அத்தியாயம் 5
சோர்வாக இருக்கிறது சற்று நேரம் தூங்கலாம் என்று பார்த்தால் கனவில் கூட அந்த இந்திரராவணன் தான் வந்து அவளை இம்சை செய்தான்..
முத்தம் என்கிற பெயரில் வாயை இப்படி கடித்து கொதறிவிட்டானே கனவில்.. அது சரி நிஜத்திலும் அவன் முரடனாகத்தானே இருக்கிறான்.. கனவில் வந்து இப்படி நடந்து கொள்வதில் என்ன அதிசயம் இருக்கப் போகிறது?? என்று நினைத்துக் கொண்டாள் சீதா..
ஆனால் சம்பந்தமே இல்லாமல் இவன் எதுக்கு என்னுடைய கனவுல வரணும்.. எப்பவும் கனவில் ஹாலிவுட் ஹீரோக்கள் தானே வருவாங்க அவங்க கூட தானே டூயட் பாடுவேன்?? இது என்ன கருமாந்திரம் இவன் வந்து தொலைந்திருக்கான்..??!!
புருவம் முடிச்சிட குழப்பத்தோடு யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவளுடைய அலைபேசி அழைத்தது..
மறுமுனையில் என்ன சொன்னார்களோ தெரியவில்லை அடித்து பிடித்து அந்த நேரத்தில் வண்டியை எடுத்துக்கொண்டு நேராக இந்திர ராவணனை அட்மிட் செய்திருந்த மனநல ஆஸ்பத்திரியை நோக்கி பறந்தாள்..!!
அவனை அங்கே விட்டு செல்லும்போது இருந்த மருத்துவமனையின் நிலை இப்பொழுது தலைகீழாக மாறி இருந்தது..
அங்கிருந்த பொருட்கள் எல்லாம் சிதறி கிடக்க சோஃபாக்கள் எல்லாம் தலைகீழாக கிடந்தது..!!
நர்ஸ் கம்பவுண்டர் என்று அனைவரும் கீழே கிடந்தார்கள் தலையை பிடித்துக் கொண்டு..
டாக்டர் கண்ணாடி உடைந்து சட்டை கிழிக்கப்பட்ட நிலையில் வேகமாக ஓடி வந்தார்..
" மேடம் நீங்க அட்மிட் பண்ண பேஷண்ட் ரொம்ப ரொம்ப முரட்டுத்தனமா நடந்துக்கிறார் எங்களால் அவரை கண்ட்ரோல் பண்ணவே முடியல.. பிரஷர் செக் பண்ற மெஷினை எடுத்து கவசம்னு நினைச்சு உடம்பில் கட்டுறார்.. இன்ஜெக்ஷனை எடுத்து பல் குத்துவதற்கு உதவும் கருவின்னு சொல்லி அதை எடுத்து பல்லில் குடைய ஆரம்பிச்சுட்டாரு.. தீவிர சிகிச்சையில் இருக்கும் சில பேஷண்டுகளை நாங்க இங்க அடைச்சு வச்சிருக்கோம்.. அவங்க எல்லாரையும் கைதிகள்னு நினைச்சு கதவை திறந்து அவங்களை வெளியே விட்டுட்டாரு.. எங்களால் இவரை சமாளிக்கவே முடியல வெரி சாரி மேடம்", என்றார் அந்த டாக்டர் கவலையாக.
" அடக்கடவுளே இத்தனை பண்ணி வச்சிருக்கான்..?? என்னை மன்னிச்சிடுங்க டாக்டர் இந்த மாதிரி நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல உங்களுக்கு நடந்த கஷ்டத்துக்கு நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்"
" இருக்கட்டும்மா.. யாருக்கு என்ன வந்தது அப்படின்னு நினைச்சு நீ பாட்டுக்கு போகாம ஒருத்தர் மேல் அக்கறை எடுத்து அவரை இங்க கூட்டிட்டு வந்து சேர்க்க பார்த்த அவர் அடங்காமல் இங்கிருந்து தப்பிச்சு போயிட்டாரு அதுக்கு என்ன பண்றது??"
" என்னது இங்கிருந்து தப்பிச்சு போயிட்டாரா என்ன சொல்றீங்க இப்ப அவர் எங்க??", என்று அதிர்ச்சியோடு கேட்டாள் அவள்.
