வாசகர்களுக்கான அறிவிப்பு

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,523
113
Germany
வாசகர்களுக்கான அறிவிப்பு


அழகென்ற சொல்லுக்கு அவளே கதை எழுதிய நேரமே சொல்லியிருந்தேன். இனி ஒவ்வொரு ongoing கதைக்கும் வாசகர்களுக்கான பரிசுகள் உண்டு என்று.

இப்போதும் அதேதான். தளத்தில் அதாவது nidhaniprabunovels.com சைட்டில் வருகிற தொடர் கதைகள், போட்டிக் கதைகளை வாசித்து, லைக்கிட்டுக் கருத்திடும் வாசக உறவுகள் ஐந்து பேருக்கு இந்தியன் ரூபாய் 500 பெறுமதியான நிதனிபிரபு பதிப்பகம் வாயிலாக வெளியான புத்தகங்கள் பரிசாகக் கிடைக்கும்.

இது ஆரம்பமே. செந்தூரம் தமிழ் நாவல் போட்டி கொஞ்சம் சூடு பிடிக்கட்டும். பரிசுகளும் தொடரும்.
 

Author: நிதனிபிரபு
Article Title: வாசகர்களுக்கான அறிவிப்பு
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,523
113
Germany
வாசகர்களுக்கான போட்டி அறிவிப்பு


இது கொஞ்சம் லேட் அறிவிப்புத்தான். ஆனால், வாசகர்களுக்கும் பரிசுகள் உண்டு என்று முதலே சொல்லியிருந்தோம் இல்லையா?

மூன்று வகையான போட்டிகள் நடக்க இருக்கின்றன.

  1. போட்டி நாவல்களுக்குத் தளத்தில் அதிகமாய்க் கருத்திடும் வாசகர்கள்.

  1. காத்திரமான நேர்மையான நேர்த்தியான விமர்சனங்களைப் பகிரும் வாசகர்கள். தளத்தில் பதியப்படும் விமர்சனங்கள் மாத்திரமே கவனத்தில் எடுக்கப்படும்

  1. இது பெயர் மறைத்து எழுதும் போட்டி என்பதில் எழுத்தாளர்களைக் கண்டு பிடிக்கும் வாசகர்கள்.(சரியாகச் சொல்லும் வாசகர்கள் அனைவரது பெயரும் குலுக்கப்பட்டு அதிலிருந்து ஐந்து பேர் தெரிவு செய்யப்படுவார்கள்.)

இந்த மூன்று பிரிவின் கீழும் ஐந்து ஐந்து வாசகர்களுக்கு அதாவது மொத்தம் 15 வாசகர்களுக்கு ரூபாய் 500 பெறுமதியான நிதனிபிரபு பதிப்பகத்தில் வெளியான புத்தகங்களும், மின் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,523
113
Germany
செந்தூரம் தமிழ் நாவல் போட்டி 2026 வாசகர்களுக்கான அறிவிப்பு.

வணக்கம் வாசக உறவுகளே!

மிக நல்லபடியாகப் போட்டி முடிந்தது போதாது என்று போட்டி முடிவுகள் அறிவிக்கும் நாளும் நெருங்க ஆரம்பித்துவிட்டது.

செப்டெம்பர் 15, 2026 அன்று போட்டி முடிவுகள் மாத்திரமல்லாமல் சிறப்பாகக் கருத்திட்டவர்கள், விமர்சகர்கள், எழுத்தாளர்களைக் கண்டுபிடித்தவர்கள் என்று மூன்று பிரிவின் கீழ் வாச்கர்களுக்கான முடிவுகளும் அறிவிக்கப்படும்.

அதாவது,

  1. போட்டி நாவல்களுக்குத் தளத்தில் அதிகமாய்க் கருத்திடும் வாசகர்கள்.

  1. காத்திரமான, நேர்மையான, நேர்த்தியான விமர்சனங்களைப் பகிரும் வாசகர்கள். தளத்தில் பதியப்படும் விமர்சனங்கள் மாத்திரமே கவனத்தில் எடுக்கப்படும்

  1. இது பெயர் மறைத்து எழுதும் போட்டி என்பதில் எழுத்தாளர்களைக் கண்டு பிடிக்கும் வாசகர்கள்.(சரியாகச் சொல்லும் வாசகர்கள் அனைவரது பெயரும் குலுக்கப்பட்டு, அதிலிருந்து ஐந்து பேர் தெரிவு செய்யப்படுவார்கள்.)

இந்த மூன்று பிரிவின் கீழும் ஐந்து ஐந்து வாசகர்களுக்கு, அதாவது மொத்தம் 15 வாசகர்களுக்கு ரூபாய் 500 பெறுமதியான நிதனிபிரபு பதிப்பகத்தில் வெளியான புத்தகங்களும், மின் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இதனை ஏற்கனவே அறிவித்திருந்தோம். இதன் கடைசித் திகதி 31.08.2026 என்பதனைத் தெரியப்படுத்துகிறோம்.

அதன் பிறகு பதியப்படும் கருத்துகளோ, விமர்சனங்களோ கருத்திற்கொள்ளப்பட மாட்டா.

ஆகவே, உங்கள் விமர்சனங்கள், கருத்துகளை ஓகஸ்ட் 31, 2026க்கு முதல் பதிவிட்டுவிடுங்கள். (இந்திய நேரம் ஓகஸ்ட் 31, 2026 அன்று இரவு 12 மணியோடு இந்தக் காலக்கெடு முடிகிறது)

அதே போன்று எழுத்தாளரைக் கண்டுபிடிக்கும் போட்டி:

அந்தப் போட்டி 31. ஓகஸ்ட் 2026 அன்று காலையிலேயே தளத்தில் அறிவிப்பாக வரும். அப்போது போட்டி அறிவிக்கப்படும் திரட்டில் கருத்திட முடியாது. அதைத் தடை செய்திருப்போம்.

நீங்கள் யோசிப்பதற்கும் முடிவெடுப்பதற்கும் 12 மணி நேரங்கள் தரப்படும். அதன் பிறகு ஒரேயொரு போஸ்ட் மட்டுமே நீங்கள் போடலாம். அந்தப் போஸ்ட்டையும் 30 நிமிடங்களுக்குள் மட்டுமே எடிட் பண்ணும் வசதி வழங்கப்படும். ஒவ்வொரு வாசகர்களும் அதிகபட்சமாக 10 கதைகளுக்கான எழுத்தாளர்கள் பெயர்களைச் சொல்லலாம்.

(அந்த 30 நிமிடங்களும் எப்போது ஆரம்பித்து எப்போது முடியும் என்று தளத்தில் அறிவிப்பாக வரும்போதே குறிப்பிடுவோம்.)

அதனால் கவனமாக யோசித்து, முதலே எழுதி வைத்து, நீங்கள் கண்டுபிடித்த எழுத்தாளர் பெயரையும், கதையின் பெயரையும் குறிப்பிட வேண்டும்.

அந்த 30 நிமிடங்களின் பிறகு போட்டி முடிவடைந்துவிடும்.

சரிதானே? அனைவரும் போட்டிக்குத் தயார்தானே?

உற்சாகமாய்ப் போட்டியிடுங்கள்! பரிசுகளைத் தட்டிச் செல்லுங்கள்!

நட்புடன்

செந்தூரம் தமிழ் நாவல் போட்டிக் குழு - 2026
 
  • Like
Reactions: ஷமீம்