு வந்தா. என்ன இவன் தான் ஞாபகத்திற்கு வரான். சரியான இடியட்.’ என்று மனதில் அவனைத் திட்டினாள்.
“எனக்கு டிரஸ் வாங்க தான் இங்க வந்த. நான் இந்த பிராண்ட் தான் போடுவேன்னு.” என்று அஸ்வின் அருகே கேட்க.
தலையில் கை வைத்துக் கொண்டே திரும்பி அவனை பார்த்த அனன்யா, “ இல்லை.” என்றாள்.
“அப்புறம் இங்க நீ என்ன செய்ற?”
“எங்க அம்மா எனக்கு பார்த்த மாப்பிள்ளைக்கு டிரஸ் வாங்க வந்தேன் போதுமா.” என்றாள் அனன்யா கண்டிப்பாக.
“அப்போ ஓகே. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்.”
'இவன் அதிர்ச்சியாகி சோகமா வெளியே போவான்னு பார்த்த' என்று அவளை நினைக்க.
“அந்த சீன் இங்கு இல்லை.” என்ற அஸ்வின். அவன் போட்டிருந்த உடைகளையே அவளிடம் காட்ட.
“வேண்டாம்.” என்றவள், அவன் போடாத டிரஸ் ஒன்றை எடுத்துக் காட்டினாள்.
“இது நல்லாருக்கு. இதே வாங்கிக்கோ.” என்றான். அவளும் பே பண்ணி, வாங்கி விட்டு வெளியே வந்தாள்.
“பியூட்டி…” என்று ஹரிஷ் கத்த.
இரண்டு மூன்று பேர் திரும்பி பார்க்க, அனன்யா கோபமாக, “ஏன் டா இப்படி கத்தி மானத்தை வாங்குற? அட்லீஸ்ட் அக்கான்னு கூப்பிட வேண்டியது தான” என்றாள்.
“நீ எனக்கு அக்கா இல்லை.”
“சரி சொல்லு எதுக்கு கூப்பிட்ட?”
“12D சோ இருக்கு பார்க்கலாம்.” என்றான்.
“வா பார்க்கலாம்.” என்று இவளும் உடனே சென்றாள். அஸ்வினும் அவர்கள் பின் சென்றான்.
மூவரும் இருபது நிமிட கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்துவிட்டு வெளியே வந்தனர்.
“சரி வாங்க சாப்பிட போகலாம்” என்றான் ஹரிஷ்.
ஃபுட் கோர்ட் முழுவதும் சுற்றி, தங்களுக்கு பிடித்ததை வாங்கிக் கொண்டு வந்து உட்கார்ந்தனர். உடலுக்கு தான் கேடு ஆனால் வாய்க்கு ருசியாக இருந்த உணவை ஒரு பிடி பிடித்தனர்.
மணியும் ஒன்பதை நெருங்க, இவர்கள் வேனிற்கு சென்றனர். பத்து நிமிடத்தில் மற்றவர்களும் வந்துவிட, வேன் ஹோட்டலை நோக்கி சென்றது.
“பிரண்ட்ஸ் நாம இங்க டூ நைட்ஸ் தான் தங்க போறோம். அதுவும் தூங்க மட்டும்தான் ரூமுக்கு வருவோம். அதனால், கொஞ்சம் சிம்பிளான ரூமா தான் புக் செய்து இருக்கேன்.” என்றாள் அனன்யா.
“நோ ப்ராப்ளம்.” என்று பதில் வந்தது.
“ஓகே நாளைக்கு காலை ஆறு மணிக்கு ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலுக்கு தான் ஃபர்ஸ்ட் போறோம். டிரஸ் கோட் லேடிஸ் சாரி ஆர் ஹாஃப் சாரீ, ஜென்ட்ஸ் வேஷ்டி, துண்டு தான் போடணும். கோவிலுக்கு போயிட்டு வந்துட்டு வேறு டிரஸ் மாத்திட்டு அடுத்த இடத்துக்கு போகலாம். சரி இப்போ போய் ரெஸ்ட் எடுங்க.” என்றாள் அனன்யா.
