கண்களைக் கசக்கிக் கொண்டாள் மீரா.அவள் கந்தளாய் வந்து நான்கு மாதம் நெருங்குகிறது.இந்த இவ்வளவு மாதங்களில் முழுநேர சோம்பேறியாகியிருந்தாள்.மூன்று வேளைச்சாப்பாடு டீ, ப்ளேன்டி,இடைக்கிடையே நொறுக்குத்தீனி வேறு.மூன்று நாளைக்கு ஒரு தடவை வீட்டைச்சுத்தம் செய்யவும் போதாக்குறைக்கு அவள் அழுக்குத் துணியைக்கூட விட்டுவைக்காமல் துவைத்துப்போட ஒரு ஆள் எனவும் அவளுக்கென்று ஒரு வேலைகூட மிச்சம்வைக்காமல் நாட்கள் சென்றது.
ஒருகாலத்தில் வேலை செய்யாமல் பாட்டிக்கு போக்கு காட்டிக்கொண்டு சுற்றித்திரிவாள்.ஆனால் இப்போது வேலையே செய்யாமல் பைத்தியம் பிடிப்பது போலிருந்தது.ஒரு நாள் இரண்டு நாளென்றால் இருக்கலாம்.மாதக்கணக்கில் எப்படி? தூங்குவது சாப்பிடுவது குளிப்பது என்று அவள் பொழுது போனது.
வெளியே செல்ல யாரும் விடமாட்டார்கள்.
“தம்பி வந்தா போம்மா.தனியா எங்கயும் போகாத.இங்க பிரச்சினை இல்லாட்டியும் நாடு நிலமை மோசமா இருக்கு.எங்க என்ன நடக்குமென்டு தெரியாதே…” என ஆளாளுக்கு புத்திமதி செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.அவளும் அதை மீறுவதில்லை.ஏனென்றால் அவள்மீது அவ்வளவு அக்கறை அவர்களுக்கு.ரொஷான் மீது வைத்துள்ள மரியாதை தான் அதற்குக்காரணம்.இரவில் அவளுக்குப் பாதுகாப்பாக ஒரு வயசான அம்மா வருவார்.மீண்டும் காலை ஐந்துமணி வாக்கில் சென்றுவிவார்.அவர் சென்றதும் மீண்டும் தூக்கத்தைத் தொடர்வாள் மீரா.
போர்வையை முக்காடுபோல் போட்டுக்கொண்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.மழை அடித்து ஊற்றிக்கொண்டிருந்தது.
வீட்டு நினைப்பு வந்தாலும் அங்கு போய்த்தான் ஆகவேண்டுமென்று மனது முரண்டவில்லை.காரணம் அவளது சித்தியின் மனமாற்றம் மீராவிற்கு நிம்மதியாக இருந்தது.கடைசியாக ரொஷானது ஃபோனில் நான்கு மாதம் முதல் பேசியதுதான்.
“மீரா….நீ எங்க இருந்தாலும் சந்தோசமா இருக்கனும்.நான் பண்ணின பிழைக்கு பரிகாரம் தேட உன் அனுமதி வேணும்.உன் பாட்டிய என்னோட தாயா நான் நல்லா பார்த்துக்குவன்.உன் கால்ல வேணும் என்டாலும் விழுறன்.
எனக்கும் இந்திராக்கும் யாருமேயில்ல.நான் செய்த பாவம் அவ வயித்துப்பிள்ளைய பாதிச்சிட்டு.நீ மன்னிக்கனும் அப்போதான் கடவுளும் பண்ணிப்பாரு தாயே..அவங்கள உன்னோட கூப்பிடாத மீரா.இனி எந்தப்பிரச்சினையும் வர விடமாட்டன் மா.உனக்கிட்ட மன்னிப்பு கேட்குற தகுதி கூட எனக்கில்ல…” என விக்கி விக்கி அழுத விசாலாட்சியை சமாதானப்படுத்தக்கூட மீரா விரும்பவில்லை.
