அத்தியாயம் 33
டெல்லி சர்வதேச விமான நிலையம் அந்த காலை வேலையும் மிக பரபரப்பாக இருந்தது, தமிழகத்தில் இருந்து வந்த அந்த இரும்பு பறவை தனது இட பக்கத்தை திறந்து விட அதிலிருந்த மனித குஞ்சுகள் வெளிய குதிக்க ஆரம்பித்தார்கள்.
குமரனின் வாழ்வில் நீண்ட நாள் கனவாக இருந்த விமான பயணம் இன்று தேவயானியின் மூலம் நிறைவேறியது, அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் பொருட்டு மக்கள் கூட்டம் இறங்கி முடிக்கும் வரைக்கும் அவனது இருக்கையிலேயே அமர்ந்து இருந்தான். அவனது குழந்தை தனமான இந்த குணத்தை தேவயானி ரசிக்குறோம் என்பதை அறியாமலே ரசித்து கொண்டிருந்தாள்.
அவனது செய்கை ஒவ்வொன்றையும் பார்த்து கொண்டிருந்தாள். அவள் அறிந்து விட்டாள் அது தான் அவனது முதல் விமான பயணம் என்பதை அவன் சொல்லிவிட்டான் என்றாலும் கூட அதற்கு முன்னமே அவள் அறிந்து கொண்டாள் தான்.
மக்கள் கூட்டம் முக்கால் பங்கு காணாமல் போயிருக்க மெல்ல அழைத்தாள்,
" குமரா " அழகாய் அமைதியாய் குழந்தையை கொஞ்சுவது போல, அவனது செய்கை மற்றும் முகபாவனை அவளை அப்படி அழைக்க வைத்திருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது
" என்ன தேவா குழந்தையை கூப்டுற மாதிரி கூப்டுறீங்க " சிரித்து கொண்டே கேட்டான்
" பின்ன இப்படி குழந்தை மாதிரி இருந்தா எப்படி கூப்டுறதாம் "
" குழந்தை மாதிரியா? "
ஆமாம் என்பதை அவளது மை வருடிய கண்களை சிமிட்டி சொல்ல,
அந்த இரு ஜோடி இமைகள் தொட்டு பிரிந்த அழகில் குழந்தை குமரன் நிஜமான குமரனாக மாறி இருந்தான். விமான நினைப்பு எல்லாம் எங்கோ போயிருக்க விரிந்த விழியை சுருக்காமல் அந்த விழியில் விழுந்து இருந்தான். அவனது இமைக்க மறந்த பார்வை அவளுக்குள்ளும் ஏதோ ஒரு உணர்வை கிளப்பி விட சற்று சுதாரித்து,
" குமரா நாமளும் இறங்கலாமா எல்லாருமே இறங்கிட்டாங்க " என்று சொன்ன போது தான் குமரன் சுயத்திற்கு வந்தான்
" ஹான் தேவா இறங்குவோம் " சற்று திணறினாலும் கூட சட்டென சொல்லிவிட்டு இருக்கையிலிருந்து எழுந்து விட்டான்.
இருவரும் டெல்லி விமான நிலைய மக்கள் கூட்டதோடு கலந்து வெளியே வந்து தங்களுக்கான வாகனத்தில் ஏறி கொள்ள அது அவர்களை ஏற்றி கொண்டு பயணமானது, வழி நெடுக வேடிக்கை பார்த்து கொண்டே வந்தான் குமரன் தன்புறம் சில நேரமும் மறுபுறம் சில நேரமும் பார்வையை செலுத்திய போதெல்லாம் தேவயானியின் மீது தனது பார்வை நின்று நின்று போனதை தவிர்க்க நினைத்தாலும் கூட முடியாது போகவே பார்வை நிலைக்கும் போதெல்லாம் கள்ளத்தனமாய் ரசித்து அவள் பார்க்கும் பொழுது மட்டும் சாதாரணமாக சிரித்து ஒரு நடிப்பை காட்டி விட்டு பார்வையை மாற்றிக் கொள்வான். ஆனால் அவனை போல தான் அவளும் அவனை பார்க்கிறாள் என்பதை மட்டும் அவன் அறியவில்லை பாவம் அறிந்து இருந்தாள் இந்த பயணம் இன்னும் வேறு மாதிரி இருந்து இருக்குமோ என்னவோ.
