வரம் 13
துவாரகாவை தன் மனைவியாகப் பெறுவதற்கு என்னென்ன தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்தோம் என்பதை நிகழ்காலத்தில் நினைத்துப்பார்த்துக்கொண்டிருந்தான் மாயவன்.
நவநீதனுக்கு நிச்சயம் செய்திருந்த ஐஸ்வர்யாவின் அண்ணனுக்குப் பெண் கொடுத்தது மாயவனின் சித்தப்பா. அந்த வகையில் அந்த வீட்டுக்கு வந்து போய் இருந்த மாயவனுக்கு ஐஸ்வர்யா மீதும் அவள் பெயரில் இருக்கும் சொத்துக்களின் மீதும் தீராத கண். அவளுக்கு திருமணம் நிச்சயமாகப் போகிறது என்றதும் மாப்பிள்ளையை தனியாகச் சந்தித்து அவனிடம் ஐஸ்வர்யாவைப் பற்றி தவறாகக்கூறி சுபநிகழ்வை பேச்சுவார்த்தையோடு நிறுத்த என்று வந்தவன் துவாரகாவைப் பார்த்ததும் ஐஸ்வர்யாவையும் மறந்தான், அவள் மூலமாக தானும் தன் அண்ணனும் போட்டு வைத்திருந்த திட்டங்களையும் மறந்தான்.
துவாரகாவின் அழகு அவன் கண்களை விட்டு அகல மறுத்தது. எப்படியாவது அவளைத் திருமணம் செய்துகொண்டே ஆக வேண்டும் என்று தீர்மானித்தவன் அண்ணனிடம் விஷயத்தைச் சொன்னான்.
தன் மனைவி சுரேகா மூலம் தனக்கு கிடைத்த சொத்துக்கள் அளவு ஐஸ்வர்யா மூலம் தம்பிக்கும் கிடைக்கும். அதன்பிறகு எல்லாம் சுபமே என்று நம்பிக்கொண்டிருந்த பத்மனுக்கு இந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. தம்பியை தீட்டித் தீர்த்தான். துவாரகாவின் மீது அத்தனை ஆசையாக இருந்தால் அவளைக் கடத்தி வைத்திருந்து ஆசை தீர்ந்ததும் அனுப்பிவிட்டு ஐஸ்வர்யாவை மணந்துகொள் என்று துர்போதனை சொன்னான்.
ஆனால் துவாரகா மீதான விருப்பம் மழைமேகம் போல் காற்றடித்தால் கலைந்து போகக் கூடியது அல்ல என்பதில் உறுதியாக இருந்த மாயவன் அண்ணனின் யோசனையை எதிர்த்தான்.
இதற்குள் தன் வீட்டு சொந்தங்கள் மூலம் இந்த துவாரகா யார், அவள்பின்புலம் என்ன என்பதையெல்லாம் விசாரித்து தெரிந்துகொண்ட சுரேகா கொடூர திட்டத்தை போட்டாள்.
அவள் ஒரு செல்வச்சீமாட்டி. பிறர் அவளுக்கு வேலை செய்து தான் பழக்கமே தவிர்த்து, இவளுக்கு வேலை செய்து பழக்கமே இல்லை. ஆனால் வாக்கப்பட்டு வந்த நாள் முதலாக அந்த வீட்டில் நடக்கும் யாவும் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக வேலையாட்கள் வைத்துக்கொள்ளாமல் அவளே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியதாகி இருந்தது. ஐஸ்வர்யாவும் தன்னைப் போலவே வளர்ந்தவள். தன்னோடு எந்தளவு ஒத்து வருவாள் என்றும் தெரியாது.
ஆனால் இந்த துவாரகா ஆதரவுக்கு ஆள் இல்லாதவள் என்பதால் அடிமையைப் போல் பயன்படுத்தலாம் என கணக்கிட்டு கணவனையும் சம்மதிக்க வைத்தாள். அரைகுறையாக சம்மதித்த பத்மன் கூட துவாரகாவை நேரில் பார்த்ததும் ஒப்புக்கொண்டுவிட்டான். அதன்பிறகு மாயவன் எங்கும் தேங்கி நிற்கவில்லை.
மாதங்கி எந்த தரகரிடம் மகளின் ஜாதகத்தை கொடுத்து வைத்திருந்தாரோ அவரிடம் தன் ஜாதகத்தை மாதங்கியிடம் கொடுக்க பேரம் பேசினான். முதலில் தொழில்தர்மம் அது இது என்று பேசியவர் கூட ஐம்பதாயிரம் பணத்தைப் பார்த்ததும் ஒப்புக்கொண்டார்.
மாதங்கி எதிர்பார்த்த எந்த குணத்தோடும் ஒத்துப்போகாத மாப்பிள்ளைகள் ஐவரோடு சேர்த்து மாயவனின் ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு அவரைத் தேடி வந்தார். தரமற்ற பொருட்களுக்கு நடுவில் சுமாரான பொருளை வைத்தால் அது தரமாகத் தெரியும் என்கிற வியாபார நுணுக்கத்தை அந்த இடத்தில் பயன்படுத்தினார். ஆனால் மாதங்கியிடம் அந்த யுக்தி பலன் அளிக்கவில்லை.
யாரையும் பிடிக்கவில்லை. வேறு மாப்பிள்ளையோடு வாருங்கள் என்று ஒரே முடிவாகச் சொன்னார். ஐம்பதாயிரம் கைவிட்டுப் போய்விடுமோ என்னும் பயத்தில், இந்த மாப்பிள்ளைகளை விட்டால் வேறு யாருமே துவாரகாவின் பின்புலத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று மாதங்கியின் மனதைக் கரைக்கப் பார்த்தார் தரகர்.
அதில் கோபம் வந்து கிடைத்த அறுவரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் என் மகளுக்கு இல்லை என வெடுக்கென பேசி அனுப்பிய மாதங்கியை சில நாட்கள் கழித்து வேறு மாதிரி சமாளித்தான் மாயவன்.
பெண்பிள்ளையைப் பெற்ற தகப்பன் மாப்பிள்ளையின் வேலை, அவன் குடும்பத்தின் கௌரவம் என பலவற்றைப் பார்த்தாலும் பெண்ணைப் பெற்றவளுக்கு பெரும்பாலும், வரும் வரனுக்கு தன் மகளை நிறைவாகப் பிடித்திருக்க வேண்டும். காலத்திற்கும் மகளோடு சந்தோஷமாக வாழ வேண்டும் என்பது மட்டும் தான் கனவாக இருக்கும். அதைத் தூண்டி விட்டான்.
“மாயவன் தம்பி நம்ம பொண்ணை எங்கேயோ பார்த்துட்டு எப்படியாவது அந்தப் பொண்ணை எனக்குப் பேசி முடிங்கன்னு தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கார் மா. நான் பல மாப்பிள்ளைகளை உங்களுக்கு காட்டிட்டேன். யார் மேலும் உங்களுக்கு திருப்தி இல்ல. தம்பிக்கே முடிக்கலாமே. நான் ஒன்னும் நீங்க ஒத்துக்க தான் வேணும் னு சொல்லல. அவரைப் பத்தி நல்லா விசாரிச்சு பாருங்க. ஒத்து வந்தா கல்யாணத்தைப் பண்ணலாம். இல்லன்னா வேற வரன் பார்க்கலாம்.” என்றுவிட்டு கிளம்பினார் தரகர். மாதங்கியின் மனம் கலங்கிய குட்டையைப் போலானது.
ஒருவேளை தன் மகளுக்கு ஏற்ற மணாளன் இவன் தான் என்று எழுதப்பட்டிருந்தால் என்ற நினைப்போடு சேர்த்து எதற்காக கண்ணை மூடிக்கொண்டு நிராகரிக்க வேண்டும் என நினைத்தவர் அவனைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பை நவநீதனிடம் கொடுத்தார்.
அப்போது கூட, “அந்த தம்பி இப்ப வேலை செய்யுற இடம், முன்னாடி வேலை பார்த்த இடம், அங்க வேலை பார்த்த ஆட்கள் னு எத்தனை முடியுமோ அத்தனை பேர்கிட்டேயும் விசாரிச்சு சொல்லு நவநீ. அண்ணனை அலைய வைக்க எனக்கு மனசு இல்ல. அதனால் தான் உன்கிட்ட சொல்றேன்.” என்க, மனதார ஏற்றுக்கொண்டான் நவநீதன்.
தன்னை நம்பி ஒப்படைக்கப்பட்டது மிகப்பெரிய பொறுப்பு என்பது புரிந்திருந்தாலும், புதிதாக வாங்க இருக்கும் நிலத்தின் மீதான வில்லங்கச்சான்று கிடைக்காமல் இழுத்துக்கொண்டே இருக்க, அதற்கான அதிகாரிகளை பார்க்கும் பரபரப்பில் தனக்கு மிகவும் நம்பிக்கையான நண்பனிடம் மாயவனைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தான் நவநீதன். அங்கே தான் சறுக்கினான் அவன்.
தன் அண்டை வீட்டு ஆட்கள், தங்களுடைய கம்பெனியில் வேலை செய்யும் நபர்கள், இந்நாள் நண்பர்கள் என அனைவரையும் தனக்கேற்றபடி இசையச் செய்திருந்த மாயவன் இதற்கு முன்னால் வேலை செய்த இடத்தில் போய் விசாரிக்கும் அளவுக்கு போக மாட்டார்கள் என தானாக நினைத்துக்கொண்டான். ஆனால் நவநீதன் தன் நண்பனிடம் அதைக் கட்டாயமாக செய்யச் சொல்லி இருக்க, அங்கே வசமாகச் சிக்கினான் மாயவன்.
