மரகத மாமன் 11
ஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே…
பெண் தானே நீ என்று முறைக்குதே…
என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தீராமல் நின்றேனே…
அன்றைய இரவில் தனது படுக்கையறையில் கண்களில் கண்ணீருடன் இப்பாடலைக் கேட்டவாறு படுத்திருந்தாள் மரகதம்.
உயிரிலே எனது உயிரிலே…
ஒரு துளி தீயை உதறினாய்…
உணர்விலே எனது உணர்விலே…
அனுவென உடைந்து சிதறினாய்…
மரகதத்திற்கு மிகவும் பிடித்த பாடல் இது. அன்றாடம் இரவில் காதொலிப்பானை மாட்டிக் கொண்டு பாடல்களைக் கேட்டவாறு உறங்குவது தான் அவளின் வழக்கம். அவ்வாறு இப்பாடலை பல முறை கேட்டிருக்கிறாள். ஆனால் இன்று இப்பாடல் அவளின் மன உணர்வுகளை அப்படியே பிரதிபலிப்பதாகத் தோன்றியது.
மணிவாசகத்திடம் திருமணத்திற்குச் சம்மதம் என்று கூறிவிட்ட போதிலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனம் துளியுமில்லாமல் அல்லாடினாள் மரகதம்.
இந்நிலையில் மணிவாசகம் வீட்டில் திருமணத்தைப் பற்றிக் கூறாது மலேசியாவிற்கு வேலைக்குச் செல்வதற்காக அங்குப் போவதாய்க் கூறியதை அறிந்து கோபம் கொண்டாள்.
"ஏன் மாமா இப்படிச் சொல்லிருக்கிய? இவிங்க சம்மதம் இல்லாம வேற நாட்டுல எப்படிப் போய் நான் கண்ணாலம் கட்டிக்கிட்டு வாழுவேன். இவியலுக்குலாம் பின்னால தெரிய வரும் போது நான் கண்ணாலத்துக்காக அலைஞ்சிட்டுக் கெடந்ததா பழிப் பேசுவாவ மாமா! இப்படிப் பொய் சொல்லி ஒரு கல்யாணம் எனக்கு வேணாம் மாமா" என்று கூறி விட்டாள்.
"இப்ப நீயே வேணாமுனு சொன்னாலும் உம்ம அம்மையும் அக்காளும் உன்னிய மலேசியாவுக்குப் பார்சல் கட்டாம வுட மாட்டாவ தாயி" என்று சிரித்த மணிவாசகம்,
"நீ வூட்டாளுவகிட்ட உண்மைய சொன்னியல்னா என் கண்ணாலமும் இதால தடைப்பட்டுப் போகும் . அப்புறமேனிக்கு நான் ஆயுசுக்கும் தனி மரமா நிப்பேன். நான் அப்படி நிக்குறது உமக்குச் சந்தோசம்னா நீ வூட்டுக்குப் போய் உண்மையைச் சொல்லும்" என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டான் மணிவாசகம்.
அவன் இவ்வாறு கூறியதும் அவளும் அவன் கூறிய பொய்யிற்கு ஒத்து ஊத வேண்டியதாகிப் போனது.
இவளின் குடும்பத்தார் அனைவருக்கும் இவளுக்குக் கிடைத்திருக்கும் இந்தப் புது வேலையை எண்ணி அத்தனை மகிழ்ச்சி.
வேலை முடிந்து மாலை வீட்டிற்கு வந்தவளிடம் அம்மாவும் அக்காளும் அந்த வேலைக் குறித்துக் கேள்வியாய் கேட்டுக் குடைந்த போது, பொய் சொல்லத் தெரியாமல் தடுமாறினாள்.
"அப்படி என்ன லட்ச ரூபாயிக்கு மலேசியால உனக்குச் சோலி?" என்று செல்வி கேட்கவும்,
'அய்யய்யோ என்ன வேலைனு இந்த மாமன் சொல்லவே இல்லயே' என்று திருதிருவென விழித்தவள் குளித்துவிட்டு வந்து பேசுவதாய் உரைத்து விட்டு அறைக்குள் சென்று கதவைப் பூட்டியவளாய் மணிவாசகத்தின் கைப்பேசிக்கு அழைத்தாள்.
"மாமா நீங்க பாட்டுக்கு பொய் சொல்லிட்டு போய்ட்டிய? அவிங்க என்னிய கேள்வியா கேட்டு துளைக்கிறாங்க" என்றவள்,
"என்ன வேலை? எந்த ஊரு? எப்படி அப்ளை பண்ணேன்? இன்டர்வியூ எப்படி நடந்துச்சு? என்ன கேள்வி கேட்டாவ?" என்று வரிசையாய் இவள் அடுக்க, அனைத்திற்குமே பதில் வைத்திருந்தான் மணிவாசகம்.
அவனின் பதிலில் ஆச்சரியம் கொண்டவளாய், "எப்படி மாமா இப்படி? என்னமோ அந்த ஊருலேயே பொறந்து வளர்ந்தவிய மாதிரி இம்பூட்டு விஷயம் சொல்லுதிய" என்று கேட்டாள்.
"நான் அந்த ஏஞ்சல் புள்ளகிட்ட கேட்டேன். அது சொல்லிக் கொடுத்துச்சு" என்றான் மணிவாசகம்.
"ஏஞ்சலா? அது யாரு? உன்னைக் கட்டிக்கிடுதா சொன்னிச்சே அந்தப் புள்ளையா?" எனக் கேட்டாள்.
"ஆமா அவா சொல்லிட்டுத் தான் மறுவேலைப் பார்ப்பாவ பாரு" என்று சிரித்தவன்,
"அதான் புதுசா படம்லாம் வரைஞ்சி கொடுக்குது, வீடியோலாம் செய்யுதுலா.. அந்தச் சாப்ட்வேரை சொல்லுதேன்" என்றான்.
"ஹா ஹா ஹா.. மாமா அது ஏஐ. அதுக்கு ஏஞ்சல்னே பேரு வச்சிட்டியா" என்றவளாய் வாய்விட்டுச் சிரித்தாள் மரகதம்.
"அதே தான்த்தா" என்றவன்,
"பொய் சொல்றது ஒரு கலை. பொய்யே சொல்லிடக் கூடாது. அப்படிச் சொல்லிப்புட்டோம் அது யாருக்கும் தெரியாம காப்பாத்துறதுல கிங்கா இருக்கனும்" என்றான்.
"மாமா எனக்கு அதெல்லாம் வராது. நான் என்னிக்கு பொய் சொல்லிருக்கேன். எனக்கு மனசு திக்திக்னு அடிச்சிக்குது. என்னிய இப்படிச் சிக்கல்ல கொண்டு வந்து விட்டிருக்கியே மாமா" என்று புலம்பினாள்.
"எல்லாம் உன் நல்லதுக்குத் தான் தாயி. நான் சொல்ற மாதிரி நீ செய்யி போதும்" என்று இணைப்பைத் துண்டித்தான்.
அதன் பிறகு அவர்களின் கேள்விகளுக்கு எல்லாம் இவன் கூறியதை வைத்து பதிலிறுத்திருந்தாள்.
இவளின் தம்பியான முத்துராமன் இவளுக்கு அழைத்து, "வர்ற வாய்ப்பை விட்டுடாத அக்கா" என்று அறிவுரை கூறியிருந்தான்.
இவை எல்லாம் நினைத்தவாறு படுத்திருந்தவளின் புலனத்திற்குக் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி எழுப்பி அவளின் சிந்தனையைக் கலைத்தது.
"ஹாய் ஸ்வீட் ஹார்ட்" என்று புதிய எண்ணிலிருந்து வந்திருந்த குறுஞ்செய்தியைப் பார்த்துப் புருவத்தைச் சுருக்கினாள்.
"ஹூ இஸ் திஸ்?" என்று அவள் அனுப்ப,
"நான் தான்ங்க உங்க வருங்காலப் புருஷன்" என்று அனுப்பினான் கதிர்மாறன்.
'அய்யோ அவரா?' என்று பதறியவள், 'நடுராத்திரி என்னத்துக்கு மெசேஜ் செஞ்சிருக்காரு' என்று எண்ணியவளாய் கைப்பேசியில் அவன் அனுப்பிய குறுஞ்செய்தியையே பார்த்திருந்தாள்.
அடுத்து அவன் ஏதோ தட்டச்சுச் செய்வதாய்ப் புலனம் காண்பிக்க, குறுகுறுப்புடன் கைப்பேசியையே பார்த்திருந்தாள்.
"சாரி லேட் நைட் மெசேஜ் செய்றேன்னு தப்பா நினைக்க வேண்டாம்" என்று அடுத்து அனுப்பினான்.
'பரவாயில்ல கொஞ்சம் இங்கிதம் தெரிஞ்ச ஆளா தான் இருக்காரு' என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டாள்.
"நான் இன்னிக்கு ஆபிஸ் வேலைல பிசி ஆகிட்டதால இப்ப தான் நான் வீட்டுக்கு வந்தேன். வந்ததும் நீ கல்யாணத்துக்குச் சம்மதிச்சிட்டதா அப்பு சொன்னா! எனக்கு உன் வாயால நேரடியா கேட்டா தான் மனசு நிம்மதியாகும். கால் பண்ணலாம்னு தான் நினைச்சேன். அப்புறம் நேரம் ஆகிடுச்சேனு தான் மெசேஜ் செஞ்சேன்" என்று அனுப்பினான்.
'இப்ப நான் என்ன பதில் சொல்றது?' என்று இவள் யோசிக்கும் பொழுதே,
"உனக்கு என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிறதுல சம்மதமா மரகதம்?" எனக் கேட்டு அனுப்பியிருந்தான்.
அவள் தயங்கியவாறு பதில் அனுப்பாமல் இருக்க, பத்து நிமிடங்கள் வரை காத்திருந்தவன், "உனக்கு விருப்பமில்லைனாலும் சொல்லிடு மரகதம். மணி மாமா உன்னை எதுவும் கம்பெல் செஞ்சாரா? அவர் தான் இந்த ஏற்பாடுலாம் செய்றாருனு தெரியும். இன்னும் மூனு நாள்ல நீ மலேசியா வர அளவுக்கு அவர் எல்லா ஏற்பாடும் செஞ்சி வச்சிருக்காரு. ரெண்டு கல்யாணத்தையும் ஒன்னா நடத்தலாம்னு பிளான். உனக்கு விருப்பமில்லாம இங்கே எதுவும் நடக்காது" என்று பெரியதாகத் தட்டச்சுச் செய்து அனுப்பினான்.
"எதுவும் நடக்காதுனா மாமா கல்யாணமும் நடக்காதா?" எனக் கேட்டு அனுப்பினாள் மரகதம்.
அவளின் இக்கேள்விலேயே மணிவாசகம் எவ்வாறு அவளைச் சம்மதிக்க வைத்திருக்கிறான் என்று புரிந்து போனது கதிர்மாறனுக்கு.
ஏற்கனவே அவனது தங்கையிடம், "என்னோட கல்யாணத்துக்காக நீ ஒன்னும் மணி மாமாவை கல்யாணம் செஞ்சிக்க வேண்டாம் அப்பு" என்று கூறியிருந்தான் கதிர்மாறன்.
"உனக்கு மணி மாமா மேல நல்ல அபிப்பிராயம் தானே இருக்குடா மாறா. அப்புறம் நான் அவரைக் கட்டிக்கிறதுல உனக்கு என்ன கஷ்டம்?" என்றவள்,
"நடந்தா நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல கல்யாணம் நடக்கட்டும். அப்படி இல்லனா அதுக்குப் பிறகு நான் கல்யாணம் செஞ்சிக்கவே மாட்டேன்" என்று கூறித் தான் இந்த அவசரத் திருமணத்திற்குக் கதிர்மாறனை ஒப்புக் கொள்ள வைத்திருந்தாள் மேகி.
இதையெல்லாம் எண்ணிப் பார்த்தவனாய், "நம்ம கல்யாணம் நடக்காம மாமா கல்யாணம் நடக்காதா?" என்ற மரகதத்தின் கேள்விக்கு,
"ஆமா" என்று அனுப்பினான் கதிர்மாறன்.
அதைப் பார்த்ததும், 'அய்யோ நான் சம்மதம் சொல்லலைனா மாமாவோட கண்ணாலம் நடக்காதுனு சொல்லுறாரே' என்று பதறியவள்,
"சரி நான் உங்களைக் கட்டிக்கிடுதேன். மாமாவை உங்க தங்கச்சிக்கு நீங்க கட்டி வைக்கனும் சரியா" என்று அனுப்பிய விட்டு கைப்பேசியைத் தூரமாய் வைத்தவளாய்ப் படுத்து விட்டாள்.
சில நிமிடங்கள் கண்களை மூடிப் படுத்திருந்தவள் மனத்தின் குறுகுறுப்புத் தாளாமல் கைப்பேசியை எடுத்து அதற்கு அவன் என்ன பதிலிறுத்திருக்கிறான் என்று பார்த்தாள்.
"கண்டிப்பா இரண்டு கல்யாணமும் ஒன்னா நடக்கும்" என்று அனுப்பியவன் அதன் பிறகு,
"தேங்க் யூ ஸ்வீட் ஹார்ட் அண்ட் லவ் யூ சோ மச்" என்று அனுப்பியிருந்தான்.
அதைப் பார்த்ததும் அவளின் மனத்திற்குள் இனம்புரியா இன்பத்துடன் கூடிய படபடப்பு உண்டானது.
கை நிறைய இதயத்தைத் தாங்கி இருப்பது போன்ற ஸ்டிக்கரை அனுப்பியவன், "இனி உனக்கு வாழ்க்கைல என்ன பிரச்சினை கஷ்டம்னாலும் நான் இருக்கேன். நீ தனியா சமாளிக்க வேண்டாம். உன் கூடவே நான் இருக்கேன். எதுனாலும் என்கிட்ட சொல்லனும் சரியா. இப்போதைக்கு நிம்மதியா தூங்கு. குட் நைட் டார்லிங்" என்று அனுப்பி விட்டு ஆஃப் லைன் சென்று விட்டான்.
இதனை வாசித்ததும் இவளின் கண்களில் கண்ணீர் சூழ்ந்து விட்டது.
அப்படியே கண்ணீருடன் கண் மூடிப் படுத்தவளுக்கு, அரவணைப்பாய் அவனது கரம் அவளைப் பாதுகாப்பது போன்ற பிம்பம் தோன்றவும் கண்ணீர் கரைப் புரண்டு ஓடியது. மனத்தின் பாரம் குறைந்தது போன்று உணர்ந்தாள். இனம்புரியா நிம்மதி மனத்தைச் சூழ்வதைப் போன்று உணர்ந்தாள்.
மீண்டுமாய்க் கைப்பேசியை எடுத்து அவன் அனுப்பியிருந்த அந்தக் குறுஞ்செய்தியையே வாசித்தவளாய் ஆசுவாசமான மனத்துடன் உறங்கிப் போனாள் மரகதம்.
******
மறுநாள் காலை மணிவாசகம் பூ கடையில் காலைப் பணிகளை முடித்து விட்டு மரகத மணீஸ்வரர் பெருமானைத் தரிசித்து விட்டு வந்தவன் கோவில் குளத்தின் அருகில் இருந்த படிக்கட்டில் அமர்ந்தான்.
கைப்பேசியை எடுத்து அழைப்பு விடுத்தவன், "ஏலே பழனி எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டியாலே" என்று கேட்டான்.
மறுபுறம் சென்னையில் தனது வீட்டினில் இருந்த பழனி, "டேய் மச்சான், அதுக்காகத் தானே என்னை மூனு மாசமா பொண்டாட்டி பிள்ளைய விட்டுட்டு மலேசியால உன் ஆளு வீட்டுக்கு எதிருலேயே வீடு எடுத்து தங்க வச்சடா! அங்கேயே உனக்கும் மரகதத்துக்கும் வேலைப் பார்த்து, அந்த வேலை மூலமா உங்களுக்கு விசாவும் ரெடி செஞ்சி வச்சிட்டு தானடா இந்தியாவுக்கு நான் வந்தேன். இப்ப வந்து எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சானு கேட்குற" என்றார்.
"ஏலேய் அறிவாளி! நான் அதைக் கேட்கலைடே. அதான் எனக்கு ஏற்கனவே தெரியுமே. நாங்க இங்கன இருந்து மலேசியாவுக்குப் போறதுக்கு ஏற்பாடு செஞ்சிட்டியாலேனு கேட்டேன்டா மடப்பயலே" என்றான்.
"அடேய் என்ன தான் நண்பனா இருந்தாலும் என் வயசுக்குனு மட்டு மரியாதை இல்லையாடா?" என்றார் பழனி.
"ம்ப்ச் உன் பேச்சை எல்லாம் அப்புறமேட்டுக்கு வச்சிக்கடா மச்சி. செம்ம காண்டுல இருக்கேன் நானு. மொதல்ல நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு" என்றான்.
"ரைட் விடு. கடுப்புல இருக்கும் போது எது பேசினாலும் நெருப்புல போட்டா மாதிரி எரியத் தான் செய்யும்" என்றவன்,
"நாளைக்கு நைட் நீயும் மரகதமும் அங்கிருந்து கிளம்பி சென்னைக்கு வரதுக்கும், இங்க இருந்து நீங்க மலேசியாவுக்குப் போறதுக்கும் எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சு. ஒரு நாள் நீங்க எங்க வீட்டுல தங்குற மாதிரி இருக்கும். மரகதத்தை இங்கே கூட்டிட்டு வந்த பிறகு கல்யாணத்துக்குத் தேவையானதை என் பொண்டாட்டி கூட்டிட்டு போய் வாங்கிக் கொடுக்கிறதா சொல்லிருக்கா. அதனால ஒரு நாள் ஷாப்பிங்லயே போய்டும். மறுநாள் நீங்க மலேசியா ஃப்ளைட்ல போக சரியா இருக்கும். அங்க கல்யாண ஏற்பாடுலாம் கதிரு பார்த்துக்கிடுறதா சொன்னியே" என்றார் பழனி.
"ஹ்ம்ம் ஆமாலே! மலேசியாக்குப் போய் நாங்க இறங்கிட்டா போதும். மத்ததெல்லாம் என் மச்சான் பார்த்துக்கிடுறதா சொல்லிட்டான்" என்று பெருமூச்சு விட்ட மணிவாசகம்,
"தேங்க்ஸ் மச்சான்" என்று சுரத்தே இல்லாமல் கூறினான்.
"என்னாச்சுடா? கல்யாண மாப்ள மாதிரி கலகலனு பேச மாட்டேங்கிறியே? அங்கே எதுவும் பிரச்சனையா என்ன?" எனக் கேட்டார் பழனி.
"அதெல்லாம் இல்லடே! எல்லாமே சரியா நடக்கனுமேன்ற பதட்டம் தான். நான் மரததம் வீட்டாளுவிய கிட்ட பேசிட்டேன் மச்சான். அவிங்களைச் சமாளிக்கிறது கஷ்டமில்ல. மரகதத்தைச் சமாளிச்சுக் கொண்டு போறது தான் கஷ்டம். அவ மனசு மாறதுக்குள்ளாற கொண்டு போய்க் கட்டி வச்சிடனும். அங்கன போன பொறவு அண்ணனும் தங்கச்சியும் எப்படி நடந்துப்பாவனு தெரியலை. அதை வேற சமாளிக்கனும்" என்றான் மணிவாசகம்.
"மச்சி என்ன கஷ்டம் நஷ்டம் வந்தாலும் நாளைக்கு நீங்க எல்லாம் மாமா மச்சான்னு சொந்தம் ஆகிடுவீங்க. நான் மச்சான் மாப்ளைனு கூப்பிட்டாலும் உனக்கு ப்ரண்ட் தானேனு கழட்டி விட்டுடாதடா. எனக்குத் தர வேண்டிய பங்கை மறந்துடாத மச்சி. அதை நம்பி நிறையத் திட்டம் போட்டு வச்சிருக்கேன்" என்றார் பழனி.
"உனக்கு உன் கவலை" என்று சிரித்த மணிவாசகம்,
"என்னிய பத்தி தெரியாதாலே உனக்கு. அப்படி ஏமாத்துற ஆளா நானு" என்றான்.
"உன்னை நம்புறேன்டா. ஆனா அவங்க மாமன் வித்யாதரனை நம்ப மாட்டேன். நான் உன்னை நம்பி தான் இந்த வேலைக்குள்ள இறங்கினேன். அதனால அவங்க மாமன் ஏமாத்தினாலும் நீ என்னை ஏமாத்திடாதனு தான் சொல்ல வரேன்" என்றார் பழனி.
"அதெல்லாம் பார்த்துக்கலாம்டே! எனக்கு டிக்கெட் எல்லாத்தையும் அனுப்பி விடு. நாளைக்கு ராவுக்குக் கிளம்புறதுக்கு மரகதத்தையும் தயாரா இருக்கச் சொல்லுதேன்" என்றவனாய் மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் கதிர்மாறனின் மாமனான வித்யாதரனுக்கு அழைத்தான்.
"நம்ம திட்டப்படி எல்லாம் சரியா நடக்குது. நாங்க அங்கன போய் இறங்கின பொறவு கல்யாணம்லாம் நல்லபடியா முடிஞ்ச பொறவு உங்ககிட்ட பேசுதேன்" என்றவனாய் அழைப்பைத் துண்டித்தவன் அடுத்தடுத்த திட்டங்களைக் குறித்துச் சிந்திக்கலானான்.