நகரம் உறங்கும் நேரம் இது. வீதி போக்குவரத்து வாகன சத்தங்களும் அடங்கி விட்டது.
"கோல் எடுத்து பாத்தியா பிள்ள? நான் கதைக்கிறன், நீ ஃபோன பாத்துட்டு நிக்கிற என்ன பிள்ள" ஃபோன் தடவிக் கொண்டிருந்த மகளிடம் ராஜேஸ்வரி எரிந்து விழ,
"கொஞ்ச நேரம் பேசாம இருக்கிங்களா.." பிரார்த்தனாவும் பதிலுக்கு ஏறினாள்.
"நீ ஏன் பாஞ்சி கொண்டு வாராய்!"
"நானும் உங்களோட தானே இருக்கிறன்.. பாக்குறிங்க தானே.. விடிய எழும்புறன் வேலைக்கு போறன் திரும்பி வாரன்.. போனா ஒஃபிஸ். வந்தா வீடு. உங்கட மகள காண இல்லை எண்டு என்னப் போட்டு புடுங்குறிங்க? நம்பர் வேல செய்யல்ல.. யாருட்ட போய் கேட்க?"
"பிள்ளையா வளர்த்து வச்சிருக்கிறிங்க.. சின்னல்ல செல்லம் குடுத்து கெடுத்துட்டு, அவள்ட விருப்பத்துக்கு தான் நடக்கிறாள்.."
மகளைக் காணவில்லை என்ற தவிப்பை மூத்த பெண்ணிடம் தாய் காட்ட, தங்கை வரவில்லை என்ற கோபத்தை தாய் மீது மகள் காட்டுகிறாள்.
வாய்க்குள் முனகி மூக்கால் அழுத ராஜேஸ்வரி எழுந்து வாசலுக்கு சென்றார். கேட்டில் நின்று வீதியை நோக்கினார்.
சர்க்கரை நோயாளியான அவருக்கு சின்ன நகக் கீறல் கயம் ஆகி, நாள் பட்ட புண்ணாகி, கிருமித்தொற்றில் ஆழமாகி, வலது கால் விரல்களில் இரண்டை நீக்கி விட்டனர் இரண்டு வருடத்திற்கு முன்பு.
இனி கவனமாக இருங்கள் பாதத்தை வெட்டி நீக்கும் அபாயமும் வரலாம் என மருத்துவர்கள் எச்சரித்தமையால் வெளியே எங்கும் செல்லாமல் தன்னை முடக்கிக் கொண்ட ராஜேஷ்வரிக்கு மனம் உடல் இரண்டிலும் காயத்தின் தழும்புகளே எஞ்சியுள்ளன.
கேட்டில் நின்று வீதியை வெறித்தவரை "பிள்ள வரல்ல என்றத ஊருக்கே சொல்லாதிங்க. தயவு செய்து உங்களுக்கு வாங்க" என அழைத்து வந்து அமர்த்தியவளுக்கும் இக் கணம் என்ன செய்வது என்று தெரியவில்லை.
பத்துக்கும் பனிரெண்டுக்கும் இடையே சில நிமிடங்களே இருந்தது போல, காத்திருக்கும் பொழுது நள்ளிரவைத் தொட, அப்பா மகன் இருவரும் வீட்டை அடைந்தும் நிலானி வந்து சேரலில்லை.
அவள் இனியும் வருவாள் என்ற நம்பிக்கையும் போனது.
போதையில் தள்ளாடிய வருணன் மனைவி வழக்கம் போல தன்னைத் தான் திட்டுகிறாள் என நினைத்து அவருக்கு பதில் சொல்லியபடி படுத்து விட, உடை களைந்து லுங்கி கட்டிய விமலனிடம் பேசினாள் தனா.
"நிலானி இன்னும் வரல்லையா?" அதிர்ச்சி காட்டினான்.
"உனக்கு ஏதாவது தெரியுமா?"
"லவ் பண்றாள் எண்டு உங்களுக்கும் தெரியும் தானே.. அவனோட போயிருப்பாளா இருக்கும்"
உள் மனம் இதையே சொல்லியும் தம்பி வாயாலும் அதைக் கேட்டு நெஞ்சு காய்ந்தது.
"யார் எண்டு தெரியுமா?"
"எனக்கு தெரியாது"
நிலானி கேட்டதைப் போல, ஊர் உலகத்தில் நடக்காததா இது..
விரும்புகிறாயா?
காதலா?
செய்!
அதற்கு ஏன் சொல்லாமல் போனாய்?
