அத்தியாயம் 20
அடுத்த நாள் காலை தங்களின் அறையில் தான் கண் விழித்தாள் காயத்ரி. எப்போது தூக்கி வந்து படுக்க வைத்தான் என்பதே தெரியவில்லை.
மணி ஒன்பதை கடந்திருந்தது. உடலில் இருந்த மொத்த சத்துக்களும் இழந்ததைப் போல் மிகவும் பலகீனமாக உணர்ந்தாள் பெண்ணவள். மாமனின் ஆட்டத்திற்கு இயந்து கொடுக்கும் போது எதுவும் தெரியவில்லை. இப்போது உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் வலித்தது.
உலர்ந்து போயிருந்த உதட்டை நாவினால் ஈரப்படுத்தினாள் “ஸ்ஆ!…”அவன் பல் பட்டு காயம், வீங்கி வேறு இருக்க, வழித்தது.
“முரட்டு மாமா!.. படுத்தி எடுத்திருச்சி…” என்று திட்டியவளுக்கு சுத்தமாக எழுந்து கொள்ள முடியவில்லை.
ஆனால் ஸ்ரீதரோ நேரத்திற்கு எழுந்து, குளித்து, வெளியே சென்று, காயத்ரியை கேட்டவர்களை சமாளித்து, அவளுக்கு குடிக்க பாலும், பழக்கலவையும், தோசையும் காலை உணவாக எடுத்துக்கொண்டு உள்ளே வந்தான்.
ஸ்ரீதருக்கோ கண்விழித்தாலும் எழுந்து கொள்ளாமல் படுத்திருந்தவளை பார்க்க குற்றவுணர்வாகிப் போனது.
அவனுக்கோ இரவு மோகத்திலும், ஆசையிலும் எதுவும் தெரியவில்லை. விடிந்து அவளை தூக்கி வந்து கட்டிலில் கிடத்தும் போது தான், தூக்கத்தில் துவண்ட மனைவியின் உடலில் இருந்த அடையாளங்களும், அவள் முகத்தில் தெரிந்த சோர்வும், சிறு பெண்ணிடம் இஷ்டத்திற்கு தன் வேட்கையை தனித்து கொண்டது எவ்வளவு தவறு என்பது புரிந்தது.
அவனும் என்ன செய்வான் ஆறு வருட பிரிவு, அவன் பிரியமானவள் மீது அவனை பித்தனாகவே மாற்றி விட்டது. காதல் பித்து முற்றி சித்தம் இழந்த நிலையில், செல்ல மனையாளை என்ன செய்கின்றோம் என்று உணராமல் தன் இஷ்டத்துக்கு ஆட்கொண்டு விட்டான்.
கோதையவளின் போதை ஓரளவு தெளிந்த பின்னர் தான் ‘என்னடா பண்ணி வச்சிருக்க’ என்று தலையில் அடித்து கொண்டான்.
கொண்டு வந்த உணவு தட்டை மேஜையில் வைத்தவன், குட்டி மனைவியின் அருகில் சென்று, கட்டிலில் அமர்ந்து கொண்டவன் “காயூ குட்டி!…” என்று பெண்ணவளின் தலையை தடவ
“மாமா!…” என்று சிணுங்கியவள் புரண்டு தன் மன்னவனின் மடியில் தலையை வைத்துக்கொண்டாள்.
தன் மடியில் கிடந்தவளின் நெற்றியில் குனிந்து முத்தம் வைத்தவன் “சாரிடி! ரொம்ப படுத்திட்டேன்ல…” என்று சொல்ல
அழகாக புன்னகைத்தவள் “இல்லன்னு சொல்ல மாட்டேன்.. ஆனா அதுக்காக சாரி எல்லாம் கேட்காத மாமா.. எனக்கு பிடிச்சிருந்துச்சு.. ஆனா அப்போ எதுவும் தெரியல இப்போதான் உடம்பெல்லாம் அடிச்சு போட்ட மாதிரி இருக்கு…” என்று சொல்ல
மென்மையாக புன்னகை பூத்தவன் “அது அப்படித்தான்.. பசி ருசி அறியாது என்றது போல, காமம் வலி அறியாது போல…” என்று சொல்ல
“என்னமோ.. சுத்தமா முடியல…” என்று சோர்வாக காயத்ரி சொல்ல
“காயூகுட்டி எந்திரிடி.. ரொம்ப சோர்வா இருக்க.. குளிச்சிட்டு, சாப்பிட்டு படுத்துக்கலாம்…” என்று எழுப்ப
“ம்ஹூம்! குளிக்கவா.. கால கீழே வைக்க முடியுமானே தெரியல…” என்று காயத்ரி சிணுங்க
“மாமன் எதுக்கு இருக்கேன்…” என்றவன் அவளை அப்படியே தூக்கிச் சென்று, பல் துலக்கி விட்டு, இதமான சுடுநீரில் குளிப்பாட்டி விட்டவன், இலகுவான ஆடை மாற்றிவிட்டு, தன் மீது சாய்த்துக் கொண்டு, உணவுகளை ஊட்டி விட்டவன், தானும் சரிந்து படுத்து, அவளையும் தன்னோடு அணைத்து, தட்டிக் கொடுத்து தூங்க வைத்தான்.
