இறுதி அத்தியாயம்
தனித்தனியாக உறங்கிக்கொண்டிருந்த நவநீதன், துவாரகா இருவரையும் சுலபமாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் வந்திருந்த கொலைகாரர்கள். மூவர் நவநீதனைக் கெட்டியாக பிடித்துக்கொள்ள இருவர் துவாரகாவை பிடித்துக்கொண்டனர்.
கையோடு கொண்டு வந்திருந்த ஷாக் கொடுக்கும் கருவியை வைத்து இருவரையும் தன்னிலை இழக்கச் செய்தவர்கள் உத்தரத்தில் தூக்கு கயிறை மாட்டி அதில் இருவரையும் மாட்டிவிட முயன்ற வேளையில் கெட்ட கனவு கண்டுகொண்டிருந்த காத்தவராயன், ஏதோ சத்தம் கேட்டு கண்விழித்திருந்தார். மாதங்கியின் புகைப்படம் தரையில் விழுந்து கிடந்தது.
அன்று மாலையில் இருந்தே அவர் மனம் சரியில்லை. என்னவோ தவறாக நடக்கப்போவது போல் உள்மனம் எச்சரித்துக்கொண்டே இருந்தது. இப்போது இதுவும் நடக்க என்னவோ சரியில்லை என்று உணர்ந்தவர் எந்த வித பின்யோசனையும் இல்லாமல் கண்ணப்பன் அறையைத் தட்டினார்.
அஞ்சனை தான் கதவைத் திறந்தார். இந்த நேரத்தில் மாமனாரைப்பார்க்கவும் என்னவோ என பதறிப்போய் விசாரிக்க அவரும் தன் மனம் சமநிலை இல்லாமல் தவிப்பதை தெரியப்படுத்தினார். என்ன நினைத்தாரோ அஞ்சனை வேகமாக மகன், மருமகள் இருக்கும் இடத்தை நோக்கி தான் சென்றார்.
அந்த வீட்டிற்கு வெளியே இருந்து திறக்கும் படி ஜன்னல் ஒன்று உண்டு. அதைத் திறந்து பார்க்கும் போது உள்ளே அவரின் இரத்தங்கள் இரண்டும் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு உயிரே போகும் அளவில் கத்த, வேலையாட்கள்அனைவரும் ஓடி வந்தனர். கொலையாளிகள் அங்கிருந்து தப்பித்து ஓடிட, வந்தவர்கள் நவநீதன் துவாரகா இருவரையும் நல்லபடியாக காப்பாற்றினர்.
இருவரையும் அணைத்து அழுதார் அஞ்சனை. கண்ணப்பனுக்கம், காத்தவராயனுக்கும் மாயவனையும், பத்மனையும் கொன்று போடும் அளவு கோபம் வந்தது.
அஞ்சனை கூட, “என் பிள்ளைங்களை கொல்லப் பார்த்து இருக்காங்க. இதுக்கு மேலும் நாம அமைதியாக இருக்க கூடாது. அவங்களை ஏதாவது பண்ணுங்க. ஏன்டா நம்ம வீட்டுப் பொண்ணு மேல கண்ணு வைச்சோம், அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம், இப்ப தினம் தினம் எதுக்காக அவளைக் கொடுமைப்படுத்துறோம் னு அவன் சாகுற வரைக்கும் கஷ்டப்படணும். அப்படி செஞ்சுட்டு இந்த வீட்டுக்குள்ள வாங்க. அவங்க செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிக்காத வரை இங்க இருக்கிற எல்லோருக்கும் உப்பு இல்லாத சாப்பாடு தான்.” என்றார். துச்சாதனன் இரத்தத்தில் குழலை நனைத்த பிறகு தான் அதை அள்ளி முடிவேன் என்று வீரசபதமேற்ற பாஞ்சாலியைப் போல் இருந்தது அந்த அன்னையின் சபதம்.
கண்ணப்பன் மாயவன் வீட்டிற்குச் செல்லும் போது அங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தது. உள்ளே செல்லக் கூட முடியவில்லை. கூடுதலாக அக்கம் பக்கம் இருந்த ஆளுக்கொரு யூடியூப் சேனல்கள் வைத்திருந்த அனைவரும் பெரியவர்கள் இருவரையும் கேள்விகளால் தாக்க, எதுவும் பேசாமல் பால்கனியில் இருந்து தங்களை நக்கல் பார்வை பார்த்த மாயவனை முறைத்தவண்ணம் திரும்பி வந்திருந்தனர்.
உருவாகி இருக்கும் இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று அனைவரும் தவித்துக்கொண்டிருக்க, ஒரு யோசனையோடு வந்தாள் துவாரகா.
“உங்களுக்கு ஹேக்கிங் தெரியும் தானே மச்சான். மாயவன் அக்கவுண்ட் ஹேக் பண்ணுங்க. அவன் போட்ட சிசிடிவி வீடியோக்களில் சிலது உங்ககிட்டேயும் இருக்கு தானே. அதை முழுசா அவனோட அக்கவுண்ட்டில் இருந்தே போடுங்க.
நாம என்ன ஆயுதத்தை எடுக்கப்போறோம் என்பதை எதிரி தான் தீர்மானிக்கிறான்னு சொல்லுவாங்க. அது உண்மை தான் போல. அவனை மாதிரியே நாமளும் இறங்க வேண்டியது தான்.” கடுப்பாக சொன்னாள்.
“போடுறதுன்னா உன்பேரில் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சு போடலாமே. எதுக்காக அவன் அக்கவுண்ட்டில் இருந்து போடணும்.” கண்ணப்பன் கேட்க, “ஒரு காரணம் இருக்கு. நான் கடைசியில் சொல்றேன்.” என்றாள்.
அடுத்த நாளே பத்மன் துவாரகாவிடம் இருந்து சப்பாத்திக்கட்டையில் அடிவாங்குவதற்கு முன்னும் பின்னும் இருந்த காட்சிகளோடு சேர்த்த வீடியோவை மாயவன் கணக்கில் இருந்தே பதிவேற்றி இருந்தான் நவநீதன். அதுமாயவன் ஆழ்ந்து உறங்கும் நேரம் என்பதால் அதை அவன் கவனிக்கவில்லை. ஆனால் உறங்காமல் விழித்திருந்த அவனைப் பின்தொடரும் பலர் பார்த்திருந்தார்கள். அதுவே அதிர்ச்சி என்னும் போது, அந்த வீட்டில் துவாரகாவிற்கு நடந்த பல துயரங்களை வீடியோவாக போட்டுக்கொண்டிருந்தான் நவநீதன்.
கணவன் என்கிற உரிமையில் வேலையாக இருக்கும் அவளிடம் அவன் அத்துமீறி அழவைத்தது, பெல்ட் அடி, அந்த வீட்டில் அவள் செய்யும் வேலைகள் என பலவற்றை அவன் பதிவுசெய்துகொண்டே போக, பரபரப்பானது இன்ஸ்டாகிராம். அதற்குள் யாரோ ஒருவன் மாயவனுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல பயந்து போனவன் வேகவேகமாக அந்த வீடியோக்களை அழித்துவிட்டு, தன்அக்கவுண்ட்டை தற்காலிகமாக முடக்கி வைத்திருந்தான்.
அன்பு காட்டினால் அட்சயப்பாத்திரம் போல காட்டுபவர்களையும், அதுவே கோபம் வந்தால் காட்டுமிராண்டி போல் நடந்துகொள்பவர்களையும் சைக்கோ என்பார்கள். சமூகவலை தளபோராளிகளும் கிட்டத்தட்ட சைக்கோ வகையினர் தான் போல. மாயவனுக்கு ஆதரவாக துவாரகாவை திட்டிக்கொண்டிருந்தவர்கள் இப்போது பாதை மாறி மாயவனைத் திட்ட ஆரம்பித்திருந்தனர்.
“இப்ப தான் புரியுது அந்தப் பொண்ணு ஏன் ஏட்டிக்குப் போட்டியா நடந்துக்குச்சுன்னு. இது என்ன மகாபாரத்ககாலம் னு நினைச்சுட்டானுங்களா கேடுகெட்ட அண்ணன் தம்பி இரண்டு பேரும்.” என ஆரம்பித்து பல மோசமான வசவுகள் கிடைத்தது மாயவனுக்கு. பெண்ணியம் பேசும் பல குழுக்கள் இவ்வளவு நாட்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியாத வண்ணம் திடீரென முளைத்து மாயவனுக்கு எதிரகா கோஷங்கள் மற்றும் அவனைக் கைது செய்யவேண்டும் என ஹேஷ்டேக்குகளையும் பறக்கவிட்டனர்.
என்ன செய்யலாம் என இரண்டு நாட்கள் திட்டம் போட்ட ப்ராடு சகோதரர்கள் இருவரும் மூன்றாம் நாள் காலை மறுபடியும் அக்கவுண்ட்டை ஓபன் செய்ய, காத்திருந்த நேரம் வந்ததாய் ஒரு வீடியோவை சொல்லிஅதை பதிவிட சொன்னாள் துவாரகா.
நவநீதன் அவளை அதிர்ந்து பார்க்க, “உனக்கு என்ன பைத்தியமா?” கோபித்தான் கணவன்.
“அதை எல்லோரும் பார்க்கணும் மச்சான். அப்ப தான் இனி அடுத்தவங்களை சோஷியல் புல்லிங் பண்ணும் முன்னாடி யோசிப்பாங்க.” என்றாள்.
“உன்னோட மானம் போயிடுமே டி.” அவன் பரிதவிப்பாய் சொல்ல, “என்னோட மானம் அந்த வீடியோவில் இல்லை மச்சான். இதை தான் நான் பல காலமா உங்களுக்குப் புரிய வைக்க முயற்சி பண்ணேன், சந்தர்ப்பம் வாய்க்கல.
ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளுக்கு நடக்கும் எதுக்கும் அவ காரணம் ஆக மாட்டா. அந்த வகையில் எனக்கு நடந்த எதுவும் எனக்கு அவமானம் ஆகாது. பஞ்சாயத்தில் ஆரம்பிச்சு பல இடங்களில் நானே இதை சொல்லத்தான் நினைச்சேன். ஆனா நீங்க சாதாரண ஆம்பிளையா யோசிச்சு எனக்காக, என்னோட மானத்துக்காகன்னு சொல்லி கடைசியில அதை என்னை விட்டு மொத்தமா பறிபோக வைச்சுட்டீங்க.
அன்னைக்கு பஞ்சாயத்தில் என்மேல் தப்பான பழி போடுறதுக்குப் பதில் எனக்கு நடந்த அநியாயங்களை சொல்லி அதுக்கான ஆதாரங்களைக் காட்டி இருந்தா நம்ம ஊர் பெரியவங்களே மாயவனுக்கான தண்டனையை வாங்கிக்கொடுத்திருப்பாங்க. நான் தப்பான பொண்ணுன்னு பெயர் வாங்குறதை விட எனக்கு நடந்த அநியாயங்களும் என் சுயநினைவு இல்லாமல் எடுக்கப்பட்ட என்னைப் பற்றிய காணொளியும் பலர் பார்வைக்கு போறது எனக்கு குறைவான வலியைத் தான் கொடுத்திருக்கும்.” என்று நிறுத்த, நவநீதன் அதிர்வோடு தன் தாயைப் பார்த்தான்.
ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்குத் தான் புரியும் என்பதாய் எத்தனை அற்புதமாய் துவாரகாவைக் கணித்திருக்கிறார் என்பதாய் தான்பார்த்தான் நவநீதன்.
“இந்த விஷயத்தில் எனக்கு உங்க மேல இருக்கும் வருத்தம் என்னைக்கும் போகாது மச்சான். சரி போனது போகட்டும். நீங்க செஞ்ச தப்பை நேர்செய்ய உங்களுக்கு கிடைச்ச கடைசி சந்தர்ப்பம் இதுதான்.
நான் சொன்ன வீடியோவை போடுங்க. என்மேல சுமத்தப்பட்ட பழியும் போகும். நீங்க எதுக்காக அப்படி ஒரு பொய் சொன்னீங்கன்னும் நம்ம உறவுகளுக்குப் புரியும். எல்லோருக்கும் நம்மை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்ல தான். ஆனா குறைந்தபட்சம் நமக்கு நல்லது நினைக்கிறவங்களுக்கு நாம எப்படின்னு நிரூபிப்போம்.” என்றாள்.
தயக்கத்தோடு தான் அந்த வீடியோவை பதிவேற்றினான் நவநீதன். இப்போதும் அவனுக்கு அதில் மனமில்லை தான். ஒரு பெண் பலவந்தப்படுத்தப்படும் காணொளியில் கூட அவளுடைய உடலை அசிங்கமாக வர்ணிக்கும் நபர்கள் இருப்பார்கள். அப்படியானவர்களிடம் இதைக்கொண்டு போய் சேர்க்க வேண்டுமா என நினைத்தான். ஆனாலும் துவாரகா அத்தனை திடத்தோடும், தைரியத்தோடும் இருக்கும் போது அவளுக்காக இதைச் செய்தான்.
முழுதாக பத்து நிமிடங்கள் மட்டும் தான் அந்த வீடியோ மாயவன் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்தது. ஆனால் அதற்குள் பல்லாயிரம் பேர் அதைப் பார்த்திருந்தனர். பார்த்த அனைவருக்குமே இதயம் கனத்து போனது. மாயவன் துவாரகாவை அவள் விருப்பத்திற்கு மாறாக பத்மன் அறைக்குள் இழுத்துக்கொண்டு சென்ற வெறும் இரண்டு நிமிட வீடியோ என்றாலும் அந்த அறை இருந்த கோலத்தை வைத்தே தொடர்ச்சியாக என்ன நடந்திருக்கும் என்பது புரியாதவர்கள் இல்லையே மக்கள்.
மாயவன் மேல் இருந்த அளவுக்கு அதிகமான பரிதாபம் ஒரே நொடியில் சுக்குநூறாககச் சிதறி அவனது போலி முகத்திரை கிழிந்த போது மக்களிடையே விவரிக்க முடியாத பெரும் கோபமமே மிஞ்சி இருந்தது.
அவனது ஏமாற்று வேலையை நம்பி துவாரகாவை கண்டபடி பேசிய சிலர் தங்கள் மீதே அருவருப்படைந்தவர்களாக தனிப்பட்ட முறையில் அவன்மீது வழக்குதொடர்ந்தார்கள். டிஜிட்டல் தளத்தையம் தாண்டி வெடித்த மக்கள் கோபம் அவனின் வீட்டு வாசலுக்கே வந்து முற்றுகையிட்டு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஒரு பெண் மாயவனை சட்டையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி அவன் முகத்தின் மீது காறி உமிழ்ந்து கடைசியில் தன் செருப்பால் அவன் முகத்திலேயே அடித்திருந்தார். அவமானத்தில் உயிர் போவது போல் இருந்தது மாயவனுக்கு.
மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் துவாரகாவிற்கு நீதி கேட்டு போராட்டத்தில் இறங்க, அது குறித்து பேட்டி எடுப்பதற்காகபலர் அவளைத் தேடி வந்திருந்தனர் சிலர்.
