மகேந்திரனின் மதிவதனியிவள் - 20
தன் வாழ்க்கையில் நேற்றைய ஓர் நாளில் ஏதோதோ விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்திருந்தாலும் இறுதியில் தன் மனம் விரும்பியவனுடன் இணைந்ததையும், அவன் உண்மையாகவே தன்னை காதலிக்கிறான் என்பதையும் அறிந்து சொர்க்கத்தில் மிதந்துக் கொண்டிருந்த மதிவதனி அங்கிருந்து பொத்தென்று விழுந்திருந்தாள்...
பத்தரை மணிக்கு வழக்கம் போல் தேநீர் குடிப்பதற்காக அலுவலக கேன்டீனுக்குச் சென்றவள், அந்த வம்பளக்கும் கும்பல் தன்னைப் பற்றி அசிங்கமாகப் பேசியதைக் கேட்டுவிட்டாள்...
தந்தைத் தேர்ந்தெடுத்த மகேனோடு இணையாமல் மகேந்திரன் அபர்ஜித்தோடு அவள் இணைந்தது கடவுளினின் முடிவு..!
அதில் அவளென்ன தவறு செய்தாள்?
மனதில் சலனமிருந்தாலும் அவளாக அவனை நாடவில்லையே... பின் எதற்காக இப்படி தவறானத் தகவலைப் பரப்புக்கிறார்கள்?
மதிவதனிக்கு அவர்களின் நியாயமில்லாத வம்புப்பேச்சைக் காட்டிலும், முன்பு கணவனும் இதே மாதிரியாக தன்னை நினைத்தானே, ஒருவேளை இப்போதும் அதே நினைப்பில் தான் இருக்கிறானோ? என்பதை நினைக்கும்போதே நெஞ்சம் ஒரு நொடி துடித்தடங்கியது...
இங்கு வந்த புதிதில் முதல் ஆறு மாதக்காலமும் தன் வேலைகளை சிறப்பாக செய்துவிட்டு அவன் தன்னைப் பாராட்டி விடமாட்டானா என ஏங்கியது, அது கிடைக்காமல் போனதில் அவனுக்கு ஏன் என்னைப் பிடிக்கவில்லை என வாடியது என்று இன்னும் எத்தனையோ அவமானங்களை சந்தித்தப் பின்னரே அவனிடமிருந்து முற்றும் முழுதாக விலகினாள் அவள்..!
இனியும் அப்படியொரு அவமானம் நேர்ந்தால் அவளால் அவனோடு வாழவே முடியாதே..!
இவ்வாறு தன் மனைவி தவிப்பதைப் பற்றி அறிந்திருந்தால், தனக்கு அவள் எத்தனை இன்றியமையாதவள் என்பதைப் புரிய வைத்திருப்பான்...
அங்கு நடந்ததைப் பற்றி எதுவும் அறியாத மகேந்திரன் மதியவேளை நெருங்கியதும் அவளை அழைத்துக்கொண்டு நகரின் பிரபலமான ஒரு ஆடையகத்திற்கு வந்திருக்க, மதிய உணவிற்கு நேரமாவதை உணராமல் கணவன் காட்டிய ஆடைகளை மறுத்து அவனுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாள்...
அதில் சலிப்பாக தலையை உலுக்கியவாறே, 'ப்ச் இவ சரிப்பட்டு வரமாட்டா..! ரிஷப்சன் முடிஞ்சதும் ஒரு நாள் கூட்டிட்டு வருவோம்' மனதில் தானாகவே ஒரு முடிவுக்கு வந்தவன் அவளுக்கு அழகாக இருக்குமென தோன்றிய சில ஆடைகளை எடுத்துக்கொள்ள,
'ஓ இந்த பணக்காரக் கடைல எனக்கு டிரஸ் செலக்ட் பண்ண தெரியலைனு முடிவுப் பண்ணிட்டாங்க போல' என அலுவலகத்தில் யாரோ பேசியதற்கு கணவனைத் தவறாக நினைத்தவள் தனக்குள் நத்தையாக இறுகிப்போனாள்...
