• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிழலை கடந்த காதல் -14

STN - 24

New member
சசி, பரத்தின் அருகில் சென்று நின்றான். அங்கு ஒரு வித அமைதி நிலவியது. நேரடியாக அவனிடம் விஷயத்தைக் கேட்பது சரியாக இருக்காது என்று எண்ணியவன்,

"ஏன்டா மச்சான், இன்னைக்கு ஆபீஸ் பக்கமே வரல. பாப்பாவைப் பார்க்கக் கூட வரலன்னு உன் தங்கச்சி சொன்னா. அப்படி என்ன சாருக்கு வெட்டி முறிக்கிற வேலை?" என்று புன்னகையுடன் கேட்டுக் கொண்டே அவனைத் தோளோடு இறுக்கி அணைத்தான்.

நண்பனின் கையைப் பிடித்துக் கொண்டு புன்னகைக்க முயன்றான் பரத். ஆனால், அந்தப் புன்னகையில் உயிர்ப்பில்லை என்பதை சசி அறிந்தான். எத்தனை வருட கால நட்பு! அவன் அறியாததா?

நண்பன் அவனாகக் கூறட்டும் என்று அமைதி காத்தவன், அவனுடன் சேர்ந்து சுவரில் சாய்ந்து மாடியிலேயே அமர்ந்தான்.

சில நொடிகள் தனது நண்பனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் சசி..

தொண்டையைக் கனைத்துக் கொண்டு தன் மனதில் இருந்தவற்றைக் கூற ஆரம்பித்தான் பரத்.

காலையில் இருந்து நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் பரத் கொட்டிவிட்டான். அவன் கூறி முடிக்கும் வரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சசி,

"இப்ப நீ என்ன முடிவு எடுத்திருக்க?" என்று அமைதியாகவே கேட்டான்.

நண்பனைக் கேலியாகப் பார்த்து சிரித்தவன்,"ஏன், நான் என்ன முடிவு எடுத்திருப்பேன்னு நினைக்கிற?" என்று கேட்டான்.

"நீ தான் டா மச்சான் சொல்லணும் அத? எனக்கு எப்டி தெரியும் உன் மனசுக்குள்ள வந்து பூந்தா பார்க்க முடியும்?"என்றான் நக்கலாக,

"அப்போ, வேணாம்னு அவளை விட்டு விலகிடுவேன்னு நினைக்கிறியா?" என்ற நண்பனின் கையில் தட்டிக் கொடுத்தான் சசி.

பரத் அப்படி ஒரு முடிவு எடுக்க மாட்டான் என்பது சசிக்கும் நன்றாகவே தெரியும்.


"ஆனா, அந்தப் பொண்ணுக்கு எப்படி ஹெல்ப் பண்ணலாம்னு நினைக்கிற அளவுக்குத்தான் இப்போ என் மைண்டு வேலை செய்து. ரொம்ப பிளாங்கா இருக்கு சசி. யோசிக்கவே முடியல.

அவ இந்த அளவுக்கு வலியை அனுபவிச்சுட்டு வந்திருக்கான்னு நினைக்கிறப்போதே என்னால எதுவும் சொல்ல முடியலடா. அந்தப் பிஞ்சுக் குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு? பெத்த அப்பா, அம்மா இரண்டுபேரையும் ஒரே நேரத்தில் இழக்கணும்னு அதுக்கு என்ன தலையெழுத்து?

அந்த குழந்தைக்கு எல்லாமுமா இருக்கணும்னு அவ நினைக்கிறா. அதுக்காக தனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கக் கூடாதுன்னு யோசிக்கிறா. அவ இடத்துல இருந்து யோசிச்சா, அவ யோசிக்கிறதுல எதுவுமே தப்பில்லைன்னுதான் தோணுதுடா.

அந்தக் குழந்தை முகத்தைப் பார்க்கும்போது கூட, எப்படி அவனுக்கு இதுக்கப்புறமும் அவளை அடையணும்னு தோணுது? அதுவும் அந்தக் குழந்தையை காரணமா வச்சு இவளை அடைய நினைக்கிறான். எதுவுமே யோசிக்க முடியல. மைண்டு ரொம்ப பிளாங்கா இருக்கு."என்று கூறியவன் அமைதியாகிவிட,

சசி சில நொடிகள் யோசனையில் ஆழ்ந்திருந்தான். சிறிது நேரம் கழித்து பரத்தின் தோளில் தட்டினான்.

"வரட்டும், என்ன நடக்குதுன்னு பார்ப்போம். நீ பிரியாவுக்கு ஹெல்ப் பண்ணுறதெல்லாம் ஓகே. ஆனா, நீ ஸ்ட்ரைட்டா பண்ண வேண்டாம்னுதான் எனக்குத் தோணுது.

இப்போதைக்கு எப்படியும் அந்த விக்ரம் பிரியாவை வாட்ச் பண்ணுவான். இன்னைக்கு நீங்க காபி ஷாப்புல உட்கார்ந்து பேசினதை அவன் பார்த்தானா, இல்லையான்னு நமக்குத் தெரியாது.

ஆனா, அவன் வாட்ச் பண்ணுறானோ இல்லையோ, அவனோட மூவ்மென்ட்ஸை நாம வாட்ச் பண்ணணும். அதுதான் முக்கியம்.

இன்னொரு விஷயம்... இப்போதைக்கு பிரியாவுக்கு நீ ஹெல்ப் பண்ணுறது விக்ரமுக்குத் தெரியக் கூடாது. அவன் சொல்ற மாதிரி அவன்கிட்ட பணமும், செல்வாக்கும் இருக்கு. சட்டம் நேர்மையா இருந்தாலும், பணத்தைத் தூக்கிப் போட்டா அதுக்கு ஏத்த மாதிரி வாலாட்டுற ஆளுங்க நிறைய பேர் இருக்காங்க.

அதனால நாம ரொம்ப கவனமா மூவ் பண்ணணும்."

"அதுக்காக பிரியாவை அவன் கிட்டயே தூக்கிக்கொடுக்க சொல்றியா?" என்று பரத் வேகமாகக் கேட்டான்.

"முக்கியமா அவனுக்கு பிரியா மேல விருப்பம் இல்லடா. அவள அடையணும்னு தான் நினைக்கிறான் .

நான் பேசுறதை பொறுமையா கேளு. நீ இப்போ நிதானமா யோசிக்கிற மன நிலையில இல்லை. நான் சொல்றதை யோசிச்சுப் பாரு. சரியா வருதா, இல்லையான்னு அப்புறம் சொல்லு."

தனக்கு இப்போ உண்மையாகவே தோள் கொடுக்க ஒரு தோழன் தேவை என்று உணர்ந்தவன் அமைதியாகிவிட்டான்.

அதைப் புரிந்துகொண்ட சசி, பரத்தின் தலையைத் தன் மடியில் சாய்த்துக்கொண்டான்.

வேகமாக அவன் மடியில் படுத்துக்கொண்ட பரத், கண்களை மூடியபடியே இருந்தான். சசி அவன் தலையை மெதுவாகக் கோதிக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு தன்னைச் சமாளித்துக்கொண்ட பரத் எழுந்து அமர்ந்தான்.

"இப்போ சொல்லுடா."என்றான் ..

சசியும் சிரித்தான்.."உனக்கு உன் இஷ்ட தெய்வத்தை அவ்வளவு பிடிக்குமோ?"என கேலியாகக் கேட்டான்.

நண்பனின் மனநிலையை மாற்றும் முயற்சிதான் அது.

அதைக் கண்டுபிடித்த பரத், சிரித்தபடியே அவன் தோளில் தட்டினான்.

