அவளின் சீமந்தம் நல்லபடியாக முடிந்து அனைவரும் வீட்டிற்கு வர அவளுக்கு மருத்துவமனையில் இருந்து ஒருவர் சீரியஸாக இருப்பதாகவும், இவள் வந்தால் தான் அவள் சரியாவார் என்று கூற யார் சொல்லியும் கேட்காமல் அவள் செல்ல முற்பட்டதால் செந்தூரனே அவளை அழைத்து வந்தான்.
அவள் வந்த வேலை முடிந்தவுடன் அவளை கை தாங்கலாக கூட்டிக் கொண்டு வந்து மருத்துவமனையின் வாசற்படியில் நிறுத்திவிட்டு, "இங்கயே இரு மானு நான் போய் கார் எடுத்துட்டு வந்துடறேன் எங்கேயும் போகாதே" என்றான்.
"இது என் ஹாஸ்பிடல் இங்க எனக்கு என்ன ஆகப்போகுது போய் வண்டி எடுத்துட்டு வாங்க நான் இங்கே நிற்கிறேன்" என்று சொன்னாள்.
அவன் சென்றதும் ஒருவன் அவசர அவசரமாக ஓடி வந்து, " அம்மா அங்க ரெட் கலர் ஷர்ட்டும் வைட் கலர் பேண்டும் போட்டவர் உங்களுடைய ஹஸ்பண்டா அவரு அங்க மயங்கி கிடக்கிறார் கொஞ்சம் என்னன்னு வந்து பாக்குறீங்களா!" என்றார்.
அவன் அணிந்திருந்த உடையின் நிறத்தை சரியாக சொன்னதால் அவளும் பதறிக் கொண்டு தன் மேடிட்ட வயிற்றை பிடித்துக் கொண்டு மெதுவாக இறங்கி அவருடன் சென்றாள்.
அங்கு சென்றவுடன் தான் தெரிந்தது அது தன் கணவன் இல்லை என்றும் தன்னை கடத்த திட்டமிட்டு இப்படி செய்து இருகிறார்கள் என்று புரிவற்குள் இரண்டு நபர்கள் இரண்டு கையைப் பிடித்து காரின் உள்ளே தள்ளி அவள் முகத்தில் மயக்க மருந்தை தெளித்தனர் அதில் அவள் மயங்கி விட்டாள்.
அந்த கார் அவனை தாண்டி செல்ல இவன் இந்த புறம் வந்து நிறுத்தி அவளை நிற்க வைத்த இடத்தில் தேட அவள் அங்கு இல்லை என்றதும் பதறி கீழே இறங்கி அவள் பேரை சொல்லி அழைத்து கத்தினான் அங்கிருக்கும் அனைவரிடமும் அவளை கேட்க எல்லோரும் பார்க்கவில்லை என்று தான் சொன்னார்கள்.
அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் உழன்று நின்றிருந்த வேளை அவன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது.
அந்த நடுக்கத்தில் அதை எடுத்துக் காதில் "சொல்லுங்கள்" என்றான்.
அதற்கு அந்த பக்கத்திலிருந்து பதில் வராமல் சிரிப்பு மட்டும் வந்தது..
அவன் இருந்த பதட்டத்தில் அது யார் என்று கூட தெரியாமல், " என்ன போன் பண்ணிட்டு சிரிச்சிட்டு இருக்கீங்க" எந்த சிடுசிடுத்தான்.
"ஓ பேசறது யாருன்னு கூட தெரியாத அளவுக்கு பதட்டத்தில் இருக்கியா அதுதான் எனக்கு வேணும் " என்று கூறும்போது தான் தெரிந்தது அது தன்னை பெற்ற மகராசன் என்று அது அவனுக்கு மேலும் பதற்றத்தை தர பேசிக்கொண்டே வந்தவன் பதில் தடுமாறி கீழே உருண்டு விழுந்தான்.
அந்த பக்கம் இருந்தவர் என்ன பதிலே காணோம் என்று சொல்ல அந்த போனை எடுத்து காதில் வைத்து "சொல்லுடா" என்றான்.
"மரியாதை ரொம்ப முக்கியம் இப்போ நீ தேடுற ஆளு என்கிட்ட தான் இருக்கு.." என்றார்.
அவன் தன் கண்களை துடைத்துக்கொண்டு, " பொய் சொல்லாதே நீ நீ தான் ஜெயில்ல இருக்க" என்றான்.
"நீ இன்னும் அப்டேட் ஆகவில்லை டா எனக்கு ஆளுங்க அதிகம் அந்த ஆளுங்களை வச்சு நான் வெளியே வந்து நாலு நாள் ஆச்சு இன்னைக்கு கூட உன் பொண்டாட்டி பங்ஷனுக்கு நான் வந்து இருந்தேன் உனக்குத்தான் தெரியல
சரி நான் அதை பத்தி பேச விரும்பல எனக்கு தேவையானது உன்கிட்ட இருக்கு உனக்கு தேவையானது என்னிடம் இருக்கு நான் கேக்குறது கொடுத்துட்டு உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போ" என்றார்.
அவனுக்கு இப்போது எல்லாவற்றையும் விட தன் மனைவி தான் முக்கியம் என்பதால், "உனக்கு என்ன வேணும்னு சொல்லு" என்றான்.
"என்கிட்ட இருந்து வாங்குன அந்த சொத்து, அப்புறம் நீ எந்த போதை பொருள் விக்கிறேன் சொல்லி என்னை ஜெயில்ல போனியோ அதே போத மருந்து ஹாஸ்பிடல் வெளியே ஒருத்தன் இருவது கிலோ போதை பொருள் வச்சிருக்கான் அது என்கிட்ட எடுத்துட்டு வந்து குடுத்துட்டு உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போ" என்றார்.
"நான் அந்த வேலையை செய்ய மாட்டேன்" என்றான்.
"அப்போ உன் பொண்டாட்டி உனக்கு இல்லை நீ உன் பொண்டாட்டி என்ன நிலைமைல இருக்குன்னு பாக்கணும் இல்லை " என்று சொல்லி அவளை ஒரு புகைப்படம் எடுத்து அவனுக்கு அனுப்பி வைத்தார். அதில் பதறியவன் வேறு வழி இல்லாமல், " சரி நான் அந்த பொருளை எடுத்துட்டு வந்து உனக்கு கொடுக்கிறேன் என்னோட பொண்டாட்டி எனக்கு ரொம்ப முக்கியம்" என்றான்.
"டேய் இந்த செண்டிமெண்ட் டயலாக் எல்லாம் பேசாமல் நான் சொன்னதை செய்டா அப்புறம் உன்னோட போன் இருக்கு பாரு அதை அங்கே தூக்கிப்போட்டு உடைச்சிட்டு வந்துடனும் என் ஆளு போனும், பொருளும் தருவான் அதை வாங்கிட்டு நான் லொகேஷன் அனுப்புவேன் அந்த இடத்துக்கு வந்து சேரு " என்றார்.
அவனும் உயிரற்ற உடலாக அந்த போனை தூக்கி கீழே போட்டு உடைத்து விட்டு தன் காரை எடுத்துக்கொண்டு வெளியே வந்து அவனிடம் அந்த பொருளை வாங்கி தன் காரில் பயணித்தான்.
வரதன் அனுப்பிய லொகேஷனிருக்கு வந்து சேர்ந்தான் செந்தூரன் அது வேறு எந்த இடமும் இல்லை அவனை எந்த இடத்தில் கைது செய்ய வைத்தானோ அதே இடத்திற்கு வர வைத்திருந்தார்.
அவன் வருவதற்குள் அவள் தப்பிக்க முயன்ற போது அவளை அடித்து அவளை மயக்கமடைய செய்திருந்தார்.
உள்ளே வந்தவுடன் அவளை கண்டதும் ஓடி வந்து அவளை அணைக்க நான்கு பேர் அவனை பிடித்து இழுத்துக் கொண்டனர்.
"அவ்வளவு சீக்கிரம் உன்னை உன் பொண்டாட்டி கூட சேர விட்டுடுவேணா, நான் கேட்டதெல்லாம் எனக்கு கொடு" என்றார்.
அவனும் அவன் கேட்டது எல்லாம் கொடுத்துவிட்டு, " இப்போ நான் என் பொண்டாட்டி கூப்பிட்டு போலாமா" என்றதற்கு
"இங்கிருந்து யாரும் வெளியே போக முடியாது கொஞ்சம் அங்க பாரு " என்றவுடன் அங்கு 20 பேர்கள் அவனை சூழ்ந்து கொண்டனர்.
" இப்போ உன்னை இங்கு அடிச்சு தூக்கிட்டு போய் போலீஸ் ஸ்டேஷன்ல போட்டு விடுவோம் என்னனு கேட்டா போதை பொருள் கடத்தினதுக்கு நீ தான் கடத்தலைன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க...
"ஏன்னா நீ நாலஞ்சு டோல் தாண்டி வந்து இருக்க அங்க உன் வண்டி கிராஸ் ஆகி வந்ததற்கான ரெக்கார்டு இருக்கும் எப்படி நம்ம பிளான்" என்றார்.
அப்போது மான்வழி கண் விழித்து, "செனு " கத்தினாள்.
அவள் கத்திய கத்தலில் "என்னை என்ன வேணா பண்ணு என் பொண்டாட்டிய விட்டுடு" என்றான்.
"அது எப்படி விட முடியும்" என்று சொன்னவுடன் அங்கே ஒரு பெண் அவளை கன்னத்தில் பளார் பளார் என்று அடித்ததில் அந்த வலியை தாங்க முடியாமல் மான் விழி துடித்தாள்.
அதைப் பார்த்ததும் இவன் அனைவரையும் அடிக்க பின்னிருந்து ஒருவன் செந்தூரனை கையில் வெட்டி விட்டான் அவன் கையிலிருந்து ரத்தம் கொட்டியது
அதை பொருட்படுத்தாமல் தன்னவளை காக்க போக வரதன் அவளிடம் சென்று ஒரு கத்தியை கொண்டு போய் வைத்துக் கொண்டு, " நீ ஒரு அடி அங்கிருந்து வந்தாலும் இவளை குத்திடுவேன்" என்றான்.
பெற்ற மகனிடம் கொடுமையாக நடந்து கொண்டாலும் பேரப் பிள்ளைகளிடம் உயிராக இருப்பர்.
ஆனால் இவன் தந்தையாகவும் இல்லை, தாத்தாவும் இல்லை இவன் எல்லாம் மனிதன் தானா என்று தோன்றியது..
தன்னவளை எப்படியாவது அந்த மிருகத்திடமிருந்து காக்க வேண்டும் என்று அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கேயே நின்றான்.
எல்லோரும் சுத்தி அவனை அடிக்க அந்த அடிகளை எல்லாம் வாங்கிக் கொண்டு அப்படியே நின்றான்.
அவன் அடி வாங்குவதை தாங்க முடியாமல் மான் விழி அந்த கத்தியை பிடுங்கி தூரப்போட, அதில் கடுப்பானவன் அவளை ஓங்கி அடித்ததில் அங்கிருக்கும் ஒரு இரும்பின் மேல் விழுந்தாள். அவள் வயிற்றிலிருந்து ரத்தம் வரத் தொடங்கியது.
அதை பார்த்தவன், " மானு " என்று கத்தி அவர்களை அடித்து விட்டு அங்கு சென்று தன் அவளை தூக்கும் நேரம் இளங்கோ போலீஸ் உடன் அங்கு வந்து சேர்ந்தான்.
இவர்கள் எப்படி இங்கு வந்தார்கள் என்று வரதன் யோசித்தார். ஆனால் தன் தந்தையை பற்றி தெரிந்த செந்தூரன்
மருத்துவமனையிலிருந்து காரில் ஏறிக்கொண்டு கொஞ்சம் தூரம் வந்து விட்டு தன் நண்பனுக்கு தன் காரில் வைத்திருக்கும் இன்னொரு ஃபோனில் இருந்து அழைத்தான்.
போனை எடுத்த இளங்கோ, "மச்சான் என்ன இந்த நம்பர்ல இருந்து கூப்பிட்டு இருக்க" என்றான்.
"இளங்கோ நான் சொல்றத நல்லா கேளு என்னால எவ்வளவு நேரம் பேச முடியுமுன்னு தெரியல நான் இப்போ இந்த நம்பர்லிருந்து உனக்கு லைவ் லொகேஷன் அனுப்புறேன் நீ உடனடியா போலீஸ கூப்பிட்டுகிட்டு இந்த லொகேஷன் பாலோ பண்ணி வா ஆனா நீ வரது யாருக்கும் தெரிய கூடாது " என்றான்.
"டேய் என்னடா சொல்ற எனக்கு ஒன்னும் புரியல என்ன ஆச்சு" என்று கேட்டார்.
"மானுவை கடத்திட்டாங்கடா அது வேற யாரும் இல்ல அந்த ஆளு தான் கடைத்திருக்கிறான்டா இப்போ போதை பொருளை கொண்டு வந்து கொடுக்க சொல்றான் நான் எடுத்துட்டு போயிட்டு இருக்கேன் நீ எல்லாத்தையும் இன்ஃபார்ம் பண்ணி கூட்டிட்டு வா" என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான்.
இளங்கோவும் அவன் சொன்னதைக் கேட்டு இதோ வந்து நின்று விட்டான். என்ன யாருக்கும் தெரியாமல் பதுங்கி வந்தால் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது.
அவர்கள் வந்ததும் எல்லோரையும் கைது செய்து அழைத்துச் செல்ல, செந்தூரன் துடிப்பதை இளங்கோவால் பார்க்க முடியாமல் அவனுக்கு கண்ணீர் வந்து "மச்சான் தங்கச்சியை தூக்குடா ஹாஸ்பிடல் உடனே கூட்டிட்டு போகலாம் " என்றான்.
"என்னால இவளை இப்படி பார்க்க முடியல மச்சான் " என்றான்.
"அதை இப்போ பாத்துட்டு இருந்தா வேலைக்காது மச்சான் தூக்குடா" என்ற போது தான் தெரிந்தது செந்தூரனையும் நன்றாக அடித்து வைத்திருப்பதும், அவன் கையில் வெட்டுப்பட்டு இருப்பதும்,
அதை பொறுப்பெடுத்தாமல் அவளை தூக்கும் போது அவனுக்கு ரத்தம் சிந்த இளங்கோ வேகமாக காரை எடுத்து மருத்துவமனையை நோக்கி ஓட்டிக் கொண்டிருந்தான்.
அவளை தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு அவள் சிகையை மெல்ல தடவி கொடுக்கும் போது அன்று அவள் நான் சாகறதுக்குள்ள எனக்கு ஒரு முத்தம் கொடுடா என்று கேட்டது நினைவுக்கு வர,
தன் கண்களை துடைத்துக் கொண்டு அவள் இதழுகு ஒரு முத்தம் கொடுத்தான்.
அவன் விவரம் தெரிந்து ஒருவருக்கு முத்தம் கொடுக்கிறான் ஆனால் அந்த முத்தத்தை உணரும் நிலையில் அவள் இல்லை... அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டே வந்தான்.
அப்போது சென்னையில் மழை வேற பெய்ய தொடங்கியதால், வண்டிகள் மொத்தமும் போக முடியாமல் நின்று கொண்டிருந்தது.
இருவருக்கும் இது வேறயா எப்படி அவளை காப்பாற்றுவது என்று தெரியாமல் முழித்திருந்தனர்.
செந்தூரன் மான்விழியை காப்பாற்றுவானா இல்லை அவள் சொன்னது போல், குழந்தையை இவன் மட்டும் வளர்ப்பானா பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்....