அத்தியாயம் 23
காஞ்சனாவுக்கு அன்பிற்கினியனைப் பிடிக்கவில்லை என்பதை அந்த நண்பர்கள் இருவரும் உடனே கண்டுபிடித்துவிட்டார்கள்.
“உன் மாமியார்தான் அடுத்த வில்லி போல.. பார்த்து நடந்துக்கோ!” என்று இருவருக்கும் தனிமை கிடைத்தபோது தென்னவன் மெதுவாகச் சொல்லிவிட்டான்.
மகனுடன் பேசிக்கொண்டிருந்த அன்பிற்கினியனை நெற்றிச் சுருக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த காஞ்சனா, “உங்ககூட கொஞ்சம் பேசணும்” என்றார் இறுகிய குரலில்.
‘என்னவாக இருக்கும்?’ என்பது போல நிகாரிகா தன் அம்மாவைப் பார்க்க, “எனக்குப் பேசணும் டார்லிங்” என்று அவளிடம் சொன்ன காஞ்சனா, பின் தென்னவனைப் பார்த்து, “நாங்க கொஞ்சம் குடும்ப விஷயம் பேசணும்” என்று அவனிடம் ஒரு ஒட்டாத தன்மையுடன் சொன்னார்.
அவர் தென்னவனை விலக்கி நிறுத்த முயற்சிப்பது கண்கூடாகத் தெரிந்த அன்பிற்கினியன், “அவன் என் பிரண்ட்.. என்னோட நல்லது கெட்டது எல்லாம் அவனுக்கும் தெரியும்” என்று உறுதியாகச் சொன்னான்.
தென்னவனைக் கடுமையாக ஒரு பார்வை பார்த்தார் காஞ்சனா. அது ‘நீ கிளம்பு’ எனப் பொருள்பட, “நான் வெளியே இருக்கேன்” என்று தென்னவன் சோபாவிலிருந்து எழுந்தான்.
“வாயை மூடிட்டு உட்காருடா பக்கி!” என்று அவனை அதட்டி அங்கேயே இருக்கச் செய்த அன்பிற்கினியன், “அவன் இங்கேயேதான் இருப்பான்” என்று காஞ்சனாவின் கண்ணைப் பார்த்துப் பிடிவாதமாய்ச் சொன்னான்.
அன்பிற்கினியனின் மடியிலிருந்த ஆரியனோ, “வாட் இஸ் பக்கி?” எனும் மிக முக்கியமான சந்தேகத்தை அந்த நேரமில்லாத நேரத்தில் கேட்டான்.
“அப்பா அப்புறம் சொல்றேன்.. நீ உள்ளே போய் விளையாடு தங்கம்” என்று மகனை அறைக்குள் அனுப்பியவன், ‘சிறு குழந்தைகளுக்கு முன்னால் வார்த்தைகளை விடும்போது யோசித்துப் பேச வேண்டும்’ என்று மனதிற்குள் குறித்துக்கொண்டான்.
“நான் கொஞ்சம் பர்சனல் விஷயம் பேசணும்” என்றார் காஞ்சனா, தன் பேச்சை எதிர்த்துப் பேசிய அன்பிற்கினியனின் போக்கு பிடிக்காமல்.
அம்மாவின் பேச்சும், கணவனின் கோபமும் செல்லும் திசையை எண்ணி அஞ்சிய நிகாரிகா, “அம்மா.. தென்னவன் அண்ணா இருக்கட்டும், நீங்க என்ன பேசணும்னு சொல்லுங்க” என்று அந்த உரையாடலின் போக்கை மாற்ற முயன்றாள்.
