பட்டென்று எழுந்துவிட்டாள், கயல்விழி. திறந்து கிடந்த கதவு, போதாததுக்கு ஸ்பீக்கரில் கதைத்திருக்கிறாள். ‘இவர் எப்ப வந்தார்? சுடர் ஆக்கள் கதைச்ச எல்லாம் கேட்டிருக்குமே! ஐயோ கடவுளே!’ தகாத பிழை இளைத்தது போல் தடுமாறியவளுக்கு உடம்பு கிடுகிடுவென்று நடுங்கியது. காரணம், பூபாலன் முகம் அத்தனை கோபத்தில்!
“இதுக்குத்தான், இந்த ஒண்டுக்குத்தான் அண்டைக்கே போயிரு எண்டு சொன்னனான். பெரிசா இந்த வீடும் பிள்ளைகளும் உன்ர தயவில்லாமல் இருக்கேலாது எண்ட கணக்கில என்ன கதை எல்லாம் கதைச்சனி! இப்பச் சந்தோசமா?” ஆக்ரோசமாகக் கேட்டபடி அறையினுள் அடியெடுத்து வைத்தவன், ஒரே பிடியாகப் பிடித்து வெளியில் தள்ளிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பானோ என்றெண்ண வைத்தான்.
“மனிசி போன வேகத்தில அடுத்ததுக்கு ஆர் எவர் எண்டில்லாமல் அலையிறான் எண்டு எனக்குப் பேர் வாங்கித் தந்திட்ட நீ?” அவள் நோக்கி நீண்டிருந்த விரலும் பாய்ந்து வந்த சொற்களும் கயல்விழியின் உள்ளத்தைக் கிழித்தன.
“நான் ..நான்... என்ன செய்தனான்... பூபாலன் அண்ணா? பிள்ளைகள...”
“நீ இனிமேல்பட்டு வாயத் திறக்காத சொல்லிட்டன். பிறகு நான் மனுசனா இருக்க மாட்டன். அண்ணா கொண்ணா எண்டு இங்க கத அள, அங்க உன்ர வீட்டு ஆக்கள் என்ன கதை எல்லாம் கதைக்கினம்?”
கதவில் ஓங்கி விட்ட உதையில் கயல்விழி பின்னால் நகர்ந்தாள்.
“பூபாலன் அங்க என்ன சத்தம்?” இடையில் குரல் கொடுத்தார் விமலா.
“இவா தான் எல்லாத்துக்கும் காரணம்.” பற்களை நறநறத்தவன், “விமலாக்கா!” போட்ட கர்ஜனையில் அவர் பதறியடித்து வந்தார் என்றால், அவரை முந்திக்கொண்டு வந்திருந்தாள், லாதி.
தகப்பனையும் அழுகையோடு நிற்கும் கயலையும் பார்த்தபடி கதவோரம் கணம் தான் தயங்கி நின்றிருப்பாள், “நோ நோ நோ ப்பா!” ஓடிச்சென்று கயல்விழியைக் கட்டிக்கொள்ள, விம்மல் வெடிக்க சிறுமியைக் கட்டிக்கொண்டு அமர்ந்து விட்டாள். கயல்விழி.
மின்னாமல் முழங்காமல் சூரைக்காற்றுச் சுழன்றடிக்கக் கொட்டிய மழை அப்படியே எல்லாவற்றையும் வாரிச் சுருட்டிக்கொண்டு சென்று விடுவதுபோல், இந்தக் குழந்தைகளும் தாயை இழந்து சந்தோசமும் அரவணைப்பும் கவனிப்பும் தொலைத்து நிற்கிறார்கள். அந்நிலை எந்தளவு வலிக்கும் என்று அவளை விட யாருக்குத் தெரியும்? அனுபவித்தவளாச்சே!
கொஞ்ச நாட்களுக்கே என்றாலும் தன்னால் ஆறுதல் அளித்து அன்பு காட்ட முடிகிறேதே என்று சந்தோசப்பட்டால், ‘விடாயினமாம்!’ கயலின் அழுகை வலுத்தது. உண்மையில் அதுமட்டுமா காரணம்?
பிரணவ்!
‘அவரிட அம்மா கதைக்கிறது எண்டா அவர் சொல்லாமலா? அண்டைக்கு அதில நிண்டு கதவளிப்பட்டதோட எல்லாம் சரி எண்டு முடிவே செய்து விட்டாரோ!’ வேண்டாம் என மறுத்த பின்னரும் அமைதியாக வந்து தன்னை உணர்த்தியவனின் இச்செய்கையை அவளால் நம்ப முடியாதிருந்தது. மனதுள் பெரும் ஏமாற்றம் சுரக்கத் தொடங்கியிருந்தது.
‘உம்மட ஸ்வீட்டி இங்கயே இருப்பா எண்டு சொல்லிப் போட்டுப் போனவர் என்ன எல்லாம் செய்ய வழி செய்துள்ளார்?’ கோபமும் வந்திட்டு.
“ச்செக்!” இப்போதுதான் காய்ச்சலில் கிடந்து எழுந்த மகள் முன்னால், தன் கோபம் முழுவதையும் காட்ட முடியாத வெறி மீண்டும் கதவுக்கே உதையாகப் போயிற்று.
கதவோ, இன்னொருதரம் அடித்தால் நான் இறந்து விடுவேன் என்ற நிலையில் இருக்க, “நீங்க முதல் இங்க வாங்க!” விமலாவைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு சென்றான், பூபாலன்.
