கேட்டிற்கு வெளியே வந்து வீதியின் இரு பக்கமும் பார்த்தாள் மீரா.ஆள் அரவம் இல்லாது வெறிச்சோடிக் கிடந்தது. புளிய மரங்களில் இருந்த குயில் அலகை மட்டும் வெளியே காட்டிக்கொண்டு அதுபாட்டிற்கு விதவிதமாய் இசைத்துக்
கொண்டிருந்தது.
கைக்கு எட்டாததூரத்தில் புளியங்காய் தொங்கிக் கொண்டிருந்தாலும் கிளைகளில் கால்வைத்து ஏறினால் பழுத்துத் தொங்கிக் கொண்டிருக்கும் அந்தக்காயை ஆய்ந்திடலாம்.
பார்க்கவே அவளுக்கு நாவில் எச்சில் ஊறியது.
“அம்மா எனக்கு கொடு” என்பது போல் அவள் பிள்ளையும் வயிற்றில் நேரம் பார்த்து உதைத்துக் கொண்டிருந்தது.
"ஐய்யோ... இங்கப் பாருங்க ரொஷான் என்னை உதைக்கிது” என நினைத்துக் கொண்டே அவளை அறியாமல் புன்னகையோடு மரத்தின் அருகே சென்றாள்.அவள் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது. ஊரில் இருந்தப்போ எத்தனை மரத்தில் ஏறியிருக்கன். அதற்காகவே அணில் என்று அவளை பட்டப்பெயர் சொல்லி
அழைப்பார்கள்.அது எவ்வளவு அழகான ஊர். என் அப்பா பாட்டி ஹ்ம்ம்ம்ம்….நினைக்கும் போதே அவளுக்குப் பெருமூச்சு வந்தது.
இவர்களை பிரிந்து இப்படி எல்லாம் இருப்பேன்னு கனவுல கூட நினைச்சு இருக்க மாட்டன்.
“பாட்டி எப்படி இருக்கீங்க? நான் வயித்துல புள்ளையோட இருக்குறப்ப நீங்க
பக்கத்துல இருந்தா என்னைய எப்படி எல்லாம் பார்த்துப்பீங்க.. உங்கள மிஸ் பண்றன்.
அப்பா... என் அப்பா. உங்க பொண்ணு அநாதையாகிட்டன்.இப்போ எனக்கு பயம் அதிகமா வருது. மீரா தைரியமான பெண் அப்படின்னு பெருமையா சொல்லுவிங்களே. அதெல்லாம் கடந்திட்டுப்பா.”
கவலைகள் இல்லாம சுற்றித்திரிந்த அந்நாட்கள் மீண்டும் வராதா என மனது ஏங்கியது.கண்களை மெதுவாய் மூடிக்கொண்டாள். குளித்துவிட்டு வந்த அவளது
ஈர மேனியை சூடான காற்று தளுவிக் கொள்ள மெய்மறந்து அதை அனுபவித்துக் கொண்டிருந்தாள் மீரா.கடந்த காலம் அவளை அருகில் அழைத்தது.
***************
“மீரா........ அடியேய் தின்னுட்டு போடிம்மா. குச்சியாட்டம் இருக்கா. அதப் பத்தி கவல கொஞ்சமாவது இருக்கா இவளுக்கு.”
பாட்டிம்மா.... என கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் மீரா.அவளுக்கு தெரியும் பாட்டி பாப் கோன் ஆகப்போகிறார் என. இப்படி முத்தம்
கொடுத்தால் சரியான கோபம் வரும் என்று நன்றாகத் தெரிந்தே
பண்ணுவாள்.
காதை பிடித்து திருகியபடி “என்னடி கழுதை இந்த வயசுல என்னப்போய்
கொஞ்சிகிட்டு திரியிற..எத்தன முறை சொன்னாலும் விளங்குறல்லியா?”
“காலா காலத்துல ஒரு கல்யாணத்த பண்ணி வச்சா ஏன் பாட்டி உன்னோட
பொக்கை கன்னத்தை கொஞ்ச போறன்..” என ஒற்றைக் கண்ணை மூடிக்கொண்டு குறும்பாய் புன்னகைத்துப் பார்த்தாள் மீரா.
நாடியில் ஒரு விரலை வைத்து கண்ணை உருட்டிய கிழவிக்கு
“அது வந்து பாட்டி….. என் புள்ளய கொஞ்ச மாட்டேனா அத சொன்னன்.நீ தப்பா
நினைச் சிட்ட போல.குசும்புக்காரக் கிழவி.” என ஏற்ற இறக்கங்களாய் பதில் சொன்னாள் மீரா..
யாருடி கிழவி?
“நீதான்..பிறகென்ன குமரியோ?”
இடுப்பில் கையூன்றியபடி கேட்டாள்.