எங்கு போனாய், எங்கிருக்கிறாய், எப்படி இருக்கிறாய்?
அப்படி என்ன துரோகம் இழைத்தது இந்த வீடு? நீ திரும்பி வராது போனால் கண்டு கொள்ளாமல் அடுத்த வேலையை பார்க்கும் என்று நினைத்தாயோ?
அவ்வளவு அலட்சியமா?
உன்னைப் பெற்றவள் அரற்றுகிறாள்.
அவளுக்கு என்ன பதில் சொல்வது?
அவளை எப்படி சமாதானம் செய்வது?
இதோ, என் வயிறும் நெஞ்சும் தொண்டையும் வறள்கிறது.
உன் போக்கு எங்களைப் பாதிக்கிறது! புரிகிறதா உனக்கு??
"விமலா, அக்கா எங்க எண்டு பாரு தம்பி.." ராஜேஸ்வரி பதறியபடியே மகனை கெஞ்சலாக கேட்க,
"எங்க போய் பார்க்க சொல்றிங்க.. பேசாம படுங்க.." என்றான் அவன்.
"கூடப் பிறந்தவனாடா நீ? இப்புடி பொறுப்பில்லாத ஆம்பிள பிள்ளைக்கு நடுவில தான் நான் பொம்பிளப்பிள்ளைகள பெத்தன்? என்ன நடந்திருக்கும் என்ர பிள்ளைக்கு.. அதுவா எங்கையும் போனதா… இல்லாட்டி ஆரும் அதை ஏமாத்தி கொண்டு பொயிட்டாங்களா.. ஊர் உலகத்தில என்னெல்லாம் நடக்குதே. நான் என்ன நினைக்கிற? பிரார்தி, உனக்கு ஏதாவது தெரியுமா? எங்க போயிருப்பாள்.." ராஜேஸ்வரி பெற்றவராக பதற, பிரார்த்தனாவுக்கு தலை விறைத்தது.
சாமத்தில் தெளிந்து அதிகாலையில் விழித்த வருணன் இளைய பெண் இரவு வீடு வந்து சேரவில்லை என்பதை அறிந்து அதிர்ந்து தான் போனார்.
பெண் பிள்ளை என்ற மட்டில் தகப்பனாக கலங்கத்தான் செய்தார்.
பாவம், எதுவும் செய்யத் தெரியவில்லை.
பொழுது புலர்ந்ததும் "எங்க எண்டு பாக்கணும் விமல்!" எனத் தம்பியை கேட்டாள் பிரார்த்தனா.
"எங்க போய் பார்க்க போறிங்க.. டெக்னிகல் கொலிஜ்ல ஒரு கோர்ஸ் செய்றதுக்கே மெடிகல் ஃபெகல்டில டொக்டருக்கு படிக்கிற மாதிரி நடப்பு காட்டுவா. அவ வந்து இறங்குற பைக்க கண்டிருப்பிங்க தானே.. மார்க்கட்ல அதான் இப்படி ஹை ரேட். அவனோட தான் போயிருப்பா. செட்டில் ஆகிட்டா எண்டு நினைச்சிட்டு வேலைய பாருங்கள" விமலன் பாயை பிரிய மனம் இன்றி தலையணையை கட்டிக் கொண்டு சொன்னான்.
நிலானிக்கு இரண்டு வருடங்களுக்கு இளையவன் அவன், தெருவில் போகிறவன் போல அவனே தன் வீட்டுப் பெண்ணை விமர்சனம் செய்கிறான்.
"நீ எல்லாம் பொறுப்பாய் இருந்தால் அவள் ஏன்.." என வாய் முந்தியது.
முடங்கிப் போன தாய், உதவாத அப்பன், உருப்படாத தம்பி, தன் வாழ்வையே சீராக அமைத்துக் கொள்ளத் தெரியாத அக்கா..
இவர்களை நம்பாமல் தனது வழியை நிலானி தேர்ந்தெடுத்து விட்டாளாய் இருக்கும்.
இருக்கட்டும்!
எடு!
வாழு!
ஆனால் ஏன் என்னிடம் மறைத்தாய்?
'நான் என்ன செய்றன் எண்டு எனக்கு வடிவா தெரியும். உங்கள விட என்ர லைஃப்ல எனக்கு அக்கறை இருக்கு' என்ற நீ, ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம், உன் முடிவு பற்றியும்.
இந்த நிமிடம் நிலானி மீது வருத்தத்தை தவிர வேறெதுவுமில்லை பிரார்த்தனாவுக்கு.