" இன்னும் என்ன டா இஷ்ட தெய்வம்னு சொல்லிட்டு திரியுற?"

"ஆமா சார்! இவ்வளவு நாளா நீங்க லவ் பண்றத என்கிட்ட சொல்லவே இல்லையே?"

பரத் சிரிப்பை அடக்கிக்கொண்டு வேறுபுறம் திரும்பினான்.

"மச்சான்... வெட்கப்படுறியேடா!" என்று சசி அவன் கழுத்தில் கை போட்டான்.

"போடா நாயே!"

"சரி சரி... நீ வெட்கப்பட்டா நாடு தாங்குமா? இல்ல வீடு தான் தாங்குமா? கீழ என் அத்தைதையும் வினி செல்லமும் வேற உக்காந்து பேசிட்டு இருக்காங்க வீடு உள்வாங்கிட போகுதுடா பார்த்து" என்று இருவரும் வழக்கம்போல கலாய்த்துக்கொள்ள, சிறிது நேரத்தில் பரத்தின் மனநிலை மீண்டும் சகஜமாகியது.

"சரி மச்சான் நேரம் ஆகுது பாரு..நான் கிளம்புறேன்.. நீயும் வீட்டுக்கு வந்ததுல இருந்து மேலயே இருக்க பாரு. கீழ வா ..கீழ வந்து அத்தை கிட்டயும் வினி கிட்டயும் பேசிட்டு இரு!" என்று அவனை கையோடு அழைத்துக் கொண்டு கீழே இறங்கினான்..

"சரித்தை நான் வரேன்" என்றவன் கூறிவிட்டு கிளம்ப..

" டேய் சாப்பிட்டு போ! சாப்பிடுற நேரத்துல வந்துட்டு என்ன சாப்பிடாம கிளம்புற ?"என்றார் பானுமதி.

" இல்லத்தை அங்க போய் பார்த்துக்கிறேன் .."

"இது என்ன டா புது பழக்கம்? ஏன் இங்க சாப்பிடுற நேரத்துக்கு வந்து சாப்பிடாம தான் போயிருக்கியா ?" என்று அவனை கைப்பிடித்து அழைத்துக்கொண்டு வந்து உட்கார வைத்து, மூவருக்கும் பரிமாறினார்.


சிரித்துப் பேசி, ஒன்றாக உணவருந்தி முடித்து எழுந்தனர்.

பானுமதி, வினிதா இருவரிடமும் கூறிவிட்டு, நண்பனிடம் ஒரு தலையசைப்பைக் கொடுத்து, "நாளைக்கு பேசுறேன் மச்சான் " என்று கூறிவிட்டு சசி வெளியே வந்தான்.

அவன் வெளியே வந்ததும், வினிதா வேகமாக அவன் பின்னாலேயே ஓடி வந்தாள்.

"மாமா!" என்று அழைக்க, அவனும் நின்று திரும்பினான்.

"என்ன வினி?"

"அண்ணா என்ன சொன்னாரு?"
என்று அவள் ஆர்வமாகக் கேட்க,

புருவத்தை உயர்த்தி அவளை கேலியாகப் பார்த்தவன், "நீ சொன்ன மாதிரி உண்மையாவே உன் அண்ணனுக்கு லவ் ஃபெயிலியர் தானோ?" என்றான் .
உச்சிக்கொட்டியப்படி,

"கொன்றுவேன்! உண்மையா என்னன்னு சொல்லு மாமா!" என்று அவன் கையைப் பிடித்துக் உலுக்கியவள், ஆர்வமாக அவன் முகத்தைப் பார்த்தாள்.

"தெரியலையே! வாயைத் திறக்கலையே உன் அண்ணன்!" என்று சாதாரணமாகக் கூறினான்.

உடனே அவன் பைக் சாவியைப் பறித்துக் கொண்ட வினிதா,
"உண்மையைச் சொன்னா இங்கிருந்து போகலாம். இல்லனா, அக்கா எத்தனை முறை போன் பண்ணாலும் சரி, அத்தை எத்தனை முறை கூப்பிட்டாலும் சரி, இங்கிருந்து நீ நகர முடியாது. எப்படி வசதி?" என்று மிரட்டினாள்.

சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தவன் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு,"சொல்றேன் மினி மா. ஆனா, இப்போ அதுக்கான சிச்சுவேஷன் இல்லை. பைக் சாவியைக் கொடு. நேரமாகுது பாரு," என்றான்.

கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்தவள்,"மாமா... அண்ணா உன் கிட்ட சொல்லாம விட்டுடுவாரா என்ன?சொல்லு மாமா!"

"விட மாட்டான் தான். ஆனா இப்போ அதுக்கான நேரம் இல்லை."

"சரி, எனக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லு. அண்ணா லவ் பண்றது உண்மைதானே?"என்று ஆர்வமாகக் கேட்டாள்.

அவளைப் பார்த்து கேலியாகச் சிரித்தவன்,

"உன் அண்ணனா? லவ் பண்ற கேஸா? அவன்.." என்றான்.

"ச்ச்... உன்னைப் போய்க் கேட்டேன் பாரு! அதுக்கு அண்ணா கிட்டயே கேட்டுடலாம். அதுவாவது ஆடியில் ஒரு நாள் ஆச்சு வாய் திறக்கும்!"
என்று முகத்தைச் சுளித்துச் சலித்துக் கொண்டாள்.

"அதுதான் உனக்குச் சரி! அப்போ நீ அவனையே கேட்டுக்கோ என்ன ஆள விடு சாமி! எனக்கு நேரம் ஆகுது"என்று சிரித்தபடியே அவள் கையில் இருந்த சாவியைப் பிடுங்கிக் கொண்டவன், பைக்கை உயிர்ப்பித்து தன் வீடு நோக்கி வேகமாகக் கிளம்பினான்.



சசி வீட்டிற்கு சென்றவுடன், ரேகா அவனை கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்து எடுத்தாள். இப்போது இவளிடம் கூறலாமா?, வேண்டாமா ?என்று யோசித்தவன் அமைதியாக இருந்தான்.

இதுவரை அவனது விருப்பத்தை ரேகாவிடம் சசி கூறியதில்லை. நண்பனே தன்னிடம் கூறாத விஷயத்தை எப்படி மனைவியிடம் கூறுவது என்று அமைதி காத்திருந்தான்.

ஆனால் ,இப்போது பிரச்சினையாக இருக்கும்பொழுது கூறுவது சரியாக அவனுக்கு படவில்லை .பிரச்சினையை முடித்துவிட்டு கூறலாம் என்று யோசித்து அமைதியாக இருந்தான்.

ஆனால், அவளோ விடாமல் கேள்வி கேட்டுக் குடைந்து கொண்டே இருந்தாள்.

"ஒண்ணும் இல்லடி..." என்று மழுப்பினான்.

"என் கண்ணைப் பார்த்து உண்மையை சொல்லுங்க, சசி..." என்றாள் ரேகா.

அவனும் அவளை ஒரு முறை பார்த்துவிட்டு,"எதுவும் இல்லனு தானே சொல்றேன் தூங்குடி..." என்றபடி உடை மாற்றிக் கொண்டான்.

வீட்டில் அனைவரும் உறங்கி இருக்க, குழந்தையைத் தொட்டிலில் போட்டவள் அவனது அருகில் வந்து அமர்ந்தாள்.

"எதுவுமே இல்லைன்னு சொல்றீங்க, அப்படித்தானே?" என்றாள் மீண்டும் விடாமல்.

இதற்கு மேல் அவளிடம் சொல்லாமல் இருக்க முடியாது. அதே சமயம் கூறினால் அவளது உடல்நிலை பாதிக்கப்படும் என்ற எண்ணமும் அவனை வாட்டியது.

"சொல்ல வேண்டிய நேரம் வரும்போது சொல்றேன். கொஞ்சம் வெயிட் பண்ணு. ஆனா இப்போ உன் அண்ணனைப் பார்த்தா முன்னைக்கு இப்போ கொஞ்சம் தெளிவா இருக்கான். அவ்வளவுதான் என்னால இப்ப சொல்ல முடியும். நான் இருக்கேன் டி.. அவனை அப்படியே விட்டுட்டு நான் எங்கயும் போக மாட்டேன்..." என்றான்.

"அப்போ அண்ணனுக்கு ஏதோ பிரச்சனை. அப்படித்தானே?" என்றாள்.

மீண்டும் அவனுக்கு, 'ஐயோ!' என்று இருந்தது.

"அடியே... போதும். ப்ளீஸ், இப்போதான் ஒருத்திக்கிட்ட இருந்து தப்பிச்சு வந்தேன். அடுத்தது நீயா?" என்றான்.

"அப்போ வினிக்கும் டவுட் வந்திருக்கு, அப்படித்தானே?" என்றாள் வேகமாக,

"அம்மா தாய்க்குலங்களா! என்னை விட்டுருங்க. வேணும்னா
அக்கா, தங்கச்சி ரெண்டு பேரும் சேர்ந்து உங்க அண்ணனைக் குடையுங்க. இல்லைனா என் ஆளை விடுங்க..." என்றான்.

"அண்ணா வாயிலிருந்து அப்படியே முத்து விழுந்துட்டு தான் மறு வேலை பார்க்கும்..." என்று முகத்தை வெட்டிக் கொண்டாள்.

சிரித்துக் கொண்டவன்,
"தெரியுது இல்ல? கொஞ்சம் அமைதியா இருங்கடி. என்னையும் ஃப்ரீயா விடுங்க. அவனுக்கும் யோசிக்க டைம் வேணும். கொஞ்ச நாள் ஆகட்டும். என்ன விஷயம்னு நானே சொல்றேன்..." என்றான்.

அதன்பிறகு அமைதியாக அவனை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தவளை இழுத்து அணைத்து, நெற்றியில் முத்தமிட்டவன், சிறிது நேரம் அவளைத் தன்னோடு சாய்த்துக் கொண்டிருந்தான்.

பிறகு விலகியவன்,"அவனுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் குடுங்க. அதே சமயம் ஒரு விஷயம் இருக்கு. அதை சரி பண்ணுற வரைக்கும் அமைதியா இருங்க..." என்றான்.



"அதே மாதிரி, நான் முன்ன பின்ன வர லேட்டானாலும் அம்மாவை சமாளிச்சிடு. முக்கியமா, கொஞ்ச நாளைக்கு என்ன ரொம்ப எதிர்பார்க்காதடி. வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் உன்கூடத்தான் இருப்பேன், சரியா?

ஆனா சீக்கிரம் வரணும்னு மட்டும் எதிர்பார்க்காதே. இந்த பிரச்சனையை சரி பண்ணுற வரைக்கும் மட்டும். அதுக்காக உன்னையோ என் புள்ளையோ விட்டு விலகி இருக்கேன்னு அர்த்தம் கிடையாது.

நமக்காக இவ்வளவு நாளும் அம்புட்டு செஞ்சிருக்கான். அவனுக்காக இதைக்கூட செய்ய வேண்டாமா?" என்றான்.

கண்களில் நீர் நிரம்ப, "நான் எதுவோ உங்களை பிடிச்சு வச்சிருக்கிற மாதிரி இவ்வளவு பேசுறீங்க..." என்றாள்.

"ஏய் லூசு! நான் அப்படி எல்லாம் யோசிச்சு சொல்லல. இந்த மாதிரி டைம்ல அதிகமா உனக்கு நேரம் கொடுக்க முடியல. அந்த நேரத்துல உனக்கு கஷ்டமா இருக்கும். அதுக்காகத்தான் முன்கூட்டியே சொல்றேன்.

முடிஞ்ச அளவுக்கு பாப்பாவையும் சமாளி. நான் வர்ற வரைக்கும் ஹால்லயே இருந்தாலும் பரவாயில்லை. பாப்பா தூங்குறான்னா நீயும் அவளோட தூங்கிக்கோ. இல்லன்னா அம்மாவோட பேசிட்டு இரு, சரியா?" என்றான்.

அவளும் தலையசைக்க, அவளை இழுத்து அணைத்து இதழ்களில் இளைப்பாறியவன் அவளை அணைத்துக் கொள்ள.. அணைத்தபடி இருவரும் உறங்கிவிட்டனர்.


இங்கு நண்பன் சென்றவுடன், பரத் அன்று காலையிலிருந்து நடந்த அனைத்தையும் நினைத்துப் பார்த்தான். இறுதியில் தன் மனதை மாற்றிய நண்பன் சசியை நினைத்து புன்னகைத்துக் கொண்டான்.

அப்போது அறைக் கதவைத் தட்டிவிட்டு பால் கொண்டு வந்தாள் வினிதா.

தன் அண்ணனை குறுகுறுவென பார்த்தாள்.

அவனும் "என்ன வினி?" என்று கேட்டான்.

"ஒண்ணுமில்லை..." என்றாள்.
"ஆனா என்கிட்ட நிறைய மறைக்கிற... நீ வீட்டுக்கு வந்ததுல இருந்து ஆளே சரியில்ல " என்று கூறியபடி பால் கிளாசை அவனிடம் கொடுத்தாள்.

வேகமாக அவளது கையைப் பிடித்து, கட்டிலில் அமர வைத்து தானும் அருகில் அமர்ந்தான்.

அவளது தலையை வருடியபடி,
"தங்கச்சிக்கிட்ட மறைச்சு நான் என்ன செய்யப் போறேன்? ஆனா இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும். எதையும் போட்டு குழப்பிக்காத. ரேகாவிடமும் எதுவும் சொல்லாத. முக்கியமா அம்மா , அத்தை கிட்ட எதுவும் உளறிடாத, சரியா?" என்றான்.

"அப்போ ஏதோ ஒண்ணு சரியில்லதான..." என்று பெருமூச்சு விட்டாள்.

தங்கையைப் பார்த்து சிரித்தவன்,
"நீ என்னை குடையுறதுக்கு முன்னாடியே உன் மாமனைக் குடைஞ்சிருப்பியே? அவன் வாயில இருந்து எதுவும் வரலன்னு இப்போ என்னை போட்டு வாங்குறியா?" என்றான்.

"எங்க மாமா வாயில இருந்து கூட ஏதாவது வாங்கிடலாம். ஆனா உன் வாயில இருந்து அவ்வளவு சீக்கிரம் வாங்க முடியுமா?" என்றாள்.

"தெரியுதுல? அப்புறம் என்ன?" என்று சிரித்தான்.

முகத்தைத் திருப்பிக் கொண்டவளைப் பார்த்தவன்,

"போய் தூங்கு. நாளைக்கு காலேஜ் போகணும்ல?" என்று அனுப்பி வைத்தான்.

அவள் சென்ற பிறகு, தன் மீது பாசமாக இருக்கும் தாயையும் தங்கையையும் நினைத்து புன்னகைத்தவன், புதிதாக இன்று தருணையும் நினைத்தான்.

'முதல் முறையாக இனி அவனும் என் பொறுப்புதான். அவனை இந்த சிக்கலில் இருந்து மீட்பதுதான் என் முதல் வேலை...'
என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டான்.

அதை மறுநாளிலிருந்தே செயல்படுத்தவும் தொடங்கினான்.
 
Top Bottom