பிரியா அனைத்தையும் சொல்லி முடித்தவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
இத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்தவளின் குரல் கூட இப்போது ஓய்ந்து போயிருந்தது.
கண்களில் கண்ணீர் வற்றியிருந்தாலும், அந்த வலியின் சுவடு இன்னும் முகத்தில் அப்படியே இருந்தது.
காபி ஷாப்பின் அமைதி அவர்கள் இருவருக்கும் நடுவே கனமாகப் படர்ந்தது.
பரத் எதுவும் பேசவில்லை.
பேசுவதற்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை அவன் மனம் முழுவதும் பிரியா கூறிய விஷயங்களே ஓடிக்கொண்டிருந்தன.
அவன் பார்வை மெதுவாக தருணின் மீது விழுந்தது.
அவளின் தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த சிறுவன், உலகத்தில் எந்த கவலையும் இல்லாதது போல நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.
ஆனால் அந்தச் சிறிய தோள்களில் எவ்வளவு பெரிய இழப்புகள் சுமந்து கிடக்கின்றன என்பதை இப்போது தான் உணர்ந்தான் பரத்.
பிறந்த சில மாதங்களிலேயே தாய் தந்தையை இழந்திருக்கிறான்.
ஆனாலும் அதையே அறியாமல் தன் உலகமே பிரியா என்று நம்பி அவளையே பற்றிக் கொண்டு வாழ்கிறான்.அந்த எண்ணமே அவன் நெஞ்சை ஏதோ செய்தது.
பிறகு ,அவன் பார்வை பிரியாவிடம் திரும்பியது.
இத்தனை நாட்களாக மாதங்களாக அவளைப் பார்த்திருக்கிறான்.
காதலித்திருக்கிறான். ஆனால் இன்று தான் அவளை உண்மையாகப் பார்க்கிறான் என்று தோன்றியது.
தினமும் சிரித்த முகத்துடன் ட்ரெயினில் வருகிற இவளின் பின்னால் இவ்வளவு காயங்களும் போராட்டங்களும் இருக்கும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. அவள் மீது இருந்த காதலை விட மரியாதை பல மடங்கு உயர்ந்தது அவனுக்கு.
அப்போது, தூக்கத்தில் இருந்த தருண் லேசாக நெளிந்தான்.
"ம்மா..."என்று முணுமுணுத்தபடி பிரியாவின் கழுத்தில் மேலும் முகம் புதைத்துக் கொண்டான்.
உடனே பிரியாவின் கை அவன் முதுகை வருடியது. அழுது முடித்த முகத்திலும் அந்த ஒரு நொடி தாய்மையின் மென்மை மட்டுமே தெரிந்தது. அதை பார்த்த பரத்தின் உள்ளம் மேலும் கனத்தது.
"பிரியா..."என்று மெதுவாக அழைத்தான் பரத்.
அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
"நீங்க இனிமேல் தனியா இல்லை..."என்று சொல்ல வந்தவன், பாதியிலேயே நிறுத்திக் கொண்டான். அந்த உரிமை தனக்கு இன்னும் இல்லை என்பதும் அவனுக்குத் தெரியும்.
ஆனாலும்... அவளை இந்த பிரச்சனையில் தனியாக விடக்கூடாது என்ற எண்ணம் மட்டும் அவன் மனதில் உறுதியாக வேரூன்றியிருந்தது.
குழந்தையைத் தட்டிக் கொடுத்தவள், அவன் சற்றே அசைந்தபடி நிமிர்ந்து உட்கார்வதைப் பார்த்தாள். எவ்வளவு நேரம் தான் அவள் தோளிலேயே சாய்ந்து இருப்பான்?
அதன் பிறகு,"ரொம்ப நேரமாச்சு. தம்பிக்கு ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?" என்று பரத் கேட்டான்.
"இல்லை... எதுவும் வேண்டாம்..." என்றவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
"சாரி... என்னோட குடும்ப விஷயத்தை உங்ககிட்ட சொல்லிட்டு உங்களையும் கஷ்டப்படுத்திட்டேன். ஏனோ யார்கிட்டயாவது மனசு விட்டு பேசினா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்னு தோணுச்சு. ஏனோ உங்ககிட்ட சொல்லணும்னு தோணுச்சு..." என்றாள்.
அவனது மனதில் ஒரு நெகிழ்வு தோன்றியது.தன் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்து அவள் மனம் திறந்து பேசியிருப்பது அவனுக்கு பெரிய விஷயமாகவே தோன்றியது.அந்த நேரத்தில் அவளது போன் ஒலித்தது.
