• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 29

Vishakini

Moderator
Staff member
நந்தன் மித்ராவை பார்த்து, “ நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறேன்!”என்று சொல்ல, அசோக்கும் மித்ராவும் அதிர்ச்சியாகி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


“நந்தா என்ன சொல்லிக்கிட்டு இருக்க?” என்று அசோக் கோபமாக கேட்க,


“மாயாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைபடுறேன்னு என்னோட எண்ணத்தை சொல்லிக்கிட்டு இருக்கேன் சார்!”என்று கூறினான் நந்தன்.


“அது எப்படி அந்த பொண்ணுக்கு இவ்வளவு பெரிய அநீதிய பண்ணிட்டு சாதாரணமா என்னைய கல்யாணம் பண்ணிக்கிறியான்னு குற்ற உணர்ச்சியே இல்லாமல் கேட்குற? “ என்று அசோக் சொல்ல,

“ மன்னிச்சிடுங்க சார்! நான் மாயாவுக்கு பண்ணுனது மிகப்பெரிய துரோகம்னு எனக்கு தெரியும். நான் பண்ணுன தப்புக்கு பிராய்ச்சித்தம் பண்ணனும்னு இந்த முடிவு எடுக்கல!”என கூறினான் நந்தன்.

“அப்போ எதுக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்னு கேட்ட?” என்று அசோக் கேட்க,


“மொத தடவ மாயாவ பார்த்த அன்னைக்கே அவளோட முகம் என் மனசுல ஆழமா பதிஞ்சிருச்சு.

நான் நல்ல சூழ்நிலையில மாயாவ சந்திச்சிருந்தால் கட்டாயம் என் மனசுல உள்ள ஆசைய சொல்லி இருப்பேன்!

ஆனால் நான் மாயாவ சந்தித்தது எப்படிப்பட்ட சூழ்நிலைலனு உங்களுக்கே தெரியும்! கிட்டத்தட்ட எட்டு வருஷமா, அவளோட நினைவுகள்ல மட்டும்தான் நான் வாழ்ந்து கிட்டு இருக்கேன். இன்னும் தெளிவா சொல்லப்போனால் இதோ நிக்கிறாங்களே இந்த மாயாவ கடந்த எட்டு வருஷமா நான் காதலிச்சு கிட்ட தான் இருக்கேன்! “ என்று நந்தன் சொல்ல இருவரும் அதிர்ச்சியில் திகைத்து நின்றனர்.


“நீங்க சொல்லுங்க மாயா? உங்களுக்கு என்னைய கட்டிக்க சம்மதமா!” என்று அடுத்த குண்டை தூக்கி அவள் தலையில் போட்டான் நந்தன்.


மாயாவோ ‘என்ன சார் இது’ என்பதை போல் நின்று கொண்டிருந்த அசோக்கை பார்த்தாள்.


“நந்தன் நீ நல்லா தானே இருக்க! நான் பண்ணுன தப்புக்கு அந்த பொண்ண ஒரு தடவை பார்த்து மன்னிப்பு மட்டும் கேட்டால் போதும்னு தானே சொன்ன? இப்போ வந்து என்ன என்னமோ சொல்லிக்கிட்டு இருக்க” என்று அசோக் கேட்க, புன்னகைத்தான் நந்தன்.


“நான் அந்த பொண்ணு கிட்ட என்னைய கல்யாணம் பண்ணிக்கிறிங்களான்னு கேட்க போறேன்னு நான் சொல்லி இருந்தால் நீங்க தேடி கண்டுபிடிச்சு மாயவ என் முன்னாடி நிறுத்தி இருப்பீங்களா சார்? “ என்று நந்தன் கேட்க இல்லை என்பதைப் போல் அசோக்கின் தலை தானாக ஆடியது.


“அதான் சார் சொல்லல!” என்று அசோக்கிடம் சொல்லி விட்டு மித்ராவிடம் பேச்சை தொடர்ந்தான் நந்தன்.

“கோபத்துல ஒரு தடவை தப்பு பண்ணிட்டேன். அந்த தப்ப மன்னிச்சு என்னைய ஏத்துக்கிருங்க? காலம் முழுக்க உங்களுக்கு நல்ல நண்பனா, சகோதரனா? காதலனா கண்டிப்பா இருப்பேன்! எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க?” என்று நந்தன் சொல்ல என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்தாள்.


சில வினாடிகள் யோசித்து விட்டு
பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டு, நாளைக்கு ஈவினிங் நாலு மணிக்கு இதே இடத்துக்கு வாங்க! என்னோட பதில சொல்றேன்? “ என்று மித்ரா சொல்ல , அசோக் அவளின் முகத்தை அழுத்தமாகப் பார்த்தார்.


