• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 25

Vishakini

Moderator
Staff member
எட்டு வருஷத்துக்கு முன்னாடி,

எங்க ஊருக்கு பக்கத்துல இருக்குற பெண்கள் மேல்நிலைப் பள்ளில ஹாஸ்டல்ல தங்கி பன்னிரெண்டாம் கிளாஸ் முடிச்சுட்டு ஊருக்கு போறோம்னு சந்தோஷத்துல பஸ் ஏறி எங்க வீட்டுக்கு வந்தேன்.

பஸ்ல சரியான கூட்டம் நிக்க கூட இடம் இல்லை! ஆனாலும் ஒரு வருஷம் கழிச்சு வீட்டில் இருக்கிற எல்லாரையும் பாக்க போறோம்ங்கிற சந்தோஷத்துல, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வந்தேன்.

பஸ் ஸ்டாண்ட்ல இருந்து எங்க வீட்டுக்கு தூரம் அதிகம். பஸ்ஸ விட்டு இறங்குன உடனேயே என்னைய கூப்பிடுறதுக்கு எங்க அப்பாவாவது அண்ணனாவது வந்து இருக்காங்களான்னு பார்த்தேன் யாருமே வரல,

அவங்க என்னை வந்து கூப்பிடாதது எனக்கு ஏமாற்றமா இருந்தாலும், அவங்களுக்கு ஏதாவது வேலை இருந்திருக்கும்னு நானே என் மனச சமாதானம் பண்ணிட்டு, ஹாஸ்டல்ல இருந்து கொண்டு வந்த இரண்டு பேக்கையும் தூக்கிக்கிட்டு எங்க வீட்டை நோக்கி நடந்தேன்.

நான் கொண்டு வந்த சூட்கேஸ் அதிக வெயிட்டா இருந்தாலும் வீட்டுக்கு போறோம்ங்கிற சந்தோஷத்துல அந்த வெயிட் கூட என் கண்ணுக்கு பெருசா தெரியல,

எப்படியோ என் வீட்டுக்கு கொஞ்சம் முன்னாடி வந்துட்டேன். அப்போ எனக்கு எதிரா அம்பது வயசு நிரம்பிய அம்மா ஒருத்தவங்க, இருபத்தி அஞ்சு வயசு இருக்கிற பொண்ணும், பையனும் எனக்கு முன்னாடி வந்தாங்க.

அந்த அம்மா பக்கத்துல நின்ன பையனோட தலைய தடவி,
“உனக்கா இந்த நிலைமை ஐயா ராசா, இத பாக்குறதுக்காகவா நான் உயிரோட இருக்கேன்! என் புள்ள இனிமேல் வெளில எப்படி தல காட்டுவான்? கேட்கிறவங்களுக்கு என்ன பதில் சொல்லுவான், என் குடும்ப வாரிசு இப்படி நில கொலஞ்சு நிற்கிறானேனு சொல்லி அழுதுக் கிட்டே வந்தாங்க.

அந்த அம்மாவோட வந்த பையனுக்கு எங்க அண்ணாவோட வயசு தான் இருக்கும். பாக்குறதுக்கு அவர் திடமாக நின்னுகிட்டு இருந்தாலும் அவரோட கண்ணே அவரோட வருத்தத்தை சொல்லுச்சு,

அவங்க எல்லாருக்கும் பின்னாடி வந்த ஒருத்தர் யாரையோ ரொம்ப அசிங்கமா பேசிக்கிட்டே வந்தாரு! அதையெல்லாம் பார்த்துக்கிட்டே வந்தேன். அவங்க எல்லாரையும் பார்க்கும்போது மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு.


‘என்னாச்சுன்னு தெரியல, ஒரு குடும்பமே கண்கலங்கி நிக்குது, இதுக்கெல்லாம் யாரு காரணமோனு , இவ்வளவு பாவத்தையும் சாபத்தையும் இவங்க கிட்ட இருந்து வாங்குறாங்களேன்னு’ நினைச்சுக்கிட்டே நடந்து வந்துட்டு இருந்தேன்.

கொஞ்ச நேரத்துல எங்க வீட்டு வாசல்ல ரீச் பண்றதுக்கு முன்னாடி பத்து அடி தூரத்திலேயே எங்க வீட்டு முன்னாடி கூட்டம் நிற்கிறத பார்த்துட்டேன்.

அவங்க யாரா இருக்கும்னு நல்லா பார்க்க அவங்க எல்லாரும் எங்க வீட்டோட அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க.

என்ன ஆச்சு எல்லாரும் நம்ம வீட்டு வாசல்ல நிக்கிறாங்க ஏதாவது பிரச்சனையானு ஒரு தவிப்போடையே என் வீட்டு வாசல்ல நெருங்க, லேசாக அந்த கூட்டம் வீட்டிற்குள் நுழைவதற்கு எனக்கு வழி விட்டாங்க. ஆனாலும் அவங்களுக்குள்ள குசுகுசுன்னு எதையோ ரொம்ப தீவிரமா பேசிக்கிட்டு இருந்தாங்க.

இவ்வளவு நேரம் தூக்கி சுமந்து வந்த என்னோட சூட்கேஸை வச்சுட்டு எங்க அம்மா அப்பாவை தேட அவங்க ரெண்டு பேரும் அப்படியே சில மாதிரி உட்கார்ந்து இருந்தாங்க.


எங்க அப்பா மட்டும் கோவத்துல பேசிகிட்டு இருக்க, எங்க அம்மா அழுது வீங்கி போன முகத்தோட உட்கார்ந்து இருந்தாங்க.



பக்கத்தில் எங்க அம்மாவோட தங்கச்சிகளான ரேணு சித்தியும், கவிதா சித்தியும் அம்மாவுக்கு ஆறுதலாக உட்கார்ந்திருந்தாங்க.


எங்க அம்மா அப்பா முகத்தை பார்க்கவுமே ஏதோ ஒரு பெரிய தப்பு நடந்திருக்குன்னு எனக்கு புரியவும் எங்க அம்மா கிட்ட கேட்காம எங்க சித்தி கிட்ட

நம்ம வீட்டு வாசல்ல நிறைய கூட்டம் கூடி இருக்கே ஏதாவது பிரச்சனையானு கேட்க, எங்க சித்தி அழுக ஆரம்பிச்சிருச்சு. அதிலேயே ஏதோ ஒரு பெரிய பிரச்சனை நடந்திருக்குன்னு நெனச்சு என்னோட உள் மனசு
பதட்டப்பட ஆரம்பிச்சிருச்சு

என்னத்த சொல்ல சொல்ற, “உன் கூட பொறந்தவ, பக்கத்து தெரு பாரியோட வீட்டை விட்டு ஓடிட்டா, அவள பொண்ணு பார்த்து நிச்சியம் பண்ணிட்டு போன குடும்பம் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு இப்பதான் வந்து நம்ம வீட்டுக்கு முன்னாடி கத்திட்டு போனாங்க, கேட்கக்கூடாத கேள்வி எல்லாம் கேட்டு அசிங்கப்படுத்திட்டாங்கனு கதறி அழுக ஆரம்பிச்சிருச்சு.

அப்பதான் எனக்கு முன்னாடி அழுதுகிட்டு கோபப்பட்டுக்கிட்டு கத்திகிட்டு போன குடும்ப ஞாபகம் வந்துச்சு. அப்போ அவங்க எல்லாரும் திட்டி சாபம் கொடுத்துட்டு போனது என்னோட குடும்பத்துக்கு தானானு நினைக்க என் கண்ணுலையும் தண்ணி வந்துருச்சு!

ரோட்டில் போகும்போதே எங்க குடும்பத்தை தரக்குறைவா பேசிகிட்டு போனவங்க எங்க அம்மாகிட்டயும் அப்பாகிட்டயும் அண்ணன் கிட்டயும் எவ்வளவு பேசி இருப்பாங்கன்னு நினைக்கும் போது என்னால ஓரளவு புரிஞ்சிக்க முடிஞ்சது! நம்ம குடும்பம் இவ்வளவு அசிங்கத்தை சந்தித்ததற்கு என் அக்கா தானே காரணம்னு அவ மேல செம கோவம் வந்துச்சு,


அந்த நிலைமையில் திடீரென்று எங்க வீட்டு வாசல் முன்னாடி சில பேர் வந்து நின்னாங்க. யாரேனு போய் பார்க்க எங்க அக்கா அவ கூட்டிட்டு போன பையனோட மாலையும் கழுத்துமா வாசல்ல நின்னுகிட்டு இருந்தா . அவ பக்கத்துல இன்னும் ஒரு பொண்ணும் ஆணும் நின்னுகிட்டு இருந்தாங்க.

எங்க அக்காவ பாக்கவும் எங்க அப்பா கோபத்துல சமையல் கட்டுக்குள்ள இருந்த அருவாவை எடுத்துக்கிட்டு கோபத்துல வெட்டுவதற்கு வெளில வந்தாரு. உடனே எங்க சித்தி, எங்கம்மாவும் பதறி போயி எங்க அப்பாவ இழுத்துட்டு போயிட்டாங்க.

அப்ப நான் மட்டும் தான் வாசல்ல நின்னேன். முன்னாடி இருந்த எங்க அக்காவ பாக்க அருவருப்பா இருந்துச்சு. கண்டவங்க கிட்ட இவ்வளவு வசவு வாங்குவதற்கு காரணமா இருந்தது இவதானன்னு எனக்கு கோபம் வந்துச்சு. அப்பதான்

“வீட்டுக்குள்ள வராத! நீ முதல்ல வீட்டை விட்டு வெளியே போ, எதுக்கு எல்லாரும் செத்துட்டாங்களா இல்ல உயிரோட இருக்காங்களான்னு பார்க்க வந்தியா? முதல்ல எங்க கண் முன்னாடி நிக்காத வீட்டை விட்டு வெளியே போனு நான் சொல்லியும் அவங்க எல்லாரும் அப்படியே நின்னுகிட்டு இருந்தாங்க.


நான் அப்பாவையும் அம்மாவையும் பார்த்து மன்னிப்பு கேட்டுட்டு தான் இங்கே இருந்து போவேன்ணு எங்க அக்கா அழுதுகிட்டே வாசல்ல நின்னா, தயவு செஞ்சு இங்க இருந்து கிளம்பு! அப்பா வந்தாருன்னா கோவத்துல உன்னையே வெட்டி போட கூட தயங்க மாட்டாரு, இங்கிருந்து கிளம்பி முதல்ல உன் உயிரை காப்பாத்திக்கனு நான் சொல்லிக்கிட்டு இருந்தேன்! அதுக்குள்ள என் அக்காவுடைய அந்த பாரியோடையும் கூட நின்னுகிட்டு இருந்த அந்த பொண்ணு,


“இதுதான் நடக்கும்னு எனக்கு தெரியும் இதுக்கு தான் இங்க எல்லாம் வர வேண்டாம்னு சொன்னேன், இல்ல நாங்க ஆசீர்வாதம் வாங்குவோம்னு
சொல்லி இங்க வந்தீங்க, உங்களவானு சொல்றதுக்கு கூட இந்த வீட்டில யாரும் இல்ல போல, சின்னப் பிள்ளைய வச்சு பேச வைக்கிறாங்க, இதைவிட பெரிய அவமானம் என்ன இருக்கு! உங்களோட சேர்ந்து நாங்களும் அவமானப்பட்டு நிக்கிறோம்னு தராதரம் தெரியாத இந்த குடும்பத்து ஆளுக்கிட்டனு!” செல்வி பாரியோட அக்கா சொல்லவும், அப்பத்தான் எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்ச என் அண்ணனுக்கு கோபம் வந்துருச்சு.



“யாரு தராதரம் கெட்ட குடும்பம் ஏற்கனவே வேற ஒருத்தனுக்கு பேசி முடிச்ச பொண்ணுன்னு தெரிஞ்ச பின்னாடியும், யாருக்கும் தெரியாம அவளை கூட்டிட்டு போயி உங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி வச்ச உங்களுக்கு ரொம்ப தராதரம் இருக்கும் போலன்னு நக்கலா சொல்ல, அவங்களுக்கு கோபம் வந்து, ரொம்ப அசிங்கமா பேச ஆரம்பிச்சிட்டாங்க.

உடனே எங்க அண்ணே! “பாத்தியா உன்னால எங்கேயோ போற நாயெல்லாம் என் வீட்டு வாசல்ல கத்திக்கிட்டு இருக்குன்னு சொல்ல, செல்வியும் செல்வி புருஷனும் கோபப்பட்டு எங்க அண்ணன் கிட்ட சண்டை போட ஆரம்பிச்சிட்டாங்க.

அண்ணே விடுனு நானும் எங்க அண்ணனை பொறுமையா இருக்க சொல்ல, என் அண்ணே என் பேச்சை காதுலேயே வாங்கல!

மாத்தி மாத்தி ஒருத்தருக்கு ஒருத்தர் அசிங்கமா பேச ஆரம்பிச்சிட்டாங்க. எங்க அண்ணனோட, பாரியோட அக்கா செல்வி, அவங்களோட புருஷன் பாரி மூணு பேரும் சண்டைக்கு வந்தாங்க. கொஞ்ச நேரத்துல வாய் சண்டை அடிதடியா மாறிடுச்சு. பக்கத்துல நின்னவங்க ரெண்டு தரப்பையும் சமாதானப்படுத்தினாலும் யாரும் சமாதானம் ஆகல,

வெளில சத்தம் ரொம்ப கேட்கவும், வீட்டுக்குள்ள போன எங்க அப்பா எங்க அம்மாவையும் சித்தியையும் அடிச்சிட்டு வீட்டுக்குள்ள இருந்து அருவாளை தூக்கிட்டு வெளியில் வந்துட்டாரு, அவங்க பின்னாடியே எங்க சித்தியும் அம்மாவும் வர சண்டை இன்னும் பெருசா ஆயிடுச்சு!


உடனே எங்க அப்பா, “ ஒரு பொட்ட சிறுக்கி நம்ம வீட்டு வாசல்ல வந்து கத்திக்கிட்டு இருக்கா நீ பார்த்துகிட்டு இருக்கா! அவ சேலைய உறிஞ்சு அசிங்கப்படுத்தாம அமைதிய நிக்கிறேன்னு எங்க அப்பா சொல்ல, எங்க அண்ணனும் கோபத்துல யோசிக்காம செல்வியோட சேலைய இழுத்து, தலை முடியை பிடுச்சு அடிச்சுட்டான். இவ்வளவு நேரம் கத்திக்கிட்டு இருந்த செல்வி அவமானத்தில் எதுவும் சொல்லாமல் சுத்தி முத்தி பார்க்க எல்லாரும் அவங்கள தான் பாத்துட்டு இருந்தாங்க. உடனே அவங்க புருஷன் ஓடி வந்து பொண்டாட்டிய புடிச்சாலும், அவங்க அவமானத்துல அங்க இருந்து ஓடி பக்கத்துல இருந்த கிணத்துல குதிச்சுட்டாங்க!

அவங்க ஓடிப் போகும்போது அவங்க புருஷனும் பாரியும் போனதுனால அவங்கள கிணத்துல இருந்து காப்பாத்தி ஆஸ்பத்திரியில சேர்த்துட்டாங்க.

எவ்வளவுதான் பிரச்சனை வந்தாலும் ஒரு பொம்பள சேலையை இழுத்து அடிப்பீங்களா? பெரிய தப்பு பண்ணிட்டீங்க! போலீஸ் வர்றதுகுள்ள இங்கிருந்து தலைமறைவாகிடுங்க இல்லைன்னா உங்கள போலீஸ் புடிச்சுட்டு போயி லாடம் கட்டிடுவாங்கன்னு எங்கள் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் சொல்ல எங்க அண்ணே எங்க அப்பா எங்க அம்மா மூணு பேரும் அப்பவே கிளம்பி எங்க சொந்தக்காரங்க
வீட்டுக்கு போயிட்டாங்க.

“வீட்ல யாருடா பொட்ட பசங்களா? பொம்பளைகிட்ட வீரத்தை காட்டுனவங்க இப்ப வாங்கடா என்கிட்ட காட்டுங்கன்னு கத்திகிட்டே என் வீட்டு வாசல்ல வந்து நின்னான்....” என்று அன்று வந்தவனின் முகத்தை நினைவு கூற மாயமித்ராவின் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது அதற்கு மேல் பேச முடியாமல் அவள் அப்படியே அமர்ந்துவிட்டாள்.

இனி என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் பதிலுரை சொல்லடி பகல் நிலவே!
 
Top Bottom