• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

NTYU - 24

STN - 90

New member
தேடல் 24

1778635659078.png

மறுநாள் வினுவின் அலுவலகத்திற்கு வந்திருந்தான் தீரன். தன் அலுவலை பார்த்தபடி..

“என்ன முரட்டு சிங்கம் இந்த பக்கம்..?

இந்த மைனர்புலியை சீண்டி பார்க்க தான்..

இன்னுமா நீ அடங்கல..?..

அடங்கமாட்டேன் பகைவா..

ம்ம்..சரி என்ன சாப்பிடற..?

சூடா ஒரு ஆப்பிள் ஜூஸ் சொல்லு..

அப்படி ஒரு பழத்தை நீ தான் வளர்த்து தரணும்..” என தன் பணியாளரிடம் இரு ஆப்பிள் ஜூஸ் சொன்னவன் அவனை ஏறிட்டு..

“இப்ப சொல்லு..என்ன விஷயம்..?

உன் கல்யாணத்தை பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க..?

ஏன் பொண்ணு ரெடியா..?

உனக்கே பதில் தெரியும்..” என்றான் தீரன். கண்களை மூடி சற்றே நாற்காலியில் சாய்ந்த வினு பின்..

“அன்னைக்கு நீ கொஞ்சம் நிதானமா நடந்திருந்தா இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது..ஒரு பொண்ணை வச்சு நீ பெருசா நான் பெருசா னு ச்சீ என்னடா வாழ்க்கை இது..? மூணு வருஷமா நான் அனுபவிச்சது..விடு இத பேச பேச வெறுத்து போகும்..லயா மனசிலிருக்கிறதை சொல்றேன்..அநியாயமா உயிர் விட்ட ஷிவநந்தனுக்காக மனசுக்குள்ள என்னை வச்சுக்கிட்டு வெளிய தள்ளி நிக்கிறா..இதே ஊர் முன்னாடி தலை குனிஞ்சு நின்ன என் அம்மா அப்பாவை உண்மைய சொல்லி தலை நிமிர வைக்கனும் னு எதிர்ப்பார்க்குறா..ஆனா அங்க உன் மரியாதை கீழிறங்குமே..அத எப்பவுமே விரும்பமாட்டா உன் நிலாக்குட்டி..” என சிரித்தவன் தொடர்ந்து..

“காதலுக்கு அடிப்படை என்ன சொல்லு..? நமக்கான ப்ரியாரிட்டி..அவ விஷயத்துல நீயா நானா னு வந்தா நிச்சயமா உன்னை தான் தேர்ந்தெடுப்பா..உன்னை தாண்டி என்னால அவளை ரீச் பண்ண முடியல னா என்ன கருமத்துக்கு டா காதல் பண்ணனும்..? அதான் எங்களை நாங்களே தூக்கி எறிஞ்சிக்கிட்டோம்.. இப்படியே ஒருத்தரை ஒருத்தர் வெறிக்க வலிக்க பாத்துட்டு காலத்தை ஓட்டிடுவோம்..பார்த்த நொடியிலேருந்து இப்ப இல்ல எப்பவுமே அவளுக்காக மட்டும் தான் இந்த ஹார்ட்பீட்..” என தன் நெஞ்சை தடவிய வினு..

“நாளைக்கு நைட் நான் ட்ரெக்கிங் கிளம்புறேன் டு ஹிமாலயாஸ்..வர்ற நாளாகும்..எல்லாரையும் கொஞ்சம் பாத்துக்க..என் வீட்டையும் சேர்த்து தான்..” என தன் லாப்டாப்பில் மூழ்கினான் வினுயுகன். பந்தயத்தில் சந்தித்த அன்றைய வினுவிற்க்கும் இன்று எதிரில் இருப்பவனுக்கும் எத்தனை வேறுபாடு..? வாழ்க்கை வலிக்க வலிக்க கற்பித்த பாடம் மூலம் மனிதர்களை எத்தனை துல்லியமாக எடை போடுகிறானிவன்..?தன் அகம்பாவத்தில் சிதைந்து சிதறி கிடக்கும் இவர்கள் இணையவே பிறந்தவர்கள் என முடிவெடுத்த தீரன் அமைதியாக எழுந்து வினுவை நெருங்கி அவனை தோளோடு இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான். அதிர்ச்சியில் விழி விரித்த வினுவை தட்டிக்கொடுக்க தீரன்..

