MMI 14
தன் அறையில் உறக்கம் கலைந்து எழுந்த தீரனிற்கு தங்களின் காதல் கனவு இப்படி பாதியில் கலைவதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..!
அந்த காதல் நிறைவடையாமல் தான் மறுபிறவி எடுத்து வந்துள்ளோம் என்பதை அவன் உணர்ந்தாலும், தங்கள் காதலைப் பிரித்தது யாரென்பதுத் தெரியாமல் அவனின் மனம் பிரித்தறிய முடியா உணர்வில் தத்தளித்தது...
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக முன்ஜென்மத்தில் தன்னை ஒரு காதல் மன்னனாகக் கண்டதை நினைக்கும்போது தேகத்தில் ஓடிய சிலிர்ப்பை என்ன செய்தும் அவனால் குறைக்க முடியவில்லை..!
அதிலும் குறிப்பாக அவளை தன் கைவளைவில் தாங்கியபடி மலைக்குகையில் அமர்ந்திருந்த காட்சியும், அவளின் பாதம் பிடித்து கொலுசு அணிவித்ததும் கண்களுக்குள்ளே தங்கிவிட்டாற் போல மறைய மறுத்தது...
"அவளுக்கு அந்த கொ..கொலுசு ரொம்ப அழகா இருந்துச்சுல..! ஆ..ஆனா இதே மாதிரி தானே.." என்று தொடங்கியவன் தடதடவென படிகளில் இறங்கி காலைநேர நடைப்பயிற்சியில் இருந்த தாய்க்கு முன்னால் சென்று மூச்சுவாங்க நின்றான்...
மகனின் வேகத்தில் திகைத்த கோகிலா, "என்ன கண்ணா? ஏன் இப்படி ஓடி வந்துருக்க?.." என்று பதற்றமாகக் கேட்க,
"ஹான்..! அ..அதும்மா நீங்க போன மாசம் நம்ம ஜூவல்லரி ஷாப்ல தங்க கொலுசு வாங்குனீங்களே, ஞாபகம் இருக்கா? நான் கூட உங்களுக்கு டிசைன் பண்ணி தந்தேன்ல..." அன்று நடந்ததை தனக்குத் தெரிந்தளவில் ஞாபகப்படுத்த,
"ஹான் இருக்கு கண்ணா..! நான் அதுக்கு பணம் தந்ததுக்கு நீ கூட வேணாம்னு சொன்னியே... ஆமா அதுக்கென்ன இப்போ?"
"அ..அது யாருக்கும்மா வாங்குனீங்க?.."
"அதப்பத்தி இப்போ சொல்லி என்னாகப் போகுது கண்ணா..!" என்றவர் மகன் முகத்தில் வந்துபோன உணர்வில் தன்னையறியாமல்,
"அ..அது நம்ம மதிக்காக வாங்குனது தம்பி..! நம்ம வீட்டுக்கு மருமகளா வரப்போறானு ஆசையா வாங்கிக் கொடுத்தேன்.. நீ தான் பிடிக்கலைனு சொல்லிட்டியே..!
க்ஹூம் இப்போ அதப்பத்தி பேசி என்னாகப்போகுது? மதி மருமகளா கிடைக்க அந்த பாமாக்கு தான் கொடுத்து வச்சுருக்கு போல.." என்று சலிப்பாக உரைத்தவர் அதிர்ந்து நின்றவனை கண்டுகொள்ளாமல் நடையைத் தொடர்ந்தார்...
கோகிலா சொல்லிச் சென்றதில் மற்றதை விடுத்து அந்த கொலுசில் நின்று மகேந்திரன் அபர்ஜித்தின் மனம் ஊஞ்சலாடியது..!
முதன்முதலில் அவளாகவே தன்னை ஆர்வமாகப் பார்த்தது, அவன் வடிவமைத்த கொலுசுகள் அவள் பாதத்தில் ஜதி சேர்ப்பது..!
இப்படி பல வழிகளில் அந்த பிரபஞ்சமே அவனுக்கு உதவி செய்ததை உணராமல் தன் காதலை உணர தாமதப்படுத்தி பெரும் தவறிழைத்ததை நினைக்கையில் எங்கேயாவது சென்று முட்டிக்கொள்ளலாமா என்ற ஆத்திரம் எழுந்தது..!
