• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 7

Vishakini

Moderator
Staff member
மாயமித்ரா நந்தனை பார்க்கலாம் என்று கேட்க, “ கண்டிப்பா பாக்கலாம் “ என்று கூறினார் அசிஸ்டன்ட் கமிஷனர் அசோக்.

பக்கத்தில் இருந்த காவலரை நோக்கி, “நந்தன வர சொல்லுங்க?” என்று சொல்லிக் கொண்டிருக்க, “ சார்” என்று அவசர அவசரமாக ஒரு காவலர் ஓடி வந்து மெதுவாக கமிஷனரின் காதுகளில் ஏதோ கூறினார்.

அந்தக் காவலர் கூறுவதை கேட்ட கமிஷனரின் முகம் பதட்டமடைந்து, “ சரி வரேன்”என்று கூறினார். பக்கத்தில் இருந்தவளை பார்த்து

“சாரி மித்ரா, ஒரு எமர்ஜென்சி நான் போக வேண்டியது இருக்கு, நான் வேணா நந்தன வர சொல்றேன் நீங்க பாத்துட்டு போங்க!” என்று அசோக் சொல்ல,

“சார் நந்தன் அங்க தான் உடைஞ்சு போயி உட்கார்ந்துட்டு இருக்கான்” என்று காவலர் கூறினார்.

என்ன நடந்தது என்று மாயவித்ராவிற்கு தெரியவில்லை என்றாலும் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொண்டாள்.


“ஆமா அவனோட ஒண்ணா சிறையில இருந்தவராச்சே , அந்த வருத்தம் இருக்கத்தான் செய்யும்” என்று அந்த காவலரை பார்த்து சொல்லிவிட்டு,

“சாரி மித்ரா இங்க இருந்த கைதி ஒருத்தர் நெஞ்சுவலியில இறந்துட்டாரு, அவரு நந்தனோட ஒரே சிறையில் இருந்தவரு, அவர் இறந்த விஷயம் கேள்விப்பட்டு நந்தன் கண்கலங்கி உட்கார்ந்திருக்கானாம்!” எனக் கூறினார்.

“அச்சச்சோ சாரி சார், கூட இருந்தவர் திடீர்னு இறந்து போயிட்டா அதை யாராலயும் தாங்கிக்க முடியாது. அவர் இப்ப என்ன மன நிலைமையில் இருப்பார்னு எனக்கு புரியுது. இப்போதைக்கு அவர பார்ப்பது நல்லா இருக்காது, இனி ஒரு நாள் நீங்க சொன்ன மாதிரி நேரம் கிடைக்கும் போது அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க வருவேன்ல, அப்ப கண்டிப்பா பாக்குறேன் சார் “என்று கூறினாள் மாயமித்ரா.

“ சரி, மேடத்தை பத்திரமா கூட்டிட்டு போயி அவங்க வீட்டுல விட்டுருங்க” என்று அசோக் பக்கத்தில் இருந்த காவலருக்கு உத்தரவு பிறப்பிக்க, காரை எடுத்துக்கொண்டு மாயமித்ராவின் வருகைக்காக காத்திருந்தார் அவர்.

“சரி மித்ரா நீங்க கிளம்புங்க, ஸ்பாட்டுக்கு போயி என்ன நடந்துச்சுன்னு பார்த்துட்டு நிறைய ப்ரோசீஜர் பண்ண வேண்டியது இருக்கு”என்று அசோக் சொல்ல,” நீங்க போங்க சார், நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு காரில் ஏற கார் அவளின் வீடு நோக்கி புறப்பட்டது.

அசோக் அவசர அவசரமாக கைதிகளுக்கு மருத்துவ உதவி கொடுக்கப்படும் இடத்தை நோக்கி விரைந்தார்.

அங்கு வாசலில் நந்தன் கண் கலங்கி நின்று கொண்டிருக்க, சில காவலர்களும் மருத்துவ குழுவினரும் நின்று கொண்டிருந்தனர்.

“எப்படி நடந்துச்சு, நெஞ்சுவலின்னு சொன்னா உடனே பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்க வேண்டியதுதானே” என்று அசோக் கேட்க,

“இல்ல சார், நெஞ்சு வலிக்குன்னு இங்க கூட்டிட்டு வந்த உடனேயே நாங்க பல்ஸ் செக் பண்ணுனோம். பல்ஸ் ரொம்ப குறைஞ்சு போய் இருந்துச்சு. நாங்க உடனே ஆம்புலன்ஸ்ல ஏத்தி கொண்டு போக ஸ்டெப் எடுத்துக்கிட்டு இருக்கும்போதே அவர் உயிர் போயிருச்சு” என்று விளக்கம் கொடுத்தார் இன்ஸ்பெக்டர்.

“இதுக்கு முன்னாடி நெஞ்சுவலின்னு சொல்லி இருந்தாரா? அவரோட மெடிக்கல் ரிப்போர்ட் ஏதாவது இருக்கா?” என்று கேட்க, “அதெல்லாம் ஒன்னும் இல்ல சார், இப்பதான் நெஞ்சுவலின்னு கூட்டிட்டு வந்தாங்க, அதுக்குள்ள இப்படி ஆயிட்டு!” என்று கூறினார் காவலர்.

“சரி அவங்க குடும்பத்துக்கு சொல்லிருங்க, அவரு பாடிய இங்கிருந்து அனுப்புவதற்கு என்ன பண்ணனுமோ அந்த புரோசிஜரை எல்லாம் பண்னுங்க” என்று கூறினார் அசோக்.

அங்கு பக்கத்தில் நின்ற நந்தன் கண்கள் கலங்கி கற்சிலையாக நின்று கொண்டிருந்தான்.

அவனின் உணர்வுகளை புரிந்து கொண்ட அசோக் நந்தனின் மீது கைகளில் கையை வைத்து, அவனுக்கு ஆறுதல் சொல்ல,

“சார் என்னால ஏத்துக்க முடியல, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட பேசி சிரிச்சுக்கிட்டதான் இருந்தாரு” என்று இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அவனுடைய உணர்வுகள் எல்லாம் உடைப்பெடுத்துக் கண்ணீராகவும் வார்த்தைகளாகவும் வெளியில் வந்தது.

நந்தனின் கலக்கத்தை பார்த்த அசோக்கின் கண்களும் கலங்கியது. “நேத்து கூட ரொம்ப சந்தோசமா, என்னைய வெளியில எடுக்குறதுக்கு என் பொண்டாட்டி ஏதோ ஒரு வக்கீல் கிட்ட பேசி இருக்கலாம், கூடிய சீக்கிரம் நானும் வெளில போயி என் பொண்டாட்டி பிள்ளைகளோட சந்தோசமா இருப்பேன்னு சொன்னாரு! ஆனா இன்னைக்கு...” என்று கடைசி வார்த்தைகளை சொல்ல முடியாமல் அவன் குரல் தழுதழுத்தது.

அசோக்கோ நந்தனுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் அவனை அணைத்து அவன் முதுகை வருடி ஆறுதல் கொடுத்தார்.

இங்கு,

வேலையெல்லாம் முடித்துவிட்டு தன் காரை எடுத்துக்கொண்டு ஆபீஸில் இருந்து புறப்பட்டான் பிரகாஷ் கண்ணா.

அவன் செல்லும் போது எப்போதும் போல மாய மித்ராவின் இருக்கையை பார்க்க, அது வெறுமையாக இருந்தது.

உடனே தனது அலைபேசியை எடுத்து மாய மித்ராவின் அலைபேசிக்கு அழைப்பை விடுத்தான். காரில் வந்து கொண்டிருந்த அவளின் செல்போன் அலற, ஹேண்ட் பேக்கை ஓப்பன் செய்து அதில் இருந்த அலைபேசியை கையில் எடுத்துப் பார்க்க, எம்.டி பிரகாஷ் கண்ணா என்று வந்தது.

உடனே, மாயமித்ரா தனது வாட்சில் மணியை பார்க்க அது நாலரை என்று காட்டியது. ‘அஞ்சு மணிக்கு தானே ஆபீஸ் வந்து வேலை செய்வோம்னு சொன்னோம்’ என நினைத்துக் கொண்டே அவனின் அழைப்பை ஏற்க,

“எங்க இருக்கீங்க மித்ரா, போன காரியம் என்ன ஆச்சு? “ எனக் கேட்டான். “கவுன்சிலிங் கொடுத்து முடிச்சுட்டு திரும்பி வந்துகிட்டு இருக்கேன் சார். இன்னும் அரை மணி நேரத்துல ஆபீஸ்ல இருப்பேன் “என்று அவன் கேட்பதற்கு முன்னாலே பதிலை கொடுத்தாள் மாயமித்ரா.

எப்போதும் அவள் அப்படித்தான். அவன் எதற்காக அழைப்பு விடுத்திருந்தாலும், அதைப் பற்றியே காது கொடுத்து கேட்காமல் அவளாக ஏதாவது சொல்லி விடுவாள். காரணம் அவளுக்கு புரியவில்லையா? இல்லை அவனை எதுவும் பேச விடாமல் செய்வதற்காக செய்யும் சூழ்ச்சியா? அவள் மனம் ஒன்றே அறியும்.

“நான் ஆபீஸ் எப்ப வருவீங்கன்னு கேட்கவே இல்லை. எப்படியும் உங்களுக்கு டயர்டா இருக்கும். நீங்க வீட்டுக்கு போயி ரெஸ்ட் எடுங்க. காலையில சீக்கிரம் வந்து கொட்டேஷன் ரெடி பண்ணி அனுப்பி விடுங்க “ என சொல்ல,

“ பரவால்ல சார், எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல நான் ஆபீஸ் வந்து முடிச்சு கொடுத்துட்டே போறேன்” அழுத்தமாக கூறினாள் மாயமித்ரா.

அவளின் பிடிவாதத்தை உணர்ந்தவன் இதற்கு மேல் இவளிடம் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என்று உணர்ந்து “சரி உங்க இஷ்டம், நான் சொல்றத சொல்லிட்டேன், நீங்க பண்றத பண்ணுங்க” என்று பிரகாஷ் கண்ணாவும் அழுத்தமாகவே கூறினான்.

“சரி சார்” என்று மாயமித்ரா சொல்ல, தன் குரலை தாழ்த்தி” வேலை இருக்குனு எதுவும் சாப்பிடாம இருந்திராத! சாப்பிட்டுட்டு வேலைய பாரு, உடம்ப பாத்துக்க, காலையில பார்ப்போம்” என்ற கடைசி வார்த்தைகளை ஒருமையில் பேசினான் பிரகாஷ் கண்ணா.

அவனுடைய குரலில் இருந்த அக்கறையை உணர்ந்தவளோ, ம்ம்ம்ம் என்ற ஒற்றை வார்த்தையுடன் நிறுத்தினாள். இதற்கு மேல் அவளிடம் எவ்வித பதிலும் வராது என்பதை புரிந்து கொண்டவன்,” இதுக்கு மேல எந்த பதிலும் உன்கிட்ட இருந்து வராதுனு எனக்கு தெரியும், பாத்து பத்திரமா இருந்துக்க போனை வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தான் பிரகாஷ் கண்ணா.

பிரகாஷ் கண்ணா அலைபேசியை அணைத்த பின்பும் பத்து நிமிடம் வரை அந்த அலைபேசியில் தெரியும் அவனுடைய பெயரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மாயமித்ரா.

இங்கு பிரகாஷ் கண்ணாவோ, மித்ரா பிரகாஷ் என்று தெரியும் பெயரை பார்த்து சிரித்தான். என்னைக்கு உன்னைய காதலிக்க ஆரம்பிச்சனோ அன்னைக்கே உன் பேருக்கு பின்னாடி என் பெயரை சேர்த்து உன் நம்பர சேவ் பண்ணிட்டேன். கூடிய சீக்கிரம் நீயும் உன் பேருக்கு பின்னாடி என் பெயரை போடுற நாள் வரும் என தனக்குத்தானே சொல்லிக் கொண்டு புன்னகை செய்து கொண்டே
தன் காரில் ஏறி காரை ஸ்டார்ட் செய்து விட்டு , அலைபேசியில் இருந்த அவளின் முகத்தை பார்த்துவிட்டு,

‘அன்பே எந்தன் காதல் சொல்ல
நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்க தானே
புது ஆயுள் வேண்டுமே’

இல்லை இல்லை என்று சொல்ல
ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கு
ஒரு ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்ல போகிறாய்...... என்ற பாடல் வரிகளை பாடிக்கொண்டே காரை ஓட்டினான்.


என் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சும் ஒவ்வொரு முறையும் நான் உன்கிட்ட சொல்ல வரும்போது என்னைய சொல்ல விடாம வேற எதையாவது பேசி என்னைய தடுக்குற,
ஒரு நாள் இல்ல ஒரு நாள் என் மனசுல உள்ளத நான் வெளிப்படையா உன்கிட்ட சொல்லும் போது கண்டிப்பா நீ எனக்கு பதில் சொல்லுவ? அதுவும் நான் எதிர்பார்க்கிற பதில, அந்த நாளுக்காக காத்திருக்கேன் மித்ரா என நினைத்து கொண்டான் பிரகாஷ் கண்ணா.


மாய மித்ராவின் நினைவில்லையே புன்னகையோடு காரை ஓட்டி வந்தவன் சிறிது நேரத்தில் பிரம்மாண்டமாக இருந்த கேட்டின் முன் தன் காரை நிறுத்தினான்.

அவன் காரின் ஹாரன் சவுண்டை கேட்டதும் அந்த பெரிய கேட் திறக்க நவீன கால அரண்மனை போல இருந்த அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தின் முன் தன் காரை செலுத்தினான்.

காரில் இருந்து இறங்கி அங்கிருந்த வாயிற் காவலரிடம் சாவியை கொடுத்துவிட்டு வீட்டுக்குள் நுழைய, “வீட்டுக்குள்ள வராத” என கேட்ட குரலால் அப்படியே நின்றான் பிரகாஷ் கண்ணா.






















 
Top Bottom