இதே நேரம் நேற்று இரண்டு வேளைக்கு சேர்த்து சமைத்தவள், அக்காவுக்கு ஃபேஸ் பாக் பூசி விட்டவள், உணவை பொதி செய்து தந்தவள் இன்று இல்லை.
ஒரு மேசேஜ் போட்டிருக்கலாம்..
நான் விரும்பியவனை சேர்கிறேன். நலமாக இருப்பேன், என்னை நினைத்து வருந்தாதீர்கள்!
ஒரு குறுஞ்செய்தியை நிச்சயம் அனுப்பி இருக்கலாம்.
ஏன் போடவில்லை!
ஓம்! ஏன் சொல்லவில்லை?
நிலானி துணிச்சலான பெண். யாருக்கும் அஞ்சாதவள்.
அவள் ஏன் ரகசியமாக ஓட வேண்டும்
'அவர லவ் பண்றன், அவரும் தான்' என்றவள் அவனைக் கல்யாணம் செய்யப் போகிறேன் என்பதையும் தைரியமாகவே சொல்லி இருப்பாளே!
ஏன் சொல்லவில்லை?
யார் என்ன செய்து விட முடியும் அவளை?
எவரால் தடுக்க முடியும் அவள் தீர்மானத்தை?
இந்த மீன் வேண்டாம்.. அந்தக் கறி வேண்டாம்.. இந்த உடை தான் உடுத்துவேன்.. இந்த வேலை தான் செய்வேன்.. இந்த கோர்ஸ் தான் படிப்பேன்..
சின்ன சின்ன விஷயத்திலும் நெகிழாதவள், இந்த வீட்டில் பிறந்திருக்கவே கூடாது எனும் மனோபாவம் கொண்டவள், முடிந்தால் தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் பிடிவாதம் உடையவள், பிடித்தவனை கரம் பிடிக்க விரும்பியதை ஏன் மறைத்தாள்?
ஏன் தகவல் தரவில்லை? கைபேசி ஏன் அணைத்துள்ளாள்?
***
காற்று வீச்சுக்கு முகத்தில் விழும் முடியை ஒதுக்கிய பிரார்த்தனா, உப்புவெளி சந்தியில் இறங்கி பணத்தை கொடுத்தாள்.
"காணாது இது.. இன்னொரு நூறு தாங்க.."
"முன்னூறு தானே கேட்டிங்க.."
"வரோதே நகர் இருந்து இங்க வரை போதுமா தங்கச்சி மனசாட்சி படி தாங்க.."
மனசாட்சியா? அது உங்களை மாதிரி ஆட்டோ காரர்களுக்கு உண்டா?
வாதாடும் சக்தி அற்று நூறை சேர்த்து கொடுத்து அங்கிருந்து வீடு வரை நடந்தே வந்தாள்.
ரமணியின் மோட்டார் சைக்கிள் நிற்க, கேட் திறந்திருந்தது. வாசலில் ரமணி பாலாவின் செருப்பு சோடி கிடந்தன.
ஓர் இரவு முடிந்து, பகலும் தீரப் போகிறது நிலானி காணாமல் போய்.
தங்கை படித்த தொழில்நுட்ப கல்லூரி வரை சென்று விசாரித்து விட்டு வருகிறாள்.
'நிலானி க்ளாஸூக்கு வரல்லயே. நேற்றுல இருந்து வரல்ல.. நீங்க யாரு?' அவளுடைய வகுப்பு பெண்கள் கேட்டனர்.
'நான்.. ஃப்ரெண்ட்'
'ஃப்ரெண்டா?'
பிரார்த்தனாவை சந்தேகமாக நோக்கிய பெண்களில் ஒருத்தி 'நீங்க அவங்க வீட்ட போய் பாருங்க சிஸ்..' என்றது.
நிலானிட க்ளோஸ் ஃப்ரெண்ட் யாரு உங்கள்ள
அப்டி ஒருவரும் க்ளோஸ் இல்ல அவளுக்கு
ஏன்டி அப்டி சொல்றாய்.. ஷாம் சேர் பற்றி கேக்குறாங்க போல.. நக்கலாக சிரித்த பெண்ணை பார்த்தாள் பிரார்த்தனா.
ஷியாம் சேர் யாரு..
அவர் தான் நிலானிட ஃப்ரெண்ட் போய்ஃப்ரெண்ட்
ஏய்.. சும்மா இருங்கடி.. எங்களுக்கு தெரியாது.. வேற யாரையும் கேளுங்க..
