• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆசிரியர் உரை

Vishakini

Moderator
Staff member
மன்னிப்பாயா காதலே - 2026 புத்தகத் திருவிழாவிற்காக எழுதியது.

வாசக உறவுகளிடம் பலதரப்பட்ட கருத்துகளைப் பெற்ற ஒரு கதை. அதை எழுதிய ஆசிரியையாக இந்தக் கதையைப் பற்றி என் பக்கத்திலிருந்து சொல்லப்போகிற அதே நேரம், உங்களது சில ஆதங்கங்களுக்கும் சேர்த்து ஒரு விளக்கம் போன்று இதை எழுதலாம் என்று நினைத்தேன்.

இதன் பொருள் உங்கள் கருத்துகளை மறுத்துரைப்பது இல்லை. என்னால் முடிந்த விளக்கம். அவ்வளவுதான். இளம் வயதில் நேசிக்கும் இருவர். விதி வசத்தால் நாயகி வெளிநாடு செல்கிறாள். இதுதான் ஆரம்பப் புள்ளி.

சிலருக்கு அவனுக்கு நவியைத் தெரியாதா என்று ஒரு ஆதங்கம். அவன் எப்படி தொடர்பு விட்டுப் போனதும் மொழியைக் கட்டினான் என்று ஒரு குட்டிக் கோபம். ஆனால், வெளிநாடு செல்கிற பலர், தம் பொருளாதார நிலையில் மேலே சென்ற பின்னால் அப்படி மாறிப்போவதுதான் வழமை. நம்மோடு கூடப்பிறந்த சகோதரர்களே பொருளாதார நிலை உயருகையில் மாறிப்போகையில் நவியை அவனுக்கு தெரியாதா என்று கேட்க முடியாது இல்லையா.

அப்போதும் அவன் அவளை அப்படி நினைக்கவில்லை. அவள் தந்தையின் நம்பர் அவனிடம் இல்லை. அபிராமியோடுதான் அவனுக்கு நல்ல பழக்கம். அவரோடு அவன் தன்னால் முயன்ற வரையில் பேசுகிறான். அவர் அவனை வெட்டிவிட்டுக்கொண்டே இருக்கிறார்.

அடுத்தது மயூரன். கேசி நாவினி மீது ஈர்ப்பு கொண்டபோதிலிருந்து நேசிக்க ஆரம்பித்த காலம் வரையில் அவனுக்கு நன்றாகத் தெரியும். இன்னும் சொல்லப்போனால் நாவினிக்கு தெரிய முதலே மயூரனுக்குத்தான் அவன் காதல் தெரியும். முதன் முதலில் மொழியைப் திருமணத்திற்கு பேசியபோது மயூரனும் சேர்ந்துதான் மறுக்கிறான். அப்படியான நண்பன் தனக்குத் துரோகம் செய்வான் என்று கேசிகன் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டான் இல்லையா?

அதன் அடிப்படையில் நாவினி நினைத்திருந்தால் எந்த சிரமமும் இல்லாமல் மயூரன் மூலம் தன்னை தொடர்புகொண்டிருக்க முடியும் என்பது கேசிகனின் ஆணித்தரமான எண்ணம். அவனுடைய புது நம்பரை அவன் அனுப்பியிருக்கிறான், அவள் கடிதம் போட்டிருந்தாள் இரவு போய் பகல் வருவது எத்தனை உறுதியோ அத்தனை உறுதியாக அது தன் கைக்கு சேர்ந்திருக்கும் என்று நம்புகிறான்.

இதில் அபிராமி வேறு அவள் வாழ்க்கை அங்கேதான் என்பதுபோல் சொல்கிறார். அவனை வெட்டி விடுவதில் குறியாக இருக்கிறார். இப்படியிருக்க அவளும் தொடர்புகொள்ளாமல் இருக்கிறாள் என்கையில் அபிராமி சொன்னது போன்று அவள் அங்கே தன் வாழ்க்கையை பார்க்க ஆரம்பித்துவிட்டாள், அதனாலதான் மூன்று வருடங்களாகியும் அவள் தன்னை தொடர்புகொள்ள விரும்பவே இல்லை என்று நினைக்கிறான்.

பரவாயில்லை, நான் வேண்டாம் என்றால் அதை சொல்லிவிட்டு நீ விலகியிருக்கலாம் என்பது அவன் ஆதங்கம். தன்னிடம் நேரடியாக சொல்ல தைரியம் இல்லாமல் அன்னையின் பின் ஒளிந்துகொண்டு தன்னை தாண்டி நகர்ந்துவிட்டாள் என்பது அவன் மனதில் கசப்பாக விழுகிறது.

அதே நேரத்தில்தான் இங்கே அவனுக்கு திருமணம் பேசுகிறார்கள். மொழியை திருமணம் பேசுகிற வரை மொழி என்கிற ஒருத்தியும் அதே ஊரில் அதே தெருவுல நண்பனின் தங்கையாக இருக்கிறாள் என்பது அவன் கருத்திலேயே இல்லை.

கதையில் நாவினி கேட்பாள். அதே ஆதங்கம் வாசகர்களுக்கும் உண்டு. அவளுக்கும்தான் அவன் தொடர்பு முற்றிலும் அறுந்துபோயிருந்தது. அவள் காத்திருக்க அவன் காத்திருக்கவில்லையே என்று.

தகப்பன் இல்லாமல் வளர்ந்த பிள்ளை அவன். அன்னை தாய் மாமா வீட்டில் எத்தனையோ சிரமங்களை அனுபவித்து அவனை வளர்த்திருக்கிறார். அவரின் ஆசையை ஒரு அளவுக்கு மீறி அவனால் தட்டிக் கழித்திருக்க முடியாது. அதைவிட நாளடைவில் உயிர் நண்பனின் ஆசையும் அதுவாகிறது. அவனை சின்ன வயதில் இருந்தே பார்த்து வளர்த்த சாரதாவின் அன்பான வேண்டுதல் அது.

அவர்கள் அறிமுகமற்ற மனிதர்களாக இருந்திருந்தால் கூட வேறு. நாம் நேசித்த, நம் மீது உண்மையான அன்பு கொண்டவர்கள் முகங்களை முறிப்பது இலகுவே இல்லை. அதைவிட நாவினி மீதான காத்திருப்பு அவனையும் அழுத்திக்கொண்டேயிருக்கிறது. அதற்கு ஒரு விடுதலை வேண்டும் என்று எண்ணித்தான் அந்த வளவினுள் அவன் போகிறான்.

ஆனால் நாவினி விடயம் அப்படி இல்லை. அபிராமி அம்மாவிற்கு அவர்கள் காதல் தெரியும். அது வேண்டாம் என்று நினைக்கிறார். அதில் அவர் அவளை அவனிடமிருந்து முற்றிலும் பிரிப்பதில் கவனமாக இருக்கிறாரே தவிர இன்னொரு திருமணத்திற்கு அவளை தூண்டவில்லை, வற்புறுத்தவில்லை.

கூடவே அவள் அன்பு செலுத்துகிற, அவள் மீது மிகுந்த அன்பு கொண்ட ஒரு குடும்பம் பக்கத்திலேயே இருந்து என் மகனை வேண்டாம் என்பாயா என்று பார்க்கிற நேரமெல்லாம் கேட்கிற அந்த வதை அவளுக்கு இருக்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால் புத்திசாலித்தனமாக முதல் முறை அவளை தகப்பனோடு இலங்கை அனுப்புகையில் அவள் அங்கு போய் வருவதுதான் அவள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு உதவி செய்யும் என்று நினைக்கிறார். அதாவது கேசிகனுக்கு திருமணம் நடந்துவிட்டது அவருக்கு தெரியும். ஆனால் இங்கே நாவினி அவனுக்காகவே காத்திருக்கிறாள். இப்போது அவளை அங்கு அனுப்பி, கேசிகனின் திருமணத்தை பற்றி தெரிய செய்தால் அவள் அவனில் இருந்து கடந்து வந்துவிடுவாள் என்பது அவர் மட்டுமே போடும் கணக்கு.


கேசிகன் பிரேமா அம்மாவிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் எல்லாம் முடிவதில்லை. அதைவிட அவனும் எல்லாவற்றையும் தானாகவே கற்று வளரும் பிள்ளை. வயது மட்டுமே ஒருவருக்கு பக்குவத்தை கொடுத்துவிடுவதில்லை. பல நேரத்தில் 20 வயதுப் பிள்ளைக்கு இருக்கிற பக்குவம் கூட 40 வயதில் இருப்பவருக்கு இருப்பதில்லை. இது உண்மைதானே?

ஜெர்மன் சென்று பார்த்திருக்கலாம் என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. அதுவும் இலங்கை போன்ற யுத்தம் நடந்த நாட்டிலிருந்து பக்கத்தில் இருக்கும் இந்தியாவிற்கு போவதற்கே பெரும் பாடு படவேண்டும். போகிற நாட்டில் அகதியாக தங்கி விடுவார்கள் என்பதாலேயே அனுமதிப்பதில்லை.

ஒரு காதல் தோல்வி. அதன் பிறகு இன்னொரு திருமணம். அந்தப் பெண்ணின் தூய அன்பு, தான் ஏற்கனவே ஒரு காதலில் இருந்து தோற்றவன் என்று தெரிந்தும் தங்கையை தந்த நண்பன் என்கிற காரணங்களே போதும் அவன் அந்த வாழ்க்கையை சிறப்பாக வாழ.

அப்போதுதான் நவி வருகிறாள். அவள் அவனை தேடி வந்த ஒன்றே சொல்லிவிடுகிறது நடுவில் ஏதோ தவறு நடந்துவிட்டது என்று. அன்றிலிருந்து அவன் நிம்மதி பறிபோகிறது. ஆனால், ஒன்றில் தெளிவாகிறான். யாரில் சரியோ பிழையோ அவனுக்கு ஒரு மனைவி இருக்கிறாள். பிள்ளை வரப்போகிறது. அவன் வாழ்க்கை மொழியோடு. நாவினியும் இனி அவனைக் கடந்து சென்று இன்னொரு வாழ்விற்குள் செல்வது மட்டுமே இதற்கான தீர்வு என்று நினைத்துத்தான் அவன் முற்றிலுமாக நாவினியிடம் இருந்து ஒதுங்கி நிற்கிறான்.

மூன்றோ நான்கு மாத கருவாக இருக்கிறபோது நாவினி வந்து போகிறாள். மொழி குழந்தை பெற்றெடுக்கிறபோதுதான் அவன் நாவினி பற்றிய மனத்தின் தடுமாற்றத்திலிருந்து முற்றிலுமாக வெளியே வந்து இனி அவளை நினைக்க கூடாது என்று தெளிவாகிறான். ஆக மொழியோடு மனமொத்த வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் கூட நவியின் ஒற்றை வருகை அவன் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. என்ன, மொழிக்கு அவன் காதல் தெரியாத காரணத்தினால் கணவனின் தடுமாற்றங்களை அவள் கண்டுபிடிக்கவில்லையாக இருக்கலாம்.

இரண்டாவது தடவை நாவினியின் வருகை. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் அவன் விரும்புகிறான். கோயிலில் அவன் வேண்டுதல் அதுதான். அவளை மணக்க கேட்டபோது தனக்கு அந்த தகுதி இல்லை என்கிறான். கூடவே தான் அவளுக்குத் தகுதியானவன் இல்லை என்றும் சொல்கிறான்.

அன்னை திருமணத்திற்கு கேட்டபோது முற்றிலுமாக மறுத்தவனால் நாவினியைக் கேட்டபோது மறுக்க முடியவில்லை. அதன் பின்னிருப்பது அவளை மணக்கும் ஆசை இல்லை. அவளை மறுக்கும் தகுதி தனக்கில்லை என்று நினைக்கிறான். தன் வாயால் அவளை வேண்டாம் என்று சொல்லி அவளுக்கு அடுத்த மரண வலியை அவனால் கொடுக்க முடியாது. உண்மையில் முதலில் கேசிகனை வேண்டாம் என்று சொன்ன நாவினி, தன்னைக் கேசிகன் வேண்டாம் என்று சொன்னான் என்று அறிந்தால் நிச்சயம் முற்றிலும் உடைந்துபோவாள்.

அவள் பக்கம் இருந்து அந்த மறுப்பு வரவேண்டும் என்பதும், அவள் தன்னைக் கடந்து இன்னொரு வாழ்வினுள் செல்ல வேண்டும் என்பதும்தான் அவன் ஆசை.

அதேபோல் மேனகா அம்மா ஜெர்மனியிலும் திருமணத்திற்கு பார்க்கிறார். இலங்கை வரை தன் தமையனைக் கொண்டு அத்தனை உதவிகள் செய்து, பெற்ற மகளை போன்று பார்த்த மேனகா அம்மா பெயருக்கு அவளை திருமணத்திற்கு கேட்டிருக்க போவதில்லை. அவரும் நிறைய அழுத்தம் கொடுத்திருப்பார்கள். ஆனாலும் நழுவிக்கொண்டிருந்த நாவினி கேசிகனுக்கு மட்டும் ஏன் ஆம் என்று சொன்னாள்.

அவள் அங்கேயே தேங்கி நிற்க, அவளைக் கடந்துபோய் திருமணம் குழந்தை என்று வாழ்ந்தவனை அவள் மணந்திருக்க தேவையில்லை. அவளுக்கு எல்லா வகையிலும் பொருத்தமான, அவள் வசிக்கும் நாட்டிலேயே இருக்கும் நல்ல மாப்பிள்ளையும் இருந்தான். கேசிகனும் இருந்தான். அவள் சொன்ன வார்த்தைகளையேதான் நானும் சொல்வேன். மாற வேண்டும் என்கிற எண்ணம் நமக்குள் இல்லாமல் நாம் மாறப்போவதில்லை. இன்னொருவர் தூண்டுகிறவராக இருக்கலாம். முடிவு நம்முடையது. அதுதான் இங்கேயும். பிரேமா அம்மா தூண்டினார். அவள்தான் முடிவை எடுத்தாள்.
 

Vishakini

Moderator
Staff member
அப்படித்தான் கேசிகன் நாவினி திருமணம். அது முற்று முழுதாக நாவினியின் முடிவு. அந்த இடத்தில் இரண்டாவது தடவையாக உன்னை நம்பி வருகிறாள், ஏமாற்றிவிடாதே என்று பிரேமா அம்மா கேசிகனின் வாயை அடைப்பார். அதையும் தாண்டி அவன் மறுப்பானா என்ன? அது எவ்வளவு பெரிய வார்த்தை.

பலரின் அடுத்த ஆதங்கம் திருமணத்தின் பிறகு அவன் மொழியின் கணவனாக இருந்தான் என்று. மொழியை பற்றி பேசினான் என்று. திருமணத்தின் பின் மொழி வீட்டுக்கு விருந்துக்கு போகிறார்கள். அங்கே மொழியும் அவனும் நிற்கும் படம். அதை பார்க்கையில் மனம் தடுமாறுவது இயல்பு என்றே நினைக்கிறேன். அது மொழி மீதான காதல் என்பதை விடவும் அவனோடு ஊனும் உயிருமாக வாழ்ந்த ஒரு உயிர் இன்று இல்லை என்கிற வலி அதிகமாய் தாக்கும். இல்லாவிட்டாலும் அவனை சந்தோசமாகப் பார்த்துக்கொண்ட ஒருத்தி இன்று இல்லை. அந்த வலி இலேசானது இல்லை.

அடுத்தது கடையில் சின்னவன் அந்த புகைப்படத்தைக் காட்டுகிறான். மகனும் நாவினியும் இருக்கிறபோது மகன் பார்ப்பதால் புகைப்பட பிரேமில் உதடுகளை பதித்துவிட்டு வைக்கிறவன் யாருமே இல்லாத அதே அறையில் மொழியின் புகைப்படத்தை மூடி வைக்கிறான். அவன் அடுத்ததாய்த் தன் வாழ்வில் எதற்கு தயாராகிறான் என்று காட்டும் இடம் அது.

அவன் வாழ்வில் மொழி என்கிற ஒருத்தி இருந்தால் என்பதை அறிந்துதான் நாவினியும் அவனை மணக்கிறாள். ஆனாலும் விலகளைக் காட்டுகிறாள் இல்லையா? ஜெர்மன் வந்தவள் அவனை மறைமுகமாக விலக்கித்தான் வைத்திருக்கிறாள். கிட்டத்தட்ட ஒரு வருடம். அந்த ஒரு வருடத்தில் அவனிடத்தில் நிறைய மாற்றங்கள். ஆனால் நாவினி மாறவேயில்லை. அவள் மனத்தில் கேசிகன் மொழியின் கணவனாகவே பதிந்துபோனான்.

அவனை மொழி நினைவுகள் தாக்குகின்றன என்பதை விடவும் நாவினியை விட்டுவிட்டோம் என்கிற குற்றவுணர்வுதான் மொத்தமாகச் சுருட்டிக்கொண்டு அவனை நிமிர விடாமல் செய்வது.

ஒரு இல்லற வாழ்வு சிறக்க கணவன் மனைவி இருவரினதும் பங்களிப்பு மிக மிக முக்கியம். நாவினி கண்ணுக்குத் தெரியா வண்ணம் தன் பிடியில் நிற்க, ஏற்கனவே குற்றவுணர்ச்சியில் மூழ்கிப்போய் இருக்கிறவனால் அதை இலகுவாக உடைக்க முடியவில்லை. அவர்களின் அந்த உறவுக்குள் ஓட்டுதல் உண்டாகிற வரை எண்ணங்களாலும் சிந்தனைகளாலும் அவர்கள் பிரிந்துதான் நிற்பார்கள்.

அதுதான் சஜுக்குட்டி மொழி அம்மா என்று சொல்லும் இடத்தில் அவன் அமைதியாகுவது. அதன் அர்த்தம் அவன் மொழியை மனத்தில் சுமக்கிறேன் என்பதில்லை. பழைய நினைவுகளின் தாக்கம்.

எல்லா நேரங்களிலும் மனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது.
மனம் நம் கட்டுப்பாட்டில் நிற்காது. ஒன்றை நம்மை மீறியே நினைத்துவிடும். பிறகு நாம் அதை அடக்கி இல்லை இது கூடாது என்று தடுத்து நிறுத்துவோம்.

நன்றாக யோசித்துப்பாருங்கள், சிந்தனையோ, ஒரு பழைய நினைவோ, இல்லை நாம் மறக்க நினைக்கும் ஒன்றோ நம் நினைவில் திடீரென்று வந்துவிடுவது நம்மை மீறி நடப்பது. ஆனால் இல்லை கூடாது, இதை நாம நினைக்க கூடாது என்று மனதை அடக்குவது அதன் பிறகு நடப்பது. இங்கே இதுதான் நடக்கிறது. சட்டென்று அவனிடத்தில் ஒரு அதிர்ச்சி.

கசப்பான நினைவுகளையே மறக்க முடியாது என்கையில் இனிப்பான நினைவுகளை மறப்பது சாத்தியமா என்ன? கடந்து வரலாம். அதற்கு காலம் தேவைப்படும். அதைத்தான் அவளிடம் சொல்கிறான்.

அதைவிட அவன் அடித்தட்டிலிருந்து தான் மட்டுமே கஷ்ட்டப்பட்டு மேலெழும்பி வந்தவன். அவனுக்கு தோள் கொடுக்க யாருமே இல்லை. அப்படி வளர்த்த கடைதான் மொழி சூப்பர் மார்க்கெட். அதை விட்டுவிட்டு, வயதான அன்னையைத் தனியாக விட்டுவிட்டு நாவினிக்கக மட்டுமே ஜெர்மன் வருகிறான்.

புறப்படுவதற்கு முதல் என்ன நரக வாழ்க்கை அம்மா இது என்று அன்னையின் மடியில் படுத்திருந்து கேட்பான். அதில் அவன் துயரங்கள் அத்தனையும் அடக்கம்.

அப்படி அன்னையை, பார்த்து பார்த்து வளர்த்த தொழிலை ஒரு ஆண்பிள்ளை விட்டுவிட்டு வருவது என்பது சாமான்ய விடயமில்லை. அதை அவன் செய்வது நாவினிக்காக.

அதேபோல அவன் மொழியோடு வாழ்ந்த காலத்தில் நவியின் வீடு இருந்த தெருவையே பாவிக்க மாட்டான் என்று இருக்கும். அதன் பொருள் என்ன? அந்தத் தெருவால் போனால் அவள் நினைவுகள் தன்னைக் கொல்லும். அங்கும் அவன் நவியை மறக்கவில்லை. கடந்து வந்திருப்பான்.

யாரையும் நம்மால் மறக்க முடியாது. கடந்துதான் வர முடியும்.

மொழியோடான வாழ்க்கை, அங்கே அவன் போராட்டம், எப்படி நவியைக் கடந்து மொழியிடம் போனான் என்று கதையில் சொல்லப்படவில்லை. கதை அது இல்லை என்பதால் தவிர்த்தேன். ஆனால், இங்கே ரெண்டு விடயங்களை மறைமுகமாக உணர்த்த நினைத்தேன்.

ஒன்று, நாவினியையும் கேசிகனையும் பிரேமா அம்மா எப்படியெல்லாம் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருப்பார் என்று காட்டி, இதே போன்றுதான் மொழியை மணக்க சம்மதிக்கிறவரை கேசிகனிடம் போராடியிருப்பார் என்று சொல்லாமல் சொன்னேன்.

அதே போல் தான் ஒரு காலத்தில் நேசித்த பெண்ணை மறுபடியும் கட்டியும் கூட ஏதோ ஒரு இடத்தில் தடுமாறி நிற்கிறவன் மொழியோடு மட்டும் அத்தனை இலகுவாய் வாழ்ந்திருப்பானா என்கிற கேள்வியை மறைமுகமாக வைத்திருக்கிறேன்.

வாழ்க்கை என்பது ஒரு பயணம். எப்போதும் நேர் பாதையாகவே இருக்காது. என்னதான் தெளிவாக யோசித்து, சிறப்பான முடிவுகளை எடுத்துக்கொண்டு பயணிப்போம் என்று வாழ்க்கைப் பாதையில் நடக்க ஆரம்பித்தாலும் பல இடங்களில் சறுக்கிவிடுவோம். தெரிந்தே பல தவறுகளை விடுவோம். காரணம் எப்போதும் எம் எண்ணங்களும் சிந்தனைகளும் பேச்சுகளும் செயற்பாடுகளும் நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.

அப்படித்தான் இங்கே கேசிகனாக இருந்தாலும் சரிதான் நாவினியாக இருந்தாலும் சரிதான். அவன் ஒரு காலத்தில் மொழியின் கணவனாக இருந்தவன் என்பதை தெரிந்துதான் மணக்கிறாள். நடுவில் ஒரு வருட காலம் அவனுக்குப் போலவே அவளுக்கும் இருந்தது. ஆனாலும் அவனை மொழியின் கணவனாகவே அவள் பார்ப்பதும் தவறுதானே.

அதைவிட இது கேசி நவி வாழ்வின் ஆரம்பக்கட்டம். சாதாரணமாக ஒரு திருமண வாழ்வில் நுழைகையிலேயே ஆயிரம் மேடு பள்ளங்கள் வந்துபோகும். இது இங்கே அவர்களுக்குள் பற்பல மனச்சிக்கல்கள் காயங்கள் குற்றவுணர்ச்சிகள் எல்லாம் நிறைந்து கிடக்கையில் இதையெல்லாம் அவர்கள் கடக்கத்தான் வேண்டும். இருவரும் மனமொத்து வாழ ஆரம்பிக்கையில் இருவரின் இறங்ககாலங்களும் தூரப்போய்விடும். இதுதான் யதார்த்தம்.

கடைசியாக என்னால் சொல்லக்கூடிய ஒன்று. கேசிகன் ஒரு சாதாரண பிள்ளை. அவன் எந்த இடத்திலும் நாவினியை நோகடிக்கவோ, ஏமாற்றவோ எண்ணி எதையும் செய்யவில்லை. ஆனாலும் அவனால் அவள் காயப்பட்டவள். அதனால்தான் கதையின் தலைப்பே மன்னிப்பாயா காதலே.

இதையெல்லாம் வாசித்துவிட்டு கேசிகனுக்குச் சார்பாக நான் கதைப்பதாகச் சொல்லக்கூடாது. இவ்வளவு பெரிய விளக்கம் தருவதற்கு காரணம் இந்தக் கதை பலர் மனதை மிகவும் ஆழமாக பாதித்துவிட்டதோ என்று தோன்றியதால் மட்டுமே.

மற்றும்படி பார்வைக்கோணங்கள் பல. அதை நான் அப்படியே அவரவரின் கருத்துக்களாக முழு மனதுடன் ஏற்கிறேன்.

மீண்டும் ஒரு மன்னிப்பாயா காதலே போன்ற பீல் குட் கதை ஒன்றுடன் சந்திக்கும் வரை,

நட்புடன் நிதனிபிரபு
 
Last edited by a moderator:
நிதர்சனம், யதார்த்தம் கூடிய அழகான விளக்கம்..ஒரு விதத்தில் நாவினியை விட கேசிகன் தான் மனதளவில் அதிகம் வலி கொண்டு தாங்கினான்.. காதல் வலி உயிர் வலி அல்லவா..நாவினியை இழந்து, அரை மனதுடன் மொழியை மணந்து, அவளையும் எதிர்பாராமல் முற்றிலும் இழந்து, மீண்டும் நவியை சந்தித்து, அவனும் அவளும் குழப்பத்துடனே மணவாழ்வில் இணைந்து - இப்படி கேசிகன் மனதளவில் கடந்து வந்தவை அதிகம் தான்... இதில் நண்பன் மற்றும் அபிராமி அம்மாவின் துரோகம் வேறு..

ஒன்று மட்டும் நிச்சயம், நமக்காக படைக்கப்பட்டது யார் தடுத்தாலும் நம்மிடம் வந்து சேர்ந்தே தீரும் என்பது பிரபஞ்ச விதி..அது தான் நடந்துள்ளது..❤💛

வாழ்த்துகள் எழுத்தாளரே...💐💐💐💐💐
 

Renju

New member
ஒரு கதையையும் அதன் கதாப்பாத்திரங்களையும் எப்படி கையாளவேண்டும் எப்படி கதையை முன்னகர்த்த வேண்டும் என்பதை அந்த எழுத்தாளர் மட்டுமே தீர்மானிக்க முடியும் அப்படி செய்தால் மட்டுமே அவர் மனதில் துளிர்விட்ட கதை கரு நல்ல ஒரு கதையாக வெளிவரும் அவருக்கும் அது முழு த்ரிப்தியை கொடுக்கும் வாசகர்களின் கருத்துக்கு ஏற்ப கதையின் போக்கை மாற்றினால் அங்கே அவரின் தனித்துவம் மறைந்து போகும் அவரின் கதையும் மாறிபோகும், நிதனியக்கா அவரின் கதையை அவரின் பாணியிலே சிறப்பாக சொல்லியிருக்கார் என்றாலும் நிதனியக்கா கதைகளிலே என்னை மிகவும் வெறுக்க வைத்தவன் கேசிகன் என்னவோ என்னால் கேசிகனை இறுதிவரைக்கும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை மறந்தவனை அபப்டியே விட்டு அவள் வேறு ஒரு துணையை ஏற்றிருக்கவேண்டும்.

நாவினி முடிவு எனக்கு பிடிக்கவில்லை அணைத்து காதலும் கைகூடுவதில்லையே மொழி உயிரோடு இருந்திருந்தாள் இவள் கேசிகனை கடந்து போயிருக்க தானே வேண்டும் அவனும் இவளை அப்படியே தானே விட்டிருப்பான் ஒரு மன்னிப்பை மட்டும் யாசித்து ஆகையால் நாவினி கேசிகனை மொழியின் கணவனாகவே எண்ணி தள்ளி வைத்து வேறு வாழ்க்கைக்கு சென்றிருக்க வேண்டும் அவன் எண்ணியது சரிதான் அவளின் அன்புக்கு அவன் தகுதி உள்ளவன் அல்ல, நான் அவன் மொழியின் கணவன் என்பதிலே தான் நிற்கிறேன் அவள் உயிரோடு இருக்க இவன் என்ன செய்திருப்பான் என்ற கேள்வியை கடந்து வரமுடியவில்லை... இது என் பக்கம் .


மற்றபடி நெஞ்சம் கனக்க விழிகள் நிறைய நிறைய வலிக்க வலிக்க மீண்டும் நிதனியக்காவின் ஒரு கதை வாழ்த்துக்கள் அக்கா அருமை💐💐💐
 

Akila

New member
அப்பாடா, நிதனி மேடமே விளக்கீட்டாங்க.. ஒரு அப்பாவி சைலன்ட் ரீடரான நானு, வாழ்க்கைல first time கேசிக்கு சப்போர்ட் செய்ய நேத்து facebook போஸ்ட் போட்டேன். அடங்கப்பா, கட்டய தூக்கிட்டு அடிக்க வந்துட்டாங்கயா. கேசி பாவம்.
 

aymaan

New member
Mam unga stories ku naan romba addicted adhunaala daan kindle la irundhu neenga veliya pona apram ennaku romba kashtama irundadhu unga ella stories um naan more than 5 times padichiduven but edhu varaikum evlo deep ah feel pannadhu ila aval aarani kooda naan padikum podhu ellam azhuven but indha kadai neenga evlo explain panna apram kooda kashtama daan iruku neenga kadhaiyil solli irukuradhu edhartam nu puriyudhu but still kaesikan senjadhu oru madri unacceptable ah daan iruku avar avar mindset onnum panna mudiyadhu idhu varaikum naan yaarukum endha கடைக்கும் comment potadilla edhu daan first n may be last as well avlo affected by this story but vecheengale oru twist edhe madri feel good story nu i was like🤨🤔.
 
Top Bottom