" எங்களுக்கு தெரியல மேடம் எல்லாரையும் அடிச்சு போட்டுட்டு இங்கிருந்து வேகமாக வெளியே போயிட்டார்..", என கம்பவுண்டர் சொல்லவும் தலையில் கை வைத்துக் கொண்டு அங்கேயே மண்டியிட்டு அமர்ந்து விட்டாள் சீதா.
இங்கேயே இவர் இத்தனை ரகளை செஞ்சிருக்கான்.. வெளியே போய் இன்னும் என்னெல்லாம் செய்யப் போறானோ தெரியலையே..??
இந்த லட்சணத்தில் நான் வேற டிராஃபிக் போலீஸ் கிட்ட வாக்கு கொடுத்து, நான் பார்த்துக்கிறேன்னு கூட்டிட்டு வந்தேன் கடைசியில் நானே அவனை தொலைச்சுட்டு நிற்கிறேன் எங்க போய் என்ன ரகளை பண்றானோ இந்நேரம் தெரியலையே.. என்று நினைத்து அவள் வருந்தினாள்..
உடனே வண்டியை எடுத்துக் கொண்டு அவள் அங்கிருந்து வேகமாக பறந்தாள் சுற்றிலும் கண்களால் இடங்களை அலசியப்படி..!!
இந்த நேரத்தில் அந்த இந்திர ராவணன் எங்க இருக்கான் தெரியலையே.. எனக்குன்னே கிளம்பி வருவீங்களாடா?? இப்படி காலையிலிருந்து என்னை அலைக்கழிக்கிறானே??
சுற்றிலும் அவளுடைய பார்வை அவனை மட்டுமே தேடிக் கொண்டிருந்தது அவனை கண்டுபிடிப்பது ஒன்றும் அத்தனை கஷ்டம் அல்லவே ..
இருக்கும் எல்லோரிடத்திலிருந்தும் அவன் தனித்து தெரிவானே.. அவன் ஆடையில் இருந்து அலங்காரம் முதல் பேச்சு நடவடிக்கை நடை முதற்கொண்டு அனைத்தும் வித்தியாசமாக இருக்குமே.. அதை வைத்து சுலபமாக அவன் எங்கே இருக்கிறான் என்று கண்டுபிடித்து விடலாம் அதனாலேயே வண்டியை மெதுவாக ஓட்டி சென்றாள் ஒவ்வொரு இடத்தையும் கண்காணித்துக் கொண்டே..
ஆனால் அவன் எங்கும் அவள் கண்ணுக்கு தட்டுப்படவில்லை..
சோர்ந்து போனவள் ஒரு கட்டத்தில் அங்கிருந்த பிரபல ரெஸ்டாரன்ட் அருகில் வண்டியை நிப்பாட்டினாள்..
இவனை தேடி தேடி நம்ம உடம்பில் இருக்கிற மொத்த ஆவியும் வத்தி போய்டும் போலருக்கே..!!
ஆண்டவா.. சீக்கிரமா அவனை என் கண்ணில் காட்டு என்று வாய்விட்டு புலம்பிய வண்ணம் அந்த ரெஸ்டாரண்டிற்குள் நுழைந்தாள்..
" பேரர் சூடா, ஸ்ட்ராங்கா ஒரு ஃபில்டர் காபி..", என்று ஆர்டர் கொடுத்துவிட்டு தலையைப் பிடித்த வண்ணம் அப்படியே அமர்ந்து விட்டாள்..
சற்று நேரத்தில் அவள் எதிர்பார்த்தபடியே ஃபில்டர் காபி மணக்க மணக்க அவள் முன்னே வந்தது..
அதன் வாசத்தை நுகர்ந்து கொண்டே அதை ரசித்து ருசித்து அருந்த தொடங்கினாள்..
இரண்டு மடக்கு தான் அருந்தியிருப்பாள்..
அதற்குள் அந்த இடத்தில் கூச்சல் ஏற்பட்டது..
என்னாச்சு நல்லா தானே இருந்தது ரெஸ்டாரன்ட் திடீர்னு ஏன் எல்லாரும் சண்டை போடுற மாதிரி கத்துறாங்க என்று யோசித்துக் கொண்டே மெதுவாக திரும்பி பார்த்தால் அங்கே கும்பலாக சில பேர் நின்று கொண்டிருந்தனர் யாருடனோ போராடி கொண்டு..!!
நமக்கு மட்டும் தான் பிரச்சனை என்று பார்த்தால் சுற்றி இருக்கும் எல்லா இடத்திலும் ஏதோ ஒரு பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது போல என எண்ணியவள் எழுந்து சென்று என்ன சண்டையாக இருக்கும் என்று எட்டிப் பார்க்கப் போனாள்..
நான்கைந்து பேர் சூழ்ந்து கொண்டு ஒருவனிடம் பேசிக் கொண்டிருந்தனர் இல்லை இல்லை சண்டை போட்டு போராடிக் கொண்டிருந்தனர்..
" என்னயா நினைச்சுட்டிருக்க?? நீ பாட்டுக்கு வந்த , வயிறு முட்ட சாப்பிட்ட , பணத்தை கேட்டால் திருத்திருன்னு முழிக்கிற?? சரியான ஃபிராடு பயலா இருக்க பாக்குறதுக்கு என்னவோ ராஜா வீட்டுக் கன்னு குட்டி மாதிரி வேஷம் வேற போட்டுட்டு வந்திருக்க.. என்னடா நெனச்சிட்டிருக்க உன் மனசுல இப்பவே போலீஸ் ஸ்டேஷனுக்கு வா இல்லையா பணத்தை எடுத்து வை ..இரண்டில் ஒன்று இன்னைக்கு தெரிஞ்சாகணும் என்னால முதலாளி ஐயா கிட்ட பதில் பேச முடியாது", என்று சொல்லி அங்கிருந்த மேனேஜர் கத்தி கொண்டிருந்தார்..
யாரோ நன்றாக சாப்பிட்டுவிட்டு பில் கட்டல போல அதான் சத்தம் போடுகிறார்களோ?? அது யாராக இருக்கும்?? என்று எட்டிப் பார்த்தாள் அவள்..
கஷ்டப்பட்டு அங்கிருந்து எக்கி பார்த்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது..!!
காரணம் அங்கே சாப்பிட்டுவிட்டு பணத்தை கொடுக்க முடியாமல் விழித்துக் கொண்டு நின்றது வேறு யாரும் அல்ல..
இந்திர ராவணனே தான்..!!
உலக உருண்டை சைசுக்கு அவளுடைய கண்கள் விரிவடைந்தது, அவனை பார்த்த மாத்திரத்தில்..!!
" ஐயோ அடக்கடவுளே.. இவன்தான் சாப்பிட்டு பில் கட்ட முடியாம நின்னு சண்டை போட்டுட்டு இருந்ததா கிழிஞ்சது போ..", என்று நினைத்துக் கொண்டவள் உடனடியாக அந்தக் கூட்டத்தை விலக்கிவிட்டு உள்ளே நுழைந்தாள்..
" ஒரு நிமிஷம் இங்கே என்ன பிரச்சனை கொஞ்சம் அமைதியா இருங்க", என்று கேட்ட வண்ணம் அவள் அங்கே வந்து நிற்க..
அவளை கண்டதும் ராவணனின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது..
" சீதையே.. வந்து விட்டாயா இங்கே பார் எல்லாரும் என்னை சூழ்ந்து கொண்டு வசை பாடுகிறார்கள் நீயே நியாயம் கேள்??", என்று அவள் அருகே வந்து நின்று கொண்டு அவள் கையை பற்றி கொண்டான்.
" இங்க பாருமா பாக்குறதுக்கு நீ படிச்ச பொண்ணா இருக்க நீயே ஒரு நியாயத்தை சொல்லு இந்தாளு நேரா வந்தான்.. வந்ததும் புரியாத பாஷையில் செம்மொழியில் ஏதேதோ பேசினான் ஒன்னும் புரியல பசிக்குதான்னு கேட்டதுக்கு ஆமான்னு தலையாட்டினான் என்ன சாப்பிடுறேன்னு கேட்டதுக்கு.. பக்கத்து டேபிள்ல சாப்பிட்டுட்டு இருந்தவர்களை பார்த்து அது எல்லாமே எனக்கு வேணும்னு சொன்னான் உடனே ஐஸ்கிரீம்ல இருந்து தோசை இட்லி பூரி பொங்கல் வடை எல்லாத்தையும் கொண்டு வந்து வச்சேன்.. மூக்கு முட்ட நல்லா எல்லாத்தையும் தின்னுப்புட்டு இப்ப காசு கொடுடா அப்படின்னு கேட்டா அப்படி என்றால் என்ன அப்படின்னு கேட்டு என்னை நக்கல் அடிக்கிறான் நீயே ஒரு நியாயம் சொல்லுமா இப்படி எல்லாம் சாப்பிட்டு பணம் கொடுக்காமல் போனால் நல்லாவா இருக்கு?? என் முதலாளி கிட்ட யாரு பதில் சொல்றது நான் தானே சொல்லியாகணும்??", என்று அப்பாவித்தனமாக கேள்வி கேட்டார் அந்த பேரர்.