கள்ள பார்வையை ஒரு அளவுக்கு மேல் தவிர்க்க முடியாத குமரன் அதை மறைக்க அவளிடம் பேச்சை கொடுத்தான்.
" தேவா இன்னும் எவ்ளோ தூரம் போகணும்? "
" கிட்ட வந்துட்டோம் குமரா "
" நாம அமைச்சர எத்தனை மணிக்கு பாக்க போறோம் "
" நமக்கு மத்தியானம் ரெண்டு மணிக்கு நேரம் கொடுத்து இருக்காங்க " என்று அவள் சொன்ன நேரம் அவர்கள் வந்த வண்டி தனது வேகத்தை குறைத்து அந்த பயணியர் விடுதி முன்னால் நின்றது. அங்கு அவர்களை வரவேற்க தண்டாயுதபாணி தயாராக இருந்தார்.
" என்னடா பிரயாணம் எல்லாம் சௌகரியமா இருந்துச்சா? "
" ரொம்ப நல்லா இருந்தது மாமா ஒரு பிரச்சனையும் இல்லை "
" சரி டா அப்போ நாம நேர மந்திரிய பார்க்க போயிறலாமா? உள்ள அறைக்கு போய் தயாராகி வாறீங்களா? "
" ம்ம் சரி மாமா. வாங்க குமரா உள்ள போவோம் "
அடுத்த பதினைந்து நிமிடங்களில் தயாராகி விட அங்கிருந்து அமைச்சர் மாளிகை நோக்கி அவர்களது பயணம் தொடங்கி அங்கிருந்து இன்னொரு பதினைந்து நிமிட பயணத்தில் இடத்தை அடைந்தார்கள்
தண்டாயுதபாணிக்கு மத்திய சர்க்காரிடம் நல் மதிப்பு இருந்த காரணத்தினால் நான்கு நாட்களில் இந்த விஷயத்தை எல்லாம் சிறப்பாக செய்திருந்தார்.
" தேவயானி இந்த தம்பி யாருனு சொல்லலையே டா, உன்கூட உன்னோட உதவியாளர் அந்த பொண்ணு ஒருத்தி இருக்குமே அது தான் வரும்ன்னு நினைச்சேன் " குமரன் பார்த்து கொண்டே பேச,
" எல்லாரும் வந்தா அது வீண் விளம்பரம் கூடவே செலவு தான மாமா அதான் நாங்க மட்டும் வந்தோம். அப்புறம் இவர் பேர் குமரன் மாமா நா இன்னைக்கு இந்த திட்ட வரைவு தயார் செஞ்சு உங்கள வந்து பாக்க முழு காரணம் இவர் தான் மாமா. இந்த விளம்பரத்தை பாத்து இத நாம செஞ்சே ஆகணும்ன்னும் நம்மளால இத செய்ய முடியும்ன்னு எனக்கு முன்னமே தீர்க்கமா முடிவு எடுத்ததும் இவர் தான். அது மட்டும் இல்ல மாமா இந்த ஒப்பந்ததுல அடுத்து அடுத்து என்ன செய்யணும்ன்னு பக்காவா ஒரு திட்டத்தை தயார்ப்படுத்தி வச்சிட்டாரு மாமா அதனால இவர் வந்தா தான் இது சரியா இருக்கும்ன்னு முடிவு செஞ்சு தான் இவரோட வர முடிவு எடுத்தேன் மாமா "
" ஓ அப்படியா டா, ரொம்ப பிரமாதம் தம்பி உங்க வேலை வாழ்த்துக்கள் " கையை நீட்டினார் தண்டாயுதபாணி.
" அய்யயோ தேவா ஏன் இவ்ளோ பெரிய புகழ்ச்சி, இது என்னோட வேலை தான, நீங்க கொடுக்குற ஊதியதுக்கு உரிய வேலையை பாக்குறேன் அவ்ளோ தான "
" நிச்சயமா அப்படி இல்ல குமரா இந்த பயணத்துக்கு முழுக்க முழுக்க காரணம் நீங்க மட்டும் தான். உங்களோட ஆர்வமும் பங்களிப்பும் தான் என்னை இதை செய்ய வச்சுச்சு ஒருவேளை நம்மளோட இலக்கு வெற்றிகரமா முடிஞ்சதுன்னா அந்த வெற்றிக்கு முழு காரணம் நீங்களா மட்டும்தான் இருப்பீங்க "
" தேவா தேவா,
ரொம்ப பெரிய விஷயமா எல்லாம் பேசாதீங்க நான் உங்களுக்கு ஒரு தகவல் கொடுத்தேன் அவ்வளவு தான் மத்தபடி இதுல என்னோட பங்களிப்புன்னு உங்கள தாண்டி என்ன பெருசா இருந்தர போகுது? "
" இருக்கு குமரா இந்த திட்டம் நமக்கு சரியா வருமா வராதான்னு நான் யோசிக்கிற நேரத்துல அது சரியா வரும்னு முடிவு பண்ணி அடுத்து அந்த திட்டத்தில் என்ன செய்யணும்ங்கிற வரைக்கும் நீங்க தயார் செஞ்சு வச்சிருக்கீங்க " முந்தைய நாட்களில் குமரன் எடுத்து வைத்திருந்த குறிப்புகளை தேவயானியிடம் கொடுத்திருந்தான் அதைத்தான் அவள் சுட்டிக்காட்டி பேசினாள்.
" நெஜமா எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்க குமரா உங்களோட ஆர்வம் பங்களிப்புன்னு பாக்கும் போது "
" இதுல ஆச்சரியமாக ஒன்னும் இல்ல தேவா எனக்கு உங்களோட வெற்றி முக்கியம் " என்று குமரன் சொல்ல தேவயானியோடு தண்டாயுதபாணியும் கவனித்து கொண்டு தான் வந்தார்.
" ஆனா தம்பி தேவயானி ஏற்கனவே வெற்றி பாதையில தான பயணம் செஞ்சுட்டு இருக்கா? "
" ஆமாங்க அய்யா அத நா இல்லனு மறுக்கல, இந்த வெற்றிக்கு அஸ்திவாரம் போட்டது தேவாவோட அப்பான்னு தான இன்னைக்கு இந்த சமூகம் பேசுது.. " கேள்வியை கேட்டு நிறுத்த
" ஆமாம் " என்று தலையை ஆட்டினார்
" அய்யா எங்க தேவா தனித்துவம் நிறைஞ்சவங்க இன்னைக்கு எங்க நிறுவனம் இத்தன சிறப்பா போய்ட்டு இருக்க காரணம் அவங்களோட தனித்துவமான சிந்தனை தான், அந்த தனித்துவத்துக்கு தனியா ஒரு சிறப்பு இருக்கு அத செய்யணும்னு நினைக்கிறேன். ஏன்னா நா இதுவரைக்கும் இப்படி ஒரு பெண்ணை என் வாழ்நாள்ல சந்திச்சது இல்ல இனிமேலும் சந்திக்க போறது இல்ல அதனால தான் நா வாழ்கையில சந்திச்ச இந்த ஒரு பொண்ண என்னைப்போல இந்த உலகமும் கொண்டாடணும்... " என்று குமரன் சொல்ல நெகிழ்ந்து போனாள் தேவயானி. ஆனால் அவனது அந்த வார்த்தை தண்டாயுதபாணியை கடுமையான யோசனையின் பக்கம் தள்ளியது....
நெஞ்சில் நிறைவாள்.....

Last edited:
Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 33
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.