ஒரு பெண்ணோடு மிகவும் நெருக்கமாகப் பழகி திருமணம் என்று வரும் போது கழட்டிவிட்டு அது அலுவலகத்தில் சண்டையாக வெடித்ததில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தான் அவன் அந்த இடத்தில் இருந்து நீக்கப்பட்டதாகத் தகவல் தெரிய வந்தது.
தான் மாட்டிக்கொண்டது மாயவனுக்கு நன்றாகவே புரிந்தது. நவநீதனின் நண்பனைத் தனியே சந்தித்து, “நானும் அந்தப் பொண்ணும் பழகினது எல்லாம் உண்மை தான். கல்யாணம் பண்ணிக்கும் எண்ணத்தோட தான் பழகினேன். ஆனா கடைசியில் பிரச்சனையாகிப் பிரிஞ்சுட்டோம். அவளைத் தவிர வேற யாரோடவும் எனக்கு எந்தப் பழக்கமும் இல்ல.
எப்பவோ நடந்த விஷயங்களை பொண்ணு வீட்டில் சொல்லி என் வாழ்க்கையைக் கெடுத்திடாதீங்க. இந்த ஆபிஸ் தவிர மத்த இடங்களில் என்னைப் பத்தி யாராவது தப்பா சொன்னாங்களா? இருக்காது. ஏன்னா நான் நல்லவன். ஒரு பையனா என் மனசு உங்களுக்குப் புரியும். எனக்கு துவாரகாவை ரொம்பப் பிடிச்சிருக்கு. தயவுசெய்து என் வாழ்க்கையைக் காப்பாத்திக் கொடுங்க.” என்று பயங்கரமாகக் கெஞ்ச, அதை உண்மை என்றே நம்பிவிட்டான் நவநீதனின் நண்பன். அதனால் மாயவன் நல்லவன் என்றே நவநீதனிடம் தகவல் கொடுத்தான்.
நவநீதன் இறங்கி விசாரித்திருந்தால், ஒரு இடத்தில் என்றாலும் பெண்கள் விஷயத்தில் கரும்புள்ளி வாங்கிய ஒருவன் தன் வீட்டுப் பெண்ணிற்கு வேண்டாம் என்று முடிவு செய்திருப்பான். அவனுக்கு துவாரகாவைத் தாண்டி தான் மாயவன் இருந்திருப்பான். ஆனால் அவனுடைய நண்பன் ஆணாக முதலில் யோசித்து, திருமணத்திற்கு முன்னர் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, திருமணத்திற்குப் பிறகு திருந்திவிட்டால் போதும் என்று தான் நினைத்தான். அங்கு தான் துவாரகாவின் வாழ்க்கை முதன்முதலாகத் தடம்புரண்டது.
மாதங்கிக்கு விஷயம் தெரிய வர, அவருக்கு பரம சந்தோஷம். நவநீதன், ஐஸ்வர்யா திருமணம் முடிந்த சில மாதங்களில் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என அவரே மாயவனுக்கு அழைத்துச் சொல்ல, அவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டுமா எனக் கடுப்பானான் அவன்.
ஆனால் எதிர்பாராத விதமாக ஐஸ்வர்யாவின் பாட்டி இறந்து போக அவர்கள் திருமணம் ஆறுமாதம் தள்ளிப்போனது. அவ்வப்போது வீடு தேடி வந்து நான் நல்லவன், என்னைப் போல உத்தமன் இந்த உலகத்திலேயே கிடையாது என அனைவரையும் தன் நடிப்பில் கட்டிப்போட்டிருந்த மாயவன் காத்தவராயைத் தனியே சந்தித்து பேச வேண்டிய விதத்தில் பேசி, நவநீதன் திருமணத்திற்கு முன்பே துவாரகாவுக்கும் தனக்குமான திருமணத்தை நடத்த அனைவரையும் சம்மதிக்க வைத்திருந்தான். இப்படித்தான் நடந்து முடிந்தது துவாரகாவின் திருமணம்.
மகளின் மீது வருத்தத்தில் இருந்தாலும் தன் பேத்திக்கு குறையாத சீர் செய்திருந்தார் காத்தவராயன். கண்ணப்பனும் தாய்மாமன் சீரில் எந்த குறையும் வைக்கவில்லை. நவநீதன் கூட தன் பங்கிற்கு ஒரு ஆரம் வாங்கிப் பரிசளித்திருந்தான். கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு பூமியின் நரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாள் பேதைப் பெண்.
திருமணத்தை தொடர்ந்த சில நினைவுகள் கனவு போல வர அம்மா என்கிற அலறலுடன் நிகழ்காலத்தில் உறக்கத்தில் இருந்து எழுந்தாள் துவாரகா. அவள் அருகில் படுத்திருந்த நவநீதன் தானும் எழுந்து அவளை ஆறுதல் படுத்தியவன், குடிக்க நீர் கொண்டு வந்து கொடுக்க, குடித்துவிட்டு நிமிர்ந்து அவனைப் பாவம் போல் பார்த்தாள்.
“எல்லாம் ஒரே நாளில் சரியாகாது. ஆனா கண்டிப்பா ஒருநாள் சரியாகும்.” என்று அவள் தலையை தடவிக்கொடுத்தான்.
அவனையே பார்த்தபடி இருந்தவளிடம், “போய் குளிச்சுட்டு ட்ரஸ் மாத்திக்கோ. இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டை சரிபண்ண ஆட்கள் வருவாங்க.” என்க, சத்தம் இல்லாமல் எழுந்து சென்றாள்.
அவள் அமைதி அவனுக்கு விசித்திரமாகப்பட்டது. இருந்தாலும் அடுத்தடுத்து செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளம் இருக்க, பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தான். சற்று நேரத்தில் முந்தைய நாள் சொன்னது போல அண்ணனோடு வந்திருந்த பரணி, “இதில் உனக்கும் துவாரகாவுக்கும் சாப்பாடு இருக்கு.” என்க, அதன்பிறகே அவள் நினைவு வந்தாள் நவநீதனுக்கு.
குளிக்க சென்றவள் வெகுநேரம் ஆகியும் திரும்பாமல் இருக்க ஏதோ சரியில்லை என்று உள்ளம் சொன்னது. ஓட்டு வீட்டின் பின்னால் இருக்கும் ஒன்றை பாத்ரூம் அருகே சென்றவன் கதவைத் தட்ட உள்ளிருந்து எந்த சத்தமும்இல்லை.
“துவா இப்ப நீ கதவைத் திறக்கல நான் கதவை உடைச்சிடுவேன்.” என்ற பிறகும் அவள் கதவைத் திறக்கவில்லை எனவும் பயம் அதிகமாக கதவை இடித்து திறந்தான் நவநீதன். அங்கே அவன் பயந்தது போலவே ஷேவிங் ப்ளேடு கொண்டு தன் கரத்தை ஆழமாக வெட்டிக்கொண்டு இரத்த வெள்ளத்தில் மயங்கிக்கிடந்தாள் துவாரகா.
அவளைத் தூக்கிக்கொண்டு தன் தோழி மஹதியிடம் தான் சென்றான் நவநீதன். இப்படிச் செய்துவிட்டாயே முட்டாள் என்று போகும் வழியெங்கும் திட்டிக்கொண்டே தான் சென்றான். அவனுக்கு ஒன்று புரியவில்லை. புகுந்த வீட்டில் கணவன் என்னும் கொடூர மிருகத்தால் பற்பல துன்பங்களை அனுபவித்த போதிலும் என்றும் தற்கொலை என்னும் முடிவுக்கு வராமல் இருந்தவள் இன்று அப்படியொரு முடிவுக்கு வந்திருக்கிறாள் என்றால் முந்தைய நாள் நடந்த நிகழ்வுகளில் அவள் மனம் எத்தனை காயப்பட்டு இருக்கும் என்பதைப் பற்றி அவன் யோசித்தது போலவே தெரியவில்லை.
எப்படியாவது அவள் பிழைத்து வந்துவிட வேண்டும் என்று உளமாற வேண்டிக்கொண்டு மருத்துவமனை வளாகத்திற்குள் நடைபயின்றுகொண்டிருந்தான். விஷயம் கேள்விப்பட்டு கண்ணப்பன் மட்டும் தான் மகனுக்காக அங்கே வந்திருந்தார்.
ஆறு மணி நேரம் கழித்து தான் அவள் உயிருக்கு உத்தரவாதம் கொடுத்தார் மஹதி. நவநீதன் பெருமூச்சு விட அதற்கு எப்படி அனுமதிப்பேன் என்பதாய், தன் வீட்டில் இருந்து பிறந்த வீடு வரும் போது பத்து இலட்சம் ரூபாயை துவாரகா திருடிக்கொண்டு வந்துவிட்டாள். என் மனைவி என்பதற்காக பொறுத்து போனேன். இனி எனக்கும் அவளுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்னும் போது அந்தப் பணத்தை அவள் திருப்பிக்கொடுத்தாக வேண்டும் என்று காவல்நிலையத்தில் மாயவன் புகார் கொடுத்திருக்க, அதற்காக துவாரகாவை விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கே வந்தனர் காவலர்கள்.