• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது காதல் காவியம் - 2

நிதனிபிரபு

Administrator
Staff member
அவசர காலச்சூழல் என்பதனால் ஒவ்வொரு ஊரின் பிரதான வீதிகளிலும் ஆர்மி கேம்ப்புகள் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

என்ன யோசிக்கிறீங்க சார்?

மீராவை வீட்டில் விட்டு வந்த பின்னர் அந்தக் கேம்பில் இருந்த ராணுவ வீரர்கள் குழப்பமான முகபாவனையில் இருந்தனர்.

மாலினி...அந்தப் பெண் அடையாள அட்டை காட்டினாளா??

ம்ம்..ரொஷான் சாரும் அந்தப் பெண்ணும் சேர்ந்து எடுத்த போட்டு ஒன்னு கூட பார்த்தன்.என்றாள்.

அப்படியா? யோசனையோடு நெற்றியை தேய்த்துக் கொண்டான் பெரேரா.

ரொஷான் சார் கடைசியா கந்தளாய் வந்தது லீடர்ஷிப் கோச்சிங் ஒன்றுக்கு தானே? அந்த நேரம் சார் கீழே ட்ரெய்னிங் எடுத்தவங்க யாரும் இப்போ இங்க இருக்கிறாங்களா?

இல்லை. அவங்க வேற ஊர்களுக்கு மாற்றலாகிட்டாங்க. ஆனா எனக்கு தெரிந்த ஒரு நண்பர், சார்கிட்டதான் நிறைய கத்துக்கிட்டதா1வும் நல்ல திறமையான பண்பான ஆள் என்டும் சொன்னான்.

அவர்கிட்ட கால் பண்ணி விசாரிங்க. சார் அந்த நேரம் கல்யாணம் பண்ணிகிட்டாரா? என கேளுங்க என்றார்.

அவனும் செல்லை தட்டியவாறு வெளியேறினான்.

*************

அதிகாலை வெளிச்சம் மெல்லமாய் இருளகற்றிக் கொண்டிருக்க, பூபாளம் பனிப்போர்வைக்குள் இருந்து சோம்பல் முறிப்பது போல் இருந்தது.

காலைக்கடன்களை முடித்துவிட்டு அவளே போட்ட டீ யை ஏனோ தானோ என்று குடித்துக் கொண்டிருந்தாள்.நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பழைய வீடென்பதால் ஆங்காங்கு ஒட்டடைகள் தொங்கிக் கொண்டிருந்தது.அப்போதய மீரா என்றால் இதெல்லாம் காணச் சகிக்கமாட்டாள். அவளே உயரம் போட்டு ஏறி நின்று துப்பரவு செய்துவிடுவாள். இப்போது உடல் ஒத்துழைத்தாலும் மனம் அவனைத் தவிர வேறு எதற்கும் இசையவில்லை.

கண்டியிலிருந்து தனியாக கந்தளாய் வந்தது முதல் தங்கியிருந்த வீட்டை சிரமப்பட்டு அடையாளம் கண்டால் அந்த வாடகை வீட்டின் பழய உரிமையாளர் வேறு ஒருவருக்கு விற்று விட்டதாய்ச் சொன்னார்கள்.அவரிடம் அனுமதி கேட்டு இந்த வீட்டில் தங்குவதற்குள் படாதபாடு பட்டுவிட்டாள். போலீஸ் ரோலுக்கு மாறி அவர் கேட்ட கேள்வியில் அலுத்தே விட்டது.

காமு என்றழைக்ககப்படும் காமாட்சி எனும் ஒரு வயதான பாட்டிதான் முதல் இருந்த போது சாப்பாடு சமைத்துத் தருவது.அன்னையாய் அவளைக் கவனித்துக் கொள்வது என எல்லாம் தான். அவருக்கு இவள் மீது அப்படியொரு பாசம். அதற்கு முதல் காரணம் ரொஷானின் மனைவி என்ற அடையாளம் தான்.அவள் குணம்,பண்பு எல்லாம் அதற்குப் பிறகுதான்.அவரது பழய கதைகளைக் கேட்டு கலாய்த்து அவ்வளவு சகஜமாகப் பழகுவாள் மீரா.

திடீரென்று பல மாதங்களுக்குப் பிறகு வயிற்றுப் பிள்ளைக்காரியாய் தன்னந்தனியே வந்தவளைப் பார்த்ததும் வாயில் கைவைத்து ஆச்சரியப்பட்டார்.

இந்த நிலைமையில என்ன புள்ள தனியா வந்த?? தம்பி உன்ன இப்படி விடமாட்டாரே.கோவிச்சிட்டு வந்தியா? நாட்டுச் செய்தி பார்க்குறல்யா? என பேசிக்கொண்டே போனார்.

