மகேந்திரனின் மதிவதனியிவள் - 17
தன் கரங்களில் மயங்கிய மனைவியோடு அங்கிருந்த படுக்கையில் அமர்ந்தான் மகேந்திரன்அபர்ஜித்...
மகனிடம் விரைந்த கோகிலா தான் எடுத்து வந்த தண்ணீரை மருமகளின் முகத்தில் மெதுவாக தெளிக்க, புருவங்களை சுருக்கியபடி எழுந்தவள் தீரனின் மார்பில் சாய்ந்திருப்பதை உணர்ந்து வேகமாக விலகியதோடு பெற்றோரையும் பயப்பார்வைப் பார்த்தாள்...
தன்னவள் அப்படி நீங்கியது நெஞ்சில் கத்தியை வைத்துக் கீறியதை போல் வலித்தாலும் அவளின் நிலையை உணர்ந்தவனாக மகேனை முறைக்க, நண்பனிடம் பின்னர் மன்னிப்பு கேட்டால் சரியென நினைத்த அந்த மாஸ்டர் மைண்ட் களவாணி அங்கு அதிகப்படியாக நின்றிருந்த கூட்டத்தை வெளியே அழைத்துச் சென்றிருந்தான்...
தீரனின் தோளை ஆறுதலாக அழுத்திவிட்டு கோகிலா வெளியேற, அவனை ஆராய்ச்சியாகப் பார்த்தபடியே ராமச்சந்திரனும் வெளியேறியிருந்தார்...
அவ்வறையில் மதிவதனியின் குடும்பமும் தீரனும் மட்டுமே எஞ்சியிருக்க, தன் மாமனார் மாமியாரை வெறித்துவிட்டு அதியனிடம் திரும்பியவன்,
"ஷி நீட்ஸ் சம் ஸ்பேஸ்..! அதான் உன் மேல இருக்க நம்பிக்கையில அவள இங்க விட்டுட்டுப் போறேன் மச்சான்..!
அண்ட் இனிமே என் வைஃப யாரும் திட்டவோ அடிக்கவோ கூடாது... ஏன்னா அவ இப்போ உங்க வீட்டு பொண்ணு மட்டுமில்ல..! அத மனசுல வச்சுக்கிட்டு எது வேணும்னாலும் பேசுங்க..." என்று இறுகிய குரலில் சொல்லிவிட்டு தானும் அங்கிருந்து நகர்ந்தான்...
கணவன் பேசிய வார்த்தைகளில் அவன் காதலை உணர்ந்து மனம் பூரிக்கும் நிலையில் இல்லாத பெண்ணவள் அதே இடத்தில் அசையாமல் அமர்ந்திருந்தாள்..!
மகேனுடன் நடக்கவிருந்த நிச்சயம் நின்று தீரன் தனக்கு தாலிக்கட்டியதில் தன்னையறியாமல் ஒரு பரவசமும், ஆசுவாசமும் எழுந்தாலும், இருபத்தி நான்கு வருடங்கள் ஆசை ஆசையாய் சீராட்டி வளர்த்த குடும்பத்தினர் தன்னை நம்பாமல் போவதற்கு ஒரு காணொளி மட்டும் போதுமா என்ற நினைப்பிலிருந்து வெளிவர முடியாதத் தவிப்பில் அவளின் விழிகளிரண்டும் விடாமல் கண்ணீர் சொரிந்தன...
மகள் மீது குறையாத கோபத்தில் அம்பிகா விரைப்பாக நிற்க, வடிவேலனுக்கோ தங்களைச் சுற்றி நடப்பதே புரியாத நிலை..!
நடந்ததைப் பற்றி முழுமையாக தெரியாதபோதிலும் அதியனுக்கு தங்கை மீது எள்ளளவும் சந்தேகம் எழவில்லை..!
அதில் ஆதரவற்றவளைப் போன்று தனியாக படுக்கையில் அமர்ந்திருந்தவளை நெருங்கியவன், "பாப்பா..!" என்று அவளின் பூமுகத்தை நிமிர்த்த, "அ..அதிண்ணா..! நா..நான் எந்த தப்..தப்பும் பண்ணலண்ணா..!" விசும்பலுடன் அவன் இடையைக் கட்டிக்கொள்ள,
"எங்க பாப்பா அப்படி பண்ணமாட்டான்னு எனக்கும் தெரியும்டா... நீ சொல்லு அன்னைக்கு என்ன நடந்துச்சு?" என்றான் பெற்றவர்களை குற்றச்சாட்டும் பார்வைப் பார்த்தபடி...
தமையன் தன்னை நம்பியதால் தோன்றிய திடத்துடன் கண்ணீரைத் துடைத்தவள் நேற்று முன்தினம் நடந்ததை விவரித்தாள்...
அன்று சில முக்கிய அலுவல்கள் இருப்பதாக சொல்லிய மகேன் அவளை சற்று சீக்கிரமே அலுவலகத்திற்கு வரும்படி குறுந்தகவல் அனுப்பியதால் ஏழு ஐம்பதுக்கே அலுவலகத்தின் கலந்தாய்வு கூடத்தில் அமர்ந்திருக்க, மேலும் பத்து நிமிடங்கள் கடந்தும் அவன் வரவில்லை...
காத்திருக்கும் நேரத்தை வீணடிக்க விரும்பாமல் கையோடு கொண்டு வந்திருந்த குறிப்பேட்டில் அவளுக்குத் தோன்றிய கற்பனைகளை நகைகளாக வரைந்துக் கொண்டிருந்தாள்...
பல தருணங்களில் நொடியில் உதிக்கும் அழகான வடிவமைப்புகளை உடனுக்குடன் குறித்து வைத்துவிட்டால் பின்னர் கணினியில் மறுவடிவமைப்பு செய்யும்போது நுணுக்கங்களை சேர்த்துக் கொள்ளலாம் என்பதால் கையால் வரைதலை விரும்புவாள் அவள்..!
தன் கற்பனையில் லயித்து ஒரு கழுத்தணியை வரைந்துக் கொண்டிருந்தபோது வியர்ப்பதை உணர்ந்தவளுக்கு, அப்போது தான் மின்விசிறியைப் போடாமல் அமர்ந்தது உரைக்க, எழுந்து சென்று அதற்கான ஸ்விட்ச்சை தொட்டாள்...
அதிலிருந்து மிதமான மின்சாரம் பாய்ந்ததில் மூர்ச்சையாகி அவள் கீழே விழுந்ததை ஜன்னல் வழியாகக் கண்ட தீரனின் இதயம் படபடக்க, மகேனை இடித்துத் தள்ளிவிட்டு அவனுக்கு முன்பாக உள்ளே ஓடியிருந்தான் அவன்...
சுயநினைவின்றி தரையில் படுத்திருந்த தன் உயிரானவளை மடியில் தாங்கி தண்ணீரைத் தெளித்துப் பார்த்தவன், "கண்ணத் திற வதும்மா..!" என மென்மையாக அவள் கன்னத்தில் தட்டியும் எழாததில் பயந்து, முதலுதவி சிகிச்சையாக சி.பி.ஆர் முறையில் அவளைக் காப்பாற்றியிருக்க,
அவனுக்கு பின்னால் வந்த மகேன் எதற்கும் இருக்கட்டுமென நினைத்து அதை அவனுக்கே தெரியாமல் காணொளியாக எடுத்து வைத்திருந்தான்...
மதிவதனிக்கு மீண்டும் நினைவுத் திரும்பி கண்விழிக்கையில் அவளைத் தாங்கியபடி தீரன் தரையில் அமர்ந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டு விலகியவள், தனக்கு என்ன நடந்ததென புரியாமல் மன்னவனைக் கேள்வியாக ஏறிட, நடந்ததை அவளிடம் சுருக்கமாகப் பகிர்ந்தான் அவன்...
முதலுதவியாகவே இருந்தாலும் அவளது தேனூறும் இதழ்களின் சுவையைப் புதிதாக அறிந்துகொண்ட தித்திப்பில் ஏதோதோ நினைவுகள் எழுந்ததில் முகம் பளபளக்க, அதை அவளுக்குக் காட்டாமல் மறைக்கும் முயற்சியில் பிடரிமுடியை கோதியபடி முகம் திருப்பிக்கொண்டான்...
அவளுக்கும் ஏனென்றே புரியாத வெட்கத்தில் முகம் சிவக்க கன்னங்களை அழுத்தமாகத் தேய்த்து அதை மறைக்க முயல, அழகுறச் சிவந்து பளபளத்த இருவரின் முகங்களையும் அலைபேசியில் பதிவுசெய்த மகேன், அதற்கு மேல் அங்கு நிற்காமல் சத்தமின்றி நகர்ந்திருந்தான்...
அன்று நடந்ததில் நண்பர்களின் பங்கைப் பற்றி அறியாததால் தனக்கு தெரிந்தவரையில் அண்ணனிடம் விவரித்தவள் தேம்பியபடி அமர்ந்திருந்தாள்...
தங்கள் வளர்ப்பில் நம்பிக்கை வைக்காமல் அருமைப் பெருமையாய் பாதுகாத்தச் செல்லமகளை இப்படி தவறாக நினைத்துவிட்டோமே என்ற கழிவிரக்கத்தில் பேச்சு வராமல் நின்றிருந்தனர் மதிவதனியை பெற்றவர்கள்...
முதலில் தன்னை சுதாரித்தவர் அம்பிகா...
"சாரிடா குட்டிமா..! என தன்னை நெருங்கியவரிடம் முகம் கொடுக்க மறுத்து அதியனின் தோளில் புதைந்தவள்,
"எ..என்னைய நம்பாத யாரும் என்னோட பேச வேணாம்னு சொல்லுண்ணா..." என்று விசும்ப,
"அப்பா செஞ்சது தப்பு தான்டா... மன்னிச்சிடு பாப்பா..!" என்ற தந்தையை மட்டும் சற்று நிமிர்ந்துப் பார்த்தவள் வேகமாக முகம் திருப்பிக்கொண்டாள்...
அன்று நடந்ததை அறிந்துகொண்ட அதிர்ச்சியில் சற்று நேரத்திற்கு முன்பாக வராண்டாவில் 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்' என இருவரும் நின்றதை அப்பாவியாக மறந்துவிட்டிருந்தார் சக்திவடிவேலன்...
பரிதாபமாக விழித்துக் கொண்டிருந்த பெற்றோரை ஒரு நொடி வெறித்துவிட்டு, "நடந்தத மாத்த முடியாதுப்பா... நமக்கு புடிக்கிதோ இல்லையோ இனி தீரன் மாமா தான் நம்ம வீட்டு மாப்ள..! பா..பாப்பா நார்மல் ஆகுற வரைக்கும் அவளுக்கு கொஞ்சம் டைம் குடுங்க..." என்றபடி தங்கையின் கேசத்தை ஆறுதலாக வருடின அதியனின் விரல்கள்...
தாங்கள் செய்தது பெரும் தவறென்றுப் புரிந்ததால் மகனிடம் சம்மதமாக தலையசைத்து அம்பிகா உறவினர்களைக் கவனிக்க செல்ல, மணமேடையில் நடந்து முடிந்த கலவரத்தைப் பார்த்தபடி நின்றிருந்த தீரனிடம் வந்தார் சக்திவடிவேலன்...
"மா..மாப்ள..!" எனத் தயக்கமாக அழைக்க,
அவர் மேல் மனத்தாங்கல் இருந்தாலும் மாமனார் என்ற மரியாதையில் திரும்பியவனுக்கு, தான் இன்னும் அவருக்கு விளக்கமே கொடுக்கவில்லை என்பது உறைக்க அவரை தனியே அழைத்து வந்து,
"உங்க அனுமதி இல்லாம வதனிய கல்யாணம் பண்ணதுக்கு என்னைய மன்னிச்சிடுங்க மா..மாமா.." என்க,
"அ..அது பரவால்ல மாப்ள..! அந்த இடத்துல என் பொண்ணோட மானம் போகாம காப்பாத்துனதுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.." என்றார் அவர்...
அவரை குறுகுறுவென பார்த்துவிட்டு, "என் வதனிக்கு அந்த அவமானம் நடக்காம போயிருந்தாலும் இன்னைக்கு அவ கழுத்துல நிச்சயமா நான் தாலிக் கட்டியிருப்பேன் மாமா..!
நீங்க மகேனோட எங்கேஜ்மெண்ட் நடத்துனாலும் அந்த மேடையிலயே வம்படியா அவளக் கல்யாணம் பண்றது தான் என்னோட ப்ளான்... அதான் நானே டிசைன் பண்ண தாலியோட ரெடியா வந்தேன்.." எனக் கண்சிமிட்டியதில் அதிர்ந்தவர்,
"த..தம்பி.." என்று பதற, எல்லா உண்மைகளையும் சொல்லி வயதானவரைக் குழப்ப விரும்பாமல் தன்னுடைய மனமாற்றத்தை மட்டும் அவரிடம் பகிர்ந்தான்...
