மரகத மாமன் 5
கதிர்மாறன் மரகதம் என்று அழைத்ததில், கோவிலின் பின்னே இருந்த சிமெண்ட் திண்டில் அமர்ந்திருந்தவள், 'நம்மளை இவன் இப்படிலாம் நீட்டி முழக்கிப் பேரு சொல்லிக் கூப்பிட மாட்டானே' என்று எண்ணியவாறே வந்து பார்த்த போது, அந்தப் பெண் கோவிலிலிருந்து வெளியே செல்வதைப் பார்த்தாள் கதிர்மாறனின் தங்கையான மரகதம்.
"டேய் ப்ரோ! என்னடா பண்ண? ஏன் அந்தப் பொண்ணு அப்படிப் பிச்சிக்கிட்டு ஓடுது" என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.
"அடியேய் சவுண்ட்டை குறை! நீயே கத்தி எனக்குச் செருப்படி வாங்கிக் கொடுத்துடாத" என்று அவளின் வாயில் அடித்தான் கதிர்மாறன்.
"ஆஆஆஆ" என்று வாயைத் தேய்த்தவளாய், "ஏன்டா உன்னை அடிக்கப் போறாங்க?" எனப் புரியாத பாவனையில் கேட்டாள்.
"இதென்ன சிட்டினு நினைச்சியா? கிராமம்டி! பொண்ணுங்க பின்னாடி பசங்க சுத்தினாலே அடி வெளுத்து விட்டிருவாங்க" என்றான்.
"ஓ அப்படி ஒன்னு இருக்கோ?" என்றவள்,
"ஆமா நீ என்ன சொன்ன? அந்தப் பொண்ணு அப்படிப் பிச்சிக்கிட்டு ஓடுச்சு?" எனச் சிரிப்புடன் கேட்டாள்.
"என்னைக் கட்டிக்கிறியானு கேட்டேன்" என்றான்.
"அடப்பாவி! நேரடியாவே கேட்டுட்டியா?" என்று சிரித்தாள்.
"ஆமா எத்தனை நாளா தேடின பொண்ணு, நேர்ல பார்த்ததும் வேற எதுவும் கேட்கத் தோணலை! போட்டோல பார்த்த மாதிரியே அப்படியொரு அழகு அவ" பார்வையில் ரசனையைத் தேக்கி உரைத்தவன்,
"ஆனா ஒன்னு தான் எனக்குப் புரியலை" என்று தீவிரமான குரலில் கூறினான்.
"என்ன ப்ரோ புரியல?" என்று அதே தீவிர குரலில் கேட்டாள் அவள்.
"அதெப்படி அவ்ளோ அழகான பொண்ணுக்கு மரகதம்னு உன் பேரை வச்சாங்கனு தான் புரியலைடி" என்று அவன் கூறவும், "அடப்பாவி அப்ப மரகதம்னு அந்தப் பொண்ணைத் தான் கூப்பிட்டியா?" அவனை முறைத்தவளாய் பட்டெனக் கையில் அடித்தாள்.
வானத்தைப் பார்த்தவாறு, "மிஸ்டர் தகப்பா, நான் சொன்னேனே கேட்டீங்களா? இந்தப் பேரை மாத்துங்க மாத்துங்கனு எத்தனை தடவைச் சொல்லிருப்பேன் கேட்டீங்களா? உங்க தாயோட பேருனு வச்சீங்களே! இப்ப இந்த எருமைலாம் என்னைக் கிண்டல் பண்ணுது பாருங்க" என்ற மறுநொடி,
"அடிங்கு.. யாரைப் பார்த்துடி எருமைனு சொன்ன?" என்று அவளை அவன் அடிக்கத் துரத்த, அங்கிருந்து சிட்டென ஓடியவளாய் கோவிலுக்கு வெளியே சென்றவள் பாறையின் மேல் மோதியது போல் எதிலோ மோதி கீழே விழுந்தாள்.
"ஹே பார்த்துடா அப்பு" என்றவனாய் கதிர்மாறன் அவளருகே வர,
தலை மோதியதில் விறுவிறுவெனச் சுத்த, எதென் மீது தாம் மோதினோம் என இவள் யோசிக்கும் முன், அவளின் கைப்பற்றித் தூக்க முனைந்தான் மணிவாசகம்.
அவனின் முரட்டுக் கரம் அவளின் மென்மையான கரத்தைப் பற்றவும் சுற்றிய தலைக்குள் அதிர்வு உண்டாக அப்படியே மயக்கத்திற்குள் அவள் செல்ல, மூடப்பட்ட அவளின் விழிகளைக் கண்டு தனது தொடை மேல் அவளைச் சாய்த்தவனாய், "தாயி, என்னாச்சு தாயி" என்று பதறியவாறு அவளின் கன்னத்தைத் தட்டினான் மணிவாசகம்.
"அப்பு" என்றவாறு தங்கையிடம் வந்த கதிர்மாறன் அவளைத் தனது மடியினில் சாய்த்துக் கன்னத்தைத் தட்ட, தனது கடைக்கு ஓடோடிச் சென்று தண்ணீரை எடுத்து வந்த மணிவாசகம் அவளின் முகத்தில் தெளித்தான்.
மெல்ல கண் விழித்த மரகதம், "அய்யோ டைம் ஆகிடுச்சு டைம் ஆகிடுச்சு.. மீட்டிங்கு டைம் ஆகிடுச்சு.. இவ்வளோ லேட்டாவா என்னை எழுப்பவ ப்ரோ" என்றவளாய் எழுந்து நின்றவள் அப்பொழுது தான் சுற்றத்தைப் பார்த்தாள்.
தூக்கத்திலிருந்து எழுந்தது போன்ற உணர்வில் எழுந்து நின்றவளுக்குச் சட்டெனச் சுற்றம் பிடிபடாமல் போக,
"ப்ரோ நாம எங்கே இருக்கோம்?" என்றவளின் கேள்வியில் பயந்து போனவனாய், "அப்பு கன்னத்துல ஒரு அப்பு அப்பிடுவேன் பார்த்துக்க" உள்ளுக்குள் திகலெடுக்கச் சற்றுக் கோபமாக உரைத்தான்.
இவனின் கோபப் பேச்சிலும் அவளின் பயந்த பார்வையிலும் கடுப்பானவனாய் இவர்களின் நடுவே வந்த மணிவாசகம், "என்ன தம்பி ஒடம்பு சுகமில்லாதவியகிட்ட போய்க் கைய ஓங்கிட்டு நிக்கிய" என்றவாறு அவளின் கரத்தைப் பற்றி இழுத்துச் சென்றவன், அவளைத் தனது கடையில் இருந்த நாற்காலியில் அமர வைத்து விட்டு அருகில் கடையில் சோடாவை வாங்கி வந்து அவளிடம் குடிக்கக் கொடுத்தான்.
அண்ணனின் திட்டலில் பயந்த பார்வையுடன் மலங்க விழித்தவள் மணிவாசகத்தின் இழுப்புக்குச் சென்றிருந்தாள். அவன் கொடுத்ததைக் குடித்ததும் சற்றாய் தெம்பு வந்ததைப் போல் உணர்ந்தவள் அப்போது தான் கதிர்மாறனின் கண்களில் கண்ணீர் தேங்கி நிற்பதைக் கண்டாள்.
தன்னருகே நின்றிருந்த கதிர்மாறனின் கரத்தைப் பற்றி, "சாரி ப்ரோ பயந்துட்டியா? சட்டுனு இருக்கிற இடம் பிடிப்படலை. நம்ம சிங்கப்பூர்ல இருக்கோம்னு நினைச்சிட்டேன்" என்றவாறு எழுந்து நின்று அவனை அணைத்தாள்.
அவளின் தோளில் தலை சாய்த்தவனின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் உருண்டோடி வரவும் சட்டெனத் துடைத்து விட்டு அவளை விட்டு விலகியவன், "இவ்ளோ கலவரத்துலயும் அந்த வெளங்காத ஆபிஸ் மீட்டிங்கை மறக்காம கேட்ட பாரு" என்று சிரித்தான்.
"பின்னே சோறு போடுற ஆபிசை மறக்க முடியுமா?" என்று சிரித்தாள் அவளும்.
கண்களில் சோகமா? கோபமா? கனிவா? பாசமா? என்ன பாவனை அது? என்று கண்டுபிடிக்க இயலாத இறுக்கமான முகப் பாவத்துடன் இவளைப் பார்த்திருந்த மணிவாசகத்தைப் பார்த்து, "ஏன் இப்படிச் சோக வயலின் வாசிக்கிறீங்க? ஐம் ஆல்ரைட் மணி சார். கொஞ்சம் பதட்டப்பட்டுட்டேனா மயங்கி விழுந்துடுவேன். எனக்கு இது நார்மல் தான்" என்றாள்.
"செத்த நேரத்துக்குள்ளாறே செத்து போற வலியைக் கொடுத்துப்புட்டிய தாயி" என்றவனாய் பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தவன் தனது புல்லட் வாகனத்தை முறுக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றிருந்தான்.
நெற்றிச் சுருங்க அவன் கூறியதன் பொருள் புரியாது அவன் செல்லும் வரை பார்த்திருந்தவள் கதிர்மாறனைத் திரும்பிப் பார்த்துப் புருவத்தை உயர்த்தினாள்.
'இவளைக் காதலிக்கத் தொடங்கிட்டாரோ இந்த மணி மாமா?' என்று யோசனையுடன் மணி கூறியதை உள்வாங்கியவனாய் தங்கையின் புருவ ஜாடையில், "நீ மயங்கினதும் பயந்துட்டாருடா! அதான் அப்படிச் சொல்லிட்டுப் போறாரு" என்றான்.
"ஓ... ஆமா நான் ஏதோ கல்லுல மோதின மாதிரி இருந்துச்சு ப்ரோ" என்றவள் கூறியதைக் கேட்டுச் சத்தமாய்ச் சிரித்தான் பாண்டி.
சிரிப்புச் சத்தம் வந்த திசை நோக்கித் திரும்பிய இருவரும், ஏன் சிரிக்கிறான் என்பது போல் பார்த்தனர்.
"அக்கா நீங்க மோதினது கல்லுல இல்ல. எங்க ஓனர் அண்ணாவோட நெஞ்சுல" என்றவனாய் மீண்டும் சிரித்தான்.
இவளின் கண்கள் வியப்பில் விரிய, "என்னடா இந்த மனுசன் பாராங்கல்லு மாதிரி உடம்பை வளர்த்து வச்சிருக்காரு" கதிர்மாறனின் காதிற்குள் உரைத்தாள்.
அவளின் கூற்றில் வாய்விட்டுச் சிரித்த கதிர்மாறன், "பாவம் மாமா! நீ மயக்கம் போட்டதைப் பார்த்து பயந்தே போய்ட்டாரு. அவரைப் பார்த்து பாராங்கல்லுனு சொல்லிட்டு இருக்க நீ" என்றான்.
திடீரென ஏதோ சிந்தித்தவளாய், "ஆமா உங்க ஓனரு அண்ணே இப்ப எங்கே போயிருக்காரு" என்று பாண்டியைப் பார்த்துக் கேட்டாள்.
"அவிய வீட்டுக்குப் போயிருப்பாவ இல்ல பாண்டிமுனி கோவிலுக்குப் போயிருப்பாவ. ஏன்க்கா கேட்குதிய?" என்றான்.
"உங்க அண்ணேகிட்ட முக்கிய விஷயம் ஒன்று கேட்கனும்னு நினைச்சேன். அதுக்குள்ள மயங்கி விழுந்து காரியத்தைக் கெடுத்துட்டேன்" என்ற தங்கையைப் புரியாது பார்த்தான் கதிர்மாறன்.
"சரி உங்க ஓனருக்கிட்ட கேட்க நினைச்சதை உன்கிட்ட கேட்குறேன்" என்றவாறு அவனருகே சென்றவள்,
"உங்க ஊருல மரகதம்ன்ற பேருல யாராவது இருக்காங்களா?" மெல்லிய குரலில் கேட்டாள்.
அவளின் கேள்வியில் அதிர்ந்து போனான் கதிர்மாறன்.
'அய்யோ இந்த மணி மாமா அவரோட மரகதக் காதலி பத்தி எதுவும் இவக்கிட்ட சொல்லிட்டாரா? என்று யோசனையுடன் அவளை அவன் பார்க்க,
"எங்க ஓனரு அண்ணே லவ் பண்ண பொண்ணு பேரு மரகதம் தான்க்கா" என்றவன், "உள்ளார வாங்க உங்களுக்கு ஒன்னு காமிக்குதேன்" என்றவாறு கடைக்கு உள்ளே அவர்களை அழைத்துச் சென்றவன் அங்குச் சுவற்றில் நெஞ்சு அம்பு குறியிட்டு அதனுள் மரகதமணி என எழுதப்பட்டிருந்ததைக் காண்பித்து, "அன்னாடம் ஒரு முறையாவது எங்கண்ணே இதைப் பார்த்துடும்" என்றான்.
'ஆஹா அப்ப மணி மாமா லவ்வு உண்மைத் தான் போலயே! அய்யோ அந்த மரகதம் நான் லவ் பண்ற மரகதமா இருந்துடக் கூடாது ஆண்டவா' என்று மனத்துடன் வேண்டிக் கொண்டான் கதிர்மாறன்.
"யாரிந்த மரகதம்? இந்த ஊரு பொண்ணா?" எனக் கேட்டாள்.
"அதெல்லாம் தெரியாதுக்கா. ஆனா இந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. அண்ணா லவ் ஃபெயிலியர்னால கல்யாணமே செஞ்சிக்கலை" என்று கூறி முடித்த நொடி இவர்களின் முதுகுக்குப் பின்னே கேட்ட குரல் செருமல் சத்தத்தில் தூக்கிவாரிப் போட திரும்பிப் பார்த்தனர் மூவரும்.
கோபத்துடன் அனைவரையும் முறைத்த மணிவாசகம், "கடைய அடைக்காம இங்கன என்னல செஞ்சிட்டுக் கிடக்கக் கிறுக்கா" பாண்டியின் மண்டையில் நறுக்கெனக் கொட்டினான்.
ஆஆஆஆ என்று அவன் அலறவும்,
"போ போய்ச் சாமான்லாம் உள்ளாற எடுத்துவை" என்று அவனின் பின் மண்டையில் தட்டி வெளியே அனுப்பி வைத்தான்.
"நீங்க என்ன குறுக்கு விசாரணை செஞ்சிட்டு இருக்கிய?" என அவர்களிடம் கடுமையான குரலில் கேட்டான்.
"மிஸ்டர் மணி சார். நான் நேரா விஷயத்துக்கு வரேன்" என்று மரகதம் தொடங்கவும்,
'நாம பொண்ணு கேட்டத இவியக்கிட்ட சொல்லிப்புட்டாவலோ' என்று நினைத்தவன், 'சொல்லிட்டியலா?' கதிர்மாறனிடம் கண்களால் வினவினான்.
"இல்லை" என்றவன் மறுப்பாய் தலை அசைக்க,
"என் ப்ரோவுக்கு இந்த ஊருல ஒரு பொண்ணைப் பார்த்திருக்கோம். அவங்களைப் பத்தி விசாரிக்கனும்" என்றான்.
"அப்படியா சங்கதி! நல்ல விசயந்தேன். யாருனு சொல்லும். நானே நேர்ல பேசி கட்டி வைக்குதேன்" என்று உற்சாகத்துடன் உரைத்தான் மணிவாசகம்.
"அவங்க பேரு மரகதம். நாங்க அன்னிக்கு பையன் பார்க்க போனோமே! அந்த வீட்டுப் பொண்ணு தான்" என்றவள் உரைத்ததும் இவனின் உற்சாகம் குறைந்து புஸ்வானமாய் முகம் சுருங்கிப் போக,
"ஓஹோ" என்றவனாய் தீவிரமான முகப் பாவனையுடன் மீசையைத் திருகியவன், "அன்னிக்கு மாதிரி நேர்லயே போய்ப் பொண்ணு கேட்டுட வேண்டியது தானே" என்றான்.
"கேட்கலாம் தான். ஆனா" என்று இழுத்தவள், மூன்று வருடங்களுக்கு முன்பு தனது தாய் அண்ணனுக்காகப் பார்த்து வைத்த பெண் என்று அப்பெண்ணைப் பற்றியும் தனது அண்ணன் அந்தப் பெண்ணின் மீது வைத்திருக்கும் அன்பைப் பற்றியும், தாய் இறந்த பிறகு அவளைத் தேடியதைப் பற்றியும் என அனைத்தையும் கூறி முடித்தாள்.
தீவிரமான முகப் பாவனையுடன் அனைத்தையும் கேட்டு முடித்தவன், "அவியலை உங்க அண்ணனுக்குக் கட்டி வைக்க நினைக்கிறியல்னா நான் சொல்லுறதை நீங்க செய்யனும்?" என்றான்.
"என்ன செய்யனும்?" எனக் கேட்டாள்.
"நாளைக்கு நேராவே அந்த வீட்டுக்குப் போய்ப் பொண்ணு கேட்கனும்" என்றான்.
"என்னது நேர்லயா? அவங்க பையனை கட்டிக்க மாட்டேன்னு சொல்லிருக்கேன். அவங்க பொண்ணை எப்டி கொடுப்பாங்க?" என்றாள்.
"போய்க் கேளுங்க" என்று சத்தமாய் உரைத்தவன், 'அப்ப தான் சங்கதி என்னனு தெரிய வரும்' என்று மனத்திற்குள் கூறிக் கொண்டான்.
இருவரும் குழப்பத்துடன் அவன் முகத்தைப் பார்த்தவாறு அப்படியே நிற்க, "சரி கிளம்புறியலா? நான் கடை அடைக்கிற நேரமாகிட்டு" என்று அவர்களைத் துரத்தாத குறையாக அங்கிருந்து அனுப்பினான் மணிவாசகம்.
மறுநாள் காலை சென்னைக்குச் செல்ல எடுத்திருந்த பயண ரசீதை ரத்துச் செய்து விட்டு மரகதத்தின் வீட்டிற்குச் சென்றனர் அண்ணனும் தங்கையும்.