மிக நெகிழ்ச்சியான ஒரு தருணம்

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,226
16,859
113
Germany
மிக நெகிழ்ச்சியான ஒரு தருணம்

அவரும் என்னுடைய கோப்பி நண்பர்தான். வாரத்தில் ஒரு முறை வருவார். அந்த வாரத்திற்கான அவரின் கதைகளைக் கோப்பியோடு கதைத்துவிட்டுப் போவார்.

அப்படியானவர் இன்று வந்ததும் உனக்கு ஒரு கதை சொல்லவா என்று கேட்டார்.

அவர் எப்போதுமே அப்படித்தான். ஆச்சரியத்தைத் தூண்டும் விதமாக ஆரம்பிப்பார். பிறகு பார்த்தால் இதற்கா இவ்வளவு என்று எனக்கு ஆகிவிடும். இது உள்ளே ஓடினாலும் சொல்லு சொல்லு என்று நானும் ஆவல் காட்டிக் கேட்டேன்.

ஆனால் அவர் சொன்னது உண்மையிலேயே ஆச்சரியப்படுத்தும் செய்தி ஒன்றை.

நாற்பது வருடங்களுக்கு முதல் அவரும் நண்பியும் ஒன்றாக வாழ்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு மகள் இருந்திருக்கிறாள். சிறு குழந்தை.

ஒரு நாள் அவர் வேலை முடிந்து வந்தபோது குழந்தை இல்லை, அன்னை முழு வெறியில் சுயநினைவற்றுக் கிடந்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

குழந்தை எங்கே என்றால் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பராமரிப்புத் துறை கொண்டுபோய்விட்டதாம். கேட்டுக்கொண்டு போனால் சட்டப்படி திருமணமாகாததாலும், அவர்கள் முறையாகக் குழந்தையைப் பராமரிக்கவில்லை என்றும் சொல்லி அவரிடம் கொடுக்கவும் இல்லை, காட்டவும் இல்லையாம்.

அவரும் தன்னால் முடிந்தவரையில் முயற்சித்துவிட்டு விட்டுவிட்டாராம். அதன் பிறகு அவருக்கு அந்தப் பெண்ணோடு சேர்ந்திருக்கவும் விருப்பம் இல்லாமல் ஊரை விட்டே வந்துவிட்டாராம்.

இப்படி இருக்கையில் நாற்பது வருடங்கள் கழித்து, அதாவது தற்போது அவருக்கு அதே குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பராமரிப்புத் துறையிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது.

உன் மகள் உன்னோடு கதைக்க ஆவலாக இருக்கிறார். விரும்பினால் நீ அவரோடு தொடர்பு கொள்ளலாம் என்று. அவரும் தொடர்பு கொண்டிருக்கிறார். இப்போது அந்தப் பெண்ணுக்கு நான்கு குழந்தைகளாம்.

தந்தையையும் தந்தையின் தற்போதைய மனைவியாரையும் பார்க்க ஆசைப்படுகிறேன் என்று சொல்லி அழைத்திருக்கிறார். இந்த ஞாயிறு போய் வியாழன் வரை நின்றுவிட்டு வருவாராம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அதே நேரத்தில் அவளுக்குப் பதினெட்டு வயதான பிறகாவது அவர் ஏன் தேடவில்லை என்கிற கேள்வி எனக்குள் குடைந்தது.

அதன் பிறகு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பராமரிப்புத் துறைக்கு அவளை மறைத்து வைக்க உரிமை இல்லை. அவளோடு பேசி, அவளுக்கும் சம்மதம் என்றால் அவர்கள் சந்திக்க இப்போது போன்று அப்போதும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கும்.

அந்த மகள் இத்தனை காலமும் அவரைத் தேடிக்கொண்டுதான் இருந்திருக்கிறாள். இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறாள்.

பரவாயில்லை. இப்போதாவது சந்திக்கப்போகிறார்களே என்று எனக்கு மகிழ்ச்சிதான்.

கூடவே தனிமைத் துயர் தீராதோ மித்ரா நினைவில் வந்துபோனாள்.
 

Author: நிதனிபிரபு
Article Title: மிக நெகிழ்ச்சியான ஒரு தருணம்
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
814
726
93
Pondicherry
பெற்ற தந்தையை கண்டுபிடிச்சாச்சு, தாயையும் கண்டுபிடிச்சாரா அந்த பெண்? எவ்வளவு வலித்திருக்கும்? ஒருவேளை வெளிநாட்டவருக்கு அப்படி வலி எதுவும் தோணாதோ?

Mostly they are very practical and not emotional or family oriented like us.. அதனால் கேட்டேன்.. But எனக்கு நினைச்சு பாத்தா வலிக்குது தான்.. இனியாவது இணைந்து மகிழட்டும்💗
 
  • Like
Reactions: Ananthi.C

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
895
635
93
Madurai Tamil Nadu
அந்த அம்மா என்ன ஆனார்....
இத்தனை காலத்திற்கு அப்புறம் இப்படி ஒரு சந்திப்பு...விதி என்று ஒன்று உள்ளது தான் போல...