• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நான் அறிய நீ - 21

STN - 85

New member
"என்ன இதுல படுத்திருக்கா?" கேள்வியில் முழிப்புத் தட்டியது பிரார்த்தனாவுக்கு.

லுங்கியை மடித்து கட்டிய விமலன் கொல்லைப்புறம் செல்ல, ஒற்றை கையில் தலை வைத்து படுத்து விட்டவள் எழுந்தமர்ந்தாள்.

வைகாசி வெயில் பாதி வராண்டாவை ஆக்கிரமித்திருக்க, நாற்காலியில் மடக்கி வைத்த கால் இரண்டையும் பிரித்து தரையில் வைத்தாள்.

நேரம் ஏழு இருந்து எட்டுக்குள் இருக்கலாம்.

விடியல் விழிப்பு இயல்பாக நிகழ வேண்டும். ஆறாகிட்டா.. அஞ்சாகிட்டா எனப் பதறாமல் தூக்கம் கலைய வேண்டும்!

பள்ளிக்கூடம் படிக்கும் காலத்தில் இருந்தே, வீட்டு வேலைகளை கவனிக்க பொழுது புலர முன் கண் கசக்கி படுக்கையை பிரியம் இல்லாமல் பிரிவது பழகிவிட்ட ஒன்று பிரார்த்தனாவுக்கு.

அவள் ஒத்தாசை புரியாமல் சிறு சம்பல் கூட அரைக்க மாட்டாள் தாய் ராஜேஸ்வரி.

தேங்காய் துருவு.. சின்னச் சீரகம் எடு.. அடுப்ப பாரு.. உப்பு எடு.. புளி கரை..

ஏவிக் கொண்டே இருப்பாள்.

சிறு பராய சர்விஸ், தாய் விரைவில் ஒதுங்கவும் மகள் பொறுப்பேற்கவும் தோதாகியது அடுப்பங்கரையில்.

தனக்கென ஒரு வேலையும், வருமானமும் தேடிக் கொண்டாலும், வீட்டில் வேலை செய்வது விதிக்கப்பட்டது.

புடவை கடையில் பாதம் வலிக்க நிற்கும் வேலை. ஸ்டூடியோவில் இருக்கை வசதி இருந்தும் நித்தம் பொழுது பதட்டத்தில் கழியும்.

அரசு உத்தியோகம் எடுத்த பிறகு ஆசுவாசம் தான்.

ஆனாலும், அங்க என்ன இரும்பு அடிக்கிற வேலையா, கல்லுடைக்கிற வேலையா.. மேசை கதிரைல இருந்துட்டு வார தானே.. வா பிரார்த்த்தி..

அலுவலகம் இருந்து அவள் வருவதற்கே காத்திருப்பார் ராஜேஸ்வரி.

கோப்புகளோடு மல்லுக்கட்டி, மாடிக்கும் தரைக்கும் ஏறி இறங்கி, பப்ளிக் நாளில் ஆளுக்கு ஒரு சிக்கலுடன் வரும் டீச்சர்ஸை சமாளித்து, பஸ்ஸில் இருந்து இறங்கும் போது சீமெந்து வாளி சுமந்த சித்தாள் போலவே மனசும் உடம்பும் சோர்ந்து ஓய்வுக்கு ஏங்கும்.

வீடு வந்து கைப்பையை கழற்றி வைக்க மட்டுமே அவங்காசம் கிடைக்கும் அவளுக்கு. உடை மாற்றிச் சுழல வேண்டும்.

சனி ஞாயிறிலும் மேலதிக நேரக் கடமைக்கு ஓடுவாள். அதில் மாசம் எட்டு பத்தாயிரம் மேலதிகமாக கிடைக்கும். மாச செலவுக்காகும். ஒரு பொது விடுமுறையை விட்டாலும் மாச கடைசியில் துண்டு விழுந்து ரமணியிடம் கை மாறும் நிலை வரும்.

OT செய்யும் உத்தியோகத்தர்களுக்கு வேலை நாளில் விடுமுறை தர நிர்வாகம் விரும்பாது.

இந்த வருடம் பிறந்து ஆறு மாதம் முடியவில்லை. விடுமுறை கணக்கு எகிறி விட்டது. ராஜேஸ்வரியுடன் ஆஸ்பத்திரியில் நின்றது, நிலானியை தேடி அலைந்தது, இதோ கந்தளாய் போய் பார்த்தீபனை சந்தித்த பிறகு லீவு கணக்கு கூடி விட்டது.

"என்ன, இண்டைக்கும் வேலைக்கு போகல்லயா?" கொல்லைக்கு சென்றவன் கால் நனைத்து வந்து கேட்க, கண்ணோடு சேர்த்து முகத்தை கசக்கி எழுந்தவள் உள்ளே சென்றாள்.

ராஜேஸ்வரி இன்னும் உறக்கத்தில் இருக்க, வருணனும் எழந்திருக்கவில்லை.

அறை ஜன்னல் திறந்து வைத்து கலைந்த முடியை கோதிக் கட்டினாள். கை தூக்கி கூந்தலை முடியக் கூட சோம்பலாக இருந்தது. உடம்பு கல்லைக் கட்டி சுமப்பது போல கனத்தது.

பெண் சுதந்திரம் என்பது என்ன?

ஊர் சுற்றுவதா?

விரும்பியதை உடுத்துவதா?

நினைத்ததை தின்பதா?

வேண்டும் பொழுது வேலையை ஒதுக்கிப் போட்டு கை கால் பரப்பி தளர்த்தி ஓய்வெடுக்க முடிகிறதா உன்னால்?

பெண்களின் குறைந்த பட்ச கனவே இது.

அலுவலக பணிக்கு லீவு போடலாம். வீட்டு வேலைக்கு?

டம்பளரில் நீர் நிரப்பவும் வளைகரம் வேண்டி இருப்பது வீடுகளில் இன்றும் பெண்களின் சாபக்கேடு.

வேலைக்கு லீவு போட்ட பிரார்த்தனா டீ ஊற்ற எழத் தான் வேண்டும். மூன்று வேளைககும் சமைக்கத் தான் வேண்டும், பாத்திரம் கழுவத் தான் வேண்டும்.

கூந்தலைக் கோதிக் கட்டினாள்.

உறங்கம் வராமல் விழித்துக் கிடந்து, சாமத்தில் எழுந்து வராண்டா இருட்டுக்கு துணை இருந்து, கண் அசந்து ஒரு பக்கமாக சாய்ந்து தூங்கிய கழுத்து நெறி கண்டு வலித்தது.

"

தேத்தண்ணி ஊத்தல்லயா?" விமலன் எட்டிப் பார்த்தான்.

"வாரன்.."

"என்ன நிண்டுட்டே நித்திர கொள்றியா? எஸ்டிமேட்ட பாத்தியா?"

"எங்க?" கண் மூடி கழுத்தை நீவிக் கொண்டு கேட்க,

"எங்கயா? நேற்று வச்சன். உன்னிட்ட சொல்லிட்டு தானே வச்சன்" அவன் வள் என விழ,

இமை திறந்து "லோனுக்கு கதைச்சிருக்கன். உனக்கு காசு வரும்.." என்றாள்.

"நாலு மாசமா சொல்றிங்க. எஸ்டிமேட் கேட்டது பொய்க்கு தானே? என்னில நம்பிக்கை இல்லாம தானே? தங்கச்ச நம்பி எவ்வளவு செலவழிச்சிருப்பா.. ஏமாத்திட்டு ஓடிப் போனாள்.. ஏமாத்துறவங்கள தான் நம்புவாய் நீ.."

"ஓம்! நான் ஏமாளி. நீ புத்திசாலியா இருந்தா சந்தோஷம்" உடற் பாரத்தை தூக்கிப் போட்டு வீட்டு வேலையை கவனிக்கச் சென்றாள்.

அவ்வளவு தான். இரண்டு நாளாக மீள முடியாது தவித்த பார்த்தீபன் ஓரம் போனான். இழுபறியில் கிடக்கும் டிப்பார்மன்ட் கடனை பெறுவது எப்படி என்று தலை வலித்தது.

சமையல் கட்டில் நிற்கும் போது

ஒன்பது மணிக்கு ரமணி அழைத்தார். "அட்டன்டன்ஸ் களோஸ் பண்ண போறன், ஷோட் லீவா நீங்க?"

பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தவள் "லீவ் போடுங்க" என்றாள்.

"லீவா? இண்டைக்கு வாரன் எண்டிங்க"

"நாளைக்கு நாளையண்டைக்கெல்லாம் ஹொலிடே தானே..திங்கள் வாரன்"

"தனா, என்ன பிள்ள?"

"சமாளியுங்க அக்கா.."

"இப்புடியே எத்தின நாளைக்குப் பிள்ள? எடுக்கிற லீவு பிரயோசனமா இருக்கணும். நான் சொன்னத பத்தி யோசியுங்க. எனக்கு நல்ல முடிவா சொல்லணும்.."

"என்னப் பத்தி யோசிக்கிறிங்க நேரம் நீங்க, பாலு ஷாலுவ பத்தி நினைச்சாலாவது பிரயோசனம்"

"இந்த கதை எல்லாம் வேணாம். வீட்ட நிண்டால் தெளிவு வராது. ஒழுங்கா ஒஃபிஸூக்கு வெளிக்கிட்டு வரப் பாருங்க.." கண்டித்து விட்டு வைத்தார் ரமணி.

காலை உணவு பரிமாறும் போது ராஜேஸ்வரியும் கேட்டார். "ஏன் வேலைக்கு போகாம நிக்கிறாய்?" என்று.

"நிக்கிறன்.." என்பதோடு முடித்து விட்டவள் வீட்டை ஒதுக்கி விட்டு படுக்க, வரோதயனிடம் இருந்து அழைப்பு வந்தது.

ரமணி வந்து போன பிறகு அவனிடம் இருந்து கிடைக்கும் நான்காவது அழைப்பு இது.

மூன்றோடு நான்காக

இதைவும் ஏற்காமல் விட்டவள் அழுக்கு நைட்டியுடன் படுத்திருக்க நான்கு சக்கர வண்டி சத்தம் கேட்டது கேட்டில்.

ஜன்னலில் பார்க்க, கருப்பு கார் வீட்டு முன் தரித்தது. நிலானி இறங்கினாள் தனது காதலனுடன்.

அல்ல, காதலன் அல்ல, கணவன் அவன்.

வண்டிக்குள் தலை விட்டு சாரதியிடம் அவன் ஏதோ பேச, இவள் கேட் திறக்கிறாள். இருவரும் இணைந்து நுழைகின்றனர்.

ஜன்னல் விட்டு விலகி சுவரில் சாய்ந்த பிரார்த்தனாவால் நம்ப இயலவிலை, நிலானியின் வருகையை.

வருவேன் என்று எப்போதிருந்தோ சொல்கிறாளாம் தாயிடம்.
அவள் எங்கே இனி இந்தப் பக்கம் வருவது என்று நினைத்து இருந்தாள்.

வந்திருக்கிறாள்.

என்னவாக இருக்கும்?

உள்ளே அவர்கள் நுழையும் அரவம், அம்மா என்று அழைக்கும் சத்தம் கேட்கிறது.

"பிரார்த்தி" ராஜேஸ்வரி இவளைக் கூப்பிடுகிறார்.

அவரே எழுந்து செல்வது விளங்குகிறது.

கதவைத் தாழ் நீக்கியதும் அமைதி நிலவ, வந்தவர்கள் உள்ளே நுழைவதை தெளிவாக உணர முடிகிறது.

"வா.. நல்ல பிள்ள நீ.. இப்ப தான் வழி தெரிஞ்சிருக்கு" ராஜேஸ்வரியின் குரல் தழுதழுக்க, அடடா அதிசயம், நிலானி கூட அன்பாக பேசுகிறாள் தாயிடம்.

சுவரோடு வேர் பிடித்து சாய்ந்து நின்றாள் பிரார்த்தனா. அழுக்கு நைட்டி, வாரிச் சுற்றிய சிக்குக் கொண்டைக் கோலம், வெளியே செல்ல உதவாது.

"நிண்டு போறியா நிலானி?"

"இல்லம்மா, உன்னப் பார்க்க தான் வந்தன்.. சொன்னன் தானே வருவன் எண்டு. ரிஷி கம்பனி வேலையா வந்தார்.. நானும் வெளிக்கிட்டன். இப்ப போகணும்"

"இங்க என்ன வசதி இருக்கு, உங்கள நிக்கச் சொல்ல.. கவனமா போங்க! பார்த்துக் கொள்ளு தம்பி. உதவிக்கு சனம் இருக்கா உங்கட பக்கம்? மாமனார் மாமியார் எல்லாம் நல்லமா?"

"அம்மா, எல்லாம் நான் சொல்லி இருக்கிறன் தானே.. அவர என்ன கேக்குறிங்க.. நான் பொயிட்டு திரும்பி ட்ரிங்கோ வரக் கிடைச்சா கட்டாயம் வருவன்.."

அரை மணி நேரமே கழிந்திருக்கும். யுகம் யுகமாக அறையில் அடைந்திருப்பது போல பிரார்த்தனாவுக்குள் புழுக்கம்.

உடை மாற்றி போய் வந்த பெண்ணை காணுவோமா என்ற எண்ணம் தலை தூக்குகையில், வெளியே பேச்சு சத்தம் தேய்கிறது.

எட்டி ஜன்னலில் பார்த்தாள். கார் நிற்கிறது. சாரதி இறங்கி வீதியை வேடிக்கை பார்க்கிறார்.

இன்னும் போகவில்லை. பிறகு சத்தம் இல்லையே?

உள்ளுணர்வால் உந்துப்பட்டுத்

திரும்பினாள்.

நிலானி நின்றிருந்தாள்.

குறைந்த பட்சம் பத்து வித்தியாசம் சொல்லலாம், நிலானியை அன்று கண்டதற்கும் இன்று காண்பதற்கும்.

எடை அதிகரித்து, நிறம் கூடி, மினுமினுப்பாகி செழுமையடைந்து, தொள தொள சட்டை அணிந்திருந்த அவளது மேடிட்ட வயிற்றில் பிரார்த்தனாவின் பார்வை படிந்தது.
உள்ளே வளரும் சூலின் பெரியம்மா வயிற்றில் ஒரு சிலிர்ப்பு.

ஓரளவு தயங்கி, உரிமையாக உள்ளே வருகிறாள் நிலானி.

"ஒஃபிஸ் போயிருப்பாய் எண்டு நினைச்சன்.." பேச்சில் மெல்லிய தடுமாற்றம்.

ஏனாம்? அவள் இருந்தால் என்னவாம்! அவ்வளவு பயமும் பக்தியுமா அக்கா மீது?

"லீவா..."
பிரார்த்தனா தலை அசைத்தாள்
கதவை பற்றி நின்றவள் "அண்டைக்கு கேட்கத் தோணல.. கேட்டிருந்தாலும் உண்மையா உணர்ந்து கேட்டிருக்க மாட்டன்.."
"இப்ப சொல்லத் தோணுது.. சொறி!! நான் உனக்கு ஒண்டும் செய்ததில்ல... சின்ன சின்ன விஷயத்திலும் உன்னோட சண்ட தான் போட்டிருக்கன். அதெல்லாம் பெருசா நினைக்காம நீ எனக்கு எல்லாம் செய்து இருக்கா.. அம்மா மாதிரி நீ இருந்திருக்கிறா.."

குரல் ஒரு மாதிரி வெறுமை கொள்ள

"நிறைய சொல்ல தோணுது... சொல்ல வருதில்ல.. உன்ன கஷ்டப் படுத்தி இருந்தா சொறி! என்ர லைஃப் எனக்கு முக்கியம் எண்டு டிசிஷன் எடுத்தால உன்ன அலட்சியப்படுத்தினதுக்கு திரும்பவும் சொறி!"

பிரார்த்தனா பேசவில்லை. அவளுக்கு இதெல்லாம் புதுசு. யாரும் அவளிடம் மன்னிப்பு கேட்டதில்லை. அன்பை புரிந்து நன்றி நவிலவும் இல்லை.

அக்கா ஏதாவது பேசுவாள் என்று எதிர்பார்த்தாள் நிலானி.

"நான் இப்ப போகணும். பொயிட்டு பிறகு வருவன்......" என்று கையிலுள்ள பையை காட்டியவள், "இது உனக்காக வாங்கிட்டு வந்தன்.." எனத் தயங்காமல் "இந்தக் கலர் டிசைன் உனக்கு வடிவா இருக்கும்.." என்றாள்.
படுக்கையில் பையை வைத்து விட்டு கிளம்பினாள்.

கார் சத்தம் கரைந்த பிறகு வெளியே வந்தாள் பிரார்த்தனா. ராஜேஸ்வரி முகத்தில் பூரிப்பை பூசியிருந்தது.

"மனசுக்கு திருப்தியா இருக்கு பிள்ள.. நல்ல பொருத்தமா இருக்கிறான் பெடியன்.. சும்மா பேச்சளவில சொல்றாங்க.. எங்க வரப் போறாங்க எண்டு நினைச்சன்.. பரவால்ல பாசம் இருக்கு தான்.." என ஒரு கட்டு பணத்தை நீட்ட பிரார்த்தனா புருவம் சுருங்கினாள் "இதேது?" என்று.

"நிலானி தந்துட்டு போகுது.." என்றார்.

"நிலானியா?"

"ஓம் பிள்ள.."

தொகை பாரம் பெரிது. ஐந்தாயிரம் ரூபாய் நோட்டுகள் அத்தனையும்.

"விமலுக்கு தொழில் தொடங்க குடுக்க சொல்லி தந்துட்டு போறாள் பிள்ள பிடி.. நல்ல வாழ்க்கைய அமைச்சதும் தன்ர குடும்பம் தன்ர வாழ்க்கை எண்டு ஒதுங்காமல் பிறந்த குடும்பத்த நினைச்சிருக்கு பாரு.. புத்தி உள்ள புள்ள தானும் புழைச்சி தன்னச் சார்ந்தவர்களையும் புழைக்க வைக்கும்.."

"விமலனும் உருப்பட்டு உன்ர வாழ்க்கையும் ஒரு வழிக்கு வந்தால் போதும்.. என்ர காலம் பொயிட்டுது. இந்த வீட்ட உனக்கு எழுதி ஒரு நல்லத நடத்தி பாக்கணும்.."

ராஜேஸ்வரி பூரிப்பிலும் நம்பிக்கையிலும் பேச, பிரார்த்தனாவின் எண்ணத்தை நிலானி ஆக்கிரமித்திருந்தாள். தங்கையின் மாற்றம் மனதில் இதம் தடவியது.

*

வெள்ளியோடு இணைந்த பௌர்ணமி தினம் அது.

இலங்கை அரசியல் சாசனம், இலங்கை ஒரு மத சார்பற்ற நாடென்று கூறினாலும், சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் பௌத்த மதத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் உண்டு.

அதில்

சிறுபான்மை மக்களுக்கு கிடைக்கும் ஒரே நன்மை, பௌத்தர்களின் புனித தினமான பௌர்ணமிக்கு பொது விடுமுறை கிடைப்பதே.

வார இறுதியுடன் பௌர்ணமியையும் சேர்த்து மாதத்தில் குறைந்தது ஒன்பது தினங்கள் ஓவர் டைம் கணக்கு பார்க்கும் பிரார்த்தனா இன்றும் வேலைக்கு கிளம்பாதது ராஜேஸ்வரியை சந்தேகம் கொள்ளச் செய்ய, "ஒஃபிஸ்ல எனவும் பிரச்சினையா?" என்று கேட்டார்.

"இல்ல!"

"வேலைக்கு போக இல்ல"

"அரசாங்க வேலைல என்ன பிரச்சினை வரப் போகுது? நான் என்ன அங்க கல் உடைக்கிறனா மண் சுமக்கிறனா.. சும்மா இருந்து அலுப்படிக்குது" என்றவள் இழுத்து போட்டு வீட்டு வேலை பார்த்தாள்.

தூசு தட்டி, தரை துடைத்து, அடுப்படி துப்பரவு செய்தாள்.

துணி துவைத்து சமையலிலும் இறங்கிய பெண்ணிடம் “காளி கோயிலுக்கு பொயிட்டு வருவமா..” எனக் கேட்டார் ராஜேஸ்வரி.

அழுக்கு நைட்டியில் இருந்தவள் தாயை ஏறிட்டாள்.

ஆண்டுக் கணக்காகிறது ராஜேஸ்வரி கோவில் குளம் சென்று. கணவனுடன் வாழ்க்கை கசந்ததும் பத்தியை கை விட்டாயிற்று. சாமி பூஜை புரஸ்காரம் என்று முன்பும் அவ்வளவு ஈடுபாடு காட்டியதில்லை தான். ஒரேயடியாக ஒதுக்கியதும் இல்லை.

இளைய பெண் வந்து போன சந்தோஷம், நிலானி நன்றாக வாழ்கிறாள் என்ற மகிழ்ச்சி, மகனுக்கு நல்லது நிகழப் போகிறது என்ற நம்பிக்கை, சாமியை எண்ணிப் பார்க்க வைத்திருக்கலாம்..

வெள்ளிக்கிழமை சைவ சமையலை, கீரை கத்தரிக்காயுடன் எளிமையாக முடித்து விட்டு தலைக்கு குளித்து, ராஜேஸ்வரியையும் தலைக்கு ஊற்ற வைத்தாள்.

புடவை எதை உடுத்த போகிறார் எனக் கேட்டாள்.

"நிலானி வாங்கி வந்தத எடு!"

"நேற்று வாங்கி வந்தையா! அதுக்கு ப்ளவுஸ்?"

"பழசு இருக்கும். பொருத்தமா எடன்.."

சித்திரை பொங்கலுக்கு வாங்கிக் கொடுக்கும் துணியை ஒரு நாளும் பண்டிகை நாளில் உடுத்தியதில்லை ராஜேஸ்வரி. ஆஸ்பத்திரி க்ளினிக் போகவே பயன்படும் அது. எனக்கு என்ன பண்டிகையும் கொண்டாட்டமும் என்ற வெறுப்பும் பிடிவாதம் இருக்கும்.

நிலானி,

நல்ல மாம்பழ மஞ்சளில் சில்க் புடவை வாங்கி வந்திருந்தாள். பச்சை வண்ண ஜாக்கெட்டில் அதை உடுத்தி விட்டு தயார் படுத்தியதும், தங்கை தனக்காக வந்ததைப் பிரித்துப் பார்க்கும் ஆர்வம் வந்தது.

அளவு பிசகாத

அடர் சிவப்பு சுடிதார் இருந்தது.

'எனக்கு நீ எடுக்காத.. உனக்கு கலர் பார்த்து எடுக்க தெரியாது. நீ எடுத்தா டல்லா தெரிவன் நான். காச தா, எனக்கு நான் எடுப்பன்' என்பாள் ஒவ்வொரு தைப்பொங்கல் சித்திரைக்கும் நிலானி.

அந்த சண்டைகார முரட்டு வாண்டு புது துணி எடுத்து வந்திருக்கிறது.

பார்த்தீபன், ரமணி, விரோதயன், விமலன் என நான்கு நாளாக அலைக்கழிபவள், நிலானியின் சிவப்பு சுடிதாரில் செஞ்செழிப்பாக திகழ்ந்தாள்.

திருகோணமலை நகர் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் ஆலயம். அம்மாளாச்சி ஆட்சியில் நல்லாசி கிடைப்பதாக ஊர் மக்கள் நம்புகின்றனர்.

பூரணை விசேஷத்தில் வேண்டுதல்களை நிறைவேற்ற கோயிலில் கூட்டம் அடிப்பட, உட்கார இடம் கேட்டார் ராஜேஸ்வரி.

கருவறை சர்வலோக மாதாவை பார்த்த மாதிரி தூணில் சாய்ந்தவர்

"நீ போய் சுத்தி கும்பிட்டு, தேங்காய உடைச்சுட்டு வா" என்றார்.

"நானா கேட்டன் கோயிலுக்கு வரணும் எண்டு?"

"இந்தக் காலோட நான் நொண்டி அடிக்கணுமா.. போ பிள்ள"

முன்றலில் கற்பூரம் ஏற்றி, தேங்காயுடன் சுற்றி வந்தவள், ராஜேஸ்வரி வேண்டியதை நிறைவேற்றம்மா என்று மனதார கும்பிட்டு முடிக்க, கணபதி ஆலயத்தில் இருந்து வெளிவந்த பச்சை வண்ணப் பட்டுப் புடவை கருத்தை கவர்ந்தார்.

"நெருப்பெட்டி இருக்காம்மா?" முன் பின் தெரியாது புன்முறுவலுடன் பார்க்கும் பெண்ணிடம் கேட்டார்.

அவருடைய முகம் பார்த்துப் புன்னகைத்த பிரார்த்தனா கையில் உள்ளதை கொடுக்க, வாங்கிக் கொண்டார்.
தீ சட்டி எடுக்க வந்திருந்தார் வரோதயனின் தாயார் காமாட்சி. மண் சட்டியில் சூடம் கொளுத்தி வேப்பிலையை பந்தாக வைத்து தலையில் சுமந்து கோயிலை அவர் வலம் வர, வயசுப் பெண் ஒருத்தி சட்டியில் கற்பூரம் போட்ட படி கூடச் சென்றது.

வேண்டுதலை முடித்ததும் பிரார்த்தனாவை தேடி வந்து இரவல் வாங்கிய தீப்பெட்டியை தந்தார் காமாட்சி.

"பரவால்லம்மா, இருக்கட்டும்"

"நாங்க எடுத்து வந்த பெட்டிய இங்க தான் யாரோ வாங்கினாங்கள். மறந்து கொண்டு பொயிட்டாங்கள். நாங்களும் அதே பிழைய விடக் கூடாதே. பிடியுங்க அம்மா"

"தூரத்தில இருந்து வந்திங்களா?"

"நாங்க மூதூர். கற்பூரச் சட்டி எடுக்க நேர்த்தி வச்சிருந்தன். நிறைவேற்ற வந்தன்.." என்றவர் பக்கத்தில் நின்ற பெண்ணிடம் "பஞ்சுவுக்கு எடு! ராசுவையும் காணேல்ல.." என்றார்.

பிரார்த்தனா அந்த பெயர்களைக் கேட்டதும் புன்னகைத்து, "வரோதயன்ர அம்மா தானே நீங்க?" எனக் கேட்டாள்.

காமாட்சி அம்மையாரின் வதனம் ஆச்சரியமாக மலர்ந்து "தம்பிய தெரியுமா?" என்றது.

"ம்ம்.." தெரிந்தது கையளவு என்பதாக இவள் தன்னடக்கம் காண்பிக்க,

"அத்தான தெரியுமா? மாமிய எப்புடி மதிச்சிங்க?" பஞ்சு ராசுவுக்கு மாற்றி மாற்றி அழைத்துக் கொண்டிருந்த பெண்ணும் பேச்சில் கலந்தது.

இவர் கட்டி இருக்கும் புடவை, இவர் மகன் என்னை கொழும்புக்கு அழைத்து போன நன்றிக் கடனுக்காக நான் வாங்கி அன்பளிப்பு செய்தது என்பாளா, வரோதயனின் பெண் அம்சமாய் தாயிடம் ஜாடை கண்டேன் என்பாளா?

“யாரோட வந்திங்கம்மா நீங்க?”

“அம்மாவோட.. அங்க இருக்கிறாங்க” ராஜேஸ்வரியை கை காட்டினாள்.

“நல்லம்! தம்பியையும் கூப்பிட்டன். வேலைக்கு போகணுமாம்..பூரண நாள்ள என்ன வேலை வைக்கிறிங்க உங்களின்ர ஒஃபிஸ்ல?"

ஒரு நாளேனும் OT க்கு வராத வரோதயன், OT யை தவற விடாத பிரார்த்தனா வருவாள் என்று எதிர்பார்த்து போயிருப்பான் என்று எண்ணும் போதே மனதில் கிண்கிணி மணி இசைக்க,
"அவருக்காக சேர்த்து நீங்க கும்பிடுவிங்க தானேம்மா?"

"பிள்ளைகளுக்காக தானே தாய் சாமி கும்பிடுவா. மிச்சம் காலமா கேக்கிறம், கல்யாணம் செய் எண்டு. இப்ப தான் ஓம் எண்டு ஒத்து வந்திருக்கிறார். நீ வராட்டி போ தம்பி எண்டு மருமகள கூட்டிக் கொண்டு வந்துட்டன் நான்..” என்றார் காமாட்சி.

பிரார்த்தனா அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தாள்.

மருமகளா! வரோதயனுக்கு பேசி இருக்கும் பெண்ணா இது??

அவளது நெஞ்சுக் கூடு வெகு வேகமாக உலர்கிறது.

Last edited:

kalaivarshini

Top Bottom