வேலைக்கு வரவில்லை என்பதை அவள் யாரிடமும் தெரிவிக்கவில்லை. நேரம் கடந்தும் வராததால் உடன் வேலை செய்யும் ஒருவர் அழைத்திருந்தார்.
அழைப்பை ஏற்றுப் பேசியவள், தனக்கு விடுப்பு வேண்டும் என்று கூறினாள்.
அவள் பேசுவதை அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தான் பரத்.
அழைப்பை முடித்தவள் சோர்வாக ஒரு பெருமூச்சை விட்டாள்.
"இதுக்கு மேல என்னால வேலை செய்ய முடியும் என்று தோணலை. வீட்டுக்கு போறது தான் சரியா இருக்கும். தம்பியுமே கூட பயந்துட்டான்..." என்றாள்.
அவனுக்கும் அது புரிந்தது.
இப்போதைய மனநிலையில் அவளால் வேலை பார்க்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தது.
"நான் உங்க கூட வரட்டுமா? வீடு வரைக்கும்..." என்று தயக்கத்துடன் கேட்டான்.
அவள் சிறிது புன்னகைத்தாள்.
"இல்லை... வேண்டாம். இதுவரைக்கும் தனியாவே சமாளிச்சு இருக்கேன். இனியும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கு."என்றாள் புன்னகையுடன்,
"ஒரு நிமிஷம்..."என்றான் அவசரமாக.
அவள் கேள்வியாக அவனைப் பார்த்தாள்.
"நீங்க ஏன் எல்லாத்தையும் தனியா சமாளிக்கணும்னு நினைக்கிறீங்க? நானும் உங்களுக்கு ஏதாவது உதவி பண்ணலாம்னு நினைக்கிறேன்."
அவள் அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"தப்பா நினைக்காதீங்க. மனிதாபிமானத்துல தான் சொல்றேன்."என்றான் மெதுவாக.
அதைக் கேட்டவள் லேசாகச் சிரித்து விட்டு, எதுவும் பேசாமல் இரண்டு அடி எடுத்து வைத்தாள்.
"பிரியா..."என்று மீண்டும் அழைத்தான்.
அவள் திரும்பிப் பார்த்தாள்.
"உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா... உங்க போன் நம்பர் கிடைக்குமா?"என்று கேட்டான்.
அவளது கண்கள் சற்றே சுருங்கின.சில நொடிகள் அவனை ஆராய்வது போலப் பார்த்தாள்.
அவனோ அமைதியாகவே நின்றிருந்தான்..பின் ஒரு முடிவு எடுத்தவனாக,"நீங்க ஏன் எல்லாத்தையும் தனியா சுமக்கணும்னு நினைக்கிறீங்க?"
என்று மெதுவாகக் கேட்டான்
பிரியா கேள்வியாக அவனைப் பார்த்தாள்.
"தப்பா எடுத்துக்காதீங்க. உங்க கதைய கேட்டு வருத்தப்படுற ஒரு மனுஷனா சொல்றேன். ஏதாவது உதவி தேவைப்பட்டா... யாரவது உதவியா நிக்கணும்னு தோணுச்சுன்னா... என்கிட்ட சொல்லலாம்."என்றான் தயக்கத்துடன்.
அவள் சில நொடிகள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"இதுவரைக்கும் தனியாவே சமாளிச்சு இருக்கேன். இனியும் சமாளிச்சிடுவேன்னு நம்பிக்கை இருக்கு."என்றாள் சிறிய புன்னகையுடன் மீண்டும்...
இதுவரை யாரிடமும் உதவி என்று பொய் கேட்டு நின்றதில்லை.. புதிதாக கேட்கவும் அவளது மனம் விரும்பவில்லை.. என்பதுதான் உண்மை.. தனது மனதில் இருக்கும் வலிகளை கொட்டி விட வேண்டும் என்றுதான் எண்ணினாலே தவிர உதவிக்கு ஆள் வேண்டும் என்று எண்ணி அவனிடம் அனைத்தையும் கூறவில்லை .ஆகையால் அவனை தவிர்க்க முயன்றாள்.. ஆனால் அவனும் விடாப்படியாக நின்றான்.
"அது எனக்குத் தெரியும். நீங்க ரொம்ப தைரியமானவங்க. ஆனா எல்லா தைரியமானவங்களுக்கும் சில நேரம் ஒரு துணை தேவைப்படும்... ஒரு சில நேரம் ரொம்ப முடியாம உடஞ்சு நிக்கும்போது ஏதாவது தோள் கொடுத்தா பரவாயில்லை என்று தோணும்..." என்றான்.
"உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா... உங்க கான்டாக்ட் நம்பர் குடுப்பீங்களா? ஏதாவது அவசரம் இருந்தா பேசிக்கலாம்."
அவளும் ஒரு கணம் யோசித்தவள்,"உங்க போன் நம்பர் சொல்லுங்க..." என்றாள்.
இதுவரை தனது முகவரியையோ, போன் நம்பரையோ யாரிடமும் எளிதில் கொடுக்காதவள். வாழ்க்கை அவளை அப்படி எச்சரிக்கையாக மாற்றி வைத்திருந்தது.
ஆனால் இன்று ஏனோ, அவனிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.
அவள் தன் எண்ணைக் கேட்பதைப் பெரிய விஷயமாகவே எடுத்துக் கொண்டான் பரத்.
உள்ளுக்குள் ஒரு சிறிய மகிழ்ச்சி தோன்றினாலும், அதை வெளிக்காட்டாமல் அமைதியாக தனது எண்ணைக் கூறினான்.
அவளும் அதைச் சேமித்துக் கொண்டாள்.பிறகு மெதுவாக ஒரு புன்னகையை உதிர்த்தவள்,
"ரொம்ப தேங்க்ஸ்... இவ்வளவு நேரம் நான் சொன்னதெல்லாம் பொறுமையா கேட்டதுக்கு. இப்ப கொஞ்சம் மனசு லேசா இருக்கு..." என்றாள்.
அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. தோள்பையை எடுத்துச் சுமந்தவள், உறங்கிக் கொண்டிருந்த தருணை தோளில் சரியாகச் சாய்த்துக் கொண்டாள்.
பின் மெதுவாக அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.
அவள் செல்லும் வரை பரத்தின் பார்வை அவளை விட்டு விலகவில்லை.
அவள் கூட்டத்தில் மறைந்து போன பிறகும் கூட, அப்படியே அமர்ந்தபடியே இருந்தான். மனம் கனத்துப் போயிருந்தது.
இத்தனை நாட்களாக சிரித்த முகத்துடன் பார்த்த பெண்ணின் பின்னால், இவ்வளவு வலிகளும் கண்ணீர்களும் புதைந்து கிடக்கும் என்று அவன் ஒருபோதும் நினைத்ததில்லை.
அவளின் ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.
அவனை அறியாமலே அவனது கைகள் இறுகின.தாடை கடினமாயிற்று. விக்ரமின் முகம் நினைவுக்கு வர, உள்ளுக்குள் கோபம் கொதித்தது.
ஒரு பெண்ணின் பலவீனத்தையும், தனிமையையும் பயன்படுத்திக் கொண்டு அவளை அச்சுறுத்துகிறவன் மீது வெறுப்பே எழுந்தது.
ஆனால் அந்த கோபத்தை விட பெரியதாக ஒரு எண்ணம் அவன் மனதில் வேரூன்றியது.
"இவ இனிமேல் தனியா இல்லை..".என்ற எண்ணம் தான் அதை வாய் விட்டே கூறிக் கொண்டான்..
அவன் கூறியதை அவள் கேட்டிருக்கவில்லை.
உதவி கேட்கவும் இல்லை.
இருந்தாலும், அவளுடைய வாழ்க்கையில் வந்திருக்கும் இந்த இருளிலிருந்து அவளை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற உறுதி அவனுள் மெதுவாக உருவாகிக் கொண்டிருந்தது.
அந்த உறுதியோடு, நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றியவன் மெதுவாக எழுந்து நின்றான்.
அவன் இப்போது வேலைக்குச் செல்லும் மனநிலையில் இல்லை..
அதே நேரத்தில் நேராக வீட்டிற்கும் செல்லத் தோன்றவில்லை.
மனம் முழுவதும் பிரியா கூறிய விஷயங்களே சுற்றிக் கொண்டிருந்தன.
சிறிது நேரம் தனியாக இருக்க வேண்டும் என்று தோன்றியது, அருகில் இருந்த பூங்காவிற்குச் சென்று ஒரு பெஞ்சில் அமர்ந்தான்.
கண்களை மூடி அமைதியாக இருக்க முயன்றான்.
ஆனால் அவன் காதுகளில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது பிரியாவின் குரல்தான்.