இவை மட்டும் தானா? இல்லை இன்னும் எத்தனை வழிகளைத் தவறவிட்டானோ? அது கடவுள் மட்டுமே அறிந்த ரகசியம்..!
மனதில் எழும் உணர்வுகளை உள்ளேயே போட்டு அடக்கி வைத்துப் பழகியவனுக்கு மதிவதனி வேண்டுமென்று தந்தையிடம் கேட்டதே ஒரு மாதிரியாக இருந்தது...
அதையே தாயிடமும் எப்படிக் கேட்பதெனத் தயங்கியவன், எதற்கும் முயன்றுப் பார்க்கலாம் என்ற முடிவோடு மீண்டும் அவரை நெருங்கி, "ம்மா ஒரு நிமிஷம்..!" என்றபடி அவரை நெருங்கியதில்,
மகனின் இந்த புது அவதாரத்தை விசித்திரமாகப் பார்த்துவிட்டு, "ம்ம் சொல்லு கண்ணா..!" என்றவருக்கு பத்து வார்த்தைக்கு ஒற்றை வார்த்தையில் பதிலளிக்கும் தீரனின் இந்த நீளமான பேச்சுக்கள் அதிசயமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது...
விவரமறியாத சிறுவயதில் தன்னோடு வளவளக்கும் மகனை இப்போது மீண்டும் கண்டதால் வந்த ஆனந்தம் அது..!
ஆனால் அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அவனில்லையே..!
"அ..அது..! இப்போ எனக்கு வதனியப் பிடிச்சிருக்கும்மா..! இத அப்பாகிட்ட சொன்னேன்... பட் அவங்க ஏத்துக்கல... உங்களால முடிஞ்சா நீங்க என்னோட ஆசைய நிறைவேத்தி வைங்கம்மா.." என்று நயமாக உரைக்க,
"உ..உண்மையாவா கண்ணா?" என்றவர் மகிழ்ச்சியில் திளைக்க,
"ஆமாம்மா..!"
மகனின் வலக்கரத்தை விரல் நடுங்கப் பற்றிய கோகிலா, "நான் அப்பாகிட்ட பேசுறேன் தம்பி..." என்றபடி அதை அழுத்த,
தாயின் முகத்தில் தெரிந்த ஏதோ ஒன்று அவனைத் தாக்கியதில், "அ..அப்புறம் படிக்கிறதுக்காக அப்ராட் போனதுல இருந்து உங்களவிட்டு தூரமா விலகிப் போயிட்டேன்ல... ரொம்ப சாரிம்மா..!" என்று மனதிலிருந்து மன்னிப்பை வேண்டிவிட்டு அவரை அணைத்துக்கொண்டான்.
தன் மூத்தமகனிடம் இத்தகைய இளக்கத்தை எதிர்ப்பார்த்திராத கோகிலாவிற்கு பல வருடங்களாக மனதில் தேங்கியிருந்த பாரம் நீங்கியதை போலிருந்தது..!
நடுங்கும் கரங்களால் அவனது கன்னம் வருடி உதட்டில் ஒற்றியவர், "சாரி எல்லாம் எதுக்கு கண்ணா? நீ சந்தோஷமா இருந்தாலே இந்த அம்மாவுக்கு போதும்ப்பா.." என்க,
அவரைத் தயக்கமாக ஏறிட்டவன், "நான் வதனிக்காக உங்களோட இப்படி பேசுறேன்னு உங்களுக்குத் தோனுதாம்மா?.."
"ச்ச ச்ச என் புள்ளையப் பத்தி எனக்குத் தெரியாதாப்பா... அப்படி உனக்கு என் மருமக தான் வேணும்னா நீயே போய் தாலிக்கட்டித் தூக்கிட்டு வந்துட மாட்டியா? நீ என்னோட பேசுனதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு அம்மாவால புரிஞ்சுக்க முடியுது தம்பி... நீ போ நான் அப்பாட்ட பேசுறேன்..." என்றவரை மீண்டும் அணைத்து விடுவித்தவன்,
"சரிம்மா..! நான் சீக்கிரமே ஆஃபீஸ் கிளம்பணும்... அப்பா கேட்டா சொல்லிடுங்க.." என்றபடி வேகமாக விலகி அறைக்கு ஓடியிருந்தான்...
இங்கு தன்னறையில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த மதிவதனி, தன் முகத்தில் வந்து மோதிய தலையணையின் வேகத்தில் எழுந்து, "யார்டா அது... இந்த வீட்டு இளவரசிய டிஸ்டர்ப் பண்றது?" என்று தூக்கக்கலக்கத்துடன் வினவ,
"ம்ம் உன் அம்மா டி..! இன்னும் மூனு மாசத்துல கல்யாணமாகி வேற வீட்டுக்குப்போற பொண்ணுக்கு ஆறு மணி வரைக்கும் என்ன தூக்கம் வேண்டிக்கிடக்கு?" என்று கோபமாக எகிறினார் அம்பிகா...
'அம்மாடி என்ன இது காலைலயே சகுனம் சிறப்பா இருக்கு..! ஆமா கல்யாணம் பண்றதுக்கும் ஆறு மணிக்கு எந்திரிக்கிறதுக்கும் என்னடா சம்பந்தம்? பேசாம தாய் கிட்டயே கேட்போமா..! நோ நோ மம்மி ரொம்ப உக்கிரமா இருக்காங்க... நம்ம பிரதர்ட்ட கேட்போம்...' என்றவள் மனதில் பட்டிமன்றம் நடத்த,
மகளை மேலும் கீழுமாக அளந்தவர், "என்ன டி செம்மறி ஆடு மாதிரி தலையாட்டிட்டு இருக்க?" என்று மீண்டும் பாய்ந்ததில்,
'க்ம்ஹூம் வீடாய்யா இது..! நானே முனீஸ் பண்றத நினைச்சுக் குழம்பிப் போயிருக்கேன்... இதுல காலைல ஆறு மணிக்கு எந்திரிக்கணும்னு புது ரூல்ஸ் வேற..!" மனக்குரலில் புலம்பியபடி,
"ஒன்னுமில்ல தாயே..! இதோ போய் வாக்கிங் கிளம்புறேன் போதுமா?.." என்று சலித்தபடி குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்...
அம்பிகா இப்படித்தான்..! செல்லம் கொஞ்சும் வேளைகளில் பாசமாக நடப்பவர், மகள் பொறுப்பாக நடக்காமல் போகையில் கடிந்து கொள்வார்..!
"ச்சு சரியான ரூல்ஸ் ராமானுஜம் ஃபேமிலி..! சரி கல்யாணம் பண்ற வீடாச்சும் என் இஷ்டத்துக்கு விடுற மாதிரி இருக்கணும்ப்பா ஈஷ்வரா..!" என்ற வேண்டுதலுடன் நடைப்பயிற்சி செய்வதற்காக வெளியே வந்தாள்...
அவளின் கணவன் இவர்களைவிட கண்டிப்பான ரூல்ஸ் ராமானுஜம் என்பதை அறியும்போது என்னவாகப் போகிறாளோ?
அதன் பின்னர் அவளின் காலைநேரம் வழக்கமாகக் கடக்க, ஒன்பது மணிக்கு அலுவலகம் வந்து சேர்ந்தவளின் கண்களில் முதலில் விழுந்ததே அவளின் நாயகன் தான்..!
"ஆஹா..! முனீஸ் வர்றானே..! நேத்தே கன்னத்துல கிஸ் பண்ணி நம்ம ரெண்டு பேருக்கு தான் கல்யாணம் நடக்கும்னு சொன்னானே... இன்னைக்கு என்னப் பண்ண காத்திருக்கானோ..!" என்று முணுமுணுத்துக்கொண்டே அவனைப் பார்க்காததைப் போல் தலைக் குனிந்தபடி விலகி நடக்க முயல, அவள் செல்லும் பக்கமாக அவனும் மாறியதில் அவன் வேண்டுமென்றே செய்வதை உணர்ந்தவள் நிமிர்ந்து முறைக்க,
"க்ம்.. அது ரொம்ப நேரமா கீழக் குனிஞ்சுட்டே நடந்தியா..! அதான் எதுவும் புதையல் தேடுறியோனு பார்த்தேன்..!" சாந்தமான முகத்துடன் பேசியதோடு அவளின் திகைப்பை பொருட்படுத்தாமல், "குட் மார்னிங் பேபி..!" என்று வரிசைப்பற்கள் மின்ன புன்னகைத்தவன், அவள் சுதாரித்து எதிர்வினை ஆற்றுவதற்குள் அங்கிருந்து விலகி நடந்திருந்தான்...
சிறிது நேரம் ஒன்றும் புரியாமல் விழித்து நின்ற மதிவதனிக்கு, தீரனின் கடுகடு முகத்தைவிட இந்த புன்னகை முகம் தன்னை அடியோடு சாய்த்துவிடும் என்பது நன்றாகப் புரிந்துபோனது...
"நோ மதி..! கண்ட்ரோல் யுவர்செல்ஃப், இன்னும் நாலே நாள்..!" என்றபடி இருக்கையில் அமர்ந்தவளுக்கு எங்கே தன் மனம் தீரனிடம் சாய்ந்துவிடுமோ என்ற புதிதான பயம் ஒன்று முளைத்திருக்க, தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டால் மனம் இப்படி அலைபாயாதே என்று நினைத்தாள்...
அதுவும் வந்த முதல் நாளே தன்னிடம் பணக்காரன் தேடுகிறாயா என்று எகத்தாளம் செய்த ஒருவனிடம் மனதைப் பறிகொடுத்தால் அவளின் தன்மானம் என்னாவது?
ஒருவேளை நூற்றில் ஒரு வாய்ப்பாக அவன் மேல் காதல் தோன்றினால் கூட அவளால் தன் குடும்பத்தினரிடம் தைரியமாக தெரிவிக்க முடியும்..! ஆனால் மகேனைத் திருமணம் செய்வதற்கு தந்தையிடம் சம்மதம் சொன்னப் பிறகு அதை மீறுவது அவளால் முடியவே முடியாது..!
இதற்கு ஒரே ஒரு தீர்விருப்பதாக நினைத்து வேக வேகமாக விடுப்புக் கடிதத்தை தட்டச்சு செய்தவள், மகேந்திரன் இன்று அலுவலகம் வரமாட்டான் என்பதால் வேறு வழியின்றி தீரனின் மின்னஞ்சலுக்கு அனுப்பிவிட்டு அவனுக்கு முன்பாக சென்று நின்றாள்...
அலுவலகம் வந்த அரைமணி நேரத்தில் தன்னிடமிருந்துத் தப்பிப்பதற்கான அவளின் வேகத்தை எண்ணி சிரித்தவன், "இதென்னடா வதனி..! என்னையப் பார்த்துட்டே இருந்தா உன் மனசு என் பக்கமா சாஞ்சிடும்னு பயந்து லீவ் போட்டு எஸ்கேப்பாகுற ப்ளானா?..." என்று சீண்டலாக வினவியதில் கொதித்தெழுந்து,
"ஹலோ சார்..! உங்களப் பார்த்து யாரும் பயந்து ஓடல..." என்று எகிற,
"ஓ..! அப்புறம் மேடம்க்கு எதுக்கு இந்த லீவ்?"
"அ..அது ஹான்..! பியூட்டி பார்லருக்குப் போகணும், ஃப்ரெண்ட்ஸ் இன்வைட் பண்ணனும் அ..அதுக்கு தான்..." தன் கண்களை சந்திக்காமல் பொய் சொன்னதில் படாதபாடுபட்டு தன் கோபத்தை அடக்கிக்கொண்டான் அவன்...
பின்னே அவனிடமே வந்து வேறோருவனோடு நடக்கவிருக்கும் நிச்சயத்திற்காக தன்னை அழகுபடுத்தப் போவதாகக் கூறினால் கோபம் வராமல் இருக்குமா?
ஆனாலும் தன்னை மீறி எதுவும் நடக்கப் போவதில்லை என்ற நம்பிக்கையில், "இத நம்புற அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல பேபி..! நீ உண்மையாவே எனக்கு பயந்து தான் லீவ் போடுறேன்னு சொல்லு... அடுத்த வார்த்த பேசாம நானே அக்செப்ட் பண்றேன்..." என்றவனின் மனம் எங்கே அவள் ஆமாம் என்று விடுவாளோவென பதைபதைத்தது...
"க்ஹூம் நான் எதுக்குங்க பயப்படணும்..! எனக்கு இந்த லீவே வேணாம் போதுமா?.." என்று எரிந்து விழுந்துவிட்டு அவனை மனதில் வறுத்தபடியே தன்னிடத்திற்குத் திரும்பியவள், தீரன் செய்த குழப்பத்தில் அவனை சார் என்றழைப்பதை மறந்து கணவனிடம் கோபித்துக் கொள்ளும் மனைவியாக பேசிவிட்டு சென்றதை உணராமல் போனாள்..!
"ஹாஹா..! மை கியூட் வதும்மா..! உன்ன கரெக்ட் பண்றது ரொம்ப ஈசியா இருக்கும் போலயே.." என்று சிரித்தான்...
அந்தோ பாவம்..! அது அத்தனை எளிதான காரியமில்லையென்று அவனுக்குத் தெரியவில்லை..!
அன்று முழுவதும் அலுவல் சம்பந்தமாக பலமுறை அவனுக்கு முன்பாக சென்று நிற்கும்படி நேர்ந்த தன் நிலையை நொந்தபடி வந்து நின்றாலும் அவளின் நீண்ட விழிகள் தன்னை மீறி அந்த ஆணழகனின் கம்பீரத்தை ரசிக்க தான் செய்தது..!
ஆனால் அவள் தயங்கியதற்கு மாறாக தீரன் அவளிடம் எவ்வித வம்பும் செய்யாமல் போகவே, அன்றைய தினத்தை வெற்றிக்கரமாகக் கடந்தவள் நிம்மதி பெருமூச்சுடன் அலுவலகத்தை விட்டு வெளியேறினாள்...
அவளை இவ்வாறு சின்னதாக சீண்டுவதை விட மொத்தமாக தனக்குள் சுருட்டிக்கொள்ளும் முடிவில் அவன் இருப்பதை யார் அவளிடம் கூறுவது?
தன் அலுவல்களை முடித்துவிட்டு வீடு திரும்பியதும் அவனுக்கு முன்பாக சோர்ந்த முகத்துடன் வந்து நின்ற கோகிலா, "உங்கப்பா வடிவேலு அண்ணாட்ட இதப்பத்திப் பேசவே கூடாதுனு சொல்லிட்டாங்க கண்ணா.." என்று வருத்தமாக சொல்ல,
அவரை தன் தீர்க்கமான விழிகளால் ஏறிட்டவன், "என் வதனியத் தவிர உங்களுக்கு மூத்த மருமகளா வேறு யாரும் வர முடியாதும்மா..!" என்றதில்,
"கண்ணா..! த..தப்பா எதுவும்.." என்று தொடங்கும்போதே மகனின் ஒழுக்கத்தின் மேலிருந்த அதீத நம்பிக்கையில், "என் பையன் ஒழுக்கக்கேடான எந்த தப்பையும் செய்யமாட்டான்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு... ஆ..ஆனா அது எப்படிப்பா நடக்கும்?" என்று வினவ,
அவரைப் பார்த்து மர்மமாகப் புன்னகைத்த மகேந்திரன் அபர்ஜித், "அது சீக்ரெட் ம்மா..! ஆனா நான் சொன்ன மாதிரி எனக்கும் வதனிக்கும் தான் கல்யாணம் நடக்கும்.. என்றவன், அப்புறம் இது அப்பாவுக்குத் தெரிய வேணாம்... நமக்குள்ள இருக்கட்டும்மா..." என்று ரகசியம் பேசியதில் முகம் விகசித்தார் அந்த அப்பாவி தாயார்...
கோகிலா சற்று வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவ்ளோவாக வெளியுலக அனுபவம் இல்லாதவர்..! கணவரும் மகன்களும் எது செய்தாலும் நியாயமாக இருக்கும் என்று நம்பும் சராசரி தாய் அவர்..!
அங்கு இப்படியிருக்க இங்கு தர்மராஜ் வீட்டில் தன் தாய் சத்யபாமாவிடம், "நான் சொல்றதுக்கு நீங்க ஓகே சொன்னா மட்டும் தான்ம்மா நீங்க ஆசப்பட்டது நடக்கும்.. அப்புறம் உங்க இஷ்டம்..!" என்று அவன் போட்டிருக்கும் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தி, பெரும் போராட்டத்திற்குப் பின்னர் அவரின் இசைவையும் பெற்றிருந்தான் மகேன்...
தொடரும்......

Last edited:
Author: நிதனிபிரபு
Article Title: மகேந்திரனின் மதிவதனியிவள் - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.