• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மறுத்தாலும் உன்னை மறப்பேனா - 11

Vishakini

Moderator
Staff member

Episode 11

ருத்ரன் யோசனையில் மூழ்கி இருக்க, அவனின் போன் ஒலித்தது. யார் என்று பார்க்க வேந்தன் அழைத்திருந்தான்.

அழைப்பை ஏற்றவன், “சொல்லு வேந்தா”,

“அண்ணா காலையில இருந்து நம்ம ஹார்பர் சுத்தி நிறைய புது ஆளுங்க இருக்காங்க. எல்லாம் வெளியூரு.. அநேகமா இது அவன் வேலையா இருக்கும்னு தோணுது.”

“போலீஸ் கிட்ட இருந்து எந்த தகவலும் நமக்கு வரல.. எதுக்கும் நீ அவன் கண்டைனர் மேல ஒரு கண்ணு வச்சிக்க, எந்த நேரத்துல என்ன வேண்ணாலும் பண்ணுவான். நான் இங்க இருந்து ஆளுங்களை அனுப்புறேன், நம்ம கண்டைனர் எல்லாம் பத்திரமா இருக்கணும்.”

“இல்ல அண்ணா வீட்டுக்கு பாதுகாப்பா அவங்க அங்கயே இருக்கட்டும், நான் தீவுக்கு போன நம்ம பசங்களை வர சொல்றேன். வீட்டுல அண்ணியும் பசங்களும் இருக்காங்க” என்று அவசரமாய் கூறினான் வேந்தன்.

“வேந்தா நான் சொன்னதை செய். என் பொண்டாட்டி புள்ளைங்களை எப்படி பாத்துக்கனும்ன்னு எனக்கு தெரியும். என்ன தாண்டி எவனும் தொட முடியாது. நான் முக்கியமான வேலை விசயமா தான் அவங்களை கடலுக்கு அனுப்புனேன் அதனால அவங்களை தொந்தரவு பண்ணாத.” என்று உத்தரவாக கூறி அழைப்பை துண்டித்தான் ருத்ரன்.

புதிதாய் ஆட்கள் வந்திருப்பது சரியில்லை என்று தோன்றியது. நிச்சயம் கவனாமா இருக்க வேண்டும் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே ‘டம்’ என்று சத்தம் கேட்டதில் நினைவிற்கு வந்தவனாய் சத்தத்தை பார்த்தான்.

அருள் தான் தண்ணீர் குடிக்கும் குவளையை கடுப்பில் வைத்தான். சாப்பாட்டு மேஜையை தயார்படுத்த நல்ல பிள்ளை போல் தீர்த்திக்கு உதவ வந்தவன் ருத்ரனை கண்டதும் டம்ப்ளரை பட்டென வைத்தான். அது மட்டுமா ருத்ரனையே முறைத்து கொண்டிருந்தானே. சாம்பார் கிண்ணத்துடன் வந்த தீர்த்தி அருளை கண்டு குழம்பினாள். இப்பொழுது தான் அவளும் கவனித்தாள்.

“எதுக்கு அருள் இவனை இப்படி முறைக்குறான்? நேத்து ஏதாவது சொல்லி தொலஞ்சிட்டானா? அதான் இப்படி இருக்கானோ?” யோசித்தபடியே வந்தவள், சாம்பாரை மேஜையில் வைத்தாள்.

“என்ன அருள் நிக்கிற? டம்ளர்ல தண்ணி தானே ஃபில் பண்ணி வைக்க சொன்னேன்?” அவள் கேட்ட கேள்வியில் அவள் புறம் திரும்பியவன், “அம்மா ஜக்குல தண்ணி இல்ல” என்றான்.

தீர்த்தி அதனை எடுத்து கொண்டு தண்ணீர் எடுக்க செல்ல, அருள் மீண்டும் ருத்ரனையே பார்த்தான். ருத்ரனுக்கு தான் ஒன்றும் புரியவில்லை.

