• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 6

Vishakini

Moderator
Staff member
நந்தன் என்ற பெயரை கேட்டதும் அதிர்ச்சியில் ஒரு கணம் திகைத்து போனாள் மாயமித்ரா.

“மேடம் நீங்க தான் கவுன்சிலிங் கொடுக்கிறதுக்கு வந்திருக்கிறவர்களா? “ என்ற குரல் கேட்க தன்னிலை அடைந்து நிமிர்ந்து பார்க்க, அங்கே அசிஸ்டன்ட் கமிஷனர் அசோக் நின்று கொண்டிருந்தார்.

கம்பீரமான அவருடைய தோற்றத்தை பார்த்ததும் மாயமித்ராவின் கால்கள் தானாக எழுந்தது.” ஆமா சார் நான் தான் , காவியா வரமுடியாதனால என்னைய அனுப்புனாங்க” என்று மாயமித்ரா கூறினாள்.

“மார்னிங் போன் பண்ணி நடந்த விவரத்தை எல்லாம் சொன்னாங்க பரவாயில்ல மேடம், உங்களுக்கு வேலை இருந்தும் கூட, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என் ஜி ஓ வா செயல்படுறத பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு! உங்கள மாதிரி சோசியல் சர்வீஸ் பண்றவங்களால மட்டும்தான் இன்னும் இந்த சமுதாயம் உயிர்ப்புடன் இருக்கிறது!” என்று அசோக் சொல்ல, புன்னகை புரிந்தாள் மாயமித்ரா.

“ஏழை எளியவர்களுக்கு காசு கொடுத்து உதவி செய்யற அளவுக்கு தான் நமக்கு வசதி இல்லை, இப்படி நம்மளால முடிஞ்ச ஒரு சில விஷயங்களை செய்யலாமே?” என்று மாயமித்ரா சொன்னதை கேட்க வியந்து போனார் கமிஷனர்.

“சரி மேடம், முதலமைச்சர் இங்கே இருந்து இன்னும் சில வினாடிகளில் கிளம்பிருவாங்க. அதுக்கப்புறம் கைதிகளுக்கு டீ பிரேக் விடுவாங்க. அவங்க டீ குடிச்சிட்டு வரவும் நம்மளோட பெரிய ஹால்ல எல்லாரும் ஒன்னு கூடிடுவாங்க. நீங்க அங்கே இருக்கிற கைதிகளுக்கு கவுன்சிலிங்கும் கொடுத்துடுங்க” என்று சொல்ல சரி என்று தலையசைத்தாள் .

கமிஷனர் பேசிக் கொண்டிருக்கும் போதே முதலமைச்சர் அங்கிருந்து கிளம்பி விட அவரை பாதுகாப்பாக வழி அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. அதன்பின் அனைவருக்கும் டீ பிரேக் விட அனைவரும் டீயை குடித்துக் கொண்டிருந்தனர்.

அவசர அவசரமாக மாயமித்ரா அங்கிருந்து கிளம்பியதால் அவள் என்ன பேச வேண்டும் என்பதை நோட்ஸ் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக காவியா எடுத்த நோட்சை மாயமித்ராவிற்கு அனுப்ப அதை பார்க்க ஆரம்பித்தாள்.

அசிஸ்டன்ட் கமிஷனர் நேராக அங்கு நின்று தேநீர் அருந்திக் கொண்டிருந்த கைதிகளை நோக்கி சென்றார். அந்தக் கூட்டத்தில் நந்தனும் நின்று கொண்டிருந்தான்.

அசோக் நேராக நந்தனிடம் சென்று, “ நந்தன் இங்கே இருக்கிற சில கைதிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கு ஏற்பாடு பண்ணி இருக்கோம். கவுன்சிலிங் கொடுப்பதற்கு ஒரு பெண் என் ஜி ஓ வந்து இருக்காங்க. அங்க இருக்கிற கைதிகள் அவங்க கிட்ட எதுவும் மரியாதை குறைவா நடந்துக்காம பார்த்துக்கோங்க. உங்க எல்லாரையும் கண்காணிக்கிறதுக்கு எப்பவும் போல சில காவலர்களையும் நான் அப்பாயிண்ட்மெண்ட் பண்ணி இருக்கேன். நீங்களும் பாத்துக்கிருங்க” என்று சொல்ல,”கண்டிப்பா சார்” என்று கூறினான் நந்தன்.

கைதிகள் அனைவரும் தேநீர் அருந்திவிட்டு அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹாலிற்கு சென்றனர். அங்கிருந்த கைதிகளை அனைவரையும் வரிசையாக அமர வைத்துக் கொண்டிருந்தான் நந்தன்


“மேம் எல்லா கைதிகளையும் நாங்க ஹால்ல அசம்பல் பண்ணிட்டோம். நீங்க வந்து கவுன்சிலிங் குடுங்க” என்று ஒரு காவலர் சொல்ல, புன்னகையுடன் “இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய நோட்புக்குகளை ஹேண்ட் பேக்கில் வைத்து விட்டு அந்த காவலர் முன் செல்ல பின்னால் சென்றாள் மாயமித்ரா.

திடீரென்று நந்தனுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த சக கைதியான “வாசுதேவ் திடீரென்று நெஞ்சில் வலிக்குது” என்று சொல்லிவிட்டு நெஞ்சில் கை வைக்க அங்கிருந்த கைதிகள் அனைவரும் பதறினர். உடனே நந்தன் வாசுதேவை தூக்க அங்கிருந்த காவலர்களும் வாசுதேவை தூக்கினர். சரியாக மாயமித்ரா உள்ளே வர நந்தன் மற்றொரு வாசல் வழியாக வாசுதேவை காவலர்களின் உதவியுடன் தூக்கிக்கொண்டு வெளியேறி இருந்தான்.


உள்ளே வந்தவள் அங்கிருந்த சலசலப்பை பார்த்துவிட்டு,” என்னாச்சு? “ என்று பக்கத்தில் இருந்த காவலரிடம் கேட்க, “ஒன்னும் இல்ல மேடம் திடீர்னு ஒரு கைதிக்கு நெஞ்சுவலி, எல்லாரும் அவரை தூக்கிட்டு ட்ரீட்மென்ட் பாக்குறதுக்கு கூட்டிட்டு போய் இருக்காங்க!” என்று கூறினார்.

“அவருக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்று மாயமித்ரா பதட்டமாக கேட்க, “அது தெரியல மேடம், டாக்டர் பரிசோதனை பண்ணி சொல்லும்போது தான் அவருக்கு என்னன்னு தெரியும். இது எப்பவும் இங்கே நடக்கிற பிரச்சனைதான். பெரும்பாலும் இங்கே இருக்கிற கைதிகள் நெஞ்சு வலிக்குது தான் சொல்லுவாங்க!” என்று காவலர் பதில் கூறினார்.

“ஓகே சார் என்று சொல்லிவிட்டு மாயமித்ரா பேச ஆரம்பித்தார். இவ்வளவு நேரம் காவியா அனுப்பி இருந்த
நோட்சை பார்த்துக் கொண்டிருந்தவள் இனிமேல் அது தேவை இருக்காது என்று அதை ஒதுக்கி வைத்து விட்டு பேசத் தொடங்கினார்.

“எல்லாருக்கும் முதல்ல வணக்கம், என் பேரு மாயமித்ரா. உங்க எல்லாருக்கும் கவுன்சிலிங் கொடுப்பதற்காக நான் வந்து இருக்கேன்.

இங்க இருக்கிறவங்க எல்லாரையும் பார்க்கும் போது ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு.