டே - 9
“நம்ம எல்லோருமே ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலை பற்றி கேள்வி பட்டிருப்போம். இந்த கோவில் தான் உலகத்திலே அதிக செல்வம் உள்ள கோவில். நீங்க கேளவிப்பட்டிருப்பீங்க பாதாள அறைகளை பற்றி, அதுல இன்னும் ஒரு கதவு திறக்கப்படாமல் ரகசியமா இருக்கு.
இங்க பெருமாளின் திருமேனி 3 கதவுகள் வழியாக தரிசிக்கப்படுகிறது- தலை, நாபி, திருவடி.” என்றாள் அனன்யா.
அந்த கோவிலின் கட்டக்கலையை ரசித்தனர். காலையிலே சாமி கும்பிட்டு வந்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.
“பிரண்ட்ஸ் எல்லாரும் சீக்கிரமா டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க ஜூ (zoo) போகலாம்.” என்றாள் அனன்யா.
எல்லா இடங்களும் கோவிலுக்கு பக்கத்தில் தான் இருந்தது. ஜூ அருகில் இருந்த ஹோட்டலில் காலை உணவை முடித்துக் கொண்டனர். அதன் பின் டிக்கெட் வாங்கி ஜூ உள்ளே வந்தனர்.
“திருவனந்தபுரம் உயிரியல் பூங்கா இந்தியாவின் பழமையான உயிரியல் பூங்காக்களில் ஒன்று.” என்றாள் அனன்யா.
பெரியவர்களை காட்டிலும் குட்டீஸ் தான் மகிழ்ச்சியாக தெரிந்தனர்.
“இங்க பேட்டரி கார் வசதி இருக்கு. நடக்க முடியலைனா அதை யூஸ் பண்ணிக்கோங்க. சுத்தி பார்த்துட்டா குரூப்ல மெசேஜ் அனுப்புங்க. எல்லோரும் வர நேரம் பார்த்து மற்றவர்களும் வெளியே வந்துடணும்” என்றாள்
பல வகையான உயிரினங்கள் அங்கு இருந்தது. காலை நேரம் என்பதால் விலங்குகளும் சுறுசுறுப்பாக இருந்தது.
சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, மான், நீர்யானை, பல வகை பறவைகள் மற்றும் ஊர்வனங்களையும் இருந்தது.
அனன்யா தனியாக செல்ல. அவள் பின்னாலே வந்தான் அஸ்வின். இன்றும் ஹரிஷ் அவன் நண்பர்களோடு சென்றுவிட்டான்.
அனன்யா அவனோடு பேசாமல் சென்றுக் கொண்டிருந்தாள். கொஞ்ச தூரம் சென்றவளுக்கு கால் வலிக்க ஆரம்பிக்க, அருகில் இருந்த கேன்டீன் சென்று உட்கார்ந்தாள்.
அவளோடே அவனும் உட்கார்ந்தான். அவள் அவனை கேள்வியாக பார்க்க. “நான் தான் உன் கூட பேசவே இல்லையே அப்புறம் என்ன. மற்ற இடம் மாதிரி இல்லாமல் நேற்றும், இன்னைக்கும் எல்லோரையும் தனியா அனுப்பிடுற, அதான் நான் காலேஜ் பையன் மாதிரி உன் பின்னாலே வரேன்.” என்றான்.
“ஓகே.” என்றாள்.
“என்ன சாதாரணமா ஓகேன்னு சொல்லிட்ட. நீ பேசுனு சொல்லணும். உனக்கு என்னோட அருமை இப்போ தெரியாது, நான் உன்கூட இல்லன்னா தான் தெரியும்.” என்றான்.
அவள் கண்கள் கலங்கியது. “ஹே என்ன சும்மா பேசுறதுக்கு எல்லாம் இப்படி அழுற?”
“நீ பேசுனதுக்கு அழல. எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்தது.”
“சாரி அனன்யா.”
“இட்ஸ் ஓகே.”
அவள் ஆர்டர் செய்த ஜுஸ் வர, அதை குடித்தாள்.
அதன்பின் அஸ்வின் அவளிடம் எதுவும் பேசவில்லை, ஆனால் அவளோடு தான் நடந்தான்.
அவனின் அருகாமையே அவளுக்கு அமைதியை தர, அதன்பின் அவளும் அவனை எதுவும் சொல்லவில்லை.
இரண்டு மணி நேரம் சென்றிருக்க, ரோஜா பார்த்துவிட்டதாக மெசேஜ் செய்தாள். அதன்பின் அரை மணி நேரத்தில் கனி குடும்பத்தை தவிர அனைவரும் வந்துவிட. அனன்யா கனிக்கு கால் செய்தாள்,
“இன்னும் சுற்றி பார்க்க குட்டீஸ் ஆசைப்படுறாங்க அனன்யா.” என்றார் கவலையாக.
“இனி நாங்க லஞ்ச் சாப்பிட்டுட்டு, ரூம்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க தான் போறோம். உங்களுக்கு பிரச்சினை இல்லைனா, நீங்க பொறுமையா பார்த்துட்டு, ஆட்டோ பிடிச்சு ஹோட்டலுக்கு வந்துடுறீங்களா. ஈவினிங் அடுத்த இடத்துக்கு ஒன்றாக போகலாம்.” என்றாள்.
இவளும் ஜெய்யிடம் பேசிவிட்டு, “ஓகே அனன்யா. நீங்க முன்னாடி போங்க, நாங்க பார்த்துட்டு வரோம்.” என்றார்.
“ புரிஞ்சுகிட்டதுக்கு தேங்க்ஸ் அக்கா. பார்த்து கவனமா வாங்க.” என்றவள், மற்றவர்களை பக்கத்தில் இருந்த உணவகத்திற்கு அழைத்துச் சென்றாள்.
சாப்பிட்டு முடித்த பின் , இவர்கள் அறையில் ஓய்வெடுத்தனர்.
மாலை ஆறு மணி போல், அருகில் இருந்த குதிரமாளிகை அரண்மனை அருங்காட்சியகம் (Kuthiramalika Palace Museum) சென்றனர்.
"குதிரமாளிகை என்ற பெயர், அரண்மனையின் கூரையைத் தாங்கும் 122 மரக் குதிரைச் சிற்பங்களால் வந்தது.
கேரள பாரம்பரிய கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாக அந்த இடத்தை கருதுகின்றனர்.
இங்கு அரச குடும்பத்தின் பழமையான பொருட்கள்,
கதகளி உருவச்சிலைகள்,
பெல்ஜிய கண்ணாடிகள்,
கிரிஸ்டல் விளக்குகள்,
இசைக்கருவிகள்,
ஆயுதங்கள் மற்றும் ஓவியங்கள்,
இசை ஒலிகளை உருவாக்கும் மியூசிக்கல் ட்ரீன்னு பல பொருட்கள் இருக்கு.” என்றாள் அனன்யா.
நண்பர்கள் பட்டாளம் கவனமாக இடத்தை சுற்றி பார்த்து குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தனர்.
“என்ன ஹரிஷ் திடீரென ஆளே மாறிட்ட?” என்றாள் அனன்யா.
“நாங்க ஆர்கிடெக்சர் ஸ்டுடென்ட்ஸ். இந்த இடம் பழங்க கால கட்டிடக்கலையை எடுத்து சொல்லுது. அதான் கொஞ்ச விபரங்களை நோட் செய்றோம்.”
“விளையாட்டு தனமா இருக்கீங்கனு நினைத்தேன், படிப்புனு வந்ததும் எல்லோரும் ஒன்னா நோட்ஸ் எடுக்குறது நல்ல விஷயம்.” என்றாள் அனன்யா
“நாங்க எங்க படிப்பை ரொம்ப நேசிக்கிறோம்.”
“பார்தாலே தெரியுது. சரி சரி உங்க வேலையை பாருங்க.” என்றாள் அனன்யா.
அதன்பின் எல்லோரும் ஒன்றாக ஹோட்டல் சென்றனர், அருகிலே இருந்த உணவகத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டனர்.
“இன்னைக்கு போன இடம், எதுவுமே எனக்கு பிடிக்கலை.” என்றாள் ரோஜா.
“இங்க இருக்கிற இடத்தை தான் சுற்றி காட்ட முடியும்.” என்றான் ஹரிஷ்.
“இன்னும் ஒரு நாள் தான் இருக்கு இந்த ட்ரிப் முடிய. நாளைக்கு கண்டிப்பா உங்களுக்கு பிடித்தது போல் இருக்கும். நாளைக்கு காலையில் ஐந்து மணிக்கு ரெடியா இருங்க, நாம பொன்முடி போறோம். இப்போ எல்லோரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்றாள் அனன்யா.