பாகம் 30
வெண்ணிறச் சுவர்களால் அடக்கப்பட்டு நின்றது அந்த வைத்தியசாலை. நேரம் நள்ளிவைத் தொட்டிருந்ததால், ஆளரவம் அற்று, அமைதியாக இருந்தது அந்த இடம்.
அதுதான், பூவிழி, பருதி இருவரும் வேலை செய்யும் இடமும். அங்குதான் வழமையாகவே பரமானந்தத்தாருக்கு மருத்துவ சிகிச்சை செய்யப்படுவது,
வைத்தியசாலை முதலாளியும் பரமானந்தரும் ஒரு வகையில் தூரத்து உறவினர்கள், அங்கே கொண்டுவர அதுவும் ஒரு காரணம்தான்,
வைத்தியசாலைக்கு வருமுன்னரே, பருதிக்கு பூவிழி விசயத்தை அலைபேசியில் சொல்லியிருந்தாள், இரவுக்கடமையில் இருந்த பருதி, தேவையான ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்ததால், மளமளவெனச் சிகிச்சையை ஆரம்பித்தனர் வைத்தியர்கள்.
பெரியளவில் பாதிப்பு இல்லை என்றும் ஏதோ ஒரு யோசனை அவருக்கு மனதை அழுத்துகிறது என்றும் அவருக்குச் சிகிச்சை அளித்த வைத்தியர் பூவிழியிடம் சொல்லிவிட்டுச் சென்றார்.
இரண்டு மணித்தியாலங்கள் கடந்த போது, பரமானந்தர் நன்றாக இருப்பதாகக் கூறி, ஒருவர் மட்டும் இருக்க, மற்றவர்கள் வீட்டக்குப் போகலாம் என்றதும்,
~நான் அப்பாவைப் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் எல்லாரும் வீட்ட போங்கோ| என்றாள் பூவிழி,
உடனே, முன்னால் வந்த இளஞ்செழியன்,
~இல்லை..நான் நிக்கிறன், நீங்கள் போங்கோ| என்று கூற,
~நானும் அப்பாவோட நிக்கப்போறன்...| இது வண்ணமதி.
~இளா, நான் சொல்லுறதைக் கேளுங்கோ, காரைக்கொண்டு நீங்கள் போங்கோ, அப்பாவுக்கு இப்ப நல்லாயிட்டுது தானே, இசையும் நாளைக்கு வேலைக்குப் போகவேணும், வண்ணமதிக்கும் பரீட்சை இருக்கு..| சொல்லி முடித்த பூவிழியிடம்,
~நீங்கள் தனியவோ,| என்ற இளஞ்செழியனுக்கு,
~எனக்கென்ன, நான் இஞ்ச வேலை செய்யிறனான்,| என்றாள்.
அதுதான் கேக்கிறன், நீங்கள் கடமைக்குப் போனால், அப்பா தனிய எல்லோ...
ஏன் பருதி...என்று தொடங்கியவள், தவிப்பும் இயலாமையுமாக நின்ற பத்மினியம்மாவைக் கண்டதும் உடனே, பேச்சை மாற்றினாள்,
~அது சரிதான் இளா, என்னோடை உதவிக்கு பத்மினியம்மாவும் நிக்கட்டும்..| என்றாள்.
பூவாக விரிந்தது பத்மினியம்மாவின் முகம்.
~ஓமண்ணா...அதுதான் நல்லது...| என்றாள் வண்ணமதி.
ஒருவாறாக மற்றவர்கள் புறப்பட, பத்மினியம்மாவும் பூவிழியும் பரமானந்தரின் அறைக்குள் சென்றனர்.
அவர் வாசலையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட பூவிழி மெல்ல பின்தங்கி வெளியே சென்றுவிட, பத்மினியம்மா கதவு திறந்து உள்ளே சென்றுவிட்டார்.
பூவிழி கூட வரவில்லை என்பதைக்கூட உணராதவராக, பரமானந்தரின் அருகில் சென்று,
~நான் நேற்று அப்பிடிச் சொன்னாதாலை நீங்கள் யோசிச்சிட்டியள் போல...என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோ...| என்றார். சற்றுத் தள்ளி நின்று.
~நீ ஏன் என்னட்டை மன்னிப்புக் கேக்கிறாய், நீ சொன்னதில்லை என்ன பிழை, அது அவனின்ரை முடிவுதானே, அவனுக்குச் சரி எண்டு பட்டதை அவன் செய்யப்போறான், இதிலை அவனிலையும் பிழை ஒண்டும் இல்லை, பிள்ளை சரியாத்தான் முடிவு எடுத்திருக்கிறான், அது அவனுடைய சுயமரியாதை சம்பந்தப்பட்ட விசயம்...
எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்...| என்றபடி பத்மினியம்மாவின் கரங்களைப் பிடிப்பதற்காக கையை நீட்டினார்.
திடுக்குற்று அருகில் பூவிழியைப் பார்த்த பத்மினியம்மா, அப்போதுதான், பூவழி வரவில்லை என்பதை உணர்ந்து வாசல் கதவைப் பார்த்தார்.
கதவு சாத்தியிருந்தது.
பூவிழியம்மா வரேல்லை..என்றவர், நீட்டிய கையை அப்படியே வைத்திருக்க,
இவரே தனது கையைக் கொடுத்தார்.
~பத்மினி.....|
ஆழ்ந்து ஒலித்தது பரமானந்தரின் குரல்.
~இப்பிடி ஒரு கணம் அமையாமலே போய்ச்சேந்திடுவனோ என்று நினைச்சன், இது போதும் எனக்கு....|
~ஏன் இப்பிடி எல்லாம் சொல்லுறியள், உங்களுக்கு ஒண்டும் நடக்காது, இனி இப்பிடிக் கதைக்காதேங்கோ...| கரகரத்த குரலோடும் கண்களில் நீரோடும் சொன்ன, பத்மினியம்மாவை சிறு முறுவலோடு பார்த்தவர்,
~நீ எனக்குச் செய்ய வேண்டியது, ஒன்றே ஒன்றுதான்...எனக்கு ஏதும் நடந்தால், என்ர மூத்த மகன் பரிபூரணன்தான் எனக்கு எல்லாம் செய்யவேணும், அவன் என்ர தலைமாட்டிலை நிக்கவேணும்...|
~என்ன கதைக்கிறியள், உங்களுக்கென்ன...?| பதறிய பத்மினியம்மாவிடம்,
~இதை மட்டும் நீ எனக்குச் செய்யவேணும்.. சொல்லிப் போட்டன்..இவ்வளவு காலமா, நீயும் உன்ரை உரிமையைப் பற்றி கேட்கவே இல்லை, நானும் அதைத் தரவில்லை...ஆனால்...கடைசி நேரத்திலை நீ என்ர மனைவி என்றும் பூரணன், என்ரை மகன் என்றும் உலகத்துக்குத் தெரியவேண்டும்...அதுக்கான எல்லா ஏற்பாடும் செய்துதான் வைச்சிருக்கிறன்...பூவிழியம்மா மற்றது எல்லாம் பாத்துக்கொள்ளுவா| என்றார்.
~அதெல்லாம் இருக்கட்டும்....நீங்கள் ஒன்றும் யோசிக்காதேங்கோ...பூரணன் வருவான்..நான்தான் யோசிக்காமல் சொல்லிப்போட்டன்...| என்ற பத்மினியம்மாவிடம்,
~அவனை நீ கஷ்ரப்படுத்தாதை, அவனுக்கு எது பிடிக்கிறதோ அப்பிடியே செய்யட்டும்..என்னை மாதிரி இல்லாமல், தனக்கு வேணும் எண்டு நினைக்கிறதை, தான் நினைக்கிறமாதிரி அனுபவிச்சு வாழட்டும்..| என்றார்.
~ஏன் இப்பிடி எல்லாம் கதைக்கிறியள், உண்மையிலை பூரணனுக்கு உங்களிலை கோபம் இல்லை, அவனுக்கு ஒரு தாழ்வுமனப்பான்மைதான்..இஞ்சை வாறதிலை ஒரு பயம்தான்..நான் கதைக்கிறன், அவன் கேப்பான்...|
~வேண்டாம்....வேண்டாம்...நீ அவனைக் கட்டாயப்படுத்தாத, அவனுக்கு அப்பிடி ஒரு எண்ணம் வர நான்தானே காரணம்...சத்தியமா, எனக்கு இப்பிடி ஒரு மகன் இருக்கிறான் என்று தெரிஞ்சிருந்தால் நான்...| சொல்லமுடியாது வார்த்தைகளை அப்படியே விட்டுவிட்டார்.
அவரது கைகளை இறுக்கமாகப் பிடித்த, பத்மினியம்மா, ~அதெல்லாம் கடந்து போன கதைகள்..இனி அதை நினைக்கவேண்டாம்...இப்ப இந்த நிமிசம் நாங்கள் ஒன்றாக இருக்கிறம்..அதுவே பெரிய விசயம்தானே...அதைச் சந்தோசமா நினைப்பம்...நீங்கள் ஒண்டும் யோசிக்காமல் இருங்கோ..| என்றார்.
இருவரும் சிறிது நேரம் கதைத்தபடி இருந்தனர், அதிக நேரம் பரமானந்தர் கதைத்துக்கொண்டு இருப்பது நல்லதில்லை என்பதை உணர்ந்த பூவிழி, கதவைத்திறந்து மெல்ல உள்ளே வந்தாள்.
~அப்பா..நீங்கள் படுங்கோ...வைத்தியர், தாதியர் வந்தால் எங்களையும் பேசுவினம், பொறுப்பில்லாமல் இருக்கிறம் என்று.| என்றுவிட்டு, நோயாளர்களுடன் தங்குபவர்களுக்காகப் போடப்பட்டிருந்த கட்டிலைக்காட்டி,
~பத்மினி அம்மா..நீங்களும் படுங்கோ...| என்றாள்.
பூவிழியம்மா...உனக்கு எல்லாம் தெரியும்தானே தங்கம், எனக்கு ஏதும் நடந்தால், என்ரை முதல் பிள்ளை, பரிபூரணன்தான், எனக்கு எல்லாம் செய்யவேணும்..என்ரை பிள்ளை, எப்பிடியாவது வரவேணும்..நீதான் என்ரை மனநிலையை பூரணனுக்குப் புரிய வைக்கவேணும் அம்மா...|
~ஓமப்பா..நான் அதெல்லாம் பாக்கிறன், உங்களுக்கு ஒண்டும் நடக்காது..அதைப்பற்றி நீங்கள் யோசிக்காதேங்கோ... பூரணன் நல்லவர், அவருக்கும் உங்களிலை பாசம் இருக்கு, அவர் கட்டாயம் வருவார்,|
~பூவிழியம்மா....என்ரை பிள்ளை உரிமையா என்னோட இருக்கமாட்டானே...அவனை வளர்க்கிற கடமையையும் நான் செய்யேல்லை, கொஞ்ச நாளைக்காவது அவன் என்னோடை வந்து இருந்து, கூடியிருந்து கதைச்சு, தன்ரை ஆசைகளை என்னட்டச் சொல்லி, நானும் என்ரை பிள்ளையை அரவணைச்சு, மகிழ்ந்தால்..எனக்கு ஆறுதலைத் தந்தால்...அது போதும்..
இதைப்பற்றி இந்தப் பிள்ளையளுக்கு எப்பிடிச் சொல்லுறது எண்டும் தெரியேல்லை...|
~அதொண்டும் நீங்கள் யோசிக்கவேண்டாம் அப்பா..நான் எப்பிடியாவது பூரணனை வீட்ட கூட்டிக்கொண்டு வருவன்..பரிபூரணன் உங்களோடை இருந்து சாப்பிட்டு சந்தோசமா இருப்பார்..நீங்கள் யோசிக்காமல் படுங்கோ...| என்றுவிட்டு,
~நீங்களும் படுங்கோ பத்மினியம்மா| என்றாள்.
~பூவிழி...நீயும் வாம்மா...| என்றார்.
~இல்லை அம்மா..நான் இருக்கிறன்...| பூவிழி சொல்ல,
~ஏன் அம்மாச்சி.....அப்பிடியெண்டால் நான் முழிச்சிருக்கிறன்..| என்றார் பத்மினியம்மா...
~இல்லை அம்மா..நீங்களும் பகல் எல்லாம் வேலை செய்து களைச்சிருப்பியள், நான் அப்பாவைப் பாக்கிறன்...நீங்களும் படுங்கோ...|
~எனக்கு ஒண்டும் இல்லை...நீங்கள் ரெண்டுபெரும் படுங்கோ| என்றார் பரமானந்தர்.
அவரது தெளிவான கதையில் இருவரும் அமைதியாகச் சென்று அருகருகே கட்டிலில் படுத்துக்கொண்டனர்.
தன்னைப் பார்த்தபடி படுத்த பூவிழியின் தலையை அன்பாக வருடிய பத்மினியம்மா...
~எங்களுக்கே நீ மருமகளா வந்திருக்கவேணும்..சரிவராமல் போட்டுது| என்றார்.
~அம்மா..மருமகளா வராட்டி என்ன... இப்ப உங்கள் ரெண்டு பேருக்கும் நான் மகளா இல்லையா..|என்று கேட்டாள்.
~என்னம்மா இப்பிடிக்கேட்கிறாய், அப்பிடி அமைய நாங்கள் குடுத்துவைச்சிருக்கவேணும்...எப்பவும் நீ எங்கட மகள்தான் தாய்..| என்றார் பத்மினியம்மா..
பூவிழியம்மா...அந்த வீட்டிலை வண்ணமதிக்கு என்ன உரிமையும் உறவும் இருக்கோ, அதைவிட உனக்கு கொஞ்சம் கூட இருக்கு, சரிதானே, நீ புரிஞ்சுகொள்ளம்மா...| என்றார் பரமானந்தர் மெல்ல.
பூவிழிக்கு உயிர் கசிந்தது. பொற்செழியனைப் பெற்றவரின் வாயில் இருந்த இப்படி ஒரு வார்த்தை கேட்பதை விட அவளுடைய வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்?
மனதிற்குள் மத்தாப்பூக்கள் சிதறுவது போல ஆனந்தமாக உணர்ந்தாள்.
அந்த நிறைவான மனநிலையோடு மூவருமே உறங்கிவிட்டனர்.