அதில் அவருக்கு சற்று வருத்தமிருந்தாலும் ஆரம்பத்தில் அவர் விரும்பியதே கடவுளின் சித்தமாக இருக்கையில் அவரால் என்ன செய்ய இயலும்? என்ற புரிதலில் மருமகனைப் பார்த்து மென்மையாக சிரித்தவருக்கு மேடையில் நடக்கும் காரசாரமான விவாதங்கள் அப்போது தான் மனதில் பதிய, அவனைக் கேள்வியாக ஏறிட்டார்...
அப்போது மதிவதனியைப் பற்றி தவறாகப் பேசிவிட்டு அறையிலிருந்து வெளியே வந்த சத்யபாமா, தன் கணவருடனான வார்த்தைப்போரை நிறுத்தவில்லை...
நடந்ததை மறந்து மணமக்களை ஆசிர்வாதம் செய்துவிட்டு தங்கள் வீட்டிற்குச் செல்வோம் என தர்மராஜ் சொல்ல, இன்று தன் அண்ணன் மகளை எப்பாடுபட்டாவது மருமகளாக்கும் முடிவில் இருந்தவர் எப்படி ஒப்புக்கொள்வார்?
தீரனிற்கும் மகேனுக்கும் ஒரே வயதென்பதால் அவனுக்கு நடந்ததைப் போல் தன் மகனுக்கும் திருமணம் நடந்தாக வேண்டும் என்று கணவருக்கு மேலாக குரலை உயர்த்தியதோடு தான் கொண்டு வந்த தாலியை பையிலிருந்து எடுக்க முயன்றவரின் கரம் பிடித்து தடுத்த மகேன்,
"அம்மா தாயே..! பொறும பொறும..! ஏற்கனவே நீங்க செஞ்சு வச்ச வேலைய எப்படி சமாளிக்கிறதுனு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன்... இதுல இந்த தங்கத்தாலியப் பார்த்து நம்ம மீச டென்ஷனாகி உண்மையக் கண்டுபிடிச்சிட்டா வேற வினையே வேணாம்..!
அப்புறம் நம்ம ரெண்டு பேரும் உங்கண்ணன் வீட்டுக்கு தான் போகணும்... இத அப்படியே உள்ள வைங்க... இப்போதைக்கு ஒரு மஞ்சள் கிழங்க வச்சு கல்யாணத்த முடிப்போம்..." என்று முணுமுணுத்தான்...
உண்மையில் அவனுமே இந்த அளவிற்கு பிரச்சினை பெரிதாகும் என நினைத்திருக்கவில்லை..!
தீரன் மதிவதனியை மடியில் தாங்கியிருப்பதைப் புகைப்படமாக எடுத்து, இருவரும் காதலிப்பதாக பாமாவை சக்திவடிவேலனிடம் சொல்ல வைத்து, அதற்கு சாட்சியாக அப்படத்தைக் காட்டலாமென நினைத்திருந்தனர்...
தன்னிடம் ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி எழுந்தால் நிச்சயம் பேசியிருக்கும்போது, அவரிடம் சொல்வதற்கு மதிவதனி பயப்படுவதாகத் தெரிவித்து நடக்கவிருக்கும் நிச்சயத்தை நிறுத்திவிட்டு அவளுக்கு தீரனை திருமணம் செய்வது தான் மகேனின் திட்டம்..!
முன்ஜென்ம பந்தமாகத் தொடரும் அவர்களின் காதலைப் பற்றி அறிந்ததால் நண்பனை அவள் மறுக்கமாட்டாள் என்ற நிச்சயம் அவனுக்கு..!
அவர்களின் திருமணம் முடிந்ததும் அதையே சாக்காக வைத்து மகேனுக்கும் அவன் மாமாவின் மகளான வெண்மதிக்கும் திருமணத்தை முடித்துவிடலாம் என நினைத்திருக்க, சத்யபாமாவும் நரேந்திரனும் செய்த குழப்பத்தால் இத்தனை களேபரத்தில் முடிந்துள்ளது...
பாமா எவ்வளவு தான் எகிறினாலும் கணவருக்கு உண்மைத் தெரிய வந்தால் பிரளயமே வெடிக்கும் என்பதை உணர்ந்தவர் மகன் சொன்னதற்கு சம்மதிக்க, அதன்படியே மகேனுக்கும் வெண்மதிக்கும் தர்மராஜின் சம்மதமின்றி திருமணம் நடந்து முடிந்தது...
நடந்ததை சாதாரணமாக மாமனாரிடம் பகிர்ந்தவன், தர்மராஜிடம் திட்டு வாங்கிக்கொண்டிருந்த நண்பனை வெறித்தான்...
அரைமணி நேரத்தில் தன் வதனியை நிலைகுலைய வைத்து அவனுக்குத் தேவையானதை நடத்திக்கொண்டானே..!
'எப்படியும் என்கிட்ட சிக்குவ..! அன்னைக்கு உன்ன வச்சுக்கிறேன்டா டேமிட்..' மனதில் நல்ல வார்த்தைகளால் அவனை அர்ச்சித்தபடியே நின்றவனைத் தேடி வந்த கோகிலா,
"நம்ம மருமகளக் கூட்டிக்கிட்டு வீட்டுக்குக் கிளம்பணும் கண்ணா..!" என்றுவிட்டு,
"நீங்களும் வாங்கண்ணா... கல்யாணம் தான் இப்போ அவசரமா நடந்துருச்சு..! ஆனா அடுத்தடுத்து நடக்க வேண்டியத நல்ல நேரம் பார்த்து செய்யணுமே... நான் அண்ணிட்டயும் அதியன் மாப்ளட்டயும் சொல்லிட்டேன்..." என்று சக்திவடிவேலனையும் முறையாக அழைத்தார்...
மிதமிஞ்சிய கொந்தளிப்பில் கத்திக் கொண்டிருந்த தர்மராஜை சமாதானம் செய்துவிட்டு வந்த ராமச்சந்திரனும் அவர் பங்குக்கு நண்பரின் குடும்பத்தை முறையாக அழைக்கவே, இரண்டு குடும்பமும் வீட்டிற்குக் கிளம்ப தயாரானது...
அங்கு நடந்த குழப்பத்தில் சலசலத்துக் கொண்டிருந்த உற்றார் உறவினர்களுக்கு நடந்ததை முறையாகத் தெரிவித்து, இரவு விருந்தும் நடந்து முடிந்திருக்க அங்கிருந்துக் கிளம்பிச் சென்றனர்...
அனைத்தும் நடந்து முடிய நண்பனை நெருங்கத் தயங்கிய மகேன் தன் குடும்பத்துடன் வீட்டிற்குக் கிளம்பியிருக்க, இவர்களும் குடும்பமாக மகேந்திரன் அபர்ஜித்தின் வீட்டை அடைந்தனர்...
புதுமண தம்பதியரை ஆலம் சுற்றி வரவேற்பதற்காக வெளியே நிறுத்திவிட்டு மற்றவர்கள் உள்ளே சென்றுவிட, தன்னருகே அமைதியாக நின்றிருந்த மனைவியை ரசினையாக அளவிட்ட தீரன்,
"நான் சொன்ன மாதிரியே என்னோட மிஸஸ் ஆகிட்டியே பேபி..! வெல்கம் ஹோம் மிஸஸ்.மகேந்திரன் அபர்ஜித்..!" என்றபடி மலர்ந்து சிரித்தான்...
"மகே..மகேந்திரனா? நீங்களா?" அவள் அதிர்ந்ததில் சிரிப்பு மேலும் விரிய,
"ஆமா வதும்மா..! என்னோட ஃபுல் நேம் அது தான்... அந்த கதையப் பத்தி அப்புறம் சொல்றேன்... இப்போ சொல்லு, நான் சொன்னத நடத்திக் காட்டிட்டேன்ல... நீ என்ன நினைக்கிற?.." எனக் கேட்டவனின் கூர்விழிகள் அவளை கபளீகரம் செய்யும் வேலையைத் தொடர்ந்தன...
இருட்டில் கணவனின் கள்ளத்தனத்தை சரியாகக் கவனித்திராத பெண்ணவள், அவனுக்குத் தந்த பதிலில் திருதிருவென விழித்தபடி குழம்பி நின்றான் அந்த முன்னாள் அகம்பாவி..!
தொடரும்......

Last edited by a moderator: