• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

30. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!(Final)

STN - 72

Member
Staff member
உறை நீர் - 30 ( இறுதி அத்தியாயம்)

"என்ன தைரியம் இருந்தா என் ரெண்டு பொண்ணுங்க மேலயும் கைய வைப்பே.. அதுவும் நவ்யா குட்டியை என்ன பண்ணி வச்சிருக்க டா? உன்ன எல்லாம் மன்னிக்கவே மாட்டேன்.. சிகரெட்டாலயா சூடு போடுற? அவளுக்கு எப்படி எரிஞ்சுதோ அதே மாதிரி உனக்கும் உடம்பு பத்தி எரியனும்.. இப்ப அவங்க மூணு பேரும் அந்த ரூமை விட்டு வெளியில வந்துடுவாங்க.. நானும் வெளியில தான் இருக்கேன்.. அப்படியே கண்ணை சுழட்டி பார்த்தேன்னா அந்த கட்டில் பக்கத்துல ஒரு பெட்ரோல் கேன் இருக்கு.. அதுல இருக்கிற பெட்ரோல் எடுத்து உன் மேல அப்படியே ஊத்திக்குவியாம்.. அப்படியே இன்னும் கொஞ்சம் தள்ளி பார்த்தேனா ஒரு தீப்பெட்டி இருக்கு.. அதை எடுத்து உன்னை நீயே கொளுத்திக்க.."

"முடியாது முடியாது.. நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்.. என்ன விட்டுடுங்க ப்ளீஸ்.." என்று கெஞ்ச ஆரம்பித்தான் ஆதிகேசவன்.

"நானும் உனக்கு ரொம்ப சேதாரமில்லாம விட்டுடனும்னு தான் நினைக்கிறேன்.. அதனால தான் இந்த ஐடியா சொல்றேன்.. நீ மட்டும் இதை செய்யாம வெளியில வந்தேன்னு வச்சுக்கோயேன்.. அப்புறம் உன்னை சாக விடமாட்டேன்.. ஆனா உயிரோட வச்சு செய்வேன் டா.. என் பொண்ணுக்கு நடந்த கொடுமை ஒன்னொன்னும் காலம் முழுக்க உனக்கு நடக்கு..ம் நித்தம் நித்தம் உனக்கு நரகம் தான்.. உனக்கு இப்ப அடிபட்டு இருக்குதுல்ல ஒவ்வொரு அடியிலயும் ஒவ்வொரு நாளும் நெருப்பு அள்ளி கொட்டுவேன். ஆசிட் ஊத்துவேன்.. இப்ப சொல்லு.. எப்படி வசதி ?பெற்றோல் கேனை எடுக்குறியா? இல்ல நான் ஆசிட் பாட்டில் எடுக்கவா?" என்று கேட்க

குலை நடுங்கியது ஆதிகேசவனுக்கு

"ஜெகந்நாதன் ப்ளீஸ்.. என்ன மன்னிச்சிடுங்க.. எதோ தெரியாம.."

"என்னது தெரியாமையா? இந்த வார்த்தையை சொன்னதுக்கு உனக்கு என்ன பண்ணனும் தெரியுமா?" என்ற ஜெகநாதன் நேரே அந்த அறைக்குள் வந்திருந்தான்.. தன் கையில் இருந்த ஒற்றை சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவர் அவன் அடிபட்ட இடத்தில் எல்லாம் அதன் தணலை வைத்து அழுத்த அலறித் துடித்தான் ஆதிகேசவன்.

"இன்னொரு முறை தெரியாம செஞ்சேன்னு மட்டும் சொல்லாதே.. நான் எனக்கு தெரிஞ்சே ஒன்னை போட்டுடுவேன்.. இங்க பாரு.. உனக்கு இன்னும் பத்து செகண்ட் தான் டைம்.. நான் வெளியில போய் பத்து என்றதுக்குள்ள நீ உன்னை பத்த வச்சுட்டு இருக்கணும்.. இல்ல.." என்ற ஜெகநாதனை பார்த்து மிரண்டு நடுங்கி உடல் வியர்த்து நகரவும் முடியாமல் ஒவ்வொரு நொடியும் செத்துப் போனான் ஆதி கேசவன்.

மெல்ல மற்ற நால்வரும் அந்த இடத்தை விட்டு வெளியே செல்ல அவர்கள் கதவை மூடிய அடுத்த நொடி தன் உடலை தேய்த்துக் கொண்டே அந்த பெட்ரோல் கேன் அருகில் சென்ற அதை திறந்து தன் தலையில் ஊற்றிக் கொண்டான்.

அடுத்ததாக அந்த தீப்பெட்டியை எடுத்தவன் யோசித்துக் கொண்டே அமர்ந்திருக்க மெதுவாய் கொஞ்சமாய் கதவை திறந்த ஜெகநாதன் "டேய் இன்னும் ரெண்டு செகண்டு தான்டா இருக்கு.." என்க அதற்குமேல் தாமதித்தால் அவன் கையில் சிக்கி சின்னாபின்னம் ஆகிடுவோம் என்பதை உணர்ந்து எரிந்து கொண்டிருந்த தீக்குச்சியை தன் மேலே போட்டு தன்னை தானே எரித்துக் கொண்டான் ஆதிகேசவன்.

அவன் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் தீ பற்றி எரிய ஆரம்பிக்க சட்டென அறையின் உள்ளேநுழைந்து அங்கே கிடந்த கம்பளியை எடுத்துக்கொண்டு போய் அவன் மீது சுற்றினான் தமிழ்..

"தமிழ் என்ன பண்ற?" ஜெகநாதன் கேட்க

"இல்ல மாமா.. அவன் அவ்ளோ சீக்கிரம் சாகக்கூடாது.. காப்பாத்தியே தீரணும்.." என்று சொல்லி அப்படியே அவனை அள்ளிக் கொண்டவன் வெளியே ஓடி வந்தான்.. தன் காரில் அவனை கிடத்தி அவசரமாக அவனை பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்..

எமர்ஜென்சி என்று கத்த உள்ளிருந்து செவிலியர்களும் ஓடி வந்து ஆதிகேசவனை ஒரு ஸ்ட்ரெச்சரில் போட்டுக்கொண்டு உள்ளே போனார்கள்..

உடம்பெல்லாம் பற்றி எரிந்தது அவனுக்கு.. அந்த நேரம் அவனுக்கு ரத்தக்கண்ணீர் தான் வடிந்தது.. ஏனடா நவ்யாவையும் ரியாவையும் தொட்டோம் ஏனடா நவ்யாவை சித்திரவதை செய்தோம் என்று புழுங்கியவன் பூமியில் இருக்கும் போதே நரகத்தை உணர்ந்தான்..

நவ்யாவுக்கு தமிழின் அந்த பரிமாணத்தை கண்டு ஆச்சரியமாக இருந்தது.. ஒவ்வொரு இரவும் தன்னிடம் அவ்வளவு மென்மையாய் ஒரு தாயாய் தகப்பனாய் தோழனாய் காதலனாய் கணவனாய் சேவகனாய் மொத்தத்தில் மென்மையானவனாய் நடந்து கொள்ளும் அந்த தமிழா இவன்.. எத்தனை கோபம் அவனிடத்தில்.. இத்தனை மாற்றமும் அவள் ஒருத்திக்காக தானே.. தன்னவனின் காதலை நினைக்க நினைக்க உள்ளுக்குள் அவன் மட்டுமே முழுவதுமாக நிறைந்து போனான் ஒரு துளி இடம் மிச்சம் இல்லாமல்..

தமிழ் அங்கிருந்து சென்றதும் ஜகன்நாதன் மெல்ல ரியா நவ்யாவிடம் வந்து "ரியாம்மா நவிமா நீங்க உங்க ரூமுக்கு போங்கடா.. நல்லா குளிச்சிட்டு நிம்மதியா தூங்குங்க.." என்று சொல்ல

நவ்யாவின் முகத்திலோ அப்படி ஒரு சஞ்சலம்..

"என்னம்மா நவ்யா?" என்று அவர் கேட்க

"அது.. அது.. தமிழத்தான் அவனை கத்தியால குத்தி வெட்டி இருக்கார்.. அந்த ஆதிகேசவன் ஹாஸ்பிடல்ல வாயை தொறந்தா தமிழ் மாட்டிக்குவாரே.. நீங்களும் அவன சிகரெட்டால சுட்டு இருக்கீங்க.. உங்களுக்கும்.." என்றவளை பார்த்து இடவலமாய் தலையாட்டிய ஜெகந்நாதன்

"உன் புருஷன் தமிழ்.. என் அக்கா பையன்.. என் மாப்பிள்ளை.. பார்த்துட்டு நான் சும்மா இருப்பேனா? ஏற்கனவே இந்த தப்பெல்லாம் நான் தான் செய்தேன்னு கமிஷனருக்கு ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டு தான்மா இங்கே வந்தேன்.. இப்போ போய் அதை அவருக்கு அனுப்பிடுவேன்.." என்க அவரை இறுக்கமாய் அணைத்து மொத்தமாய் உடைந்து கரைந்தாள் நவ்யா..

"அப்பா எப்படிப்பா? நாளைக்கு தான் உங்க ரிட்டயர்மென்ட் ஃபங்ஷன்.. இந்த நேரத்துல போய்.. அப்பா அப்பா என்னை மன்னிச்சிடுங்க பா.. உங்க மேல எந்த தப்பும் இல்லை.. என் அம்மா செஞ்ச தப்புக்கு உங்களை பழி வாங்கிட்டேன்.. எனக்காக இத்தனை வருஷமா நீங்க வாங்குன இந்த நல்ல பெயர் உங்க கரியர் எல்லாத்தையும் மொத்தமா முடிச்சுக்க ரெடியா இருக்கீங்க.. போலீஸ் டிபார்ட்மெண்ட்ல உங்க நேர்மை வர்க்ல நீங்க காட்டுற சின்சியாரிட்டி உங்க திறமை இதெல்லாம் பார்த்து தமிழ் மாதிரி இன்ஸ்பயர் ஆனவங்க எத்தனையோ பேர்.. இப்படிப்பட்ட இந்த விஷயங்களை எல்லாம் எனக்காக மொத்தமா விட்டு தரேன்னு சொல்றீங்களே பா.. நான் உங்க மகளே இல்லப்பா.. இல்லனா உங்களை இத்தனை நாள் புரிஞ்சுக்காம தள்ளி வச்சிருப்பேனா?" கதறினாள் அவள்.

"அப்படி எல்லாம் எதுவும் இல்லடா.. உன்ன விட எனக்கு வாழ்க்கையில் எதுவுமே முக்கியமில்லை.. இந்த டிபார்ட்மெண்ட்ல பேர் வாங்கி நான் என்ன செய்யப் போறேன்? எப்படியும் நாளைக்கு ரிட்டயர்மென்ட்.. அதுக்கப்புறம் வீட்ல தான் உக்கார போறேன்.. என் பொண்ணோட அன்பு கிடைச்சதுன்னா அதைவிட ஒரு பெரிய பரிசு எனக்கு என்ன இருக்கும்? என் பொண்ணுங்க நீங்க.. உங்க மேல கைய வச்சவனை சும்மா விட்டா அப்புறம் நான் என்ன அப்பா?" என்று கேட்டவரை ரியா நாவ்யா இருவருமே இறுக்கமாய் தழுவிக் கொண்டார்கள்...

அதன் பிறகு அவர்களை அறைக்கு கொண்டு விட்ட ஜெகநாதன் " இரண்டு பேரும் பத்திரமா இருங்கம்மா.. தமிழ் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான்" என்று சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றார்..

மறுநாள் காலை விழா நடப்பதற்கு முன்னால் கமிஷனரை போய் பார்த்த ஜெகநாதன் தான் எழுதி வைத்திருந்த கடிதத்தை அவரிடம் நீட்ட அதை வாங்கி படித்தவர் அதை சுக்குநூறாய் கிழித்து குப்பை கூடையில் போட்டார்..

"மிஸ்டர் ஜெகன் உங்க இடத்துல நான் இருந்திருந்தாலும் இதே தான் பண்ணி இருப்பேன்.. நீங்க செஞ்சதுக்கு உங்களை தவிர வேற சாட்சி இல்ல.. அது மட்டும் இல்லாம உங்க பொண்ணை செக்ஸுவலா ஹராஸ் பண்ணி இருக்கான் அவன்.. உங்க பொண்ணு டிஃபென்ஸிவ்வா இதெல்லாம் செஞ்சாங்கன்னு சொன்னா கேஸ் நிக்காது.. இன்னைக்கு காலையில எனக்கு வந்த இன்ஃபர்மேஷன் படி அவனுக்கு நினைவு வரவே இன்னும் பல வருஷங்கள் ஆகும்னு தோணுது.. அப்படி ஒரு கோமாக்கு போயிட்டானாம்.. அவனுக்கெல்லாம் முடிவு இப்படித்தான் இருக்கணும்.. பல முறை அவனை பத்தி கம்ப்ளெயின்ட்ஸ் வந்துருக்கு.. என்னால் ஆக்சன் எடுக்கவே முடியல.. எந்த சரியான சாட்சியும் என்கிட்ட இல்ல.. ஆனா இப்ப அவனுக்கு சரியான தண்டனை உங்க பொண்ணு மூலமா கிடைச்சிருக்கு.. அதுக்காக நான் ரொம்ப சந்தோஷப்படறேன்.. "என்றவர்

"போய் ஃபங்ஷனுக்கு ரெடி ஆகுங்க " என்று ஜெகநாதனை கைகுலுக்கி அனுப்பினார்..

அதன் பிறகு அந்த விழாவும் இனிதே முடிந்தது.. விழா முடிந்த அறைக்கு வந்த தமிழை கண்கொட்டாமல் விழுங்கி விடுவது போல் பார்த்திருந்தாள் நவ்யா..

"ஏய் நவி.. என்ன இது இப்படி குறுகுறுனு பாக்குற? எனக்கே ஒரு மாதிரி இருக்கு.." என்று சற்றே சிணுங்கங்கலாக கூறியவன் டவலை எடுத்துக்கொண்டு குளிக்க புறப்பட குளியல் அறைக்கும் அவனுக்கும் இடையே வந்து மறித்தாற் போல் நின்றாள் நவ்யா.

"என்னடா இன்னைக்கு பொண்ணு ரொம்ப வால்த்தனம் பண்ணுது?" என்று அவள் மூக்கை பிடித்த ஆட்டியபடி அவன் கேட்க "அத்தான்.." என்றவள் குரலே ஒரு மார்க்கமாக இருந்தது..

"ப்ளீஸ்.. உன் குரலே சரியில்ல.. முதல்ல வழியை விடு.. நான் குளிக்க போகணும் .."என்றவன் தோளில் கையை மாலையாக போட்டவள் "இன்னைக்கு நானும் உங்க கூட குளிக்க வரலாம்னு பார்க்கிறேன்.. "என்று சொல்ல அவனோ திடுக்கிட்டு அவளை பார்த்து

"என்னது குளிக்க வரியா? என்னவோ என் கூட சினிமா பார்க்க வரேங்குற மாதிரி சொல்ற.. முதல்ல வழியை விடு.." என்று சொன்னானே தவிர அவள் கையை விலக்கவில்லை அவன்.. விலக்கத் தோன்றவில்லை அந்த காதலனுக்கு..


"இப்ப என்ன போயே ஆகனுமா?" என்று கேட்க

"ஆமா போயே ஆகணும்.. லா காலேஜ் சேர்ந்து ஆறு மாசம் தான் ஆகுது மேடம்.. இன்னும் நாலு வருஷத்துக்கு மேல உங்க படிப்பு பாக்கி இருக்கு.. அதுக்கு அப்புறம் ஐ ஏ எஸ் கலெக்டர்னு ஏதேதோ பண்ணனும்.. கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க மேடம்.." என்று சொல்லி அவளை நகரச் சொல்லி கண்ணை காட்ட அவளோ இடவலமாய் தலையாட்டினாள்

"முடியாது நான் நகரனும்னா நீங்க எனக்கு ஒன்னும் கொடுக்கணும்.." என்றாள் அவள்..

"என்ன வேணும் உனக்கு?"

"என்னென்னவோ வேணும்.. நீங்கதான் எதுவுமே கொடுக்க மாட்டேங்கிறீங்களே.."

"உனக்கு கிறுக்கு பிடிச்சிருச்சு.. நீ தள்ளு.." என்று அவள் கையை விலக்க போக

"அத்தான் என்னை தள்ளி விட்டிங்க அப்புறம் பாத் ரூமுக்கு வந்து உங்களை ரேப் பண்ணிடுவேன்.. சொல்லிட்டேன்.." என்றவளை வாய் பிளந்து "அடிப்பாவி .."என்றான் அவன்

"என்ன வேணும் சொல்லு.. குடுத்துட்டு நான் குளிக்க போறேன்.."

"அது.." என்று அவன் மார்பில் விரலால் கோலம் போட்டவள் "என்னை பார்த்த நாள்ல இருந்து உங்களுக்குள்ள அடக்கி வச்சிருக்கீங்களே லவ்.. அது ஃபுல்லா எனக்கு தெரியிற மாதிரி ஒரு டீப் கிஸ் வேணும்.. குடுத்தீங்கன்னா போய் குளிக்கலாம்.. இல்லனா ரேப் தான்.. " என்று அடாவடியாய் பேசியவளை பார்த்து சிரித்தவன்

"ஏய் என்ன விளையாட்டு இது? நான் குளிக்க போறேன்.." என்றவனை தடுத்து பிடித்தவள் அவன் இதழோடு தன் இதழை அழுத்தமாய் பதித்திருந்தாள்..

கண்கள் விரித்து அவளையே அதிசயமாய் பார்த்திருந்தான் அவன்.. கண்மூடி இதழோடு இதழை ஆழமாய் பதித்து உயிர்த்தேடலை சில நொடிகள் நிகழ்த்தியவள் மறுபடியும் விழிகளை திறந்த போது விழிகள் இரண்டும் செவ்வானமாய் சிவந்து கலங்கி இருந்தன..

"அத்தான்.. அத்தான்.. "

அதைத் தவிர வேறெதுவும் பேசவில்லை அவள்..

"என்னடாம்மா.. இதெல்லாம்.. ஏன்டா இவ்வளவு எமோஷனலா இருக்கே.. ஒன்னும் இல்லம்மா.. இனிமே இந்த நவ்யா தமிழ்ச்செல்வனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. கூடிய சீக்கிரம் நவ்யா தமிழ்ச்செல்வன் ஐஏஎஸ் ஆகப் போறே.. இப்படி அழலாமா குழந்தை மாதிரி.." என்று அவள் தலையில் கையை வைத்து தலையை ஆட்டியவன் "சரியான குழந்தை தான் நீ" என்று அவளை இறுக்க அணைத்துக் கொண்டான்..

"அத்தான் அத்தான்" என்றாள் அத்தானில் அழுத்தம் கூட்டி

"என்னடா எதுவுமே சொல்லாம அத்தான் அத்தான்னு அர்ச்சனை பண்ணிட்டு இருக்கே.."

"எதுவும் சொல்லத் தோணல அத்தான்.. மத்தவங்க மாதிரி ஐ லவ் யூ ன்னு சொல்லி உங்க மேல இருக்குற என்னோட ஃபீலிங்கை வெறும் மூணு வார்த்தைக்குள்ள அடக்கணும்னு தோணல.. அதை எப்படி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல.. அதனாலதான் என் ப்ராப்ளம் உங்களுக்கு புரியுதான்னு நான் கேட்கறேன்.." என்றதும் சிரித்தவன்

"இப்ப என்ன பண்ணனும் நவீ பேபிக்கு"

"எல்லாத்தையும் நான் கொடுக்கணும்.. ஆனா அதுக்கு முதல் வில்லனே நீங்கதான்.. என்னை கொடுக்க விடமாட்டேங்குறீங்க.." என்று சிணுங்கியவளைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது அவனுக்கு..

"அவ்வளவு தானே..? எல்லாத்தையும் எடுத்துக்கிறேன்.." என்றவன் மெல்ல தன் கட்டை விரலால் அவள் இதழை வருடி தன் இதழால் அந்த அழகிய செவ்வதரங்களை ஆட்கொண்டான்..

அவன் தந்த இதழ் முத்தம் அவள் உயிருக்குள் இனித்தது.. அவளின் ஆதி முதல் அந்தம் வரை மொத்தத்தையும் அந்த இதழ் வழியாகவே உரிஞ்சி எடுத்தான்.. அப்படி ஒரு ஆழ்ந்த முத்தம்.. இடைவெளியே விடவில்லை ..அவளுக்கு.. மூச்சு திணறியது பெண்ணுக்கு.. ஆனாலும் மூச்சு எடுக்க கூட அவன் உதடுகளை பிரிய மனமில்லாமல் அவஸ்தையுடன் அவன் முத்தத்தோடு ஆழ்ந்து கலந்து இருந்தாள் பேதை அவள்..

சிறிது நேரத்தில் அவளை விட்டு விலகியவன் கண்கள் மூடி அவள் இருந்த மோனநிலையை பார்த்து "என்ன.. எல்லாத்தையும் எடுத்துகிட்டேனா?" என்று கேட்க

அவன் மார்போடு நெற்றி முட்டி அவனை இறுக அணைத்துக் கொண்டாள் எந்த பதிலும் சொல்லாமல்..

அவனும் அவளை அணைத்தபடி கட்டிலுக்கு அழைத்து வந்தவன் அவளை அங்கே படுக்க வைத்து அவளை அணைத்து கொண்டான்..

"உங்களுடைய இந்த கிஸ் இந்த ஹக் இதெல்லாம் இந்த வாழ்க்கை முழுக்க எனக்கு போதும்.. ஆனா உங்களுக்கு இதுக்கு மேலயும் கொடுக்கணும்னு தோணுது அத்தான்.. ஆனா என் பழைய நினைப்பு இடையில வந்து உங்களை ஹர்ட் பண்ணிடுங்க பயமாவும் இருக்கு.."

அவளை இன்னும் இறுக்கமாய் அணைத்தவன் "அவ்வளவு தானே கொடுக்கலாம்.. நீ முதல்ல உன்னோட பிஎல் சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சிட்டு கலெக்டர் ஆகிட்டு வா.. அன்னைக்கு உன்னோட வெற்றிக்கு பரிசா என்னை நான் மொத்தமா உனக்கு கொடுக்கிறேன்.."

"ஐயோ அதுக்கு இன்னும் நிறைய வருஷம் இருக்கு.. "என்று அவள் சொல்லு அதில் சத்தமாய் சிரித்தவன் அவள் மூக்கை பிடித்து ஆட்டி "அஞ்சாறு வருஷம் தான் இருக்கு.. சீக்கிரம் ஓடிப் போய்டும்.." என்று சொல்லி தன்னுடைய அணைப்பை இன்னும் இருக்கினான்.

இருவருமே அந்த இறுகிய அணைப்புக்குள் உறங்கிப் போனார்கள்.. இந்த அணைப்பும் முத்தங்களும் அடுத்த சில வருடங்களுக்கும் கவிதையாய் காவியமாய் கதையாய் தொடர்கதையாய் தொடர்ந்து கொண்டே இருந்தன.. வித்தியாசமாகவே இருந்தது அவர்களுடைய வாழ்வு.. பொக்கிஷமாய் புதையலாய் அவன் அவளை தனக்குள்ளே பொத்தி பொத்தி பாதுகாக்க தன்
னை நெஞ்சுக்குள் எப்போதும் சுமந்து திரியும் ஆண் தேவதையாய் அவள் பார்வையில் என்றுமே இனித்தான் அவன்..

முற்றும்..
 
Top Bottom