காயத்திரிக்கு குளித்த பின்னர் புத்துணர்வாக தான் இருந்தது. இருந்தும் தன் மாமனின் அன்பு மழையில் விரும்பியே நனைந்து, தூங்கி போனாள்.
மதியத்திற்கு மேல் பத்மினி வந்து தான் இருவரையும் எழுப்பி விட்டார்.
மதிய உணவு உண்பதற்கு முன் இளநீர் வரவழைத்து, காயத்திரிக்கு குடிக்க கொடுத்த பின்னர் தான் இருவரும் சேர்ந்து விருந்து உண்டனர்.
அன்று இரவு ஸ்ரீதர் மனைவியை நாடவே இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் இருகணைத்துக் கொண்டு, காயத்ரி ஸ்ரீதரின் மேல் காலை தூக்கி போட்டுக் கொண்டும், ஸ்ரீதர் காயத்ரியின் மென்மைகளில் முகத்தை புதைத்துக் கொண்டும் என்று இதமாக, சுகமான தூக்கம்.
அடுத்த நாள் ஸ்ரீதருக்கு காலை தரிசனமே மனைவியின் ஜாக்கெட்டும், பாவாடையுமான அரைகுறை தரிசனம் தான்.
கண்கள் ஜொலிக்க, கைகளை கோர்த்து சோம்பல் முறித்தவாறு எழுந்து அமர்ந்தவன் “நானே ரெண்டு நாளைக்கு நல்லவனா இருக்கலாம்னு பாத்தா, இவ காலையிலேயே வெறி ஏத்துறாளே…” என்று முணுமுணுத்தவன் பார்வை மெரூன் நிற ஜாக்கெட் பாவாடையுடன் கண்ணாடியின் முன்பு நின்று பிளவுஸ் கயிற்றை கட்ட முயற்சித்துக் கொண்டிருந்த தன் மோகினியில் தான்.
அவள் அணிந்திருந்த உடையின் நிறத்திற்கு அவள் பொன்மஞ்சள் நிற தேகம் மின்னல் துண்டாய் ஜொலித்து ஆடவனை வா வா என்று அழைக்க, தன்னை முயன்று கட்டுப்படுத்திக் கொண்டவன் காயத்ரியை கண்களினாலே கபளீகரம் செய்ய,
கண்ணாடியின் வழி ஸ்ரீதர் எழுந்து கொண்டதை பார்த்த காயத்ரி “என்ன மாமா பாத்துட்டே இருக்க.. இத கொஞ்சம் கட்டி விடு…” என்று அவனிடம் உதவி கேட்க
‘நானே இருக்கிறதையெல்லாம் கழட்டலாமானு பாத்துட்டு இருக்கேன்.. இவ கட்டிவிட சொல்றா…’ என்று மனதில் நொந்தவன், எழுந்து அவளை விழுங்குவது போலே பார்த்துக்கொண்டு நெருங்க
அவன் பார்வையிலேயே உடல் கூச, முகம் சிவந்தவள், அவனின் ஆளுமையை நினைக்க, சட்டென ஒரு விடயம் ஞாபகம் வர “ஏய் மாமா வேணாம் கிட்ட வராத.. உன் பார்வையே சரியில்ல.. இப்போ ட்ரெஸ் மாத்தும்போது தான் பாத்தேன் கிடைச்ச இடத்துல எல்லாம் கடிச்சு வச்சிருக்க…” என்று திட்ட
“இனிப்ப கடிச்சு தான் ருசி பாக்க முடியும்.. நீ தான் வகை வகையா வச்சிருக்கேயே…”என்றவன் பார்வை பெண்ணவளின் மேடு பள்ளங்களை நிறுத்தி நிதானமாக மேய்ந்து வர
“ச்சீ! கடிச்சு காயம் பண்ணி விட்டதும் இல்லாம டபுள் மீனிங் வேறயா…” என்றவளுக்கு அவள் இருக்கும் கோலம் இன்னும் புத்தியில் உரைக்கவில்லை. அவனை தான் கள்ளத்தனமாக பார்த்திருந்தாள். ட்ராக் பேண்ட் மட்டும் அணிந்திருந்தவன் தன் திடகாத்திரமான மேனியை மனைவியின் பார்வைக்கு விருந்தாக்கி கொண்டிருந்தான்.
“டபுள் மீனிங் எல்லாம் இல்ல.. சிங்கிள் மீனிங் தான்…” என்று அவளின் வெற்றிடையில் தன் முரட்டு கரத்தை பதித்து, தன்னுடன் இறுக்கிக் கொண்டான். அவனின் திண்மையான மார்பில் தன் மென்மையான தனங்கள் நசுங்க ஒட்டிக்கொண்டாள் பெண்ணவள்.
“என்னமோ நான் மட்டும்தான் காயப்படுத்தின மாதிரி பேசுற.. நீ என்ன பண்ணி வெச்சிருக்க பாரு…” என்றவன் தன் முதுகு கண்ணாடியில் தெரியும் படி திரும்பி நிற்க
அவளும் அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக போட்டுக் கொண்டு, எட்டி கண்ணாடியில் அவன் முதுகில் அவள் போட்ட கோலத்தை பார்த்தவள், உதட்டை சுழித்து “எது நான் மெல்லிசா கீறி விட்டதும்.. நீ கடிச்சி வச்சதும் ஒன்னா…” என்று கேட்க
“உன்ன யாருடி கடிக்க வேணாம்னு சொன்னா.. நீ கடிச்சிருந்தா சுகமா வாங்கியிருப்பேன்…” என்று ஸ்ரீதர் சொல்ல
“அப்படியா.. அப்போ இப்போ கடிச்சு வைக்கிறேன்.. சுகமா இருக்கா இல்ல வலியா இருக்கான்னு சொல்லு…” என்றவள் அவன் கழுத்து, தோள்பட்டை, மார்பு என்று தன் பச்சரிசி பற்களை கொண்டு கடிக்க,
கண் மூடி கிறங்கி நின்றவனின் கட்டிப்போட்டு வைத்திருந்த மோக காளை கட்டவிழ்ந்து, முட்டிக்கொள்ள தயாரானது.
‘கிறுக்கி! தெரிஞ்சு செய்றாளா இல்ல தெரியாம செய்றாளா.. கொல்றாளே!…’ என்று தனக்குள் தவித்தவன் கை அவள் இடையில் இருந்து சற்று நகர்ந்து, பாவாடையின் நாடாவை பிடித்து இழுத்து அவிழ்த்து விட
மும்முரமாக பழிவாங்கிக் கொண்டிருந்தவள் கண்கள் விரிந்து கொள்ள, கைகள் வேகமாக பாவாடையை பிடித்துக் கொள்ள, மாமனை முறைத்து பார்த்தாள்.
அவன் கண்கள் சொன்ன செய்தியில் முகம் சிவந்து, மனம் குறுகுறுத்தாலும் அதை வெளிக் காட்டவில்லை.
“என்ன பாக்குற.. சும்மா இருந்தவன உசுப்பி விட்டுட்ட.. ஒழுங்கா கம்பெனி குடு…” என்றவன் கைகள் அத்துமீற
அவனை விட்டு ஒரு அடி தள்ளி நின்றவள், அவனை சீண்டவே “முடியாது…” என்று சொல்ல
“நீ என்னடி முடியாது என்றது.. நானே எடுத்துப்பேன்…” என்றவன் அவளின் ஜாக்கெட் ஊக்குகளை கழட்ட, பாவாடையை பிடிப்பதா, இல்லை ஜாக்கெட்டை கழட்டும் கைகளைப் பிடிப்பதா என்று தடுமாறிய பெண்ணவள், இறுதியில் அவனை மொத்தமாக கட்டிப்பிடித்திருந்தாள்.
குறும்பாக சிரித்தவன், கட்டிலில் அவளை தூக்கி போட்டு, அவள் மீது பாய்ந்திருந்தான். அதன் பின் நடந்த காதல் லீலைகளுக்கு இருவருமே சம பொறுப்பு.
புதுமண தம்பதிகளின் நாட்கள் காதலுடன், காம லீலைகள் என்றும், குலதெய்வம் வழிபாடு, ஐங்கரன் மற்றும் ஸ்ரீதரின் தாய்மாமன் வீட்டிற்கு விருந்து என்றும் அடுத்து வந்த ஒரு வாரம் ஓடிவிட
அடுத்த நாள் சென்னை செல்ல வேண்டும் என்று ஸ்ரீதர் சொல்ல, பத்மினியும் கமலமும் “நாங்க வரல ஸ்ரீ.. முதல்ல காயத்ரிய கூட்டிட்டு போ.. நாங்க ரெண்டு மூணு மாசம் கழிச்சு வாரோம்…” என்று சொல்ல
“என்னம்மா ஏன் இப்ப வரல.. நீங்க வந்து பாத்து தான் வீடு வாங்கணும்னு இன்னும் அங்க நான் வீடு வாங்கல.. வாடக வீட்டுல தான் இருக்கேன்.. இப்பவே எங்க கூட வாரத்துக்கு என்ன?…” என்று ஸ்ரீதர் கேட்க
“சொன்னா கேளு ஸ்ரீ.. முதல்ல நீங்க போங்க.. என்னதான் நாங்க வந்தாலும் நீ அவ விருப்பத்துக்கு தானே வீடு வாங்குவ.. அதனால அவள கூட்டிட்டு போய் வாங்கு.. இந்த வீட்ட சும்மா பூட்டி வச்சுட்டு கிளம்ப முடியாது.. யாருக்காவது வாடகைக்கு விட்டுட்டு பிறகு நாங்க வாரோம்…” என்று சற்றும் பிடி கொடுக்காமல் பேசி, ஸ்ரீதர் காயத்ரி இருவரையும் தனியாக சென்னை செல்ல கூறிவிட்டனர்.
ஸ்ரீதருக்கும் அதற்கு மேல் தொழிலை கவனிக்காமல் இருக்க முடியாது. அவனுமே உடனே திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் திண்டுக்கல் வரவில்லை. தன் உயிரானவளை பார்த்துவிட்டு, ஆற அமர அவன் நினைத்த சில விடயங்களையும் முடித்துவிட்டு, ஒரு சில மாதங்களில் தான் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்த நினைத்திருந்தான்.
ஆனால் பத்மினியின் ஆசைப்படி உடனே திருமணம் என்கவும், இரண்டு வாரங்கள் மட்டுமே அவன் அலுவலகத்தில் வேலை செய்யும் இருவரிடம் பொறுப்புகளை கொடுத்து விட்டு, அங்கு இருந்தான். அதோடு காயத்ரியும் ஆடிட்டராக சென்னையில் பணியில் சேர வேண்டும்.
எனவே அடுத்த நாள் அவன் தனியாக வந்த ட்ரெயினில் தன்னவளுடன் சென்னை நோக்கி பயணமானான். இருவரும் பேசிக்கொண்டும், கொஞ்சிக்கொண்டும் பயணத்தை தொடர, ஒரு கட்டத்தில் தொலைபேசியில் பாடலை ஒலிக்க விட்டு ரசித்துக் கொண்டே சென்றனர்.
அப்போது உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது…
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது…
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்.. எந்தன் பெண்மை பூப்பூக்குதே…
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்.. நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்ததானா…
என்று பாடல் ஒலிக்க, அதை நிறுத்திய காயத்ரி “மாமா இந்த பாட்டு வரி நமக்கு செட் ஆகுதுல.. நான் பிறக்கும்போது என்ன நீ கைல வாங்கிகிட்டல.. அப்போ நான் எப்படி இருந்தேன்?.. நீ எப்படி ஃபீல் பண்ணுன?…” என்று ஆசையாக ஆர்வமாக கேட்க
ஸ்ரீதரோ அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, நாவினால் உள் கன்னத்தை துலாவி, மாயப் புன்னகை பூத்தவன், அவள் காதின் அருகே குனிந்து “நேத்து ராத்திரி என்கூட கட்டில்ல எப்படி இருந்தியோ அப்படித்தான் இருந்த…” என்று சொல்ல
அவனின் கூச்சம் இல்லாத பேச்சில் அவளுக்கு தான் பூமிக்குள் புதைந்து விடும் அளவிற்கு வெட்கமாகிப் போனது. அதை மறைத்து “மாமா!” என்று அவன் கையில் கிள்ளிவைத்து “நான் எத கேட்டா.. நீ எத சொல்ற…” என்று செல்லமாக திட்ட
“ஸ்ஆ!” என்று மனைவி கிள்ளி வைத்த இடத்தை தடவிக் கொண்டவன், “உண்மையத் தான்டி சொன்னேன்.. உடம்புல ஒட்டு துணி இல்லாம.. வெள்ள டவல்ல உன்ன சுத்தி என் கையில வச்சாங்க.. ரோஜா பூவையும் பாதாமையும் ஒன்னா பால்ல ஊறவெச்சு, அரைச்சு எடுத்து, அந்த கலவையில செஞ்ச குட்டி பொம்மையா கைய கால அசைச்சு என் நெஞ்சோட ஒட்டிகிட்ட.. நாளைக்கு எனக்கு ஒரு குழந்த பிறந்தா ஒரு ஆணா என்ன உணர்ந்து சந்தோஷப்படலாம்.. ஆனா எனக்குள்ள இருந்த தாய்மைய உணர்ந்த தருணம், நீ தாய் மாமன் டானு உன்ன என் கையில தந்த தருணம் தான்.. பாற்கடல்ல இருந்து வந்த லட்சுமி தேவியே அமுத கலசத்தை என் கையில தந்தது போல அவ்வளவு சந்தோஷம்…” என்று அன்றைய தன் மனநிலையை இன்று கண்கள் ஜொலிக்க ரசனையாக சொன்னான், இப்போதும் அவன் உடல் சிலிர்த்தது.
ஸ்ரீதர் சொல்ல ஆரம்பித்த போது செல்ல முறை போடு கேட்க ஆரம்பித்த காயத்ரி, பின் அவன் ரசனையான விளக்கத்தில் காதலோடு அவனைப் பார்த்திருந்தாள்.
தன் அக்கா மகளின் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தவன், அவளின் ஒவ்வொரு அசைவுகளையும், வயது மாற்றங்களையும், குறும்பு சேட்டைகளையும் என்று அவள் தன் கைகளில் தவழ்ந்த நாள் முதல் தன் சொந்தமானது வரை கூற
தன் கண்ணாளனின் வார்த்தை மாயத்தால் மீண்டும் ஒருமுறை பிறந்து வளர்ந்தது போன்று உணர்ந்தாள் காயத்ரி. சென்னை வந்து சேரும் வரை அவனுக்கும் சலிக்கவில்லை, அவளுக்கும் அலுக்கவில்லை.
சென்னை ரயில்வே ஸ்டேஷனுக்கு அவன் காரை கொண்டுவர சொல்லி, தன் பி.ஏவிற்கு கூறியிருந்தான் ஸ்ரீதர். அதன்படி காரில் ஏறி அவன் இதுவரை வசித்து வந்த அப்பார்ட்மென்ட்க்கு காயத்திரியை அழைத்து வந்தான்.
அவன் வீட்டின் முன்பு வரவும், அவனுக்கு முன் வரவேற்க நின்றிருந்தாள் அவன் தோழியும் கம்பெனியின் பேஷன் டிசைனருமான மாளவிகா.
கையில் வைத்திருந்த பூங்கொத்தை இருவருக்கும் பொதுவாக நீட்டி “ஹேப்பி மேரிட் லைஃப்.. அண்ட் வெல்கம் டு சென்னை…” என்று கொடுக்க
மென் புன்னகையுடன் அதை ஸ்ரீதருடன் வாங்கிக் கொண்டாள் காயத்ரி.
யார் இவள் என்பது போல் அவளை ஆழ்ந்து பார்த்தாள். வெள்ளை நிற ஃபார்மல் ஷர்ட், ஹைவே லர் டிரவுசர், அழகாக உடலோடு பொருந்திய பீட்டர் பிளேசர், முன்புற மூடிய ஹீல்ஸ் காலனி, விரித்துவிட்ட கூந்தல், மெல்லிய நகைகள் என்று நவநாகரிக மங்கையாக பளிச்சென்று இருந்தாள் மாளவிகா.
ஸ்ரீதர் காயத்ரியிடம் “இவ மாளவிகா.. நம்ம கம்பெனி டிசைனர்.. அதோட என் தோழியும்…” என்று அறிமுகம் செய்து வைக்க
காயத்ரியும் “ஹாய்!” என்று புன்னகையுடன் சொல்ல
“ஹாய்! காயத்ரி.. தோழினு பேருக்கு தான் சொல்றாரு.. ஸ்ரீ எப்பவும் என் பாஸ் தான்.. அதான் கல்யாணத்துக்கு வர வேணாம் ஆஃபீஸ் வொர்க்க பாருனு சொல்லிட்டாரு…” என்று தன் கோபத்தை வெளிப்படுத்த
“ஹேய் மாளு அதுதான் வீடியோ கால்ல பாத்தேயே.. அதத்தான் நேர்ல பாத்திருக்க போற.. நானும் இங்க இல்ல, நீயும் இல்லனா வேல எப்படி நடக்கும்.. என் பிளான் தான் உன்கிட்ட சொல்லி இருந்தேன்ல…” என்று ஸ்ரீதர் சமாதானம் செய்ய
“சரி சரி.. போனா போகுதுன்னு மன்னிச்சு விடுறேன், ட்ரீட் குடுங்க…” என்று மாளவிகா சொல்ல
“ட்ரீட் தானே கொடுத்துட்டா போச்சு.. ரெண்டு நாள்ல நீயே அரேஞ்ச் பண்ணு.. நம்ம ஆஃபீஸ் ஸ்டாப் எல்லோருக்கும் என் பொண்டாட்டிய அறிமுகம் பண்ணி ட்ரீட் கொடுக்கலாம்…” என்று ஸ்ரீதர் சொல்ல
“ஓகே ஸ்ரீ.. வீடு வாங்குற விஷயம் என்னன்னு அந்த புரோக்கர் கேட்டாரு…” என்று மாளவிகா சொல்ல
“நாளைக்கு பைனல் பண்ணுன ரெண்டு வீட்டையும் போய் பாத்துட்டு.. என் காயூகுட்டிக்கு எது புடிச்சிருக்கோ அத வாங்கலாம்…” என்று காயத்ரியை தோளோடு அணைத்துச் சொல்ல
“ஓகே பாஸ்!.. நீங்களே நந்தினு சொல்ல முன்னாடி நான் கிளம்புறேன்.. பாய் காயத்ரி…” என்று அவளிடமும் சொல்லிவிட்டு மாளவிகா சென்றுவிட
காயத்ரியிடம் மாளவிகாவை பற்றி ஒரு சில விடயங்கள் சொன்ன ஸ்ரீதர், வீட்டை சுற்றி காட்டிவிட்டு, அடுத்தடுத்து என்ன என்பதை பற்றியும் வரிசைப்படுத்தி கூறி, காயத்ரியின் வேலையில் சேரும் நாளையும் கேட்டுக்கொண்டான்.
அதன்படி அடுத்த நாளே இரண்டு வீடுகளையும் காயத்ரியை கூட்டி சென்று காட்டினான். அதில் இரண்டாவதாக பார்த்த வீடு பிடித்திருக்கிறது என்று அவள் சொல்ல, ஒரு வாரத்தில் வாங்குவதாக முடிவானது.
அதற்கு இடையில் காயத்ரியை தனது ஆஃபிஸ் அழைத்து சென்று, அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். அவர்களுடன் அருகில் இருந்த ஹோட்டலில் மதிய விருந்தும் முடிந்தது.
அதோடு ஸ்ரீதருக்கு விட்ட வேலைகள் கழுத்தை பிடிக்க, அவற்றை பார்க்கவே நேரத்திற்கு ஆஃபிஸ் சென்று, நேரம் சென்றே வீட்டிற்கு வந்தான்.
ஆக மொத்தம் சென்னை வந்ததிலிருந்து வேறு மாதிரியான ஸ்ரீதரை பார்த்துக் கொண்டிருந்தாள் காயத்ரி.