“பாக்க மட்டும் இல்ல மனசளவிலும் அழகன்டா நீ..இப்பவும் நீ என் எதிரி தான்..உங்கிட்ட மோதி பாக்குறதுல தனி கிக் எனக்கு..” என கண்ணில் கண்ணீருடன் சிரித்தபடி கூறும் ஸ்வீட் பகைவனை ஆதுரமாக பார்த்தான் வினு.

காதில் இயர் போனுடன் அனைத்தையும் நேரடியாக பார்த்திருந்த நிலாவிடம் ப்ரணவ்..

“மச்சி எனக்கு ரெண்டு புஃல் சொல்லு..இதெல்லாம் பாக்குற சக்தி நம்ம மனசுக்கு இல்ல டா சாமி..

…..

என்ன பீலிங்கா..? எப்படி உன்னோட டரம்ப் & புடின் மீட்..? அதும் லாஸ்ட் ல உம்மா வேற..உன் மாமன் எல்லாத்திலயும் எக்ஸ்ட்ரீம்..ஓய் முதலாளி மேடம்..வைன் ல சாரி லைன் ல இருக்கீங்களா..?

இருக்கேன் ண்ணா..” என அவள் குரல் சிறு பிசிறடிக்க..

“ண்ணாவா..? வாட் ஏ மிராக்கிள்..ஜங்கிள் பேபிக்கு இங்கிதமெல்லாம் தெரியுது..

அவர் மட்டுமல்ல..நீங்களும் ஏன் என்னை சுத்தி இருக்கிற மூணு பசங்களும் அழகானவங்க தான்..சூழ்நிலை உங்க குணங்கள மாத்தினாலும் அடிப்படையில யாருக்கும் கெடுதல் நினைக்காத நல்ல மனசுக்காரங்க..ஆனா உங்க எல்லாரையும் விட பேரழகன் என் ஷிவநந்தன் தான்..

ம்ம்..சரி..அப்புறம்..?

டிரம்ப் லாஸ்ட் டைம் சோலோவா சுத்திட்டு வரட்டும்..” என கேட்டதும் வாய்விட்டு சிரித்தான் ப்ரணவ்.

வருடந்தோறும் தனிமையை தேடி புது இடம், புது மனிதர்கள் என தன்னை புதுப்பித்துக்கொள்ள வினுயுகன் இம்முறை இமாலயமலையை நோக்கி கிளம்பியிருக்க வாரயிறுதி நாளென்பதால் ஓய்வாக நாற்காலியில் சாய்ந்து தன் மொபைவை பார்த்தபடி இருந்தான் ப்ரணவ். கதவை தட்டி அனுமதி கேட்டு நுழையாமல் அதிரடியாக நுழைந்த மான்யாவை உஷ்ணமாக ஏறிட்டு..

“இனி பர்மிஷன் கேட்டு உள்ள வா..

எப்படியிருந்தாலும் இந்த ஜென்மத்துல என்னை தவிர யாரும் உனக்கு வாழ்க்கை கொடுக்கமாட்டாங்க..சோ நமக்குள்ள என்ன..?

அப்போ என் டீலுக்கு சம்மதமா..?

உன்னை வேற வழியில கரெக்ட் பண்ணவே முடியாதா ப்ரஹான்..?” என சோர்வுடன் கேட்டவளிடம்..

“ம்ப்ச்..” என தலையசைத்தவன்..

“உன்னை மாதிரி லவ் பண்றேன் சொல்லி பாதியில சில்லி ரீசன் கொடுத்து என்னை கழட்டிவிட்டிருகாங்க..சோ நீ உண்மையா என்னை லவ் பண்றியா இல்லையா னு நான் எப்படி தெரிஞ்சுக்கிறது..?

ஆக குழந்தை பிறந்து நான் அதை ஏத்துக்கிட்டா என்னை கட்டிப்ப ரைட்..?

சார்ட் ஆஃப்..பெட்டர் ஸ்டே அவே ப்ரம் மீ மான்யா..”என்று கூறிவிட்டு தன் மொபைலை பார்க்க சில நொடிகள் தலை குனிந்திருந்த மான்யா கண்ணீரை சுண்டி விட்டபடி நிமிர்ந்து..

“ஒரு மாசம் டைம் கொடு..எனக்கு னு சில வேலைகள் இருக்கு..நீ கேட்கிறது என்னை..இதுக்கு ஒரு நாள் கண்டிப்பா வருத்தபடுவ..நானே போன் பண்றேன் பை..” என வெளியேறியவளையே யோசனையுடன் பார்த்திருந்தான் ப்ரணவ்.

தங்கள் குலதெய்வமான இசக்கியம்மனுக்கு மாசி மாதத்தில் கிடா வெட்டி பொங்கல் வைப்பது ஒவ்வொரு வருடம் ஒரு குடும்பத்தின் கட்டளையாக மேற்கொள்ளபட்டு இவ்வருடம் தீரனின் கட்டளையென்பதால் அவன் வீட்டு பெண்கள் அனைவரும் விரதமிருந்து ஊர் எல்லையில் வீற்றிருக்கும் அம்மனுக்கு மாவிளக்கேற்றி பொங்கல் வைத்தனர். வருடத்திற்கு ஒரு முறை ஊரே திரண்டு வந்து பொங்கல் வைத்து அம்மனின் ஆசிகளை பெறுவர்.

கமலா மேற்பார்வையில் நிலா பொங்கல் வைக்க மறுபுறம் அம்மனுக்கு கிடா வெட்டி கறிசோறு தயாராகி கொண்டிருந்தது.

பொங்கல் வைத்து மாவிளக்கேற்றி அம்மனுக்கு தீபாராதனை காட்டும் முன் கட்டளை செய்பவரின் குடும்ப தலைவருக்கு கோயில் சார்பாக பரிவட்டம் கட்டி பூரண கும்ப கலசத்தை கையிலேந்தி அம்மனை ஒரு முறை வலம் வர வேண்டுமென்பதால் தீரனை முன்னே அழைத்தனர்.

கிட்டதட்ட தோவாளை ஊர் மக்கள் அனைவரும் கூடியிருந்த பிரகாரத்தில் முன்னே வந்து நின்ற தீரன் கரங்களை குவித்தபடி..

“இங்க ஊர் பஞ்சாயத்தார் முதற்கொண்டு நம்ம சொந்த பந்தம் மக்களெல்லாம் கூடியிருக்கிற சமயத்துல நான் கொஞ்சம் பேசனும்..சில வருஷங்களுக்கு முன்னாடி தப்பே செய்யாம என் அகம்பாவம், அவசரபுத்தியினால ஒரு குடும்பத்தையே தள்ளி வச்சிருந்தது, அதுக்கப்புறம் நடந்தது எல்லார்க்கும் தெரிஞ்சது தான்..ஒரு நிமிஷம்..” என கீழிறங்கி கோயிலுக்கு வெளியே நின்றிருந்த மாணிக்கம் மற்றும் வேதாவை கை பிடித்து ஊரார் முன் அழைத்து வந்த தீரன்..

“அன்னைக்கு ஆத்திரப்பட்டு நான் செஞ்ச தப்புக்கு இன்னைக்கு உங்க கால் ல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்..” என சாஷ்டாங்கமாய் அவர்கள் காலில் விழுந்தான் விழிதீரன். இதனை சிறிதும் எதிர்ப்பார்க்காத மாணிக்கம் தம்பதியர் பதறி அவனை தூக்கி நிறுத்த நிலன்யா அவள் மாமன் மன்னிப்பு கேட்க தொடங்கியதுமே அவ்விடம் விட்டு சென்றிருந்தாள்.

ஊர் மக்களும் தாங்கள் பெரிதும் போற்றும் ஜமீன்தார் வாரிசு காலில் விழுவதை பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தனர். நெடுங்காலமாய் மனதில் அழுத்தியிருந்த பாரம் விலகிய மகிழ்ச்சியில் தீரன்..

“பிறந்து வாழ்ந்த மண்ணை விட்டு அவமானத்தோட பிரியறது எவ்வளவு கொடுமை னு எனக்கும் தெரியும்..இனி இவங்கள தள்ளி வைக்கிறதெல்லாம் விட்டு ஊர் மக்கள் இவங்களை ஏத்துக்கனும்..” என கூட்டத்தை பார்த்து கை கூப்பி கேட்க..அங்கிருந்த பெரியவர்..

“தீரா..உன் குடும்பத்துல நடக்கிறதெல்லாம் தெரியமப்பு..மாணிக்கம் நீயும் மனசுல எதையும் வச்சுக்காத ப்பா..” எனக்கூற தீரன் சற்று தள்ளி தூண் மேல் சாய்ந்து நின்றிருந்த செந்தாழினி கையை பிடித்து இழுத்து வந்தவன் அவள் விலகி செல்லும் முன் அவள் கழுத்தில் ஐந்து பவுன் எடையில் திருமாங்கல்ய செயினை கழுத்தில் போட்டவன்..

“என் வீட்டு பெரியவங்க ஆசீர்வாதங்களோட மனப்பூர்வமா மறுபடியும் இவளையே கல்யாணம் பண்ணிக்கிறேன்..எங்களையும் ஆசீர்வாதம் பண்ணுங்க..” என அவளையும் இழுத்துக்கொண்டு தரையில் விழுந்தவனிடம் செந்தா..

“உன்க்கிட்ட வாழ்க்கை கொடு னு நான் கேட்டேனா..?..” ,என கட்டுக்கடங்காத கோபத்தில் சீற..தீரனோ..

நீ கேட்கமாட்ட..ஆனா எனக்கு உன் கூட வாழும் வாழ்க்கையை பிச்சை போடு ப்ளீஸ்..” என அவள் கை பிடித்தெழவும் உள்ளுக்குள் கொதித்தாலும் வெளியே அமைதியாக நின்றாள் செந்தா. தீரன் மரகதத்திடம்..

“அத்தை..தாம்பால தட்டை எடுத்துட்டு வாங்க..” என சொல்ல பழங்கள் பூ நிறைந்த தட்டுடன் வந்தவரை முன்னிறுத்தி தம்பதி சமேதராய் மாணிக்கத்திடம்..

“எங்க வீட்டு பொண்ணுக்கு உங்க பையனை கேட்டு வந்திருக்கோம்..உங்களுக்கு சம்மதம் னா வர்ற பங்குனி மாசத்துல முகூர்த்த நாள் பார்த்து திருந்செந்தூர்ல கல்யாணத்தை வச்சுக்கலாம்..” என தட்டை நீட்ட..இத்தருணத்தை எப்படி ஏற்றுக்கொள்வது என சில நொடிகள் தவித்த மாணிக்கம் வேதா மனம் நிறைந்த சந்தோஷத்துடன் தட்டை வாங்கிக்கொண்டனர். தீரன் கோயில் நிர்வாகிகளிடம்..

“எங்க குடும்பத்து மேல நீங்க வச்சிருக்கிற மரியாதையை பாக்கும் போது சந்தோஷமாயிருக்கு..
இப்ப என் குடும்பத்துல பெரியவர் மாமா தான்..” என மாணிக்கத்தை கைக்காட்டி..

“அவருக்கு முதல் மரியாதை பண்ணிடுங்க..” என்றான். ‘இந்த குபீர் நல்லவனை புரிஞ்சுக்கவே முடியலயே’ என செந்தா குழம்பி நிற்க, கமலாவோ தன் வேண்டுதல்களை ஒரே மேடையில் நிறைவேற்றி தந்த இசக்கியம்மனை கை கூப்பி வணங்கினார். தீரனை பற்றி மாணிக்கம் வேதாவிற்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும் இப்படி தன் ஊர்மக்கள் மத்தியில் தன்னை வெளிப்படுத்துவான் என கனவிலும் நினைக்கவில்லை.

அங்கிருந்த ஊர் பெரியவர் ஒருவர்..

“ஏலே தீரா..நீ எப்பவுமே ஒரே கல்லுல கொத்து மாங்கா அடிச்சுப்புடுற..கில்லாடி தான்..” என பேச வந்தவரை தடுத்து..

“தாத்தோய்..இன்னிக்கு மதியம் எங்க குடும்பம் சார்பா அன்னதானம் நடக்குது..இதையே எங்க கல்யாண சாப்பாடா வச்சுகங்க..நம்ம நிலா கல்யாணத்தை ஊரையே திரட்டி சூப்பரா ஜமாய்ச்சுப்புடுவோம்..” என்றான். கமலா தீரனிடம்..

“டேய் நிலா எங்க டா..?” என கேட்க தீரன்..

“யாழி..நிலாவை கூட்டிட்டு வா..” என பிரகாரம் பின் பக்கம் ஜாடை காட்டி கணவனாய் ஆணையிட வந்த ஆத்திரத்தை கட்டுபடுத்திக்கொண்டு விறுவிறுவென பின்புறம் சென்று நிலாவை அழைத்து வந்தாள் செந்தாழினி.

மாமனை முறைத்தபடி வந்த குட்டிநிலவை மற்றொரு குட்டிவளர்பிறை தன் சிம்பாவின் மீது சாய்ந்தபடி முறைக்கவும், பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு நிலா மாவிளக்கேற்ற அம்மனுக்கான விசேஷ பூஜை சிறப்பாக முடிந்தது.

மாணிக்கம் மற்றும் வேதாவிடம் வந்த நிலன்யா..

“ஒரு சர்ப்பிரைசா காசிக்கு போன மாப்பிள்ளைய இன்னைக்கு நடந்ததெல்லாம் சொல்லி நானே கூட்டிட்டு வர்றேன் அத்தை..” என இருவர் காலில் விழ..தம்பதியர் அகமகிழ்ந்து..

“எங்க பையன் வாழ்க்கையில மட்டுமில்ல எங்க குலத்துக்கே வரமா வந்த மகாலஷ்மி டா நீ..” என அவள் உச்சந்தலையில் முத்தம் பதித்தார் வேதா.

ஊர்மக்கள் கிளம்பிவிட கிருஷிகாவுடன் தனியாக நின்றிருந்த தீரனை பார்த்து வேதா செந்தாழினியிடம்..

“உன் பயம் புரியுது.. கமலாவும் சொன்னாங்க..தெய்வாதீனமா கிருஷிகாவும் அவனை அப்பாவுக்கு மேல பாக்குறா..உன் பொண்ணு மட்டும் போதும் தனியா வாழ்ந்து முடிச்சிடுவேன் னு உன் வாய் மட்டும் தான் சொல்லுது செந்தா..ஆனா உன் கண்ணு வேற கதை சொல்லுது..இதை எப்பவோ தெரிஞ்சுக்கிட்டேன்..உனக்கு நடந்த குப்பைக்கு நீ பொறுப்பில்ல..தேவையில்லாததை தூக்கியெறிஞ்சுட்டு உன்னை தேடி வந்தவனை ஏத்துக்கோ..அவனுக்கான பிரியத்தை உன்க்கிட்ட உணர்ந்திருக்கான் ராஸ்கல்..அத சொல்ல தெரியாத அவசரகுடுக்கை.. சொதப்பிட்டான்..ஆனா உனக்கேத்தவன் செந்தா..உன்னை வேற யாருக்கும் விட்டு தரமாட்டான்..மங்களகரமான நாள் இன்னைக்கு..அம்மனே உத்தரவு கொடுத்தப்புறம் மறுக்க கூடாது..கிளம்பு அவனோட..” என அதட்டி சொல்லவும் ‘கர்ப்பக்கிரகத்தில் வீற்றிருப்பது இசக்கியம்மனா இல்லை தன் எதிரில் நின்று அதட்டுவதா..?’ என சில நிமிடங்கள் அமைதியாயிருந்த செந்தா நிதர்சனத்தை ஏற்று தீரனை நெருங்கி தன் மகளருகில் நின்றாள்.

தொடரும்.
 
Top Bottom