நெஞ்சில் நிறைந்தவள் - 40

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
அத்தியாயம் 40


குமரனும் தேவயானியும் பேசி கொண்டிருக்க அந்த அறையினுள் நுழைந்த காவல் துறை அதிகாரிகள் அதிரடியாக குமரனை கைது செய்து அழைத்து சென்றனர்.
தேவயானி எத்தனை முயன்றும் அவர்களை தடுக்க முடியவில்லை, அவர்கள் காரணமும் சொல்லவில்லை, ஆதலால் மாதுரியை அழைத்து கொண்டு அவர்களின் பின்னாலேயே காவல் நிலையம் விரைந்தாள். போகும் வழியில் தனது தந்தையான கிருஷ்ணனுக்கு அழைப்பை விடுத்து நிலமையை விளக்க, அவரும் உடனே காவல் நிலையம் வருவதாக சொல்லி அழைப்பை துண்டித்து கொண்டார். தேவயானி காவல் நிலைய வாசலில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே நுழைய முயன்ற போது கிருஷ்ணன் மீண்டும் அழைப்பில் வந்தார்,

" தேவயானி எங்க டா இருக்க? "

" இதோ காவல் நிலைய வாசல்ல தான் ப்பா உள்ள போக போறேன் அதுக்குள்ள தான் நீங்க கூப்பிட்டுடீங்க "

" அப்போ இன்னும் உள்ள போகலையா டா? "

" இல்ல ப்பா போகல ஏன்? "

" ரொம்ப நல்லதா போச்சு டா "

" என்ன ப்பா சொல்லுறீங்க? "

" ஆமா டா அந்த குமரன் பையன் சும்மா இல்லாம ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பத்தி முக புத்தகத்தில தவறான செய்தியை பரப்பிருக்கான் அதனால அவனை காவல் துறை கைது பண்ணிருக்காங்க. இந்த மாதிரி ஆளுக்கு பரிந்துரை செஞ்சு நம்ம பேரை நாம கெடுத்துக்க கூடாது டா, அதனால தான் அலுவலகம் வந்தப்போ கூட பெருசா விஷயத்தை காட்டிக்காம அவனை கைது பண்ணிட்டு வந்ததா அந்த நிலைய ஆய்வாளர் சொல்லுறாரு டா " என்று குமரன் கைது செய்யப்பட்ட காரணத்தை அறிந்து கிருஷ்ணன் சொல்ல,

" இல்ல ப்பா கண்டிப்பா குமரன் தவறான செயலை சொல்லிருக்க மாட்டாரு, அவர் சொல்லிருந்தா கண்டிப்பா அதுல நிஜம் இருக்கும். அவரை எனக்கு நல்லா தெரியும் ப்பா அவர் பொய்யான விஷயத்தை பேச கூடிய ஆள் இல்ல. இவங்க ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி இப்படி செய்யுறாங்க இத ஒருபோதும் அனுமதிக்க கூடாது ப்பா நா இப்போ உடனே உள்ள போறேன் நீயும் கிளம்பி இங்க வா " என்று சொல்லிவிட்டு பதில் கேட்காமல் அழைப்பை துண்டித்து விட்டு உள்ளே நடக்க இப்போது அழைப்பில் தண்டாயுதபாணி வந்தார்.

தந்தையிடம் பேசிய அடுத்த நொடி மாமன் அழைப்பில் வர யோசித்து கொண்டே ஏற்று காதில் வைத்தாள்,

" தேவயானி உடனே கிளம்பி வீட்டுக்கு போ, காவல் நிலையத்தில நிக்காத பெரிய பிரச்சனை ஆகுற மாதிரி இருக்கு அப்படி பிரச்சனை ஆனா நம்ம நிறுவன பெயர் தான் சேதாரமாகும். அதுக்கு இடம் கொடுக்க வேண்டாம் நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வா " என்று அவசரமாக தண்டம் பேச,

" அப்போ குமரன்? " அவர் பேசிய எதையும் கருத்தில் கொள்ளாமல் கேட்டாள்

" அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல டா நீ கிளம்பி வீட்டுக்கு போ அத அப்புறம் பாத்துக்கலாம் " தேவயானி அங்கிருந்து கிளப்பி விடும் நோக்கத்தில் தண்டாயுதத்தின் பேச்சு இருக்க அதை உணர்ந்து கொண்டவள் உடனடியாக அந்த அழைப்பை துண்டித்துக் கொண்டாள் யார் சொன்னதையும் கருத்தில் கொள்ளாமல் நேராக காவல் நிலையத்தின் உள்ளே நுழைந்து ஆய்வாளரை சந்தித்தாள்.

" எந்த ஒரு முகாந்திரமும் இல்லாம என்னோட அலுவலகத்துக்குள்ள அதுவும் என் அறைக்குள்ளையே நுழைந்து எங்கள் நிறுவனத்தில முக்கியமான பொறுப்புல இருக்க கூடியவரை நீங்க கைது பண்ணி கூட்டிட்டு வந்து இருக்கீங்க அதற்கான காரணம் கேட்டும் அதை நீங்க சொல்லல,
என்ன காரணத்துக்காக நீங்க அவரை கைது பண்ணிட்டு வந்தீங்க அந்த காரணத்தை எனக்கு சொல்லுங்க,
ஏதோ கொலை குற்றம் செய்தது போல அவர இவ்வளவு அதிரடியா நீங்க கைது பண்ண என்ன காரணம்?
நீங்க கைது பண்ணுன விதத்தை பார்க்கும் போது இதை நீங்க சாதாரணமா செஞ்சதாவும் எனக்கு தோணல,
உங்களுக்கு பின்னாடி இருந்து யாரோ உங்களை இயக்கியது போல எனக்கு தோணுது கைதுக்கான தெளிவான காரணத்தை நீங்க சொல்லியே ஆகணும் " என்று ஆய்வாளர் முன்பு தன் குரலை உயர்த்தி தனக்கே உரிய தோரணையில் கேட்க,

ஆய்வாளர் அவள் யார் என்பதை அறிந்து இருந்ததால் மெல்ல பேச்சை மழுப்பி அவளை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியை கையில் எடுக்க,
நிச்சயமாய் இது ஏதோ திட்டத்தின் அடிப்படையில் தான் நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு குமரனை அங்கிருந்து அழைத்து செல்லும் முடிவில் உறுதியாக நின்றாள். அவள் உறுதியின் முன்னால் அனைவரும் தோற்று போனார்கள், மீண்டும் கிருஷ்ணன், தண்டாயுதபாணி, ஆய்வாளர் என்று இன்னொரு முறை வரிசை கட்டி பேசி பார்க்க அவளது உறுதி இன்னும் அதிகமானது, அவளது கவனத்தை திசை திருப்பும் வண்ணம் கட்சிக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டு சில கூட்டங்கள் சலசலப்பு செய்து பார்த்தது, ம்ஹும் அப்போதும் ஒன்றும் கதையாகவில்லை. இந்த திட்டத்தை தயார் செய்து பின்னால் இருந்து கொண்டு வேலை பார்த்த கிருஷ்ணன் மற்றும் தண்டாயுதபாணிக்கு தலைவலி கூடியது. அவர்கள் எதிர்பார்த்தது எல்லாம் குமரனுக்கு எதிரான எதிர்ப்பை வலுப்படுத்தி சிறைப்படுத்தி ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக நினைத்த குமரன் தேவயானி நெருக்கத்தை கலைத்து விடலாம் என்று எண்ணினார்கள் அப்படி செய்யும் செயலில் அவர்கள் மீது தேவயானிக்கு இவர்கள் மீது எவ்வித சந்தேகமும் வந்து விட கூடாது என்பதற்க்காக தான் பாண்டியின் விஷயத்தில் தேவயானி சொன்ன விஷயத்தை சொன்னவுடன் செய்து முடித்தார்கள், ஆனால் பாவம் அவர்கள் அறிந்து இருக்கவில்லை குமரன் தேவயானியின் நெருக்கம் எத்தனை இணக்கம் நிறைந்தது என்பதை. அது சரி குமரனும் தேவயானியும் கூட முழுமையாக அறிந்து விடாத விஷயமாச்சே அது. ஆனால் அவனுக்காக இவள் இப்படி நிற்பதில் அனைவரும் அறிந்து கொள்கிற நாளாக அமைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

பொறுமையாக காவல் நிலையத்தின் உள்ளே அமர்ந்து இருந்த தேவயானி இவர்கள் செய்கிற திட்டத்தை உணர்ந்து மாதுரியின் மூலமாக தனது நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் தகவல் கொடுத்து தயார் நிலையில் வைத்து விட்டு நிலைமை கைமீறும் போது சாலை மறியல் செய்யுமாறு சொல்லிவிட்டு முதல் ஆளாக சாலையில் போய் அமர்ந்து விட்டாள்.

அவளது இந்த அதிரடியை எதிர்பார்த்திடாத ஆய்வாளர் ஸ்தம்பித்து போனார், அலறி அடித்து கொண்டு வெளியில் வந்தார், முதலில் கெஞ்சியும் பின் மிஞ்சியும் பார்த்தார் எதற்கும் அசராது தான் நினைத்ததை சாதிக்கும் எண்ணத்தோடு அவள் பேசாமல் அமர்ந்து இருக்க,
மாதுரி தான் மெல்ல பேசினாள்,

" ஐயா நீங்க நினைக்குற மாதிரி யானி இந்த விஷயத்தை சாதாரணமா விடுற போல தெரியல, அதனால நீங்க அவங்களுக்கு சாதகமா நடந்துகிட்டா நல்லது, ஒருவேளை அவங்களுக்கு எதிரா நீங்க நின்னா மிக பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனையை சந்திக்க வேண்டியதா இருக்கும். இப்போவே 2500 ஊழியர்கள் தயாரா இருக்காங்க அவங்க அவங்க இருக்குற இடத்தில மறியல் செய்ய,
யோசிச்சுக்கோங்க. நீங்க சட்டப்படி தான் நடவடிக்கை எடுத்துருக்கீங்கன்னா அது எங்களுக்கு பிரச்சனை இல்ல நாங்களும் சட்டப்படி அத எதிர்கொள்ள தயாரா இருக்கோம் ஆனா நீங்க யாரையோ சந்தோசப்படுத்த இந்த விஷயத்தை செய்யுறீங்கன்னு யானிக்கு நல்லாவே தெரிஞ்சு போச்சு அதனால அவங்கள நீங்க கட்டுப்படுத்துறது ரொம்ப சிரமம் பாத்துக்கோங்க " என்று எச்சரிக்கையும் தகவலும் சேர்ந்து கொடுக்க ஆய்வாளர் எச்சில் விழுங்கினார்.....



நெஞ்சில் நிறைவாள்....
 

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 40
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.