“இல்லதான். ஆனாலும் என் வயசுக்கு நா கிழவி மாரியா இருக்கன். பக்கத்து வீட்டு
அம்புஜம் பார்த்திருப்பியே என் வயசு தான். ஆனா... பல்லு முழுசா போயி,
முடிபூரா நரச்சி கையில பொல்லு வச்சிட்டே நடுக்கமாத்தானே நடக்குறா.நான் அப்படியா??”
மொத்தமே இரண்டு பல்லுதான் எனத் தெரியுமளவு சிரித்த பாட்டியின் அழகில்
சொக்கிப்போன மீரா, இரு கன்னங்களையும் பிடித்து ஆட்டினாள். “க்யூட்டி பாட்டி”
என்று ஓடியே விட்டாள்.
“சாப்புட்டு போடிம்மா..” என்ற பாட்டியின் குரல் அவளுக்கு எங்கே கேட்கப்போகுது? அவள் இன்னேரத்திற்கு தெருமுனையை
தாண்டி தோப்புப் பக்கம் சென்றிருப்பாள். வைத்த கண் வாங்காமல் அவள் போன திசையினையே பார்த்துக் கொண்டிருந்தார் கமலம்.
“புள்ளையாரே.... எம் பேத்திக்கு தகுந்த வரனா அமையனும்.அவ ஆயுசுக்கும் நல்லாருக்கனும்.அவ அழகுக்கும் அறிவுக்கும் எவ கண்ணும் விழக்கூடாது.”
மனதுக்குள்ளேயே வேண்டிக் கொண்டார்.
“அத்தே... உள்ள கதவு சாத்தனும்.இல்லனன்டா பூனை மோந்த சோத்துல தான்
ராவைக்கும் கை வைக்கனும். உங்க பேத்தி சாப்பிட்டான்னா கதவை சாத்திட்டு மத்த வேலைய பார்த்துப்பன்.”
“நீ சாத்திட்டு போ... மீரா வந்தா எடுத்து தின்னுவா.நான் பாக்குறன்”.
“யாரு எந்நேரத்துக்கு சாப்பிட்டா எனக்கு ஒன்டுமில்லை. உங்க பேத்தி ஒழுங்கா எதையும் மூடாம போன தடவை தின்ன கையோட போயிட்டா. பூனைக்குத் தான் வாசியாகிட்டு.”
“இப்ப என்ன உம் பிரச்சினை?”
“பிறகு நான் தானே ராவைக்கும் அவிச்சிக் கொட்டனும்.”
கமலம் பொல்லை ஊன்றிக் கொண்டே எழுந்தார். “நீ தானே குடும்பத் தலைவி. அப்போ செய்யத்தான் வேணும். நாங்கெல்லாம் மூணு வேளைக்கும் மூணு கறி சோறு ஆக்குவம்.அதுவும் அம்மில அரச்சி. நீ என்னடான்னா பெரிய்ய்ய்ய ராசா ஊட்டு ராணியாட்டம் சூடு பண்ணி தாராய்,
மத்தியானக் கறிய ராவைக்கும், ராவைக்கு மிஞ்சினா அந்த ப்ரிஜ்ஜிப்
பெட்டின்னும், இப்படித் தானே சொகுசா வாழுறாய்.” வல்லின மெல்லின சத்தங்களுடன் அழுத்தி இழுத்து ராகமாய் திட்டிக் கொண்டிருந்தார் கமலம்.
“இன்டக்கி ஒரு நாளு அவ ஒழுங்கா மூடாம தின்னுட்டு போகட்டும். நீ ஆக்கிப் போடு. குறைஞ்சிடமாட்ட.” கோபமாய்க் கூறி முடித்தார்.
கண்களில் நீருடன் கழுத்தை நொடித்துக் கொண்டாள் விசாலாட்சி.
“ஊரு உலகத்துல இல்லாத இளவரசி அவ. இந்த வீட்டுல இத்தனை வருஷமா குப்பை கொட்டுறன்.யாருக்காச்சும் நன்றி
உணர்வு இருக்கா. ஒரு நாளாவது என்னை உசத்தி பேசி இருக்கீங்களா. அவ்வளவு எகத்தாளம்.”
“வாசல்ல நின்னு மூக்கு சிந்தாத.போயி வேலையப் பாரு.”என
வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு சென்ற விசாலாட்சியை கொஞ்சமும் பிடிக்காது கமலத்திற்கு.
தன் ஒரே மகனான கந்தன் தன் மனைவியை இழந்து மூன்று வயது
கைப்பிள்ளையுடன் தனித்து வாழ்வதை பொறுக்க முடியாத கமலம் இன்னொரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்.ஆரம்பத்தில் மறுத்த கந்தன் அன்னையின் பேச்சில் இலேசாக இறங்கினார்.
தம்பி.... பொம்பல புள்ள வேற இருக்கு. உன்னால எல்லா நேரமும் அவ கூட இருக்க முடியுமா?அவதான் எல்லாத்தையும் உன்னட்ட சொல்வாளா.யோசிச்சி பாரு தம்பி. என்னால ஆக்கிப் போடுற அளவு உடம்புல தெம்பு இல்லப்பா. ஒருத்தி
வந்தா உன்னையும் புள்ளையும் பார்த்துப்பா. சரின்னு சொல்லுப்பா.
ஒவ்வொரு நாளும் மூக்கை சிந்திக் கொண்டு கந்தனை நச்சரித்தார். கந்தனும் போற போக்கில் “சரி என்னமோ பண்ணு. ஆனா ஒன்னு வர்ரவ எம்புள்ளக்கி சித்தி
மாதிரி நடக்க பார்த்தா, என்ன பண்ணுவன்டு எனக்கே தெரியாது. அத முதல்ல சொல்லிட்டு மத்ததப் பாரு. என்றார்.
தன் மகனின் கோபத்தை அறிந்தவர் என்றபடியால் அதை
முன்னுரிமைப்படுத்தியே பெண் தேடினார். அப்போதுதான் கடன் பிரச்சினையால் ஊரை விட்டு ஓடிய அப்பாவும், தற்கொலை செய்து கொண்ட தாயும் என ஒரே சமயத்தில் இழந்து அநாதையாய் நின்ற விசாலாட்சியை மருமகளாக்கிக்
கொண்டார். கந்தனுக்கும் அவள் மீது அனுதாபம் மேலிட்டது எனலாம். அந்த அனுதாபம் அதிகமாக மாறியதால் என்னவோ திருமணமாகி இரண்டே மாதத்தில்
விசாலாட்சி தாயாகிவிட்டார். தனக்கென்று ஒரு பிள்ளை வரும்வரை மீராவுடன் சாதாரணமாகத் தான் இருந்தாள்.
கமலத்துடனும் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால் பிறகு
தான் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறிப்போனது.
இந்திரா பிறந்து ஆறு மாதம் முடியும் தறுவாயில் ஒரு நாள் மீரா தொட்டிலில் இருந்து தூக்கும் போது தவறுதலாய் கீழே போட்டு விட்டாள். அந்நேரம் பார்த்து அம்மா மகன் இரண்டு பேருமே வீட்டில் இல்லை.
பிள்ளை வீறிட்டு அழும் ஓசை கேட்டு ஓடி வந்த விசாலாட்சி என்ன
செய்வதென்று தெரியாமல் மீராவைத் தள்ளிவிட்டது மட்டுமில்லாமல் நன்றாக
அடித்து வைத்தாள்.தள்ளிவிட்ட வேகத்தில் அவள் தலை சுவற்றில் மோதியதால் மீராவிற்கு இரத்தம் பெருகியது.அதை விசாலம் கவனிக்கவில்லை.
சைக்கிளை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்த கந்தனின் காதுகளில் குழந்தை வீறிடும் சத்தம் கேட்க வேகமாக வந்தார்.
என்ன நடந்த?
மீரா நம்ம புள்ளைய கீழ போட்டாள் என விசாலம் அழ ,கந்தனும் ஏற்கனவே உச்சி வெயிலில் பசியோடு வந்திருந்தவருக்கு வீட்டிலும் பிரச்சினை என இருக்க
முழுக்கோபமும் மீராவின் பக்கம் திரும்பியது. என்ன ஏது என்று
விசாரிக்காமலேயே விசிறியை எடுத்துக்கொண்டு அடிக்கப்போனவரை
கந்தா....என நிறுத்தினார் கமலம்.'
புள்ளய அடிக்கப்போறியா?? கோபம் பொங்கக் கேட்டவர் மீராவை தன்னோடு இழுத்துக் கொண்டார்.
அவள் தலையிலிருந்து இரத்தம் கசிவதை கையில் ஏதோ பிசுபிசுத்த பிறகுதான் உணர்ந்தார்.
என்னடி தங்கம்?? அய்யோ புள்ள தலையால ரத்தம்டா.என அலறினார் கமலம்.
குழந்தையை கீழே போட்டது, விசாலாட்சி தள்ளிவிட்டது, கந்தன் அடிக்க வந்தது,என அடுத்தடுத்து அதிர்ச்சியில் பயந்து போயிருந்த மீராவுக்கு தலையில் அடிபட்ட வலி விளங்கவில்லை.
இதுவரை கோபமாகக் கூட பேசியிராத அப்பா தன்னை அடிக்க வந்ததால் கமலத்தின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
“என்ன ரத்தம்? காட்டு குட்டிம்மா” என கந்தன் பதறிக்கொண்டு வர குழந்தை கமலத்திடமே அண்டியது. அப்படியே ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்தாள்.
கந்தனுக்கு நினைக்க நினைக்க குற்ற உணர்வு பெருகியது.தான் மறுமணம் செய்ததே அவளைப் பார்த்துக்க ஒரு தாய் வேண்டுமென்று தான். பூரணி
உயிரோடு இருந்தா இப்படில்லாம் நடந்திருக்காதே. தலையில் தையல் போட்டு இரண்டு நாளும் காய்ச்சலால் குழந்தை அனத்திக்
கொண்டிருந்தாள்.
“அம்மா…அம்மா.. பாட்டிம்மா… என சொல்லிக்.கொண்டேயிருந்தாள்.தன் மகன் செய்தது தப்புதான் என்றாலும் ஒரு தாயாய் கந்தன் தனக்குள் மருகிக் கொண்டிருக்கும் வேதனையை கமலம் உணர்ந்து கொண்டார்.
“கந்தா விடுப்பா..ஏதோ சூழ்நிலை நடந்திட்டு. மீரா உம்பொண்ணு. சாதாரணமா இரு. இனிமே இப்படி அவசரப்படாத.அப்பா தன்னை விட்டு விலகிட்டாரு அப்படின்னு அந்த குழந்தை நினைக்க விட்றாத. தாயில்லாத பொண்ணு. சித்தி
ஒருநாளும் சொந்தத் தாயாக முடியாது தான்.” முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டவர், “வந்து பிள்ளையோட பேசுப்பா” என்றார்.
விசாலாட்சியின் பேச்சு அன்றிலிருந்து எடுபடாமல் போனது. அவர் மீதான நம்பிக்கையும் போய்விட்டது.
“விசாலம்... எம் பேத்திக்காக தான் கந்தனு உன்ன கட்டிக்கிட்டான். உன் சுந்தரத்துல ஒன்னும் மயங்கியில்ல.மனசுல வச்சிக்க.
தள்ளி விட்டதும் இல்லாம அடிங்கன்னு வேற ஏத்தி விடுவியா?” என காட்டமாகக் சொன்னவர் அந்த சம்பவத்திற்குப் பிறகு கமலம் ஒட்டுதல் இல்லாமலேயே நடந்து கொண்டார்.
காலம் யாருக்கும் காத்திராமல் அதன் பாட்டிற்குச் செல்ல மீராவும் இந்திராவும் பருவம் தொட்டு நின்றனர்.கந்தன் நல்ல அப்பாவாக தன் பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே கடமையாய்க் கொண்டு வெயில்
மழை பாராது உழைத்துக் கொண்டிருந்தான். கமலம் தோற்றத்தில் மொத்தமாக
மாறிவிட்டார்.மற்றபடி எப்போதும் போல வாய்க்கட்டுடனே இருந்தார்.
விசாலாட்சி தான் குணத்தில் மிகவும் மாறி இருந்தாள். மீராவின் மீது
வெளிக்காட்ட முடியாத வஞ்சம் ஒன்று புதர்ப்பாம்பாய் ஒழிந்திருப்பதை அவள்
மட்டுமே அறிவாள்.கமலத்தோடு சரிக்குசமமாய் பேசி தன் கோபத்தைத் தீர்த்துக் கொள்ளும்
சுதந்திரம் கூட மீராவிடம் காட்ட முடியாது. ஒரேயடியாய்க் கொஞ்சித்
தீர்க்காவில்லைதான்.ஆனாலும்,
அவளை நன்றாகப் பார்த்துக் கொள்ளும் தன் கணவன் கந்தன் மேல் பாசம்தான்.
மீராவின் மீது கண்மூடித்தனமான அன்பைப் பொழியும் விதத்தால் விசாலத்தின் மனதில் பொறாமையை உருவாக்கியிருந்தது.தன் வயிற்றில் உதித்த பிள்ளை இந்தக் குடும்பத்தில் இரண்டாம் பட்சம் தான் என்ற மனநிலை அவளையறியாமலே ஏற்பட்டது.
அத்தனைக்கும் காரணம் மீராதான் என விசாலம் எண்ணியது மட்டுமல்லாமல் இந்திராவின் மனதிலும் அந்த விசத்தை மெதுமெதுவாய் இறக்கிக் கொண்டிருந்தாள் எனலாம்.
ஆனால் ஒன்றைக்கூட தனக்குள் பதிவேற்றாமல் தன் பாட்டிற்கு சுதந்திரமாய் வளர்ந்தாள் மீரா. அவளைப் பொறுத்தவரை வாழும்
காலம் கொஞ்சம்.அதற்குள் முடிந்தளவு சந்தோசமா இருக்கனும் அவ்வளவு தான்.சந்தோசத்தின் மறுபக்கம் உண்டு.அதன் பெயர் துன்பம் என்று உணரும் வரை
மீராவுக்குத் எதுவுமே தெரியவில்லை.