“இவன் எதுக்கு நம்மள இப்படி பாக்குறான்.. அவ முறைக்குரதுக்கு கூட இவ்வளவு பயப்புட மாட்டேன் இவன் இப்போவே என்ன பதட்டமாக்குறானே.. எனக்கு தப்பாம போர்த்து இருக்கான்.. ஆழாக்கு சைசுல இருந்துட்டு பாக்குறதை பாரு..” என மனதில் நினைத்தபடியே பார்க்க, அருள் எகத்தாளமாய் அவனை பார்த்துவிட்டு உள்ளே சென்றான். அவன் சென்றபின் தான் ருத்ரனுக்கு நிம்மதியாய் இருந்தது.

“என்ன அண்ணே உங்கள மாதிரியே இருக்கானா?” நக்கலாய் கேட்டபடியே இளங்கோ வந்தமர, அவனை முறைத்தவன், “அவன் அப்படியே அவள மாதிரி டா”.

“இல்ல ண்ணா.. சூர்யா தான் அண்ணி மாதிரி அருள் உங்களை மாதிரி”

“அட போடா.. அவள மாதிரியே அவனுக்கு அவ்வளவு புடிவாதம்.. பாக்குறதை பாரு.. அவன் அம்மா மாதிரியே முட்ட கண்ண உருட்டி உருட்டி பாக்குறதை. ஹாஃப் பாட்டில் சைஸ் இருந்துட்டு என்னமா முறைக்குறான்.. அப்படியே அவளை உருச்சி வச்சியிருக்கான்” ருத்ரன் பின்னால் இருப்பவர்களை கவனிக்காமல் இளங்கோவிடம் பேசிக் கொண்டிருக்க, இளங்கோ சிரிப்பை கட்டுப்படுத்த முயற்சி செய்தபடி நின்றான்.

ருத்ரன் முதுகை தீ பார்வை சுடுவதை உணர்ந்தவன் திரும்பி பார்க்க தீர்த்தி அவனை தீயாய் முறைத்துக் கொண்டிருந்தாள். அவளை போலவே அருளும் முறைத்துக் கொண்டிருந்தான்.

“ஐயோ கேட்டுட்டாளோ” என அவன் நினைத்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் வீராப்பாக அவர்களுக்கு வழி விட்டு நின்றான். அப்பொழுது தான் பிரயுவும் சூர்யாவும் சிரித்து விளையாடியபடியே வந்தார்கள்.

அந்த இடத்தில் மவுனம் நிலைக்க, தீர்த்தி பிரயுவை பார்த்து புன்னகைத்து விட்டு பிள்ளைகளை இரு பக்கமும் அமர்த்தி வைத்து சாப்பாட்டை பரிமாறினாள். இளங்கோவை ஒரு பார்வை பார்க்க, அவனும் சாப்பாட்டை ருத்ரனுக்கு வைத்து விட்டு சாப்பிட ஆரம்பித்தான்.

அருளுக்கும் சூர்யாக்கும் அவள் ஊட்டி விட, ருத்ரன் பார்வை அவர்கள் மீதே இருந்தது. தீர்த்தி உணர்ந்தாலும் அதனை கண்டுகொள்ளவே இல்லை. சூர்யா அருகில் ருத்ரன் இருக்க அவனருகில் இளங்கோ. அருளுக்கு மறு புறம் பிரயு. அனைவரும் அமைதியாய் சாப்பிட சூர்யா இளங்கோவை பார்த்து கொண்டே இருந்தான்.

ஊட்டுவதில் கவனமாக இருக்கும் தீர்த்தி கையை பிடித்தவன், கேட்ட கேள்வியில் அனைவருமே அதிர்ந்து விட்டனர்.

“அம்மா சித்திய இவர் தான் கல்யாணம் பண்ணிக்க போறாரா?” என இளங்கோவை கைகாட்டி கேக்க, பிரயு திகைக்க இளங்கோவிற்கு புரை ஏறியது.

சிரிப்பை கட்டுப்படுத்தியபடியே, “ஏன் சூர்யா கேக்குற?” என்றிட, “நீங்க தானேமா சொன்னிங்க சித்திய கல்யாணம் பண்ணிக்க போறவர் தான் சித்தப்பான்னு.. இந்த அங்கில் சித்தப்பான்னு கூப்பிட சொல்றாரு.. அப்போ சித்திக்கு கல்யாணமா?”

தீர்த்தி களுக்கென்று சிரிக்க, பிரயு இளங்கோவை முறைத்தாள். அவனோ ருத்ரனை உதவிக்காக பார்க்க, அவனோ உதடுமடித்து மெலிதாய் புன்னகைத்தான்.

“உன் சித்தி அப்பறம் சொல்லுவா.. இப்போ சாப்பிடு” என ஊட்டி விட்டாள். இரு பிள்ளைகளும் சாப்பிட்டு முடித்ததும் அவளுக்கு ஊட்டி விட ருத்ரன் ஆச்சரியமாய் பார்த்தான். ஒன்றே ஒன்றை அவனால் நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது. இரு பிள்ளைகளையும் அவர்கள் மூவர் மட்டுமே தனி உலகம் என வளர்த்து இருக்கிறாள் என்று. அதையும் தாண்டி இருவருக்கும் வயதை தாண்டிய பக்குவம் இருக்கிறதென்று. ஒரு பக்கம் நன்றாக பிள்ளைகளை வளர்த்திருக்கிறாள் என பெருமையாக இருந்தாலும் மறு பக்கம் தாம் இல்லாமல் ஒற்றையாளாக வளர்த்து இருக்கிறாளே என வருத்தப்பட்டான்.

அதே போல் சாப்பிட்டு முடித்ததும் இருவரும் எடுத்து வைக்க அவளுக்கு உதவி செய்ய, அனைத்தையும் வேடிக்கை பார்த்தான். கிச்சனில் பிரயு அவளுக்கு உதவி செய்ய இரு பிள்ளைகளையும் பால் குடிக்க வைக்க தீர்த்தி போராட்டத்தை ஆரம்பித்தாள்.

“ம்ம் சீக்கிரம் குடிங்க” என அதட்ட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து வாயை கைகளால் பொத்தினார்கள்.

“டேய் வாண்டு குடிங்க.. உங்க அம்மாவை டென்ஷன் ஆக்காதீங்க” என பிரயு கூற இருவரும் அவளுக்கு பழிப்பு காட்டினார்கள். அவர்கள் செயலில் வேடிக்கை பார்த்த ருத்ரனுக்கு சிரிப்பு வந்தது.

“இப்போ குடிக்க போறீங்களா இல்லையா?” தீர்த்தி குரலெழுப்ப, “அம்மா வயிறு ஃபுல்லா இருக்கு, இதுக்கு இடம் இல்ல” என்றான் சூர்யா.

“ரெண்டு பேரும் ஒழுங்கா குடிங்க, இல்ல”

“இல்லன்னா என்ன? குடிக்க மாட்டேன்” என முகத்தை திருப்பினான் அருள். சும்மாவே சூர்யா ஆடுவான், இதில் அருளும் சேர்ந்தால் இன்னும் பிடிவாதம் பிடிப்பான் என அருளை நெருங்க அவனோ வாயை கைகளால் பொத்திக் கொண்டான்.

ருத்ரனுக்கு வேடிக்கையாய் இருந்தது. இப்பொழுது தான் இவ்வளவு நல்ல பிள்ளையா என்று நினைத்தான், அதற்குள்ளே சேட்டை செய்ய அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

“இப்போ குடிக்க போறீங்களா இல்லையா?” என கத்த, கிச்சன் உள்ளே வந்த ருத்ரன், “இன்னிக்கு ஒரு நாள் தானே” என அவன் கூறும் போதே, தீர்த்தி பார்த்த பார்வையில் அடங்கி போனான்.

பிள்ளைகளை அவள் கண்டிக்கும் பொழுது குறுக்கே யாரேனும் வந்தால் அவளுக்கு கோவம் தான் அதிகரிக்கும். பிரயுவை கூட இம்மாதிரியான நேரத்தில் பிள்ளைகளுக்கு ஆதரவாய் வர விட மாட்டாள்.

ருத்ரன் புருவம் சுருக்கி மேலும் பேச போக பிரயு அவனை தடுத்தாள்.

“சார் பிளீஸ்.. இப்போ நீங்க பசங்களுக்கு சப்போர்ட் பண்ணா தினமும் அதையே அவங்க காரணம் காட்டுவாங்க”

அவள் பதிலை புரிந்தவன் யோசிக்க, தீர்த்தி பெரு மூச்சுடன் பிள்ளைகளை பார்த்தாள்.

“அருள் நீ குடிச்சா தான் சூர்யா குடிப்பான்.. குடி முதல்ல” என கண்டிப்புடன் கூற அவன் மறுப்பாக தலையை அசைத்தான்.

தீர்த்தி அருகே வந்த ருத்ரன் இருவரையும் பார்த்து, “நீங்க இப்போ அம்மா சொன்னதை கேட்டா நான் உங்களை ஃபிஷ் பாக்க கூட்டிட்டு போவேன் ஓகே?” என சமாதானம் செய்ய பார்க்க, சூர்யாவிற்கு ஆர்வம் வந்தது. ஆனால் அருள் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டான். ருத்ரன் அருள் முகத்தை திருப்ப அவன் கையை தட்டி விட்டு பாலை உடனே குடித்தான்.

ருத்ரனுக்கு அருள் செயல் சுருக்கென்று குத்த, தீர்த்தி அதிர்ந்தாள். எதனால் அருள் அவனிடம் இப்படி இருக்கிறான் என அவளுக்கு புரியவே இல்லை. பிள்ளைகள் முன்பு ருத்ரனிடம் அவள் சண்டை போடவே இல்லை. எதையும் காட்டிக் கொள்ள கூடாதென்று தான் அமைதியாய் இருக்கிறாள்.

அருள் குடிப்பதை பார்த்து சூர்யாவும் குடித்து விட்டு, “அங்கிள் நான் குடிச்சிட்டேன், எங்களை கூட்டு போறீங்களா” என்க, அதில் தன்னிலையை சமன் செய்தவன் சூர்யா முடியை கலைத்து விட்டான்.

“நான் எங்கேயும் வரல” என ருத்ரன் முகம் காணாமல் கூறிய அருள் தீர்த்தியை கட்டிக் கொண்டான்.

இறுக அனைத்தவன் லேசாய் விசும்ப, தீர்த்தி பதறிவிட்டாள். எதற்காய் என யோசிக்கும் முன்பே அருளை தூக்கியவள், பிரயு பக்கம் திரும்பி, “சூர்யாவை வெளிய கூட்டிட்டு போ” என்று கூறி பிள்ளைகளின் அறைக்கு சென்றாள்.

அருள் அழுவதை கண்டால் சூர்யாவும் அழுவான் என்று நினைத்தவள் அவனை தனியே அழைத்து சென்றாள். சூர்யாவுடன் பிரயு சென்றுவிட ருத்ரன் மட்டுமே அதே இடத்தில் இருந்தான். அருள் செய்த செயல் சுருக்கென்று குத்த பிள்ளைகளின் அறையையே பார்த்தான்.

உள்ளே சென்ற தீர்த்தி அருளை மெத்தையில் அமர வைத்து, “என்ன ஆச்சு அருள் ஏன் அழுகுற?” பதட்டத்துடன் கேட்டபடியே அவன் கன்னத்தை நிமிர்த்தினாள். உடனே அவளை கட்டிக் கொண்டவன் மேலும் அழுதான்.

“என்ன ஆச்சு டா செல்லம்? யாராவது ஏதாவது சொன்னாங்களா? அம்மா கிட்ட சொல்லு.. இல்ல உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?” பொறுமையாக அவன் தலை முடியை கேதியபடியே கேட்டாள்.

“எனக்கு வீட்டுக்கு போகணும்” என்றதும் தீர்த்தி மனம் பிசைந்தது. எப்படி அவளால் இங்கிருந்து போக முடியும்? போக தான் விட்டு விடுவானா?

“ஏன்? இங்க இருக்க பிடிக்கலையா? நீங்க ரெண்டு பேரும் டூர் கூட்டு போக சொல்லி கேட்டுட்டே இருந்தீங்கல அதான் அம்மா ஏற்பாடு பண்ணேன்” என வாய்க்கு வந்ததை கூறி சமாளிக்க பார்த்தாள். பிரயு உடன் சேர்ந்து ருத்ரனும் சர்ப்ரைஸ் டூர் என்று தானே சமாளித்து இருந்தார்கள். அதையே பின்பற்றினாள்.

“ஆனா அந்த அங்கிள் முறைச்சிட்டே இருக்காரு.. எப்போவும் உங்களையும் என்னையும் பாத்துட்டே இருக்காரு.. அவர் முறைச்சி பாக்குறது எனக்கு புடிக்கல” என்று அருள் முகத்தை சுருக்க, தீர்த்திக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ருத்ரன் பார்வையே அப்படி தான் என எவ்வாறு அவனுக்கு புரிய வைப்பாள்?

அதுவும் இல்லாமல் அப்பாவிடம் இவன் ஒட்டாமல் இருப்பது அவளுக்கு வருத்ததை கொடுத்தது. பல பிரச்சனை அவளுக்கும் ருத்ரனுக்கும் இருக்கிறது. அவள் மன்னிக்க முடியாத காரியத்தை தான் செய்தான். வாய் வார்த்தையாய் வேண்டும் என்றால் காதலே பொய் என அவள் கூறலாம், ஆனால் வாழ்ந்த அவளுக்கும் தெரியுமே. இத்தனை வருடமாய் இந்த குழப்பத்தில் தானே தவிக்கிறாள்.

அதை காட்டிலும் உண்மையாகவே காதல் இருந்து இருந்தால், இப்பொழுது வந்தவன் ஆறு வருடத்திற்கு முன்பே வந்திருக்க வேண்டியது தானே? பல கேள்விகள் அவளுள் இருப்பினும் அதனை சீராக பேசி தெளிவுபடுத்த அவள் மனம் இன்னும் இறங்கி வரவில்லை.

அவள் குழப்பத்தை ஒதுக்கி வைத்தவள், “இங்க பாரு அருள், நம்ம கொஞ்ச நாள் இங்க இருந்துட்டு போலாம்? பிளீஸ் அம்மாக்காக சமத்தா இரு.. அந்த அங்கிள் பேட் இல்ல.. அம்மா அவர் கிட்ட சொல்லி முறைக்க வேணாம் சொல்றேன் சரியா?” என கொஞ்சலாய் கேக்க, அரை மனதாய் தலை அசைத்தான்.

“இந்த அங்கிள் உங்க பிரெண்ட்ன்னு சொன்னாரு.. அப்பறம் ஏன் அம்மா உங்களை பாக்க பிரயு சித்தி மாதிரி நம்ம வீட்டுக்கு வந்ததே இல்ல?”

அருள் கேட்ட கேள்வியில் லேசாக புன்னகைத்து அவன் தலையை பரிவாக வருடினாள். இப்படி எல்லாம் இருவரும் கேட்பார்கள் என்று பதிலை தயார்படுத்தி இருந்தாள்.

“அது அங்கிள் ரொம்ப தூரத்துல இருக்காருல அதான்.. பிரயு சித்தி மாதிரி அவரால அங்க வர முடியல..”

அருள் அமைதியாய் அவளை ஒட்டிக் கொள்ள, தீர்த்தி நினைப்பு ருத்ரன் மற்றும் இவர்களின் உறவு மீதே இருந்தது. அப்பாவையும் பிள்ளையையும் பிரிக்கும் நோக்கம் அவளுக்கு இல்லை. ஆனால் அதே நேரம் அவனை உடனே ஏற்றுக்கொள்ளும் எண்ணமும் இல்லை.

காதல் மனது ருத்ரனை நம்ப சொன்னாலும், அவள் கண்ணெதிரே கண்ட காட்சி அவளை இன்னும் உறைய செய்தது. பல வருடங்கள் ஆன பின்பும் இன்றும் அந்த மரண ஓலம் அவள் காதில் ஒலித்தது. கண்களை இறுக மூடிட இரண்டு சொட்டு கண்ணீர் கசிந்தது.

அவள் கன்னத்தை பிஞ்சு கையால் ஏந்தியவன், “நான் குட் பாயா இருப்பேன் மா நீங்க அழுகாதிங்க..” என்று அவளை கட்டிக் கொள்ள, கண்ணீருடன் அவனை கட்டிக் கொண்டாள்.

“என் சமத்து தங்கபுள்ள” அருள் கன்னத்தில் முத்தம் கொடுக்க, அந்நேரம் அருளை தேடி அறை உள்ளே ஓடி வந்த சூர்யா பொறாமையில் பொங்கினான்.

“சீட்டர்.. என்ன விட்டுடு அவனை மட்டும் கொஞ்சுரிங்க.. நான் கோவமா போறேன்” சிலுப்பிக் கொண்டு பிரயுவை தள்ளி விட்டு ஒரு மூளையில் சென்று நின்றுக் கொண்டான் சூர்யா. பிரயு கமுக்கமாய் சிரிக்க தீர்த்தி மெலிதாய் சிரித்தாள். அருளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தவள், சூர்யா உயரத்திற்கு மண்டியிட்டாள்.

“இல்லடா கண்ணா.. உன்னையும் தான் கொஞ்சுவேன்.. இங்க வா..” என்றதும் உடனே அவளை கட்டிக் கொண்டான். அருள் உடனே இருவரையும் சேர்த்து கட்டிக் கொள்ள பிரயு சிறு சிரிப்புடன் அவர்களை பார்த்தாள்.

மேஜை அருகே இருந்த ருத்ரன் சிறு முறுவலோடு பார்த்தான். எப்பாடுபட்டாவது அவன் குடும்பத்தை சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணம் ஓடியது அவனுக்கு.

அவர்களின் நிம்மதியான நேரத்தை கெடுப்பதை போலவே திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தம் குலைத்தது. உடனே சுதாரித்தவன், தீர்த்தியையும் பிள்ளைகளையும் அறை உள்ளே தள்ளி, பிரயுவயும் உள்ளே அடைத்து சாற்றினான்.

வீட்டின் தென் பகுதியில் இருந்து ஓயாமல் ஒரு நிமிடத்திற்கு துப்பாக்கி சுடும் சத்த கேக்க, உடனே ருத்ரன் வெளியே சென்றான். அவன் ஆட்கள் அனைவரும் வீட்டை சுற்றி பாதுகாப்பிற்கு தயார் நிலையில் இருந்தார்கள்.

வீட்டின் உள்ளே அவன் எதிரிகள் யாராலும் வர முடியாது. இருந்தும் அவன் கவனமாக இருக்க, அந்நேரம் ஒரு புல்லட் அவன் வீட்டின் சுவற்றை துளைத்தது.
 
Top Bottom