“கையை விடு பூபாலன், வாறன். விழுந்திரப் போறன், உனக்கு என்ன விசரே! இப்ப என்ன நடந்திட்டு எண்டு இப்பிடிக் கொதிக்கிற? அந்தப் பிள்ளையோட கத்துற? பாவம் இரவு பகலா பிள்ளைகளையும் பாத்துக்கொண்டு வேலையையும் செய்து கொண்டு...” சிடுசிடுத்தவர் பேச்சு, சகோதரனின் நெருப்புப் பார்வையில் நின்றிற்று.
சற்று முன்னர்தான் அவன் தாய் அழைத்து, அங்கு நடந்தவை எல்லாமே சொல்லியிருந்தார். கயல்விழி வீட்டினர் மிகுந்த கோபமாக உள்ளதாகவும் சொல்லியிருந்தார்.
“அந்தப் பிள்ளைக்கு விருப்பம் எண்டா பிறகு என்ன சித்தி? நீங்க கண்டதையும் யோசியாதீங்க, கயல்விழியால பிள்ளைகள விட்டுட்டுப் போக ஏலும் போல எனக்குத் தெரியேல்ல. ஆதித் குழந்தை, தன்ர தாய் போலவே அவவோட ஒட்டிட்டான்; லாதிக்குச் சும்மாவே அவா எண்டா பே விருப்பம். அதால யோசியாதீங்க.” என்று இவர் ஆறுதல் சொல்லி வாய் மூடவில்லை, பூபாலன் ஓங்கிக் கத்தி அழைத்திருந்தான்.
“இவன் பூபாலன் தான் பிடிபடான், வையுங்க பிறகு எடுக்கிறன்.” என்று வந்தவருக்கு, “ஸ்வீட்டிட தங்கச்சி, அப்பா, சித்தி எல்லாரும் கதைக்கினம். நான் விளையாடப் போறன்.” என்று லாதி சொன்னதையும் இணைத்துப் பார்க்க, சகோதரன் கோபத்துக்கான காரணம் தெரிந்தாலும் தெரியாத மாதிரி நிற்க முயன்றார், விமலா.
“எப்பிடி அக்கா அப்பிடி நீங்க சொல்லுவீங்க? இந்த வீட்டில என்ன நடந்திருக்கு, காயுக்கு உங்களில எவ்வளவு மரியாத, விருப்பம். நீங்க என்ன எண்டா...” உள்ளே நெஞ்சு எரிந்த கோபத்தில் தொண்டை அடைக்க கண்கள் கலங்கத் தடுமாறினான், பூபாலன்.
அவனைச் சமாதானப்படுத்தும் வகையில் கதைக்க வார்த்தைகளைத் தேட வேண்டியிருந்தது, விமலாவால்.
“இப்பிடி என்னில கோவப்பட நான் என்ன செய்தன்?”
“நான் என்ன கேக்கிறன் எண்டு உங்களுக்கு விளங்கேல்ல என்ன? இங்க பாருங்கக்கா, என்ர பிள்ளைகள எனக்கு நல்லாவே வளக்கத் தெரியும். அதுக்காக இன்னொரு பொம்பள இந்த வீட்டுக்குத் தேவையில்ல. அதும் கயல்... நீங்க முதல் கிளம்புங்க. வந்து நிண்ட மட்டுக்கும் செய்த உதவி எல்லாமே போதும்!”
“பூபாலன்...” விமலாவின் கண்கள் கலங்கின.
“கயல்விழி, எங்கள நம்பி வந்த பிள்ள. சின்னப்பிள்ள. பழகின பாசத்திலையும் பிள்ளைகளில அன்பிலயும் உதவ நிண்டா, அவாவிட வாழ்க்கையைக் குலைக்கிறது போல கதை கட்டுறதா? இங்க இருந்து கத சொல்லி அங்க அம்மாக்கு ஏத்தி விடுறிங்க நீங்க! உங்களிட்டையும் பொம்பளப் பிள்ள இருக்கு; அவாக்கும் பொம்பளப் பிள்ள இருக்கு, நினைவில வச்சிருங்க!” விரல் நீட்டி எச்சரிக்க, கோபம் தான் வந்திட்டு விமலாக்கு.
“இங்க பார், நீ நடந்தது தெரியாமக் கதைக்காத சரியோ! காயுவில எனக்கும் பாசம் இருக்கு. அவள்ட பிள்ளைகள் அவள் வளர்க்கிறது போலவே பத்திரமா வளர வேணும் எண்டு நான் பதறுறதும் அதான் சரியா?”
“அய்யோ! அதுக்காக இன்னொரு பிள்ளேட, எத்தின வருசமா நட்போட பழகிற பிரணவ் குடும்பத்திட சந்தோசத்தோட விளையாடுவீங்களோ?”
“நீ என்ன என்னையே பிழை சொல்லுற? ஆரிடையும் வாழ்க்கையோட நான் விளையாடினது இல்ல, தேவையும் இல்ல. அண்டைக்குப் பிரணவ் போகேக்க என்ன சொல்லிப் போட்டுப் போனவர் தெரியுமே?

மேலும் வாசிக்க...
அத்தியாயம் 21 - 2
அத்தியாயம் 22 - 1
அத்தியாயம் 22 - 2
அத்தியாயம் 23 - 1
அத்தியாயம் 23 - 2
அத்தியாயம் 21 - 2
அத்தியாயம் 22 - 1
அத்தியாயம் 22 - 2
அத்தியாயம் 23 - 1
அத்தியாயம் 23 - 2