“மீராக்கா…பாட்டிய பத்திரமா நான் பார்த்துக்குவன்.நீ உன் வாழ்க்கைய சந்தோசமா வாழு.நம்ம அப்பா ஆசையும் அதுதான்.”கந்தளாய் வரும்போது ரொஷானின் ஃபோனில் இருந்து பேசியதுதான். அதன் பிறகு எந்தத் தொடர்பும் இல்லை.
அவளுக்கென்று ஒரு ஃபோன் இல்லை.காரணம் அவள் பேரில் சிம் கார்ட் வாங்க வேண்டுமென்றால் அடையாள அட்டை வேண்டும்.
அதுதான் எரிந்து போயிற்றே.யுத்த காலம் என்பதால் சட்டங்கள் இறுக்கமாகவே இருந்தது.அப்படி பேச நினைத்தால் காமு பாட்டியின் ஃபோனில் எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம்.
இடைக்கிடையே பாட்டியை விசாரித்துக் கொள்வாள்.மற்றபடி யாருடனும் அவள் பேசுவதற்கில்லையே.
“மீராம்மா…அந்தத் தம்பிய உனக்காகவே கடவுள் அனுப்பிருக்காரு.எனக்கு அவ்வளவு நிம்மதியா இருக்கு.உன்னோட விளையாட்டுப்புத்திய மூட்டைகட்டிப் போட்டு ஒழுங்கா பொறுப்பா இரு.சரியா??” பழய பாட்டியாய் அவர் பேசும்போதெல்லாம் மீரா கஷ்டப்பட்டு அழுகையை அடக்கினாள்.
பாட்டியை தன்னுடன் வைத்துக்கொள்ள ரொஷான்தான் யோசனை சொன்னான்.தனக்கே தோன்றாதது அவனுக்குத் தோன்றியிருக்கிறதே என கொஞ்சம் ஆச்சரியப்பட்டேபோனாள் மீரா. பாட்டியிடம் கேட்டபோது அவர் அறவே மறத்துவிட்டார்.
இந்துவுக்காவது அவர் வேண்டும் என்று தோன்ற அவரை மேலும் அவள் வற்புறுத்தவில்லை.
அவனால் இனி பிரச்சினை வராது என்ற ரொஷானின் வார்த்தை அவளுக்கு நம்பிக்கை தந்தது.ஏனென்றால் பாபு மிக மோசமான குணம் கொண்டவன்.
யாரையாவது பழிவாங்க வேண்டுமென்றால் எதை செய்யவும் துணிந்தவன்.அப்படியிருக்கும் போது இவனால் இந்திராவுக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்ற பயம் மீராவுக்கு இருந்ததுதான்.ஆனால் ரொஷான் அவனை நன்றாக எச்சரித்ததுடன் ஒரு பொலிஸ் மூலமாக அடிக்கடி அவனை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்திருந்தான்.அப்பாவிடம் இருந்த கடைகளின் வாடகைப்பணமே தாராளமாக வரும் என்றபடியால் வருமானப் பிரச்சினையும் அவர்களுக்கு இல்லை.
“மீராம்மா….இந்தா அவிச்ச கடலை இருக்குது.டீ குடிச்சிட்டு இத சாப்பிடும்மா.நான் வீட்டுக்கு போய்ட்டு இடியாப்பம் எடுத்துட்டு வாரன்” என்றபடி சென்ற காமாட்சியை முறைத்துப்பார்த்தாள் மீரா.
“என்னம்மா?” என்று பதறியபடி அருகில் வந்தவரிடம் “பாட்டி….எப்ப பார்த்தாலும் சாப்பாடு பற்றித்தான் பேசுவிங்களா? எனக்கு வீட்டுக்குள்ளயே இருந்து போரடிக்கிது.நான் வெளிய போய் ஊர் சுற்றிப்பார்க்கப் போறன்.என்ன போக விடுங்க பாட்டி” எனக்கெஞ்சினாள்.
