தன்னை பார்த்து ஏதோ கிசுகிசு பேசுகிறார்கள் என்று புரிந்த வெண்ணிலாவிற்கு என்ன பேசுகிறார்கள் எதற்காக தன்னை நிற்கவைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அப்போதும் உரைக்கவில்லை..
வங்கி வேலையில் இருப்பது மொத்தம் பத்து பேர் தான் அந்த பத்து பேரும் வேலை செய்யாமல் ஏதோ சலசலத்துக் கொண்டே இருக்க அது என்னவென்று எட்டிப் பார்த்த நித்திக்கிற்கு வெண்ணிலா நின்ற கோலம் புரிய மானசிகமாக தலையில் தட்டிக் கொண்டான்..
"சரியான சொதப்பல் கேசு."
என்றவன் தன் அறை விட்டு வெளியே வருவதற்குள் அனைவரும் வெண்ணிலவை சுற்றி நின்று தாலியை தொட்டு கேட்பதும் நெற்றியில் இருக்கும் குங்குமத்தை சுட்டிக்காட்டுவதும் என்று அனைவரும் ஒவ்வொரு கேள்வி கேட்டு நிற்க வெண்ணிலா என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை..
"என்ன இங்க சத்தம்!!" என்று படு ராயலாக வந்த நித்திக் கேட்டான்..
"சார்!! வெண்ணிலாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சாம் சார்.."
"சோ??"
"இல்ல இந்த நிலாவை தொட்டது யாருன்னு கேட்டுட்டு இருக்கோம் சார்." என்று ஒருத்தி இளித்து வைக்க, புருவத்தை தேய்த்த நித்திக்,
"அது நான் தான்!" ஆடாமல் அசையாமல் கூறினான்.
"சார்ர்ர்ர்.." அனைவரும் வாயை பிளந்து பார்க்க,
"வாட்ட்.. உங்க கேள்விக்கு பதில் கிடச்சுடுச்சுல.. கோ அண்ட் சிட்.. வேல நேரத்துல பர்சனல் பேசிகிட்டு.."
என்றவன் தாங்கி தாங்கி தன் அறைக்கு செல்ல, அப்போது தான் கவனித்தாள் நித்திக் காலை.. எதற்காகவோ ஷூவை கழட்டியவன் அதை அணியாதே இங்கு வந்திருந்தான்..
தன் சீட்டிற்கு சென்றவன் காலை பிடித்துக்கொண்டு அமர அவன் முக பாவனையில் கணவனின் வலியை புரிந்து கொண்டவள் ஏதோ ஒரு கோப்பை எடுத்துக்கொண்டு உள்ளே ஓடினாள்.
"சார்!!"
"ப்ச்!!" சலித்தான் மனைவி குரலில்,
"என்னாச்சு??"
"எல்லாம் உன்னால தான்.. கேள்வி கேட்டா பதில் சொல்லத் தெரியாதா? பேந்த பேந்த முழிச்சிட்டு இருக்க விட்டா அழுதுடுவேன்ற மாதிரி நிக்குற, அதனாலதான் அவசரத்துல அப்படியே ஓடி வந்துட்டேன்.. இப்போ கால் நோகுது."
'எனக்காகவா வந்தான்.. நான் கலங்கி நிற்பதை காண முடியாமலா வந்தான்..' வெண்ணிலா மனதுக்குள் நித்திக் மேல் காதல் ஊற்று கட்டுக்கடங்காமல் ஊற ஓடி சென்று அவன் பாதம் பிடித்தாள்..
"அச்சோ!! சாரிங்க.. ரொம்ப வலிக்குதா.." அமர்ந்து அவன் காலை இவள் ஆராய்ச்சி செய்ய அவன் கைகளோ தானாக கண்ணாடி கதவின் ஸ்க்றீன் பொத்தானை அழுத்தியது..
தன் காலை தொட்டு தடவி ஊதி அமுக்கிவிடும் வெண்ணிலாவை தான் நித்திக் கண்கள் மேயிந்தது மெய்மறந்து.. நெற்றி வகுட்டு குங்குமம் வேர்வையில் குளித்து சற்று ஒழுகி, இரு தோளிலும் வழியும் பூ சரம், வட்ட வடிவ முகம் தாண்டியவன் பார்வையில் பருவ மலைக்கு நடுவே போகும் ஆற்று பாளத்தில் பதுங்கிருக்கும் இவன் கட்டிய தாலி உரிமையாக உரச நித்திக் கண்கள் தறிகெட்டு போனது..
அவள் நீவலில் வலி எடுக்க, "மெதுவா டி!!" என்று இவன் குனிய அவள் அண்ணாந்து இவன் முகம் நோக்க கண்கள் இரண்டும் புது பாடம் படித்தது..
அவன் எதுவோ சொல்ல குனிந்து அவள் உதட்டருக்கே நெருங்க, இவளோ தன் முகவாய் கட்டையை மேலே உயர்த்த அவனோ, "வலி பாதத்துல தான்!" உதட்டில் உறைந்த சிரிப்புடன் கண்ணில் குறும்போடு நித்திக் கண்ணாலே அவள் கை இருக்குமிடம் காட்ட சிவந்துப்போனவள் எழுந்து வெளியே ஓடியே விட்டாள்..
கன்னம் சிவக்க ஓடிவரும் வெண்ணிலாவையும், கண்ணாடி தடுப்பணை திறந்து அவளை ரசிக்கும் நித்திக்கையும் தான் வங்கி மொத்தமும் பார்த்தது..
"பாத்தியாடி நம்ம மேனேஜர் லவ்ஸ?? நம்ம பர்சனல் பேச கூடாதாம் ஆனா இவர் மட்டும் பொண்டாட்டியோட ரொமான்ஸ் பண்ணுவாராம்.."
என்று ஒருத்தி சடைக்க, "அதானே!! நம்ம அந்நியன் மேனேஜர் சார்குள்ள இப்புடி ஒரு ரெமோ இருக்குறது தெரியாம போச்சே டி.."
இவர்களை பற்றி ஆளாளுக்கு ஒன்று பேச, ஆனால் இதுங்களோ புதிதாக பூத்த உணர்வில் கம்ப்யூட்டர் கீபோர்டை தன் இணைகளின் விரல்களாக தொட்டு தடவிக்கொண்டு இருந்தார்கள்..
மாலை வீடு திரும்பும் நேரம் இருவரும் ஒன்றாக தான் கிளம்பினார்கள் ஆனால் வெண்ணிலா வண்டி சிக்னல் தாண்டி வரவில்லை கூடவே இருக்கும் இவனுக்கு தெரியாமல் போகுமா?? அவள் எங்கே போயிருப்பாள் என்று..
நித்திக் தன் வண்டியை யூடர்ன் எடுத்து சிக்னல் பக்கம் இருக்கும் காபி ஷாப்பில் நிறுத்த அங்கே வெண்ணிலா தனியாக ஆற அமர காபியை உறிஞ்சுக்கொண்டு இருந்தாள்..
வெண்ணிலாவின் பக்கவாட்டில் அமர்ந்திருந்த இரு தடியர்கள் பேசும் பேச்சு காபியை ரசித்து குடிக்கும் வெண்ணிலாவுக்கு கேட்டதோ இல்லையோ பின்னாடி நின்று இருந்த நித்திகிற்கு நன்றாக கேட்டது..
"மச்சி பிகர் சூப்பரா சும்மா கும்முனு இருக்கே.. ட்ரை பண்ணி பார்ப்போமாடா?? "
" டேய் கழுத்துல பாருடா மஞ்ச கயிறு இருக்கு.. எவனோ ஆல்ரெடி ட்ரை பண்ணிட்டான் போலவே!!"
"அழகா இருக்கிற பிகர எவன்டா விட்டு வைக்கிறான் அதுக்காக நம்ம சும்மா இருக்க முடியுமா?? வா பிட்டு போட்டு பாப்போம் மாட்டுச்சுன்னா நமக்கு லக்கு" என்றவர்கள் எழுந்து வெண்ணிலா அருகே சென்று அவளை கூப்பிட, திருப்பியவள் வெகு அருகே இருந்த நித்திக்கை கண்டு, "ஹே வாங்க வாங்க!!"
என்று சிரித்துவிட்டு அருகில் இருந்த மற்ற இருவரை கேள்வியாக பார்க்க, "மெனு கார்ட் மேடம்!!" என்று அந்த தடியர்கள் சப்தமே இல்லாமல் டேபிளில் இருந்த கார்டை தூக்கிக்கொண்டு வேறு டேபிலுக்கு மாறி உட்கார்ந்தார்கள்..
"இங்க என்ன பண்ற??"
"காபி ஷாப்ல என்ன பண்ணுவாங்க காபி குடிக்க வந்தேன் காலையிலிருந்து செம டென்ஷன் சிக்னலை தாண்டி போகும்போது இந்த டிகிரி காபி வாசம் அப்புடியே என்ன இழுத்து இங்க கூட்டிட்டு வந்துடுச்சு!!" என்றவள் மறு மிடரு குடிக்க, அப்படி இந்த காப்பில என்ன தான் இருக்கு என்று குடித்து பார்க்க ஆவல் வந்தது..
"நாளையிலிருந்து நீ என்கூட என் வண்டியில வந்துரு. "
"ஏன்??"
" என்ன ஏன்! ஒரே ஆஃபீஸ், ஒரே வீடு ஒரே வண்டில வந்தா என்ன தப்பு?? "
"நான் தப்புன்னு சொன்னேனா?? என்ன திடீர்னு தான் கேட்டேன்."
"அது.. வாடகை கரண்ட் பில் எல்லாமே ஷேரிங் பண்ணிக்கிறோம்ல அதனால பெட்ரோல் காசும் ஷேரிங் பண்ணிக்கலாம் உனக்கு தனியா எனக்கு தனியா எதுக்கு??"
"ஓகே தான்.."
தன் கண்கள் ஏனோ இன்று அளவுக்கு அதிகமாக வெண்ணிலாவை பார்ப்பது போல அவனுக்கே தோன்ற முயன்று சாருவை தன் மனதில் பதிய வைக்க முயற்சி செய்தான்..
வீட்டிற்குள் வந்ததுமே யசோதா தான் இருவரையும் வரவேற்றாள்..
"அத்த!!" புன்னகை முகமாக தன் அத்தையை கட்டிக்கொண்டவள் ஏதோ பேசிக்கொண்டே இருவருமாக உள்ளே செல்ல நித்திக் என்ற ஒருத்தனை இருவருமே மறந்து போனார்கள்..
போகும் இருவர் முதுகையும் முறைத்துக்கொண்டே உள்ள போன நித்திக் அடுப்படி சென்று தன் லஞ்ச் பேகை அன்னையிடம் குடுத்தவன், "இவ எங்க போனா??" என்று தேடிக்கொண்டே அறையை தள்ள அது திறக்கவில்லை.. வீட்டின் ஓனர் கையில் சாவியை கொடுக்கும் பொழுது இந்த அறையின் கதவு கொஞ்சம் மக்கர் பண்ணும் அழுத்தி திறந்தால் கதவு திறந்து கொள்ளும் என்று கூறிய ஞாபகம் வர வேகமாக கதவை அழுத்தி தள்ளினான்..
திறந்த கதவின் வழியே நித்திக் கண்ட காட்சியில் கண்கள் உறைய அப்படியே நின்றுவிட்டான்.. வெண்ணிலா ஆடை மாற்றுவதற்காக குர்த்தியை கழட்டிவிட்டு பாண்ட்டுடன் தலை வழியே நைட்டியை மாட்டிக்கொண்டு நிற்க மெழுகு பாறையில் கருப்பு பட்டை தெரிய நிற்கும் மனைவியை பார்த்தவன் கண்கள் அப்படியே அங்கேயே நிலை குத்தி நின்றது..
கதவு திறந்த சத்தத்தில் திரும்பியவள் அங்கே நித்திகை கண்டு, "ஆஆஆஆ!" என்று அலற இவனோ ஓடி சென்று அவள் வாயை பொத்தினான்.. அதற்குள்ளாகவே சத்தம் கேட்டு, "என்னாச்சு?" என்று யசோதா ஓடி வர நல்ல வேலையாக வெண்ணிலா ஆடையை முழுதாக போட்டு நின்று இருந்தாள்..
"என்னாச்சு நிலா?? ஏன் கத்துன??"
"அது கரப்பான்பூச்சி அத்த??"
"அதுக்கு போயா கத்துன??"
"இல்ல!! நான் எதிர்பார்க்காம ரூமுக்குள்ள வந்துடுச்சா அதான் பயந்துட்டேன்."
" பின்ன கரப்பான் பூச்சி உன்கிட்ட பர்மிஷன் கேட்டுட்டா ரூமுக்கு வரும் நல்ல பொண்ணு போ. "
என்றவள் சிரித்துக்கொண்டே வெளிய செல்ல இங்கோ நித்திக் இடுப்பில் கை வைத்து முறைத்துக்கொண்டு நின்றான்..
"என்ன??"
"என்ன பாத்தா உனக்கு கரப்பான் பூச்சி மாதிரியா தெரியுது?? "
"ப்ச்!! அத்தை கிட்ட வேற என்ன சொல்றது கதவ தட்டிட்டு வர மாட்டிங்களா பயந்து போயிட்டேன் தெரியுமா??"
"எனக்கு நீ ரூமுக்குள்ள இருப்பங்கறது நினைப்பு இல்ல அதுலயும் இப்படி அரைகுறையாக இருப்பன்னு நான் என்ன கனவாக கண்டேன்.. நான் தான் கண்டத பார்த்து பயந்து போயி இருக்கேன்!!" என்றவன் கடைசி வார்த்தையை மட்டும் முணுமுணுப்பாக கூறிவிட்டு குளியறைக்குள் நுழைந்து கொண்டான்..
"அவரு என்னத்த பார்த்து பயந்துருப்பாரு??" யோசித்தவள் தான் நின்று ஆடை மாற்றியது ஆளுயற கண்ணாடி முன்பு என்பதை மறந்து போனாள்..
இரவு உணவை முடித்துக்கொண்டு அம்மாவுடன் கதை பேச நித்திக் செல்ல இவளோ தனியாக அறைக்குள் வந்தவள் யோசனையில் ஆழ்ந்தாள்..
"மணி பத்து ஆச்சு தொல்ல தூங்கிருப்பா!"
தனக்குள் பேசிக்கொண்டே நித்திக் உள்ளே வர, கையில் சார்ட் வைத்துக்கொண்டு கத்தி பட விஜய் போல ஏதோ பிளான் போட்டுக்கொண்டு இருந்தாள்..
"இன்னும் தூங்காம என்ன பண்ற?? "
"என்ன நீங்க கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம சாப்பிடறது தூங்குறத பத்தி மட்டுமே பேசுறீங்க நம்ம எதுக்காக இங்க வந்து இருக்கோம்?? "
" எதுக்காக?? "
" என்னைய உங்க அம்மா வெறுத்து சாருவ கல்யாணம் பண்ணி இருந்தா என் பையன் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்னு உச்சு கொட்ட வைக்கிறதுதான நம்மளோட பிளான்.."
அவனுக்கோ சாரு என்ற ஒருத்தி இருப்பதே அப்போது தான் நினைவில் வந்தாள்..
"என்ன பிளான்??" ஏனோ அவன் பேச்சில் பிடிப்பு இல்லை..
"இதோ!" சார்ட் முழுக்க ஏதேதோ பாயிண்ட் பாயிண்ட்டாக எழுதி வைத்திருந்தாள்..
" எனக்கு ஒண்ணுமே புரியல ஏற்கனவே தலை வலிக்குது இத நீயே வச்சுக்கோ அப்படியே சொல்லு!"
கடுப்பாக தூக்கி எரிந்தான் சார்ட்டை..
"ப்ச்!! பாயிண்ட் நம்பர் ஒன், சமைக்க தெரியாதுன்னு சொல்லுறது, சமைக்க கத்துக்காம உக்காந்தே சாப்புடறது. டூ, மரியாதை குடுக்காம இருக்குறது, எது சொன்னாலும் எதிர்த்து பேசுறது. த்ரீ, அவங்களுக்கு பிடிக்காதத தெரிஞ்சுக்கிட்டு வேணுனே அத செய்யுறது.. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் உங்க கூட எதுக்கு எடுத்தாலும் சண்ட போடுறது உங்கள டென்ஷன் பண்ணுறது.. இதெல்லாம் பண்ணாலே எந்த மாமியாரா இருந்தாலும் மருமகளை துரத்தி விட்ருவாங்க.."
என்றவள் உதடு சிரிக்க, கண்கள் கலங்கி இருந்தது..
தொடரும்...