“யாரெல்லாம் உங்களுக்கு எதிரா பேசினாங்களோ அவங்க எல்லாம் இன்னைக்கு உங்களுக்கு நியாயம் கிடைக்க போராடிக்கிட்டு இருக்காங்க. இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று கேள்வி கேட்கப்பட, “எனக்கான நியாயம் என்னைக்கோ கிடைச்சிடுச்சு. நான் என்னோட கொடுமைக்கார முன்னாள் புருஷன்கிட்ட இருந்து மொத்தமா விலகி வந்துட்டேன். இப்ப நான் இன்னொருவர் மனைவி. அதனால் எனக்காக யாரும் போராடத்தேவையில்லை. ஆனா நீங்க நினைச்சா இன்னொரு துவாரகா உருவாகாம தடுக்க முடியும்.
ஆண்கள் எல்லோரும் அவங்க இன்னொரு துவாரகா உருவாக காரணமா இருக்க மாட்டோம் னு உறுதி எடுத்துக்கோங்க. பெண்கள் எல்லோரும் தங்கள் பிள்ளைகளை இன்னொரு மாயவனாவோ, பத்மனாவோ உருமாற விடமாட்டோம் னு உறுதி எடுத்துக்கோங்க. அதுவே போதுமானது. அடுத்த தலைமுறையைக் காப்பாத்தும் சக்தி இந்த தலைமுறைகிட்டதான் இருக்கு.”
“சோஷியல் மீடியாவை எதுக்கு பயன்படுத்தணுமோ அதுக்கு மட்டும் தான் பயன்படுத்தணும். அதில் வரும் தகவல்கள் உண்மையா பொய்யான்னு ஆராய்ந்து பார்த்து அதுக்குப் பிறகு தான் கருத்து சொல்லணும்.
வாழ்வது ஒருமுறை அதில் நமக்குப் பிடிச்ச மாதிரி வாழலாம் னு சொல்லி கண்டதையும் பண்ணாம நேர்மையா ஒழுக்கமா வாழனும். மனிதன் ஒரு சமுதாய விலங்கு. அவன் செய்யும் சரியும், தவறும் அவனுக்குப் பின்னால் வரப்போகும் பல தலைமுறைக்கு கடத்தப்படும். தனி மனித ஒழுக்கம் இருக்க வேண்டியது கட்டாயம். மத்த எல்லாம் உங்களுக்கே தெரியும்.” என்றதோடு பேட்டியை முடித்துக்கொண்டாள்.
மாயவன், பத்மன், சுரேகா மூன்று பேராலும் வெளியே தலைகாட்ட முடியவில்லை. எந்த சமூகவலைதளத்தை வைத்து துவாரகாவை அழிக்க பார்த்தார்களோ அது அவர்களை முற்றிலுமாக நொருக்கிப் போட்டது. இதில் அதிகமாக நொருங்கிப்போனது சுரேகா தான்.
அவள் தோழிகள் பலரும் போன் செய்து கண்டபடி பேச ஆறுதல் தேடி தாய் தந்தைக்கு அழைத்தால் அவர்கள் அதைவிட மோசமாகப் பேசி, இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறாய் செத்துப்போய்விடு என்று சொல்ல அந்த வார்த்தை அவள் காதிற்குள் கேட்டுக்கொண்டே இருந்தது.
அதனால் உணவில் விஷயத்தை கலந்து தன்னோடு சேர்த்து தன் அழிவிற்கு காரணமான மற்ற இரு ஆண்களையும் சேர்த்து கொன்று இருந்தாள். அடுத்த நாள் காலை இது செய்தியாக வெளியே வர ஊருக்குள் அவர்களுக்காக வருத்தப்பட யாரும் இல்லை.
துவாரகாவை தவறாகப் பேசியதற்காக வீடு தேடி வந்து மன்னிப்புகேட்டுப் போயினர் ஊர் மக்களில் பலர். துவாரகா அவர்களை எல்லாம் பொருட்டாகவே நினைக்கவில்லை. சில நாட்களாக தன்னைக் கண்டாலே ஓடும் கணவனை வசமாகப் பிடிக்க சரியான நேரம் பார்த்து காத்திருந்தாள்.
அவனும் சிக்கினான். “நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். எதுக்காக என் முகத்தைப் பார்த்து பேச மாட்டுறீங்க.” கோபமாகக் கேட்க,
“சுலபமா முடிய வேண்டியதை நான் தான் ரொம்ப சீரியஸாக்கிவிட்டு உனக்குகெட்ட பேர் எடுத்துக்கொடுத்துட்டேனோ.” வருத்தமாய் சொல்ல, “அழகு மச்சான், நடந்து முடிஞ்சதைப் பத்தி பேசக்கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனாலும் இப்ப சொல்றேன். அந்த நேரம் நீங்க செஞ்ச எதுவும் சரின்னு நான் என்னைக்கும் ஏத்துக்க மாட்டேன். ஆனா அந்த தப்பான செயலுக்குப் பின்னாடி இருந்தது முழுக்க முழுக்க என்னோட சுதந்திரம், என்னோட நலன் என்னும் போது உங்களை நான் அடிமனசில் இருந்து மன்னிக்கிறேன்.” என்க, “நிஜமாவா?” அத்தனை ஆசையாகக் கேட்டான்.
“நிஜம். எனக்கு கிடைச்ச வரம் நீங்க. இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்களைத் தாண்டிய மதிப்புமிக்க வரம் எனக்கு கிடைக்கவே செய்யாது.” என்றவள் உரிமையாய் அவன் கரம் பிடித்தாள்.
அவன் அவளை ஆசையாய் கருணையாய் பரிபூரணமாய் பார்க்க, “உங்களுக்கும் என்னை முன்னாடியே பிடிக்கும் தானே.” என்க, தலைகோதிய நவநீதன், “அது என்னைத் தவிர எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு.” என சங்கடத்தோடு சொன்னான்.
“வேற யாருக்கு தெரிஞ்சதாம்.” என்க, “வேற யாரு நம்ம தாத்தாவுக்கு தான்.” என்க, “அவரால் தான் ஆரம்பத்தில் இருந்து எல்லாப் பிரச்சனையும். இப்ப பேசாம ரூமுக்குள்ள அடங்கிட்டா செஞ்சது எல்லாம் இல்லன்னு ஆகிடுமா?” கோபம் கொள்ள அவள் மூக்கை தடவி விட்டவன், “விட்டுடு டி பாவம். அவரைத் தண்டிச்சு என்ன பண்ணப்போறோம். நாம நம்மளைப் பத்தி யோசிக்கலாம்.” என்க, யோசிக்கலாமே என அவன் நெற்றியோடு நெற்றி முட்டியவள், “நாம இன்னும் கொஞ்ச நாள் இந்த ஓட்டு வீட்டிலேயே இருக்கலாமா?” என்க, “கண்டிப்பா இருக்கலாம். ஆனா எத்தனை நாள்.” என்றான்.
“நமக்கு இரண்டு குழந்தைங்க பிறக்கும் வரை.” லேசான வெட்கத்தோடு துவாரகா சொல்ல, “கண்டிப்பா, எனக்கு சந்தோஷம், ரொம்ப சந்தோஷம்.” வேகவேகமாகச் சொன்னான் நவநீதன்.
ஆழிப்பேரலை போன்ற பல கஷ்டங்களைத் தாண்டி பிழைத்து வந்த துவாரகா கிருஷ்ணனின் நிழலில் காலத்திற்கும் நிம்மதியாக சந்தோஷமாக வாழ்வாள் என்னும் நம்பிக்கையோடு விடைபெறலாம்.

Last edited: