மழை - 26
"இதெல்லாம் எங்கிட்டு அடுக்கும்! ஒன்னும் இல்லாதவள போனா போகுதுன்னு எம்பேரன் கட்டி நடு வீட்ல உட்கத்த வச்சா, வேலைக்கு போய் எங்க குடும்பத்த அசிங்கப்படுத்தலாம்னுட்டு பாக்குதாளா அவ, வரட்டும்.. இன்னைக்கு இருக்கு அவளுக்கு" என்று தன் மருமகளை முறைத்துப் பார்த்துக் கொண்டே திட்டிக் கொண்டிருந்தார் காமாட்சி.
வள்ளி அவருடன் கைகளைப் பிசைந்து கொண்டே பதட்டமாய் நிற்கவும்.
காமாட்சியின் குரல் கேட்டு வெளியே வந்தனர் செந்நிலாவும், பொற்செல்வனும்.
கிளம்பி தயாராய் வெளியே வந்து நிற்பவளைப் பார்த்த பாட்டிக்கு கோபம் தலைக்கேறியது.
"இங்கன என்ன சோத்துக்கு கொறச்சலா வேலைக்கு போவ போதேன்னு உம்பொண்டாட்டி ஒத்த காலுல நிக்கிதாளாம். என்ன இவ வேலைக்கு போயிதேன் நமக்கெல்லாம் பொங்கி போட போதாளோ.. இவ சம்பாத்தியத்த வச்சுதேன் நாம மாடி வீடு கட்ட போறோமாக்கும். பெரிய சீமத்து சிறுக்கினு நெனப்பு, வேலைக்கு போறாகளாம்.. வேலைக்கு.." என்று தன் பேரனிடம் எகிறியவர்.
"இந்தாருடி, உன் வீட்டுல பொங்கி திங்க வழி இல்லாம நீ வேலைக்கு போனாவ சரி. இது பெரிய வீடு, இங்க வந்துட்டு சோத்துக்கு வக்கில்லாதவ மாதிரி நீ வேலைக்கு போனினா, ஊர்ல இருக்கவய்ங்க எல்லாம் எங்கள பத்தி என்ன நினப்பாய்ங்க. இந்த ஊருக்குள்ள எங்களுக்கு நிறைய மறுவாதையும், கௌரவமும் இருக்கு. அது எல்லாத்தையும் குழி தோண்டி பொதைக்கிறதுக்குனே எங்க வீட்டுக்கு நீ மருமகளா வந்து தொலைச்சுருக்கியோ.. எந்த சென்மத்துல என்ன பாவம் பண்ணமோ, விட்ட குறை தொட்ட குறை மாதிரி பாட்டி பேத்தின்னு மொத்த பேரும் இங்கனக்குள்ளவே சுத்துதீங்க".
"அப்பத்தா என்ன பேச்சு இதெல்லாம், எதுக்கும் எதுக்கும் பேசுறீங்க நீங்க?".
"ஆமாய்யா, உங்க கண்ணுக்கு இப்போ எல்லாமே அப்படித்தேன் தெரியும். பொஞ்சாதி மோகத்துல இல்ல கெடக்குறீய நீங்க, எங்கள எல்லாம் பாத்தா தேவையில்லாத பேச்சு பேசுறவைங்க மாதிரிதேன் தெரியும்".
"இப்போ என்ன பிரச்சனை?" என்றான் தன் பொறுமையை இழத்துப்பிடித்து.
"இவ வேலைக்கு போவக்கூடாது. அதேன் எம்பிரச்சனை. என்னத்தையாவது பேசி இவள வேலையிலிருந்து நிப்பாட்டு. அப்போதேன் நான் எம்பேச்ச நிப்பாட்டுவேன். நம்ம இங்க என்ன ஒன்னுமில்லாமலா கெடக்கோம். நாமலே ஆயிரம் பேத்துக்கு வேலை போட்டு கொடுப்போம், இவ வேலைக்கு போயிதேன் நம்ம குடும்பம் விடிய போகுதாக்கும்" என்று முகத்தை தோள்பட்டையில் இடித்தார்.
"இங்க பாருங்க வேலைக்கு போறது என்னோட விருப்பம். உங்க பேரன்கிட்ட மட்டும் இல்ல, வேற யார்கிட்ட வேணும்னாலும் போய் சொல்லிக்கோங்க. யாரும் எதுவும் என்னை சொல்ல மாட்டாங்க. நான் என் புருஷன்கிட்டயும், மாமியார் மாமனார் கிட்டயும் கேட்டுட்டு தான் வேலைக்கு போறேன். இது எங்க வாழ்க்கை, என்ன முடிவா இருந்தாலும் நாங்க சேர்ந்து எடுத்துப்போம். எல்லாத்துக்கும் மூக்க நுழைக்காதிங்க" என்று பட்டென்று கேட்டுவிட்டாள் நிலா.
அதில் தன் நெஞ்சின் மீது கையை வைத்த காமாட்சி, "பாத்தியாய்யா! எம்புட்டு பேச்சு பேசுதா பாரு, இதுக்குத்தேன் இப்படி படிச்ச திமிர் பிடிச்சவள கட்டவே கூடாதுன்றது. புருசன் பேச்சுக்கு மதிப்பில்லன்னு சொல்லுதாளே அப்புறம் என்னத்துக்கு நீ புருசன்னு அவ கூட இருக்க. கொஞ்சம் கூடவா உனக்கு சூடு சொரணை இல்லாம வக்கத்து போயிட்ட. அவ இம்புட்டு பேச்சு பேசுதா அமைதியா நிக்கிற" என்று பொற்செல்வனையும் ஏற்றி விடுவது போல் அவர் கேட்கவும்.
"அப்பத்தா அவ இத பத்தி என்கிட்ட ஏற்கனவே பேசிட்டா, நானும் சரினு சொல்லிட்டேன். எதுக்கு இப்ப நீங்க சம்பந்தம் இல்லாம ஒரண்ட இழுக்குறீங்க. இப்ப அவ வேலைக்கு போறதால என்ன தலையிறக்கம் ஆகிப்போச்சு இங்க".
"ஆமா, இவளையே கட்டிக்கிட்டு வந்து குடும்பத்துக்குள்ள விட்டுட்ட. இத விட இவ வேலைக்கு போறதுதேன் உனக்கு தலையிறக்கமா தெரிய போகுதாக்கும்" என்றார் தன் முகத்தை திருப்பியவாறு.
"அம்மா இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை, நீங்க பேசுறது வாசல் வரைக்கும் சத்தம் கேட்குது. எங்க மருமக வேலைக்கு போறதுல, எங்க யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல" என்றவாறு வீட்டிற்குள் வந்தார் தேவராஜன்.
"ஓ! உங்க எல்லாத்துகிட்டயும் கேட்டு இருக்கானா, அப்ப நான் யாரு. நான் இந்த குடும்பத்து ஆள் இல்லயோ.. அதேன் என்னைய கேக்க வேணாம்னுட்டு மாமியாரு, மாமனாரு, புருசன மட்டும் கேட்டுட்டு வேலைக்கு போறாளா.. சரி, அப்படியே இருக்கட்டும். இப்ப இவ வேலைக்கு போவணும்னு என்ன அவசியம் வந்துச்சு. நம்ம குடும்ப கவுரவம், மறுவாத என்ன ஆவுறது. இவ சம்பாதிச்சு போட்டுதேன் நாம இங்க சாப்பிட போறமா தேவா" என்றார் அதட்டலாய்.
"இது ஒன்னும் அவ்வளவு பெரிய தப்பான விஷயமா எனக்கு தெரியல. படிச்ச புள்ள வேலைக்கு போகணும்னு ஆசைப்படுது. வீட்டுக்குள்ள கெடந்து வேலையவே பாத்துக்கிட்டு இருந்தா படிச்ச படிப்பு வீணா போயிடாது. வீட்ல தான் வள்ளி இருக்கா, நீங்க இருக்கீங்க, மேலுக்கு ரெண்டு ஆளுங்க வேலைக்கு இருக்காங்க. அதுக்கும் மேல இந்த புள்ள வீட்ல இருந்து என்னத்த செய்ய போது. அதுக்கு வசதிபடுற வரைக்கும் வேலைக்கு போகட்டும். அதுக்கா எப்போ வேண்டாம்னு தோணுதோ அப்ப வேலைய விட்டு நிக்கட்டும். இதுல முடிவெடுக்க வேண்டியது அவங்க புருஷனும் பொஞ்சாதியும் தான். சம்பந்தமில்லாம நீங்க எதுவும் பேசாதீங்க" என்று தன் தாயின் வாயை அடைத்தவர்.