கண்டிப்பா இங்கே இருக்கிறவங்க பல பேர்ல தப்பு பண்ணணும்னு நெனச்சு குற்றம் பண்ணி இருக்க மாட்டீங்க. ஏதோ ஒரு கோவத்துல ஆத்திரத்துல உங்கள் அறியாம நீங்க ஏதோ ஒரு விஷயம் பண்ண போயி அதே பெரிய பிரச்சினையாய் இருந்திருக்கும். ஏன் உங்களால பாதிக்கப்பட்டவங்களோட உயிர் கூட போயிருக்கும். அந்தக் கோபம் குறைஞ்சதுக்கு பின்னாடி தான் நீங்க பண்ணுன தப்பே உங்களுக்கு புரிஞ்சிருக்கும். ஆனால் புரிஞ்சும் எதையும் சரி பண்ண முடிஞ்சு இருக்காது. எல்லாம் முடிஞ்சது போனதுக்கப்புறம் நீங்க குற்றவாளி ஆக்கப்பட்டு இந்த இடத்துக்கு வந்து இருப்பீங்கனு நினைக்கிறேன்”என்று மாயமித்ரா சொல்ல அங்கு இருந்த பல பேரின் தலை தானாக ஆடியது.

அதில் சில பேரின் கண்களும் கலங்கியது. அதை பார்த்த மாயமித்ரா அவர்களின் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு,

“நடந்தது நடந்திருச்சு, அதை இப்ப நம்மளால மாத்த முடியாது. எதையும் பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியாது. ஆனா நாம பழைய படி மாறலாம். நம்மளுடைய கோபத்தை குறைக்கலாம். இன்னைக்கு கூட நன்னடத்தையா நடந்துக்கிட்டவங்களை ரிலீஸ் பண்ணுனத பார்த்தேன். அதே மாதிரி இங்க இருந்து வெளில போக உங்களுக்கும் ஒரு வாய்ப்பு இருக்கு. அந்த வாய்ப்ப பயன்படுத்தி இங்கே இருந்து நல்ல மனுஷனா வெளியில போக முயற்சி பண்ணுங்க. எல்லாம் நல்லதே நடக்கும்!” என்று மாய மித்ரா சொல்ல அனைவரும் முகத்திலும் புன்னகை பூத்தது.

அதையெல்லாம் பார்த்துக் கொண்டே சார் “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னாங்க இங்க இருக்கிற பல கைதிகளுக்கு அடிக்கடி நெஞ்சு வலி தான் வருதுன்னு, எனக்கு தெரிஞ்சு அது உங்களோட மன அழுத்தத்தோட காரணமா தான் இருக்கும். அதனால நடந்ததை நினைச்சு வருத்தப்படாமல் அடுத்தது என்ன செய்யணும்னு முடிவு பண்ணுங்க. உங்க மேல தப்பு இல்லாத பட்சத்துல கேஸ் பைல் பண்ணி சிறையில் இருந்து விடுதலை வாங்குங்க. இல்ல நீங்க தான் தப்பு பண்ணி இருந்தால் உங்களுக்கான தண்டனை காலம் முடிஞ்சதுக்கு அப்புறம் நல்ல மனுசனா இங்க இருந்து வெளியேறுங்க. உங்க வாழ்க்கை இங்கேயே முடிஞ்சிட போறதில்ல கட்டாயம் உங்களுக்கு அழகான வாழ்க்கை வெளியில் காத்துக்கிட்டுனு முதல்ல நீங்க நம்புங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்.

இதோ இங்கே நிற்கிறேனே நானும் வாழ்க்கையில பெரிய பாதிப்புக்கு உள்ளானவதான். என்னோட பர்சனல் வாழ்க்கையை இதுவரை என்னோட ஒர்க் பண்றவங்களுக்கோ என்னுடைய சக நண்பர்களுக்கோ நான் சொன்னது கிடையாது. ஆனால் உங்களையெல்லாம் பார்க்கும் போது சொல்லணும்னு தோணுச்சு. அம்மா அப்பா சொந்த பந்தம் சொந்த ஊரு எல்லாரும் கை விட்டதுக்கு அப்புறம் என்ன செய்யப் போறோம்னு தெரியாம இருந்த எனக்கு ஹாஸ்பிடல் இருக்கும்போது இப்ப நான் உங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வந்தவங்க மாதிரி எனக்கு கவுன்சிலிங் கிடைச்சுச்சு. அவர்களுடைய வார்த்தையை கேட்டதுக்கு அப்புறம் ஏன் நம்ம வாழனும்னு நெனச்ச எனக்கு கட்டாயம் இனிமேல் நான் வாழனும்னு தோணுச்சு. அதுக்கப்புறம் என்னையவே முழுசா நான் தேத்தி கொண்டு வந்து இன்னைக்கு இந்த இடத்துல நினைக்கிறேன். ஒரு பெண்ணா இந்த சமுதாயத்துல எவ்வளவோ பிரச்சனைய நான் ஃபேஸ் பண்ணி இருப்பேன்னு நீங்க புரிஞ்சுக்கோங்க. என்னால பேஸ் பண்ண முடியும் போது உங்களால முடியாதா? கூடிய சீக்கிரம் எல்லாம் நல்லபடியா நடக்கும் மனசு தளராதீங்க,சந்தோசமா இருங்க. நிறைய புக்கு படிங்க சாப்பிடுங்க. கூடிய சீக்கிரத்துல ஒரு அழகான வாழ்க்கை உங்களுக்கு காத்து இருக்குன்னு முதல்ல நம்புங்க உங்க நம்பிக்கை சீக்கிரத்தில சாத்தியமாகும்!” என்று சொல்ல அங்கிருந்த அனைவரும் மெய்மறந்து மாயமித்ரா சொல்லியதை கேட்டுக் கொண்டிருந்தனர்.

சில பேர் ஒருபடியாக எழுந்து கண்டிப்பா “நீங்க சொன்ன மாதிரி எனக்கு அழகான வாழ்க்கை காத்து இருக்குன்னு நான் நம்புறேன், கூடிய சீக்கிரத்துல அந்த வாழ்க்கையையும் அனுபவிப்பேன்” என்றும் மகிழ்ச்சியுடன் உறுதியுடனும் தெரிவித்தனர். இங்கு நடந்ததை எல்லாம் ரவுண்ட்ஸ் வந்த அசிஸ்டன்ட் கமிஷனர் அசோக் பார்த்தார். மாயமித்ராவோ கமிஷனரை பார்த்து புன்னகைத்தார்.

சில நிமிடங்களில் அங்கிருந்த கைதிகளை எல்லாம் அங்கிருந்த காவலர்கள் அவர்களின் சிறைகளுக்கு கூட்டி செல்ல ஆரம்பித்தனர்.

“ சரி சார் நான் கிளம்புறேன் என்று மாயமித்ரா கமிஷனரிடம் சொல்ல, “ மிஸ், ஆர் மிஸஸ் மித்ரா” என்று கேட்டார்.

மாயமித்ரா புன்னகை மாறாமல் “ மிஸ் மாயமித்ரா” என்று சொல்ல கமிஷ்னர் சிரித்தார்.

“நீங்க கவுன்சிலிங் கொடுத்தத முழுசா கேட்கல. கடைசியா தான் கேட்டேன். ஆனாலும் உங்க வாயிலிருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப நம்பிக்கைய கேட்கிறவங்களுக்கு கொடுக்குது!” என்று கமிஷனர் சொல்ல,

“ நன்றி சார், அதுக்காகத்தானே இவ்வளவு பேசுறோம், நான் பேசுவதை கேட்டு ஒரு அஞ்சு பேர் மனசு மாறினால் கூட அது பெரிய விஷயம் “ என்று மாயமித்ரா உதட்டுக்கே வலிக்காமல் கூறினாள்.

“ அதெல்லாம் அஞ்சு பேர் என்ன இங்கே இருந்த ஐம்பது பேரும் மனசு மாறி இருப்பாங்க, இன்னைக்கு அவங்க முகத்துல தெரிஞ்ச புத்துணர்ச்சியையும் நம்பிக்கையும் பார்க்கும் போதே தெரிஞ்சுச்சு” என்று கமிஷனர் சொல்ல, “ரொம்ப நன்றி சார் , என்று கூறினாள் மாயமித்ரா.

