அத்தியாயம் 25
டோர்ட்மண்ட் நகரின் தமிழர் கடைகள் இருக்கும் இடத்திலேயே மூடப்பட்ட ஒரு கடை இருப்பதாக விசாரித்துச் சொன்னார் சிவதாசன். சின்னவர்களை மேனகாவிடம் விட்டுவிட்டு சிவதாசன், கேசிகன், நாவினி, உதயன், பிரியா ஐவரும் சென்று பார்த்தார்கள்.
நல்ல இடம். விசாலமான கடை. ஏற்கனவே பலசரக்குக் கடையாக அதை நடத்தியவர்கள் ஒழுங்காக வரி செலுத்தாத காரணத்தினால் ஜெர்மன் வரித்திணைக்களம் மொத்தமாகக் கடையை மூடி சீல் வைத்திருந்தது. நிறைய மாதங்களின் பின் விடுவிக்கப்பட்டிருந்தாலும் அதன் பிறகு அதை நடத்த யாரும் முன்வரவில்லை.
கேசிகனுக்குக் கடை, அது அமைந்திருக்கும் இடம், அங்கே தெரிந்த அதிகமான தமிழ்த் தலைகள் என்று எல்லாமே பிடித்திருந்தன. அந்தக் கடை முழுவதையும் பொருள்களால் நிரப்ப எவ்வளவு ஆகும் என்று அவன் போட்ட மனக்கணக்குத்தான் பெரும் மலைப்பைத் தந்தது.
ஒரு வேலை கூட இல்லாமல் இருக்கிறவன் அதை நாவினியிடம் எப்படிக் கேட்பான்? “சின்ன கடையா இருந்தா பரவாயில்லையோ எண்டு இருக்கு.” என்று சிவதாசனிடம் சொன்னான். அவனைத் தனியாக அழைத்து வந்து, “காசுக்கு யோசிக்கிறீங்களா?” என்று கேட்டாள் நாவினி.
அதுதான் என்று சொல்ல முடியாமல் நின்றான் அவன். முதலில் அவன் நினைக்கும் தொகை அவளிடம் உண்டா என்று தெரியாது. இருந்தாலும் கையும் மனமும் கூசாமல் எப்படி வாங்கி வியாபாரத்தில் போடுவான்?
“அப்ப நான் இன்னும் உங்கட பெட்டச்சி இல்லை என்ன?” என்றாள் அவள் வேதனையோடு.
“அடிதான் வாங்கப் போறாய்!” என்றான் அவன் உடனேயே.
“அப்ப ஏன் யோசிக்கிறீங்க?”
“பெரிய தொகை வரும்போல நவி.”
“வரட்டும்.” சர்வசாதாரணமாகச் சொன்னாள் அவள்.
“ப்ச் நவி!” என்று தலையைக் கோதிவிட்டு, “ஆரம்பமே ஏன் இவ்வளவு பெருசா ஆரம்பிக்க? எனக்கு இந்த நாடு, இஞ்ச வியாபாரம் செய்ற முறை எல்லாமே புதுசு. கொஞ்சம் கொஞ்சமா மேல போறதுதானே சரி.” என்று சொன்னான்.
“அதால மட்டும்தான் யோசிக்கிறீங்களா?” என்றாள் பார்வையை அவன் முகத்திலேயே நிலைக்கவிட்டு.
“நவி.”
வேதனை துலங்கும் விழிகளால் அவனையே நோக்கிவிட்டு அங்கிருந்து போக முயன்றாள் அவள். “நவி நில்லு!” என்று எட்டிப் பிடித்து நிறுத்தினான் அவன்.
“காசப் பற்றி யோசிக்காம இருக்கேலுமா நவி? தப்பித்தவறி என்னால லாபம் பாக்கேலாம போயிற்றா?”
அவன் பணமாக இருந்தால் இந்த யோசனை வந்திருக்காதே. ஒரு வேதனை உள்ளே ஊடுருவ, “அந்த விபத்துல லொறி ஓடினவர்லதான் பிழை எண்டுறதால பெரிய தொகை இன்சூரன்ஸ்ல இருந்து வந்தது. வீட்டுக்கும் அப்பா இன்சூரன்ஸ் போட்டு இருந்ததால வீடும் சொந்தமாயிற்றுது. வேற பெரிய செலவு எண்டு எனக்கு ஒண்டுமே இல்ல. அதால என்ர சம்பளத்திலயும் பெரிய தொகை மாதம் மாதம் சேரும். அதால உங்களுக்குத் தேவையான காசு என்னட்ட இருக்கு.” என்றவள் அவனை ஒரு கணம் பார்த்துவிட்டுத் தொடர்ந்தாள்.
“நீங்க கடனாவே என்னட்ட வாங்குங்க. பிறகு திருப்பித் தாங்க. நானும் எந்தக் காலத்திலயும் உங்கட காசில் சாப்பிட மாட்டன்.” என்றுவிட்டுப் போனாள் அவள்.
