மகேந்திரனின் மதிவதனியிவள் - 19
கணவனின் மார்பில் தலைசாய்த்து உறங்கிக் கொண்டிருந்த மதிவதனியின் செவிகளில் பலமாக குதிரையின் குளம்பொலிக் கேட்டது..!
திடுக்கிட்டு கண்விழித்தவள் தூக்கக் கலக்கத்தில் அருகில் வருட திண்ணென்றிருந்த தலையணையை உணர்ந்து, "என்ன இவ்ளோ ஹெவியா இருக்கு" என்று முணுமுணுத்தவாறே கண்களை நன்றாக திறந்துப் பார்த்தாள்...
"ஆ.. அச்சோ! தூக்கத்துல முனீஸ்கிட்ட போயிட்டேனா?" பதறியபடி அவனது தூக்கத்தைக் கலைக்காமல் விலகி எழுந்தவளுக்கு அப்போது தான் இரவில் தான் அழுததும், கணவன் ஆறுதலாக அணைத்ததும் ஞாபகம் வர, காரணமேயின்றி அவளின் முகம் சிவந்தது...
மனதின் படபடப்பைக் கட்டுப்படுத்தியபடி கோகிலா கொடுத்திருந்த மாற்றுடையை கையில் எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்...
அதன் தூய்மையை வியந்துப் பார்த்தவளுக்கு திடீரென அக்குதிரையின் குளம்பொலி ஞாபகம் வர தலையை உலுக்கியபடி,
"ப்ச் இதுக்கெல்லாம் ராக்கெட் விடப்போற சயின்டிஸ்ட் லெவலுக்கு யோசிக்கணுமா? புது இடத்துல படுத்ததால காதுல அப்படிக் கேட்ருக்கும்..!" தானாகவே ஒரு முடிவுக்கு வந்து வேகமாக குளித்து உடைமாற்றி வந்தாள்...
ஆளுயர கண்ணாடியின் முன்பாக நின்று ஈரம் காயாத நீள்கேசத்தை உலர்த்தியவாறே சிரித்த முகத்துடன் உறங்கிக் கொண்டிருந்த கணவனைக் கண்டவள், அடங்காமல் நெற்றியில் படர்ந்திருந்த கேசத்தில் தொடங்கி, அடர்த்தியான புருவங்கள், அழுத்தமாக மூடியிருந்த இமைகள், கூர்நாசி, முரட்டு அதரங்கள், உறுதியான தாடை என்று ரசனையாக அவன் முகத்தை அளந்துவிட்டு,
"அட பார்ரா..! ஆளு கொஞ்சம் அழகா தான் இருக்காரு..!" சத்தம் வராமல் மெலிதாக முறுவலித்தாள்...
பெற்றோர்களால் காயம் கண்ட மனதிற்கு அவளை அவமானத்தில் இருந்துக் காக்கும் பொருட்டு அவன் திருமணம் செய்ததால், பள்ளத்தை நோக்கி பாயும் வெள்ளமாக மனம் கணவனிடம் சாய்வதாக ஓர் எண்ணம் அவளுக்கு..!
எனினும் பிடிவாதமாக அவன் சொன்னதை நடத்திக்காட்டிவிட்டானே என்ற பூரிப்புடன் தாலியைக் கையிலெடுத்துப் பார்த்தவளின் தளிர்மேனி சிலிர்க்க, அவனை எவ்வாறு அழைப்பதென்ற யோசனை உள்ளோடியது...
"தீரன்... அபர்ஜித்... அபு..! க்ம்ஹூம் மகேந்திரன்... ம்ம் மகி..! ஹான் இது நல்லா இருக்கே..." முன்ஜென்ம நினைவுகளே ஞாபகம் வராதபோதிலும், அவள் பிரத்யேகமாக அழைத்த அவனின் பெயர் மட்டும் எப்படி நினைவில் இருந்ததோ?
காதலின் ரகசியம் அது..!
அவன் காதல் சொன்னதில் இருந்து நடந்த நிகழ்வுகளை வரிசையாக நினைத்துப் பார்த்தவளுக்கு, கணவனை முதன்முதலில் கண்டபோது தனக்கு அவன் மீது ஈர்ப்புத் தோன்றியதைப் போல், தனக்கு மகேனுடன் திருமணம் பேசியதைக் கேள்விப்பட்டதும் அவனது ஆழ்மனதில் புதைந்திருந்த காதல் உணர்வுகள் விழித்ததில் அவ்வாறு தன்னிடம் அடாவடியாக நடந்திருப்பான் என அவளின் மனமே அவனுக்கு சப்பைக்கட்டுக் கட்டியது...
தன் பிரியமான அத்தை மாமாவின் வளர்ப்பில் நம்பிக்கையிருக்க, நாளைடைவில் தாங்கள் இருவரும் ஆதர்ஷ தம்பதியராக வாழ்வோம் என்று நம்பியவளுக்கு தங்களுக்குள் இருக்கும் பூர்வஜென்ம பந்தத்தைப் பற்றிய நினைப்பே இல்லை...
ஆனால் அவள் மனதில் மொட்டுவிட்ட ஈர்ப்பு, காதல்பூவாக மலர்வதற்குள் தன் வார்த்தைகளால் அவன் வெந்நீர் ஊற்றியதோடு, பார்க்கும் நேரமெல்லாம் குற்றம் கண்டுபிடித்த ஞாபகங்கள் அவளுக்குள் நீருப்பூத்த நெருப்பாகத் தங்கிவிட்டதை அறியாதவள், அழகான அரக்குவண்ண பட்டில் தேவதையாய் தயாராகி மாடியிலிருந்து கீழிறங்கி வந்தாள்...
தோட்டத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மாமனார் மாமியாரிடம் சென்று முகம் மலர காலை வணக்கம் சொல்ல,
அன்றலர்ந்த ரோஜாவாக சிரித்த மருமகளைக் கண்டு மனம் பூரித்த கோகிலா, "குட் மார்னிங்டா மதி..! என்ன இவ்ளோ சீக்கிரமா எந்திரிச்சுட்ட? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாம்ல.." என்றவாறே அவள் முகத்தை வாஞ்சையாக வருடினார்...
"அது என்னமோ இன்னைக்கு சீக்கிரமே முழிப்பு வந்துடுச்சுத்த... ஆனா இதையே ஃபாலோ பண்ணி மாமியார் மெச்சும் மருமகள்னு பேர் வாங்குவேன்னு மட்டும் நினைச்சுடாதீங்க..." குறும்பாக கண்சிமிட்டியதில்,
"அடடா அப்படிலாம் நான் நினைக்கமாட்டேன் மதிம்மா... இது உன் வீடு..! நீ எப்போ வேணும்னாலும் எந்திரிக்கலாம்.." என்றவர், "ஆமா கண்ணா எங்கடா? இந்நேரம் ஜிம்ல இருப்பானே..." மகனின் தினசரி வழக்கத்தைப் பற்றி விசாரிக்க,
"அ..அவங்க இன்னும் தூங்கிட்டு தான் இருக்காங்கத்த.." என்றதும் பெரியவர்கள் இருவரும், ஏழு ஆண்டுகளாக விடுமுறையில் கூட ஓயாமல் உழைக்கும் மகன் சாவகாசமாக ஓய்வெடுப்பதை நினைத்து, ஒருவரையொருவர் பார்த்து அர்த்தமாகப் புன்னகைத்தனர்...
இதிலிருந்தே அவன் மனதில் மதிவதனி எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காள் என்பது புரிந்ததால் வந்த உவகையது..!
"சரி நீ கிட்சனுக்குப் போய் காலைல உனக்கு என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்கடா மதி... எல்லாரும் கிளம்பி வந்தோன சாமி கும்பிடுவோம்.." என்க,
"சரிங்கத்த..!" அவரிடம் வேகமாக ஆமோதித்து உள்ளே சென்றவள் அவர் சொன்னதற்கு இணங்க சமையல் செய்யும் பெண்மணியிடம் ஒரு காஃபியை வாங்கி, புன்னகைமுகமாக ரசித்துக் குடித்தாள்...
காலையில் உன் இஷ்டப்படி எழலாம் என்ற அனுமதிக் கிடைத்ததால் வந்த அதிகப்படியான உற்சாகம்..!
நுரை ததும்ப கப்பிலிருந்த காஃபி ஒவ்வொரு சொட்டாக அவள் தொண்டையில் இறங்க, அதன் சுவையில் லியித்தவளை மாடியிலிருந்து ரசித்தன மன்னவனின் விழிகள்..!
அதே உற்சாகத்தோடு மாடிப்படிகளில் ஏறிய மதிவதனி,
"ரோஜப்பூ ஆடி வந்தது..!
ராஜாவை தேடி வந்தது..!
பூவை கொஞ்சம் நீ சூடு..!
பூவின் தேனில் நீராடு..!
பேசி பேசி தீராது..!
ஆசை என்றும் ஆறாது..!" என்று பாடிக்கொண்டே தங்கள் அறைக்கு விரைய, எதிரில் உடற்பயிற்சி செய்வதற்காக கிளம்பி வந்த கணவனின் மீது மோதி நின்றாள்...
அவனுக்கு அந்தப்பாடலைப் பற்றித் தெரியாதபோதிலும் அதன் அர்த்தம் தெளிவாக விளங்கியதில் கள்ளச்சிரிப்புடன் அவன் நிற்க, அவன் விழிகளில் வழிந்த காதலுடன் கலந்த மோகத்தை இனம்காண முடியாமல் மிரட்சியுடன் அவனைப் பார்த்தாள் அவள்..!
'அடியே இதுக்கே ஷாக்காகுறியே..! உன்ன வச்சு நான் எப்படி டி கன்னி கழியப் போறேன்?' மனதில் மனைவியைக் கொஞ்சியவன் அவளை இலகுவாக்கும் முயற்சியில், "நேத்து நைட் உங்களுக்கு முன்னாடி சர்க்கஸ் காட்றது தான் வேண்டுதலானு சொன்னியே பேபி? இப்போ இதுக்கு என்ன அர்த்தம்?" என தன் புருவங்களை கேள்வியாக உயர்த்த,
"ஹான் அ..அது தெரியாம வந்து இடிச்சிட்டேன்... உடனே ஓவரா பேசக்கூடாது... சரிங்களா.." என்று நழுவ முயல, அவளது கரம் பிடித்து தன்னருகே இழுத்து,
"காலைலயே அழகான தரிசனம் தர்றியே வதும்மா..! ஆனா நம்ம இன்னைக்கு ஆஃபீஸ் போகணும், போய் வேற சேரி மாத்திட்டு ரெடியா இரு..! நான் என்னோட ரொட்டீன் வொர்க் முடிச்சிட்டு வந்ததும் சாப்ட்டுக் கிளம்புவோம்" என்றதில் மறுப்பாகத் தலையசைத்தவள்,
"இ..இல்ல நான் வரல... நீங்க மட்டும் போயிட்டு வாங்க.." என்றாள் வேகமாக...
அலுவலகத்தில் அவளைப்பற்றி யாரும் தவறாகப் பேசுவார்களோ என்ற பயத்தில் அவள் தயங்குவது புரிந்தாலும் அப்படியே விட்டால் தனக்குள் ஒடுங்கிப்போவாளே..!
அதில் இளகியிருந்த முகத்தை இறுக்கமாக மாற்றியவன், "உன்ன வர்றியா இல்லையானு நான் கேட்கல வதனி... வரணும்னு சொல்றேன்... ஐ ஹோப் யூ அன்டர்ஸ்டாண்ட்..! ஊர்ல எவன் என்ன பேசுனாலும் இப்போ நீ என்னோட வைஃப்... அத மட்டும் மனசுல வச்சுக்க..!" என்றான் அழுத்தமான குரலில்...
அவனை ஆழப்பார்வைப் பார்த்தவள், "நீங்க எதுக்கு என்னைய கல்யாணம் பண்ணீங்க?" என்றதில் அவன் மனம் மீண்டும் இளக,
"கல்யாணம் எதுக்கு டி பண்ணுவாங்க..! அதுக்கு தான்..!" எனக் குறும்பாக கண்சிமிட்டினான்...
அவன் பார்வையில் முகம் சிவக்க, "ப்ச் உங்களுக்கு எப்படி என் மேல காதல் வந்துச்சு?" என்றாள் எங்கோ பார்த்தபடி...
"எல்லாமே சொல்றேன் வதும்மா..! ஆனா இப்போ இல்ல, நம்ம ரிஷப்சன் முடியட்டும்... அதுக்கப்புறம் எல்லாமே சொல்றேன்..!" என்றவனுக்கு அவளிடம் தங்கள் முன்ஜென்ம காதலை சொல்லும் எண்ணம் துளியும் இல்லை...
தானாக உணர்ந்துக் காதலில் கசிந்துருகுவதைப் போல் அவளாகவே அதை உணர வேண்டுமென விரும்பினான் அவன்..!
"ரிஷப்சனா? எப்போ?"
"நாளைக்கு..!"
"ஓ..! இவ்ளோ சீக்கிரமாவா?"
"ம்ம் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் எல்லாருக்கும் தெரியணும்டா... இல்லைனா நம்ம கல்யாணத்தப் பத்தித் தப்பா பரவிடும்" என்றவனின் மனதில் இனியொரு முறை தன்னவளின் பெயருக்கு எவ்வித கலங்கமும் வரக்கூடாதென்ற கவனம் மட்டுமே..!
அவன் குரலில் அதையுணர்ந்த பெண்ணவள் தன்னை மீறி சம்மதமாக தலையசைக்க, "குட் கேர்ள்..!" அவளது வழுவழுப்பான கன்னத்தை மென்மையாக வருடினான் அவளின் மகி...
திடீரென கணவன் தொட்டதில் நெஞ்சம் படபடக்க விலகி நின்றவள் அவன் அடுத்து எதுவும் பேசுவதற்குள் சிட்டாகப் பறந்திருந்தாள்...
தன்னவளின் ஓட்டத்தில் உல்லாசமாக நகைத்தவன் தன் வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு அலுவலகம் செல்வதற்குக் கிளம்பி வந்தபோது அவன் சொன்னதற்கிணங்க பாந்தமாகத் தயாராகியிருந்த மதிவதனி உணவுமேஜையில் அமர்ந்து மாமியாருடன் வம்பளந்துக் கொண்டிருந்தாள்...
மகனைக் கண்ட கோகிலா இருவரையும் பூஜையறைக்கு அழைத்துச் சென்று மருமகளை விளக்கேற்ற வைத்ததுடன், இளையவர்களின் வாழ்க்கை சிறக்க வேண்டுமென தானும் வேண்டிக்கொண்டார்...
பின்னர் அவர்கள் காலை உணவிற்காக உணவு மேஜையில் அமர்ந்ததும், "இன்னைக்கே ரெண்டு பேரும் ஆஃபீஸ் போகணுமா கண்ணா? ரிஷப்சன் முடிஞ்சதும் போகலாமே..." என்றவாறே உணவைப் பரிமாற,
தாங்கள் இருவரும் மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்துவிடுவோம் என தெரிவித்தவன், காலையிலேயே தங்கையைப் பார்க்க வந்திருந்த அதியனைக் கண்டு, "வா மச்சான்..! சாப்டு.." என்றழைத்தான்...
"இல்ல மா..மாமா..! வீட்ல சாப்ட்டேன்..." அங்கு அமர்ந்தவன் தங்கையிடம் நலம் விசாரிக்க, அவளோ அண்ணனிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்...
"பாப்பா..! அப்பாம்மா உன்னோட பேசணும்னு சொன்னாங்க, பேசுறியாடா?" அத்தனை நேரமிருந்த உற்சாகம் வடிய,
"என்னைய நம்பாதவங்க இப்போ எதுக்குண்ணா பேசணும்? நான் பேச மாட்டேன்னு சொல்லு... அதுலயும் முக்கியமா அம்மாட்ட பேசவே மாட்டேன்..!" என்றபடி கன்னத்தைத் தடவியவளின் முகமே சோகமாக மாறிவிட்டிருந்தது...
மனைவியின் முகமாற்றத்தைக் கவனித்து, "ப்ச் விடு பேபி..! எவ்ரிதிங்க் வில் பி ஆல்ரைட்..!" என்றவன் மச்சானை லேசாக முறைக்க, அவன் மாமனின் பக்கமே திரும்பாமல் அவன் பங்கிற்கு தங்கையை சமாதானம் செய்து கொண்டிருந்தான்...
அதியனிற்கு இனிப்பை மட்டும் ஒரு கிண்ணத்தில் எடுத்து வந்த கோகிலா அதை அவனிடம் கொடுத்துவிட்டு சமையலறைக்கு சென்றதும் அண்ணன் தங்கையின் சலசலப்பு மீண்டும் தொடர, அவர்களின் பாசப்பிணைப்பைக் கண்டு மன்னவனின் மனமும் நிறைந்தது...
தந்தை வாங்கிய உடைகளை தன் பிடிவாதக்கார தங்கை ஏற்கமாட்டாள் என்பதையறிந்து தன் சம்பாத்தியத்தில் அவசரமாக வாங்கி வந்திருந்த உடைகளையும் நகைகளையும் அவளிடம் கொடுத்த அதியன், "சரி பாப்பா..! நாளைக்குப் பார்ப்போம்..! வர்றேன் மாமா..!" என்றவன் சமையலறையில் நின்றிருந்த கோகிலாவிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பினான்...
"சரிடா நாமளும் கிளம்பலாமா?" என்று மனைவியைத் திரும்பிப் பார்த்தவன் அவள் எழுந்ததும், "அப்பா எங்கம்மா?" என்று தாயிடம் வினவ,
"உங்க ரிஷப்சன் சம்பந்தமா யாரையோ பார்க்கப் போறதா சொன்னாங்க தம்பி.." என்றதில்,
"ஓ ஈவன்ட் மேனேஜர்ஸ பார்க்கப் போயிட்டாங்க போல..! நான் கால் பண்ணி பேசிக்கிறேன்ம்மா..." என்றதோடு இருவரும் கிளம்பி அலுவலகம் வந்து சேர்ந்தனர்...
அவர்கள் உள்ளே நுழையும்போதே ஊழியர்கள் குழுமி நின்று உற்சாகமாக வரவேற்று, பூங்கொத்து கொடுத்துத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்க, திகைத்து நின்ற மனைவியின் கைப்பிடித்து அழுத்திவிட்டு சிரித்த முகமாக அவற்றை வாங்கிக்கொண்டான் அவன்...
இது நண்பனின் சமாதான முயற்சி என்பது அவனுக்குப் புரிந்தது..! அத்தனை எளிதில் சமாதானமாகும் காரியத்தையா அவன் செய்திருக்கிறான்?
கடுகடுத்த மனதை வெளியே காட்டாமல் தன்னவளுடன் அறைக்குள் நுழைந்தவன் அங்கிருந்த நீள்விருக்கையில் தளர்வாக அமர, கணவனை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு,
"இனிமே நான் யார்கிட்ட ரிப்போர்ட் பண்றதுங்க?" என்றவள் கேட்டதில் சுயமடைந்து,
மகேன் காலையில் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை மனதில் வைத்து அவன் ஒரு மாதம் அலுவலகம் வரமாட்டான் என்பதால் அதுவரைக்கும் தன்னிடம் வருமாறு சொன்னான்...
"ப்ச் மகேந்திரன் சார் பாவம்ல... நம்மளால தான் வரலையா?"
"வாட்... நம்ம அவன என்ன டி பண்ணோம்?" என்றவன் அதிர,
அவனைத் தயக்கமாக ஏறிட்டு, "அ..அது அவங்களோட தான எங்கேஜ்மெண்ட் நடக்குறதா இருந்துச்சு... ஆனா நீங்க என்னைய கல்யாணம் பண்ணிட்டீங்களே... அ..அதான்" என்றாள்...
அப்போது தான் அம்பிகா அவளை அறைந்த அதிர்ச்சியில் அமர்ந்திருந்தவளுக்கு அடுத்தடுத்து நடந்த சில நிகழ்வுகள் மனதில் பதியவில்லை என்பதே புரிந்தது...
நண்பன் பேசியதை ஞாபகப்படுத்தாமல் அவனுக்கு மாமன் மகளுடன் நடந்த கலாட்டா கல்யாணத்தைப் பற்றித் தெரிவிக்க, அதில் பெண்ணவளின் மனம் அமைதியடைய அதற்கு மேல் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை...
அலுவலக நேரம் தொடங்கியதும் சில வேலைகளை மனைவிக்குப் பிரித்துக் கொடுத்தவன் தன் வேலைகளில் மூழ்கிப்போனான்...
ஆனால் பாவம்..! அவள் எதை நினைத்து அலுவலகம் வர பயந்தாளோ அது தான் தேநீர் இடைவேளையில் நடந்தது..!
பலர் முதலாளிகளின் திருமணத்தை பெரியவீட்டு விவகாரம் என்று சாதாரணமாக கடந்திருக்க, வம்பளக்கும் கூட்டம் மட்டும் மகேனைவிட தீரனிடம் பணம் அதிகமிருப்பதால் மதிவதனி அவனை மயக்கிவிட்டதாக அவளின் நடத்தையைப் பற்றி அலசிக் கொண்டிருந்ததைக் கேட்டவளின் விழிகளில் கண்ணீர் துளிர்க்க தன் கேபின்க்கு ஓடி வந்திருந்தாள்...
அலுவலகத்தில் தன்னவளைப் பற்றிப் பரப்பப்படும் அவதூறுகளை அறியாமல், மற்ற அலுவல்களைக் கண்டுகொள்ளாமல் அவளுக்காக நகை வடிவமைத்துக் கொண்டிருந்தான் அவளின் மகி..!
தொடரும்......