அவளுடன் வீடு திரும்பியதும் மதிய உணவை உண்டுவிட்டு தந்தையுடன் வரவேற்பு சம்பந்தமான வேலைகளில் அவன் மூழ்கிவிட, அவள் மட்டும் அறையில் தனியாக அமர்ந்து தேவையற்றதை நினைத்து ஆற்றுவார் தேற்றுவாரின்றி அழுது கரைந்தாள்...
இரவில் வெகு தாமதமாக அறைக்குத் திரும்பியவன், "ஓய் என்ன டி தூங்காம உட்காந்துருக்க?" எனும்போதே மனைவியின் கண்மடல்கள் வீங்கியிருப்பதைக் கவனித்து,
"ஏன்டா அழற? இப்படி நீ அழுதுட்டே இருந்தீனா நாளைக்கு ஈவ்னிங் ரிஷப்சன்ல நிக்கும்போது ரொம்ப டயர்டா தெரிவ..! வா தூங்கலாம்.." அமைதியாக இருந்தவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தான்...
மனைவி பெற்றோரை நினைத்து வருந்துவதாக நினைத்ததால் அடுத்த நாள் மாலை வரையில் அவளை கோகிலாவின் பொறுப்பில் விட்டவனுக்கு அவள் மனம் படும்பாடை கவனிக்க நேரமில்லை...
அன்று அவர்களுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடாகியிருக்க, பால்வண்ண கோட் சூட்டில் கம்பீரமாக நின்ற அவனும், பிங்க் வண்ண டிசைனர் புடவையில் அழகுற தயாராகி நின்ற அவளும் பார்ப்போரின் கண்களை நிறைத்தனர்...
பிங்க் நிற ரோஜாவாய் அருகில் நின்று தன்னை ஈர்க்கும் மனைவியின் அழகை விழிகளால் அவன் களவாட, பெண்ணவளும் ஆணழகனாய் கண்களை கவர்ந்த மன்னவனை அவ்வப்போது ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டிருந்தாள்...
இவையெல்லாம் சில வம்பு பேசும் உறவினர்கள் வரும்வரையே நீடித்தது..!
வீட்டில் ஒரு விஷேசம் வைத்தால் பல நல்லுள்ளங்கள் வருகையில் சிறுமையான மனம் படைத்த சிலரும் வருவது இயல்பு தானே..!
அப்படி அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த வதனியின் அத்தை ஒருவர், "ஏன்டிம்மா உனக்கு இந்த பையன தான் பிடிச்சிருக்குனா முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல... இப்படியா நம்ம குடும்பத்த அசிங்கப்படுத்துவ?" என்று அங்கலாய்த்தார்...
அதில் துணுக்குற்று தன்னவளைப் பார்க்க, அவன் எதிர்ப்பார்த்த மாதிரியே அவள் முகம் கல்லாய் இறுகியிருந்தது...
மனைவியை சமாதானம் செய்யும் நோக்கில் அவளின் விரல்களோடு தன் விரல்களை கோர்த்தவன், "எல்லாம் உங்க தம்பி மேல இருக்க பயம் தான் பெரியம்மா..! நீங்க போய் சாப்டுங்க..." என நிலைமையை சமாளித்துவிட்டு,
"இது நம்மளோட நாள் வதும்மா..! யார் என்ன பேசுனாலும் ஜஸ்ட் ரிலாக்ஸ்..!" என்றதோடு அதன் பிறகு வேறு நோக்கத்தில் மேடையேறி வந்த சிலரையும் அவளிடம் பேசவே விடவில்லை...
அங்கு தன் குடும்பத்துடன் வந்திருந்த மகேனும் நண்பனை அணைத்து வாழ்த்த, மற்றவர்களுக்கு முன்னால் அவனை அவமதிக்க விரும்பாமல் இவன் மெதுவாக முறுவலிக்க,
"சாரிடா மச்சான்..! நமக்குள்ள எல்லாம் சரியானதுக்கு அப்புறம் உன்னோட முக்கியமான நாள்ல நான் இல்லாம போயிட்டேன்னு நம்ம ரெண்டு பேரும் ஃபீல் பண்ணக்கூடாதுல... அதான் நீ கோபப்பட்டாலும் பரவாலனு வந்துட்டேன்..." என்றவன் நீண்ட நேரம் நின்று அவனை கோபப்படுத்தாமல் மனைவியுடன் கிளம்பிவிட்டான்...
அதற்கு மேல் மகேனைப் பற்றி யோசிக்க நேரமின்றி நகரின் முக்கியஸ்தர்கள் பலரும் வந்து மணமக்களை வாழ்த்திவிட்டுச் செல்ல, அம்மாலைப்பொழுது இனிமையாக கடந்தது...
சில திருகுத்தாளங்கள் செய்து நடந்த திருமணம் தான் என்றாலும் தன்னருகில் நிற்கும் மனைவி, ஜென்ம ஜென்மமாய் அவன் காத்திருந்ததற்குக் கிடைத்த வரம் என்பதால் மகேந்திரன் அபர்ஜித்தின் முகத்தில் அப்படி ஒரு பளபளப்பு..!
ஆனால் பெண்ணவள் மட்டும் அவ்வப்போது எதையோ நினைத்து முகம் சுருக்கியதைக் கவனித்து, "முகத்த கொஞ்சம் சிரிச்ச மாதிரி வச்சுக்க டி..! அப்புறம் ஃப்யூச்சர்ல நம்ம பசங்களுக்கு ரிஷப்சன் ஆல்பம் காட்றப்போ உங்க பக்கத்துல நிக்கிற இந்த குரங்கு பொம்மை யாருப்பானுக் கேட்ருவாங்க..." என்றவனுக்கு அடக்கப்பட்ட சிரிப்பில் விழிகள் பளபளத்தன...
அதில் கணவனை தீயாய் முறைத்தவள் தன் உதடுகளை விரித்து சிரித்தாற் போல் வைக்க, சற்று நேரத்தில் மாலைமறைவில் அவனது வலுவான விரல்களின் வருடலிலும், அடிக்கடி காதோரமாகக் குனிந்து அவன் கிசுகிசுத்த ரகசியங்களிலும் இயல்பாகவே அவளின் பூமுகம் ரோஜா நிறம் கொண்டு மலர்ந்தது...
இருவரையும் பாராமல் பார்த்து நின்ற அன்பானவர்களின் உள்ளங்களும் மகிழ்வில் நிறைய, சிற்சில சலசலப்புகளைத் தவிர்த்து விருந்தினர்கள் அனைவரும் பொருத்தமான ஜோடி எனப் புகழ்ந்ததில் வரவேற்பு நிகழ்ச்சி மனநிறைவோடு முடிவுற்றது...
வீடு வந்த புதுமண தம்பதியரை நிற்கவைத்து திருஷ்டி சுற்றியதும் ஓய்வெடுக்க அனுப்பிய கோகிலா வீட்டிலிருந்த நெருங்கிய உறவினர்களைக் கவனிக்கச் சென்றார்...
இரவுடைக்கு மாறி வந்தவளை தன் கைவளைவினில் கொண்டு வந்த மகேந்திரன், "நீ மனசளவுல ரொம்ப ஹர்ட் ஆகியிருக்கனு எனக்குப் புரியுது டி..!
ஆனா இது நம்ம லைஃப்..! இதுல மத்தவங்க ஒப்பீனியன விட, நாம ரெண்டு பேரும் சேர்ந்து எப்படி வாழப்போறோம்ன்றது மட்டும் தான் முக்கியம்னு நான் நினைக்கிறேன்... நீயும் அப்படியே நினைச்சுக்க, சரியாடா?" தன் மனதை அழகாய் உணர்த்தி அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டதோடு தன்னிடத்தில் படுத்தவன் நொடிகளில் உறங்கியிருந்தான்...
கணவன் உணர்த்திய காதல் அவளுக்கு முழுமையாகப் புரிந்தும் புரியாத நிலை..!
அடுத்தடுத்து மறுவீடு சென்றது, குலதெய்வத்தை வணங்கி வந்தது என்று நாட்கள் விரைய ஒரு வாரத்தில் இருவருக்கும் இயல்பு வாழ்க்கைத் திரும்பியது...
அந்த ஒரு வாரத்தில் மன்னவனின் ஆண்மையிலும் மென்மையான பெண்மை இருப்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் அமைய அவன் குடும்பத்தினரே அவனை வித்தியாசமாகப் பார்த்தனர்...
மனைவி மீது அந்தளவிற்கு அன்பையும் காதலையும் காட்டியிருந்தான் அவன்...
ஆனால் அவன் காட்டிய நேசத்தை மீறி அந்த வம்பளக்கும் கும்பல் பேசியதே மனதில் நிலைத்துவிட்டதோடு, முதன்முதலில் அவன் பேசிய வார்த்தைகளும் சில சமயம் தூபம் போட அவனோடு முழுமையாக ஒன்ற முடியாத தவிப்பு அவளிடம்...
அத்தோடு இரண்டுபக்க உறவினர்கள் சிலரும், சில தெரிந்தவர்களும் விடாமல் பேசிய வம்புப்பேச்சும் துணைபுரிய, இருவருக்கும் இடையேயிருந்த பொருளாதார ஏற்றுத்தாழ்வு மிக அழுத்தமாக வேரூன்றியதில் அவளுக்கே தெரியாமல் கணவனிடமிருந்து பனித்திரையாய் விலகி நின்றாள் மதிவதனி..!
பல ஜென்மங்கள் கடந்து கைசேர்ந்த மனைவியைக் காணும்போதெல்லாம் மகேந்திரனின் தாபங்கள் யாவும் கட்டுப்பாடுகளை மீறி கரையுடைக்கக் காத்திருக்க, அதை அவளுக்குக் காட்டாமல் மறைப்பதே பெரும்பாடாக இருக்கும்போது அவளுக்குள் நிறைந்திருக்கும் மனக்குழப்பத்தை எங்கனம் அறிவது?
சில நாட்களிலேயே மனைவியின் ஒதுக்கத்தை, தான் வாங்கி வந்த உடைகளை அவள் தொட்டும் பார்க்காமல் இருந்ததை வைத்து உணர்ந்து கொண்டவனுக்கு மனம் ரணமாய் வலித்தது..!
அவர்களின் திருமணம் முடிந்த முப்பதாம் நாளில் அவனது சந்தேகம் முழுமையாக ஊர்ஜிதமாக, அவளாகவே தன்னை நெருங்கட்டும் என நினைத்து அவளைவிட்டு விலகி நின்றான் அவன்...
மன்னவன் நிலை இப்படியிருக்க இந்த ஒரு மாதத்தில் மதிவதனி சற்று தெளிந்திருந்தாள்...
இவனையா தவறாக நினைத்தோம்? என எண்ணும் அளவிற்கு தன் மீது அன்பைப் பொழிந்த கணவனின் காதலிலும், இரவில் தன்னை அணைத்து நெற்றியில் இதழொற்றுவதோடு அவனது எல்லையை நிறுத்திக் கொண்டவனின் கண்ணியத்திலும் பெண்ணவளின் மனம் அவனிடத்தில் முழுமையாக சரணாகதியடைந்திருந்தது...
அதில் தன்னை நம்பாத பெற்றவர்களை மன்னித்து அவர்களுடன் சாதாரணமாக பேசும் அளவுக்கு முன்னேறியிருந்தவள் அவனோடு இணையும் நாளிற்காக ஏங்கினாள்...
மனைவியின் மனமாற்றத்தை அறியாதவன் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்க, அன்று காலையிலும் அவன் அவளிடம் எதிர்ப்பார்த்தது நடக்காமல் போனதில் ஏமாற்றத்தை விழுங்கிக்கொண்டு அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தான்...
தன்னைக் கண்டாலே கண்கள் மின்ன சிரிப்பவன் நேற்றிலிருந்து வித்தியாசமாக நடப்பதில் திகைத்து, சிறிது நேரம் அமர்ந்து கணவனின் பார்வையைக் கவனிக்க, அது தன்னையும் பீரோவையும் மாறி மாறித் தொடர்வதைக் கண்டுபிடித்தாள்...
அதில் அவள் செய்திருக்கும் மடத்தனத்தை உணர்ந்தவளாக, 'நீ சரியான பைத்தியம் டி மதி..!' என்று மானசீகமாக தலையில் கொட்டிக்கொண்டாள்...
பின்னே இந்த ஒருமாதக்காலமும் கோகிலா மற்றும் அதியன் வாங்கி தந்ததை மட்டுமே அணிந்தவள், தன்னவன் எடுத்து வந்த உடைகளையும் நகைகளையும் தொட்டே பார்க்காமல் இருந்தால் காதல் கொண்டவனின் மனம் என்ன பாடுபடும்?
ஆனால் அவள் ஆரம்பத்தில் அவனைத் தவிர்த்ததோடு சரி..! அதன் பின்னர் அவளுக்காக அவன் வாங்கி வந்து அடுக்கியிருந்த உடைகளை மறந்து போனதால் மட்டுமே உடுத்தவில்லை...
அன்றும் தன் ஏமாற்றத்தை மறைத்தபடி அவன் இயல்பாக நடந்து கொண்டதில் அவளின் தவிப்பு கூடிப்போக, 'ப்ச் சொன்னா புரிஞ்சுப்பாங்களா?' மனதில் புலம்பியபடியே அவனைப் பரிதவிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்...
இதில் நேற்றும் அவன் பரிசாகக் கொடுத்த டிசைனர் புடவையையும் நகையையும் தவிர்த்துவிட்டு வேறு ஒரு சாதாரண புடவையில் கோவிலுக்குச் சென்று வந்தப்பிறகே அவனிடம் இத்தனை தவிப்பைக் கண்ட ஞாபகம்..!
இதற்கு மேல் என்ன செய்யலாம் என்பதை யோசித்து ஒரு முடிவிற்கு வந்தவள் தக்க நேரத்திற்காகக் காத்திருக்க, அவள் கணவனோ அவளுக்கு நேரம் கொடுக்கலாம் என்ற முடிவில் அவளைவிட்டு மேலும் விலகிச் செல்ல அவனுடன் பேசமுடியாமல் போனது...
ஒரு பெண்ணாக கணவனை நெருங்கத் தயங்கியவள், "ப்ச் காதல் மன்னனா இருந்தப்போவே முனீஸ்வரன ஒழுங்கா கரெக்ட் பண்ணியிருக்கலாம்... இப்போ நானா எப்படிப் போறது?" அமைதியாக வேலையில் மூழ்கியிருந்தவனை ஜன்னல் வழியாகக் கண்டு வாய்விட்டுப் புலம்பிக் கொண்டிருந்தாள்...
இப்படியே இரயில் தண்டவாளங்களாய் சிறு இடைவெளி விட்டு இணைந்திருந்த இருவரும் ஓர் மழைநாளின் இரவில் தங்களின் உணர்வுப்போராட்டங்களைக் கடந்து செம்புலப் பெயல்நீராய் கலந்திருந்தனர்..!
தன்னை கொள்ளை கொண்ட மனைவியின் அழகினை அன்றிரவு முழுவதும் களவாடி அவளுள் கரைந்து பரிபூரணமாக நிறைந்திருந்தான் மன்னவன் அவன்..!
தொடரும்......