அத்தியாயம் 32
மறுநாள் அலுவலகம் வந்திருந்த குமரன்,
தேவயானி எப்போது அழைப்பாள் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தான் ஆனால் அவளோ அதை பற்றி எதுவும் பேசுவதை போல தெரியவில்லை, மற்ற நாட்களில் எப்படி இருப்பாளோ அப்படியே தான் அன்றும் இருந்தாள் அது குமரனின் மனதில் கலவையான உணர்வை கொடுத்தது, அவளிடம் அதை கேட்கவும் முடியவில்லை கேட்காமல் இருக்கவும் முடியாத நிலை ஆனாலும் அவள் முதலாளியாயிற்றே அவளிடம் கேள்வி எழுப்பும் அதிகாரம் தன்னிடம் இல்லை என்ற நிதர்சனம் புரிந்தவன் ஆதலால் அதைப்பற்றி அவனும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை இப்படியாக இரண்டு மூன்று நாட்கள் கடந்து இருக்க தனது முடிவு தவறானது தான் என்ற எண்ணத்திற்கு வந்திருந்தான் குமரன் தேசிய அளவில் இருக்கும் நிறுவனம் உலக அளவில் உடனே ஏதும் செய்து விட முடியாது போல என்று தனக்கு தானே சமாதானமும் செய்து கொண்டான் ஆனால் இங்கு மறுபுறமோ தேவயானி தனது தாய் மாமனை நச்சரித்துக் கொண்டிருந்தாள்,
குமரன் சொன்ன விஷயத்தை அவளும் யோசிக்க தான் செய்தால் நிச்சயமாக நம்மால் அதை செய்ய இயலும் ஏனென்றால் தேசிய அளவில் செயல்படும் தமது நிறுவனத்தின் பொருளாதார மதிப்பு அதற்கு சாதகமான அம்சமாக இருக்கிறது என்பதால் அந்த விஷயத்தில் அவள் துணிந்து இறங்கினாள்.
ஆனால் டெல்லி விஷயம் சாதகமாக அமைவதற்கு தான் இந்த இரண்டு மூன்று நாட்கள் நேரம் எடுத்திருந்தது அவள் எதிர்பார்த்தது போல அந்த வாய்ப்பை நான்காவது நாளில் உருவாக்கி இருந்தார் தண்டாயுதபாணி,
" தேவயானி நீ கேட்ட வேலைய முடிச்சிட்டேன்டா நாளைக்கு சாயங்காலம் வெளியுறவு துறை அமைச்சரோட நேரத்தை நமக்காக ஒதுக்கி இருக்காங்க அதனால உடனடியாக நாம டெல்லியில் கிளம்பி ஆகணும் " என்று அலைபேசியில் அழைத்து தகவலைச் சொன்னார்
அதைக் கேட்டு மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தவள் உடனடியாக தனது அலைபேசியை எடுத்து குமரனுக்கு அழைத்தாள் அதை அவன் ஏற்காமல் போகவே
" குமரன் நாளைக்கு காலையில 9 மணிக்கு நமக்கு டெல்லி விமானம் இருக்கு அதனால நீங்க கால விரையம் செய்யாம விரைந்து விமான நிலையம் வந்து விடுங்கள் " என்ற குறுஞ்செய்தியை அவனுக்கு பகிர்ந்து இருந்தாள்.
என்ன தான் தனது நிலை இது தான் என்ற சமாதானம் செய்து மனதை தேற்றி வைத்திருந்தாலும் கூட தான் நினைத்தது போன்ற விஷயம் எதுவும் அலுவலகத்தில் நடக்காத காரணத்தால் சற்று சோர்ந்து போயிருந்தான் குமரன். அதன் தாக்கம் அவன் அறை முழுக்க நிறைந்து இருக்க அது அவனை அழுத்தி கொண்டிருந்தது அந்த அழுத்ததிலிருந்து மெல்ல வெளிவரும் எண்ணத்தோடு வளமையாய் நேரம் செலவிடும் மொட்டை மாடிக்கு வந்தான்,
இரவின் குளுமையோடு, மெல்லிய காற்றும், அரைவட்ட நிலவும் மனதை சற்றே சாந்தம் கொள்ள செய்ய கொஞ்சம் கொஞ்சமாய் அழுத்தம் மறைந்து மூச்சு சீரானது ஆனால் அதற்கான காலம் தான் கூடியிருந்தது, நள்ளிரவு நேரம் நெருங்கி இருக்க கீழே இருந்து அன்னை அழைத்தாள்,
" எய்யா மணி பன்னிரண்டு ஆகிட்டு இன்னும் தூங்காம மேல என்ன செய்யுற? இப்படி தூங்காம இருந்தா உடம்பு என்ன ஆகும் " மகனிடம் அதிகமாக பேசுவதில்லை என்றாலும் கூட பெத்த மனம் அதன் வேலையை சிறப்பாக செய்து இருந்தது. அம்மாவின் குரலை காதில் கேட்டவன் கீழே இறங்கி வந்தான்,
மகனை பார்க்காத போது காணாமல் போன வீம்பு அவனை கண்டதும் வந்து ஒட்டி கொண்டது ஆதலால் அதற்கு மேல் எதுவும் பேசாமல் தனது அறைக்குள் அவர் சென்று விட இவனும் தனது அறைக்கு வந்தான் அவனுள் எழுந்த லேசான அமைதி சற்றே தூக்கத்தை கொடுக்க அலைபேசியை பாராமல் அப்படியே படுத்து உறங்கி விட்டான். நல்ல உறக்கத்தில் இருந்த குமரன் சட்டென தூக்கம் கலைந்து எழுந்தவன், ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்த அலைபேசியை எடுக்க அதில் தேவயானியின் குறுஞ்செய்தி தெரிந்தது,
தேவா என்ற பெயரை பார்க்கவும் கண்ணில் ஒட்டி கொண்டிருந்த தூக்கம் ஓடி போனது உடனே செய்தியை படித்தான், டெல்லி எதற்க்காக என்ற விபரம் தெரியாமல் விழித்தான்.
" எதற்க்காக டெல்லி? " யோசித்தான் விடை சொல்ல வேண்டியவள் தூக்கத்தில் இருப்பாளோ? மணி வேறு 3ஐ தாண்டி விட்டது " யோசித்தான் ஆர்வத்தில் கேள்வியை செய்தியாக மாற்றி அனுப்பி வைத்தான்.
அப்போது தான் தூக்கம் கலைந்து குமரன் ஏதேனும் பதில் கூறி இருக்கிறானா என்ற எண்ணத்தோடு அலைபேசி எடுத்தவளுக்கு உடனே அந்த செய்தி வந்து சேர்ந்தது. அதை பார்க்கவும் எழுந்த மகிழ்ச்சியில்
" ஹைய் குமரா "
" இன்னும் தூங்கலையா நீங்க, இப்போ தான் செய்திய பாக்குறீங்களா? " அவளிடமிருந்து உடனே பதில் வர மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனான் குமரன்,
" தேவா நீங்களும் இன்னும் தூங்கலையா? "
" தூங்கிட்டு தான் இருந்தேன் குமரா ஆனா உங்களுக்கு ரெண்டு முறை அழைப்பு விடுத்தும் நீங்க அழைப்பை எடுக்கலையா அதனால செய்தி அனுப்பிட்டு படுத்தேன், படுத்த பின்னாடியும் கூட செய்தியை நீங்க பாத்துட்டீங்களா பாக்கலையாங்குற எண்ணம் எண்ணத்தில ஓட ஆரம்பிச்சுட்டு அதே எண்ணத்தில எப்படியோ என்னை அறியாம கொஞ்ச நேரம் தூங்கிட்டேன். சட்டுனு தூக்கத்திலிருந்து முழிப்பு வந்துச்சு முழிப்பு வரவும் மறுபடியும் எண்ணம் முழுக்க அதே எண்ணம் தான், அந்த எண்ணத்தோடவே உங்க கிட்ட கேட்டேன் குமரா செய்திய பார்த்தீங்களா இல்லையான்னு, அப்புறம் தான் தோணுச்சு நீங்க செய்திக்கு பதில் கொடுத்து இருப்பீங்கன்னு " என்று அவள் செய்தி அனுப்பி கொண்டிருந்த போதே இடை மறித்து கேட்டான்,
" என்ன சொல்றீங்க தேவா செய்தி பாத்தேனா இல்லையானு கேட்டீங்களா? "
" ம்ம் ஆமா குமரா அதான் சொன்னேனே "
" ஏன் குமரா என்ன ஆச்சு? "
" இப்போ நீங்க சொன்ன விஷயம் எனக்கு நிஜமாலுமே தோணுச்சு தேவா "
" என்ன சொல்லுறீங்க குமரா? "
" ஆமா தேவா, நீங்க குரல் கொடுத்த சத்தம் கேட்டு தான் தூக்கத்துல இருந்த நானே முழிச்சேன், "
" என்ன குமரா சொல்லுறீங்க அது எப்படி? "
" நிஜமா தான் சொல்லுறேன் தேவா உங்களோட குரல் எனக்கு கேட்டுச்சு "
" அது எப்படி சாத்தியம்? "
" தெரியல தேவா உங்க குரல் தான் என்ன எழுப்புச்சு நீங்க சொல்லி தான் அலைபேசில இருக்க செய்திய பாத்தேன், ஆனா இது எப்படி சாத்தியம்ன்னு எனக்குமே அதிசயமா தான் இருக்கு "
அவளை போன்ற மனநிலையில் தான் அவனும் இருக்கிறான் என்பது அவளுக்கும் புரிந்தது.
" வாழ்கையில நாம சந்திக்கும் ஒவ்வொரு நொடியுமே அதிசயம் தான் குமரா. அத அனுபவிக்க தவறுற நொடிகள் எல்லாம் சாதாரணமாவும் அனுபவிக்குற நொடிகள் ஆச்சர்யம் மிகுந்ததாவும் மாறுது அந்த வகையில நமக்கு இந்த நொடி அதிசயமானதா அமைஞ்சு இருக்கு..... " அவள் சொல்ல அவன் இது எப்படி சாத்தியம் என்ற ஆராய்ச்சியில் இறங்க ஆரம்பித்து இருந்தான்.....
நெஞ்சில் நிறைவாள்.......