இவனே ஒரு பைத்தியம் இவன் கிட்ட போய் காசு கேட்டிருக்காங்களே..
முதல்ல இவனோட காஸ்டியூம் பார்த்த பிறகும் கூட எப்படி அவன் கேட்டதெல்லாம் கொண்டு வந்து வச்சு அவனை சாப்பிட வச்சாங்க அதும் இல்லாம அவன்கிட்ட பணம் வேற கேட்டிருக்காங்க பாக்குறதுக்கு ஆள் ஒரு மார்க்கமா இருக்கான்.. பேச்சு தோரணையும் வித்தியாசமா இருக்குன்னு நினைச்சு உடனே சுதாரிக்க வேண்டாம்?? இப்படி இவங்க ஏமாந்துட்டு அவன்கிட்ட போய் நியாயம் கேட்கிறதில் என்ன அர்த்தம் இருக்கு?? என்று இன்னொரு பக்கம் அவளின் மனசாட்சி வாதாடி கொண்டிருந்தது அவனுக்காக ..!!
" நல்ல மூக்கு முட்ட சாப்பிட்டியா ராவணா??"
" நன்றாக சாப்பிட்டேன் சீதா.. உணவு மிகவும் அருமையாக இருந்தது ஆனால் சாப்பிட்டு முடித்த பின் இந்த ஆள் வந்து ஏதோ வினவினான்.. என்னமோ.. அது பேர் என்ன??", புருவம் முடிச்சிட்டு குழப்பத்துடன் அவன் கேட்க உடனே பேரர் பதில் சொல்ல தொடங்கினான்..
" சாப்பிட்டு முடித்ததும் பில் கொண்டு வந்து வச்சு கேஷ் எடுத்து வைங்கன்னு சொன்னேன் அதுக்கு இந்தாளு ஏதோ புரியாத மொழியை பார்க்கிற மாதிரி அப்படி பார்க்கிறான்"
" நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க.. அவருக்கு நீங்க என்ன பேசினாலும் புரியாது அவருக்கு கொஞ்சம் இப்போ உடம்பில் சில பிரச்சினைகள் இருக்கு அதை இப்ப என்னால சொல்லிட்டிருக்க முடியாது பில் எவ்வளவுன்னு மட்டும் சொல்லுங்க நான் கட்டிக்கிறேன்", என்றாள் அவள் அப்போதே அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக.
" 1500 ரூபா வேணும் மேடம்", என்றான் அவன்.
"என்னது?? 1500 ரூபாயா?? என்ன சொல்றீங்க அப்படி என்ன சாப்பிட்டான் இவன்??", என்றாள் அதிர்ச்சி மாறா முகத்துடன்.
" இட்லி பூரி பொங்கல் வடை எல்லாமே சாப்பிட்டான் அதுக்குப் பிறகு ஐஸ்கிரீம் வேணும்னு கேட்டான் நல்லா இருக்குன்னு சொல்லி திரும்பத் திரும்ப கிட்டத்தட்ட 6 தடவை வாங்கி அதை மட்டுமே சாப்பிட்டான் அவன்.. அதுவும் ரெட் வெல்வெட் ஐஸ் கிரீம் அது.. ", என்றார் அந்த மேனேஜர்.
அடக்கடவுளே.. அது ரொம்ப காஸ்ட்லியான ஐஸ்கிரீமாச்சே.. இன்னைக்கு என்னோட பர்ஸ் காலி தான் போல..என்று மனதிற்குள் அவனை திட்டிக்கொண்டே பில்லுக்குண்டான பணத்தை செலுத்தி விட்டு அவனை தரதரவென்று சிவந்த முகத்துடன் வெளியே இழுத்து வந்தாள் சீதா..
அவனோ புன்னகை மாறா உதடுகளுடன் அவள் பின்னே சென்றான்..
!!
- தொடரும்..

Last edited: