• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நின் மத்தம் : 22

STN - 57

New member
சுசிலாவிடம், " இனிமே தான் பார்க்கப் போறீங்க என்னுடைய ஆட்டத்தை" என்று சொல்லி கண்ணடித்தாள்.

அவரும் "ஏதோ நல்லா இருந்தா சரிதாமா அவன் ஏதாவது உன்னை அடிச்சிட போறான் அதையும் பாத்துக்கோ" என்றார்.

"மா அவர் என்னை அடிச்சாலும் என் மேல ரொம்ப பாசம் மா நீங்க வேணும்னா பாருங்க இன்னைக்கு சீக்கிரமா வீட்டுக்கு வந்து விடுவாரு எனக்கு தெரிஞ்ச இன்னும் ஒரு அறை மணி நேரத்துல வீட்ல தான் இருப்பார் அவ்வளவு பாசம் மா என் மேல ஆனால், வெளிய தான் காட்ட மாட்டேங்குறார்." என்றாள்.

"அது எப்படிம்மா உன் மேல இவ்வளவு பாசம் என்று சொல்ற" என்று கேட்டார்.

தன் தோழியிடம் இவளை பற்றி விசாரித்தது இன்பராஜிற்கு இன்பமான இம்சையை கொடுத்தது மருத்துவமனையில் தாய் தந்தைக்கு பார்த்து பார்த்து செய்தது எல்லாமே சொன்னாள்.

"எனக்கும் அவர் மேல கோவம் இருந்தது மா எப்போ என்னோட பிரண்டு கிட்ட விசாரித்தாரோ அப்பவே ஒரு நல்ல தாட் வர ஆரம்பிச்சது ஆனால் என்னை எப்பவுமே வம்பு இழுத்துட்டே இருந்தாரு

அப்பா அம்மா அடிபட்ட போது கூட நான் அவரை தான் மா முதலில் தேடுனேன்.

எனக்குமே அப்பதான் புரிஞ்சது நானும் அவரை லவ் பண்றேன்னு, அவருக்கு அந்த அருவெருப்பல இருந்து வெளியே வர முடியலன்னு நினைக்கிறேன் எங்க மத்த பொண்ணுங்களை ஹேண்டில் பண்ற மாதிரி என்னை ஹேண்டில் பண்ணி நான் விட்டுட்டு போயிடுவேன்னு பயம் பாத்துக்கலாம் விடுங்க " என்று இவர்கள் பேசிக்கொண்டு வர அவன் சோபாவில் அமர்ந்திருந்தான்.

அதை பார்த்து அவள் சுசீலாவிடம் கண்ணை காட்ட அவர் எதுவும் பேசாமல் மான் விழியின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டு வந்து, "செந்தூரா என்னப்பா இங்கே என்ன பண்ற, ஆபீஸ் போகலையா?" என்றார்.

அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல், "இல்லம்மா ஒரு ஃபைல் எடுக்க வந்தேன் ரூம்ல தான் இருக்கு உங்களோட வாய்ஸ் அங்க ரூம்ல கேட்டதுனால நான் இங்கே இருந்துட்டுமா இதோ எடுத்துட்டு போறேன்" என்று சொல்லி விட்டு மான் விழியிடம் "மேலே வா" என்பது போல் கண் காட்டினான்.

அவளும் மேலே போய், "எதுக்குங்க கூப்பிட்டீங்க " என்றாள்.

அவன் அதற்கு பதில் சொல்லாமல் அவளின் முகத்தை உற்றுப் பார்த்தான் அதில் சற்று முன் தான் அடித்த கை தடம் இருப்பதை பார்த்தான்.

'ஐயோ இப்படி கண்ணி போய் இருக்கே ரொம்ப வேகமாக அடிச்சிட்டோமோ' என்று அவளையை பார்த்துக் கொண்டிருக்க அவன் முன் கையை அசைத்து, " எதுக்கு கூப்பிட்டீங்க" என்று கேட்டாள்.

"நான் எங்கடி உன்னை கூப்பிட்டேன் நானே பைலை தேடிட்டு இருக்கேன்" என்று கை பைல் தேடுவதில் இருந்தாலும் கண்கள் மட்டும் அவளைத்தான் நிலைத்துக் கொண்டிருந்தன அதில் அவள் கடுப்பாகி அவனை தன் புறம் இழுத்து நெற்றி, கண் இறுதியாக அவன் இதழை சிறைபிடித்தாள்.

இப்போதும் அவன் தடுத்து விட்டான் ஆனால், அடிக்கவில்லை

அவள் அவனைப் பார்த்து " இப்ப அடிங்க பார்க்கலாம்" என்றாள்.

அவன் தன் கைகளை எடுத்து மெதுவாக அவள் கன்னத்தை அடிக்க பார்க்க அப்படியே கைகளை இறக்கிவிட்டு திரும்ப அவனை பின்புறம் அணைத்தாள்.

அவன் தடுக்கவும் இல்லை அதே நேரம் அணைக்கவும் இல்லை அமைதியாக நிற்க, " எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு, என்னால நீங்க இல்லாம இருக்க முடியுமான்னு தெரியல,

அதுக்காக நீங்க உடனே என்னோட லவ் அக்செப்ட் பண்ணனும் எந்த அவசியமும் இல்லை, நீங்க தான் என்னோட முதல் லவ் உங்களுக்கு எப்பவாவது ஏதாவது கஷ்டம் இருக்கு சொல்ல முடியாத வருத்தம் இருக்குனா நீங்க எதுவுமே சொல்லாதீங்க என்னை வந்து ஹக் பண்ணிக்கோங்க போதும் நான் இருக்கேன் உங்களுக்கு " என்றாள்.

இந்த வார்த்தையை கேட்டதும் அவனுக்கு நெஞ்சுக்குழி எல்லாம் அடைத்துக் கொண்டு கண்களில் கண்ணீர் வந்தது. தன் அன்னைக்கு பிறகு ஒரு உண்மையான அன்பை இவளிடம் பார்க்கவும் அதை ஏற்றுக் கொள்லாமா? வேண்டாமா? பயம் தான் தூய்மையானவன் இல்லையோ என்று வருத்தம், எல்லாம் சேர்ந்து என்னவோ செய்ய அவள் கைகளை மெதுவாக எடுத்துவிட்டு திரும்பி பார்க்காமலேயே சென்று விட்டான்.

அது அவளுக்கு வருத்தத்தை தந்து தன் கையை கொண்டு தன் கன்னத்தை தொடும்போது அது சில்லென்று இருந்தது, 'என்ன இப்படி சில்லுனு இருக்கு' என்று பார்க்க அவள் கையில் கண்ணீர் இருக்க, ' அவருக்கு என்னை புடிச்சிருக்கு பயப்படுகிறார் நாம தான் அந்த பயத்திலிருந்து வெளியே கொண்டு வரணும்' என்று நினைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றாள்.

அன்று இரவு இருவரும் பால்கனியில் நின்றிருந்தனர். அவன் நிலவை வெறித்து கம்பிகளை இறுக பிடித்து நின்றிருக்க இவளோ அவனுக்கு எதிர் திசையில் பால்கனியில் சாய்ந்து அவன் தோளில் சாய்ந்தாள்.

இருவரும் அப்படியே நின்றிருக்க அவன் கைகள் தானாக அவள் தலையை கோதின அந்த மென்மையில் அவளுக்கு உறக்கம் வர அவன் மேலே தூங்கி போனாள்.

மெல்ல அவன் திரும்பி பார்த்து ஒரு மெல்லிய சிரிப்பை உதிர்த்து "தூங்கிட்டாளா தூங்கு மூஞ்சி " என்று சொன்னாலும் அவள் தூக்கம் கலையாதவாறு அழகாக தூக்கி வந்து கட்டிலில் கிடத்தி அவள் கண்ணாடியை மெதுவாக கழட்டி மேஜையின் மேல் வைத்துவிட்டு அவள் பக்கம் திரும்பி படுத்து மெல்ல அவளை அணைத்தான்.

அந்த அணைப்பில் ஒரு அமைதி இருந்தது. சிறு வயதில் தன் தாயை அணைத்தது போல் ஒரு உணர்வு, அது அவனுக்கு பிடித்திருக்க அவள் முகத்தை பார்த்து, "என்னை உனக்கு அவளோ பிடிக்குமா, எனக்கும் உன்னை பிடிக்கும் டி ஆனால் நான் உனக்கு தகுதியானவனான்னு தெரியலையே பட்டு" என்றான்.

சிறிது நேரம் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு அப்படியே உறங்கிப் போனான்.

எப்போதும் போல இன்றைக்கும் அவனே முதலில் எழுந்து தன் வேலைகளை முடித்து விட்டு வரும்போது அவளும் எழுந்து தயாராகி விட்டு கீழே சென்று அவனுக்காக காபி தயாரித்து வந்து அவன் குளித்து வரும் வரை காத்திருந்தாள்.

அவன் வெளிய வர அவனிடம் காபியை நீட, அந்த காபியை எடுத்துக் கொண்டு, " இதெல்லாம் நீ எதுக்கு பண்ற" என்றான்.

"ம்ம்ம்ம் அதுவா இந்த காஃபில வசியம் மருந்து கலந்திருக்கேன் உங்களை வசியம் பண்ண" என்று சிரித்தாள்.

அவனும் அதற்கு ஒரு மெல்லிய சிரிப்பை சிரிக்க அந்த சிரிப்பில் மயங்கியவள் அவன் சட்டையை இழுத்து அவன் இதழில் ஒரு முத்தமிட்டாள்.

அவன் மெல்ல "ஏய் " என்றான்.

"போடா" என்றாள்.

"மரியாதையா பேச மாட்டியா டி, நீ டாக்டர்" என்றான்.

"உனக்கு இல்லையே, " என்றாள்.

அவன் பேசாமல் அந்த இடத்தை விட்டு செல்ல, " பேசுனா ஒரு வார்த்தை பேச மட்டான் கொரிலா " என்று முணுமுணுத்தாள்.

அவன் எதுவும் பேசாமல் அவளின் முக பாவனைகளை கவனித்து ரசித்தான்.

அவன் தன் சட்டை அணியும் போது அவன் கையை தடுத்து விட்டு இவளே சட்டை பட்டன்களை போட்டு விட்டாள்.

அவன் தடுத்தும் கேட்கவில்லை...

இதை செய்யும்போது அவன், "ஏய்" என்பாள் இவள் "டேய் " என்பாள். வளர்ந்த குழந்தையை கண்டிப்பது போல் கண்டித்து அவனுக்கு எல்லாவற்றையும் செய்து சிகையை சரி செய்து அலுவலகத்திற்கு செல்லும் போது நெற்றிக்கும் இதழுக்கும் முத்தம் கொடுக்காமல் அனுப்பவே மாட்டாள்.

நாட்கள் செல்ல செல்ல அவனும் அதற்கு பழகி விட்டான். அவள் நெற்றியில் முத்தம் கொடுக்கும் போதே கண்களை மூடி கொள்வான். இதழுக்கு கொடுத்தால் அதை அமைதியாக வாங்கிக் கொண்டு சென்று விடுவான்.

ஒரு வேளை அவள் இரவு நேர பணிக்கு சென்றால் காலையில் அவள் வரும் வரை காத்திருந்து அவளிடம் முத்தம் வாங்கி கொண்டு தான் அலுவலகத்திற்கு செல்வான் இது வழக்கமாக்கி கொண்டான்.

ஆனால் ஒரு முறை கூட அவளுக்கு இவன் முத்தமிட்டதில்லை அவள் முத்தத்தை மட்டும் பெற்று கடன்காரனாக இருக்கிறான். அவளும் அதை எதிர்பார்த்ததில்லை...

இருவருக்குள்ளும் நடக்கும் இந்த சிறு மாற்றத்தை சுசிலாவும், மான் விழியின் பெற்றோர்களும் கவனித்துக் கொண்டுதான் இருந்தனர்.

ஆனால் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்தனர். மீனாட்சிக்கும் சுந்தரத்திற்கும் இன்னும் உடல்நலம் நன்றாக தேறவில்லை இல்லை என்றால் மூவருமாக சேர்ந்து கோவிலுக்கு சுற்று பயணம் மேற்கொள்வார்கள்

இப்படி அவர்களின் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் இல்லாமல் சமமான பாதையாக சென்று கொண்டிருக்க அதில் ஒரு மேடாக மீண்டும் ஒரு தனியார் பள்ளியின் பேக் மற்றும் இதர பள்ளி பொருட்களின் குத்தகை வர அந்த டெண்டர், பள்ளி தாளாளருக்கு வரதன் மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவருக்கு சென்று விட்டது.

அதை பற்றி செந்தூரனுக்கு பெரியதாக வருத்தம் ஒன்றும் இல்லை அவன் எப்போதும் போல அலுவலகத்திற்கு வர அவனை வெறுப்பேற்றவே வரதன் தன் இரண்டாவது மனைவியுடனும் அவனை பாலில் வன்புணர்வு செய்த அந்த பெண்ணுடனும் அவன் அறையில் காத்திருந்தார்.

அன்றைய தினம் இளங்கோவும் அலுவலகத்திற்கு தாமதமாக வர இவன் யாரிடமும் எந்த விசாரணையும் செய்யாமல் நேராக தனது அறைக்குச் சென்றுவிட்டான். அங்கு மூவரையும் அங்கு கண்டதும் அப்படியே உறைந்து நின்று விட்டான்.

இந்த தடுமாற்றம் தானே அவர்களுக்கு தேவை வரதன் மெல்ல அவனிடம் வந்து, " நான் தான் அப்பவே சொன்னேன் இல்லை அந்த வெற்றி நிரந்தரம் இல்லைன்னு..

ஏண்டா என்னடா வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்க ஒரு என்ஜாய்மென்டே இல்லாம இங்க பாரு பட்டு, சிட்டு என்று இருவரின் இடையிலும் கையை போட்டு அவன் முன்னே அவர்களுக்கு முத்தமிட அவனுக்கு மேலும் அருவருப்பை தந்தது அது மட்டுமல்லாமல் அந்தப் பெண் அவனிடம் வந்து அவன் மேனியை தடவி முத்தமிட வர அவளை அடித்து விட்டான்.

அந்த அருவருப்பு வேறு தாங்காமல் மூவரையும் அங்கிருக்கும் கட்டையை கொண்டு அடுத்து அனுப்பி விட்டான். ஆனாலும் அந்த அருவெறுப்பு அவனால் தாங்கவே முடியவில்லை

எப்போதும் போல அங்கிருக்கும் கண்ணாடி மேஜையை உடைத்து விட்டு கையில் ரத்தம் சொட்ட நின்றிருந்த வேளை இளங்கோ வந்து "என்னாச்சுடா " என்று கேட்க அவன் நடந்ததை எல்லாம் கூறினான்.

அவனும் சலிக்காமல் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி எல்லாம் முடிந்த பின்பு அமைதியாக அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த வேளை செந்தூரன் கேட்டதில் இளங்கோ
அதிர்ச்சியானான்.
 
Top Bottom