“சரி நீங்க எதுல வந்தீங்க! எப்படி கிளம்ப போறீங்க?” என்று கமிஷனர் கேட்க, “கேப் புடிச்சு தான் சார் வந்தேன். போகும்போதும் கேப் புக் பண்ணி தான் போகணும்” என்று மாயமித்ரா கூறினாள்.

“ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், என்னோட கார் இருக்கு, டிரைவர் கிட்ட சொல்றேன். உங்கள நீங்க போக வேண்டிய இடத்துல கொண்டு போயி
விடுவாங்க என்று கமிஷனர் சொல்ல,

“அதெல்லாம் வேண்டாம் சார்! நான் கேப் புக் பண்ணியே போக்கிறேன். இருந்தாலும் உங்களுக்கு நன்றி சார்” என்று கூறினாள் மாயமித்ரா.

“எவ்வித பிரதிபலனும் இல்லாமல் நீங்க இங்க உள்ள கைதிகளுக்காக அங்கிருந்து இவ்வளவு தூரம் வந்திருக்கும் போது, ஏதோ என்னால முடிஞ்ச உதவி, தயவு செஞ்சு ஏத்துக்கலாமே” என்று அசோக் சொல்ல வேறு வழியில்லாமல் சம்மதம் தெரிவித்தாள்.

“அப்புறம் நான் ஒரு சின்ன உதவி, ஒரு கைதிக்கு தனியா கவுன்சிலிங் கொடுக்கணும். நீங்க ஃப்ரீயா இருக்கும்போது சொல்லுங்க, ஒரு ரெண்டு வாரத்துக்குள்ள சொன்னீங்கன்னா நல்லா இருக்கும், நாலு வாரத்துல அவருக்கு விடுதலை இருக்கு, இப்பயே வெளில போக விருப்பம் இல்லைன்னு சொல்றாரு, நந்தன விடுதலை பண்றதுக்கு முன்னாடி அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து அனுப்பனும்னு ஆசைப்படுறேன் “ என்று அசோக் சொல்ல “நந்தனா?” என்று ஆச்சரியமாக கேட்டாள் மாயமித்ரா.

“என்னாச்சு மித்ரா ? நந்தன் பேரை சொன்னதும் உங்க முகம் மாறுது, உங்களுக்கு தெரிந்தவரா?” என்று கேட்க, தன்னை சுதாரித்துக் கொண்டு, “இன்னைக்கு கொடுத்த விடுதலை கூட நந்தனு சொல்ற கைதிக்கு தான்னு, அவரு வேண்டாம்னு சொன்னதுனால வேற ஆளுக்கு கொடுத்ததா பின்னாடி இருந்த காவலர்கள் சொல்லிக்கிட்டு இருந்தாங்க அதான் கேட்டேன்” என்று கூறினாள் மாயமித்ரா.

“ஆமா மித்ரா, வெளில போறதுக்கே புடிக்கலனு சொல்லிக்கிட்டு இருக்கான் ரொம்ப நல்லவன் ஏதோ சூழ்நிலை கைதியா தப்பு பண்ணிட்டான். அவன் இங்கே இருந்து வெளில போகும்போது எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வெளியில போயி நல்ல ஒரு வாழ்க்கை வாழனும்னு நினைக்கிறேன். அதுக்காக தான் உங்ககிட்ட கேட்டேன்” என்று சொல்ல, “சார் நான் அவரை பார்க்கலாமா? “ என்று கேட்டாள் மாயமித்ரா.

மாய மித்ரா நந்தனை சந்திக்க வேண்டும் என்று விரும்பும் காரணம் என்ன? மாயமித்ரா நந்தனை சந்திப்பாளா? என்பதை அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண்போம்.















 
Top Bottom