"அம்மாடி நிலா காலேஜுக்கு கிளம்பிட்டியா மா".
"ஆமா மாமா".
"சரி, நல்லபடியா போய் உன் வேலையை பாருமா கண்டதை யோசிக்காத".
"கண்டதை யோசிக்காதனா, என்னைய தான் கண்டவனு சொல்லுதானோ" என்று உள்ளுக்குள் வெதும்பிப் போய்விட்டார் பாட்டி.
"சாப்பிட்டுட்டு போத்தா".
"இல்லத்த, பரவால்ல இருக்கட்டும்" என்றவளுக்கும் திருமணத்திற்கு பின்பு முதல் நாள் வேலைக்கு போகும் உற்சாகம் எல்லாம் மொத்தமாய் வடிந்துப் போயிருந்தது.
"அட நீ வானு சொல்லுறேன்ல" என்று அவளின் கையைப் பற்றி அழைத்துச் சென்று விட்டார் வள்ளி.
அவள் உண்டு முடிக்கவும் தான் அவளை விட்டவர்.
"ஐயா செல்வா, நீயே கொண்டு போய் நம்ம நிலாவ காலேஜ்ல விட்டுடு".
"இல்ல பரவால்ல இருக்கட்டும் அத்த. நானே போயிக்கிறேன்".
"அப்புறம் எதுக்கு கட்டுன புருஷன் கூட இருக்காரு. பொண்டாட்டிக்கு கூடமாட ஒத்தாசையா இருக்க தானே" என்ற வள்ளி நிலாவின் கையைப் பிடித்துக் கொண்டு, "அவங்க பேசுனது எதையும் மனசுல வச்சுக்காதம்மா, அவங்கள பத்தி தெரிஞ்சது தானே".
பெருமூச்சோடு, "சரிங்கத்த, நான் வரேன்" என்று பொற்செல்வனுடன் புறப்பட்டிருந்தாள்.
"என்ன நிலா சைலன்ட்டா இருக்க?" என்றவாறு அவன் வண்டிகை செலுத்திக் கொண்டிருக்கவும்.
அவனின் பின்னே அமர்ந்திருந்தவள், "ஒன்றும் இல்ல சும்மாதான்".
"அப்பத்தா பேசுனதையே நினைச்சுட்டு இருக்கியா, அவங்கள பத்தி தான் தெரியும்ல".
தெரியும் தான். தெரிந்து தானே இந்த உறவே வேண்டாம் என்று அவள் நினைத்தது. விதியின் விளையாட்டை எண்ணி நொந்து கொள்ளாமல் வேறு என்ன செய்ய முடியும் அவளால் இப்பொழுது.
சட்டென்று அவன் வண்டியை நிறுத்தவும். அவனின் மீது மோதி அமர்ந்தவள், "என்னாச்சு?".
"இந்த இடம் ஞாபகம் இருக்கா நிலா?" என்றான் குறும்பு சிரிப்போடு.
மறக்கக் கூடிய இடமா அது. அன்று எத்தனை தவித்துப் போய் இங்கு நின்றிருந்தாள்.
"இந்த இடத்தை கிராஸ் பண்ணும் போதெல்லாம் எனக்கு உன் நினைப்பு வரும்" என்றவனை புருவம் உயர்த்தி ஆச்சரியமாய் பார்த்தாள்.
"நெஜமா தான் சொல்றேன். காதல்னு சொல்ல முடியாது. ஆனாலும், உன் மேல என்னவோ ஒரு பீல், இந்த இடத்தை பார்க்கும்போது நீதான் என் மனசுக்கு முன்னாடி வந்து நிப்ப. அதேபோல, அப்பப்போ மனசு கஷ்டமா இருக்கும் போது அன்னைக்கு சடங்குல நீ என்னை பார்த்தியே அந்த பார்வை தான் கண்ணு முன்னாடி வந்து நிக்கும்".
"இது எப்போலருந்து சொல்லவே இல்ல" என்றாள் விளையாட்டாய்.
"சொல்லி உன் மனசயும் கெடுத்துடக்கூடாது இல்ல. அதோட நான் சொன்னாலும் நீ ஒத்துக்கிற ஆளா.. எங்க குடும்பத்த விட்டு எவ்வளவு தூரம் போகணுமோ அவ்வளவு தூரம் போகணும்னு நினைச்சவ தானே நீ. அதோட எனக்கே அந்த பீலிங்க்கு என்ன பேர்னு தெரியல. அப்புறம் நான் என்னன்னு உன்கிட்ட சொல்றது".
அவனின் பேச்சில் கண்கள் பளிச்சிட அவள் கலகலவென நகைக்கவும்.
"இப்படியே நீ எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும் நிலா" என்றான் அவளின் கன்னம் கிள்ளி.
சிறுவயது முதலே பெரியவளாய் நடந்து கொள்ள துவங்கி விட்டாள். ஆனாலும், அவளுக்குள் இருக்கும் வெகுளித்தனம் அவனிடம் மட்டுமே அவர்களுக்கான நேரத்தில் வெளிவரும்.
அவனுடனான இந்த சின்ன சின்ன உரையாடல்கள் கூட அவளின் மன அழுத்தத்தை அப்படியே குறைத்து விடுகின்ற மாயம்தான் அவளுக்கு புரியவில்லை.
"ம்ம்" என்று தலையசைத்தாள் சிரிப்பினோடு.
*****
செந்நிலா வேலைக்கு சென்று ஒரு வாரம் கடந்திருந்தது. நேரம் கிடைக்கும் பொழுது தானே சென்று தன் பாட்டியையும் பார்த்து வந்திருந்தாள். அதற்கெல்லாம் இவர்களின் வீட்டில் எந்த ஒரு எதிர்ப்பும் யாரும் தெரிவித்ததும் கிடையாது.
வழக்கம்போல் அவள் அன்றும் வேலைக்கு கிளம்பி விட சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தன் மருமகளிடம் சென்ற காமாட்சி, "உன்னய பாத்தாதேன் மனசு கெடந்து அடுச்சுக்குது வள்ளி" என்றார் பாவம் போல்.
"ஏன்த்த என்ன ஆச்சு?".
"நீ மருமகளா வந்த பிறகு இந்த குடும்ப பொறுப்ப நீயே ஏத்துக்கிட்ட. எனக்கும் அது வசதியா போச்சு. கூட வேலைக்கு ஒரு ஆள் கிடைச்சதும் நானும் நிம்மதியா எல்லாத்தையும் உங்கிட்ட ஒப்படச்சிட்டேன். ஆனா, அந்த பாக்கியம் உனக்கு இல்லாம போயிடுச்சு. உம்மருமவ எங்கிட்டிருந்து வீட்ல தங்கி உனக்கு வேலை பார்த்து கொடுக்க, அவ தான் வெளியில வேலைக்கு போறேன்னு ஒத்த கல்லுல நிக்காளே.. நீயாவது தேவாகிட்ட சொல்லி அவள வேலைக்கு அனுப்ப விடாம பண்ணலாம்ல" என்றார் அத்தனை அன்பாய்.
தன் மாமியார் ஏதோ தன் மேல் அக்கறையில் கூறுகிறார் என்று எண்ணிய வள்ளிக்கு, அவரின் கடைசி வாக்கியத்தில் தான் அவரின் எண்ணம் புரிந்தது.
"நான் சொல்லுதேன்னு என்னைய தப்பா நினைச்சுக்காதத்தா வள்ளி, ஆரம்பத்துலயே அடக்கி வைக்கணும். மாமியார்னா சும்மா சுலவு கிடையாது. மருமகள நம்ம விரல் நுனியில் ஆட்டுவிக்கணும். அதேன் மாமியாருக்கு அழகு. நீ இப்படி எல்லாத்துக்கும் வாய மூடிக்கிட்டு இருந்தா, உந்தலையில நல்லா மிளகா அரைச்சிட்டு போயிடுவா உம்மருமவ" என்று அவர் கூறவும்.
அவருக்குப் பின்னே "ம்கூம்" என்று யாரோ தன் குரலைக் கனைத்துக் காட்டும் சத்தம் கேட்டது.