சரி, அந்த ஷாம் சேர நான் பார்கலாமா?
ஒஃபிஸ்ல கேளுங்க சிஸ்..
இல்லடி.. அவரும் லீவ்.. அவரும் வரல்ல
அவர எங்க மீட் பண்ணலாம்..
அவர்ட அட்ரெஸ் எல்லாம் தெரியாது. அவர் இங்க இல்ல.. வெளியூர்..
சரி, க்ளோஸ் இல்லாட்டியும் நிலானிட ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்கள் தானே..
இல்ல சிஸ் அவ வந்த புதுசுல தான் எங்களோட பழகின.. அப்பவும் க்ளோஸ் எல்லாம் இல்ல ஷாம் சேரோட பழக ஆரம்பிச்சதும் எங்கள் ஒருவரோடவும் கதைக்கிற இல்ல
அப்டி சொல்லாதடி. நாங்க தான் அவளோட சேருற இல்ல நாங்க படிக்க வந்திருக்கிறம்.. அந்த வேலைய மட்டும் பாக்குறம்..
இரண்டு பெண்கள் தான் நிலானி பற்றி வளவளத்தனர். இருவருக்கும் அவள் வெறுப்பிருந்தது. பொறாமையாக கூட தெரிந்தது.
ஷாம் யார் என்று விசாரித்து விட்டு வந்தவள் அடுத்தது அவனை தேடி போக இருக்கிறாள்.
வாசலில் நிழலாடியதும் ரமணி எழுந்து வந்தார். அவரைக் கண்டு தன்னிச்சையாக விழிகள் கலங்கின தனாவிற்கு.
பாலாவும் இருந்தார். ராஜேஸ்வரி கண்ணீர் காய்ந்திருந்த கன்னத்தை மீண்டும் ஈரம் செய்தார். என்ன பிள்ள, ஏதாவது தகவல் தெரிந்ததா என எதிர்பார்த்தார்.
பிரார்த்தனாவுக்கு பாலசுப்பிரமணியத்தின் முகம் பார்க்க முடியவில்லை. அவமானமாக இருந்தது.
அவளோடு அறை வந்த ரமணி தனா என்றதும் அழுது விட்டாள்.
"ஏன் பிள்ள அழுறிங்க.. அம்மா தைரியமா இருக்கிறா.. ஏன் பயப்படுறிங்க?"
"நீங்க ஒவ்வொரு தடவையும் இந்த வீட்டுக்கு வாரது கெட்ட நியூஸ் கேட்டுத் தானே அக்கா.."
"சீ, எனக்கு உங்கள நினைச்சா தவிப்பா இருக்கு. சந்தோஷமாக இருக்க வேண்டிய வயசுல அடுத்தடுத்து பிரச்சினை.. லீவ் சொல்லாம நிண்டதே இல்ல நீங்க. நானா கேட்ட பிறகும் ரிப்ளை இல்ல. சுகம் இல்லையோ எண்டு நினைச்சன். ரெண்டு நாளா வரல்ல எண்ட பிறகு தான் மனசு கேக்கல்ல.. நேரா வந்துட்டன். சரி விடுங்க இப்ப என்ன.. தங்கச்சி எங்க போயிருப்பாள்.."
"லவ் பண்றாள் அக்கா.. அவனோட தான் போயிருப்பாளா என்றது சந்தேகமா இருக்கு.."
"அம்மா அப்டி தான் சொன்னாங்க தனா.."
"அம்மாவுக்கு அப்டி சொல்லி வச்சிருக்கிறன்.. அவள்ட நம்பர் வேலை செய்யல்ல.. அவள்ட வாழ்க்கையை தீர்மானிக்கிற முழு சுதந்திரமும் இந்த வீடு குடுத்து இருக்கு.. யாரும் அவள தடுக்க ஏலாது.. அப்டி இருக்கும் போது ஏன் அவள் சொல்லாம போனாள் எண்டு பயமா இருக்கு.. அவள்ட ஃபோன் வேலை செய்யல்ல.. ஏதாவது சிக்கல்ல மாட்டி இருக்க கூடாதே எண்டு பயமா இருக்கு"
"பொலிஸ்ல கம்ளைன்ட் குடுப்பமா?"
"கம்ளைன்ட் குடுக்கிற தைரியம் இல்லக்கா.. வேற மாதிரி போயிரும். கொலாஜ் போய் விசாரிச்சிட்டு வந்தன். லவ் பண்றவனோட விரும்பித் தான் போயிருக்காள் எண்டு தெரிஞ்சா போதும்"
"என்ன செய்யலாம்.. பெடியன் யார் எண்டு தெரியுமா?"
"அட்ரஸ் தந்தாங்க.. போகணும்.."
விலாசத்தை வாங்கிப் பார்த்த ரமணி "தனிய போகாதிங்க.. இவரோட போய் பாத்துட்டு வாங்க"
கண்களில் ஒளி மின்ன "இப்பவே போனா நல்லம் அக்கா.."
"ஓம்.. பொயிட்டு வாங்க"
ரமணியை காத்திருக்க சொல்லி விட்டு பாலுவுடன் பைக்கில் கிளம்பினாள்.
திருகோணமலை நகரில் வாடகைக்கு விடப்படும் பணக்கார வீடுகள் அதிகமுள்ள தெரு அது. தொடர் வீடுகள் பூட்டி இருக்க, அதில் கடந்து சென்ற ஒருவரை விசாரித்தனர்.
ஷியாம் எண்டு டெக்னிகல் கொலிஜ்ல லெக்சர் பண்றார்.. அவர்ட வீடு எது.
அப்டி யாரையும் தெரியாது இங்குள்ளவங்கள கேட்டு பாருங்க..
யாரும் இல்லாத தெருவில் ஒவ்வொரு வாயிலிலும் நின்று அக்கா அம்மா சேர் மேடம் எனக் கத்திப் பார்த்து விட்டாள்.
"இதுல இருக்கிற எல்லாரும் வெளியூர் ஆக்கள். ப்ரைவேட்ல வர்க் பண்றவங்கள். வேலைக்கு போனவங்க இன்னும் ரிட்டர்ன் வரல்ல எண்டு நினைக்கிறன்" பாலு அவளை பரிதாபமாக பார்த்து விட்டு கூறினார்.
"ஓவர் டைம் நைட் ட்யூட்டி செய்றவங்களாவும் இருக்கும்"
"நாளைக்கு காலைல ஏர்லியா வந்து விசாரிச்சா ஏதாவது தெரியும் பாலாண்ணா.."
"ஒஃபிஸ் இருக்கு.. நீங்க தனிய வராம தம்பிய கூப்பிட்டு வாங்க.."
தம்பியையா?
அவரிடம் தன் நிலையை கூறி மேலும் மோசமாக காட்டி இறங்கிப் போக விரும்பாமல் ஒத்துக் கொண்டாள்.
நிலானி பற்றி சின்ன தகவல் கூட தெரியாமல் பித்து பிடித்தது போல் இருந்தது. எரிச்சலையும் காட்டி ஆறுதலையும் கொட்டி ராஜேஸ்வரியை சமாளித்தாள்.
"லீவு போகுது தனா.. நாளைக்கு வந்து ப்ரேக் பண்ணிட்டாவது நிக்கலாம்" என்று விட்டு போனார் ரமணி.
மானம் மரியாதை அலுவலகம் உத்தியோகம் பற்றிய கவலை ஒரு பக்கம் இருக்க, தங்கை வாழத் தான் போயிருக்கிறாள் என்று உறுதியாக தெரியும் மட்டும் உணவும் நீரும் தொண்டையில் சிக்கத் தான் செய்கிறது.
ஃபோனில் வரும், இளம் பெண் மாயம், இளம் பெண் சடலம் கண்டெடுப்பு செய்திகள் அடி வயிற்றை கவ்வுகிறது. சுவாசிப்பதே சுமை போல நகர்கிறது பொழுது.
ரூபாய் முடிந்து சாமிக்கு நேர்த்தி வைத்திருக்கிறார் ராஜேஸ்வரி.
"எங்க போறாய் பிள்ள இன்னும் விடியவே இல்ல" ஆறு மணிக்கு கிளம்பியவளை கவலையுடன் கேட்டார் காலையில்.
"பெடியன்ர வீட்ட கண்டு பிடிச்சிட்டன். சொந்தக்காரர்களுட்ட விசாரிச்சிட்டு வாரன்" பொய் சொன்னாள்.
ஆட்டோ பிடித்துப் போய் இறங்கினாள். நேற்றைய அந்திக்கும் இன்றைய காலைக்கும் அதிக வித்தியாசம் இல்லை. ஆள் நடமாட்டமே இல்லை தெருவில்.
எந்த வீட்டை தட்டலாம் என தயங்கும் போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவள் அருகில் நின்றது.
அதில் இருந்த வரோதயனை கண்டு ஒடுங்கிப் போனாள்.