ஏதேதோ சொல்லி அவரை சமாளித்தாள்.உன்னோட தங்கப் போறேன்,தனியா தூங்காதே என்ற அவரின் அன்புக்கட்டளையை தவிர்த்த பின்னர் தான் அவளால் நிதானிக்க முடிந்தது.

அவரைக் காணல்ல. என எல்லோரிடமும் சொல்லித்திரிய அவளுக்கு விருப்பமில்லை. அதுதவிர அன்று அவனும் சொன்னானே.

“ பேபி… என்னோட தொழில் உனக்குத் தெரியுது. ஆபத்தானது. நீ எந்த சூழலிலும் என்னை சொல்லி உன்னை அடையாளப்படுத்தாத.அது உனக்கும் ஆபத்து. உனக்கு ஏதாவது நடந்தா …..? என்னால அத நினைக்கக் கூட முடியாது. விளங்குதா?

மழைத்தூறலை ஜன்னல் வழியே ரசித்துக் கொண்டு சுடச்சுட சோளனை அவன் மடியிலிருந்தவாறு ருசித்து சாப்பிடும் போதுதான், அவள் தலைமுடியை கோதிக்கொண்டே அவன் இப்படிப் பேசி சத்தியம் வாங்கினான்.

அப்போது அதெல்லாம் ஒரு பொருட்டாகக் கூட காதில் வாங்கவில்லை. நீங்க இருக்கும் போது நான் ஏன் கவலைப்பட வேணும்.என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.அவள் பாதுகாப்புப் பற்றி என்ன பேசினாலும்
“லூசா..? என்ற பார்வை தான் அவளிடமிருந்து ஆமோதிப்பாகக் கிடைக்கும்.

அவன் கண்களில் தெரிந்த கவலையை ஏன் என்று கூடக் கேட்டதில்லை.எல்லாத்தையும் எனக்காகத் தான் யோசித்திருக்கிறார் எனத் தெரிந்தும் நான் காரணமும் கேட்கவில்லையே..அந்த சந்தர்ப்பங்களில் கேட்டிருந்தால் என்ன விட்டு பிரிந்திருக்கமாட்டாரா?
நானும் தான் இப்படி எங்கென்று தெரியாமல் அவரத் தேடி அலைஞ்சிருப்பேனா? அவனைத் தாண்டி எதையும் சிந்திக்கவிடாத அவன் அக்கறையும் காதலும் தான் எல்லாத்துக்கும் காரணம்.

வரட்டும்...அவன் மீசையை பிடித்து இழுத்து வைக்கிறன். அப்போ கத்துவான். “ நோகுது பேபி.விடு ப்ளீஸ் பேபி” அப்போவும் விடவே கூடாது. பக்கத்தில் இல்லாத அவனுடன் கற்பனையில் ஊடலாய் காதல் கோபம் கொண்டிருந்தாள் மீரா.

இன்டக்கி அவர்பத்தி ஏதும் நல்ல தகவல் கிடைக்கனும். அவர் நூறு வருஷம்… எனத் தொடங்கியவள், இல்ல இல்ல நான் இருக்குற வரைக்கும் வாழனும்.பிறகு என்னோடவே செத்துப் போயிடனும் ஏன்டா என்னத்தவிர யாரு அவரை பாசமா பார்த்துப்பாங்க. ஏதோ ஒரு வகையில காயப்படுத்துவாங்கதானே. அதான் கடவுளே என்னோட ரொஷான் என்னோடு வரைக்கும் தான். கடவுளோடு வழமைபோல் டீல் பேசிக்கொண்டிருந்தாள்.

அந்தக் கடவுளோ,நீ இன்னும் சிறுபிள்ளைத் தனத்திலிருந்து மாறவேயில்லையா?? பாவம். என கடவுள் நினைத்துக் கொண்டார்.

அந்த சிறிய நொக்கியா செல்லை கையிலெடுத்து அவனோடு எடுத்த
புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மீரா. ஒவ்வொன்றும் அந்த நிமிடங்களுக்கு அவளை பூத்தூவி அழைத்துச் சென்றது. கண்கள் மூடி சுகமாய் லயித்திருந்தவளுக்குள் ஏதோ ஒன்று ஊர்வது போல் இருக்கவும் படக்கென்று கண்களைத் திறந்தாள். என்ன இது ?வயிற்றின் மேல் கை வைக்கக் கூட பயமாய் இருந்தது. இது புதிது இல்லை. மூன்றாம் முறை எனலாம்.

முதல் இருமுறையும் அவள் பெரிதாகக் கொள்ளவில்லை.காரணம் ஒரு பக்கம் மிகவும் பிசியாக இருந்தாள் என்றால் இன்னொரு பக்கம் அவனோடு தொடர்பில்லாமல் கழித்துக் கொண்டிருந்த நேரங்கள் அழுகையிலும் பயத்திலும் சென்றது. இதனால் எதையும் உணர்ந்து ஆராயத் தோன்றவில்லை.

கந்தளாய் வந்த பிறகு தான் இப்படி அமைதியாய் மனம் இருக்கிறது. பிள்ளை, வயிற்றுக்குள் அசைகிறதா? யாரிடம் கேட்பது?
ரொஷான் இருந்தா கேட்கலாம்.அவனுக்குத் தெரியாட்டியும் எப்படியாவது அறிந்து வைத்துச் சொல்வார்.

ம்ம்ம்ம்...காமு பாட்டியிடம் கேட்டா சரி. என அவள் நினைக்கும் போதே
“மீரா… ரகசியக் குரலில் காமு அழைத்துக் கொண்டிருந்தார்.”

என்னாச்சு இந்தப் பாட்டிக்கு? என நினைத்தவாறே கதவைத் திறந்தாள்.

பரபரப்புடன் உள்ளே வந்து கதவை அவசரமாய் மூடினார். கையில் ஒரு பார்சல் இருந்தது. இங்க வந்து ஒரு கிழமையில் அவர்தான் உணவு சமைத்துத் தருவது. அதற்குரிய கூலியை கொடுத்து வைத்து விட்டாள்.

என்ன?? அவள் கேள்வியாய் பார்க்க

“வெளிய ஆமிக்காரனுகள் திரியிராங்க. நான் வேலிக்குள்ளாள வந்தன்.ஒருத்தன் அப்பயும் கண்டுட்டான். கையில என்னனு கேக்கவும் பயந்திட்டன் புள்ள..

சாப்பாடு என்கயும் வாங்கிப் பிரிச்சுப் பார்த்தான். இவ்விடத்து நிக்கிறல்ல. புதுசா திரியிரானுகள். என்ன விவகாரமோ? என்றவரது முகத்தில் அப்படியொரு பம் தெரிந்தது.

வெளியே போய் பார்க்கலாமா? நேத்து பேசினவங்க நின்னா ஏதும் தகவல் கேட்கலாம். என நினைத்தவள், பாட்டி போகட்டும் என முடிவை மாற்றிக் கொண்டாள்.

“சத்து நேரமாகிப் போறன்மா. அவனுகளப் பார்த்தாலே படபடக்குது” என்றவரைப் பார்த்து சிரித்த மீரா

“இருங்க பாட்டி லேட்டா போகலாம்.உங்கள்ட்ட ஒரு சந்தேகம் கேக்கனுமே.”

என்னம்மா கேக்கப்போற??

தன் வயிற்றில் தோன்றிய உணர்வுகளை வெட்கமும் தயக்கமுமாய் கேட்டாள்.

“ராசாத்தி...நல்லா வடிவா பேசுறாய். உன்ன இந்த நேரத்துல தனியா விட்டு என்ன பெரிய வேலை உன்ட புருஷனுக்கு. போனப் போட்டு வர சொல்லும்மா.
உன் பிள்ளை துடிக்க ஆரம்பிச்சிட்டு. இனிப் போகப் போக கூடவாத் துடிக்கும். மெதுவா பார்த்துக்க.
சத்து மருந்தல்லாம் சரியா போட்டுக்கோ.

அவளுக்குள் கலவையான உணர்வுகள் தோன்றியது. “எனக்குள்ள அவனோட உயிர் அசையிது”என்பதைப் பெருமையாக உணர
இருகைகளையும் வயிற்றின் மேல் வைத்துக் கொண்டு அவன் பெயரை மெதுவாய் தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

அவள் தலையின் மேல் கைவைத்து “சாப்பிடும்மா” என்ற அந்த வயதான பெண்ணிற்கு மீராவின் ஏக்கம் புரியாமலில்லை. இங்கு இருந்த நாட்களில் எவ்வளவு அந்நியோன்னியமாய் மீராவும் ரொஷானும் இருந்தார்கள் என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.

அதனால் தான் அவருக்கு சந்தேகம் வரவில்லை. ஏதோ முக்கியமான வேலை போல என நினைத்துக் கொண்டார். மீராம்மா உனக்கு என்ன வேணுமோ தேவையோ உடனே ஃபோன் போடு. நான் வருவன். என்றார் பாசமாக.

சரி பாட்டி. நீங்க சாப்பிட்டிங்களா?

இல்லம்மா… அவரு தூங்குறாரே. எழும்பினதும் தான் நானும் சாப்பிடுவன்.

இத்தனை வயதாகியும் கணவன் சாப்பிடாமல் அவர் சாப்பிட்டதில்லை. அவர் சொல்லும் போது வியந்திருக்கிறாள். இத்தனைக்கும் அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர். அவரால் ஓரளவு தான் சுயமாக இயங்க முடியும். இருந்தும் அவருக்கான மரியாதையில் எவ்விதத்திலும் குறைவு வைத்ததில்லை.அவர் பேசும் போது புரிந்து கொள்ள அவர்மீதான அன்பை. அவர் ஓய்வு பெற்ற தபாற்காரர் என்பதால் மாதா மாதம் வரும் பென்சன் பணம் அவர்களுக்கு போதுமானதாக இருக்கும்.

பாட்டி… என் வயசில உங்களுக்கு பேரப்புள்ள இருக்குன்னு சொன்னிங்களே. அந்தப் பெண் இன்னுமா உங்களப் பார்க்க வரல்ல?

“இல்லம்மா.. என் பையனுக்கே இங்க வந்து தங்குற கஷ்டமாம். டவுன்ல பொறந்த பெண் வருவாளா? போன்ல கூட ஒரு வார்த்தை பேசுறத்துக்கே வரமாட்டா. ஆசைக்கி ஒரே மகன்னு எப்படி எல்லாம் இரக்கம்”

“பெண்ணுக்கு கடைசி வரைக்கும் புருஷன் தான் காவல், துணை எல்லாமே. மத்த எல்லா உறவுமே பாதியில போயிடும் என்றவர் “சரிம்மா கதவை பூட்டிக்க. நான் வாறன்” என வெளியேறினார்.

கதவைத் தாழிட்டவளுக்கு அந்தப்பாட்டி சொல்லிப் போன வார்த்தை காதில் சுற்றிக் கொண்டிருந்தது.“பெண்ணுக்கு கடைசி வரைக்கும் புருஷன் தான் காவல், துணை எல்லாமே”.

“என் ரொஷான் எனக்கு இந்தத் தனிமை பிடிக்கல்ல சீக்கிரமா வாங்க உங்களத் தவிர என்னைய யாரு பார்த்துப்பா”.

“எனக்குப் பசிச்சா நீங்க வரும் முதலே சாப்பிடுற ஆள் நான்.. இனிமே நீங்க வந்த பிறகு இப்படிப் பண்ண மாட்டேன்.நீங்க சாப்பிட்டா தான் நானும்…...அதற்குமேலும் நினைக்க முடியாமல் கண்களில் நீர் வழிய வழிய துடைத்துக் கொண்டாள்.

ஆனாலும் அவள் நினைவுகள் மீண்டும் மீண்டும் அவனிடமே சென்றது.

"பேபி சாப்பிட்டதா சொன்ன. அப்ப ஏன் நான் சாப்பிடும் போது திருப்ப ஊட்டி விட சொல்ற?. அவள் வாயில் ஒட்டியிருக்கும் சோற்றுப் பருக்கையினை துடைத்தவாறே கேட்பான்.

அவளோ பொய்யாய் கோபித்துக்கொள்ள “ஹேய்ய்.. வாயை திறங்க. நான் சும்மா சொன்னன்.சாப்பிடுங்க பேபி. என அவன் கெஞ்ச

அவனிடம் ஒரு வாய் உண்ண வேண்டும் என்பதற்காகவே அவனை ஊட்ட சொன்னவளுக்கு இன்னும் சாப்பிடு என சொன்னவனிடம் இருந்து விலகுவது கஷ்டம்.அவள் மறுக்க மறுக்க இன்னும் மூனறு வாயாவாது ஊட்டி விடுவான்.
அதற்காகவே அவன் வரும் முதல் சாப்பிடுவாள்.

நினைவுகள் ஒவ்வொன்றும் கண்முன்னே நிஜமாய் வந்து போக, அவன் விம்பம் மட்டும் காணாமல் தவித்துப் போனாள் மீரா.

தனிமை மிகவும் கொடுமையானது. அதிலும் நமக்கு பிடித்தவர்கள் இல்லாமல் அவர்களுக்காகவே காத்திருக்கும் நொடிகள் ரணங்கள் நிறைந்தது. அதைத் தான் மீரா அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

மீரா… பெயருக்கு பொருத்தமாய் காதலாய் காத்திருக்கிறாள்.தன்னவன் வருவான் என்ற நம்பிக்கை தான் அவளை கொஞ்சமாவது சிரிக்க வைக்கிறது.

ஆனால் அவன் எப்படி இருக்கிறான் என்பது மட்டும் தெரிந்தால்?
 
Top Bottom