விக்ரமின் வார்த்தைகளும், அவளது கண்ணீரும், தருணின் முகமும் மாறி மாறி நினைவில் வந்து கொண்டே இருந்தன.
சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து தன்னைச் சமநிலைப்படுத்திக் கொண்டவன், அதன் பிறகுதான் வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தான்.
அந்த நேரத்தில் அவனது போன் பலமுறை அதிர்ந்தது.
எடுத்துப் பார்த்தால் சசியின் அழைப்பு.அழைப்பை ஏற்றவன் அமைதியாக இருக்க,
அவனோ,"என்னடா இன்னும் ஆபீஸ்ல காணோம்?" என்றான்.
"கொஞ்சம் வெளிய வேலைடா... முடிச்சிட்டு வரேன். நாளைக்கு ஆபீஸ் வந்துடறேன்..." என்று மேலோட்டமாகப் பதிலளித்தான்.
மேற்கொண்டு எதுவும் பேசாமல் அழைப்பை துண்டித்துவிட்டான்.
சசிக்கு அவனது குரலே சரியில்லை என்று புரிந்தது.
கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே பரத்தின் நடவடிக்கைகளில் மாற்றம் இருப்பதை அவன் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.
வழக்கமாக எதையும் மறைக்காதவன், இப்போது ஏதோ ஒன்றை மனதிற்குள் போட்டுக் கொண்டு தவிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது.
'இப்போ கேட்டா சொல்ல மாட்டான்... அவனாவே பேசட்டும்...'
என்று நினைத்தவன் அமைதியாகிவிட்டான்.
ஆனால் நண்பனின் குரலில் இருந்த சோர்வும் வலியும் அவனை நிம்மதியாக இருக்க விடவில்லை.'இன்னைக்கு நேர வீட்டுக்கே போய்ப் பார்க்கணும்... என்ன பிரச்சனைன்னு எப்படியாவது தெரிஞ்சுக்கணும்...'
என்று முடிவு செய்துக் கொண்டான் சசி.
சிறிது நேரத்தில் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்ட பரத் வீட்டிற்கு சென்றான்...
இரவு சசி வீட்டிற்கு வந்தவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, முதலில் குழந்தையை பார்த்துவிட்டு, மனைவியையும் நோட்டமிட்டான்.
பின்பு மெதுவாக, ரேகாவிடம், “நான் கொஞ்சம் உன் அண்ணனைப் பார்த்துட்டு வரேண்டி… அவன் ரெண்டு மூணு நாளா ஆளே சரியில்ல. என்னன்னு கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்கிறான்…” என்றான்.
அதைக் கேட்டவள் சிறு பதட்டத்துடன், “எனக்கு நீங்க இதைப் பத்தி எதுவும் சொல்லவே இல்லையே?” என்றாள்.
அவனும் அமைதியாக, “உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு இல்ல டி… தம்பி பிறந்து இன்னும் மூணு மாசம் கூட ஆகல. கொஞ்சம் அமைதியா இரு… எனக்கும் சரியா தெரியல. ஆனா அவன் கிட்ட பேசணும் போல இருக்கு…
"அவனை பார்த்து பேசிட்டு வரதுக்கு நேரம் ஆச்சுன்னா வீட்ல அம்மா சத்தம் போடுவாங்க. அதனாலதான் இப்போ உன்கிட்ட சொல்லிட்டு போறேன்... அம்மா கிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கோ. சரியா?” என்று கூறி,“நான் போய் அவனைப் பார்த்து பேசிட்டு வரேன்…வந்து என்னன்னு சொல்ற .ரொம்ப யோசிச்சிட்டு இருக்காத, தம்பி தூங்கும்போதே தூங்கிடு” என்று வெளியேறினான்.
சில நிமிடங்களில் பரத்தின் வீட்டை நோக்கி சென்றான்.
அப்போது ஹாலில் வினிதாவும், பானுமதியும் மட்டும் இருந்தார்கள்...
வினிதா தான் இவனை பார்த்துவிட்டு ,"என்ன மாமா இவ்வளவு தூரம் எங்களை தேடி வந்து இருக்க? அதுவும் பாப்பா பொறந்த பிறகு அதிசயமா இல்ல இருக்கு? பாப்பா பொறந்ததுல இருந்து நீ இந்த பக்கமே வரலையே !"என்று அவனை வம்பு இழுத்தாள்..
"அப்படியெல்லாம் இல்லடி குட்டச்சி சும்மா உங்கள எல்லாம் பார்த்துட்டு போகலாம்னு தான் வந்தேன்.. இன்னைக்கு தான் நேரம் கிடைச்சுச்சு "என்று தான் வந்த விஷயத்தை கூறாமல் வேறு ஏதோ கூறி சமாளிக்க முயல..
"என்கிட்டவே ரீல் சுத்துற பாத்தியா ?உன்ன பத்தியும் அண்ணனை பத்தியும் எனக்கு தெரியாதா? உன் பிரண்ட தேடி தான் நீ வீடு வரைக்கும் வந்திருக்க… எனக்கே வா..மேல மாடில தான் இருக்கு.” என சத்தமாக கூறியவள், தன் தாயை ஒரு முறை பார்த்துவிட்டு, குரலை சற்றே, குறைத்து அவன் அருகில் நெருங்கி உட்கார்ந்து,
"என்ன ஆச்சு மாமா ? அண்ணன் ரெண்டு மூணு நாளா ஆள் ஒன்னும் சரியில்ல.. அதுவும் இன்னைக்கு சீக்கிரமாவே வந்துருச்சுனு தான் அம்மா சொன்னாங்க.. வந்ததிலிருந்து பெருசா வெளியேவும் வரல, இப்போ நான் வந்ததுக்கப்புறமும் மேல மொட்டை மாடியில் தான் இருக்கு ஏதாவது லவ் ஃபெயிலியரா?" என்று கண்ணடித்து கேட்க..
அவள் தலையில் நங்கென்று கொட்டியவன்." அவன் அண்ணன் டி அது ஞாபகத்துல இருக்கா?"
"அதெல்லாம் ஞாபகத்துல இருக்கு அதனால தான் கேட்கிறோம்.. இல்லன்னா நான் ஏன் கேட்க போறேன்? சொல்லு மாமா என்ன விஷயம்..? எப்படியும் உனக்கு தெரியாம இருக்காது, அது மட்டும் இல்லாம இப்ப பாப்பா பொறந்ததுல இருந்து வராத நீ! இந்த பக்கம் தலை வைத்து படுக்கிற அப்போ எனக்கு இன்னமும் ஏதோ அதிகமா டவுட் தான வருது" என்றாள் ஏதோ எதிர்பார்ப்போடு..
தன் அண்ணனுக்கு உண்மையாகவே காதல் இருந்து, அதில் ஏதாவது பிரச்சனையோ ?அப்படி காதலித்து இருந்தால் அவளுக்கு சந்தோஷம்தான். ஆனால் பிரச்சனை இருந்தால் அதை தீர்த்து வைக்கலாம் என்ற எண்ணமும் இருந்தது..
அவளை முறைத்தவன்" உன்ன மாதிரிதான் நானும்.. ஆனா, நீ நினைக்கிற மாதிரி எதுவும் கிடையாது. ரெண்டு மூணு நாளா ஆள் சரியில்லை. இன்னைக்கு சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்துட்டானு என்னென்னு கேட்கலாம்னு வந்திருக்கேன். கொஞ்ச நேரம் அமைதியா இருடி குட்டச்சி, எதையாவது பேசிக்கிட்டே இருக்க வேண்டியது எந்நேரமும் வாய் வலிக்குமா இல்லையா? வாயாடி!" என்று அவள் தலையை கலைத்து விட்டு மாடிப்படி ஏறினான் வேகமாக...
“சரி…” என்று சிரித்துக் கொண்டே அவள் தன் வேலைகளில் மூழ்கினாள்.
இவ்வளவு நேரம் சசி சாதாரணமாக எப்பொழுதும் போல வினிதாவிடம் பேசி விட்டான்.. ஆனால் ஒவ்வொரு படி ஏறும் பொழுதும், உள்ளுக்குள் ஏதோ ஒன்று இறுக்கமாக இறங்கி கொண்டிருந்தது.
'இன்னைக்கு என்னன்னு தெரிந்தே ஆக வேண்டும்… அவன் மனசுல என்ன இருக்குன்னு…' என்று எண்ணியவன் வேகமாக மேலே சென்றான்.
மொட்டை மாடியில் நின்றிருந்த பரத், அவனை திரும்பிப் பார்த்தான்.
லேசாக ஒரு புன்னகை மட்டும் உதிர்த்தான்.ஆனால் அடுத்த நொடியே அந்த புன்னகை மறைந்து, இருவருக்குமிடையில் ஒரு மௌனம்..
அவனின் மௌனத்தை பார்த்தவுடன் சசியின் முகமும் கடினமடைந்தது.