பாகம் 26
பூக்களின் வாசம் அந்த தாவரவியல் பூங்காவை நிறைத்திருந்தது. அங்கங்கே இருந்த விளையாட்டு இடங்களில் சிறார்கள், துள்ளியும் குதித்தும் விளையாடிக்கொண்டிருந்தனர்.
பெரியவர்கள் கூட்டம் கூட்டமாக இருந்து கதைத்துக்கொண்டிருந்தனர். ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள் காற்றில் இலைகளை அசைத்து, தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தின,
மரங்களில் தாவி ஓடிய அணில்கள், தமக்கிடையே விளையாடிக்கொண்டிருந்தன. சிறு பறவைகளின் கீச்சொலி இதமாக ஒலித்துக்கொண்டிருந்தது.
ஏதோ அவசரமாகக் கதைக்க வேண்டும் என்று, பூவிழி கூப்பிட்டதும் வேலை முடிய அப்படியே பூங்காவிற்கு வந்திருந்தாள் பருதி.
பருதி வரும்போதே பூவிழி வந்து, காத்திருப்பதைக் கண்டாள், இவளைக் கண்டதும் சிறு தலை அசைப்பு மட்டும்தான் வந்தது பூவிழியிடம் இருந்து. வழமையான அவளுடைய புன்னகையைக் காணவில்லை.
கல்லினால் ஆன, நீண்ட இருக்கையில் தனக்குச் சற்றுத்தள்ளி இருந்த பூவிழியை, இமைக்காமல் பார்த்தாள் பருதி.
பூவிழி இலக்கற்று எங்கோ வெறித்துக்கொண்டிருந்தாள்.
கால்களில் ஒரு நடுக்கம் தென்பட்டது, கை விரல்களை ஒன்றோடு ஒன்று கோர்த்தபடி, பார்த்துக்கொண்டிருந்தாள்.
கைகளின் இறுக்கத்தில் பூவிழியின் மனதில் ஏதோ பெரும் பாரம் அழுத்திக்கொண்டிருப்பது புரிந்தது பருதிக்கு.
கண் இமைகள் சிவந்து பருத்திருந்தன.
விழிகள் தடித்து முகம் சற்று உப்பியிருந்தது.
அழுதிருக்கிறாள் போல....
~அப்படி என்ன நடந்தது இவளுக்கு...| என்ற கேள்வி பருதியின் மனதில் சுழன்று ஓடியது.
பேசாமலே இருந்தவளை, தன் கைகளால் தட்டிய பருதி,
~என்னடி, ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய், ஏதாவது பிரச்சினையா?| என்றாள்.
~ம்...| தலையை ஆம் என்பது போல ஆட்டினாள் பூவிழி.
~என்னது, என்ன பிரச்சினை, சொன்னால்தானே தெரியும், ஏன் முகம் இவ்வளவு வாடி இருக்கிறது, அழுதியா?|
பருதி கேட்டதும்,
~பருதி..உனக்கு தெரியும்தானே, நான் பொற்செல்வனை எவ்வளவு காதலிச்சன் என்று, அவரின்ரை இடத்திலை என்னாலை வேற யாரையும் வைச்சுப்பார்க்கவே முடியேல்லை...அவர் என்னோடை இல்லை உண்டாலும் கடந்துபோன அந்த நினைவுகளோடையே நான் வாழுறன்...
அவர் சந்;தோசமா வாழட்டும், ஆனால் என்னாலை இன்னொரு வாழ்க்கையைப் பற்றி யோசிக்கவே...| விக்கி வந்த அழுகையை அடக்கப்போராடியவளாக தன்து பேச்சை நிறுத்தினாள்.
~ஏய்..என்னடி சொல்லுறாய், அவர் கலியாணம் கட்டி நல்ல சந்தோசமாகத்தானே வாழுறார், நீ காலம் பூராகவும் இப்பிடியே கன்னியாக வாழப்போறியே?|
~பருதி, என்னாலை..நினைச்சுப் பார்க்கவே முடியேல்லை...நீயும் அப்பிடிச் சொல்லாதை...|
~சரி..விபரமாகச் சொல்லு..என்ன பிரச்சினை?|
~அது..அது... பருதி, அங்க, குருந்தம் போதை மறுவாழ்வு மையத்திலை இருக்கிறவர் பத்மினி அம்மான்ரை மகன் தானே,|
~ஆர்...பரிபூரணனோ...?|
தலையை ஆட்டினாள் பூவிழி,
தோழியை நன்றாகப் பார்த்தாள் பருதி.
~நீ இவ்வளவு நாளும் சொல்லவே இல்லை...அது ஏன்| என்கிற கேள்வி அநதப் பார்வையில் தங்கிநின்றது.
~அவையளின்ரை அனுமதி இல்லாமல் நான் எப்பிடிச் சொல்லுறது, அதுதான் சொல்லேல்லை...| பூவிழி தானே தொடர்ந்தாள்.
~சரி...இப்ப ஏன் சொல்லுறாய்?| என்றாள் பருதி. அவளுக்குப் பூவிழியைப்பற்றி நன்றாகவே தெரியும், தேவையற்ற விடயங்களை ஒருபோதும் சொல்லவே மாட்டாள்.
~பருதி, பத்மினியம்மா, பரிபூரணனைப் பார்க்க, அங்க போனவா, அவருக்கு கலியாணம் செய்து வைப்பம் எண்டு, தன்ரை மருமகள் இசையைச் செய்ய எண்டு அவரிட்டக் கேட்டவாவாம்,
பருதியின் முகம் சற்றே ஒளி குன்றியதை பூவிழி கவனிக்கவில்லை.
~ம்ம்...| என்றாள் பருதி.
அதுக்கு அவர் சம்மதிக்கவில்லையாம்,
ஆசுவாசமான ஒரு புன்னகையுடன் நிமிர்ந்தாள் பருதி.
~ஏனாம்?|
~இசைக்கும் அவருக்கும் பத்து வயசுக்கு மேல, வித்தியாசம் வரும்தானே, அதைச்சொல்லி, அவர் மறுத்திட்டாராம், இவ்வளவு காலமும் எப்படியோ வாழ்ந்தவர், இப்ப, மாறினதோடை, கலியாணத்துக்கும் சம்மதம் சொன்னதிலை பத்மினியம்மாவுக்கு நிறையச் சந்தோசம், அதுதான்...|
~என்ன அதுதான்..?| என்ற பருதிக்கு,
~அவருக்கு மனைவியா வாற பெண், அவரைப் புரிஞ்சுகொண்டு, அவரைப்பற்றி முழுமையாகத் தெரிஞ்ச பெண்ணாக இருக்கவேண்டும் என்பது ஒரு அம்மாவாக, பத்மினியம்மாவின் எதிர்பார்ப்பு...|
~அது சரிதானே...அதுக்கும்...நீ..கவலைப்படுறதுக்கும்...| ஆரம்பித்த பருதியின் விழிகள் சற்றே விரிந்தபடி அப்படியே நின்றன.
~உன்னை, பரிபூரணனுக்குத் திருமணம் செய்துவைக்கவென்று கேட்டவாவா?|
தலையை நேராக ஆட்டினாள் பூவிழி.
சற்று நேரம் யோசித்த பருதி, சட்டென்று,
~அதுவும் சரிதானே பூவிழி, உனக்கும் பரிபூரணனை நல்லாத்தெரியும், அவருக்கும் உன்னைத் தெரியும், அதனாலை நீங்கள் ரெண்டுபெரும் கலியாணம் செய்யிறது நல்லது எண்டு தான் எனக்கும் படுது|
~விசர்க்கதை கதைக்காதை பருதி, எனக்கு கலியாணமே வேண்டாம், என்னாலை இன்னொரு கலியாணம் செய்ய ஏலாது,| என்ற பூவிழிக்கு,
~உனக்கென்னடி ஏற்கனவே கலியாணம் நடந்த மாதிரிக்கதைக்கிறாய், அவர்தான் வேற கலியாணம் கட்டிப்போட்டார் எல்லே, நீ மட்டும் காலம் பூராவும் அவர் தந்த கறுப்புநூலை வைச்சுக்கொண்டு கன்னியாவே வாழப்போறியே? இந்தக்காலத்திலை எவ்வளவு நாளைக்கு தனிய வாழ ஏலும், எப்பிடியெண்டாலும் ஒரு துணை தேவை, நல்லா யோசிச்சுப்பார் பூவிழி| என்றாள் பருதி.
~பருதி, நான் என்ரை முடிவிலை உறுதியா இருக்கிறன்| என்றவளை எதுவும் சொல்லமுடியாமல் பார்த்தாள் பருதி.
~எனக்கெண்டால் உன்ரை முடிவு லூசுத்தனமாகத்தான் தெரியுது, வாழ்க்கை எவ்வளவு பெரிய வாய்ப்பை உனக்குத் தந்திருக்கிறது, அதை ஏன் இப்படி...காலாலை எட்டி உதைக்கிறாயடி, உன்ரை காதலை நான் மதிக்கிறன், அதுக்காக....ஒரு நண்பியா, நீ இப்பிடியே தனிய வாழுறதையும் என்னாலை அனுமதிக்கமுடியாது, யோசிச்சுப்பார் பூவிழி...| என்றாள்.
~நான் உனக்கு எப்பிடிச் சொல்லுறது பருதி, இனி என்னாலை அப்படி ஒரு உறவை ஏற்கவே முடியாது, அதுதான்....ஒரு தோழியா, நீ எவ்வளவு ஆதங்கப்படுறாய் எண்டு எனக்குத்தெரியும், ஆனால் அதுக்காக, என்ரை மனம் விரும்பாத ஒரு விசயத்தை என்னாலை எப்பிடிச் செய்ய ஏலும், கடைசி வரைக்கும் அது என்னாலை முடியவே முடியாது| திட்டமாகச் சொன்ன பூவிழியை இயலாமையுடன் பார்த்தாள் பருதி.
~பருதி... நான் இன்னுமொரு விசயத்தையும் உன்னட்டைச் சொல்லவேணும்,|
~என்ன?| என்பது போல தலையை உயர்த்தி தோழியைப் பார்த்தாள் பருதி.
பத்மினியம்மா, பரிபூரணன் ரெண்டு பேரும் பரமானந்தம் ஐயாவின்ரை முதல் மனைவி, பிள்ளை தான்...
சிறு இடியைப் போல தன் செவியில் கேட்ட அந்த விசயத்தை பருதியால் நம்பவே முடியவில்லை...
பரிபூரணன் பரமானந்தம் ஐயாவின் மகனா, பத்மினியம்மா அவருடைய மனைவியா....
~பூவிழி..நீ என்ன சொல்லுறாய், நீ சொல்லுறது உண்மையா? அவர் எப்படி...எங்க..?|
~பரமானந்தம் அப்பா, ஆரம்பத்திலை மலைநாட்டுப் பள்ளிக்கூடம் ஒன்றிலைதானே வாத்தியாராக வேலை செய்தவர், பதுளை எஸ்ரேட் பக்கம், அப்பதான் பத்மினியம்மாவைக் காதலிச்சு, ஒரு வகையிலை கலியாணமும் செய்திட்டார்.
அம்மா, பக்கத்திலை, லயன் குடியிருப்பில் இருந்தவாவாம், அதோடை, மாலை நேரத்திலை வந்து சமைச்சும் குடுக்கிறவாவாம், சம்பளம் வாங்கிக்கொண்டு,
ஒரு கட்டத்திலை ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பிட்டினம், அப்ப பெரியளவிலை, பதிவுத்திருமணம் கூட இல்லைத்தானே, நம்பிக்கையிலைதான் வாழ்க்கை, அப்பிடி இவையின்ரை வாழ்க்கையும் ஆரம்பிச்சிருக்குது,....|
~பிறகு பரமானந்தம் அப்பா..ஏமாத்திப்போட்டாரே?| வெடுக்கென்று கேட்டாள் பருதி.
~சீச்சீ..அப்பிடி இல்லையடி, அவர், இஞ்சை வந்து அவிரின்ரை வீட்டை கதைச்சிட்டு, பத்மினியம்மாவைக் கூட்டிக்கொண்டு போகத்தான் வந்திருக்கிறார்...அதுக்கிடையிலை விதி சதி செய்துபோட்டுது|
~ஏன்..என்ன நடந்தது பூவிழி?|
~அப்பா இஞ்சை வந்த நேரத்திலை, பெரும் மழை கொட்டி, மண்சரிவு வந்திட்டுது, அவையின்ரை இடத்திலை இருந்த சனம் அரைவாசியும் வேற இடங்களுக்குப் போட்டினமாம், அதோடை சில பேரை வெள்ளம் அடிச்சுக்கொண்டு போட்டுது,
பரமானந்தம் அப்பா, இஞ்சை வந்திட்டு, அவரின்ரை வீட்டிலை விசயத்தைச் சொல்ல, அவையள் சம்மதிக்கவே இல்லையாம், அவவைக் கலியாணம் செய்தால் வீட்ட வரக்கூடாது எண்டு சொல்லி, அனுப்பிப்போட்டினமாம்,
அப்பா..திரும்பவும் அங்க, பதுளைக்குப் போயிருக்கிறார், ஆனால் அங்க, பத்மினியம்மாவின்ரை குடும்பம் இல்லையாம், தாயும் தகப்பனும் வெள்ளத்தோடை போக, பத்மினியம்மாவும் இறந்திட்டதாக யாரோ சொல்லிப்போட்டினம், அதோடை அப்பாவுக்கு இடமாற்றமும் வந்திட்டுதாம்,
அப்பா..அப்பிடியே இஞ்சை வந்து, ஒரு வருசமா, கவலையோடைதான் இருந்திருக்கிறார், பிறகுதான், வண்ணமதியின்ரை அம்மாவைச் செய்து வைச்சதாம், அதுவும் அவா, முறைப்பொம்பிளையாம்,
அப்பாவும் தாயின்ரை தகப்பன்ரை சொல்லை மீற முடியாமல் இவவைக் கலியாணம் செய்திட்டார், அந்த நேரத்திலை, தொடர்பு வசதி ஒண்டும் இல்லைத்தானே,
பத்மினியம்மாவும் தம்பியாரும் தங்கட சொந்த பந்தங்களோடை வவுனியா பக்கம் வந்து இருந்திட்டினம், பாவம் அப்பா...அவ, இறந்திட்டா எண்டு நினைச்சு, இஞ்சை ஒரு துயரமான இல்லறத்தை வாழ்ந்துகொண்டு இருந்திருக்கிறார்|
~உனக்கு.....இதெல்லாம்....?|
~எனக்கு எப்பிடித்தெரியும் எண்டுதானே?|
தலையை ஆட்டினாள் பருதி.
~முதல் முதலா அப்பா எங்கட வைத்தியசாலைக்கு வந்த போது, நான் போய் இருந்து கதைக்கிறனான் தானே, அப்பதான் எனனட்டை எல்லா விசயமும் சொன்னவர்,
அதோடை, அவரோடை அங்க படிப்பிச்ச ஒரு வாத்தியார், கொஞ்சக்காலத்துக்கு முன்; பத்மினியம்மாவை முதியோர் காப்பகம் ஒன்றிலை சந்திச்சிருக்கிறார், அவர்தான் அப்பாவுக்கு விசயத்தைச் சொன்னவராம், அதாலைதான் அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்திட்டுது,
பிறகு, நான்தான், அந்த முதியோர் விடுதிக்குப் போய், பத்மினியம்மாவைச் சந்தித்து எல்லா விபரமும் சொல்லி, கூட்டிக்கொண்டு வந்தனான், ஆனால் அவா, அப்பாவின்ரை கௌரவத்துக்கு தன்னாலை எந்தப் பாதிப்பும் வராது எண்டு சொல்லிப்போட்டா...
அதுவும் இல்லாமல் இப்ப வரைக்கும் கண்ணியமாகவேதான் அப்பாவோடை பழகுறவா, எனக்கு அவவை நினைச்சால் பெருமை தான்,
பரமானந்தம் அப்பா கேட்துக்காக போய் அம்மாவைப் பார்த்து, கதைச்சு கூட்டிக்கொண்டு வந்து, பிறகு பரிபூரணனைப் பார்த்து அவருக்கும் நிறைய எடுத்துச்செல்லி, இவ்வளவும் அவையளுக்காகச் செய்திட்டன்..ஆனால் இப்ப, பரமானந்தம் அப்பாவும் பத்மினியம்மாவும் கேக்கிறதை என்னாலை செய்யமுடியாது, உனக்கு விளங்குது தானே பருதி|
~எனக்கு நல்லா விளங்குது, நீ பரமானந்தம் அப்பாவுக்காகவோ பத்மினி அம்மாவுக்காகவோ இதையெல்லாம் செய்யேல்லை, உன்ரை மனசிலை சட்டம் போட்டு அமர்ந்து இருக்கிறாரே, அந்த மகா கனவான், பொற்செழியன் அவருக்காகத்தான் எல்லாம் செய்யிறாய்...|
பருதி..அவர் வேற வாழ்க்கை வாழுறார்...இனி இப்பிடி எல்லாம் சொல்லாதை...|
~ஐயோ..ஆ..ஊ..எண்டால் இதை ஒண்டைச் சொல்லிப்போடுவாய்....|
தோழியைப் பொய்யாகச் சலித்துக் கொண்டாள் பருதி.
~பருதி...எனக்காக ஒரு விசயம் செய்வியா....?|
~சொல்லு..|
~நீ ஏன் பரிபூரணனைக் கலியாணம் செய்யக்கூடாது, நான் சுயநலமா யோசிக்கிறன் எண்டு நினைச்சுப்போடாதை, என்ரை நிலைமை இப்பிடி இல்லை எண்டால் நான் செய்திருப்பன்,..அவர் நல்லவர், திறமைசாலி..படிச்சவர், ஏதோ கொஞ்சக்காலம் உந்தப்பழக்கத்தாலை தடுமாறிப்போட்டார்.. இப்ப பழையபடி மாறிட்டார்...உனக்கு விளங்குது தானே?|
~எனக்கு விளங்குது, அதுக்கு அவர் சம்மதிக்கவேணுமே..|
தன்னுடைய சம்மதத்தை மறைமுகமாகச் சொன்னாள் பருதி.
~நான் கதைக்கிறன்;...| என்ற பூவிழியிடம்,
~இல்லை பூவிழி, அவர் சம்மதிக்காட்டி நீ வற்புறுத்தக்கூடாது, அவரின்ரை விருப்பப்படி ஆரையெண்டாலும் செய்யட்டும்..அந்த உறுதி மொழியை மட்டும் எனக்கு தா...|
~சரி...நான் வற்புறுத்த மாட்டன்...| என்ற பூவிழியை இறுக அணைத்துக்கொண்ட பருதியின் விழிகளில் நீர்மணிகள் பளபளத்தன.