ஒரு பக்கம் அவள் பேச்சினால் கோபம் எழுந்தாலும் இன்னொரு பக்கம் அவள் ரோசத்தை எண்ணிச் சிரிப்பும் உண்டாயிற்று. மற்ற மூவரும் இவர்கள் பேசட்டும் என்று காத்திருந்ததில் திரும்பவும் அவளைத் தடுத்து நிறுத்திப் பேசாமல் அவனும் அவள் பின்னால் சென்றான்.
“என்னம்மா, என்ன முடிவு எடுத்திருக்கிறீங்க?” முன்னால் வந்தவளிடம் திரும்பி வினவினார் சிவதாசன்.
அவள் பதில் சொல்ல முதல், “வாடகை, முற்பணம் பற்றி விசாரிங்கோ அங்கிள். முடிவு உடனே சொல்லோணும் எண்டு இல்லைதானே. கொஞ்சம் யோசிச்சுப்போட்டு முடிவு செய்வம்.” என்று சொன்னான் கேசிகன்.
அவனுக்கு இந்தக் கடை எடுப்பதாக முடிவானாலும் இங்கே கடைகளை நடத்தும் முறைகள், பொருள்களை எங்கிருந்து கொள்வனவு செய்வது, எப்படி இலாபம் வைத்து விற்கிறார்கள் என்று அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டியிருந்தது.
அவள் கோபப்படுகிறாள் என்பதாலேயே கடையைச் சும்மா திறக்க முடியாதே. களத்தில் இறங்கிப் பார்க்க, தெரிந்துகொள்ள என்று நிறைய விடயங்கள் இருந்தன.
வீடு திரும்புகையில் நாவினிக்கு ஏன் மனம் சரியில்லை என்று அறிந்துகொண்டு, “கவனமா இருக்கிறது பிழை இல்லையே நவி.” என்று கேசிகன் பக்கம் நின்று சொன்னார் சிவதாசன்.
கவனமாக இருப்பது தவறில்லைதான். அவள் பணம் என்று எண்ணித் தயங்குவது வேறாயிற்றே. அவரிடம் அவனை விட்டுக்கொடுத்து எதையும் சொல்லாதபோதும் அவள் மனத்தின் சிணுக்கம் தீருவதாக இல்லை.
உதயன் கார் ஓடிக்கொண்டிருக்க சிவதாசன் அவன் அருகில் அமர்ந்திருந்தார். பின் பக்கம் பிரியா, நாவினி, கேசிகன் என்று அமர்ந்திருந்தனர். மற்றவர்கள் அறியாமல் அவள் கரம் பற்றி அழுத்திக்கொடுத்துச் சமாதானம் செய்ய முயன்றான் கேசிகன். நாசுக்காகக் கையை விலக்கிக்கொண்டாள் அவள். வியப்பும் சிரிப்புமாக அவளை நோக்கிவிட்டுத் திரும்பினான் கேசிகன்.
வீடு சென்று பார்த்தால் மேனகா சின்னவர்கள் இருவரையும் விளையாட விடுவதற்கு பார்க் அழைத்துச் சென்றிருந்தார். இரவு உணவையும் வெளியே முடித்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்கே கொண்டுவந்து விடுவதாகச் சொன்னார்.
கணவன் மனைவி இருவரும் நடந்தே வீட்டுக்கு வந்தனர். கேசிகனுக்கு அங்கே ஊரில் அவர்கள் இருவரும் இப்படி நடந்த பொழுதுகள் நினைவில் வந்தன. திரும்பி மனைவியைப் பார்த்தான். பிடிவாதக் கோபத்தில் அழுந்தியிருந்த அவள் உதடுகளையும் முகத்தையும் கண்டு அடக்கப்பட்ட சிரிப்பில் அவன் கண்ணோரங்கள் துடித்தன.
வீட்டுக்குள் வந்தபிறகும் அவனோடு ஒரு வார்த்தை பேசவில்லை அவள். ஷூக்களை கழற்றிவிட்டு, குளிருக்காக அணிந்துபோயிருந்த மேலங்கியைக் கழற்றி அதற்கான தாங்கியில் தொங்க விட்டுவிட்டு, விடுவிடுவென்று மாடியேறினாள்.
“என்ர மனுசிக்கு கோவம் நல்லாத்தான் வருது!” இடுப்பில் கைகளை வைத்து நின்று மேலே ஏறுகிறவளையே பார்த்துச் சொன்னான் கேசிகன். அவள் அசைவதாக இல்லை. தானும் தன் மேலங்கியைக் கழற்றிக் கொழுவிவிட்டு மாடி ஏறிச் சென்று அறையின் கதவைத் திறந்தான்.
அங்கே அவள் வீட்டுடைக்கு மாறிக்கொண்டிருந்தாள்.
“என்ன கோவம் உனக்கு?” என்றுகொண்டு அவளை நெருங்கினான் கேசிகன்.
அப்போதும் உடை மாற்றுவதிலேயே கவனமாக இருந்தாள் நாவினி.
“நவி!”
உடை மாற்றி முடித்தவள் அவனைப் பாராமல் தாண்டிக்கொண்டு செல்ல முயன்றாள். அதற்கு விடாமல் பற்றி நிறுத்தி, “கதைக்க மாட்டியா?” என்றான் அவன்.