“இல்லம்மா…..இங்க ராணுவத்துட தொல்லை அதிகம்.எல்லாரும் ரொஷான்தம்பி மாதிரி இருக்கமாட்டாங்க.அவரு வந்த பின்னால போங்க.அதுவரைக்கிம் எங்கயும் போகக்கூடாது.நீ படிச்ச புள்ள.விஷயத்த விளங்கனும்”.என அவள் நாடியைப் பிடித்துச் சொன்னார் காமு.
“ப்ச்ச்….எப்பவும் இதையே சொல்லுங்க என சலித்தவள், ஆனா அந்த லல்லு அக்காவ மட்டும் இன்டக்கி அனுப்பாதீங்க.அது சுத்தம் பண்ண ஆரம்பிச்சா என்ன ஒரு வழி பண்ணிடும்.அங்க புழுதி மூக்கை கட்டிக்க.காலுக்கு செருப்பை போடு.கண்ணை மூடு அப்படி இப்படின்டு என்னால முடியாது.அலாரம் மாதிரி மூணு நாளைக்கி ஒரு தரம் ஏன் பாட்டி வரணும்.அதுக்குள்ள நான் மட்டுமே இருக்குற இந்த வீடு அழுக்காகிடுமா? அவங்கள்ட்ட சொல்லுங்க பாட்டி.”
ரொஷான் தம்பி அப்படித்தான்மா.
அவருக்கு எப்பவும் சுத்தமா இருக்கனும்.தம்பி ஒரு மாசம் அப்படி இங்க தங்கி இருக்கு.அதுவரைக்கும் அவ்வளவு சுத்தமா வச்சிருக்கும்.
நான்கூட அதிசயிப்பன்.பெரிசா தங்கவும் மாட்டார்.ஆனா இருந்தார் என்டா துடைச்சி கூட்றத்துல மட்டும் குறை வைக்கமாட்டார்.அவரு ஃபோன்ல சொல்லித்தான் இந்த ஏற்பாடும் செய்தாரு.அதுல என்ன பிரச்சினை?? நல்லம் தானே.சரி சாப்பாடு எடுத்து வாரன்.” என்றபடி
அவர் போய்விட்டார்.
பேசி பிரயோசனமே இல்ல.எழுந்து போர்வையை மடித்து வைத்தவள் கண்ணாடி முன் நின்று தலையை பிரித்து எண்ணெய் வைக்க ஆரம்பித்தாள்.ஒவ்வொரு முடியாக பூசி தலையைப்பின்னி முடித்தாலும் நேரம் பெரிதாக நகரவில்லை.
பல்விளக்கி ஆறிப்போன டீயைக் குடித்தாள்.அவளுக்கு அது பழகிவிட்டது.சுடசுடக் குடித்தால் அவளுக்கு இறங்கவே மாட்டாது.பிறகு கடலையை காலி செய்தாள்.அந்தக்காலை மழை நேரத்துக்கு கடலை நல்ல காம்பினேஷனாக இருந்தது.பெரிய ஒற்றை அறை அளவான சமையலறை இரண்டுக்கும் நடுவில் ஒரு கழிவறை.ஒரு ஹால்.மொட்டமாடிக்குப்போக மரத்தாலான ஒரு படிக்கட்டு.அடிக்கடி சுத்தம் செய்வதால் சிவப்பு சீமென்ட்தரை பளபளத்தது.
மொட்டமாடியில் நின்றால் யாரும் பார்க்க முடியாதவாறு சுற்றிலும் மரங்கள் அடைத்து நின்றன.இங்கு பூமரங்களைவிட பெரிய பெரிய மரங்கள்தான் அதிகம்.
பெரிய வாசல் முழுக்க மரங்கள்தான் நிறைந்திருந்தன.வாழ்வதற்கு நிம்மதியான இடம்தான்.ஆனால் மீராவால்தான் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.
அவளை இங்கே அழைத்து வந்து காமு பாட்டியிடம் அவளை ஒப்படைத்துச் சென்றவன்தான்.
இதோ நான்கு மாதங்களை நெருங்குகின்றது.இன்னும் அவனைக்காணவில்லை.
காமுவிற்கு நன்றாக சிங்களம் தெரியும்.அன்று,ரொஷான் அவரோடு நிறைய நேரம் பேசினான்.அவளை நன்றாகப் பார்துக்கொள்ளும்படி அவன் சொன்னதாக காமு அடிக்கடி சொல்லுவார்.கடைசியாக அவன் போகும்போது அவளை நெருங்கி வர மீரா வெளியே நின்றிருந்த காமுப்பாட்டியிடம் சென்றுவிட்டாள்.
அவனோ தயங்கித்தயங்கி அவளை பார்த்தவாறே நின்றான்.அவன் கண்களில் தெரிந்த அழைப்பை அவள் தெரிந்தும் தெரியாதது போல் நின்றாள்.கடைசியாக ஜீப்பில் ஏறும்போதுகூட அவன்கண்களை அவள் சந்திக்கவில்லை.அவன் பார்வை அவளை ஏதோஒரு உணர்வுக்குள் அழைத்துப்போவது போல் உணர்ந்தாள்.அதனால்தான் அவனைப்பார்ப்பதைத் தவிர்த்தாள்.
சிலநேரங்களில் தன் வாழ்க்கை இப்படியே தனிமையில் முடிந்துவிடுமோ என்றுகூட அவளுக்கு பயமாக இருக்கும்.
பேசாமல் ஊருக்கு திரும்பி போய்விடலாம் என்ற எண்ணமும் வரும்.ஆனால் அதற்கான தைரியம்தான் அவளுக்கு இல்லை.
பழய மீராவாக இருந்தால் உடனே முடிவெடுத்துவிடுவாள்.இப்போது அப்படியில்லை.பலதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.
இடியாப்பமும் வந்துவிட்டது.அவள் இன்னமும் குளிக்கவில்லை.
“நேரத்துக்கு சாப்பிடு மீரா” என்று வழமைபோல அறிவுறுத்தல்கள் பட்டியலை காமு வாசித்துச்சென்றும் அரைமணித்தியாலம் கடந்துவிட்டது.
கடிகாரம் ஒன்பதை நெருங்கவிருக்க மழை விட்டு விட்டு ஊற்றிக்கொண்டே இருந்தது.
அவளுக்குள் ஒரு எண்ணம் தோன்ற சட்டென்று மாடிக்கு ஓடினாள்.
மொட்டைமாடிக்குளியல் இதுவரைக்கும் அவள் குளித்ததேயில்லையே.உடல் முழுக்க நனைய மழைத்துளிகளின் கணம் தாங்காமல் அவள் கூந்தல் அவிழ்ந்தது.கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த மரக்கிளைகளை குழந்தையாய் அசைத்து விளையாடினாள்.நீண்ட நாட்களுக்குப்பிறகு அவள் மனதுக்கு அவ்வளவு சந்தோசமாக இருந்தது.ஒருவழியாக மழை நின்றுவிட அங்கிருந்த படியில் அமர்ந்தாள்.வானம் விடியாதது போல் இருளாக இருந்தது.கீழே கதவு தட்டும் சத்தம் கேட்க “பாட்டி வந்துட்டாங்க போல.இப்போதானே போன.அதுக்குள்ள ஏன்தான் வரனும்” என முணுமுணுத்தபடி மனதேயில்லாமல் கீழே இறங்கிவந்தாள்.
மாடிப்படிகளுக்கு எதிரே திறந்திருந்த ஜன்னலில் ஊடே ரொஷானைப் பார்க்கப்போகிறாளென்று அவளுக்குத் தெரிந்திருந்தால் இந்தக்கோலத்தில் வந்திருப்பாளா? காமு எப்போதும் கதவிற்குப் பக்கத்தில் நின்றுதான் தட்டுவார்.காரணம் வெளியே இருந்து பார்க்கமுடியாதவாறு அந்த ஜன்னல் அவ்வளவு உயரத்தில் இருக்கும்.மீராவிற்கே அது எட்டாது.ஆனால் உள்ளே இருந்து பார்ப்பதற்கு வசதியாகவே அது வைக்கப்பட்டிருக்கிறது.ரொஷானின் உயரத்திற்கு அதுவே குறைவாகத்தான் இருந்தது போல.எதிர்பாராத அவனின் வருகையால் அப்படியே நின்றுவிட்டாள்.மேலே செல்லவும் முடியாமல் கீழே இறங்கவும் முடியாமல் ஈரத்தில் தாறுமாறாக ஒட்டியிருந்த கையில்லாத தன் உடையை சரிசெய்யவும் முடியாமல் சங்கடத்தில் மாடிப்படியின் கைப்பிடியை பிடித்துக்கொண்டு அதிர்ச்சியில் அப்படியே நின்றிருந்தாள்.
அவனும் அதை எதிர்பார்க்கவில்லை.
முதலில் தடுமாறியவன் பிறகு சுவாரஷ்யமாய் அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.
சில நொடிகள் கழித்து அவன்தான் மீரா.. என்று அழைக்க அப்போதுதான் மீரா பொம்மைக்கு உயிர்வந்தது.கைக்கு வந்த உடையை எடுத்து வேகமாக அணிந்தவள் ஓடிச்சென்று கதவைத்திறந்தாள்.அவளுக்கு மூச்சுவாங்கியது.விலகி அவனுக்கு வழிவிட்டாள்.கையில் பெரிய பையுடன் உள்ளே வந்தான்.இங்க தங்கப்போறானா?? ஆனா எப்படி முடியும்? நொடிக்குள் சிந்தனை வந்துவிட்டது,.
நல்லமா..? என்று இரண்டாவது தடவையாக ரொஷான் கேட்க ஹா….நல்லாருக்கன் என்றாள்.வாங்க என்றுகூட அவனை கூப்பிடவில்லை.அவன்தான் சாப்பிடல்லயா? என மூடியிருந்த உணவைக்காட்டிக்கேட்டான்.அவள் இல்லை என்பதுபோல் தலையசைத்தாள்.
“சாப்பிடுங்க” என்றான்.அவள் அசையாமல் என்னசெய்வதென்று கூட தெரியாமல் நின்றிருந்தாள்.
அவன் மேலும் எதுவும் பேசாமல் பைக்குள் இருந்த உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறை சென்றுவிட்டான்.
சொல்லாம வந்துட்டான்.
ஹய்யோ…..என்று அங்கிருந்த கதிரையில் தொப்பென்று அமர்ந்தாள்.அவளுக்கு எங்காவது ஒளிந்துகொள்ளலாம் போலிருந்தது.ஆயிரம் சிந்தனை மண்டைக்குள் புகுந்துகொள்ள அவன் குளித்துமுடித்து வந்ததும் தெரியாமல் அப்படியே யோசித்துக்கொண்டிருந்தாள்..
மீரா,...பக்கத்தில் கேட்ட அவன் குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்.கையில் அவள் டவளைக் கொடுத்தான்.அவள் ஈர முடிகளை பிடித்துக்காட்டியபடி.
அவளும் பேசாமல் வாங்கி உள்ளே சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.
அறையைத்திறக்காமல் அப்படியே இருந்துவிடலாம் போலிருந்தது.
ஆனால் அது சாத்தியமில்லையே.
தன்னை சீராக்கிக்கொண்டு வெளியே வந்தாள்.அவள் வந்ததும்தான் தாமதம் “மீரா பசிக்கிது.நான் சாப்பிட போதுமா?” என்று கேட்டான்.
வெட்டப்படாத தாடியும் மீசையுமாய் சிவந்திருந்த அவன் கண்களில் அத்துணை சோர்வு தெரிந்தது.
“வாங்க…நான் கடலை சாப்பிட்டேன்.எனக்கு பெரிசா பசியில்ல” என்றவள்,தட்டைக்கழுவி அவனுக்குப்போதுமான சாப்பாட்டை வைத்து கொடுத்தாள்.அவன் சாப்பிடும் வேகத்தைப்பார்த்ததும் குற்ற உணர்வாக இருந்தது.
வந்தவனை வாங்க என்று கூட சொல்லல்ல.பாவம் நான் வரும்வரைக்கும் சாப்பிடாம காத்திருந்திருக்கான்.போதுமா? எனக்கேட்டாள் “ம்ம்ம் தேங்ஸ்” என்றவன் கைகழுவி வந்து “நான் தூங்குறன்” என்று அவள் மூக்கின் நுனியை ஒற்றைவிரலால் தொட்டுவிட்டு கட்டிலில் விழுந்தவன் உறங்கியும் விட்டான்.மீராதான் தலையை குலுக்கி நிதானத்திற்கு வந்தாள்.
அவனது நேர்த்தி பற்றித் தெரிந்தவள் என்றபடியால் அவனது இந்த செய்கைகள் அவளுக்கே ஒருமாதிரியாகிப்போனது. விழுந்துகிடந்த அவனது பையை இழுத்துக்கொண்டு அறைக்குள் வைத்தாள்.அவன் கழட்டிப்போட்ட துணிகளை எடுத்து அழுக்கு உடையோடு போட்டாள்.அது அவளுக்கும் சங்கடமாகத்தான் இருந்தது.
அவன் இங்க தங்குவதற்காக வந்திருக்கிறான்.அது அவன் பார்த்துத்தந்த வீடு.
சொல்லப்போனால் அவன் இடம்.
இந்த வீட்டுல ஒரு அறை ஒரு கட்டில் என்று எப்படி சொல்வது.
தலையணையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அயர்ந்து உறங்குபவனைப் பார்க்கப் பார்க்க மீராவிற்கு இஷ்டத்திற்கு கற்பனை பெருக்கெடுத்தது.வெளியே படிக்கட்டில் வந்துஅமர்ந்து கொண்டாள்.ரொஷான் வந்திருப்பதைத் தெரிந்ததும் காமு அவனுக்கு விஷேசமாக சமைத்துக்கொண்டுவந்தார்.
“தம்பிக்கு அங்கய சாப்பாடத் திண்டு நாக்கு செத்திருக்கும்.எழும்பினதும் பார்த்து வச்சிக்கொடும்மா” என்றவரிடம் “சரி பாட்டி” என அனுப்பிவைத்தாள்.மீரா உள்ளே எட்டிப்பார்த்தாள்.இருவர் தூங்கும் கட்டிலில் ஒற்றை ஆளாகத் தூங்கிக்கொண்டிருந்தான்.அப்போ இனி நான் எங்க தூங்குற? இவன் எங்க தூங்குற? சின்னப்பிள்ளை போல சிணுங்கினாள் மீரா.
ஆனால்??.அவனை சில மாதங்கள்தான் காணப்போகிறாள் பிறகு அவனைக்காணாமல் தினம் தினம் மனதால் சாகப்போகிறாளென்று அன்று மட்டும் அவளுக்குத் தெரிந்திருந்தால் இம்மியும் அவனிடமிருந்து விலகியிருந்திருக்க மாட்டாள்.அவனை தனியே தூங்கவிட்டு இவள் படிக்கட்டில் அமர்ந்திருக்கவும் மாட்டாள்.விதி அதுதான் என்றால் அதை யாரால்தான் மாற்றமுடியும்?