காஞ்சனா நேரடியாக நிகாரிகாவிடம் “நீ இவரைப் பண விஷயத்துல கொஞ்சம் செட்டில் பண்ணிட்டு, ஆரியனை இவர்கிட்ட ஒப்படைச்சிட்டு நீ என் கூட வந்திடு”
“இவரோட தோற்றத்தைப் பாரு.. ஒரு மட்டமான குவாலிட்டி வேட்டியும், அந்த நிறமும்.. பார்க்கவே சகிக்கலை. இவரை எப்படி நிவாஸ் குடும்பத்து மருமகனா அறிமுகப்படுத்த முடியும்? நீ இருக்கிற உயரத்துக்கு இவர் கால் தூசு கூட வரமாட்டார்.”
“என்னால ஒரு கிராமத்துக்குப் போய் ஒரு மாசம் அட்ஜஸ்ட் பண்ணி வாழ முடியும். ஆனா வருடக்கணக்குல அங்கேயே இருக்கிறது பத்தியெல்லாம் யோசிக்கவே முடியாது. ஆரியன் உன்கூட இல்லாட்டி உனக்கு இன்னும் நல்ல இடத்துல மாப்பிள்ளை பார்க்கலாம்” என்று சட்டென்று சொல்ல, நிகாரிகா திகைத்துப் போய் நின்றாள்.
அன்பிற்கினியன் எதற்கும் அசையாமல், “உங்க மகளையே முடிவெடுக்கச் சொல்லுங்க” என்று சொல்லி நிகாரிகாவை ஒரு பார்வை பார்த்தான்.
அவன் பார்வை அவளை ஊடுருவ, “நீ எனக்கு எவ்வளவு ஸ்பெஷல்னு உனக்குத் தெரியும்.. என் காதல் எப்படிப்பட்டது என்று நீ உணர்ந்தால் மட்டும் போதுமா? அதை உன் அம்மாவுக்குப் புரிய வைக்க நீ தவறிட்ட” என்று அவளைச் சாடினான்.
“ஒரு பதினைந்து வயதுப் பெண்ணை ஏமாத்திக் கல்யாணம் பண்ணி, உங்க இச்சைக்கு அவள் வாழ்க்கையை அழிச்சிட்டு, அதுக்குப் பேர் காதலா?” என்று காஞ்சனா வெறுப்பாகக் கேட்க,
நிகாரிகா தன் தாயின் பேச்சுக்களைக் கேட்டு சமைந்து போய் நின்றிருக்க, அவளிடம் அன்பிற்கினியன் “இச்சையா? கேட்டுக்கோ!” என்றவன், அங்கே திகைப்புடன் அமர்ந்திருந்த தென்னவனைக் கண்டு, “வாடா போலாம்” என்று வீட்டின் வெளியே கூட்டி வந்தான்.
வெளியே வந்த பிற்பாடு தான் தாங்கள் இருவரும் நிகாரிகாவின் காரில் மில்லிலிருந்து வந்தது உறைத்தது.
ஒரே ஊர் என்றாலும் அவர்கள் வீடு ஒரு திசையிலும், இந்த வீடு வேறு திசையிலும் இருக்க, இப்போது தங்களின் ஊருக்குச் செல்லப் பேருந்து வசதி இல்லை என்பது புரிய, “வா நடந்து போவோம்” என்று தென்னவனை அழைத்தான் அன்பிற்கினியன்.
வெளியே வந்த நிகாரிகா, “வெயிலா இருக்கு.. கார்ல போங்க” என்று சொல்ல,
“வீட்டுக்குக் குழந்தையைப் பார்க்க வந்தவனுக்கு நல்ல மரியாதை! என்ன.. உன் அம்மாவைப் பேச வச்சு உன் உள்ளக்கிடக்கையெல்லாம் சொல்ல வைக்கிறியா?” என்று அன்பிற்கினியன் ஆத்திரமாகக் கேட்டான்.
நிகாரிகா அவனை அடிபட்ட பார்வை பார்த்தபடி, “நான் எக்காலத்திலும் உங்க பொண்டாட்டியா மட்டும்தான் இருப்பேன். அந்த நம்பிக்கை உங்களுக்கும் இருந்தா என் காரை எடுத்துட்டுப் போங்க” என்று சொன்னாள்.
வெளியே வந்த காஞ்சனாவின் பார்வையில் அங்கே நடப்பவை அனைத்தும் விழுந்தன. நிலைமையை உள்வாங்கிக்கொண்டவர்"என் பொண்ணோட நகைக்காகக் கடத்தின ஆளை, எங்க சந்தோஷத்தை அழித்தவன் என்ற காரணத்துக்காக என் புருஷன் உயிரோட விட்டுவைக்கலை. ஆனா, என் பொண்ணோட எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி, நிம்மதி இல்லாம செஞ்ச உங்க அப்பம்மாவை அவர் விட்டுவைச்சிருக்கார்ன்னா, அது நீங்க என் பொண்ணுக்குத் தாலி கட்டின ஒரே காரணத்துக்காகத்தான். இப்ப அந்தத் தாலி கூடக் கழுத்தில் இல்லையே... அந்த உறவே இனி வேணவே வேணாம்!" என்று சொன்னார்.
"தாலிக்கு என்னாச்சு?" என்று அன்பிற்கினியன் அதிர்ச்சியுடன் நிகாரிகாவிடம் கேட்டான்.
"அதையும் பறிச்சுட்டுத்தான் உங்க பாட்டி அனுப்புனாங்களாம். அப்படியொரு ஆள் அந்த வீட்டில் இருக்கும்போது, எந்த அம்மா தன் பொண்ணை உங்க வீட்டுக்கு வாழ அனுப்புவாங்கன்னு யோசிங்க?" என்று காஞ்சனா கேட்டார்.
"இது வேறயா?" என்று மெதுவாக முணுமுணுத்த அன்பிற்கினியன், காஞ்சனாவை நேராகப் பார்த்துச் சிரித்தான்.
"உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு புரியுது, ஆனா ஏதோ ஒரு பயத்துல என்னைச் சோதிச்சுப் பார்க்குறீங்க போல... அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி... உங்க பொண்ணு என்னோட பாதி, என் உயிர்!
ஒருமுறை தெரியாம நடந்த தப்புக்காக, காலம் முழுக்க அவளை இழந்துட்டு என்னால இருக்க முடியாது. இழந்ததை எல்லாம் மீட்டுக் கொடுத்து, அவளை என் கண்ணுல வச்சுப் பார்த்துக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. அவகூட சேர்ந்து வாழணும்ங்கிறது என் ஆசை மட்டும் இல்லை, அதுதான் இனி என் வாழ்க்கையோட லட்சியமே!" என்று தன் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்தினான்.
“நாங்க பிசினஸ் பண்றவங்க.. எங்களுக்கு எதுவா இருந்தாலும் முகத்துக்கு நேரா சொன்னாதான் புரியும்” என்ற காஞ்சனா, “தம்பி.. உங்களை 'பாடி ஷேமிங்' பண்ணிட்டேன், சாரி.. உள்ளே வாங்க, சாப்பிட்டுப் போங்க” என்று அன்போடு அழைத்தார்.
“அப்ப நானு?” என்று தென்னவன் பாவமாகக் கேட்க, “நிகா உன்னை அண்ணான்னு கூப்பிடறா.. அப்ப நீ எனக்குப் பையன் முறைதானே.. நீயும் வா” என்றார்.
“அப்பாடா.. நீங்க வில்லி இல்லைன்னு இப்பதான் தெரியுது! என் பிரண்டோட சமாதானம் ஆகிட்டீங்களா?” என்று தென்னவன் கேட்க,
“எனக்கு எப்பவுமே அந்த கிராமத்து வெளிப்படையான அன்பு பிடிக்கும். அந்தப் பகட்டில்லா வாழ்க்கை பிடிக்கும் அப்படியிருக்க என் பொண்ணு மேல உண்மையான அன்பு வச்சிருக்கிற உன் பிரண்டைப் பிடிக்காமப் போகுமா? நிகா உன்னைப்பற்றியும் மாரியைப் பற்றியும் கூட நிறைய சொல்லியிருக்கா. எனக்கு பாக்கியம், மாரி எல்லாரையும் பார்க்கணும்னு ஆசை, அதுக்குத்தான் இங்க வந்திருக்கேன்” என்றார் காஞ்சனா.
“நல்லவேளை.. இன்னொரு வில்லியோன்னு பயந்துட்டேன்” என்று தென்னவன் சொல்லிச் சிரிக்க,
“ஆரியனுக்கு நிகாதான் அம்மான்னு மெல்லப் புரிய வைக்கணும்.. சட்டென்று அவனிடம் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. அவன் புத்திசாலி குழந்தை, பார்ப்போம்” என்றார் காஞ்சனா தன் மகளை அணைத்தபடி.
"அவனுக்கு எல்லோரும் சேர்ந்து சொல்லிடலாம்... அழகும் எத்தனை நாள் தான் அத்தை என்று கூப்பிடுறதைக் கேட்டுட்டு இருப்பாள்?" என்றான் தென்னவன்.
“ஆமாம்” என்று அன்பிற்கினியனும் தென்னவனுக்கு ஒத்து ஊத,
"உங்க பொண்டாட்டி என்ன செய்யக் காத்திருக்கான்னு தெரியாம அவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க மாப்பிள்ளை!" என்று தன் மகளை முறைத்தபடியே, அன்பிற்கினியனை உரிமையோடு எச்சரித்தார் காஞ்சனா.
"அவளுக்கும் என் பாட்டியை ஏதாவது செஞ்சாதானே நிம்மதி கிடைக்கும்? என்னமோ செய்யட்டும் மாமி, விடுங்க..." என்று அன்பிற்கினியன் கூலாகச் சொல்ல, காஞ்சனா அவனை ஒரு மாதிரி வித்தியாசமாகப் பார்த்தார்.
அவர் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டவன், "உங்க பொண்ணு நான் சொன்னா கேட்டுக்கிற ஜாதி இல்லையே... அதுதான் அவ போக்குலயே விட்டுட்டேன்" என்று சிரித்தபடி சொன்னான்.
"சரி வாங்க, முதல்ல சாப்பிடுவோம். அப்புறம் ஆரியன்கிட்ட இதை எப்படிச் சொல்றதுன்னு யோசிக்கலாம். இதுல இவ வேற... உங்க பாட்டி கண்ணுல பையன் படவே கூடாதுன்னு, என்னை அவனைப் பார்த்துக்கச் சொல்லி ஆர்டர் போட்டிருக்கா!" என்று காஞ்சனா அன்பிற்கினியனிடம் சலித்துக்கொண்டார்.
“பாட்டி பையனை ஏதாவது செஞ்சிடுவாங்களோன்னு இவ பயப்படுறாளோ?" என்று சந்தேகத்துடன் அன்பிற்கினியன் நிகாரிகாவின் கண்களைப் பார்த்தான். ஆனால், அங்கே பயத்திற்கான சுவடே இல்லை.
அவள் கண்களில் தெரிந்த அந்தத் தெளிவு. அதைக் கண்டதும்'இவள் ஏதோ பெரிய திட்டம் வைத்திருக்கிறாள் போலிருக்கிறதே! என்னமோ பண்ணப்போறாள்டா... நீ உரலுக்கு இரண்டு பக்கமும் இடி போல சப்பளியப் போறாய்!' என்று அவன் மனசாட்சி எச்சரிக்கை மணியடித்தது.
ஆரியனையும் கூப்பிட்டு மதிய உணவை உண்டபின், காஞ்சனா ஆரியனைத் தூங்க வைத்துவிட்டு வந்தார்.
அவன் உறங்கிய நேரத்தில் அவனிடம் உண்மையை எப்படிச் சொல்வது என்று அந்த நால்வர் குழுவும் சேர்ந்து ஒத்திகை பார்க்கத் தொடங்கினர். நிகாரிகாவிற்கு மட்டும் அவன் தன்னை 'அம்மா' என்று அழைப்பதைக் கேட்க வேண்டும் என்று பெரும் தவிப்பாக இருந்தது. அதே சமயம், உண்மையைச் சொன்ன பிறகு அவன் எப்படி எதிர்வினையாற்றுவானோ, என்ன சொல்வானோ என்ற பயம் அவளது மனதை மெல்லக் கவ்வத் தொடங்கியது.
ஆரியன் தூங்கி எழுவதற்காகக் காத்திருந்தவர்கள், அவனுக்கு முன்னால் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் காஞ்சனாவுக்கு நாக்கு குழறியது. நிகாரிகா தவிப்புடன் தன் மகனையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த அன்பிற்கினியன், மென்மையாகக் கண்ணைச் சிமிட்டி அவளை இயல்பாக இருக்கும்படி ஜாடை காட்டினான்.
தென்னவன் "வாங்க நாம விளையாடப் போகலாம்... இங்க இந்தக் கிழட்டுக்கட்டையெல்லாம் எதையாவது பேசிட்டு இருக்கட்டும்" என்று ஆரியனை அங்கிருந்து அழைத்துக்கொண்டு போனான்.
தென்னவன் அவனை அழைத்துக் கொண்டு வெளியே போனபின், "நான் எப்படிப்பட்ட பிசினஸ் டீலை எல்லாம் அசால்ட்டா முடிச்சிருக்கேன்... ஆனா என் பேரன்கிட்ட உன் அம்மா இவதாண்டான்னு சொல்ல வார்த்தை வராம தொண்டையிலேயே நிக்குதே" என்று காஞ்சனா தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டார்.
இன்றாவது தன் மகன் தன்னை 'அம்மா' என்று அழைப்பதைக் கேட்டுவிடலாம் என்று ஆவலோடு காத்திருந்த நிகாரிகாவிற்கு, ஏமாற்றத்தில் கண்கள் தளும்பின.
அன்பிற்கினியன், நிகாரிகாவைச் சமாதானப்படுத்துமாறு காஞ்சனாவிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தான். அங்கே தென்னவன் வானத்தில் பறக்கும் காகங்களைக் காட்டி, "அதுதான் அப்பாக் காகம் போல இருக்குடா" என்று சொல்ல, "இல்லை மாமா, அது சின்னதா இருக்கு... அப்ப அதுதான் பேபி" என்று இருவரும் காகத்தையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
"என்னடா, ஒரு நாளிலேயே உன்கிட்டயும் ஒட்டிக்கிட்டானா?" என்று அன்பிற்கினியன் கேட்க, "நம்ம அழகு மாதிரியே இருக்கான் இல்லடா?" என்று தென்னவன் பதிலுக்குக் கேட்டான்.
"யார் அழகு?" என்று ஆரியன் புரியாமல் கேட்டான்.
"உன் அம்மாதான்!" என்று சட்டென்று சொன்ன அன்பிற்கினியன், "உனக்குக்கூட அவங்களை நல்லாவே தெரியும்" என்றபடி தன் மகனைத் தூக்கித் தொடையில் உட்கார வைத்துக் கொண்டான்.
"நீ யார் செல்லம்? அத்தை செல்லமா... இல்லை டாடி செல்லமா?" என்று கேட்டான் அன்பிற்கினியன்.
"அத்தையோட செல்லம்!" என்று ஆரியன் மழலையாகச் சொல்ல,
"நானும் உன் அத்தையோட செல்லம்தான்டா... ஆனா, அந்த அத்தைதான் உன் அம்மா" என்று அன்பிற்கினியன் மென்மையாகச் சொல்ல, அன்பிற்கினியன் மடியிலிருந்தும் காகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அவனது குட்டி விழிகள் இப்போது அப்பாவின் முகத்தை ஆச்சரியமாகப் பார்த்தன.
"அத்தை எப்படி அம்மாவாகும்? அத்தைன்னா அத்தைதானே அப்பா?" என்று அவன் மழலையில் கேட்க,
அன்பிற்கினியன் அவன் தலையை வருடிவிட்டபடி, "இல்லடா செல்லம்... அத்தைதான் உன் அம்மா. அம்மான்னு கூப்பிட்டுப் பாரேன்" என்று இதமாகச் சொன்னான்.
தென்னவனும் தன் பங்கிற்கு அவனிடம் நெருங்கி, "ஆரியன் குட்டி, நீ மத்த வீட்ல எல்லாம் பார்த்திருப்ப இல்ல? அங்க இருக்குற சின்னப் பசங்களை எல்லாம் யாரு குளிப்பாட்டி விட்டு, தலையைத் துவட்டி விட்டுப் பார்த்துப்பாங்க? அம்மா தானே... அதே மாதிரிதான் உனக்கும் இத்தனை நாளா எல்லாம் செஞ்சது அவங்கதான். அப்ப அவங்க உனக்கு அம்மா தானே?" என்று புரியும்படிச் சொன்னான்.
மாடி மறைவில் நின்றபடி இதைக் கேட்டுக்கொண்டிருந்த நிகாரிகாவிற்கு இதயம் படபடவெனத் துடித்தது. கண்கள் அருவியாகக் கொட்டின. 'ஏற்றுக்கொள்வானா? இல்லை அத்தைதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பானா?' என்ற தவிப்பு அவளை உலுக்கியது.
ஆரியன் மெல்லத் தன் அப்பாவின் மடியிலிருந்து இறங்கினான். மெதுவான நடையுடன் கதவோரம் நின்றிருந்த நிகாரிகாவின் அருகில் சென்றான். அவனது வருகையை எதிர்பார்க்காதவள் போலத் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு குனிந்து அவனைப் பார்த்தாள்.
ஆரியன் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான். அவனது பிஞ்சு விரல்களால் அவளது கன்னத்தைத் தொட்டு, "அத்தை... நீங்கதான் என் அம்மாவா? அதான் எப்போதும் என்கூடவே இருக்கீங்களா?" என்று கேட்டான்.
நிகாரிகாவால் வார்த்தைகள் பேச முடியவில்லை. தலையை மட்டும் வேகமாக ஆட்டி 'ஆமாம்' எனச் சொன்னவள், அவனை அப்படியே வாரி அணைத்துக் கொண்டாள்.
"அம்மா..." என்று ஆரியன் மெல்ல அவளது தோளில் சாய்ந்து அழைக்க, அந்த ஒரு வார்த்தையில் நிகாரிகாவின் பல வருட வலி காணாமல் போனது.
அன்பிற்கினியனும் அந்த அன்புக் கூட்டில் இணைந்துகொண்ட காகம் போல, அவர்கள் இருவரையும் ஒருங்கே அணைத்துக் கொண்டான். பல வருடப் பிரிவும், தன் மகனும், மனைவியும் தன் இரு கைகளுக்குள் இருப்பதை உணர்ந்தபோது, அவனுக்குள் ஒரு முழுமை கிடைத்தது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த தென்னவன், தன் கண்களில் வழிந்த கண்ணீரை மறைக்க வானத்தைப் பார்த்தான்.
தூரத்தில் காஞ்சனா, "நல்லவேளை, மாப்பிள்ளை சிம்பிளா முடிச்சுட்டாரு. இனிமேலாவது என் பொண்ணு நிம்மதியா இருந்தா சரி" எனத் தன் கண்களையும் துடைத்துக் கொண்டு உள்ளே நகர்ந்தார்.