அப்போதும் பதில் சொல்லாமல் பிடிவாதம் துலங்கும் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றாள் நாவினி. அவனும் விடாமல் அவளையே பார்த்து நின்றான். அவள் பார்வை மெல்ல மெல்ல தடுமாற ஆரம்பித்தது. எவ்வளவோ தடுக்க முயன்றும் முடியாமல் கன்னங்கள் சூடாக ஆரம்பித்தன. கீழுதட்டைப் பற்றித் தன்னைச் சமாளிக்க முயல, அவளையே பார்த்திருந்தவன் சத்தமாக நகைத்தான்.
“அழகியடி!” கிறங்கும் குரலில் கிசுகிசுத்துவிட்டு அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி இதழ்களில் ஆழ்ந்து முத்தமிட்டான். விலக மனமேயில்லை. பேச வந்ததை மறந்து முகம் முழுக்கத் தன் முத்திரைகளைப் பதித்தான். மீண்டும் இதழோடு இதழ் பொருத்தினான்.
இலேசாக விலகி, “நவிம்மா!” என்று தொண்டையைச் செருமிக்கொண்டு அழைத்தான். அவள் விழிகள் மயக்கத்தில் மூடியே இருந்தன. அவன் உதட்டினில் மெல்லிய முறுவல். “கேசி சொல்லு நவி.” என்று அவள் காதோரம் கிசுகிசுத்தான்.
பட்டென்று விழிகளைத் திறந்து பார்த்தாள் நாவினி. எப்போது எப்படி அவளைக் கட்டிலுக்குக் கொண்டுவந்தான் என்று அவளுக்குத் தெரியாது. ஆனால், அவன் கையணைப்பில் கிடந்தாள் அவள்.
“சொல்லு.”
என்ன திடீரென்று? அவள் பார்வை ஆச்சரியத்துடன் நோக்கிற்று.
“அனுப்பின மெசேஜ் முழுக்க அவ்வளவு உரிமையா எழுதி இருந்தியே. இப்ப கூப்பிட மாட்டியா?”
ஆரம்ப காலங்களில் கேசி அண்ணா என்று அழைக்கையில் இயல்பாக வந்தது. அதுவே அவனைத் தன்னுடைய நாயகனாக வரித்துக்கொள்ள ஆரம்பித்தபோது எழுந்த வெட்கமும் கூச்சமும் பெயர் சொல்ல விடவில்லை.
பிறகு மனத்தால் மிகவும் கலங்கிப்போயிருந்த காலத்தில்தான் மெசேஜ் அனுப்பினாள். அவையெல்லாம் அவள் உள்ளத்தின் அடியாழத்தில் கிடந்த தவிப்புகள். அதனாலோ என்னவோ இயல்பாய் வந்த அந்தக் கேசி இப்போது வரமாட்டேன் என்றது.
“சொல்லாம இண்டைக்கு உன்னை விடமாட்டன்.” தண்டனை கொடுக்கிறேன் என்கிற பெயரில் மோகம் கொண்டு அவளை முற்றுகையிட்டவனின் செய்கைகளில் நிலைகுலைந்துகொண்டிருந்தவளின் சுவாசமே தடம்புரண்டிருந்தது. பேச்சு எப்படி வரும்? அவன் சட்டையை இறுக்கிப் பற்றித் தன்னை நிலைநிறுத்த முயன்றாள். முடிய வேண்டுமே.
எப்போதுமே பக்கத்து அறையில் சின்னவன் இருக்கிறான் என்கிற கவனம் இருவரிடமும் இருக்கும். தம் உணர்வுகளுக்குக் கண்ணுக்குத் தெரியாத கட்டுப்பாடு ஒன்றை விதித்தபடியே கரையைக் கடப்பார்கள். இன்று அப்படி இல்லை. தடையில்லாத் தனிமையும், ஊடலின் பின்னான கூடலும் சேர கேசிகனைத் தடுப்பார் யாருமில்லாது போயிற்று.
“கே…சி!” திக்கித் திணறிச் சொன்ன பிறகாவது விடுவான் என்று பார்க்க, அதன் பிறகுதான் அவன் ஆசையும் வேகமும் அதிகரித்துப் போயிற்று. உணர்வுகள் கரையுடைத்து, உயிர் மொத்தமாக உருகி வழிந்து, அவள் மூர்ச்சையடைகிற பொழுதுகளில் எல்லாம் கேசி மட்டுமே அவள் இதழ்களில் நிறைந்துகிடந்தான்.
சண்டை சமாதானத்தில் முடிந்தாலும் சண்டைக்கான தீர்வு காணப்படாமலேயே அன்றைய இரவு கழிந்துபோயிற்று. அவளிடம் பணம் இருக்கிறது என்பதற்காக எடுத்ததும் பெரிதாக ஆரம்பிக்கத் தயங்குவதற்கான காரணங்களை அடுத்த நாள் அவளிடம் விளக்கிச் சொன்னான் கேசிகன்.