“கண்டிப்பா வரேன் மித்ரா! நல்ல பதிலா சொல்லுவீங்கன்னு நம்பிக்கையோட இப்ப போறேன்” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றான் நந்தன்.


“சாரி மித்ரா நந்தன் இப்படி பேசுவான்னு தெரிஞ்சிருந்தால் கட்டாயம் நான் கூட்டிட்டு வந்து இருக்க மாட்டேன்! நீங்க எதையும் பத்தி யோசிக்காதீங்க எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன்!” என்று அசோக் சொல்ல,


“பரவால்ல சார்! அவரு என்கிட்ட கேட்ட கேள்விக்கு நாளைக்கு நானே பதில் சொல்லிக்கிறேன் “ என்று சொன்ன மித்ராவை புரியாத பார்வை பார்த்துக்கொண்டே அந்த இடத்தை விட்டுச் சென்றார் அசோக்.


தன்னுடைய வேலையை முடித்துவிட்டு வந்த ரஞ்சனா வாசலில் நின்று கொண்டிருந்த நந்தனை பார்த்து ‘ யார் இது நம்ம வீட்டு வாசல்ல நின்னுக்கிட்டு இருக்காரு’ என்று நினைத்துக் கொண்டு யார் என்று கேட்கலாம் என்று அருகில் வர, வீட்டுக்குள் இருந்த அசோக் நந்தனை அழைக்க, நந்தன் உள்ளே செல்வதை பார்த்த ரஞ்சனாவும் வீட்டுக்குள் நுழைவதற்கு எத்தனிக்க , அப்போது அதுதான் நந்தன் என்பதை புரிந்து கொண்டாள்.


உடனே வீட்டிற்குள் நுழையாமல் அங்கு என்ன நடக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருக்க, நந்தன் மித்ராவிடம் சொன்னதைக் கேட்டு அவளும் அதிர்ந்து போயிருந்தாள்.


அறையில் இருந்து வெளியே சென்ற நந்தனை பார்த்து அசோக்,” நந்தா ஒரு நிமிஷம் நில்லு! நீ என்ன தைரியத்துல மித்ரா கிட்ட உங்கள கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்னு சொன்ன? அவ கண்டிப்பா ஒத்துக்க மாட்டான்னு உனக்கு தெரியும்ல!” என்று அசோக் கேட்க,


“ஆமா சார்! கண்டிப்பா மித்ரா நான் கேட்டதுக்கு ஒத்துக்க மாட்டாங்கன்னு எனக்கும் தெரியும். ஆனாலும் என் மனசுல இருந்த ஆசையை ஒரு தடவை கேட்டுப் பார்க்கலாம்னு தோணுச்சு! அதனாலதான் கேட்டேன். நாளைக்கு மித்ரா என்ன பதில் சொல்லுவாங்கணும் தெரியும்! ஆனாலும் எதோ ஒரு எதிர்பார்ப்பு எனக்குள்ள!” என புன்னகைத்தான்.


அவர்கள் போன பிறகு வீட்டிற்குள் நுழைந்த ரஞ்சனா, “ மித்ரா என்ன நினைச்சுகிட்டு இருக்க! நாளைக்கு பிரகாசுக்கும் பதில் சொல்றேன்னு சொல்லி இருக்க இப்போ அந்த நந்தனுக்கும் பதில் சொல்றேன்னு சொல்லி இருக்க! இப்பவே எனக்கு விருப்பம் இல்லையினு சொல்லி அனுப்ப வேண்டியது தான!” என்று கேட்க, யோசுச்சு பதில் சொல்லலாம்னு நாளைக்கு சொல்றேன்னு சொன்னேன்” எனக் கூறினாள் மித்ரா.

“இதுல யோசிக்க என்ன இருக்கு? உனக்கு இவ்வளவு பெரிய துரோகத்தை பண்ணுன அவர எப்படி நீ ஏத்துக்க முடியும். அவருக்கே அந்த கேள்வியை உன்கிட்ட கேட்கும் போது உறுத்த வேண்டாம்!” என்று ரஞ்சனா கோபத்தில் சொல்ல,

“ம்! கண்டிப்பா உறுத்தி இருக்கும். நான் என்ன பதில் சொல்லுவேன்னு தெரிஞ்சும் என்கிட்ட கேட்டாருல, அதுக்காகத்தான். உடனே மூஞ்சில அடிக்கிற மாதிரி பதில் சொல்ல வேண்டாம்னு தான் நாளைக்கு சொல்றேன்னு சொன்னேன்!” என்று கூறினாள் மாயமித்ரா.


“அதுவும் சரிதான்! ஆனா ஒன்னு பிரகாசவிட உனக்கு நல்ல பையன் இந்த ஜென்மத்துல கிடைக்கிறதுக்கு வாய்ப்பு இல்ல. அதனால யோசிச்சு முடிவெடு!” கூறினாள் ரஞ்சனா.

“கண்டிப்பா, பிரகாஷ் மாதிரி ஒருத்தர் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்!” என்று புன்னகைத்தாள் மித்ரா.


இரவு முடிந்து பகல் பொழுது தொடங்கியது.


அதிகாலையிலேயே பிரகாஷ் வேகமாக எழுந்து சீக்கிரம் கிளம்பி மித்ராவை சந்திப்பதற்காக கிளம்பிக் கொண்டிருந்தான்.


அவ்வப்போது அவன் முகத்தில் புன்னகையும் வெட்கமும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது.

அதை எல்லாம் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தார் அம்புஜம்பாட்டி.


பிரகாஷ், மாயாவை சந்திப்பதற்காக கிளம்ப,

“மாமா மித்ராவை பாக்க போறீங்களா? “ என கேட்டாள் ஜானு.

“ஆமா ஜானு உனக்கு எப்படி தெரியும்? “ என்று பிரகாஷ் கேட்க,

“உங்க முகத்துல உள்ள புன்னகையும், தவெட்கமும் நீங்க யார பாக்க போறீங்க எங்க போறீங்கன்னு சொல்லுது!” என்று ஜானு சொல்ல, வெக்கப் போட்டுக் கொண்டே புன்னகைத்தான் பிரகாஷ்.


“ சரி மாமா ஒரு நிமிஷம் நில்லுங்க என்று சொல்லிவிட்டு பூஜை அறை சென்று ஆரத்தி தட்டு ஒன்றை எடுத்து வந்து,

“நீங்க போற காரியம் நல்லபடியா நடக்கணும்னு நெனச்சு சாமிய கும்பிட்டுட்டு போங்க! நீங்க நெனச்சதெல்லாம் நல்லபடியா நடக்கும் “ என்று ஜானு சொல்ல, பிரகாஷும் சாமியை கும்பிட்டான். ஜானு அதிலிருந்த பிரசாதத்தை எடுத்து பிரகாஷின் நெற்றியில் வைத்து விட புன்னகைத்தான் பிரகாஷ்.


“சரி ஜானு நான் கிளம்புறேன்!”என்று சொல்லிவிட்டு, பக்கத்தில் இருந்த தன் பாட்டியை பார்க்க அவர் கோபமாக அமர்ந்திருந்தார்.

“என்ன பாட்டி, ஜானு மாதிரி நீயும் நல்ல வார்த்தை நாலு சொல்லி என்னை அனுப்ப மாட்டியா? “ என்று கேட்க, பிரகாஷை பார்த்தார் அம்புஜம் பாட்டி.


“உனக்கு என்னோட சந்தோசம் தான் முக்கியம்னு எனக்கு தெரியும்! அதுனால நீ வாய் திறந்து சொல்லலைனாலும், நான் ஆசைபடுறதுதான் நடக்கணும்னு நெனப்ப!” என பிரகாஷ் சொல்ல, அம்புஜத்தின் முகம் வாடியது.

பிரகாஷ் இருவரிடமும் சொல்லி விட்டு தன் காரை எடுத்துக் கொண்டு மித்ராவின் வீட்டுக்கு விரைந்தான்.


மித்ராவின் வீட்டில் ரஞ்சனாவும் மித்ராவும் பேசிக் கொண்டிருக்க, அவர்களோடு போய் அமர்ந்து விட்டான்.

அவன் அமர்ந்த சில நொடிகளிலேயே நந்தனும் அசோக்கும் அந்த வீட்டுக்குள் நுழைய இவர்கள் யார் என்பதை போல் பிரகாஷ் பார்க்க,” இவங்க யாருன்னு பாக்கறியா பிரகாஷ்! அந்தப் போலீஸ்காரர் கூட வர்றதுதான் நந்தன்!” ரஞ்சனா சொல்ல அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான்.


“இதுக்கே அதிர்ச்சியான எப்படி! இன்னும் ஒரு விஷயமும் சொல்றேன் கேளு, அவரும் மித்ரா கிட்ட உங்கள காதலிக்கிறேன்! உங்கள கல்யாணம் பண்ணிக்கிற ஆசைபடுறேன்னு கேட்டிருக்காரு!” என்று ரஞ்சனா சொல்ல பிரகாஷின் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது.


இனி என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் பதிலுரை
சொல்லடி பகல் நிலவே!
 
Top Bottom