#தாமரை_இலையுள்_உறை_தண்ணீராய்_விமர்சனம்
5 வயது வரையில் நவ்யாவாக இருந்தவளை நிலாவாக மாற்றி , 18 வயதில் கயவர்கள் கையில் சிக்கி உடலவிலும் மனதளவிலும் பல இன்னல்களை அனுபவித்து தன்னவன் கைசேர்ந்து மீண்டும் நவ்யாவாக, அழகான மறுவாழ்வு அமைந்து வாழ்வில் எவ்வாறு முன்னேறுகிறாள் என்பதே கதை
கதையின் போக்கு அருமை

பல எதிர்ப்பார்க்காத திரும்புமுனைகளுடன் தொய்வில்லாமல் சுவாரஸ்யமான கதை
யாரு நாயகன்? யாரு நாயகி? என்று அறியவே பல அத்தியாயங்கள் கடக்க வேண்டி இருந்தது
இதில் படபட பட்டாசாக சுனிதா கதாபாத்திரம் அருமை

தன் மனதில் இருப்பதையும் திருமணம் மற்றும் வருங்கால கணவன் மேல் இருக்கும் எதிர்ப்பார்ப்பும் எவ்வித ஒளிவு மறைவும் இன்றி பேசுவது நல்ல கதாபாத்திர படைப்பு
தமிழை போலவே நானும் ஜெகன்நாதனை பிழையாக தான் எண்ணினேன் ஆனால் தமிழுடன் சேர்த்து எனக்கும் ஒரு அறை கொடுத்து அவர் யார் என்று சொன்னது நன்றாக இருந்தது

அது மட்டுமா அதற்கு பிறகான முன் கதை அனைத்தும் சற்றும் எதிர்ப்பார்க்காத திருப்புமுனை
அந்த முன் கதையிலும் சரி நடப்பிலும் சரி பெரியவர்கள் செய்த பிழையால் பாதிக்கபட்டது நவ்யா, சிந்து மற்றும் ரியா

நிலா மற்றும் சூர்யா குறித்து சிந்து, ரியா மற்றும் அழகனின் கருத்துக்கள் நம் சமூகத்தின் பிரதிபலிப்பு
சூர்யா நல்ல தோழி

தன் தோழிக்காக மற்றும் தனக்காக அழகனிடம் வாதிடுவது சிறப்பு
நிலா அனுபவத்த கொடுமைகள்


மனதை கனக்க வைக்கிறது

மாயன் மற்றும் டில்லி

போன்ற ஆட்களுக்கு ஆதிகேசவனுக்கு அளித்த தண்டனை போல் அளித்திருந்தால் நல்லா இருந்திருக்கும்

சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது.
கதையின் நாயகன் தமிழ்செல்வன் காவல் அதிகாரி

காவலனாக மட்டுமல்ல காதலனாகவும் மனதை கவர்கிறார்
நவ்யாவுக்கு கிடைத்த வரம் தமிழ்

தமிழின் காதலை மற்றும் நவ்யாவின் உணர்வுகளை விவரித்த விதம் எனக்கு பிடித்திருந்தது

நவ்யாவுக்கு தமிழை போல் பாதிக்கபட்ட பெண்களுக்கும் அழகான வாழ்வு கிடைத்தால் நன்றாக இருக்கும்
சூர்யா மற்றும் நவ்யா சிங்கபெண்கள்


பாதிக்கபட்டவர்களே பலப்பல கல்லடிகளை பட வேண்டி இருக்கும் அவல நிலையில் தான் நம் சமூகம் இன்னும் இருக்கிறது வேதனைக்குறிய விடயம்

தமிழின் ஆத்மார்த்தமான காதலும் புரிதலும் அவளுக்கும் அவளின் கனவுக்கும் கொடுக்கும் மரியாதையும்

மெய்சிலிர்க்க வைக்கிறது

handsoff to you man

இந்த காதல் காவலனை மிகவும் பிடித்தது
இன்னும் கதையில் அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள் பல உண்டு அதற்க்கான பதிலை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்
அருமையான கதை
வாசகர்கள் அனைவரின் நெஞ்சிலும் தமிழுவும் நவியும் தாமரையாக மலர்ந்து நீங்கா இடம் பிடித்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்